கனிமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனிமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 ஜூன், 2013

தந்தையர் தினம் - உலகிலேயே தலைசிறந்த தந்தை கருணாநிதி...!

              
            இந்தப் பதிவு வஞ்சப்புகழ்ச்சியாக எழுதப்பட்டது அல்ல. உண்மையிலேயே முழுமனதுடன் எழுதப்பட்டது. தன்னிடம் இருபத்து மூன்றே எம்.எல்.ஏ - க்களை வைத்துக்கொண்டே  தன் மகள் கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கு சீட்டுக் கொடுத்து தைரியமாக தேர்தல்களத்தில் நிற்க வைத்திருக்கிறார் என்றால் தன் மகளின் மீது அவரிடம் உள்ள பாசத்தின் உயரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இவரைப் போன்ற தந்தையை உலகத்தில் வேறு எங்குமே பார்க்க முடியாது. ''பிச்சை எடுத்தாவது உன்னை நான் படிக்க வைப்பேன்மா'' என்று சொல்லுகிற தந்தைகளை விட ''பிச்சை எடுத்தாவது உன்னை எம்.பி. ஆக்குவேன் மா'' என்று சொல்லுகிற இந்த தந்தை தான் உலகிலேயே மிக சிறந்த தந்தை என்பதை யாராவது மறுக்க முடியுமா...!

சனி, 3 டிசம்பர், 2011

கருணாநிதிக்கும் கனிமொழிக்கும் தான் வெட்கமில்லை - உடன்பிறப்புகளே... உங்களுக்குமா...?

 
கனிமொழி ஒரு வழியாய் 
காலம் ''கனி''ந்து     
விடுதலை பெற்று இன்று 
சென்னை திரும்பினார்...  
இனி திமுகவின் ''மொழி''ப்  
போராட்டம் முடிவு  பெற்றது...       




                  அப்பா விமானநிலையம் சென்று சாதனைப் படைத்து திரும்பும் மகளை வரவேற்றார்... சாதனை மங்கைக்கு அண்ணா அறிவாலயத்தில் பட்டாபிஷேகம் வேறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்...
               அம்மணிக்கு சென்னை விமானநிலையத்திலிருந்து அண்ணா அறிவாலயம் வரை திமுக தொண்டர்களின் வரவேற்பு ஏற்பாடுகள் வண்ண வண்ண போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் ஏராளம்... அதில் கூசாமல் எழுதப்பட்டவைகள் அனைத்தும் கண்ணை கூசுகின்றன....