அமெரிக்கா வெறியாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்கா வெறியாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 ஜூலை, 2013

ஒரு மனசாட்சி உள்ள அமெரிக்கரின் குரல் - நோம் சாம்ஸ்கி

                  பின்லேடன் கொலை என்பது திட்டமிட்ட ஒரு படுகொலை என்பதும் , அடிப்படையான சர்வதேச விதிகள் மற்றும் சட்டங்களை அப்பட்ட மாக  மீறிய செயல் என்பதும் தெளி வானது. எந்தவிதமான ஆயுதமும் இல்லாமல் இருந்த ஒருவரை சுமார் 80 கமாண்டோக்கள் சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றுள்ளனர். வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் அவரது மனைவி ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

                சமூகத்தில் சட்டத்திற்கு குறைந்த பட்ச மரியாதையாவது தரப்பட வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர்கள் நீதியின் முன்பு விசாரணைக்கு நிறுத் தப்பட வேண்டும். 2002 ஏப்ரலில் அமெரிக்க உளவுத் துறையான எப்பிஐ-யின் தலைவர் ராபர்ட் முல் லர் தீவிரமான புலன் விசாரணைக்கு பின்பு, அமெரிக்க இரட்டை கோபுரங்கள் மீதான தாக்குதல் ஆப்கானிஸ்தானில் திட்டமிடப்பட்டது என்றும், யுஏஇ மற்றும் ஜெர்மனியிலிருந்து செயல்படுத்தப்பட்டது என்று நம்புவ தாக மட்டுமே கூறினார்.

                இதற்கு 8 மாதங்களுக்கு முன்பே, ஆப்கானிஸ்தானில்தான் பின்லே டன் தங்கியிருப்பதாக ஆதாரத்துடன் தகவல் அளித்தால், அவரை ஒப்ப டைப்பதாக தாலிபான்கள் வெளிப் படையாகவே தெரிவித்தனர். ஏப்ரல் 2002ல் நம்மால் நம்பப்பட்ட ஒரு விஷயம் குறித்து அப்போது எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஆனால், பாரக் ஒபாமா தன்னுடைய வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிட்ட அறிக்கையில் மிகவும் சாதாரணமாக பொய் சொல்கிறார், “2001 செப்டம்பர் 9ல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின் லேடன்தான் காரணம் என்பதை நாம் உடனடியாக தெரிந்து கொண்டோம்” என்று.

                அபோதாபாத்தில் பின்லேடனை ஒளித்து வைத்திருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரின் ஒரு பகுதியினர் குறித்து வாஷிங்டனின் கோபம் பற்றி ஊடகங்களில் பெருமளவு விவாதிக் கப்படுகிறது. ஆனால், அதே நேரத் தில் தங்களது நாட்டுக்குள் அமெ ரிக்க படையினர் அத்துமீறி நுழைந்து ஒரு அரசியல் படுகொலையை நிகழ் த்தியிருப்பது குறித்து பாகிஸ்தானின் கோபம் பற்றி யாரும் கவலைப்படு வதாக தெரியவில்லை. அமெரிக்கா வுக்கு எதிரான ஆவேசம் என்பது பாகிஸ்தானில் ஏற்கெனவே பெரு மளவு அதிகரித்துள்ளது. இப்போது நடந்துள்ள செயல் அதை மேலும் அதிகமாக்கும். பின்லேடனின் உடலை கடலில் தூக்கி எறிந்தது குறித்து ஆத்திரமும் கோபமும் முஸ்லிம் உலகத்தில் ஏற்பட்டுள்ளது.

                  இராக் நாட்டைச் சேர்ந்த கமாண்டோ படையினர் ஜார்ஜ் டபிள்யு புஷ் வீட்டுக்குள் புகுந்து, அவரை சுட்டுக் கொன்று, உடலை தூக்கி அட் லாண்டா கடலில் வீசிவிட்டு போனால் நாம் எவ்வாறு இதை எதிர்கொள் வோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். சர்ச்சைக்கு இடமின்றி பின்லேடனின் குற்றம் சித்தரிக்கப்படுகிறது.

                கியூப விமானத்தை குண்டு வைத்து தகர்த்த போட்ச், புளோரிடா வில் அமைதியாக மரணமடைய அனுமதிக்கப்பட்டிருக்கிறார். துறை முக பயங்கரவாதத்தில் தொடர்பு டையவர்களும், இதுமாதிரியே நடத் தப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்கா அத்துமீறி நடத்திய படுகொலைகள் குறித்து புஷ்சின் கவனத்திற்கு யாருமே கொண்டு வரவில்லை போலிருக் கிறது.

                ஜெர்னிமோ திட்டம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட செயலின்மூலம் ஏகாதிபத்திய ஆதிக்க மனநிலை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. மேற்கத்திய சமூகம் முழுவதும் பின் லேடன் மரணம் பெருமளவு கொண் டாடப்படுகிறது. ஆனால், அதே நேரத் தில் அமெரிக்காவால் நடத்தப்பட்ட முந்தைய மரணங்கள் புனிதப்படுத் தப்படுகின்றன.

சுருக்கமாக சொல்வதானால் இவ் விஷயத்தில் அடிப்படையான, எளி மையான உண்மைகள் வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதுமில்லை; மதிக்கப்படுவதுமில்லை என்பது தான் உண்மை.

- நோம் சாம்ஸ்கி எழுதிய கட்டுரையின் சில பகுதிகள்

கட்டுரையாளர்: எம்ஐடி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர், சமூக அரசியல் விஷயங்கள் குறித்து ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியவர் 

நன்றி: தீக்கதிர்/ 11.05.2011                             

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

ராஜீவ் காந்தி கொலையில் மறைந்திருக்கும் மர்மங்கள் நீண்டுகொண்டே போகிறது...!

         கடந்த இரண்டு நாட்களாக ஒரு செய்தி ஊடகங்களில் பெரிது படுத்தப்படாமல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின்  ஏற்பாட்டில் தான் ராஜீவ்காந்தி கொலை நடந்தது என்று இலங்கை நாட்டின் வீட்டு அமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச் பேசியிருப்பதை எந்தப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பது என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அல்லது இதெல்லாம் தெரிந்த விஷயம் தானே என்று அலட்சியமாக விட்டுவிட்டனவா என்று தெரியவில்லை. 
               ராஜீவ் காந்தியின் மரணத்தில் இன்னும் பல மர்மங்கள் நீடித்துக்கொண்டே தான் போகிறது. கொலையில் தொடர்புடைய பலபேர் இன்னும் வெளியே நடமாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 
                நேற்று முன் தினம்,  இந்திரா காந்தி குடும்பத்தினர் இருக்கும்போது தெற்காசியாவில் அமெரிக்கா பொருளாதாரா ரீதியாக செயற்பட முடியாது என்ற எண்ணத்தில், அமெரிக்க உளவு துறையான சி. ஐ. ஏ - வின்   திட்டத்தின்படியும், ஏற்பாட்டின்படியும்  ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார் என்ற தகவலை இலங்கை அமைச்சர் தெரிவித்திருப்பது என்பது அதிர்ச்சி தரும் செய்தியாக இல்லை என்றாலும்  ராஜீவ் கொலை சம்பந்தமான விசாரணை முடிவில் இந்த செய்தி ஏன் சொல்லப்படவில்லை என்பது தான் அதிர்ச்சியாக இருக்கிறது.    
                    ராஜீவ் கொலை சம்பந்தமான வழக்குகள் - விசாரனைகளின் முடிவுகள் முழுமையானது அல்ல என்பதும், பல பேர்களை காப்பாற்றவும், திருப்திப்படுத்தவுமே வழக்குகளும், விசாரணைகளும், அதன் முடிவுகளும் என்பது இந்த நாடு அறிந்ததே. 
                அமெரிக்க சி. ஐ. ஏ  தான் ராஜீவ் கொலையில் மூளையாக இயங்கியிருக்கிறது என்பதும், மற்றவர்கள் கருவிகளாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதும் அனைவரும் அறிந்ததே. 
              ராஜீவ் காந்தியின் மீது   அமெரிக்கா எரிச்சல் அடைந்ததற்கான காரணங்களில் ஒன்று தான் இலங்கை அமைச்சர் சொன்ன தகவல். இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன. 
         கடந்த 1990  -  91 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வளைகுடா போரில் எண்ணெய் நாடான குவைத்துக்காக அமெரிக்கா இராக்குடன் போர் செய்த போது, அமெரிக்காவின் போர் விமானத்திற்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போது இந்தியாவில் மிக குறுகிய காலமே பிரதமராக இருந்த எஸ். சந்திரசேகர் தான் அந்த எரிபொருளை நிரப்புவதற்கு அனுமதி அளித்தார். இந்த ஈனச்செயலை இடதுசாரி கட்சிகள் மிகக் கடுமையாக கண்டித்தன. அதேப்போல் எரிபொருள் நிரப்பிய இச்செயலை ராஜீவ் காந்தியும் எதிர்த்தார். இதனால் ராஜீவ் காந்தியின் மீது அமெரிக்கா எரிச்சலும் கோபமும் அடைந்தது.
                 அது மட்டுமல்ல, 80 - களில் இந்தியாவினுள்  அமெரிக்காவின் ராட்சசக் குழந்தைகளான புதிய பொருளாதாரக் கொள்கை, தாராளமயம், உலகமயம், தனியார்மயம் நுழைந்த காலக்கட்டம் என்பது, இந்திர காந்தியின் மறைவுக்குப்பின் ராஜீவ் காந்தி பிரதமராக ஆட்சி செய்த காலக்கட்டமாகும். அவைகளில், தனக்கு சாதகமான புதிய  பொருளாதாரக் கொள்கை, இறக்குமதி போன்றவற்றில் தாராளமயம் போன்றவற்றை ராஜீவ் காந்தி ஏற்றுக்கொண்டாலும், இன்சூரன்ஸ் - வங்கித்துறைகளில்  திணிக்கப்பட்ட தனியார்மயத்தில் மட்டும்  அவர் ஆர்வம் காட்டவில்லை. இன்சூரன்ஸ் துறை அவரது தாத்தாவால் தேசவுடமை செய்யப்பட்டது. வங்கித்துறை அவரது அம்மாவால் தேசவுடைமை செய்யப்பட்டது போன்றவைகள் தான் அதற்கு  காரணமாக சொல்லப்பட்டது. இதுவும் அமெரிக்காவிற்கு ராஜீவ் காந்தியின் மீது எரிச்சலை ஊட்டியது.
              அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை என்றால், அமெரிக்கக் கட்டளைக்கு பணிந்து நடக்கவில்லை என்றால் அவர்களை தீர்த்துக்கட்டும் வேலையில் தான் அமெரிக்கா ஈடுபடும் என்பது தான் கடந்த கால வரலாறு. 
           விடுதலைப்புலிகளை பயன்படுத்தி ராவீவை கொன்றது போல், தாலிபான்களை பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் இடதுசாரி அதிபர்  டாக்டர். முகமது நஜிபுல்லாவை கொன்றதும்,
                கடலுக்கடியிலும், பூமிக்கடியிலும், ஆகாயத்திலும் அணுகுண்டு சோதனைகளை இனி அமெரிக்கா நடத்தக்கூடாதென்று, அதன் ஜனாதிபதி ஜான் கென்னடி தடை செய்த போது, அவரை ஒரு தேசத்துரோகி என்று குற்றம் சாட்டி தன் சொந்த ஜனாதிபதியையே சுட்டுக் கொன்றதும், 
             தனக்கு அடங்கி நடக்காத இராக் நாட்டின் அதிபர் சதாம் ஹுசைனை தூக்கிலிட்டுக்  கொன்றதும், 
             மாற்றத்தை விரும்பி போராடிய லிபிய மக்களின் எழுச்சியை தனக்கு சாதகமாக மாற்றுவதற்கும், மக்கள் விரும்பிய மாற்றம் திசைத்திருப்புவதற்கும் அந்த நாட்டின் அதிபர் கடாபியை சித்திரவதை செய்து கொன்றதும், 
                இஸ்ரேலுடனான தனது உறவை பலப்படுத்திக்கொள்ள,     மறைந்த பாலஸ்தீனத்தலைவர் யாசர் அராபத்தை கொள்வதற்கு பல முறை முயற்சி செய்ததும்,
            தனக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் கியூபா நாட்டின் புரட்சித்தலைவர் பிடல் காஸ்ட்ரோவை இதுவரை 600 - க்கும் மேற்பட்ட தடவைகள் கொலை செய்து கொள்வதற்கு முயற்சி செய்ததும்,
             இரத்தவெறி பிடித்த அமெரிக்கா தான் என்பதை யாராலும் மறுக்கவோ அல்லது மறக்கவோ முடியாது. இது தான் அமெரிக்காவின் இயற்கையான குணம். இது தான் அமெரிக்காவின் 500 ஆண்டுகால இரத்தக்கறை படிந்த வரலாறாகும். மேலே சொன்ன அத்தனை சம்பவங்களும், உலக நாடுகளுக்கெல்லாம் பாதுகாவலனாக விளங்கிய - உலக அமைதிக்கு வழிகாட்டியாக விளங்கிய சோவியத் யூனியன் உடைந்து போன பின் நடந்த சம்பவங்களாகும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சோவியத் இல்லாததன் பலனை இன்று உலகம் அனுபவிக்கிறது.