மேற்குவங்க முன்னாள் முதலமைச்சரும் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான புத்ததேவ்
பட்டாச்சார்யா கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தார்.
ராஜாராம் மோகன்ராய், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் முதல் அன்னை தெரசா வரை
மக்களை கவர்ந்த சீர்திருத்தவாதிகளும், விடுதலை இயக்க வீரர்களும், தலைசிறந்த
சமூக சேவர்களும் வாழ்ந்த மண் மேற்கு வங்கம். இத்தகைய பூமியில் மதவெறி பிடித்த நரேந்திர மோடிக்கு ஒருபோதும் அனுமதியில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைக்க அச்சாரம்
போட்டுக் கொண்டிருக்கிறது மம்தாவின் திரிணாமுல் கட்சி. இப்படித்தான் 2002-ஆம் ஆண்டில் பாஜகவுடன் கைகோத்துக் கொண்டு அதன் தலைமையிலான
அரசாங்கத்தில் அமைச்சர் பதவியும் வாங்கிக்கொண்ட கட்சிதான் இந்த திரிணாமுல்
காங்கிரஸ்.
இந்தியாவில் மோடியை முன்னிறுத்தியிருக்கும் மதவெறி ஆர்எஸ்எஸ் அமைப்பானது
தங்களது கொள்ளை லாபத்தை மேலும் மேலும் அதிகப்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்
பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நாட்டின்
எதிர்காலத்துக்கு இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்த
முனைகிறது. இது இந்தியாவின் வரலாற்றில்
முன்னெப்போதும் இல்லாத ஒன்று.
2 கருத்துகள்:
வணக்கம்
சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்.மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும்...வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரசை பற்றி எழுத துப்புகெட்ட இடதுசாரிகள்,டினமென் சதுக்கத்தில் கொல்லப்பட்ட மாணவர்களைப்பற்றி எழுத வக்கில்லாத இடதுசாரிகள்,சொந்தகட்சி காரனையே போட்டுத்தள்ளும் அழித்தொழித்தலை நியாய படுத்தும் இடதுசாரிகள் தங்களை சரிசெய்துகொண்டு மற்றவர்களை திருத்த வரட்டும்.
கருத்துரையிடுக