காஞ்சி சங்கராச்சாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காஞ்சி சங்கராச்சாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

குணம் மாறா பார்ப்பணியமும் மதம் மாறிய யுவனும்...!

         

         அண்மையில் இசையமைப்பாளர் இளையராஜாவின்  மகனும், திரைப்பட இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் என்ற செய்தியை கேட்டு இந்து மதபற்றாளர்கள் மற்றும் இந்துமத அமைப்புகள் அவரின் மீது சேற்றை வாரி  வீசினார்கள். பல்வேறு வசை சொற்களால்  செய்தார்கள். மதம் வேண்டுமா.... வேண்டாமா...? என்ற விவாதத்துக்குள் போகவிரும்பவில்லை. ஆனால் ஒருவர் ஒரு  மதத்தை விரும்பி மாறுவது என்பதும், ஒரு குறிப்பிட்ட கடவுளை  வணங்குவது என்பதும் ஒரு தனிப்பட்ட மனிதனின் நம்பிக்கை சார்ந்த விஷயம் மட்டுமல்ல தனிமனித சுதந்திரம் சம்பந்தப்பட்ட  விஷயமாகும். அதைப்பற்றி வேறொருவர் விமர்சிப்பது என்பது அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவது போன்றதாகும்.  அதை அனுமதிப்பது என்பது ஜனநாயகமாகாது.
                 அதே அடிப்படையில் தான் யுவன் சங்கர் ராஜாவையும்  பார்க்கவேண்டும். அதைவிட்டு அவரை  கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்யும் போது தான் யுவன் சங்கர் ராஜாவின் அப்பாவிற்கு நிகழ்ந்த பழைய நிகழ்ச்சியொன்றையும் நினைவுப்படுத்த வேண்டிவருகிறது.
               கடந்த 2009-ஆம் ஆண்டு காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரருடைய 75-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சங்கரமடம் சார்பில் விருதுவழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. விருது வழங்கப்பட்ட நால்வரில் இளையராஜாவும் ஒருவர். அவரும் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இளையராஜாவும் விழாவிற்கு சென்றார். விருதை பெறுவதற்காக இளையராஜாவும் அழைக்கப்பட்டார். இளையராஜாவும் விருதைப்பெறுவதற்கு மேடையேறி ஜெயேந்திரர் அருகில் சென்றார். ஆனால் விருதை ஜெயேந்திரர்  கையால்  வழங்கவில்லை. ஏனென்றால் பார்ப்பணர் அல்லாதாரை சங்கராச்சாரி தொடமாட்டார். தொட்டால் தீட்டு. பார்ப்பணியம் சொல்கிறது. அதனால் இளையராஜாவை ''தொடவிரும்பாத'' சங்கராச்சாரி ஜெயேந்திரர் ''ஆசி'' மட்டும் வழங்கிவிட்டு தன் உதவியாளர் கையால் தான் இளையராஜாவிற்கு விருதினை கொடுக்கச்செய்தார். இந்த நிகழ்ச்சியை  பார்த்தவர்கள், பத்திரிக்கைகளில் படித்தவர்கள் யாரும் மறந்திருக்கமுடியாது. 
               இந்து மதத்தின் தலைவன் என்று தன்னைப் பெற்றி சொல்லிக்கொள்ளும் தானே  அதே மதத்தை சார்ந்த ஒருவரை தொடவிரும்பவில்லை என்கிற போது, பார்ப்பணியம் அப்படி தொட  அனுமதிக்கவில்லை என்கிற போது அவரோ அவரது மகனோ தன்னை மதிக்கும் - தன்னை தொட விரும்பும் வேறு மதத்திற்கு மாறும் போது மட்டும் ஏன்  .கவலைப்படவேண்டும்..? ஏன் .கோபப்படவேண்டும்..? ஏன் எரிச்சலுடன் விமர்சனம் செய்யவேண்டும்....? 
                 பார்ப்பனியம் மாறாவிட்டால்  மதமாற்றத்தில்  மாற்றம் கொண்டுவரமுடியாது. மதமாற்றம் நிகழ்ந்துகொண்டுதான்  இருக்கும் மதத்தை விட்டு மனிதன் வெளியே வரும் வரையில்.