வெள்ளி, 27 ஜனவரி, 2012

புதுவை ''யானாம்'' - உழைக்கின்ற கூட்டம் கொதிப்படைந்து போனால்....!

               யானாம் - புதுச்சேரி பிரஞ்ச் காலணியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிறு பகுதி. புதுச்சேரியை பொறுத்தவரை பல பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் நிறைந்த ஒரு சிறிய  மாநிலம். இங்கு  பல்வேறு வரிச் சலுகைகளும், மானியங்களும், இலவசமாக இடமும், இலவச மின்சாரமும், குடிநீரும், மிக குறைந்த சம்பளத்திற்கு மனிதவளமும், கண்டுகொள்ளப்படாத தொழிலாளர் சட்டங்களும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது மிக குறைவான இலஞ்ச  செலவுகளும் - ஆகிய அனைத்தும்  ஒட்டு  மொத்தமாக ஒரே இடத்தில் வசதியாக கிடைக்கும் மாநிலமாக புதுச்சேரி இருப்பதால் இங்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே  பெரிய - சிறிய தொழிற்சாலைகளை தொடங்கி இலாபத்தைக் குவிக்கின்றனர். ஹிந்துஸ்தான் யூனி லீவர்ஸ், வேர்ல்பூல், நெய்செர், எல் அண்ட் டி, ஜெனரல் ஆப்டிகல்ஸ், குட் நைட், ஏ. டி. எம் மெஷின் - போன்ற பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இங்கே தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
                 அப்படித்தான், ஆந்திர மாநிலத்தின் இடையே இருக்கும் புதுச்சேரி பகுதியான யானாம் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ''ரீகேன்சி செராமிக்ஸ் லிமிடெட்''  ஒன்று பிரசித்திப்பெற்ற டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கென ஒரு தொழிற்சங்கம் அமைத்து, தனகளது பணி நிரந்தரத்திற்காகவும், ஊதிய உயர்வுக்காகவும் இருபது நாட்களாக போராடி வருகின்றனர். இந்த உரிமைக்கான போராட்டத்தை சகித்துக்கொள்ள முடியாத நிர்வாகம்,   தொழிற்சங்கத் தலைவர் எம். எஸ். முரளி மோகன் உட்பட சில தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.  இதனால் கோபமடைந்த தொழிலாளர்கள் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தினர்.                         போராடிய தொழிற்சங்கத்தலைவர் முரளி மோகன்யும்  மற்றும் சில தொழிலாளர்களையும் , அந்த தொழிற்சாலை முதலாளிகளின் அடிவருடிகளாக இருக்கும் போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். அங்கு ''நடந்தது'' என்னவென்று தெரியவில்லை. தொழிற்சங்கத்தலைவர் முரளி மோகன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக போலீஸ்காரர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதைக்கேட்ட தொழிலாளர் தோழர்கள் கோபம் கொண்டு கொதித்தெழுந்தனர். தலைவன் கொல்லப்பட்டதால் கோபமுற்ற உழைப்பாளிகள், கொலைக்குக் காரணமான காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி இருக்கின்றனர். தொழிலாளர்களை அடக்குவதற்கு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். அந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு தொழிலாளி இறந்துவிட்டதாக கூட சொல்லப்படுகிறது.   
                      அதேப்போல்,  ரீகேன்சி செராமிக்ஸ் லிமிடெட் - இன் தலைமை அதிகாரி கே. சி. சந்திரசேகர் வீடும் தாக்குதலுக்கு  உள்ளானது மட்டுமல்லாது, அவரே அவரால் ஏமாற்றமடைந்த  அந்த தொழிலாளர்களாலேயே அடித்துக் கொல்லப்பட்டார் என்பது கொதித்தெழுந்த மக்கள் விழித்தெழுந்தால் என்னாகும் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் ஆகும்.

''தானே'' புயலில் பாதித்த பகுதியை எல். ஐ. சி. முகவர் சங்கம் தத்தெடுத்தது...!

  
                        சென்ற மாதம் கொடூரமாக தாக்கிய ''தானே'' புயலினால் பாதிப்படைந்து, இன்னும் மீளாத்துயரில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் புதுச்சேரியை சேர்ந்த ''திருக்காஞ்சி'' காலணிப்பகுதியை ''லிகாய்'' எல். ஐ. சி. முகவர் சங்கம் இன்று ( ஜனவரி 26 )  தத்தெடுப்பதாக அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் அவர்களுக்கான உதவிகள் முழுமையும் செய்து தருவதாக ''லிகாய்'' சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர். எஸ். சுத்தானந்தம் அப்பகுதி மக்களுக்கு  வீட்டு உபயோகப்பொருட்களை அளித்து பேசும்போது உறுதியளித்தார். இந்த செயல்களிலும், நிகழ்ச்சியிலும் புதுச்சேரி   பொது இன்சூரன்ஸ் ஊழியர்களும் தங்களை இணைத்துக்கொண்டு கலந்து கொண்டனர்.                     


வியாழன், 26 ஜனவரி, 2012

கல்வித் துறையிலும் வேலை வாய்ப்பிலும் ஜெயலலிதா தடுமாறுவது ஏன்..?

ஏன் இந்த குழப்பம்?

           பயிற்சிநிலை செவிலியர்கள் திடீரென்று வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். அவர்கள் கோரிக்கை மிக எளிமையானது. நாங்கள் மூன்றரை ஆண்டு படித்து தேர்ச்சி பெற்றிருக்கிறோம். மேலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், அரசு மருத்துவமனைகளில் கடுமையான அளவுக்கு செவிலியர் பற்றாக்குறை இருக்கும்போது, எங்கள் பயிற்சிக்காலத்தில் அந்த இடத்தை எங்கள் உழைப்பால் நிரப்பி இருக்கிறோம். அதன் மூலம் மிகுந்த அனுபவம் பெற்றிருக்கிறோம். அப்படி இருக்க, தனியார் கல்லூரிகளில் பயின்றவர்களுக்குப் பணி வழங்க தேர்வு நடத்துவது போல் எங்களுக்கும் தேர்வு என்பது நியாயமற்றது என்பது அவர்களின் வாதம். அது முழுக்க முழுக்க உண்மையானதும் சரியானதும் கூட. மருத்துவப் படிப்பையும் தனியார் மயமாக்கியதால் ஏற்பட்டிருக்கிற நெருக்கடி இது.
            செவிலியர்களை கைது செய்ததோடு, அவர்கள் விடுதியிலேயே கிட்டத்தட்ட சிறை வைக்கப்பட்டிருப்பதும், கட்டாயக் கையெழுத்து வாங்குவதும் ஆட்சியாளர்களின் ஊழியர் விரோத, ஜனநாயக விரோதப் போக்கையே பளிச்சென படம் பிடிக்கிறது.
             சமச்சீர் கல்வியில் குழப்பம், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தேர்வு முறையில் குழப்பம், பொறியியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு தேர்வில் பெரும் பின்னடைவு, ஆசிரியர்கள் பணி நியமனத்தில் பதிவு மூப்பு புறக்கணிப்பு, மக்கள் நலப் பணியாளர்கள் ஒட்டுமொத்தப் பணி நீக்கம், நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னும் இன்னும் பணி வழங்கப்படாத அவலம், இப்படி கல்வித் துறையிலும் வேலை வாய்ப்பிலும் தொடர்ந்து ஜெயலலிதா அரசு தடுமாறுவது ஏன்? சமூக நீதி சார்ந்து- சமூக யதார்த்தம் சார்ந்து சிந்திக்காமல் யாரோ சில மேல்தட்டு அறிவு ஜீவிகளின் நடை முறைச் சாத்தியமற்ற யோசனைகளை வேத வாக்காக எடுத்துக்கொண்டு செயல்படுவது தான் காரணம்.
                    மத்திய அரசின் செயல்பாடுகளிலும் இது போன்ற கொள்கைக் குழப்பம் நிறையவே இருக் கிறது. அதிலும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் முழுவதுமாக உலகமயத்தின் பிரதிநிதியாகவும் சமூக நீதி மறுப்பாளராகவும் காட்சியளிக்கிறார். மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத்தேர்வு மிகப்பெரிய பிரச்சனை ஆகியிருக்கிறது. அதுபோல உயர் தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு இல்லை யென்கிற நிலையும் உருவாகி உள்ளது. மேலும் ஏற்கெனவே மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு அவசரக்காலத்தில் கட்டாய மாற்றம் செய்யப்பட்ட கல்வித்துறையை தற்போது மெதுவாக மத்திய நேரடிப் பட்டியலுக்கு நகர்த்து கிற கைங்கரியத்தையும் செய்து கொண்டிருக் கிறார். இதை எதிர்த்து குரல் கொடுக்கிற தமிழக அரசு, தான் அதுபோன்றவற்றை அமல்படுத்துகிறது என்றால் அது இரட்டை வேடமல்லவா?
                      கல்வித் துறையிலும் வேலை வழங்குவதிலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற அணுகு முறை ஆபத்தானது. பெரும்பாலான அடித்தட்டு மக்களை பெரும் சோதனைக்கு உள்ளாக்குவ தாகும். இதனை தமிழக அரசு உணர வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கருதினால், அதை பொது விவாதத்துக்கு உட்படுத்தி மக்களின் - குறிப்பாக அதனால் பாதிக்கப்படுகிற அல்லது பயனடைகிற பிரிவினரின் மனோநிலையை துல்லியமாக ஆய்ந்து முடிவு களை மேற்கொள்ள வேண்டும். இல்லையென் றால் அதிருப்தியும் குழப்பமுமே மிச்சமாகும். இது ஜனநாயகத்திற்கும் உகந்ததல்ல. வளர்ச்சிக்கும் உகந்ததல்ல.

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்? - மத்திய நிதியமைச்சருக்கு தொழிற்சங்கங்கள் ஆலோசனை...!

                                                                                                               
பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்?  - மத்திய நிதியமைச்சருக்கு  தொழிற்சங்கங்கள் ஆலோசனை
              
                 தொடர்ந்து மிகக் கடுமையான அளவிலேயே நீடித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதத்திலும், தீவிரமடைந்து வரும் வேலையின்மை பிரச்சனை மற்றும் பெருமளவில் நிகழ்ந்துவரும் வேலைப் பறிப்பை தடுத்துநிறுத்தும் விதத்திலும், உழைக்கும் மக்களுக்கான சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கும் விதத்திலும், கொள்கைகளையும், திட்டங்களையும் எதிர் வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுமென அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வலியுறுத்தியுள்ளன.
                         இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சரிடம், பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகள் அடங்கிய மனு ஒன்றை சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐயு டியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி, டியுசிசி, எல்பிஎப் மற்றும் சேவா ஆகிய மத்திய தொழிற்சங்கங்கள் அளித்துள்ளன.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங் கள் வருமாறு:-

                                     இன்றைக்கு நிலவும் உலகப் பொருளாதாரச் சூழலில் நமது நாட்டின் பொருளாதார நிலைமை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. நிதி அமைச்சகம் எங்களுக்கு அனுப்பிய இந்திய பொருளாதாரத்தின் நிலைமை குறித்த குறிப்பில் அது பிரதிபலிக்கவில்லை என்றே கருதுகிறோம். மிகக் கடுமையாக நீடித்துவரும் விவசாய நெருக்கடியால் அதிகரித்துள்ள துயரத்திற்கு இடையே, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வானளாவ உயரும் அளவிற்கு நிலைமையை மோசமாக் கியுள்ள பணவீக்கத்தின் விகிதம் ஏற்றுக் கொள்ளமுடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது; மிகப்பெரும் அளவிற்கு வேலைகள் பறிக்கப்பட்டுள்ளன; வேலையின்மைக் கொடுமை நாளுக்குநாள் தீவிரமடைந்து வரு கிறது. இந்த அடிப்படையான பிரச்சனைகள் குறித்து நிதியமைச்சகத்தின் அறிக்கையில் மீண்டும் முழுமையான கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றே கருதுகிறோம்.
                    எதிர்வரும் பட்ஜெட்டானது வறுமை, வேலையின்மை, சமூகக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படையான பிரச்சனை களுக்கு தீர்வுகாணும் விதத்தில் மக்கள் சார்ந்த பட்ஜெட்டாக இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சில குறிப்பிட்ட ஆலோசனைகளை முன் வைக்கிறோம்.

* மேலும் மேலும் தொடர் விளைவாக அதிகரித்துவரும் விலைவாசி உயர்வை தடுத்துநிறுத்தவும், பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான முன்பேர ஊக வணிகத்தை தடைசெய்ய வேண்டும்; அனைவருக்கும் பொது விநியோக முறையை அமலாக்கி, அதை வலுப்படுத்த வேண்டும்; பணவீக்கத்தை தடுக்கும் நடவடிக்கை களில் ஒன்றாக பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகள், தீர்வைகள் போன்றவற்றை முறைப்படுத்த வேண்டும்.

* வேலையின்மை பிரச்சனை மேலும் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், பெரு மளவில் வேலைகள் பறிக்கப்பட்டுவரும் நிலையில், அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனங்கள், இந்திய தொழிலாளர் மாநாட்டின் 43 வது அமர்வு பரிந்துரைத்ததின் படி வேலைக்கு ஆள் எடுப்பதற்கான தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு வழங்கப்படும் அனைத்துவிதமான ஊக்க நிதிகளும், அந்நிறுவனங்கள் தொழிலா ளர்களை வேலைப்பறித்து வீட்டிற்கு அனுப்பு வது, விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாய ஓய்வு கொடுப்பது, வேலைகளையே முடக்கி வைப்பது, கதவடைப்பு செய்வது, கூலியை சரமாரியாக வெட்டுவது போன்ற நடவடிக்கை களில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைக ளுடனேயே அளிக்கப்பட வேண்டும்; மேலும் இந்நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை உரு வாக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்க வேண்டும்.

* சத்துணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், கல்வி தொண்டர்கள், கவுரவ ஆசிரி யர்கள், கல்விப்பணியாளர்கள் என பெரும் எண்ணிக்கையில் உழைக்கும் மக்கள் ஈடு பட்டு வருகிற துறைகள் ஒழுங்குப்படுத்தப் பட வேண்டும்; சமூக சுகாதார நடவடிக்கை களில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் உட்பட அனைவரும் குறைந்தபட்சக் கூலி மற்றும் சமூகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும். பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் உச்சநீதி மன்ற வழிகாட்டுதலின் படி ஐசிடிஎஸ் திட் டத்தை அனைத்துக் குழந்தைகளுக்குமான தாக விரிவுபடுத்திட வேண்டும்.

* மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதச் சட்டத்தின் வாய்ப்புகள் நகர்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்; அதே நேரத்தில் இந்தியத் தொழி லாளர் மாநாட்டின் 43 வது அமர்வு ஏகமனதாக பரிந்துரைத்ததின் படி உத்தர வாதமான சட்டப் பூர்வமான கூலியுடன் கூடிய வேலை குறைந்த பட்சம் ஆண்டு ஒன் றுக்கு 200 நாட்கள் வழங் கப்படவேண்டும்.

* வறுமைக்கோடு என்பதன் அடிப்படை யில் விதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப் பாடுகளையும் நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்; குறிப்பாக முறைசாராத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் - 2008ன் கீழ் அமையப்பட்டுள்ள திட் டங்களில் பலனடைவதற்கான தகுதி யைப் பொறுத்தவரை, வறுமைக்கோடு என்ற பெயரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படவேண்டும்; மேலும், இந்தியத் தொழி லாளர் மாநாட்டின் 43 வது அமர்வு மற்றும் தொழிலாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆகியவை அளித்த பரிந்துரை யின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள காண்ட்ராக்ட் / தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 43.5 கோடி முறைசாராத் தொழி லாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங் கிட, தேசிய முறைசாராத் தொழிலா ளர் நிதி யத்திற்கு போதிய நிதியினை இந்தப் பட் ஜெட்டில் ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

* பொதுச் சொத்துக்களை உருவாக்கிட வும், கவுரவமான வேலை வாய்ப்புகளை உரு வாக்கிடவும், அரசின் முதலீடு அவசியம் அதி கரிக்கப்பட வேண்டும். இதற்காக பொதுத் துறை நிறுவனங்கள் அவசியம் வலுப்படுத்தப் பட வேண்டும்; விரிவுபடுத்தப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவது உட னடியாக தடுத்துநிறுத்தப்பட வேண்டும்; இந்த நிறுவனங்களின் மிகப்பெரும் இருப்புத் தொகையும் உபரியுமாக சேர்த்து ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது; இந்தத் தொகை பலவீனமான மத்திய பொதுத் துறை நிறுவனங்களை மறுசீரமைக்கவும், இதர மத்திய பொதுத் துறை நிறுவனங்களை நவீன மயமாக்கவும், விரிவுபடுத்தப்பட வேண்டும். மத்திய பொதுத்துறை நிறுவனங் கள் சராசரி யாக 0.75:1 என்ற அளவிலேயே பங்குக்கடன் கள் வைத்திருக்கின்றன; ஆனால் தனியார் நிறுவனங்கள் 2.3:1 என்ற அளவில் பொதுத் துறை நிறுவனங்களை விட மிகக் அதிகமான அளவிற்கு கடன் வைத் திருக்கின்றன. எனவே பொதுத்துறை நிறுவனங்கள் வங்கி களிடமிருந்து மேலும் கூடுதலாக கடன் பெறுவதற்கும், பங்குகளை விற்பதன் மூலம் நிதியாதாரத்திற்கு திரட்டு வதற்கு பதிலாக வங்கிக் கடன்கள் மூலமாக நிதியாதாரத்தை திரட்டுவதற்கு அனுமதிக்கப் பட வேண்டும்.

* சமீபத்திய உலகப் பொருளாதார நெருக் கடி காலத்திலும்கூட சோதனைகளை எதிர் கொண்டு உறுதியுடன் நின்ற வங்கிகள் மற் றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளடங்கிய நிதித்துறை மேலும் ஊக்கத்துடன் செய லாற்ற அனுமதிக்கப்பட வேண்டும், விரிவாக் கப்படவேண்டும், அவற்றின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும், அவற்றின் பொதுத்துறை குணாம் சத்தை பல வீனப்படுத்தும் விதத்திலும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீர்குலைவு நடவடிக்கை களை திணிப்பதற்குப் பதிலாக அவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் சீர்திருத்தத்திற்கான முயற்சிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தொழில் நிறுவனங்கள் வங்கிகளைத் துவக்க அனு மதிக்கப்படக்கூடாது.

* பாரம்பரியத் தொழில்துறைகளான சணல், ஜவுளி, தோட்டக்கலை, கைத்தறி மற் றும் கயிறு போன்றவை எதிர்கொள்ளும் நெருக்கடிகளை சமாளித்து முன்னேற பட் ஜெட்டில் நிதி ஆதாரம் ஒதுக்கப்பட வேண்டும்.

* ஆரம்பக்கல்விக்கு பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவேண்டும்; குறிப்பாக, குழந் தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு மிகச்சிறந்த ஆயுதமாக வந்துள்ள கல்வி உரிமைச்சட்டத்தை முழுமையாக அமல் படுத்தவேண்டியதன் பின்னணியில் இந்த ஒதுக்கீடு அவசியம்.

* மூலப்பொருட்கள் மற்றும் தாதுவளங் களின் ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட வேண் டும்; இந்தத் துறைகளில் உள்நாட்டில் வேலைவாய்ப்பை தொடர்ச்சியாக உருவாக் கும் விதத்திலும், இப்பொருட்களின் மதிப் பினை மேம்படுத்தும் விதத்திலும் அரசு நேரடியாகவோ, அல்லது பொருத்தமான நிதி நிர்வாக முறையின் அடிப்படையிலோ ஏற்று மதியை கறாரான முறையில் கண்காணிக்க வேண்டும். இன்னும் குறிப்பாக, இரும்புத்தாது ஏற்றுமதி உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும். உள்நாட்டில் உள்ள இரும்பு எஃகு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இரும்புத்தாது ஒதுக்கீடு செய் யப்படவேண்டும்.

* இன்றைய நிலையில் நடைமுறையில் உள்ள நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் கணக்கிடும் முறையானது தொழிலாளர் களுக்கு மிகப்பெருமளவில் நிதி இழப்பை ஏற் படுத்தும் விதத்திலேயே உள்ளது. இந்த நடை முறை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். அகவிலைப்படி திருத்தம் செய்வது தற்போது 6 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதை 3 மாதங்களுக்கு ஒரு முறை என மாற்ற வேண்டும்.

* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை தீர்மானிக் கும்போது, அது சமூகப் பாதுகாப்பின் ஒரு பகுதி என்ற முறையிலும், கடுமையான பணவீக்கம் நிலவிக்கொண்டிருக்கிறது என்ற கண்ணோட்டத்திலும் பார்க்கப்பட வேண்டும். 20 ஊழியர்கள் இருந்தால் வருங்கால வைப்புநிதித் திட்டத்திற்குள் (இபிஎப்) சம்பந்தப்பட்ட நிறுவனம் கொண்டுவரப்படும் என்ற வரம்பு, இபிஎப் டிரஸ்டிகளின் மத்திய வாரியம் பரிந்துரைத் ததின்படி 10 ஊழியர்கள் என்ற அளவில் நிர்ணயிக்கப்படவேண்டும். தொழிலாளர் பென்ஷன் திட்டத்தின்கீழ் கிடைக்கும் ஓய்வூதிய பலன்களை அரசாங்கம் தன் னிச்சையாக வெட்டிச்சுருக்கியது. இது மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வரப்படவேண்டும். தொழிலாளர் பென் ஷன் திட்டம் தொடர்ந்து நீடிக்க அரசு மற் றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படவேண்டும்; தொழிலாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்ததின்படி ஒவ்வொரு தொழிலா ளருக்கும் குறைந்தபட்ச நியாயமான ஓய் வூதியம் கிடைக்க வழிசெய்திட வேண்டும். மேலும், சிறப்பு டெபாசிட் திட்டத்தின்கீழ் தொழிலாளர்கள் சேமித்துள்ள தொகைக்கு 9.5 சதவீதம் அளவிற்கு வட்டி விகிதம் உயர்த்தித்தரப்படவேண்டும்.

* அனைவருக்கும் உத்தரவாதமான ஓய் வூதியம் கிடைக்கவேண்டும்.

* அனைத்து வேலைகளும் குறைந்த பட்ச கூலிச் சட்டத்தின்கீழ் அவசியம் கொண்டுவரப்படவேண்டும்; மாதம் ஒன் றுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.10 ஆயி ரத்திற்கு குறையாமல் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

* ஊதியம் மற்றும் போனஸ், வருங்கால வைப்புநிதி ஆகியவற்றை பெறுவதற்கான அனைத்து உச்சவரம்புகளும் நீக்கப்பட வேண்டும்; பணிக்கொடையின் அளவு அதி கரிக்கப்படவேண்டும்.

* நிரந்தரத் தன்மைகொண்ட வேலை களை காண்ட்ராக்ட்மயமாக்கக்கூடாது; அவுட்சோர்சிங் என்ற பெயரில் வெளியில் கொடுத்து வாங்குவதும் கூடாது. காண்ட் ராக்ட் எனும் நடைமுறை ஒழிக்கப்படும் வரை, அந்த முறையில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கான கூலியும் இதர பலன்களும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அல்லது நிறு வனத்தின் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு எந்த முறையில் வழங்கப்படுகிறதோ அதே முறையில், அதே விகிதத்தில் வழங்கப் படவேண்டும்.

* வருமானவரி விலக்கிற்கான உச்ச வரம்பு, ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.3 லட்சமாக உயர்த்தப் படவேண்டும்; மேலும், வீட்டு வசதி, மருத் துவ வசதி மற்றும் கல்வி வசதிகள் போன் றவை வருமானவரி வரம்பிலிருந்து விலக்கப் படவேண்டும்.

* சில்லரை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறு வனங்கள் நுழைவதை தடைசெய்யவேண் டும். (ஐஎன்என்)நிதி ஆதாரத்தை எப்படி திரட்டுவது?

* இறக்குமதி செய்யப்படும் மின் உற்பத்தி சாதனங்கள் மீதான தீர்வை அதிகரிக்க வேண்டும்.

* உள்நாட்டில் உள்ள எண்ணெய் வயல்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பெட்ரோலிப் பொருட் களை ஏற்றுமதி செய்யும்போது அவற்றின்மீது இரட்டைவரி விதிக்கப்படவேண்டும்.

* அதிக அளவில் வரி செலுத்துவதற்கு திறன்படைத்த பெரும் பணக்காரப் பிரிவினர் மற்றும் பணக் காரர்கள் மீது வரிவிதிப்பை உறுதிசெய்யும் விதத்திலான ஒரு முற்போக்கான வரி விதிப்புமுறை கொண்டு வரப்படவேண்டும். பெரும் நிறுவன சேவைத் துறைகள், பெரும் வணிகர்கள், மொத்த வியாபாரங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் போன்றவை பரந்துவிரிந்த மற்றும் கூடுத லான வரிவிதிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படவேண்டும். ஆடம்பரப் பொருட்கள் மீது வரியை அதிகரிக்க வேண்டும். இதற்கு மாறாக, அத்தியாவசியப் பொருட்கள் மீதான மறைமுக வரிகளை பெரு மளவிற்கு குறைக்கவேண்டும். இந்த நிலையில், வரி வருவாயில் 86 சதவீதத்தைப் பூர்த்திசெய்கிற மறைமுக வரிவிதிப்பின்கீழ் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

* தற்போது நடந்துகொண்டிருக்கும் இரும்புத்தாது ஏற்றுமதி மீது ஏற்றுமதித் தீர்வையை அதி கரிக்கவேண்டும்.

* பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இதுவரையில் செலுத்தியிருக்கவேண்டிய வரி ரூ.3 லட்சம் கோடி அளவிற்கு பாக்கி இருக்கிறது. இந்த வரிப்பாக்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே, மேலும்மேலும் குவிந்துகொண்டிருக்கும் வரிப்பாக்கியை வசூ லிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும். இப்படி மிகப்பெரிய அளவிற்கு நடந்துள்ள வரி ஏய்ப்பு மற்றும் பெரும் நிறுவனங்கள் வரி செலுத்துவதில் காட்டப்பட்ட தாராளத்தின் விளைவாக 2009 - 2010ம் நிதியாண்டில் மற்றும் ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர அனுமதிக்கக்கூடாது.

* இந்திய பொருளாதாரத்தில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவர சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, வரி விதிக்கப்படாத சொர்க்கங்களாகத் திகழும் சில மேலை நாடுகளில் குவிக்கப்பட்டுள்ள கணக்கில் வராத மிகப்பெருமளவிலான பணம் மீட்கப் படவேண்டும். இந்தப் பணம் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பயன்படுத்தப் படவேண்டும்.

* வங்கிகளில் பெருமளவில் கடன் வாங்கிவிட்டு, திட்டமிட்டே தாங்கள் திவாலாகிவிட்டதாக பொய்க் கணக்குக் காட்டும் பெரும் கார்ப்பரேட் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து அந்தப் பணத்தை மீட்க வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் புதிதாக கடன் பெற அனுமதிக்கப்படக்கூடாது.

* நீண்டகால அடிப்படையில் பெறப்படும் மூலதன லாபங்கள் மீதான வரி அறிமுகம் செய்யப்பட வேண்டும்; பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் மீது அதிகபட்ச வரி விதிக்கப்படவேண்டும்.

* தகவல் தொழில்நுட்பத்துறை, அவுட்சோர்சிங் துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் போன்றவை வியாபார நோக்கத்தில் இயங்கும் பட்சத்தில் அவை சேவை வரி வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

நண்பன் - குடும்பத்துடன் பார்க்கவேண்டிய திரைப்படம்...!

பெற்றோர்களுக்கும்,
இளைஞர்களுக்கும் 
ஒரு நல்ல பாடம்...!
                                    
        தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று கேளிக்கை வரிவிலக்கு  பெறுவதற்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்ட பிறகு வரிவிலக்கு பெற்ற முதல் திரைப்படம் இது தான்.          
                   இந்த திரைப்படம் பழைய இந்தி படத்தை தழுவி எடுக்கப்பட்டதால், இயக்குனர் சங்கர் மற்றும் நடிகர் விஜய்யின் வழக்கமான முத்திரைகளும், அடையாளங்களும் இந்த படத்தில் இல்லை. வழக்கமாக விஜய் படமென்றால், விஜய்யை அறிமுகப்படுத்தும் போதே ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும்  இருக்கும். ஏகப்பட்ட சண்டைக்காட்சிகளும், கார்கள் பறப்பதும் உருளுவதும், எதிர்களின் எலும்புகள் உடைக்கப்படுவதும், கத்தியால் வெட்டப்படுவதும், பன்ச் டயலாக்கும், படம் முழுக்க விஜய் முகமும்  - என நம் மண்டைய பொலந்துகட்டும். தாங்கவே முடியாது. ஆனால் அந்த விஷயமெல்லாம் இந்த படத்தில் இல்லை. விஜய் மட்டுமல்லாமல், அவருடன் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள். மூவருக்கும் சமமான வாய்ப்பு. படம் முழுக்க நகைச்சுவை. பரவாயில்லை... காசு கொடுத்து கடைசிவரை சிரித்துக்கொண்டே இருக்கலாம்.
                இந்த படம் மற்றப் படங்களைப்போல் குறைகளும் நிறைகளும் கொண்ட படமாக இருந்தாலும், நிறைகளை பாராட்டாமல் இருக்கமுடியாது. இந்த படத்தின் கதையே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடக்கும் நிகழ்வுகள் தான். அதில் படிக்கும் மாணவர்கள்,  கல்லூரி நிர்வாகம், இன்றைய கல்வி முறை, அந்த கல்லூரியில் படிக்கும் நாயகர்களின் குடும்பம், அவர்களின் எதிர்பார்ப்பு - போன்ற இன்றைய பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் திணிப்பையும்,  அறிவையும், திறமையையும் வளர்க்காமல், கோழைத்தனத்தை மட்டுமே வளர்த்து, கடைச் சரக்காகிப் போன கல்விமுறையில் உண்டான போட்டி மனப்பான்மையையும்,   அதனால் படிக்கும் மாணவர்களிடத்தில் உருவாகியிருக்கும் மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் படம் பிடித்து காட்டுகிறப் படமாக இந்த படம் அமைந்திருக்கிறது.
                 பிள்ளைகள் விருப்பப்பட்டதை படிக்கவும், அதில் அவர்கள் திறமையை வளர்த்துக்கொள்வதற்கும்  பெற்றோர்கள் அனுமதிக்கவேண்டும். மாறாக பெற்றோர்கள் தங்கள்  விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது என்பது தான் இந்தப் படத்தின் மையக்கருத்து. ''ஏ. ஆர். ரகுமான் கிரிக்கெட் பிளேயர் ஆனாலோ... சச்சின் மியூசிக் டைரக்டர் ஆனாலோ... அவர்கள் இந்த அளவுக்கு சாதனையாளர்களாக வந்திருக்க மாட்டார்கள்'' என்ற வசனம் அருமை. ஆர்வம் இருக்கும் துறையில் திறமையை வளர்த்துக்கொண்டால் தான் சாதனையாளர்களாக வரமுடியும் என்று அழுத்தமாக இந்த திரைப்படம் கூறுகிறது. 
         அதேப்போல் இன்றைய தனியார் பொறியியல் கல்லூரிகள் எப்படியெல்லாம் மாணவர்களிடையே  போட்டிகளையும், வெறித்தனத்தையும்  உண்டாக்கி அவர்களுக்கு மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் உண்டாக்குகிறார்கள் என்பதையும்  காட்டுகிறார்கள்.
இப்படிப்பட்ட கல்லூரிகள் உண்டாக்கும் மன அழுத்தத்தினால் வசதியில்லாத வீட்டுப் பிள்ளைகள், கிராமப்புறத்து இளைஞர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்கிற பயங்கரத்தையும் இந்த படம் எடுத்துக் காட்டுகிறது. 
              கதாநாயகர்களில் ஒருவனான ஜீவா தான் நன்றாக படிப்பதற்கும், தேர்வில் தேர்ச்சிப்பெருவதற்கும் ஏகப்பட்ட சாமிப்படங்களை வைத்து பூஜை செய்வதும், தன்னுடைய கைகளில் சாமிக்கயிறுகளை கட்டிக்கொள்வதுமாக இருப்பதையும் காட்டி, பிறகு உனக்குள் இருக்கும் கோழைத்தனத்தைப் போக்கி, தைரியத்தை வரவழைத்துகொள்... உனக்குள் இருக்கும் திறமைகள் தானாக வெளியேவரும் என்று சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், அந்த கதாநாயகனே மனம் மாறி தன் கைகளில் கட்டியிருந்த சாமிக்கயிறுகளை கழற்றி மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் ''மலத்தொட்டியில்'' போடுவது போல் காட்டியிருப்பதும் மூடநம்பிக்கைக்கு எதிரானது மட்டுமல்ல. இந்த விஷயத்தில்  இயக்குனரின் துணிச்சலை பாராட்டாமல் இருக்கமுடியாது.
              மேலே ''நண்பன்'' படத்தில் உள்ள நிறைகள் சிலவற்றைத்தான் சொல்லியிருக்கிறேன். படத்திலுள்ள குறை என்று கேட்டால்  சிலது இருக்கிறது.
          படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, படிப்பே வராத தன் எஜமான் வீட்டு பையனுக்காக அவன் பெயரில் பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று பட்டம் வாங்கி அவனிடம் கொடுத்து, அந்த பையனை பட்டதாரியாக ஆக்கியிருப்பது என்பது ''ஆள்மாறாட்டத்தை'' அல்லவா குறிக்கிறது...?  அதேப்போல் தன் நண்பன் ஜீவா தேர்வில் பாஸ்பண்ண வேண்டும் என்பதற்காக பிரின்சிபால் அறையை திருட்டுச் சாவி போட்டு திறந்து, உள்ளே சீல் வைத்து வைக்கப்பட்டிருக்கும் வினாத்தாளை  எடுத்து வந்து ஜீவாவிடம் கொடுப்பது என்பது கள்ளத்தனம் அல்லவா...?  எவ்வளவோ நல்ல கருத்துக்களை உதிர்க்கும் கதாநாயகன் விஜய், இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதாக காட்டியிருப்பது என்பது நெருடலாக இருக்கிறது.
             தமிழ்நாட்டுப் பெண்கள்  கருப்பாக - குண்டாக - குள்ளமாக இருப்பது போன்ற கேலியான சித்தரிப்பை இயக்குனர் சங்கர் வரும் காலங்களில் தூக்கி எறியவேண்டும். இது போன்ற செயல்களும்  ஒரு சமூக குற்றம் தான் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. 
           கடைசியா ஒன்னேஒன்னு சொல்லிபுடுறேங்க.... அந்த கதாநாயகியா வர்றாங்களே இலியானா... ஒல்லியானான்னு வெச்சிருக்கலாம்... அம்புட்டு கோடி பணத்தைப் போட்டு இந்த படத்தை எடுத்ததா சொல்லுறாங்களே....இந்த டைரக்கேட்டருனால.... அந்தம்மாவுக்கு சரியான சாப்பாடு போட முடியலையாக்கும்... அது மட்டுமில்லைங்க... பாட்டு சீன்ல கூட  இலியானாவுக்கும், அவங்க கூட ஆடுற பொண்ணுங்களுக்கும் கூடவா முழு டிரஸ் வாங்கிக்கொடுக்க காசு இல்ல... ஆம்புளைங்கல்லாம்  மூணு நாலு டிரஸ் போட்டு ஒடம்பு பூரா மறைச்சிகீறாங்க... பாவமுங்க இந்த பொம்பளை புள்ளைங்க ரெண்டே பீசை போட்டு ஆடுதுங்க... எவ்வளவோ செலவு பண்றீங்க...அவங்க ஒடம்ப மறைக்கிறதுக்கு நல்ல டிரஸ் - ஆ வாங்கிக்கொடுங்க அய்யா...  அவங்க உடம்பையும் காசாக்கிற வேலையை விட்டுடுங்க அய்யா...

சனி, 21 ஜனவரி, 2012

''துக்ளக்'' சோவின் உளறலும் ஜெயலலிதாவின் ஆசையும்...!

                                   துக்ளக் பத்திரிகையின்  ஆண்டு விழா வழக்கம் போல் ஜனவரி 14 - ஆம் தேதியன்று சென்னையில் நடைப்பெற்றது. . துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ''சோ'' இந்நிகழ்ச்சிக்கு  பாரதீய ஜனதா கட்சியின்   தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட மதவாத கோஷ்டிகளை அழைத்து,  2014 - இல் வரப்போகும் பாராளுமன்றத்தேர்தலுக்கான அச்சாரமாக அந்த நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்.
      அந்த விழாவில் அத்வானி பேசும்போது,  தமிழக முதல்வராக ஜெயலலிதா இருக்கும் நிலையில், சோவுடைய நிகழ்ச்சியில் அத்வானியும், மோடியும் கலந்து கொண்டால், கிசுகிசுக்களுக்குப் பஞ்சமிருக்காது. பார்லிமென்டில் பா. ஜ. க.   பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. மத்திய அரசின் தவறான செயல்பாடுகளைக் கண்டிக்கும் பிரச்னைகளில், அ.தி.மு.க., எங்களுக்கு எந்தக் குறைவுமற்ற, முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. இந்த இடத்தில் நான், ஒன்றை தெளிவுபடுத்திட விரும்புகிறேன். அ.தி.மு.க.,வும், நாங்களும் இயல்பான கூட்டணியாக இருக்கிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று கூறி ஜெயலலிதாவை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை கச்சிதமாக ஆரம்பித்துவிட்டு அமர்ந்தார்.
                    விழாவின்  முடிவில், முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரான  "துக்ளக்' ஆசிரியர் சோ பேசும்போது,  "எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின், புதிய மத்திய அரசை அமைப்பதில், அ.தி.மு.க.,வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். திறமையான அரசை வழங்கும் தகுதி, பா.ஜ.க - வுக்கு மட்டுமே இருக்கிறது. ஒருவேளை, அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய், மதச்சார்பற்ற கட்சிகள் என்ற பெயரில் தடை கிளம்புமானால், ஜெயலலிதாவை பிரதமராக்க பா.ஜ.க  ஒத்துழைக்க வேண்டும்,'' என்று சொல்லி தான் விழாவிற்கென்று வரவழைத்த அத்வானிக்கும், மோடிக்கும் ''பேதி மருந்தை'' ஊற்றிவிட்டார்.
              அதுமட்டுமல்ல,   அந்த விழாவிற்கு வந்திருந்த ''துக்ளக்'' வாசகர்களெல்லாம்  ஒன்றுமே புரியாமல்  குழம்பிப் போய் உட்கார்ந்திருந்தார்களாம்  . இவர் எந்தக் கட்சியை சேர்ந்தவரு...பாஜகவா...? அதிமுகவா...? கருணாநிதிக்கு நீரா ராடியா போல் ஜெயலலிதாவிற்கு இவர் தான் அரசியல் புரோக்கரா...? என்று அந்த மக்கள் குழம்பி போய்விட்டனராம். இப்படியான உளறல்களுக்கு பேர் போனவர் தான் இந்த ''சோ'' என்பது துக்ளக் படிக்கும் அனைவருக்கும் தெரிந்தது தான்.  அதிலும் அவருடைய உளறல்களிலேயே ஒரு மகா உளறல் இது தான் என்று விழா முடிந்து வெளியே வரும்போது வாசகர்கள் பேசிக்கொண்டார்கள்.   
            இந்த நிகழ்ச்சி நடந்து இரண்டு நாட்கள் கழித்து, ஜனவரி 16 - ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் இருந்த தகவல்களை கவனித்தால், அன்று சோ முன்மொழிந்ததை இன்று ஜெயலலிதா வழிமொழிந்திருக்கிறார் என்பது புரியும். அந்த அறிக்கையில் ஜெயலலிதா அன்புக் கட்டளையிட்டிருக்கிறார்.
            அதில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்....''தேசிய அரசியலை நோக்கி கழகம் உயரவேண்டும்...தமிழக எல்லையும் தாண்டி இந்தியா முழுமைக்குமான அரசியல் வெற்றியை பெறக்கூடிய பொற்காலத்தை அதிமுக தொண்டர்கள் உருவாக்கவேண்டும்'' என்று ஒரு தொலைநோக்குப் பார்வையோடும், ஒரு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்போடோடும் சொல்லியிருக்கிறார் என்பதை அந்த அறிக்கையின் மூலம் புரிந்துகொள்ள முடியும்.  
               இதன் மூலம் என்ன புரிகிறதென்றால், பாரதீய ஜனதா கட்சி ஜெயலலிதாவுக்கு மகுடி வாசித்து இழுக்கிறார்கள் என்பதும், மகுடிக்கு மயங்கி ஜெயலலிதாவும் பா. ஜ. க. வை நெருங்குகிறார் என்பதும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சோவின் அறியுரைகளைக் கேட்டுக்கொண்டு, ஜெயலலிதா மீண்டும் பா. ஜ. க. கூட்டணியின்  பக்கம்  சாய்வாரேயானால், வரலாறு அவரை மன்னிக்காது.

முதல் பெண் நாதஸ்வர கலைஞர் மறைந்தார்....!


பொன்னுதாயி - 
முதல் பெண் 
நாதஸ்வர கலைஞர்                                                    
               
              எப்படிப்பட்ட  சாதனையாளர்களையும்,  கலைஞர்களையும் காலப்போக்கில் மக்கள்  மறந்துபோவது என்பது இயற்கை. அப்படிப்பட்ட சாதனையாளர்கள் கலைஞர்கள் வரிசையில்  முதல் பெண் நாதஸ்வர  கலைஞரான  மதுரை எம்.எஸ்.பொன்னுத்தாயும் ஒருவர்.  அவர் கடந்த 17-ம் தேதி  தனது 84  - ஆவது வயதில் சிறுநீரகக்கோளாறு காரணமாக மதுரையில் தனது இல்லத்தில் காலமானார்.
              பொன்னுத்தாயின் பாட்டி பாப்பம்மாள் அந்தக் காலத்தில் பிரபலமான மிருதங்க வித்வான் இருந்திருக்கிறார். நடிகவேள்  எம்.ஆர்.ராதாவின் நாடகக் கம்பெனியில் அவர்தான் ஆஸ்தான மிருதங்கக் கலைஞர் ஆவார். பாட்டியின் இசை வாரிசாக வளர்ந்த பொன்னுத்தாயி  மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஆஸ்தான வித்வானாக இருந்த பி.நடேச பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றார். பிற்காலத்தில் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் உள்ளிட்ட  ஆறு பேரிடம்  தம் இசை அறிவை பட்டை தீட்டிக் கொண்டார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் திருமணத்துக்கு    நாதஸ்வரம் வாசித்தது பொன்னுதாயி அம்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.  .
         மதுரை சித்திரைத் திருவிழா தசாவதார நிகழ்ச்சியில் தனது 9 - ஆவது வயதில் பொன்னுத்தாயி அரங்கேற்றம் நிகழ்த்தினார். அதன் பிறகு எத்தனையோ மேடைகள்; எண்ண முடியாத பட்டங்கள் பெற்று உயர்ந்தார்.  இவர் தனது வாழ்நாளில் 23 தங்கப் பதக்கங்களை வாங்கி இருக்கிறார் என்பது யாரும் அறியாத உண்மையாகும்.   ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதலமைச்சர்கள் போன்ற பெருந்தலைவர்களால்    கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
        மதுரை காந்தி மியூஸியம் திறப்பு விழாவுக்கு பிரதமர் நேரு வருகை தந்த போது இவரது கச்சேரிதான் நடைப்பெற்றது.  முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் பிரதமர் நேரு ஆகியோர் முன்னிலையிலும் இவர் நாதஸ்வரம் வாசித்திருக்கிறார். அப்போதெல்லாம் மதுரைக்குச் சினிமா இசைக் கலைஞர்கள் யார் வந்தாலும் இவர் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுவது வழக்கம். பொன்னுத்தாயின் கணவர் சிதம்பர முதலியார், சுதந்திரப் போராட்ட தியாகி. காமராஜர், பக்தவத்சலம் ஆகியோருக்கு நெருக்கம். காங்கிரஸ் கட்சியின் ஜில்லா போர்டு தலைவராகவும் எம்.எல்.சி-யாகவும் இருந்தவர். மதுரை முனிசிபாலிட்டி சேர்மன், மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் பதவிகளையும் அலங்கரித்தவர்.

               பொன்னுத்தாயிக்கு பூர்வீகச் சொத்துக்கள் ஏராளமாக இருந்தும்  அத்தனையும் போய், அவரது மகனும் இரண்டு மகள்களும் இப்போது வாடகை வீட்டில்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ''இவர் நாதஸ்வரக்  கலைஞர்கள் சங்கத் தலைவராக  இருந்தப்ப மத்த கலைஞர்களுக்கு எல்லாம் வீட்டுமனை வாங்கிக் கொடுத்தவங்க, தனக்கு வந்த மனையை வேண்டாம்னு திருப்பிக் குடுத்துட்டாங்க. கடைசியா, அரசாங்கம் குடுத்த 1,000 ரூபாய் பென்ஷனைத் தவிர, எந்தச் சலுகையையும் அவங்க அனுபவிக்கலை'' என்று உணர்ச்சிவசப்படுகிறார் பொன்னுத்தாயின் மாமன் மகன் பரஞ்சோதி மணி.

வியாழன், 19 ஜனவரி, 2012

பிசிசிஐ: இந்திய கோடீஸ்வர்கள் கட்டுப்படுத்தும் கிரிக்கெட்....!

( ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, பி.சி.சி.ஐ.-ன் செயல்பாடு ஆகியவை பற்றி 'BCCI: Billionaires Control Cricket in India' எனும் தலைப்பில் தன் கருத்துக்களை 'தி ஹிண்டு' நாளிதழில் கட்டுரையாக்கி இருந்தார் அதன் 'ரூரல் அஃபையர்ஸ் எடிட்டர்' பி.சாய்நாத். அந்தக் கட்டுரையின் தமிழாக்கம் இது ).
              
                    வறான வழிகளில் மிக விரைவாகப் பணம் பெற்றுக் கொண்டு 30 ரன், 40 ரன் (ஏன் 20 ரன் கூட) எடுத்தாலும் இந்தியன் பிரிமியர் லீக்கில் போதுமானதுதான். நமது நண்பர்கள் அப்படித்தான் ஆஸ்திரேலியாவில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஐ.பி.எல்.-லில் 30 ரன்கள், எப்போதாவது 50 ரன்கள் எடுக்க உங்கள் பேட்டைச் சுழற்றிவிட்டு இரண்டு மில்லியன் டாலர்களை நீங்கள் சம்பாதித்துவிட முடியும் என்பதையும் அல்லது 90 நாள் சீஸனில் சில முறை தொடர்ந்து நான்கு ஓவர்கள் வீசுவது என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். மிக மோசமான உங்களின் விளையாட்டுக்கு அதிகமான ஊக்கத் தொகை வழங்கப்படும் போது உங்களில் இருந்து மிகச் சிறந்த விளையாட்டை எதிர்பார்ப்பது மிகவும் கடினம்.  பி.சி.சி.ஐ. எனும் அதே அமைப்புதான் தனியார் (ஐ.பி.எல்.) மற்றும் தேசிய கிரிக்கெட்டையும் நிர்வகிக்கிறது. யாரோ ஒருவர் பெரும் பணம் பார்க்க அது அனுமதிக்கிறது. இன்னொரு பக்கம் பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை நெறித்துப் போடுகிறது. நம்முடைய 'வீரர்கள்' அதிகமாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பதல்ல... அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதே இல்லை என்பதுதான் பிரச்னை. அவர்களோ நோக்கம், கவனம், உத்தி மற்றும் நின்று ஆடும் திறன் எல்லாம் குறைவாகவே தேவைப்படுகின்ற ஐ.பி.எல். டி20 விளையாடுகிறார்கள். அதன் விளைவையே இப்போது நாம் பார்க்கிறோம்.
அதிகரிக்கும் ஐ.பி.எல். மோகம்...                                                    
              அங்கே இருப்பவர்கள் என்ன மிக மோசமான வீரர்களா? காயம் பெற்றுவிட்ட பெருமை, சுலபமான முடிவுக்கு இட்டுச் சென்றுவிடுகிறது. உண்மையில், இந்திய கிரிக்கெட் அணி - தற்போது சற்று கேலிக்குரியதாகத் தோன்றினாலும் - எப்போதுமில்லாத அளவுக்கு மிகச் சிறந்த பேட்டிங் லைனுடன் சவாரி செய்து கொண்டிருக்கிறது. பெருந்தன்மையும், தரமும் மற்றும் பல சாதனைகளைத் தன்னுள் கொண்டிருக்கிற டெண்டுல்கர், டிராவிட், லக்ஷ்மண் மற்றும் சேவாக் போன்ற வீரர்களை இனி நாம் பார்க்க முடியாது. இன்னும் இருக்கும் டெஸ்ட் விளையாட்டில் காலம் கடந்துவிடாத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்க்கக் கூடும். ஆனால் நான் அதன்மீது பந்தயம் கட்டமாட்டேன். விளம்பரங்களால் நகர்த்தப்பட்டு, ஊடகங்களால் போற்றப்பட்டு கிடைக்கும் சந்தோஷத்துக்காக ஐ.பி.எல்.-லில் அதிகமான விளையாட்டுகள் அங்கே நடைபெறுகின்றன. சிறிய எல்லைக்குள்ளே நீங்கள் 'சிக்ஸர்' விளாச முடியும், அனேகமாக 30 பந்துகளில் சோர்வுடன் உள்ளே வந்துவிட்டு வெளியே சென்றுவிட முடியும் -  அதற்கான புகழாரத்தையும் பெற்றுக் கொண்டு படோபடமான மிதப்புடன் வங்கியை நோக்கிச் செல்ல முடியும். ஐ.பி.எல். சீஸனில் விளையாடிய சில வீரர்கள் முன்பு நிகழ்ந்த மேற்கிந்திய தீவுகள் டூருக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டார்கள். மற்றவர்கள் 'சோர்வாக' இருந்ததால் நாட்டுக்காக விளையாடுவதில் இருந்து 'பிரேக்' எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் ஐ.பி.எல். போட்டிகளில் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட விளையாடினார்கள். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவும் நமக்குப் பெரும் சரிவைக் கொடுக்க காத்துக் கொண்டிருந்தன. அதற்குக் காரணம் நம்முடைய சிறந்த வீரர்கள் சுதாரித்துக் கொள்ளவில்லை என்பதுதான்.எவ்வளவுதான் திறமையானவராக இருந்தாலும், நீங்கள் யாருக்காக விளையாடுகிறீர்கள் என்பதும் கவனத்துக்குரியது. கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக நினைத்து நம் அணி ஜெயிக்க வேண்டும் என்று எதிர்பாக்கிற எண்ணிலடங்கா ரசிகர்களுக்காக நீங்கள் விளையாடுகிறீர்களா? அல்லது விஜய் மல்லையா, முகேஷ் அம்பானி மற்றும் குழுவுக்காக நீங்கள் விளையாடுகிறீர்களா? தானாக முன்வந்து  ஐ.பி.எல்.-ஐ ஒளிபரப்புகிற ஊடகத்தைக் கேள்வி கேட்பதைக் காட்டிலும் இது மிக முக்கியமான கேள்வி. இந்தியாவின் ஒளிமயமான மற்றும் சிறந்த அணிகளின் முதலாளிகளுக்கு நாம் சேவகம் செய்திருக்கிறோம். இந்திய கிரிக்கெட் அதற்கான தொகையையும் கொடுத்தது. இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் நம்மை மண்ணைக் கவ்வ வைத்த பலர் ஐ.பி.எல். விளையாடவில்லை. சிலர் உள்ளுணர்வுடன், விவேகமான முடிவுகளை எடுத்து அதில் விளையாடுவதைத் தவிர்த்தார்கள். சூழ்நிலை இணக்கம் என்பது வானிலையையோ, பிட்ச்களைப் பொறுத்ததோ மட்டும் அல்ல. மனரீதியாக மீண்டும் உண்மையான விளையாட்டுக்குத் திரும்புவதும் ஆகும். அத்துடன், உங்கள் ஊக்கத்தின் ஆதாரத்தைப் பற்றிய தெளிவுடன் இருத்தலும் அவசியம்.
'கிளப்'பா... தேசமா..?
 
                      இந்திய அணி செயல்படும் விதம் கண்டு நாம் அதிர்ச்சியடைய நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆச்சரியப்படுவதற்கு நம்மிடம் எதுவும் இல்லை. ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு சாலையும் இங்கேதான் முடிகின்றன. வீரர்கள் தேசத்துக்காக விளையாடுவதைத் தவிர்த்துவிட்டு ஐ.பி.எல்.-லில் விளையாடிய போது 'கிளப்'பா... தேசமா?' என்று எழுந்த விவாதங்களை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? 'கிளப்' எனும் ஒன்று கிடையாது என்ற உண்மையை அந்த விவாதம் தவறவிட்டுவிட்டது. எந்த வகையிலும் பன்மையில் இல்லை. ஐ.பி.எல். சார்ந்த 'கிளப்'கள் மற்ற இடங்களில் உள்ளது போன்று வெகுஜனத்தன்மைக்குரிய உடைமைகளுடன் இருக்கவில்லை. 'தேசத்தை விட கிளப் முக்கியம்' என்ற விசுவாசம் பற்றியது அல்ல நம்முடைய கேள்வி. அப்படியான போர்வையில் சோகம் கவிழ்ந்த தார்மீகமான கேள்வி ஒன்று எழும்புகிறது: கிளப்களுக்கு ஆதரவு தரும் கூட்டத்துக்காக நாம் விளையாடுகிறோமா அல்லது தேசத்தின் பக்கம் நிற்கும் எண்ணிலடங்கா ரசிகர்களுக்காக நாம் விளையாடுகிறோமா?இங்கே 'கிளப்' என்பது கோடீஸ்வரர்களுக்கு மாநில அரசுகள் வழங்கிய மானியத்துடன் செயல்படும் கிளப் மட்டும்தான். கிரிக்கெட் அமைப்பும், அதில் விளையாடும் வீரர்களும் (கூடவே பெரும்பான்மையான ஊடகங்கள்) இந்த கிளப்பின் விசுவாசிகள். பி.சி.சி.ஐ. என்பது இன்று 'இந்திய கோடீஸ்வர்கள் கட்டுப்படுத்தும் கிரிக்கெட்' ஆக (BCCI: Billionaires Control Cricket in India) மாறியிருக்கிறது. உங்களின் டாப் கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் கார்ப்பரேட்களின் இருப்பு நிலைக்குறிப்புகளில் (பேலன்ஸ் ஷீட்) வைக்கப்படும் சொத்துக்களாக (அஸெட்) தரம் குறைந்து போயிருக்கிறார்கள். அணிகளிடம் இருக்கும் 'அவர்களின் தலைகளைக் கொண்டு வாருங்கள்' எனும் அவமானம், ஏன் தவறு நிகழ்ந்தது என்பதற்கான வாதத்தைக் கடத்திக் கொண்டு போய்விடுகிறது. வீரர்களும் அவர்களின் மலைக்க வைக்கும் பெர்ஃபாமன்ஸும் மட்டுமே நம் மனத்தைக் கவர்வனவாக இருக்கின்றன. தேர்வாளர்களை நோக்கிய விசனமான கேவல்களும் கூட நம்மைக் கவர்கின்ற ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஐ.பி.எல். எவ்வாறு இந்திய கிரிக்கெட்டை கொடூரமாக்கியது, உலகம் முழுவதும் அந்த விளையாட்டை எப்படிப் பாதித்தது என்பது பற்றி மிகச் சொற்ப அளவினருக்கே தெரிகிறது. பெர்ஃபாமன்ஸுக்காக தற்போது கிழித்தெறியப்படும் லக்ஷ்மண் ஆஸ்திரேலிய டூரின் போது அசரடிக்கிற சராசரியுடன் திகழ்ந்தார். நிச்சயமாக அவர் எப்போதும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அப்படியே இன்னும் சில பேர் இருக்கிறார்கள். இதன் அர்த்தம் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் அவர்கள் விளையாடியதே இல்லை, இப்போதுதான் நன்றாக விளையாடவில்லை என்பதல்ல. அப்படியெனில் வயது ஒரு காரணமா?சில வாரங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியர்களை அவர்களின் மண்ணிலேயே தோற்கடிக்க இது மிகச் சரியான சந்தர்ப்பம் என்று மேதாவிகள் சிலர் சொன்னார்கள். நம்முடைய மிகச்சிறந்த அணி அதை சாதிக்கும் என்றார்கள். அந்த மிகச்சிறந்த அணிக்கு சில வாரங்களில் வயது ஏறிவிட்டதா? என்ன நடந்தது?ஐ.பி.எல். நடந்தது. இப்படியான மண்ணைக் கவ்வச் செய்கிற டூர்களுக்கு முன்பே பல போட்டிகளில் நடந்தது. காயங்களுடன் 90 நாட்கள் மிகக் குறைந்த தரத்தில் கிளப் அளவிலான கிரிக்கெட்டில் வீரர்கள் விளையாடியது நடந்தது. அது மிக நல்ல முறையில் விளையாட உங்களைத் தயார்படுத்தாமல் ஒவ்வொரு வருடமும் மிக மோசமாக விளையாடவே உங்களைத் தயார் செய்யும். காயங்களுடனேயே அவர்கள் விளையாடினார்கள். ஏனெனில் பி.சி.சி.ஐ.-ன் ஐ.பி.எல். மிக அதிகப் பணத்தை இந்த விளையாட்டைத் தனியார்மயப்படுத்தியவர்களுக்குக் கொண்டு வந்து கொட்டியது. தேசம் விளையாடும் விளையாட்டுக்கு அல்ல.உள்ளூர் அளவிலான விளையாட்டுதான் இந்திய கிரிக்கெட்டுக்கு வீரர்களைத் தயார் செய்து அனுப்புகிறது. நம்முடைய மிகச் சிறந்தை வீரர்கள் எல்லோரும் ரஞ்சி போட்டியில் இருந்துதான் வந்தார்கள். சிலர் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வந்தார்கள். ஒருவர் கூட ஐ.பி.எல்.-லில் இருந்து வரவில்லை. அதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மிளிர்ந்தாலும் இளம் வீரர்களின் திறன் மீது மோனமான அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடுகிறது. இன்று வீரர்களைத் தயார் செய்து அனுப்பும் பணி ஐ.பி.எல்.-லின் கைவசம். ஆஸ்திரேலியர்கள் திறமையான உள்ளூர் விளையாட்டுக் குழுக்களையும் ஆரோக்கியமான மரபுக் கூட்டத்தையும் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய திறமையையும், ஆரோக்கியமான மரபையும் நாம் கவனிக்காமல் கொன்றுவிடுகிறோம்.
 
சிந்தித்துப் பாருங்கள்:                                                    
               பி.சி.சி.ஐ. உள்ளூர் விளையாட்டை தூக்கிப் பிடித்திருக்கலாம். அப்படிச் செய்வதற்கும் அதனிடத்தில் பணம் இருக்கிறது, ஆனால் விளையாடுவதற்கான ஆர்வத்தையும், ஊக்கத்தையும் அது ஏற்படுத்தவில்லை. ஐ.பி.எல். மூலம் வரும் பணம் அனைத்தும் தனியார்களின் கைகளுக்குத்தான் செல்கின்றன. அதுவே உள்ளூர் கிரிக்கெட், சாதனைகள் படைப்பதற்குத் தடையாக அமைகின்றது. பணம், தரகர்கள், லாபியிஸ்ட்கள், கார்ப்பரேட்கள், ஆதரவாளர்கள், விளம்பரதாரர்கள் எனப் பலர் கூட்டணி சேர்ந்த உயர் வணிகமாக இந்த விளையாட்டு மாறியிருக்கிறது. கிரிக்கெட் என்பது வெறும் துணைப்பொருளாக (பை பிராடக்ட்) ஆகியிருக்கிறது. (சில வீரர்களின் 'சந்தை மதிப்பால்' (பிராண்ட் வேல்யூ), அவர்களை அணியில் இருந்து நீக்குவது கூட தேர்வாளர்களுக்குக் கடினமான காரியமாக மாறிப் போன சமயங்களும் இந்த முறையில் உண்டு). 
இந்தியாவைத் தாண்டியும்...
இதனுடைய தாக்கம் இந்தியாவைத் தாண்டியும் செல்கிறது. எல்லா இடங்களிலும் கிரிக்கெட் எனும் விளையாட்டின் தரத்தையும், ஒழுக்க விதிகள், முன்னுரிமை என அனைத்தையும் பாதித்திருக்கிறது ஐ.பி.எல். மலிங்கா, இலங்கையின் மிகச் சிறந்த வீரரான அவர், ஐ.பி.எல்.-லில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விலகுகிறார். சில நாடுகளுக்கு, இது நன்றாக வேலை செய்திருக்கிறது. ஐ.பி.எல்., விளையாடும் பல ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் எல்லோரும் ஓய்வு பெற்றவர்கள். அதிலும் ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில் இன்றும் விளையாடும் பல கிரிக்கெட் சகாப்தங்கள், தேசிய கடமையில் கவனம் செலுத்துவதற்காக ஐ.பி.எல்.-ஐ புறக்கணிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், நம் வீரர்கள் ஐ.பி.எல்.-லில் ஆழ்ந்து போய் இருக்கிறார்கள். அதுவே தற்போது டெஸ்ட் கிரிக்கெட்களில் எதிரொலிக்கிறது.இதனுடைய தாக்கம் இந்தியாவைத் தாண்டியும் செல்கிறது. எல்லா இடங்களிலும் கிரிக்கெட் எனும் விளையாட்டின் தரத்தையும், ஒழுக்க விதிகள், முன்னுரிமை என அனைத்தையும் பாதித்திருக்கிறது ஐ.பி.எல். மலிங்கா, இலங்கையின் மிகச் சிறந்த வீரரான அவர், ஐ.பி.எல்.-லில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விலகுகிறார். சில நாடுகளுக்கு, இது நன்றாக வேலை செய்திருக்கிறது. ஐ.பி.எல்., விளையாடும் பல ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் எல்லோரும் ஓய்வு பெற்றவர்கள். அதிலும் ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில் இன்றும் விளையாடும் பல கிரிக்கெட் சகாப்தங்கள், தேசிய கடமையில் கவனம் செலுத்துவதற்காக ஐ.பி.எல்.-ஐ புறக்கணிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், நம் வீரர்கள் ஐ.பி.எல்.-லில் ஆழ்ந்து போய் இருக்கிறார்கள். அதுவே தற்போது டெஸ்ட் கிரிக்கெட்களில் எதிரொலிக்கிறது.இதனுடைய தாக்கம் இந்தியாவைத் தாண்டியும் செல்கிறது. எல்லா இடங்களிலும் கிரிக்கெட் எனும் விளையாட்டின் தரத்தையும், ஒழுக்க விதிகள், முன்னுரிமை என அனைத்தையும் பாதித்திருக்கிறது ஐ.பி.எல். மலிங்கா, இலங்கையின் மிகச் சிறந்த வீரரான அவர், ஐ.பி.எல்.-லில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விலகுகிறார். சில நாடுகளுக்கு, இது நன்றாக வேலை செய்திருக்கிறது. ஐ.பி.எல்., விளையாடும் பல ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் எல்லோரும் ஓய்வு பெற்றவர்கள். அதிலும் ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில் இன்றும் விளையாடும் பல கிரிக்கெட் சகாப்தங்கள், தேசிய கடமையில் கவனம் செலுத்துவதற்காக ஐ.பி.எல்.-ஐ புறக்கணிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், நம் வீரர்கள் ஐ.பி.எல்.-லில் ஆழ்ந்து போய் இருக்கிறார்கள். அதுவே தற்போது டெஸ்ட் கிரிக்கெட்களில் எதிரொலிக்கிறது.இந்த நிலையில், தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்கள் இதைப் பற்றி விமர்சனம் செய்ய வழியே இல்லை (அல்லது தங்களின் கேரியர் காரணமாக பி.சி.சி.ஐ.-ன் செயல்களையும் விமர்சனம் செய்ய முடியாது). கிரிக்கெட்டின் காமதேனுவாக இது நிலைநிறுத்தப்படுவதில்லை. பி.சி.சி.ஐ. அப்படியான ஒரு தகுதியை ஐ.பி.எல். போட்டிகளுக்கு வழங்கியது. நமது நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை அதுதான் கட்டுப்படுத்துகிறது. தன்னுடைய பண பலத்தால் உலக அளவிலும் அது ஆட்சி புரிகிறது. அதனாலேயே மற்ற நாடுகளுக்கு நம் தேசத்தைப் பற்றி அவநம்பிக்கையைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. இது பி.சி.சி.ஐ., ஒரு விளையாட்டை விடவும் இன்னொன்றுக்கு அதிக சலுகை அளிக்கிறது என்பது மட்டுமல்லாமல், சிலரின் வாதங்களைப் போன்று மூவருக்குமே அது சலுகை காட்டுகிறது. பொதுமக்களை விட தனியார்களுக்கே பி.சி.சி.ஐ. அதிகம் சலுகை காட்டுகிறது. அதற்கு நாம் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.
பிரச்னை இங்கேதான்:
              எல்லோரும் சத்தம் போட்டு, வீரர்களின் தலை உருட்டப்பட்டால் ஆகப்போவது எதுவுமில்லை. இந்திய கிரிக்கெட்டின் இயங்குமுறையும், மரபுக் கூட்டமும் அடிப்படையிலேயே மிக மோசமாக மாற்றப்பட்டிருக்கிறது. நம்முடைய உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டை எப்படி மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். கிரிக்கெட்டை பில்லியனர்களிடம் இருந்து காப்பாற்றி அதை பொது வெளியில் கொண்டு வருவது எப்படி என்பதையும் கூட!

தமிழில்: ந.வினோத் குமார், விகடன்                          

பெரும் பணக்காரர்களுக்கு சலுகை - ஆனால் தாய் - சேய் நலனில் அக்கறை காட்டாத மத்திய அரசு..!


       ஒரு பிறந்தநாள்கூடக் கொண்டாடாத     
      13 லட்சம் பிஞ்சுகள்!                                    

                         ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் குழந்தைகள் பிறக்கும் நாடான இந்தியாவில், பிறந்து ஒரு ஆண்டைக்கூட கழிக்காமல் உயிரிழந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 13 லட்சமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பிறந்து சில வாரங்களிலேயே இறந்து போனவையாகும். மேலும் 16 லட்சம் குழந்தைகள் ஐந்து வயதை நிறைவு செய்வதற்குள்ளாகவே உயிரிழந்து விடுகின்றன. பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்தப் புள்ளி விபரங்கள் மேலும் ஒரு அதிர்ச்சியைத் தருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிரசவத்தின்போது உயிரிழக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை சராசரியாக 55 ஆயிரம் என்பதுதான் அது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சராசரியாக 2.62 கோடிக் குழந்தைகள் பிறக்கின்றன. ஒருவேளை, பிறப்பு அதிகமாக இருப்பதால்தான் இந்த உயிரிழப்புகள் என்று ஆட்சியாளர்கள் சமாளிப்பதற்காகக் கூறினாலும், சராசரியிலும் இந்தியா பெரும் அளவில் பின்தங்கியுள்ளது. 
              ஒரு லட்சம் பிரசவங்களில் சராசரியாக 212 தாய்மார்கள் உயிரிழக்கிறார்கள். ஆயிரம் குழந்தைகளில் ஒரு ஆண்டை நிறைவு செய்யாமல் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சராசரியாக 50 ஆகும். 1990 ஆம் ஆண்டில் தாய்மார்கள் உயிரிழப்பது 570 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை குறைந்து விட்டது என்றாலும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கிய நிலைதான் காணப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவில் இது வெறும் 15 ஆக இருக்கிறது. ரஷ்யா மற்றும் பிரேசிலில் 133க்கும் குறைவாகவே இருக்கிறது. இந்தியாவைவிட அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவிலோ, பிரசவத்தின் போது தாய்மார்கள் இறப்பது லட்சத்தில் 38 ஆக மட்டுமே உள்ளது.
                    2000 ஆம் ஆண்டில் பிறந்து, ஒரு ஆண்டு நிறைவு செய்யாமல் உயிரிழக்கும் பிஞ்சுக்குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு 65 ஆக இருந்தது. இந்தியாவைவிட ஏழை நாடுகள் என்ற பட்டியலில் இருக்கும் வங்க தேசம்(ஆயிரத்திற்கு 52) மற்றும் நேபாளம்(ஆயிரத்திற்கு 48) ஆகியவை முன்னேற்றம் கண்டுள்ளன. சீனா மேலும் பல கட்டங்கள் முன்னேறி ஆயிரத்திற்கு வெறும் 19 என்ற நிலையை எட்டிவிட்டது. பெரும்பாலான குழந்தைகள் பிறந்த சில வாரங்களிலேயே இறந்து விடுகின்றன. மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாதது அல்லது அவை பெரும்பாலான மக்களின் செலவுக்குட்பட்டு கிடைக்காதது போன்றவைதான் இந்தத் துயரமான நிலைக்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இதில் நகர் மற்றும் கிராமப்புற இடைவெளியும் அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் 55 குழந்தைகள் என்ற நிலையும், நகர்ப்புறத்தில் 34 குழந்தைகள் என்ற நிலையும் இருக்கிறது.
                 சுகாதாரத்தில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள கேரளா, வளர்ந்த நாடுகளை விட நல்ல நிலையில் உள்ளது. பிறந்து ஒரு ஆண்டுக்குள் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு 12 என்பதுதான் இம்மாநிலத்தின் நிலை. இதற்கடுத்து நல்ல நிலையில் இருக்கும் மாநிலங்களாக தமிழகமும், மேற்கு வங்கமும் உள்ளன. பிரசவத்தின்போது உயிரிழக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை கேரளாவில் லட்சத்திற்கு 81 ஆக மட்டுமே இருக்கிறது. அசாமில் 390, உ.பி.யில் 359 என்ற மோசமான நிலை நிலவுகிறது. மேம்பட்ட நிலையில் இருக்கும் மாநிலங்கள் மற்றும் நாடுகள் சொல்லும் சேதியே நல்ல கல்வி, நல்ல கட்டமைப்பு மற்றும் சத்துணவு ஆகியவை தான். 
               இவற்றைச் செய்ய காங்கிரஸ் மற்றும் பாஜக போலல்லாமல் இடது சாரிகள் போன்ற அரசியல் உறுதியுள்ள ஆட்சிகள்தான் தேவை.
              பிரசவத்தின்போது அம்மா இறப்பது அல்லது குழந்தை பிறந்த சில நாட்களுக்குள் உயிரிழப்பது போன்றவை சுகாதார வசதிகள் போதுமானவையாக இல்லாததையே காட்டுகிறது என்கிறார் மக்கள் சுகாதார இயக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் அமித் சென்குப்தா. குழந்தை பிறப்பு என்பது இயற்கையிலேயே நடக்கும் ஒன்றாகும். அதில் இறப்பு என்பது பிரசவத்திற்கு தடை உள்ளிட்ட பல்வேறு அவசர நிலைக் காரணங்களால் மட்டுமே ஏற்படும். இதை எதிர்கொள்ள போதிய பயிற்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் வசதிகள் தேவைப்படுகின்றன. அவசர நிலையின்போது 30 முதல் 40 கி.மீ. வரை பயணம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், துயரமான. தவிர்க்க வேண்டிய உயிரிழப்புகள் ஏற்படும் என்று விளக்குகிறார் அமித் சென்குப்தா.
                      அரசின் பொது சுகாதார நிலையங்களின் செயல்பாடுகளை முடக்கி விட்டதே இத்தகைய துயர நிலைகள் உருவாவதற்குக் காரணமாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முதலில் பதவியேற்றபோது சுகாதாரத்துறைக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு விழுக்காடு நிதி ஒதுக்குவது என்று இடதுசாரிக்கட்சிகளின் வலியுறுத்தலால் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், பெரும் பணக்காரர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, இந்த உறுதிமொழியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டது. இந்த உறுதிமொழி நிறைவேறும்பட்சத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவை வலுப்பெற்றுவிடும் என்பது அத்துறை வல்லுநர்களின் கருத்தாகும். 

செவ்வாய், 17 ஜனவரி, 2012

தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர்....!

              தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து ஒரு கால் நூற்றாண்டு காலம் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 
               எம். ஜி. ஆர் சுமார் 135 படங்களில் நடித்திருக்கிறார். அத்தனைப் படங்களிலும் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் இரக்கமனம் படைத்த நல்ல மனிதனாகவே நடித்தது என்பது அவரது ரசிகர்களை அதே வழியில் செல்ல அவர்களது சிந்தனையை தூண்டியது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. அவர் திரைப்படத்தில் ஏழை மக்களுக்கு உதவுவார். உழைப்பாளி மக்களின் உரிமைகளை கேட்கும் தோழனாக இருப்பார். இவரை அடிக்கும் வில்லன்களிடம் கூட இரக்கம் காட்டுவார். இவரை தாக்கும் வில்லன்களை உடனே தாக்கமாட்டார். பிறகு அடிவாங்கிய அதே வில்லனுக்கு அறியுரை வழங்கி உதவிசெய்வார். இவரது சண்டைக்காட்சிகளில் வன்முறை இருக்காது. ஒரு முறை அன்றைய  சோவியத் யூனியனில் நடைபெற்ற திரைப்படவிழாவில் எம். ஜி. ஆர் நடித்த திரைப்படம் ஒன்றையும் திரையிட்டிருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், எம்ஜிஆர் கத்தி சண்டைப் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரஷிய மக்கள் ''எம்ஜிஆர் அழகா டான்ஸ் ஆடுறாரு'' என்று சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளாக இருக்கும். எம்ஜிஆர் கதாநாயகியிடம் கூட சண்டைப்போட்டுட்டு வருகிறேன்னு சொல்ல மாட்டார். ''விளையாடிவிட்டு வருகிறேன் வேடிக்கைப்பார்'' என்று சொல்லி சண்டைக்காட்சிகளை கூட விளையாட்டாய் செய்வார். 
                 கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொண்டால், சாகசங்களை எல்லாம் செய்து காப்பாற்றுவார். காதல் காட்சிகள் விரசமில்லாது இருக்கும். எல்லை மீறாத காதலாக இருக்கும். காதல் பாடல்கள் இலக்கியமாக   இருக்கும். எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை பாடல் காட்சிகளில் கூட கதாநாயகியை தொடாமல் நடித்து வந்திருக்கிறார். அதேப்போல, எம்ஜிஆர் திரைப்படத்தில் கதைக்காக கூட மது அருந்துவது போலவோ, சிகரெட் குடிப்பது போலவோ நடித்ததில்லை. பெண்களை கேலிசெய்வது போன்றெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு   மதிப்பளிப்பதும்,  அம்மாவை உயர்த்திக்காட்டுவதும், உயர்த்தி பாடுவதும்,  சிறுவர்களுக்கும்   இளைஞர்களுக்கும்   அறியுரை வழங்குவதும்,  அறியுரை வழங்கி பாடுவதும் எம்ஜிஆர் படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.   
                இப்படியெல்லாம் எம்ஜிஆர் நடித்ததால், அவரை நியாங்களை கேட்கும்  ஒரு நல்ல வீரனாகவும், காதல் ததும்பும் கதாநாயகனாகவும், உதவிகள் செய்யும் நல்ல மனிதனாகவும், நன்னடத்தை கொண்ட நல்ல பண்பாளராகவும் மக்கள் பார்வையில் உயர்வான மனிதராக காட்சியளித்தார். பிற்காலத்தில், இப்படியாக அவர் நடித்த திரைப்படங்களும், அவரைப்பற்றிய மக்களின் பார்வையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையுமே அவரை தமிழக அரசியலில் ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்றது.
              இன்றைக்கு அவரது காலத்திற்கு பிறகு, அவரை பின்பற்றி நடிப்பவர்களும், தனக்கென தனி முத்திரையோடு நடிப்பவர்களும் எம்ஜிஆரைப் போன்று மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை என்பது உண்மை.
                அதுவும் இன்றைக்கு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை பார்க்கும் போது, இளைஞர்களைப் பற்றி  - குழந்தைகளைப் பற்றி - சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமல் வெறும் இலாப நோக்கத்தில் நடிக்கும் கதாநாயகர்களைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய ஹீரோக்கள் என்றால், மது அருந்துவார், புகைப்பிடிப்பார், பெண்களை கேலி செய்வார், அம்மா - அப்பாவை மதிக்கமாட்டார், அப்பா சட்டைப்பையிலிருந்து காசு திருடுவார், சண்டைக்காட்சிகளில் வில்லன்களை விட மோசமாக வன்முறையோடு சண்டைப்போடுவார், எதிரிகளின் மண்டை உடையும் - எலும்புகள் முறியும் - ரத்தம் சொட்டும் - கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தூக்கி எறியப்பட்டு  உயிர் போகும் - வரம்பு மீறி காதலிப்பார் - இப்படியாக நல்லப் பண்புகளே இல்லாத கதாநாயகர்களையே  நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்தக்காலத்தில் வில்லன்கள் செய்ததை எல்லாம் இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள். 
             அதனால் தான் இவர்கள் எம்ஜிஆரைப் போல் மக்களின் மனதில் நிற்பதில்லை. அதனால் தான் இன்றைய ஹீரோக்களைப் பார்க்கும் போது மக்களின் மனதில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர்.

இந்திய நாட்டின் மாபெரும் தலைவர் தோழர். ஜோதிபாசு நினைவைப்போற்றுவோம்....!

        
 
  சுதந்திரப்போராட்ட வீரர், உழைப்பாளி மக்களின் தோழன், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல்கொடுத்த போராளி,  உலகிலேயே அதிக ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றிய மக்கள் ஊழியன், இந்த தேசத்தின் சரியான அரசியல் பாதைக்கு வழிகாட்டிய கலங்கரைவிளக்கம், இந்திய நாட்டின் மாபெரும் தலைவன் 
  தோழர் ஜோதிபாசு 
      நினைவைப் போற்றுவோம்....
‘கடுமையான  பணி காத்திருக்கிறது’  
 
            அனைத்துக் கட்சிகளையும் ஒப்பிடும் போது மார்க்சிஸ்ட் கட்சிதான் மிகுந்த ஜனநாயக உணர்வு கொண்ட கட்சி என்று நான் எப்போதுமே கூறி வந்துள்ளேன். கட்சி மட்டத்தில் நாங்கள் எல்லாவற்றையும் பற்றி விவாதிப்போம். இதன் மீது எடுக்கப்படும் எந்தவொரு முடிவையும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு, அனைவராலும் நிறைவேற்றப்படவும் வேண்டும். இதுதான் ஸ்தாபன கட்டுப்பாடு குறித்த எங்களது கருத்தாகும்.
          ஏகாதிபத்தியவாதிகள் அதிகமான அளவில் மூன்றாவது உலக வளரும் நாடுகளை இலக்காகக் கொண்டு வருகிறார்கள். ஆசியாவின் புலிகள் என்று கூறப்பட்ட நாடுகள் சரிந்து விழுந்துள்ளன. முதலாளித்துவ வெற்றிப்பாதையின் முன் உதாரணங்கள் என்று இந்த நாடுகளை சுட்டிக்காட்டிய வாதம் மிக மோசமான வகையில் தவறாகப் போனது. முதலாளித்துவப் பாதையின் மூலமாகத்தான் முன்னேற முடியும் என்று மூன்றாவது உலக வளரும் நாடுகளுக்கு முன் வைக்கப்பட்ட வாதம் பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
             “எங்களின் அனுபவங்களே எங்கள் பணிகளை எளிமையாக்கியது என்பது மிகையல்ல. அடிப்படையான மார்க்சிய - லெனினிய கோட்பாடுகளை மனதில் நிறுத்தி நாங்கள் செயல்பட்ட போதெல்லாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இது தான் இதுவரை நமது அனுபவம். இதன் பொருள் சமரசமாக நடந்து கொள்வது என்பது அல்ல. வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி நமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் இதன் உட்பொருளாகும்”.
        மூன்றாவது அணி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறி வருகிறது. நீடித்த இயக்கங்கள், மக்களின் ஈடுபாடு ஆகியவற்றின் மூலமாகத்தான் இதை உருவாக்க முடியும். முன்னெப்போதையும் விட இடதுசாரிகளின் பொறுப்பு என்பது மேலும் முக்கியமானதாக மாறியுள்ளது. நமக்கு முன்னே மிகவும் கடினமானதொரு போராட்டம் காத்திருக்கிறது. அதே நேரத்தில் இது அவசியமானதும் முக்கியமானதும் ஆகும். வரலாறு மிகப்பெரியதொரு பொறுப்பை நம் மீது சுமத்தியுள்ளது. இதுபோன்ற கடுமையான சோதனைகளின் மூலம் தான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி உருவாக முடியும். அத்தகைய அமிலச் சோதனைதான் நமக்கு முன்னே காத்திருக்கிறது.

-தனது சுய சரிதையில் தோழர் ஜோதிபாசு

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

காமிரா கண்ணை மூடியது - காமிராவைத் தூக்கிய முதல் இந்திய பெண் புகைப்பட பத்திரிகையாளர்...!

   அஞ்சலி                                
                     தன்னுடைய 98 - ஆவது வயதில், முதல் இந்திய பெண் புகைப்பட பத்திரிகையாளர் ஹோமாய் வ்யாரவாலா  இன்று காலை காலமானார். பத்திரிகைத் தொழிலுக்காக காமிராவை தூக்கிய முதல் இந்திய பெண்மணி ஆவார். 1938 - ஆம் ஆண்டில் காமிராவை எடுத்தவர் சுமார் 35 ஆண்டுகளாக 1973 - ஆம் ஆண்டுவரை தன் காமிரா மூலம் சுட்டுத் தள்ளியிருக்கிறார். இவர் எடுத்த அத்தனை  புகைப்படங்களும் அபூர்வமானவை. சுதந்திரப்போராட்டங்கள், 1947 ஆகஸ்ட் 15 - முதலாவது சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள், மவுண்ட் பேட்டன் விடைபெறும் நிகழ்வு, காந்தி - நேரு - லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரது இறுதி நிகழ்ச்சிகள் போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை இவரது காமிராவில் அடக்கியிருக்கிறார். இவருக்கு இந்திய அரசு பத்மா விபூஷன் விருதும் கொடுத்து கவுரவித்துயிருக்கிறது. மறைந்த அம்மையாருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்.
              
                இவர் எடுத்த பிரபலமான புகைப்படத்தில் ஒன்று  இன்றும் எல்லோரையும் கவர்ந்திழுக்கிறது. மறைந்த பிரதமர் நேரு பிரிட்டிஷ் ஹை - கமிஷனரின் மனைவியுடன் விமானத்தில் புதுடெல்லியிலிருந்து லண்டன் சென்றபோது எடுத்தப்படம். நேரு உடன் நெருங்கிய நட்புகொண்டவர் என்பதால் நேருவின் ஒவ்வொரு அசைவுகளையும் படம் எடுத்திருக்கிறார்.  கீழே உள்ள படங்களும் இவர் எடுத்ததே.

அன்றும்....
இன்றும்....                                                                                                                              
தன் சகோதரி விஜயலட்சுமியுடன் நேரு
ஜாக்குலின் கென்னடியுடன் நேரு 
                        


மக்களின் வாழ்க்கைநிலை அறியாத மாமன்னன் மன்மோகன் சிங்...!

                                                       வாழ்க்கை எளிதாக இல்லை பிரதமரே!
                                                                         -சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,
             இது ஒரு ஆபத்தான காலம். நல்லெண்ணங்களின் அடிப்படையில் அமைந்த சில புத்தாண்டுத் தீர்மானங்கள் குறித்து மறுபரிசீலனை தொடங்கிவிட்டது. சில தீர்மானங்களின் அடிப்படைகளைச் சிதைக்கும் வகையில், வேறு சில தீர்மானங்களும் முன்வைக்கப்படுகின்றன. அவை குறித்தெல்லாம் என்ன சொல்வது? பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கும் புத்தாண்டு செய்தியில் நெருடலான கேள்வி இது தான்.
 

ஐந்து அம்சத் திட்டம்!

              ஒரு சக்தி வாய்ந்த லோக் பால் சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அதனை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. மேலவையில் இதை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என பிரதமர் எவ்வித விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினை எவ்வாறு நிறைவேற்றப்போகிறார்கள் என்றும் இதுவரை கூறவில்லை. எனினும், வாழ்க்கைப் பாதுகாப்பு (கல்வி, உணவு, சுகாதாரம், வேலை வாய்ப்பு குறித்த பாதுகாப்பு), பொருளாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு என ஐந்து அம்சத் திட்டத்தினை பிரதமர் அறிவித்திருக்கிறார்.

லோக்பால் நாடகம்!

            முதலில் லோக்பால் சட்டத்தினை எடுத்துக்கொள்வோம். மாநிலங்களவையில் சில முக்கியமான திருத்தங்களுடன்தான் மசோதாவினை நிறைவேற்ற முடியும் என்ற நிலைமை முன்கூட்டியே தெரிந்தும் கூட,  அங்கு ஒரு நள்ளிரவு நாடகம் நடத்தப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்திலும், மக்களவையிலும் எவ்வித ஆட்சேபணையினையும் எழுப்பாத ஐ.மு. கூட்டணியின் கூட்டாளி திரிணாமுல் காங்கிரஸ் அதற்கு திறம்பட உதவி செய்தது.
            இந்த மசோதா மட்டுமே போதுமானதல்ல எனவும், வெளிப்படைத்தன்மையினை அதிகரிக்கும் வகையிலான ஆட்சியமைப்புச் சீர்திருத்தம் தேவைப்படுவதாகவும் அவர் வலியுறுத்திக் கூறினார். பொருளாதாரத்தினை தாராளமயப்படுத்தியதன் பின்னணியில், ஊழலில் சில புதிய வடிவங்கள் தோன்றியுள்ளன என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர், அது உருவாக்கியிருக்கும் சலுகை சார் முதலாளித்துவம் குறித்து வாய் திறக்கவில்லை. ஊழலுக்கு எதிராகவும், லோக்பால் சட்டத்திற்கு ஆதரவாகவும் எழுந்த மக்களின் ஆர்ப்பரிப்பில், இரண்டு விஷயங்கள் அமிழ்ந்து போய்விட்டன. நீரா ராடியா ஒலி நாடாக்களில் வெளிவந்த உண்மைகளும், பணம் கொடுத்துப்பெறும் செய்தி ஆகிய இரண்டுமே அவை. ஊழல் மலிந்த அரசியல்வாதி - அரசு அதிகாரி - முதலாளி - கார்ப்பரேட் ஊடகம் என்ற தகாத கூட்டே வளர்ந்து வரும் சலுகை சார் முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடு. ஊழலுக்கும் விலைவாசிக்கும் எதிராக இலட்சக்கணக்கில் தொழிற்சங்கத்தினர் திரண்டு வந்தபோது அந்தச் செய்தியினை பார்வை படாத மூலையில் வெளியிட்ட ஊடகங்கள்தான், இன்று அன்னா ஹசாரேயின் இயக்கத்தின் பின்னால், வீராவேசமாக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. கீழ்மட்ட ஊழலில் அரசு நிர்வாகத்தின் மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை  ஊழியர்களை குறிவைக்கும் இந்த ஊடகங்கள் மெகா ஊழல்களுக்கு உரிய முக்கியத்துவம் தருவதில்லை. அவுட்சோர்சிங் மூலம் வேலைகளை வெளியாருக்கு தந்துவிட்ட நிலையில், நான்காம்  பிரிவு ஊழியர்கள் அரசு அலுவலகங்களில் இல்லாமல் போய்விட்டார்கள் என்பதை சி.பி.ஐ (எம்) உறுப்பினர் ஒருவர் மாநிலங்களவையில் சுட்டிக்காட்ட நேர்ந்தது. இந்தியா உலகில் ஒரு சக்தி வாய்ந்த நாடாக உயரவேண்டும் எனில், நாட்டின் இயற்கை வளங்களில் நடக்கும் மெகா ஊழல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத் தப்படவேண்டும்.

“ஊக்குவிப்பும்” “சுமையும்”!

           பிரதமரின் ஐந்து அம்சத் திட்டத்தில் உள்ளார்ந்த முரண்பாடுகள் உள்ளன. அதிகரித்து வரும் இந்தியாவின் நிதிப்பற்றாக் குறையைக் குறைப்பது பொருளாதாரப் பாதுகாப்பிற்கு ஒப்பாகக் கூறப்பட்டிருக்கிறது. மானியங்களைக் குறைப்பதன் மூலம்தான் இது சாத்தியம் என பிரதமர் கூறுகிறார். மானியங்களுக்கான செலவு ஆண்டொன்றிற்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் என அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில், பெட்ரோலியத் துறையிலிருந்து மட்டுமே அரசுக்குக் கிடைக்கும் வரி வருமானம் ரூ.1,30,000கோடியெனஅரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.
           கடந்த மூன்று ஆண்டு பட்ஜெட்  ஆவணங்களின் படி, அரசு வசூலிக்காமல் விட்ட அதிபயங்கரமான சலுகைத்தொகை ரூ. 14,28,028 கோடி. இதில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், உயர் செல்வந்தர்களுக்கும் அளிக்கப்பட்ட சலுகை ரூ.3,63,875 கோடி. இவ்வாண்டில் எதிர்பார்க்கப்படும் ரூ. 4,65,000 கோடி. வசூலிக்காமல் விடப்பட்ட சலுகைத் தொகையான ரூ.14,28,028 கோடியுடன் ஒப்பிடும்போது, இந்த நிதிப்பற்றாக்குறை என்ன மிகப் பெரியதா? முதலாளிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளை “ஊக்குவிப்பு” என்கிறார்கள். இந்தியாவின் 80 கோடி ஏழை மக்களுக்குக் கொடுக்கப்படும் தொகையினை “சுமை” என்கிறார்கள். இந்த தொகை கூட, ஏழை மக்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு வாழ்வதற்குத்தானே தவிர, அவர்களின் வசதியான வாழ்க்கைக்காக அல்ல. இதைத்தான், பொருளாதாரப் பாதுகாப்பில் சுமையாக உள்ளது எனவும், அதனைக் குறைப்பது அவசியம் எனவும் பிரதமர் கூறுகிறார். மக்களின் வாழ்க்கைப் பாதுகாப்பினை இதன் மூலம் எப்படி உறுதி செய்ய முடியும்? பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரிகளை கறாராக வசூலித்து, அத்தொகையினை பொது முதலீடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் தானே அதனைச் சாதிக்க முடியும்?

சர்வதேச விலை சரிதானா?

             எரிசக்திப் பாதுகாப்பு குறித்துப் பேசும் போது, எண்ணெய் விலையினை சர்வதேச விலையுடன் இணைக்க வேண்டும் என்கிறார் பிரதமர். இந்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் உண்மையான உற்பத்தி விலை எதுவாக இருந்தாலும் சரி, அதைத்தாண்டி சர்வதேச விலையுடன் இணைப்பது என்பது, தொடர்ந்து அதன் விலையேற்றத்திற்கே இட்டுச் செல்லும். கடந்த ஆண்டில் மட்டும் இந்தியன் ஆயில் கம்பெனியின் நிகர லாபம் ரூ.10,998கோடி எனவும், வரவுக்கும் செலவிற்கும் இடையிலான கையிருப்பு உபரி  ரூ. 49,470 கோடி எனவும் அதன் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. இப்போது மின் கட்டணத்தையும் சர்வ தேச விலை அளவுடன் இணைக்க வேண்டும் என்பது மக்களின் மீதான சுமையினை மேலும் அதிகரிப்பதற்குத்தானே உதவும்?

சுற்றுச் சூழல் பாதுகாப்பு!

              அதே போன்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கவலைகள், எரிசக்தி தேவைகளுடன் முரண்பட வேண்டுமென்பதில்லை. அண்மையில் டர்பன் நகரில் நடந்த வெப்ப-தட்ப மாற்றங்கள் குறித்து நடைபெற்ற உச்சி மாநாட்டில் கார்பன் புகை வெளியேற்றத்தினைக் கட்டுப்படுத்துவோம் என இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், வளர்ச்சியடைந்த நாடுகளிடமிருந்து அத்தகைய வாக்குறுதிகளை பெறாமல் இந்தியா வாக்குறுதி அளித்தது துரதிருஷ்டமே.
               எரிசக்தி உற்பத்தி கணிசமாக உயராமல், வறுமை ஒழிப்பு சாத்தியமல்ல என பிரதமர் கூறுகிறார். இன்றைக்கு மக்களின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மின் இணைப்பு கிடையாது. மூன்றில் இரண்டு பகுதியினருக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடையாது. குழந்தைகளில் சரி பாதி சத்துணவின்றி வாடுகின்றனர். மூன்றில் இரண்டு பகுதி கர்ப்பிணிப் பெண்கள் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

2011 உணர்த்தும் பாடம்!

              இந்நிலையில், பிரதமர் வெளிப்படுத்தியிருக்கும் கவலைகளுக்கும், அவர் கூறியிருக்கும் கருத்துக்களுக்கும் முரண்பாடுகள் உள்ளன. வாழ்க்கைப் பாதுகாப்பு குறித்த அவரது கருத்துக்கள் உள்ளீடற்றவை. உண்மையிலேயே மக்களின் வாழ்க்கைப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென்றால், பொருளாதரச் சீர்திருத்தங்களையும், தாராளவாதக் கொள்கைகளையும் முற்றிலுமாகத் திரும்பப்பெற வேண்டும்.
                   பிரதமரும், ஐ.மு.கூட்டணியும் விஷயங்களை மெள்ள மெள்ள மறு பரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் மட்டும் இந்திய மக்கள் மன நிறைவடைய முடியாது. வாழ்க்கைப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமெனில், அரசாங்கத்தின் முரண்பட்ட அணுகு முறைகளிலிருந்து அதனை விலகச் செய்வதற்கு, மக்கள் சக்தியினை திரட்டுவதும் நிர்ப்பந்திப்பதும் தேவை. 2011 அனுபவம் அதைத் தான் உணர்த்தியிருக்கிறது.

தமிழில் : ஜெ. விஜயா நன்றி:‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’(3.1.2012)

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்...!

                    நம் நாட்டு உழவையும், தொழிலையும் நாசப்படுத்த நம் நாட்டிற்குள்ளே வரும்  பன்னாட்டு நிறுவனங்களை விரட்டியடிப்போம். வருமானம் இல்லாமல் போனதால் தன் மானம் காக்க உயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் வாழவைப்போம். 
 
            நம் நாட்டில் அழிந்து கொண்டிருக்கும் உழவும், தொழிலும் உயரவேண்டும். இந்த தேசத்தைக்காக்கும் ராணுவம் என்பது கிராமப்புறங்களிலும்,  தொழிற்சாலைகளிலும்  தான் இருக்கின்றன. அரிவாளும், சுத்தியலும் தான் இவர்களின் ஆயுதம். துப்பாக்கிகளும் பீரங்கிகளும் ஏந்திய ராணுவம் தேவையில்லை. அரிவாளும் சுத்தியலும் ஏந்திய ராணுவம் தான் நமக்குத் தேவை. அது அதான் சிறந்த ராணுவம். உழவும் தொழிலும் வளர்ந்தால் தான் அது வல்லரசு. அது தான் நல்லரசு.


                      உழுபவர்களுக்கு நிலத்தையும்,                      
                      உழைப்பவர்களுக்கு நாட்டையும் கொடுப்போம்.               
                      அப்போது தான் நாடும் உயரும். நாமும்  உயர்வோம்.               
                      பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம்...                 
                      புரட்சிகர பொங்கல் நல்வாழ்த்துகள்...