இடைத்தேர்தல் முடிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இடைத்தேர்தல் முடிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 செப்டம்பர், 2014

நரேந்திரமோடிக்கு மக்கள் அளித்த பிறந்தநாள் பரிசு...!

                         இன்று ''வளர்ச்சி நாயகன்'' நரேந்திரமோடியின் பிறந்தநாள். முன்னெப்போதும் இல்லாத திருநாளாய் ஒரு ''மகாராஜாவின்'' பிறந்தநாளாய் இன்று இந்த பிறந்தநாளை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. அந்த காலத்தில் மகாராஜாவின் பிறந்தாநாளை அண்டை நாட்டு மன்னர்களை எல்லாம் அழைத்துக்கொண்டாடுவார்கள். அது போல் தான் மோடியும் தன் சொந்த மாநிலத்தில் மிகக் கோலாகலமாக விழா ஏற்பாடுகளை செய்து, தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை சிறப்பு செய்ய நம் அண்டை நாடான மக்கள் சீனத்தின் ஜனாதிபதியை அழைத்திருக்கிறார். அவரும் இந்த விழாவில் கலந்துகொள்வதற்கு கிளம்பிவிட்டார். நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு நடத்தும் இந்திய குடியரசுத்தலைவர் கொடியேற்றும் குடியரசு தினவிழாவை மட்டும் தான்  அண்டை நாடுகளின் தலைவர்கள் - பிரதமர் அல்லது ஜனாதிபதியை அழைத்து ஒரு சம்பிரதாய சடங்காக கோலாகலமாக கொண்டாடுவது என்பது வழக்கமாய் இருந்துவருகிறது. ஆனால் இப்போது இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பிரதமரின் பிறந்தநாள் விழாவிற்கு அண்டை  நாட்டின் தலைவரை அழைத்து கொண்டாடி தன்னை இந்த நாட்டின் மக்களை கவர்ந்த ''கதாநாயகனாக'' உலக அரங்கில் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார் நரேந்திரமோடி என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. 
               ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே குஜராத் மாநிலத்தில் ஒரே தடபுடல் ஏற்பாடுகள் தான். பிறந்தநாள் அன்று மோடிக்கும், மக்களுக்கும் விநியோகம் செய்ய ஏராளமான  லட்டுகள்  தயாரிக்கப்படுகின்றன. சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவிருக்கும் சீன ஜனாதிபதிக்கென்று ஸ்பெஷலாக உணவு தயாரிப்பதற்கு ஏகப்பட்ட ''மெனு'' தான் போங்க. ஆனால் அவருக்கும் கூட அசைவம் கலக்கப்படாத ''சுத்த-சைவ பிராமணாள் ஓட்டல்'' சாப்பாடு தான் தாயாரிக்கப்படுகிறது என்றால் பாருங்களேன்.
              இவ்வளவு ஏற்பாடுகளுக்கு நடுவில், இந்திய மக்களும் தன்னை வளர்ச்சி நாயகனாக காட்டிக்கொண்டு தங்களை வளைச்சி வளைச்சி ஓட்டுக்களை வாங்கி பிரதமராக உட்கார்ந்த நரேந்திரமோடிக்கு நேற்றைய தினம் ''இடைத்தேர்தல் முடிவுகள்'' மூலம் ஒரு மறக்கமுடியாத பரிசினை தந்திருக்கிறார்கள் என்பதும் இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது. சென்ற ஞாயிறன்று நாடு முழுவதும் 10 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதி, 33 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் மோடி - அமித்ஷா கூட்டாளிகளின் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சிக்கு பெருத்த தோல்வியை தான் இந்திய  மக்கள் மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசாக மோடிக்கு கொடுத்திருக்கிறார்கள். நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்று 80 நாட்களை கடந்த நிலையில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும், 100 நாட்களை கடந்துவிட்ட நிலையில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலிலும் தங்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்த நரேந்திரமோடிக்கு சரியான பாடத்தை கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அமித்ஷாவிற்கும், அவரது கொழுப்பான பேச்சுக்கும் மக்கள் பலத்த அடி கொடுத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
மோடி சாயம் வெளுத்துப்போச்சு.... டும்.... டும்.... டும்....!                
                             ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு.... டும்.... டும்.... டும்....!                  

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

80 நாட்களிலேயே மோடி பலூன் புஸ்ஸ்ஸ்.......!

                               ஊதி ஊதி பெரிதாக்கி வானளாவி பறக்கவிடப்பட்ட மோடி கேஸ் பலூன், மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்று எண்பதே நாட்களில் ''புஸ்ஸ்ஸ்'' என்று காற்று இறங்கிவிட்டது. கடந்த வாரம்  பீகார், மத்தியபிரதேசம், பஞ்சாப், கர்நாடகம் ஆகிய 4 மாநில சட்டசபைக்கான 18  தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் வெறும் 7 இடங்களில் மட்டுமே மோடி - அமித்ஷா தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி வெற்றிபெற முடிந்தது என்பதும், மற்ற 11 இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றிருக்கின்றன என்பதும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும்.
             மோடி பதவியேற்று இன்னும் 100 நாட்கள் கூட ஆகவில்லை. மோடியின் ''அகாஜூகா'' வேலையை   மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்பதை தான் இந்த தோல்வி காட்டுகிறது. 

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

ஒரு சிறைப்பறவையின் வெற்றி - மியான்மரில் ஜனநாயகத்தின் குரல் ஒலிக்கவேண்டும்...!


                ஜனநாயகத்தின் விடியலுக்காக காத்திருந்த மியான்மர் மக்களுக்கு நேற்று இனிமையாய் விடிந்தது என்று தான் சொல்லவேண்டும். ஜனநாயகத்தின்  வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்டில் பரவுவதற்கான  அறிகுறி கொஞ்சம் கொஞ்சமாக தெரியத் தொடங்கியிருக்கிறது. மியான்மர் நாட்டில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது.   22  ஆண்டுகால சிறை வாழ்க்கைக்குப்பின்  ஆங் சான் சூகி, கவ்மு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதாலும்,  இந்த இடைத்தேர்தல் முடிவுகளால் மியான்மரில் ஆட்சிமாற்றம் உடனடியாக ஏற்படப் போவதில்லை என்றாலும், அந்நாட்டில் நடைபெற்றுவரும் இராணுவ சர்வாதிகார பின்னணி கொண்ட ஆட்சியினால் மக்கள் வெறுப்படைந்து போயிருக்கிறார்கள் என்பதாலும்,  45 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 44   தொகுதிகளில் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி பெற்ற வெற்றியின் மூலம் ஜனநாயகத்தை விரும்பும் மியான்மர் மக்கள் நாடெங்கும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
                மியான்மர் நாட்டு   இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆயுத உதவி உட்பட அனைத்து உதவிகளும் செய்து வரும் உலக ரௌடி அமெரிக்கா நிலைமை சீர்குலைக்க கட்டப்பஞ்சாயத்து செய்யாமல் இருந்தால் சரி.
                சென்ற 1990 - ஆம் ஆண்டிலேயே  நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி கட்சிக்கு ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைத்திருந்தது. ஆனால், ராணுவ ஆட்சியாளர்கள் அந்த முடிவை ஏற்க மறுத்ததோடு, பெண் என்றும் பாராமல்  சூகியை சிறைக்குள் தள்ளினர். தன்னுடைய பொது வாழ்வில் 22 ஆண்டுகளை சிறையில் சூகி கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனவெறிக்கு எதிராக பல ஆண்டுகள் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலாவைப் போன்று, ஜனநாயகத்தின் விடியலுக்காக   சிறையிலிருந்த சூகியின் பெயரும் வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. 

செவ்வாய், 18 அக்டோபர், 2011

காங்கிரஸ் கட்சி இனி அழிந்துபோகும்..!



அன்றே காந்தி காங்கிரஸ் கட்சியைக் கலைக்க சொன்னாரு.... நாங்க தான் இப்ப காந்தி கண்டக் கனவை நனவாக்கப் போறோம்.. காங்கிரஸ் கட்சியை நாங்க தானே அழிக்கப்போறோம்... 


               ஹரியானா மாநிலம் ஹிசார் மக்களவைத் தொகுதிக்கும்  மற்றும் பீகார், ஆந்திரபிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த வாரம் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெற முடியவில்லை என்பது காங்கிரஸ் கட்சி பரிதாபகரமான சூழ்நிலையில் இருக்கிறது என்பதைத் தான் காட்டுகிறது. 
                அதிலும் ஹிசார் மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது மட்டுமல்லாது, டெபாசிட் தொகையையும் இழந்துவிட்டு நிற்கிறது என்பது காங்கிரஸ் கட்சி ஒரு அழிவுப்பாதையை நோக்கி போகிறது என்கிற நிலையைத்தான் காட்டுகிறது.
                   காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்விகளுக்கு அன்னா ஹசாரேவின் காங்கிரஸ் -கெதிரான பிரச்சாரம் தான் காரணமென்று பல வடநாட்டு ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. 
                 காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்விகளுக்கு அன்னா ஹசாரே பிரச்சாரமோ அல்லது ஹசாரேவின் விளைவுகளோ - தத்துவங்களோ  அல்லது பாரதீய ஜனதா கட்சியின் மீதான ஈர்ப்போ அல்ல... காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத ஆட்சியே காரணம். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மந்திரிகளின்  தலைவரும் பிரதமரும் ஆன மன்மோகன் சிங்கும், கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆன சோனியா காந்தியும், ஏழை மக்களின் தோழனாக படம் காட்டிக்கொண்டிருக்கும் ராகுல் காந்தியும் தான் காரணம் என்பதை அவர்களே மறுக்கமுடியாது. 
                 நாடு இதுவரை பார்த்திராத மெகா ஊழல், வரலாறு காணாத விலைவாசி உயர்வு இவைகளே காங்கிரஸ் கட்சியின் அல்லது காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளாகும். இவைகளே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கும் காரணங்களாகும். காங்கிரஸ் கட்சியின் இந்த மக்கள் விரோத போக்கு - தேச விரோத போக்கு தொடருமானால் வரு 2014 - ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தொலைந்து போகும். இனி மெல்ல அழிந்து போகும்.