வெண்மணியில் உரிமைக்குரல் எழுப்பி உயிர்த்தியாகம் செய்த 44 தியாகிகளுக்கு தமிழக உழைப்பாளி மக்களின் பங்களிப்போடு எழுப்பப்பட்ட ''வெண்மணி தியாகிகள் நினைவாலயம்'' இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ் காரத் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. கட்சியின் முதுபெரும் தோழர் - மரியாதைக்குரிய தோழர். என்.சங்கரய்யா நினைவாலயத்தின் முகப்பில் செங்கொடியை ஏற்றி வைத்தார். கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளர் தோழர். ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தோழர்.டி.கே.ரங்கராஜன் உட்பட பல தலைவர்களும், தமிழகம் முழுவதிலுமிருந்து இலட்சக்கணக்கான தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெண்மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெண்மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 9 மார்ச், 2014
வெண்மணியில் எழுந்து நின்ற நினைவாலயமும், உயர்ந்து பறந்த செங்கொடியும்...!
லேபிள்கள்:
தியாகிகள் நினைவாலயம்,
பிரகாஷ் காரத்,
வெண்மணி
சனி, 8 மார்ச், 2014
உயர்ந்து நிற்கும் தியாகச் சின்னம்...!
நிலத்தில் விவசாயி
நேரம் பார்க்க
உயர்ந்து வரும்
செங்கதிர் போல்...
செங்கதிர் போல்...
விவசாயின் வியர்வை
பட்டு
உயர்ந்து நிற்கும்
நெற்கதிர்போல்...
உழைப்பாளிகள்
நாற்பத்து நால்வரை
சருகாய் எரித்து
உயர்ந்த
தீக்கதிர் போல் ...
உழைப்பாளி மக்களின்
உரிமைக்குரலை
ஓங்கி ஒலிக்க
உயர்ந்து நிற்கும்
வெண்மணி தியாகிகள்
நினைவாலயம்
நினைவாலயம்
வாழியவே...வாழியவே....!
தொழிலாளி வர்க்கத்திற்கு
வழிகாட்டும்
கலங்கரை விளக்கமாய்....
கலங்கரை விளக்கமாய்....
மார்க்சிய பாடம்
கற்றுத்தரும்
பயிலரங்கமாய்...
தொழிலாளர் விடுதலைக்கான
போராட்டக்களமாய்...
வெண்மணி
தியாகிகள் நினைவாலயம்
மக்கள் ஜனநாயக
புரட்சிக்கு
பாதை வகுக்கட்டும்...!தியாகிகள்
விட்டுச்சென்ற
பாதையில்
அணிவகுப்போம்...!
இன்குலாப் சிந்தாபாத்...!
லேபிள்கள்:
தியாகிகள் நினைவாலயம்,
வெண்மணி
வீரம் விளைந்த மண்ணில் புதிய புத்தகம் விலையாகிறது....!

மார்ச் - 9, 2014 ஞாயிறு அன்று
''வெண்மணி தியாகிகள் நினைவாலய''
திறப்புவிழாவில் பாரதி புத்தகாலயத்தின் புதிய நூல்கள் வெளியீடு....!
வெண்மணித் தீ
ஆசிரியர் : கோ. வீரையன்
பக்கம் : 32
விலை : 15 ரூ
தமிழக விவசாயிகள் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முதுபெரும் தோழர்.கோ.வீரையன் அவர்கள் வெண்மணித் தீ எழுந்த வரலாற்றை விளக்கும் நூல். தமிழ்நாடு மினூழியர் மத்திய அமைப்பும் பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிடும் நூல்.
வெண்மணி வர்க்கப் போராளி மீயன்னா
ஆசிரியர் : ஜீ. வெங்கடேசன்
பக்கம் : 32
விலை : 20 ரூ
கீழத்தஞ்சை மாவட்டத்தின் பொதுவுடமை இயக்கம் தந்த போராளிகளில் முக்கியமான ஒரு ஆளுமை மீயன்னா என அன்புடன் அழக்கப்படும் தோழர்.வே.மீனாட்சிசுந்தரம். கட்சியின் நாகை தாலுகா செயலாளராகப் பணியாற்றிய மீயன்னா குறித்து தஞ்சை மாவட்ட சமூகவியல் ஆய்வாளர் தோழர்.ஜீ.வெங்கடேசன் அவர்கள் தமிழகம் அதிகம் அறியாத விவரங்களுடன் எழுதிய சிறு நூல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக் குழு பாரதி புத்தகாலயம் இணைந்து வெளியிடும் நூல்.
சதியில் எழுந்த சாதி
ஆசிரியர் : பி.சம்பத்
பக்கம் : 64
விலை : 30 ரூ
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான தோழர்.பி.சம்பத் அவர்கள் சாதி குறித்தும், வர்க்க - வர்ணப் போராட்டங்களை இணைத்து நடத்த வேண்டிய அவசியம் நடத்த வேண்டிய விதம் ஆகியவை குறித்து விளக்கும் நூல்.
கீழத்தஞ்சை : விவசாயிகள் இயக்கமும் தலித் மக்கள் உரிமைகளும்
ஆசிரியர் : ஜி.ராமகிருஷ்ணன்
பக்கம் : 48
விலை : 25 ரூ
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், கட்சியின் மாநிலச் செயற்குழுவின் சார்பாக கீழத்தஞ்சைப் பகுதிப் பொறுப்பாளாரக 10 ஆண்டுகள் பணிபுரிந்தவருமான தோழர்.ஜி.ராமகிருஷ்ணன், கீழத் தஞ்சைப் பகுதியின் விவசாய இயக்கத்தின் வரலாறு, கட்சியும் விவசாய சங்கஉம் வர்க்கப் போராட்டத்தையும் சமூக நீதிக்கான போராட்டத்தையும் இணைந்து நடத்திய விதம் ஆகியவற்றை விளக்கும் நூல்.

திறப்பு விழா,
பாரதி புத்தகாலயம்,
வெண்மணி
சனி, 24 டிசம்பர், 2011
வர்க்கப்போராளிகள் வெண்மணித் தியாகிகளின் நினைவைப் போற்றுவோம் ....
சேற்றில் இறங்கி
நாற்றை நட்டு
களை பிடுங்கி
நீர் பாய்ச்சி
பயிர் வளர்த்து
சோறு படைக்கும்
விவசாயக்கூலித்
தொழிலாளர்கள்
தஞ்சை தரணியில்
கீழ்வெண்மணியில் வெறும் அரைப்படி
நெல்லே கூலி உயர்வாய்
கேட்டனர்...
இப்படியாய்
வேலை நேரம்
கூலி நிர்ணயம்
உழைப்பிற்கேற்ற
கூலி உயர்வு
என
கோரிக்கை வைத்துப்
போராடக் கற்றுக்கொடுத்தது
செங்கொடி இயக்கம்....
உன்னை அடித்தால்
திருப்பி அடி என்று
தாழ்த்தப்பட்ட அம்மக்களுக்கு
கற்றுக்கொடுத்தவன்
செங்கொடித் தலைவன்
தோழர் சீனிவாசராவ்....
இவர்கள்
அரைப்படி நெல்
கூலி உயர்வு
கேட்ட போது
பண்ணையாள் ஒரு
சூழ்ச்சி செய்தான்....
உங்களுக்கு
அரைப்படி நெல்
கூலி
உயரவேண்டுமென்றால்
உங்கள் வீட்டின்
மேலே பறக்கும்
செங்கொடி
இறங்கவேண்டுமென்றான்....
அதிர்ந்து போன
அம்மக்காள்
எங்களை உயர்த்திவிட்ட
செங்கொடியை
நாங்கள் இறங்கவிடோம்
என்று ஆர்ப்பரித்தனர்...
கோபங்கொண்ட
ஆண்டை
தன் கையிலிருந்த
துப்பாக்கியால்
அக்கூலித் தொழிலாளர்களைப்
பார்த்து சுட்டபோது....
பெண்களும் குழந்தைகளும் சில ஆண்களும் என
44 பேர்கள் மட்டும்
ராமய்யாவின் குடிசைக்குள்ளே
புகுந்துவிட
அவர்களை அப்படியே
கொளுத்திவிட்டு
தீக்கிரையாக்கினர்.
43 ஆண்டுகளுக்கு முன்
டிசம்பர் 25 அன்று
எழுந்த அந்த
போராட்டத் தீப்பிழம்பு..
அவர்களிடமிருந்து
எழுந்த தீயின் வெளிச்சம்...
இன்று வரை
நம்
உரிமைப்
போராட்டங்களுக்கு
வழிகாட்டிக்கொண்டு
தான்
இருக்கின்றது....
நெல் மணிக்காக
செங்கொடியை
தாழாமல் பிடித்த
வெண்மணித்
தியாகிகளின்
நினைவைப்
போற்றுவோம்....
லேபிள்கள்:
தோழர் சீனிவாசராவ்,
வெண்மணி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)