இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரப்
பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தி,
உத்திரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் கலவரத்தைப் பற்றி பேசும்போது, அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களுக்கும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ. எஸ். ஐ., - க்கும் தொடர்பு ஏற்பட்டிருப்பது போன்று தகவல் வந்திருப்பதாக ''சி.ஐ.டி - 007'' போல உளறிக்கொட்டியிருக்கிறார். இதைக்கேட்ட இஸ்லாமியர்களையும், நடுநிலையாளர்களையும் முகம் சுளிக்கவைத்தது மட்டுமல்லாது, பொதுவாகவே இது போன்று இஸ்லாமியர்களுக்கெதிரான கருத்துப் பிரச்சாரங்களை தாங்கள் தானே செய்வது வழக்கம். இந்த விஷயத்தில் ராகுல்காந்தி முந்திக்கொண்டாரே என்று பி.ஜே.பி.,-காரர்களுக்கு கோபம் வந்துவிட்டது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு நேரம் சரியில்லை. மன்மோகனோ பேசாமலேயே காங்கிரஸ் கட்சியை சாகடிக்கிறாரு .... ராகுல் காந்தியோ பேசியே கட்சிய சாகடிச்சு தொங்கவிட்டுடுவார் போல் இருக்கிறதே...!
''குட்டித்தலைவர்'' இஸ்லாமியர்களுக்கு எதிராக இப்படி பேசறாரே... ஒரு வேலை பி.ஜே.பி., கட்சிக்குத் தான் பிரச்சாரம் பண்ணுறாரோ...?
