ராகுல் காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராகுல் காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 5 பிப்ரவரி, 2014
மன்மோகன் சிங் - ராகுல் காந்தி - கருணாநிதி - இவர்களின் தேர்தல் பயம்...!
லேபிள்கள்:
கருணாநிதி,
கார்ட்டூன்,
நாடாளுமன்றத்தேர்தல்,
மன்மோகன் சிங்,
ராகுல் காந்தி
வெள்ளி, 17 ஜனவரி, 2014
''குட்டித்தலைவர்'' ராகுல் காந்திக்கு ஒரு கடிதம்...!
''குட்டித்தலைவர்'' ராகுல்ஜி அவர்களே...!
அண்மையில் நீங்கள் கேரளாவிற்கு
சென்றிருந்த போது வீரசாகசங்களை செய்து காட்டினீர்கள். என்னத்தான் உங்க
கட்சி ஆட்சி செய்யற மாநிலமா இருந்தாலும், அதுக்காக ஓடும் போலீஸ்
வண்டியிலேயா உட்கார்ந்து கொண்டு பயணம் செய்வது...? இந்திய மக்கள்
இந்த வீரசாகசத்தைப் பார்த்து பரவசப்படுவார்கள் என்று எதிர்ப்பார்த்தீர்கள்.
ஆனால் மக்கள் முகம் சுளித்தார்கள். நீங்கள் செய்த அந்த செயல்
சிறுபிள்ளைத்தனமானது என்று விமர்சனம் செய்தார்கள்.
இது ஒரு புறமிருக்க, அங்கே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது,
''காங்கிரஸ் கட்சி விரும்பினால், எத்தகைய பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள நான்
தயாராக இருக்கிறேன்'' என்று பேசியிருக்கிறீர்கள். இத்தனைக் காலமாக உங்களை
சுற்றியிருப்பவர்கள் தான் உங்களை உசுப்பேற்றித் திரிந்துகொண்டிருந்தார்கள்.
இப்போது தான் நீங்கள் முதல் முறையாக ''பிரதமர் பதவிக்கு நான் தயார்''
என்று உங்களது இந்த சின்ன(த்தனமான) ஆசையை திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள்.
ஏதோ இந்த நாட்டு மக்களெல்லாம் தங்களுக்கு வழிநடத்துவதற்கு ஏற்ற சரியான
தலைவர்கள் இல்லாதது போல, ஆளாளுக்கு ''நான் தான் பிரதமர்... நான் தான்
பிரதமர்'' - ன்னு சொல்லிக்கிட்டு திரியிறீங்களே, உங்களுக்கு கூச்சமாக
இல்லை. நீங்களெல்லாம் கொஞ்சம் கூட வெட்கப்படவே மாட்டீங்களா மிஸ்டர் ராகுல்...?
எந்த முகத்தோடு நீங்கள் ஒட்டுக்கேட்க வருவீர்கள்...? கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் செய்த சாதனைகள் தான் என்ன...?
சிறப்பாக செயல்படுகின்ற அரசுடைமை செய்யப்பட்ட வங்கிகளை நாசப்படுத்தி,
வங்கித்துறையை தனியாருக்கு திறந்துவிட்டீர்கள். இது 42 ஆண்டுகளுக்கு முன்பு
தனியார் வசமிருந்த வங்கிகளை தேசவுடைமை செய்த உங்கள் பாட்டி இந்திரா
காந்திக்கு நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்...?
தேசவுடைமை செய்யப்பட்ட எல்.ஐ.சி - யை ஒழித்துக்கட்டி தனியார் இன்சூரன்ஸ்
கம்பெனிகளை வாழவைப்பதும், இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை
மேலும் மேலும் உயர்த்தி அந்நிய கம்பெனிகள் கொள்ளையடிக்க துணை போவதுமான
உங்கள் செயல், 57 ஆண்டுகளுக்கு முன் தனியார் வசமிருந்த 245 இன்சூரன்ஸ்
கம்பெனிகளை தேசவுடைமை செய்து, எல்.ஐ.சி - யை தோற்றுவித்தாரே உங்கள் கொள்ளு
தாத்தா நேருவுக்கு நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்...?
உங்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால், இந்தியாவில் எல்லாத் துறைகளிலும்
அந்நிய நேரடி முதலீடு நுழைவதற்கு அனுமதி அளித்து, அந்நிய முதலாளிகள் இந்த
தேசத்தின் வளங்களையும், பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்கும்,
கொள்ளையடிப்பதற்கும் தாராளமாக அனுமதி அளித்தீர்களே....? ''பொழுதெல்லாம்
எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ. நாங்கள் சாகவோ'' என்று
இடதுசாரிக்கட்சிகள் எல்லாம் பாராளுமன்றத்திலும், வெளியிலும் போராடினாலும்,
அதையும் மீறி பாரதீய ஜனதாக் கட்சியோடு கூட்டு சேர்ந்து அந்நிய நேரடி
முதலீட்டிற்கு இரத்தின கம்பளம் விரித்தீர்களே...? இது ஒட்டு மொத்த
தேசத்திற்கே நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்....?
1991 - ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இந்திய அரசியலில் உள்ளே நுழைந்த
மன்மோகன் சிங்கை, 2004 - ஆம் ஆண்டு பிரதமராக பதவியுயர்வு கொடுத்து, அவரால்
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட LPG - தாராளமயம், தனியார்மயம், உலகமயம்
போன்ற மயங்களை படிப்படியாக கூர் சீவிவிட்டு, சாதாரண மக்களின் கண்களில்
மண்ணைத்தூவி அவர்களின் வாழ்வாதாரத்தையே மாயமாக்கி ஒழித்து
கட்டிவிட்டீர்களே. இது உங்களை நம்பி வாக்களித்த ''ஆம் ஆத்மி'' என்ற சாதாரண
மக்களுக்கு நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்...?
கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசத்திற்கெதிராக -
மக்களுக்கெதிராக நீங்கள் செய்த ''அமெரிக்க சார்பு திருவிளையாடல்களை''
இன்னும் சொல்லிகிட்டே போகலாம். இவ்வளவும் செய்துவிட்டு, இதே மக்களைப்
பார்த்து ''நான் பிரதமர் பதவிக்கு தயார்'' என்று எப்படி கொஞ்சம் கூட
கூச்சமில்லாமல், வெட்கமில்லாமல் அறிவிக்கிறீர்கள். அரசியல் காரணத்திற்காக
கொலைசெய்யப்பட்டு கொல்லப்பட்ட உங்கள் பாட்டி இந்திரா காந்தி மற்றும் உங்கள்
அப்பா ராஜீவ் காந்தி ஆகியோர்களை நினைவுப்படுத்தி மக்களின் அனுதாபத்தை
பெற்று எப்படியாவது வெற்றிபெற்றுவிடலாமென்று பகற்கனவு காணாதீர்கள் மிஸ்டர்
ராகுல்.
நீங்களும், உங்கள் அம்மாவும் மன்மோகன் சிங்குடன் சேர்ந்து நேருவுக்கும்,
இந்திராவுக்கும் நீங்கள் செய்த துரோகங்களையும், மக்களுக்கும், நாட்டிற்கும்
எதிராக நீங்கள் செய்த துரோகங்களையும் மக்கள் மறக்கமாட்டார்கள். உங்களை
மன்னிக்கமாட்டார்கள். இனியும் மக்கள் ஏமாறமாட்டார்கள் மிஸ்டர் ராகுல்.
லேபிள்கள்:
இந்திரா,
நேரு,
பிரதமர் வேட்பாளர்,
ராகுல் காந்தி,
ராஜீவ் காந்தி
வியாழன், 24 அக்டோபர், 2013
அனுதாபத்தைத் தேடுகிறார் காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தி....!
இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் அனைத்தும் மோடியையும், ராகுல் காந்தியையும் 2014 - ஆம் ஆண்டின் பிரதமர் வேட்பாளர்கள் என்று அவர்களாகவே முடிவுபண்ணி, அந்த இரண்டு பேரையும் உசுப்பேத்திவிட்டதால் அந்த ரெண்டு பெரும் கள்ளு குடிச்ச குரங்குகளைப்போல் செய்யற லொள்ளு இருக்கே தாங்கமுடியலடா சாமி. தினம் தினம் இவர்களைப்பற்றிய செய்திகளைத் தான் ஊடகங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. இப்படித்தான் நேற்று இராஜஸ்தான் மாநிலத்தில் சுரு என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தி, மத்தியில் தங்கள் கட்சியின் தலைமையிலான ஆட்சியில் அதை வெட்டி முறிச்சோம், இதை கிழிச்சோம் என்று சாதனைகளை எடுத்துச் சொல்ல முடியாமல், மக்கள் மறந்து போன ''பழங்கதைகளை'' எல்லாம் சொல்லி ஒப்பாரி வெச்சிருக்கிறார். ''நாட்டுக்காக உயிர் நீத்த என் பாட்டி, தந்தையைப் போல நானும் ஒரு நாள் கொல்லப்படலாம். அதற்காக நான் கவலைப்படவில்லை. இதனை என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன்'' என்று சோகமாக சொல்லி ராகுல் காந்தி அழுதிருக்கிறார். தொலைக்காட்சி சீரியலை பாக்கிறமாதிரி ஜெனங்கல்லாம் ''ஓவென்று'' அழுதிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு சாதனைகள் என்று ஒன்றும் சொல்வதற்கில்லை. மக்களுக்கு கொடுத்த வேதனைகள் தான் அதிகம். வேதனையில் தத்தளிக்கும் மக்களை திசைத்திருப்புவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு இப்படிப்பட்ட ''நாடகம்'' தேவைபடுகிறது. ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதையும், அப்பா ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதையும் சொல்லி மக்களிடையே அனுதாப அலையை உருவாக்கி தேர்தலில் வெற்றிப்பெற்றுவிடலாம் என்று கனவு காண்கிறது காங்கிரஸ் கட்சி.
தனது பாட்டி மற்றும் அப்பாவின் மறைவிற்கு பிறகு, கார்ப்போரேட் கட்சிகளான காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின்
தவறான மக்கள் விரோத கொள்கைகளின் காரணமாக கடந்த 23 ஆண்டுகளாக இன்று வரை
மூன்றரை இலட்சம் விவசாயிகள் ''தற்கொலை'' செய்துகொண்டார்களே அதை மக்கள்
இன்னும் மறந்துவிடவில்லை.
கடந்த 23 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்த நம்
நாட்டில் வேலையின்மை, வேலையிழப்பு, வருமானம் வெட்டு, விலைவாசி உயர்வு, கடன்
தொல்லை என பல்வேறு வேதனைகளுக்கு ஆளான இளைஞர்கள் திருடர்களாகவும்,
அடியாட்களாகவும், கூலிப்படைகளாகவும், நக்சலைட்டாகவும், தீவிரவாதிகளாகவும்
மாறி சீரழிந்துப்போய் திரிகிறார்களே அதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் தங்களை வாழவைக்கும்
கார்ப்போரேட் முதலாளிகளுக்கு சலுகைகளையும், வருமானவரி விலக்கையும்,
மானியங்களையும் அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு, ஆனால் தங்களுக்கு மட்டும்
நின்னா வரி, உட்காந்தா வரி, நடந்தா வரி, சாப்பிட்டா வரி, தூங்கினா வரி
என்று ஏராளமான வரிகளைப்போட்டு மத்திய அரசே மக்களிடம் ''கொள்ளையடித்தது''
மட்டுமல்லாது, இதுவரை அளித்து வந்த சலுகைகளையும், மானியங்களையும் கொஞ்சம்
கொஞ்சமாக வெட்டினார்களே அதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
கொள்ளுத்தாத்தா நேரு உருவாக்கிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டையும், பாட்டி இந்திரா காந்தி உருவாக்கிய அரசு வங்கிகளையும், பொதுத்துறை பொதுக்காப்பீட்டையும் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் சேர்ந்து கொன்றீர்களே அதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.

இந்த
இரண்டு மக்கள் விரோதக் கட்சிகளின் வேதனைமிகுந்த ஆட்சிகளின்
''சாதனைப்பட்டியலை'' அடுக்கிக்கிட்டே போகலாம். கடந்த பல ஆண்டுகளாக இத்தனை வேதனைகளிலும் அல்லல்படும் மக்களை திசைத்திருப்புவதற்கு ராகுல் காந்திக்கு மக்கள் மறந்து போன ''பழங்கதைகள்'' தேவைப்படுகிறது. இதன் மூலம் ஓட்டுகளை பெற்றுவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார்.
லேபிள்கள்:
அனுதாப அலை,
காங்கிரஸ் கட்சி,
ராகுல் காந்தி
வியாழன், 3 அக்டோபர், 2013
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா....?
குற்றவாளி என கருதப்படும் எம். பி., மற்றும் எம்.எல்.ஏ., -க்களின்
பதவிப்பறிப்பை தடுக்கும் அவசரச்சட்டம் ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அவசரமாக
குடியரசுத்தலைவரின் தபால் பெட்டியில் போட்டுவிட்டு, அவசரமாக
அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். அமெரிக்காவிலிருந்து
திரும்பி வருவதற்குள் குடியரசுத்தலைவரும் அவசரமாக கையெழுத்திட்டு விடுவார்
என்ற நம்பிக்கையில் தான் பிரதமரும் அவசரமாக கிளம்பிப்போனார். ஆனால்
மாநிலங்களவையில் இதற்கான மசோதா ஒன்று நிலுவையில் உள்ள போது, இப்படிப்பட்ட
அவசரச்சட்டத்தின் மீது பிரதமருக்கு அப்படியென்ன அவசரம் இருக்கிறது...?
அப்படி ஏன் அவசரம் காட்டுகிறார் என்பதை புரிந்து கொண்ட மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமரின் இந்த அவசர செயலை
மிகக் கடுமையாக விமர்சித்தனர். பிரதமரின் இந்த அவசர செயல் என்பது
பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டினர்.
இந்த சூழ்நிலையில் தான், பத்திரிக்கையாளர் கூட்டத்திற்கு
அழைப்பில்லாமலேயே அவசரமாக ஆஜரான காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்''
ராகுல் காந்தி ''இந்த அவசரச்சட்டம் முட்டாள்தனமானது. அதை கிழித்து
குப்பையில் தூக்கி எறியவேண்டும்.'' என்று கடுமையாக சாடினார். ராகுல்
காந்திக்கு உண்மையிலேயே சட்டத்தின் மீது எரிச்சலா... அல்லது பிரதமரின் மீது
எரிச்சலா...'' என்பதை அவரது அம்மா தான் அறிவார். அதனால் தான் அவரது அம்மா
சோனியா காந்தி உடனடியாக அமெரிக்காவில் இருந்த மன்மோகன் சிங்கிடம் தன் மகன்
செய்த ''அவசரக்குடுக்கை'' தனத்திற்கு சமாதானப்படுத்தினார். மன்மோகன் சிங்கிற்கும் அமெரிக்காவில் செய்யவேண்டிய பல்வேறு வேலைகளைவிட ராகுல் காந்தியின் பேச்சு பெரும் சுமையாகப் போய்விட்டது.
நாடு இன்னும் என்னென்னத்த எல்லாம் தாங்கவேண்டி வருமோ தெரியில... ஒரு
பக்கம் மோடி... இன்னொரு பக்கம் ராகுல்... முடியில...!
லேபிள்கள்:
அவசரச்சட்டம்,
மன்மோகன் சிங்,
ராகுல் காந்தி
வெள்ளி, 19 ஜூலை, 2013
மோடியா... ராகுலா... இருவரும் வேண்டாம் - மாணிக் சர்க்காரே வேண்டும்...!
இணையதளத்தில் இப்படியொரு செய்தி பரவி வருவதும், இளைஞர்கள் மத்தியில் இப்படியொரு பார்வையிருப்பதும் வரவேற்கத்தக்கதே. இன்றைக்கு ஊடகங்கள் எல்லாம் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் ஒரே மாதிரியான சிந்தனையை மக்கள் மூளைகளில் விதைத்து வருகிறார்கள். வருகிற 2014 - ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான உங்கள் தேர்வு என்பது நரேந்திர மோடியா அல்லது ராகுல் காந்தியா - இரண்டு பேரில் ஒருவராகத் தான் இருக்கவேண்டும் என்று இந்திய - அந்நிய பெருமுதலாளிகளும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் சேர்ந்து ஊடகங்களை பயன்படுத்தி மக்கள் அனுமதி பெறாமல் மக்கள் மூளையில் திணித்து மூளைச்சலவை செய்கிறார்கள். மக்கள் சுதந்திரமாக சிந்திக்காமலும், தேர்தல் என்பது ஜனநாயகமில்லாமலும் தான் நடக்கப்போகிறது என்பதன் அறிகுறிதான் இது.
இந்த சூழ்நிலையில் தான், பேஸ்புக்கில் ''Youth India Movement'' என்ற இளைஞர்கள் குழு வேறுமாதிரியாக சிந்தித்து செய்திகளை பரப்பி வருகிறார்கள். அதில் அவர்களது சுதந்திரமான சிந்தனை, நாட்டைப்பற்றிய பார்வை, மக்களாட்சியைப் பற்றிய எதிர்ப்பார்ப்பு, தலைவர்களை எடை போட்டுப்பார்க்கும் திறன், தங்களை யார் ஆட்சி செய்யவேண்டும் என்ற தேர்ந்தெடுக்கும் உரிமை - என்பன போன்ற அனைத்து அம்சங்களும் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் நன்கு ஆராய்ந்து தெளிவாகத்தான் முடிவெடுத்திருக்கிறார்கள் என்பதும் நமக்கு புரிகிறது. இப்படியொரு மூன்றாவது சிந்தனை என்பது, மாற்றுப் பார்வை என்பது மக்களின் மாற்று அரசியலுக்கான வேட்கை என்பதும் புலப்படுகிறது. மாற்று அரசியலுக்கான இந்த மாற்றுக்கரூத்துக்களை மக்களிடையே கொண்டு செல்லவேண்டும்.
பரவாயில்லையே இணையதள இளைஞர்கள் இப்படியும் சிந்திக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது தேசப்பற்றிய உண்மையான அக்கறையோடும் சிந்தனையோடும் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதில் நிம்மதியாக இருக்கிறது.
இணையதளத்தில் கொடுக்கப்பட்ட ஆங்கில செய்தியை அப்படியே கீழே தருகிறேன்....!
No Modi…………No Rahul ……….. Say no to the dirty politics of
cast, religion, regionalism, muscle, Money & Identity
India needs Manik Sarkar as a Prime Minister...!
India's Poorest but purest and honest Chief Minister of Tripura - Mr
Manik Sarkar - Role model for Indian Youth.......!
He has been elected consecutively for fourth terms as Chief Minister of Tripura.
First some facts about this great person.
1. He is the poorest but Purest Chief Minister of India.
2. He has been elected as chief minister consecutively for fourth term.
3. He doesn't own a house.
4. His bank balance is Rs. 6500/-
5. He donates all his salary to CPI (M) party and party gives him sustenance

allowance of Rs 5000/- month.
6. His wife never uses official vehicle and can very easily be seen on Rickshaw in
6. His wife never uses official vehicle and can very easily be seen on Rickshaw in
Agartala.
7. Even his worst opponents admit that Manik Sarkar is an impeccably honest man,
7. Even his worst opponents admit that Manik Sarkar is an impeccably honest man,
certainly a rare variety among politicians today.
Now, compare these with other chief ministers or politicians, who have assets worth more and more crores of rupees with them...!
Apart from honesty, Mr Manik Sarkar has been impetuous for the development of the state which includes better connectivity and development of IT sector in state.
We think he demands nothing from us but to be aware from central opportunist politics………….He wants to change India as one of the most developed Countries in the world…!
Say no to the dirty politics of cast, religion, regionalism, muscle, Money & Identity...!

நரேந்திர மோடி,
மாணிக் சர்க்கார்,
ராகுல் காந்தி
திங்கள், 21 ஜனவரி, 2013
ராகுல் Vs மோடி - கருத்தைத் திணிக்கும் ஊடகங்கள்...!
என்னுடைய இந்த படைப்பு வண்ணக்கதிரில் பிரசுரமானது
**********************************************
அனேகமாக இன்று எல்லா செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், வலைத்தளங்களிலும் ஒரே தலைப்பைக் கொண்ட பட்டிமன்றங்கள் தான். பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் தங்களது ''கருத்துத் திணிப்பு'' வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். ''ராகுல் Vs மோடி'' - 2014 தேர்தலில் வெற்றிப்பெறப் போவது யார்...? என்பது தான் இன்றைக்கு சூடான செய்தியாக மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது . நிச்சயமாக 2014
தேர்தல் வரை இந்த செய்தி தான் ஓடிக்கொண்டிருக்கும். மக்களிடையே
கட்டாய கருத்தைத் திணிக்கும் வேலையை இன்று பத்திரிக்கைகளும்,
தொலைக்காட்சிகளும் தொடங்கிவிட்டன. இவர்களுக்கு தேர்தலில் யார் வெற்றி பெற
வேண்டும் என்ற சிந்தனையை விட யார் வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்ற
சிந்தனையில் தெளிவாக இருக்கிறார்கள். இதைத் தான் அமெரிக்காவும், அந்நிய -
இந்திய பெருமுதலாளிகளும் எதிர்ப்பார்க்கின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு
வருமா...? பா. ஜ. க ஆட்சிக்கு வருமா...? ராகுல் வந்தா நல்லாயிருக்குமா...? மோடி வந்தா
நல்லாயிருக்குமா...? இப்படியான கருத்துக்கள் மக்கள் மத்தியில்
திணிக்கப்படுகின்றன. அந்த இரண்டு பேரில் யார் ஆட்சிக்கு வந்தாலும்
அமெரிக்காவிற்கும், அந்நிய - இந்திய பெருமுதலாளிகளுக்கும் சந்தோசம் தான்.
ஆனால் எந்த காரணம் கொண்டும் மக்களின் மூன்றாவது பார்வை இடதுசாரிக் கட்சிகள்
மீது திரும்பிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதுவும் 2004
தேர்தலைப் போல் இடதுசாரிக் கட்சிகள் 62 இடங்களில் வெற்றிபெற்றது போல் இந்த
முறையும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக இவர்கள் என்ன வேண்டுமானாலும்
செய்வார்கள். அதற்கான பிள்ளையார் சுழியை தான் இன்று ஊடகங்கள்
போட்டிருக்கின்றன.
ஆனால் உண்மை என்னவென்றால், அந்த இரண்டு கட்சிகளில் எது ஆட்சிக்கு வந்தாலும், இந்த இரண்டு பேரில் யார் பிரதமாராக வந்தாலும் இந்த நாடு நாசமாக போய்விடும் என்பதையும், மக்கள் மோசம் போவார்கள் என்பதையும் இந்திய மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
கடந்த பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணியின் தவறான ஆட்சியினாலும், இன்றைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியின் தவறான ஆட்சியினாலும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வு மற்றும் ஊழல்களில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிக்கும் இந்திய மக்களுக்கு தப்பித்தவறிக்கூட ''மாற்று சிந்தனை'' வந்துவிடக்கூடாது என்கிற பயம் அமெரிக்கா மற்றும் அந்நிய - இந்திய பெருமுதலாளிகளுக்கு இருக்கின்றன என்பது தெளிவாக தெரிகிறது. இடதுசாரிக்கட்சிகள் மீது மக்களின் பார்வை திரும்பி விடக் கூடாது என்பதற்காகத் தான் இப்படிப்பட்ட கருத்துத் திணிப்பை இன்றைக்கு ஊடகங்கள் அவசர அவசரமாக கையில் எடுத்துக்கொண்டுள்ளது.
அதுமட்டுமல்ல, இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஜனநாயகப்பூர்வமான பலக் கட்சி அரசியல் முறை என்பது அமெரிக்காவிற்கு பல ஆண்டுகளாக எரிச்சலூட்டும் விஷயமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ளது போல் ''இரண்டு கட்சி ஆட்சி முறையை'' இந்தியாவிற்குள்ளும் திணிப்பதற்கு பல ஆண்டுகளாக அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இந்த ஆட்சி முறையை தான் அந்நிய - இந்திய பெருமுதலாளிகளும் விரும்புகின்றனர். அதற்காகத் தான் இந்திய மக்களின் எண்ணங்களில் அதற்கான கருத்துக்களை திணிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய ஊடகங்கள் இறங்கியுள்ளன.
யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை மக்களின் ''வாக்குரிமை'' சம்பந்தப்பட்டது. மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு சுதந்திரமான சிந்தனைகள் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இது போன்றக் கருத்துத் திணிப்பு என்பது மக்களின் சுதந்திரமான எண்ண ஓட்டங்களை - சுதந்திரமான சிந்தனைகளை தடை செய்கின்ற விஷயமாகும். இது தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல. பத்திரிகை ஜனநாயகத்திற்கும் எதிரானது. கருத்து திணிப்பு என்பது கருத்து சுதந்திரமல்ல. அது போல் செய்வது என்பது பத்திரிகை தர்மமுமல்ல என்பதை பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.
ஊடகங்கள் இத்தோடு நிற்கமாட்டார்கள், அடுத்து வரும் காலங்களில் ''தேர்தல் கருத்துக் கணிப்பு'' என்ற பெயரில் இன்னொரு கருத்துத் திணிப்பை நடத்துவார்கள். கருத்துக் கணிப்பு என்கிற முடை நாற்றமெடுத்த குப்பைகளை மக்களின் மூலைகளில் வண்டி வண்டியாய் கொட்டுவார்கள். தேர்தலுக்கு முன்பே கருத்துக் கணிப்பு என்ற பெயரில் இவர்களாகவே தேர்தல் முடிவுகளை அறிவித்துவிடுவார்கள். இவர்களாகவே பதவியேற்பு விழாவையும் நடத்தி முடித்துவிடுவார்கள். இப்படித் தான் மக்கள் நடக்கவேண்டும் என்கிற தங்களின் விருப்பத்தை இப்படியெல்லாம் திணிப்பார்கள். வாக்காளர்களின் வாக்குரிமை என்பது வாக்களிக்கும் உரிமை மட்டுமல்ல. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தேர்ந்தெடுக்கும் உரிமையும் சேர்ந்தது தான் என்பதை மக்கள் உணர வேண்டும். இது போன்று கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களின் எண்ண ஓட்டங்களை - சிந்தனை ஓட்டங்களை தங்கள் விருப்பப்படி திசைமாற்றுவது என்பது வாக்களர்களின் வாக்குரிமைக்கு எதிரானது என்பதையும், ஜனநாயகத்திற்கு முரணானது என்பதையும் ஊடகங்களுக்கு மக்கள் தான் பாடம் கற்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அந்த வேலையை செய்யாது. அல்லது தலைமைத் தேர்தல் ஆணையம் வழக்கம் போல் இது போன்ற ''கருத்துத் திணிப்புகளையும், கருத்துக் கணிப்புகளையும்'' வேடிக்கைப் பார்க்காமல், ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட செயல்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். மக்களுக்கு வாக்களிப்பு சம்பந்தமான சுதந்திரமான சிந்தனைகளுக்கும், சுதந்திரமான தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் உத்திரவாதப்படுத்தவேண்டும்.
**********************************************
அனேகமாக இன்று எல்லா செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், வலைத்தளங்களிலும் ஒரே தலைப்பைக் கொண்ட பட்டிமன்றங்கள் தான். பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் தங்களது ''கருத்துத் திணிப்பு'' வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். ''ராகுல் Vs மோடி'' - 2014 தேர்தலில் வெற்றிப்பெறப் போவது யார்...? என்பது தான் இன்றைக்கு சூடான செய்தியாக மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது
ஆனால் உண்மை என்னவென்றால், அந்த இரண்டு கட்சிகளில் எது ஆட்சிக்கு வந்தாலும், இந்த இரண்டு பேரில் யார் பிரதமாராக வந்தாலும் இந்த நாடு நாசமாக போய்விடும் என்பதையும், மக்கள் மோசம் போவார்கள் என்பதையும் இந்திய மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
கடந்த பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணியின் தவறான ஆட்சியினாலும், இன்றைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியின் தவறான ஆட்சியினாலும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வு மற்றும் ஊழல்களில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிக்கும் இந்திய மக்களுக்கு தப்பித்தவறிக்கூட ''மாற்று சிந்தனை'' வந்துவிடக்கூடாது என்கிற பயம் அமெரிக்கா மற்றும் அந்நிய - இந்திய பெருமுதலாளிகளுக்கு இருக்கின்றன என்பது தெளிவாக தெரிகிறது. இடதுசாரிக்கட்சிகள் மீது மக்களின் பார்வை திரும்பி விடக் கூடாது என்பதற்காகத் தான் இப்படிப்பட்ட கருத்துத் திணிப்பை இன்றைக்கு ஊடகங்கள் அவசர அவசரமாக கையில் எடுத்துக்கொண்டுள்ளது.
அதுமட்டுமல்ல, இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஜனநாயகப்பூர்வமான பலக் கட்சி அரசியல் முறை என்பது அமெரிக்காவிற்கு பல ஆண்டுகளாக எரிச்சலூட்டும் விஷயமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ளது போல் ''இரண்டு கட்சி ஆட்சி முறையை'' இந்தியாவிற்குள்ளும் திணிப்பதற்கு பல ஆண்டுகளாக அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இந்த ஆட்சி முறையை தான் அந்நிய - இந்திய பெருமுதலாளிகளும் விரும்புகின்றனர். அதற்காகத் தான் இந்திய மக்களின் எண்ணங்களில் அதற்கான கருத்துக்களை திணிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய ஊடகங்கள் இறங்கியுள்ளன.
யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை மக்களின் ''வாக்குரிமை'' சம்பந்தப்பட்டது. மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு சுதந்திரமான சிந்தனைகள் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இது போன்றக் கருத்துத் திணிப்பு என்பது மக்களின் சுதந்திரமான எண்ண ஓட்டங்களை - சுதந்திரமான சிந்தனைகளை தடை செய்கின்ற விஷயமாகும். இது தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல. பத்திரிகை ஜனநாயகத்திற்கும் எதிரானது. கருத்து திணிப்பு என்பது கருத்து சுதந்திரமல்ல. அது போல் செய்வது என்பது பத்திரிகை தர்மமுமல்ல என்பதை பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.
ஊடகங்கள் இத்தோடு நிற்கமாட்டார்கள், அடுத்து வரும் காலங்களில் ''தேர்தல் கருத்துக் கணிப்பு'' என்ற பெயரில் இன்னொரு கருத்துத் திணிப்பை நடத்துவார்கள். கருத்துக் கணிப்பு என்கிற முடை நாற்றமெடுத்த குப்பைகளை மக்களின் மூலைகளில் வண்டி வண்டியாய் கொட்டுவார்கள். தேர்தலுக்கு முன்பே கருத்துக் கணிப்பு என்ற பெயரில் இவர்களாகவே தேர்தல் முடிவுகளை அறிவித்துவிடுவார்கள். இவர்களாகவே பதவியேற்பு விழாவையும் நடத்தி முடித்துவிடுவார்கள். இப்படித் தான் மக்கள் நடக்கவேண்டும் என்கிற தங்களின் விருப்பத்தை இப்படியெல்லாம் திணிப்பார்கள். வாக்காளர்களின் வாக்குரிமை என்பது வாக்களிக்கும் உரிமை மட்டுமல்ல. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தேர்ந்தெடுக்கும் உரிமையும் சேர்ந்தது தான் என்பதை மக்கள் உணர வேண்டும். இது போன்று கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களின் எண்ண ஓட்டங்களை - சிந்தனை ஓட்டங்களை தங்கள் விருப்பப்படி திசைமாற்றுவது என்பது வாக்களர்களின் வாக்குரிமைக்கு எதிரானது என்பதையும், ஜனநாயகத்திற்கு முரணானது என்பதையும் ஊடகங்களுக்கு மக்கள் தான் பாடம் கற்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அந்த வேலையை செய்யாது. அல்லது தலைமைத் தேர்தல் ஆணையம் வழக்கம் போல் இது போன்ற ''கருத்துத் திணிப்புகளையும், கருத்துக் கணிப்புகளையும்'' வேடிக்கைப் பார்க்காமல், ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட செயல்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். மக்களுக்கு வாக்களிப்பு சம்பந்தமான சுதந்திரமான சிந்தனைகளுக்கும், சுதந்திரமான தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் உத்திரவாதப்படுத்தவேண்டும்.
லேபிள்கள்:
ஊடகங்கள்,
கருத்துத் திணிப்பு,
நரேந்திர மோடி,
ராகுல் காந்தி
புதன், 7 மார்ச், 2012
ராகுல் காந்தி மட்டுமல்ல... காங்கிரஸ் கட்சியே பாடம் கற்க வேண்டும்...!

![]() |
| வடை போச்சே...! |
அதேப்போல் தான் இம்முறை காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தி வகையறாக்களும் நடந்து முடிந்த உத்திரபிரதேசம் உட்பட ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் பெரும் முயற்சி செய்தனர். வெறும் 2014 - ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கிற பாராளுமன்றத்தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு உத்திரபிரதேசத்தின் வெற்றியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் கட்சி பகல் கனவு கண்டது. அதற்காக இப்போது பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங்கை வரவிருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தலில் நிற்க வைத்து குடியரசுத்தலைவராக்கி விட்டு, பிறகு இந்த இளவரசரை பிரதமராக பட்டாபிஷேகம் செய்து உட்கார வைக்கலாம் என்ற கருத்தை காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே உலாவ விடப்பட்டது. மீண்டும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் பதவியில் உட்கார வைப்பதில் ஒருமித்தக்கருத்து உருவாக்கப்பட்டது.
அதற்காகவே உத்திரபிரதேச மாநில தேர்தல் பிரச்சாரங்களில் ராகுல் காந்தி மட்டுமே பிரதானமாக ஈடுபட்டார். அவருக்குத் துணையாக அவரது அன்னையும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தியும், ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்காவும் அவரது கணவரும் சூறாவளியாக பிரச்சாரம் செய்தார்கள். பிரியங்காவின் குழந்தைகளைக் கூட காங்கிரஸ் கட்சி விட்டு வைக்கவில்லை. அவர்களையும் அந்தக் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் இறக்கிவிட்டது.
இவ்வளவு செய்தும் அந்த மாநில மக்கள் நேரு - இந்திரா குடும்ப வாரிசுகளை தூங்கி எறிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அளவிற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி காலத்தில் கடுமையான விலைவாசி உயர்வினால் மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர் என்பது தான் வெளிப்படையான உண்மை.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)