''கோக்'' விளம்பரத்தில் நடித்த நடிகர் விஜய் மற்றும் ''ஏழாம் அறிவு'' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் முருகதாஸ் இருவரும் ''கத்தி'' திரைப்படத்தின் மூலம் பிராயச்சித்தம் தேடியிருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். இதுவரையில் கடத்தல், தீவிரவாதம், பயங்கரவாதம் என வெறும் மசாலா படங்களிலேயே நடித்து தன்னுடைய இரசிகர்களை திருப்திப்படுத்த திணறிக்கொண்டிருந்த விஜய் இதுவரையில் யாரும் கையில் எடுக்காத - தற்போது நாடு முழுதும் எரிந்துகொண்டிருக்கும் மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து அதற்காக போராடும் இளைஞனாக தன் இரசிகர்கள் முன் நின்றது என்பது உண்மையிலேயே பாராட்டுதற்குரியது.
திரைப்படத்தின் முன் பாதி எப்போதும் போல் வழக்கமான விஜய் பாணியாக நகர்கிறது. ஆனால் பின் பாதியில் தான் ஊடக தர்மமே இல்லாமல் அம்மணமாய் நிற்கும் இந்திய ஊடகங்களின் உண்மை முகத்தை தன் இரசிகர்களுக்கு தோலுரித்துக்காட்டியிருக்கிறார். இந்த தேசத்தின் வயிற்றுக்கு சோறிட்ட இந்திய விவசாயிகளின் இரத்தத்தையும், உயிரையும் குடித்து தேசத்தையே கபளீகரம் செய்யத்துடிக்கும் இராட்சச பகாசூர பன்னாட்டு கம்பெனியின் முதலாளிகளை எதிர்த்து மக்களை திரட்டிப்போராடும் இளைஞனாக விஜய்யை பார்க்கும்போது அவரின் மீது இதுவரை இல்லாத மரியாதை உண்டாகிறது.
ஏனென்றால் அண்மையில் பாராளுமன்றத்தேர்தலின் போது தான் தமிழகத்திற்கு நரேந்திரமோடியை சந்தித்த நடிகர் விஜய் தன்னை ஒரு போராளியாக காட்டிக்கொண்டு நடித்தது என்பது ரசிகர்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணும். ''கத்தி'' திரைப்படம் யாருடைய சிந்தனையில் உதித்தது என்பது தெரியவில்லை. ஆனால் இத்திரைப்படத்தின் ''கரு'' படம் வெற்றியடையடைவதற்கும், விஜய்யின் இரசிகர்களை திருப்திப்படுத்துவதற்கும், வசூலில் சாதனைப்படைப்பதற்கும் பெரிதும் பயன்பட்டிருக்கிறது. இதோடு நிறுத்திக்கொள்ளாமல் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவரும் மக்கள் பிரச்சனைகளை பேசும் திரைப்படங்களில் நடிக்க முன்வரவேண்டும். அதுமட்டுமல்லாது தங்கள் கட்- அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதும், கொடிக்கட்டுவதுமான போக்குத்தனமான செயல்களில் ஈடுபடும் தங்கள் இரசிகர்களை மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர்கள் பின்னால் நிற்கச் செய்யுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் இதுபோன்ற படங்களில் ஒரு போராட்டக்காரனாக நடிப்பதெல்லாம் விளம்பரத்திற்காகவும், வருமானத்திற்காகவும் நீங்கள் போடும் வெளிவேஷமாக போய்விடும். அன்னா அசாரேக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்.