வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

மோடி ஒரு ''மங்குனி'' என்பதை அடிக்கடி நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்....!

                   இந்த ''பிரதமர் கனவு வேட்பாளர்'' மோடி மேடையேறி பேசுவது இருக்கட்டும். முதல்ல வரலாற்று பாடத்தை சொல்லிக்கொடுங்க. பாடத்தை ஒழுங்கா படிக்கச் சொல்லுங்க. அப்புறமா பிரதமர் ஆவது பற்றி யோசிக்கலாம். ஓர் மாநில முதல்வர் இவ்வளவு மக்கு -  மங்குனியாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு கூட்டத்திலும் தன்னை ஒரு ''தேசபக்தராக'' காட்டிக்கொள்ளவேண்டும் என்று சுதந்திரப் போராட்ட காலத்து வரலாற்றை மேற்கோள்காட்டி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள நரேந்திர மோடி இந்திய வரலாற்றை தப்புத்தப்பாக பேசி திரிகிறார். வரலாறு தெரியாமல் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர்... வெட்கமாக இல்லை. வரலாற்றைப் படிக்காமல் வரலாற்றைப் படைக்கப்போகிறேன் என்று அலைகிறார் மோடி.
               தன் சொந்த மாநிலத்திலேயே பள்ளி வரலாற்றுப் பாடத்தில், அதே மாநிலத்தை சேர்ந்த காந்தியின் பிறந்த தேதியை கூட  தவறாக அச்சிட்டிருக்கிறார். காந்தியின் பிறந்த தேதி கூட தெரியாத மோடி தலைமையிலான ஆட்சியாளர்கள். அதுமட்டுமல்ல, ஒரு முறை மோடி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது, ''மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி'' என்று சொல்வதற்கு பதிலாக ''மோகன்லால் கரம்சந்த் காந்தி'' என்று தவறுதலாக பேசினார். காந்தி பிறந்த மாநிலத்தின் முதலமைச்சருக்கு காந்தியின் முழு பெயர் தெரியவில்லை.
              அதேப்போல் அண்மையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது , ''பகத்சிங், ராஜகுரு, சுபதேவ் ஆகியோர் அந்தமான் சிறையில் தங்கள் வாழ்நாளை கழித்தார்கள்'' என்று ஒரு ''புதிய வரலாற்றை'' சொல்லியிருக்கிறார். மோடிக்கு இவர்கள் எங்கே சிறைப்பட்டிருந்தார்கள்...? என்பதும் தெரியவில்லை. இவர்கள் உயிர்த்தியாகம் செய்து இந்த தேசத்தின் விடுதலைக்கு வித்திட்டார்கள் என்பதும் தெரியவில்லை.
               மோடியைப் போன்ற ஒரு ''மங்குனி'' முதலமைச்சருக்கு, ''வரலாறு முக்கியம் முதலமைச்சரே'' என்று தலையில் குட்டி சொல்லிக்கொடுங்கள். இல்லையென்றால் வரலாற்றை பிழையாக பேசும் நரேந்திர மோடி ஒரு ''வரலாற்றுப் பிழை'' என்று எதிர்கால வரலாறு பேசும்.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

உணவே மருந்து - மீன்

                       ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்... அது உண்மையும்கூட... 
            மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களையும் சில பயன்களையும் பற்றி தெரிந்து கொள்ளலாம்...

            மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது. ஏனைய புரதங்களைப் போன்றே மீன் புரதமும், உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்தியை அளிக்கவும், உடலின் வளர்ச்சி மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களைக் கொடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
                    ஒரு மனிதனுக்கு குறைந்தபட்சம் 1கிலோ உடல் எடைக்கு நாளொன்றுக்கு 1 கிராம் புரதம் என்ற அளவிலும், வளரும் குழந்தைக்கு 1.4 கிராம் என்ற அளவிலும் புரதம் தேவைப்படுகிறது. கர்ப்பிணிப்பெண்களுக்கு கூடுதலாக 15 கிராம் புரதமும், பாலூட்டும் தாய்மார்களுக்குக் கூடுதலாக 18 முதல் 25 கிராம் புரதமும் உணவில் சேர்க்கப்படவேண்டும். லைசின் மற்றும் மெத்தியோனின் போன்ற அமினோ அமிலங்களும் மீன்களில் அதிக அளவில் இருக்கிறது. மீன்களில் காணப்படும் கொழுப்புச்சத்து அளவின் அடிப்படையில் 5 சதவீதத்துக்கும் குறைவான கொழுப்புச்சத்து கொண்ட மீன்களை கொழுப்பு குறைந்த மீன்கள் என்றும் அதற்கும் அதிகமான கொழுப்புடைய மீன்களை கொழுப்பு மீன்கள் என்றும் வகைப்படுத்துவர்.
             நெத்திலி, வாவல் (வவ்வால்), விளமீன் போன்றவை கொழுப்பு குறைந்த மீன்களாகும். சீலா, அயிலை மற்றும் நெய் சாளை போன்றவை கொழுப்பு மீன்களில் முக்கியமானவைகளாகும். மீனில் உள்ள கொழுப்பு எளிதில் செரிமாணம் ஆகக்கூடியதே. இவற்றுள் நிறைவேறா கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ரால் போன்று இவ்வமிலங்கள் இரத்தக்குழாய்களில் படிவதில்லை. எனவே மாரடைப்பு போன்ற நோய்வாய்ப்பட்டவர்கூட உண்பதற்கு ஏற்ற மாமிச உணவே மீன் என்பது குறிப்பிடத்தக்கது.

மீன்களின் மருத்துவப்பண்புகள் சில...                

1. மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது.

2. மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.

3. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது.

4. மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.

5. மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.

6. பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.

7. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

8. மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது.

9. தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது.

இப்படி மீன்களில் அடங்கியுள்ள மருத்துவப்பயன்களை அடுக்க ஆரம்பித்தால் நீண்டு கொண்டே இருக்குமளவுக்கு அடுக்கடுக்காய் பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. மீன்கள் மட்டும் இன்றி இரால், நண்டு என்ற ஒவ்வொரு கடல் உணவு வகைகளிலும் பலப்பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. மருத்துவ நிறைந்திருக்கிற.

பாரதீய ஜனதாக் கட்சிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது...!

          
           பாரதீய ஜனதாக் கட்சிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்பதை அண்மையில் டெல்லியில் இஸ்லாமியர்கள் மத்தியில் அந்தக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் பேசிய பேச்சிலிருந்து நம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. அந்தக்  கூட்டத்தில் தனக்கு முன்னே கூடியிருந்த இஸ்லாமியர்களைப் பார்த்து கைக்கூப்பி மன்னிப்புக் கேட்டிருக்கிறார். நல்லவேளை இதை நம்ப ''கேப்டன்'' பார்க்கவில்லை. பார்த்திருந்தால் '' தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு'' என்று சொல்லியிருப்பார். திடீரென்று  மன்னிப்புக் கேட்க ''ஆணவத்தின் உச்சியில்'' இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு அப்படி என்ன அவசியம் ஏற்பட்டது. அண்மையில் ''மூன்றாவது மாற்று அணி'' கொஞ்சம் கொஞ்சமாக உருவம் பெற்று எழுச்சிக் கொண்டு விஸ்வரூபம் எடுப்பது கண்டு, ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியோ உருவம் தெரியாமல் காணாமல் போய்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பாரதீய ஜனதாக் கட்சியோ கரைந்து போய்  கொண்டு இருக்கிறது. அதன் காரணமாக பாரதீய ஜனதாக் கட்சிக்கு  தேர்தல் பயம் வந்து நடுங்குவது நமக்கு நன்றாக தெரிகிறது. 
             அந்த பயத்தில் தான் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ராஜ்நாத் சிங் இஸ்லாமியர்களின்  கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்புக் கேட்கிறார். ''இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு எப்போதாவது, எங்கேயாவது எங்கள் சார்பில் ஏதாவது தவறுகளோ குறைபாடுகளோ நிகழ்ந்திருந்தால் அதற்காக நாங்கள் தலை வணங்கி மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளோம்'' என்று பாவமன்னிப்பு கேட்டு நெஞ்சுருக பேசியிருக்கிறார். அப்படி பேசியதன் மூலம் இஸ்லாமியர்களுக்கெதிராக ''நரவேட்டை'' நரேந்திர மோடி செய்த கொடுமைகள் அனைத்தும் உண்மை தான்என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
            மேலும் அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர்களைப் பார்த்து கதறியிருக்கிறார். ''பாரதீய ஜனதாக் கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. எங்களுக்கு எதிரான தவறான பிரச்சாரத்தை நம்பவேண்டாம். நாட்டின் நலன் கருதி இந்த முறை எங்களுக்கு வாக்களியுங்கள். ஒருமுறை வாக்களித்துப் பாருங்கள். ஒரு அரசை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதற்காக நீங்கள் வாக்களிக்க கூடாது. சகோதரத்துவம், மனிதநேயம் மிக்க வலுவான நாட்டை உருவாக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்று கதறு கதறு என்று கதறியிருக்கிறார். 
                    இவர்களுக்கு எதிராக யாரும் பிரச்சாரம் பண்ணவேண்டாம். இவர்களது ''பிரதமர் கனவு வேட்பாளர்'' மோடி ஒருவரே போதும், இவரைப் பார்த்தாலே மக்கள் பாஜக-விற்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள். இஸ்லாமியர்களுக்கு அந்த அளவிற்கு ''நல்லது'' செய்திருக்கிறார். நரேந்திர மோடி என்பவர் பாரதீய ஜனதாக் கட்சி தானே தலையை சொறிந்துகொள்ளும் ''கொள்ளிக்கட்டை'' என்பதை மறந்துவிடக்கூடாது. இப்போது கண் கேட்டபோது சூரிய நமஸ்காரம் எதற்கு...?  எப்போதாவது - எங்கேயாவது மோடியால் அல்லது பாரதீய ஜனதாக் கட்சியினால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை விளைந்திருக்கிறதா...? இல்லையே. இஸ்லாமிய இனப்படுகொலையை செய்த இவர்கள் இஸ்லாமியர்களிடமே எப்படி தங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்கிறார்கள். இஸ்லாமியர்கள் ஒரு முறை பாஜக ஆட்சி செய்ய வாய்ப்புக் கொடுத்தால், அது இவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்று அவர்களுக்கு தெரியாதா...? 
               மதத் திமிர், வக்கிரகுணம், ஆணவம்,  அதிகார போதை, பிற்போக்குத்தனம், ஆர்.எஸ்.எஸ்.-ன் குணம்  ஆகியவற்றின் மொத்த உருவமான நரேந்திர மோடி, பன்முக சமூகங்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டில் வாழத் தகுதியற்றவர் என்பதை அவரே நிருபித்து காட்டியிருக்கிறார். அவர் மனித உருவில் உள்ள ஒரு  மிருகம் என்பதை குஜராத்தில் இஸ்லாமியர்கள் நேரில் பார்த்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர் வேற்றுமையில் ஒற்றுமை, மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த இந்த தேசத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இங்குள்ள இஸ்லாமியர்களின் எதிர்காலம், அவர்களது வாழ்க்கைப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், உயிர் மற்றும் உரிமைகள் எல்லாம் என்ன ஆகும்...? அந்த ''குஜராத் மாடலை'' நாடு முழுதும் பார்க்கவேண்டுமா...? இது தான் ராஜ்நாத் சிங்கைப் பார்த்து இந்திய இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்வி...?????????????????????

புதன், 26 பிப்ரவரி, 2014

ஐ.டி .கம்பெனி பணி பெண்களுக்கு பாதுகாப்பற்றது - ஆபத்தானது....!

          
           இன்றைக்கு ஆயிரமாயிரமாய் அள்ளிக்கொடுக்கும் கம்ப்யூட்டர் சயன்ஸ் மற்றும் தகவல்  தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பணியைப்பற்றிய கனவோடு தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் இந்த படிப்புகளுக்கு தான் ஏகப்பட்ட போட்டியாக இருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு இந்த படிப்புக்கான இடத்தை வாங்குவதற்காக பெற்றோர்கள் ''கடன்பட்டு'' பல இலட்சங்களை செலவு செய்கிறார்கள். இடத்தை வாங்குவதற்கு மட்டுமல்ல, அந்த படிப்பை படித்து முடிப்பதற்குள்  ''மீண்டும் மீண்டும் கடன்பட்டு'' பல இலட்சங்களை பெருமையுடன் செலவு செய்கிறார்கள். அப்படியெல்லாம்  செலவு செய்து ''வாங்கிய'' படிப்பை வைத்து  எதிர்காலத்தில் ஒரு கனவுலகில் வாழப்போகிறோம் என்கிற நம்பிக்கையில்  தான் இன்றைய இளைஞர்கள் கஷ்டப்பட்டு படித்து முடிக்கிறார்கள். அவர்கள் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் போதே, இந்தியாவில் இருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள், ஐ.டி கம்பெனிகள், கால் சென்டர்ஸ், பிபிஒ என பலவகைப்பட்ட அமெரிக்க சார்பு நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கு இந்த இளைஞர்களை கூட்டம் கூட்டமாக தேர்வு செய்துவிடுகிறார்கள். பின் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கப்  போகிறது என்பது மட்டுமல்லாமல், தன்னோடு படிக்கும் நண்பர்களுடன் சேர்ந்து பணி செய்யப்போகிறோம் என்கிற இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
             பெரும்பாலும் அவர்களுக்கு சொந்த ஊரிலிருந்து தள்ளி வேறு ஊரில் இருக்கும் கம்பெனியில் தான் வேலை கொடுப்பார்கள். அப்போது தான் வீடு - குடும்பம் என்கிற நினைப்பு இல்லாமல் மணிக்கணக்கில்  அவர்களை வேலை வாங்கமுடியும். 50,000 வரையில் சொற்ப பணத்தைக்கொடுத்து ( நம் இளைஞர்களை பொருத்தவரை அதிக பணம் ), வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறையும் அளித்துவிட்டு, ஐந்து வேலை நாட்களில் ''பத்து நாள்'' வேலைகளை வாங்கி அந்த இளைஞர்களை பிழிந்து சக்கையாக்கி போட்டுவிடுகிறார்கள். அதுமட்டுமல்ல இந்த ஐ.டி வேலை என்பதே பெரும்பாலும் ''இரவு நேரப்பணியாக'' தான் இருக்கும். இதில் பெண்களும் விதிவிலக்கல்ல. இதைப் புரிந்துகொள்ளாமல், இந்த வேலையை செய்யும் இளைஞர்களும், அவர்களின் பெற்றோர்களும் பூரித்துப் போய்விடுகிறார்கள்.
                இதையெல்லாம் தட்டிக் கேட்பதற்கு அங்கு தொழிற்சங்கம் உண்டா என்றால் அதெல்லாம் அங்கே கிடையாது. தொழிற்சங்கமே ஆரம்பிக்கமுடியாது. அங்கு வேலை செய்யும் இளைஞர்கள்  ''தொழிற்சங்கம்'' என்ற வார்த்தையை கேட்டால் ஏதோ கெட்டவார்த்தையை போல் முகம் சுளிப்பார்கள்.
               இரவு நேரப்பணி என்பதால் கொடுக்கப்பட்ட வேலை முடிந்ததும் இரவில் பெண்கள் உட்பட நேரங்கெட்ட நேரத்தில் தான் வெளியே அனுப்பப்படுவார்கள். இது பெண்களை பொருத்தவரை பாதுகாப்பற்றது - ஆபத்தானது என்பதை யாரும் புரிந்துகொள்வதே இல்லை. ஆள் நடமாட்டமில்லாத இரவு நேரங்களில் பணி  முடித்து வரும் அந்த பெண்கள் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. இந்த பாலியல் கொடுமை என்பது வெளியில் மட்டுமல்ல. பெண்கள் பணி  செய்யும் ஐ.டி நிறுவனங்களின் உள்ளேயும் ''மனித மிருகங்களின்'' பாலியல் சீண்டல்களும், கொடுமைகளும் நடந்தவண்ணம் தான் இருக்கின்றன. இன்றைய பொருளாதார சூழ்நிலையில் அங்கே கொடுக்கப்படுகிற சம்பளம் அவற்றையெல்லாம் மறைத்துவிடுகிறது.
                  இரவு நேரப்பணி என்பதால், தூங்காமல் விழித்திருந்து வேலை செய்வதற்கு சிகரெட்டை புகைக்க கற்றுக்கொடுக்கிறார்கள். பெண்களும் இந்தப் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயமாகும். அதுமட்டுமல்ல, கடுமையான வேலை பளுவால் உண்டான மன இறுக்கத்தை போக்குவதற்கு இங்கே வேலை செய்யும் இளைஞர்கள் ''WEEK END PARTY'' என்ற பெயரில் மதுவுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இதிலும் பெண்கள் விதிவிலக்கல்ல என்பதும் வேதனைக்குரிய விஷயமாகும். பண்பாடு - கலாச்சாரத்தையே குழித்தோண்டிப் புதைக்கும் இடமாக இன்றைய ஐ.டி  நிறுவனம் உள்ளன.
                   இன்னும் பெண்களுக்கெதிரான எவ்வளவோ பயங்கரங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இதெற்கெல்லாம் காரணம் அன்றைய - இன்றைய ஆட்சியாளர்கள் தான். தொழிலாளர்களுக்கு, பணி  செய்யும் பெண்களுக்கும் பாதுகாப்பை அளித்துவந்த நமது ''தொழிலாளர் சட்டத்தையே'' ஆட்சியாளர்கள் குழித்தோண்டி புதைத்தது தான் காரணம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லக் குழந்தைகளான தாராளமயம் - தனியார்மயம் - உலகமயம் என்ற பேய்களை வாழவைக்க,  அன்றைய வாஜ்பேயி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி அரசு தான் நம் நாட்டில் மிகக்கடுமையாக இருந்த ''தொழிலாளர் சட்டத்தையே'' அழித்தொழித்தது என்பதை அனேகமாக யாரும் மறந்திருக்கமுடியாது. 
                 அதுவரையில் நம் நாட்டின் தொழிலாளர் சட்டத்தில், ஒருவரை வேலையிலிருந்து நீக்கவேண்டுமென்றால் மூன்று மாதம் நோட்டீஸ் கொடுக்கவேண்டுமென்றும், டாக்டர் - நர்ஸ்களை  தவிர பெண்களை  மாலை 6 மணிக்கு மேல் இரவு நேரப்பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் பல்வேறு ஷரத்துக்கள் இருந்தன. ஆனால் இந்தியாவில் மேலே சொன்ன அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளை தடையில்லாமல் நடத்துவதற்கு அன்றைய வாஜ்பேயி அரசு அந்த தொழிலாளர் சட்டங்களை '' காயடித்து நீர்க்க செய்துவிட்டது. வாஜ்பேயி அரசு மிகத் துணிச்சலாக அந்த ஷரத்துக்களையெல்லாம் நீக்கியதன் விளைவாகத்தான், அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களும், ஐ.டி கம்பெனிகளும் நம் நாட்டு இளைஞர்களை கொத்தடிமைகளைப் போல் வேலை வாங்கிக்கொண்டு கோடிக் கோடியாய் இலாபம் ஈட்டுகிறார்கள். 

Alternative Alliance -11 Parties' Joint Declaration...!

           
               The country is going to the polls again to elect the 16th Lok Sabha.  This is the occasion for the people of India to decide the future direction of the Indian Republic.  
            Five years of the UPA-II government have led to all-round problems and suffering for the people.  Economic growth has slowed down which was already skewed in favour of the rich; unprecedented price rise has caused havoc to the lives of the people; farmers have faced acute distress; youth face unemployment and bleak prospects; lakhs of adivasis, dalits and minorities have faced loss of livelihood; women have faced unprecedented insecurity  and violence; corruption has become the byword for the ruling establishment.

It is time for a change and to throw out the Congress from power.

                  The BJP, which claims to be the alternative, has no policies different from that of the Congress. Their record in the states where they run governments on corruption and economic policies underline the fact that they are the twin of the Congress and the other side of the same coin. Moreover, they represent an ideology which spells divisiveness, disunity and communal disharmony which will endanger the secular-democratic fabric. 

The BJP and the communal forces must be defeated and prevented from coming to power.

                 There has to be an alternative to the Congress and the BJP – an alternative which has a democratic, secular, federal  and pro-people development agenda.

              We, the leaders of 11 parties, responding to the people’s urge for relief from the growing burdens, have resolved to work together for:

(i) Strengthening the democratic framework ending corruption and ensuring accountability in government.

                 (ii)   Establishing a firm secular order which recognizes the plurality and   
                 diversity of our society.
 
(iii)  Providing a people-oriented developmental path which addresses the concerns of inequality, social justice, farmers’ interests, minorities and women’s rights.

(iv)  Reversing the centralizing model at the Centre; creating a true federal system so that all states’ rights are assured, including special category status for states who deserve it.

We urge other secular-democratic parties and forces to join our endeavour.

                     We appeal to all sections of the people, all citizens to extend their support to our parties and the principles we have set forth. 

மத்திய அரசே...! வேலை கொடு - ஓய்வுபெறும் வயதை உயர்த்தாதே...!

              
    
        இன்று மதியம் தொலைக்காட்சிகளில் எல்லாம் பரபரப்பான செய்தியொன்று ஓடிக்கொண்டிருந்தது. மத்திய அரசு ஊழியர்கள் சம்பந்தமான செய்தி அது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களின் வாக்குகளை குறிவைத்து மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுக்காக ஏழாவது ஊதிய கமிஷனை அறிவித்து அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காங்கிரஸ் கட்சிக்காரனுங்க காரணம் இல்லாமல் ஆற்றில் இறங்கமாட்டார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். தேர்தல் நேரத்தில் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டு அவர்களது ஓட்டுக்களை ''பொறுக்கும்'' சூழ்ச்சி தான் இது என்பதை அவர்களும் அறிந்து தான் வைத்திருக்கிறார்கள். 
              பாராளுமன்றத்தின் கடைசிக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவருகிற இந்த சூழ்நிலையில் இன்னொரு அதிர்ச்சித் தரும் அறிவிப்பை மத்திய அரசு நாளை வெளியிடவிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஊதிய கமிஷன் பரிந்துரை செய்யும் வரையிலான இந்த இடைப்பட்ட காலத்தில் ஊதியத்தை உயர்த்தி தருவது என்றும், பணி ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்துவது என்றும் நாளை கூடவிருக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஊதியத்தை உயர்த்தித் தருவதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்கமுடியாது. ஆனால் அதே சமயம், ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் செயல் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது மட்டுமல்ல. கடுமையாக கண்டிக்கத்தக்கது. 
               நாட்டில் படித்துவிட்டு வேலைதேடும் இளைஞர்கள் கோடிக்கணக்கில் அதிகரித்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கான வேலைவாய்ப்பை நியாமாக உருவாக்கித் தருவதில் மத்திய அரசு கவனம் செலுத்தாமல், ஏற்கனவே பணியிலிருப்பவர்களுக்கு மேலும் பணி நீட்டிப்பை அளிப்பது என்பது எந்த வகையிலும் நியாயம் ஆகாது. தேசத்தின் மீது அக்கறையுள்ள யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது. அதுமட்டுமல்ல. அரசின் இந்த செயல் என்பது மத்திய அரசு தங்களுக்கு எதிரான படித்த- வேலைதேடும் இளைஞர்களின் கோபத்தை அரசு ஊழியர்களுக்கு எதிராக திருப்பிவிடும் செயலாகும். 
               எனவே மத்திய அரசு துறைகளிலும், அதன் சார்பு நிறுவனங்களிலும் காலியாக இருக்கும் இலட்சக்கணக்கான இடங்களை நிரப்பி வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைகொடுங்கள். அது தான் இதுவரையில் தவறு மேல் தவறு செய்துவந்த மன்மோகன் அரசு செய்யும் நியாயமான செயலாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசு கடைசி காலத்திலாவது ஒரு நல்ல செயலை செய்யட்டுமே பார்க்கலாம்.

ஊழல் காங்கிரசை தூக்கி எறிவோம் - மதவெறி பாஜகவை தடுப்போம்...!

இந்திய குடியரசின் திசைவழியை தீர்மானிக்கும் தேர்தல்...!
ஊழல், மதவெறியை ஒழிப்போம்...! 
உண்மையான கூட்டாட்சியை அமைப்போம்...! 11 கட்சிகள் கூட்டாக பிரகடனம்

            வரவிருக்கும் 16வது மக்களவைத் தேர்தலையொட்டி நாட்டில் உள்ள 11 பெரிய கட்சிகள் இணைந்து தலைநகர் தில்லியில் கூட்டாகப் பிரகடனம் வெளியிட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
               நாடு 16வது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்காக மீண்டும் தேர்தலுக்கு செல்ல இருக்கிறது. இந்தியக் குடியரசின் எதிர்காலம் எந்தத் திசைவழியில் செல்ல வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பதற்கான தருணம் இது. கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி -2 அரசாங்கம் அனைத்துவிதமான பிரச்சனைகளையும், நாட்டு மக்களுக்கு கடும் துன்பங்களையும் இதுவரையில் கொடுத்து வந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை அடைந்தது மட்டுமல்ல, அது பணக்காரர்களுக்குச் சார்பாகவும் திருப்பி விடப்பட்டது.
              முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்துப் பொருட்களின் விலைவாசி உயர்வு மக்களின் வாழ்வைச் சூறையாடிவிட்டது. நாட்டில் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இளைஞர்கள் வேலையின்மையாலும் வேலையிழப்பாலும் மிகவும் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்குமா என்பதற்கான சூழலே இல்லை. பல லட்சக்கணக்கான பழங்குடியினர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். பெண்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, பாதுகாப்பற்ற சூழலில் வன்முறைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் என்பது நிர்வாகத்தில் புரையோடிப்போய்விட்டது.
           இதுவே மாற்றத்திற்கும், காங்கிரஸ் கட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவதற்குமான தருணமாகும். காங்கிரசுக்கு தானே மாற்று என்று கூறிக்கொண்டிருக்கும் பாரதீய ஜனதாக் கட்சியும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளிலிருந்து எந்தவிதத்திலும் மாற்றுக்கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை. இன்றைக்கு  பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் புரிந்துள்ள ஊழல்களும், பின்பற்றுகின்ற பொருளாதாரக் கொள்கைகளும் அக்கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதத்திலும் மாற்றுக்கட்சி என்று கூறமுடியாத வகையில்தான் இருக்கிறது. இரு கட்சிகளுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவைதான்.
            மேலும், பாஜக பின்பற்றும் தத்துவம் நாட்டைப் பிளவுபடுத்தக்கூடியதும், மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தக்கூடியதும், மதநல்லிணக்கத்திற்கு விரோதமானதும் ஒட்டுமொத்தத்தில் நம் மதச்சார்பற்ற ஜனநாயக வலைப்பின்னலையே ஆபத்திற்குள்ளாக்கக்கூடியதுமாகும். பாரதீய ஜனதாக் கட்சியும் மதவெறி சக்திகளும் தோற்கடிக்கப்படவேண்டும்; ஆட்சிக்கு வர முடியாத விதத்தில் தடுக்கப்பட்டாக வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதாக் கட்சிகும் மாற்றாக ஓர் அணி சேர்க்கையை உருவாக்கிடவேண்டும்.
            அது ஜனநாயகப்பூர்வமான மதச்சார்பற்ற, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கக்கூடிய விதத்தில் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மக்கள் ஆதரவு வளர்ச்சிக் கொள்கையைப் பின்பற்றக்கூடியதாக அமைந்திடவேண்டும்.
            இங்கே கூடியிருக்கிற 11 கட்சிகளைச் சேர்ந்த நாங்கள், ஆட்சியாளர்களால் ஏற்றப்பட்டுள்ள சொல்லொண்ணாத் துன்ப துயரங்களிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் ஒன்றிணைந்து பணியாற்றத் தீர்மானித்திருக்கிறோம். அதற்காக,
(1) அரசாங்கத்தில் ஊழலை ஒழித்திடவும், வெளிப்படைத்தன்மையை உத்தரவாதப்படுத்தவும் கூடிய விதத்தில் ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்திடவும்,
(2) நம் சமூகத்தின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, ஓர் உறுதியான மதச்சார்பற்ற மாண்பை நிலைநிறுத்திடவும்,
(3) தற்போது சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை ஒழித்துக்கட்டக்கூடிய விதத்திலும், சமூக நீதி, விவசாயிகளின் நலன்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய விதத்திலும் மக்கள் சார்ந்த வளர்ச்சிப்பாதையை மேற்கொள்ளவும்,
(4) அதிகாரத்தை மத்தியில் குவித்து வைத்திருக்கும் தற்போதைய நிலையை மாற்றி, அனைத்து மாநிலங்களுக்கும் உரிமைகளை உத்தரவாதப்படுத்தக்கூடிய வகையிலும், மிகவும் பின்தங்கியிருக்கும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கூடிய விதத்திலும் ஓர் உண்மையான கூட்டாட்சித்தத்துவத்தை உருவாக்கிடவும் தீர்மானித்திருக்கிறோம்.
               எங்களின் இத்தகைய முயற்சியுடன் நாட்டில் உள்ள இதர மதச்சார்பற்ற-ஜனநாயகக் கட்சிகளும், சக்திகளும் இணைந்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். நாட்டில் உள்ள அனைத்துப் பகுதி குடிமக்களும், எங்கள் கட்சிகளுக்கும், நாங்கள் முன்வைத்துள்ள கொள்கைகளுக்கும் தங்கள் ஆதரவினை நல்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். 
இவ்வாறு 11 கட்சிகளின் கூட்டுப் பிரகடனத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இதில், அஇஅதிமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, பிஜூ ஜனதா தளம், அசாம் கணபரிசத், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். 
          ஊழல் காங்கிரசை தூக்கி எறிவோம்...!             
          மதவெறி பாஜகவை தடுப்போம்...!                    
       மக்கள் நல மாற்று அரசை அமைப்போம்...!        

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

உள்ளத்தில் ‘இந்து ராஷ்ட்ரா’, உதடுகளில் வளர்ச்சி மந்திரம்...!

கட்டுரையாளர் : சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,             

           “இலக்கு ஒரு பக்கம், பார்வை எதிர்ப்பக்கம்”. இது எங்களது தலைமுறை இளமைக்காலத்தில் கேட்டு ரசித்த இந்தி திரைப்படப்பாடல். பி.ஜே.பி / ஆர்.எஸ்.எஸ்-ன் இன்றைய பிரச்சாரம் எனக்கு இந்தப் பாடலையே நினைவுபடுத்துகிறது. சகிப்புத்தன்மையற்ற, பாசிச இந்து ராஷ்ட்ரா என்ற இலக்கினை மத அடிப்படையிலான திரட்டல் மூலம் அடைவது ஆர்.எஸ்.எஸ்-ன் செயல் திட்டம். ஆழ்மனதில் உள்ள இந்த உண்மையான இலக்கினை மறைத்து, வளர்ச்சி, முன்னேற்றம் என்று பி.ஜே.பி மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது. எனினும், அதனுடைய இரட்டைத்தன்மை பல இடங்களில் தவிர்க்க இயலாத நிலையில் வெளிப்பட்டும் வருகிறது.

கூட்டாட்சித் தத்துவ முகமூடி!       

           நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில், வகுப்புவாத வன்முறை மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது பி.ஜே.பி அதைக் கடுமையாக எதிர்த்துத் தடுத்து நிறுத்தி விட்டது. கூட்டாட்சி நெறியினை அந்த மசோதா சிதைப்பதாகக் கூறியது. இடதுசாரிகள் எப்போதுமே வகுப்புவாதத்தை தடுப்பதற்கும், வகுப்புவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு மற்றும் நஷ்ட ஈடு விரைவில் கிடைப்பதற்கும், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உடனடியாக நீதி கிடைப்பதற்கும் வழிவகை செய்கின்ற இது போன்ற மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென்று தொடர்ந்து கோரி வந்திருக்கின்றனர். அதே நேரத்தில், மாநில அரசாங்கங்களின் உரிமைகளுக்கும், மத்தியில் கூட்டாட்சிக் கட்டமைப்புத் தன்மைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதிலும் இடதுசாரிகள் உறுதியாக உள்ளனர். பாரதீய ஜனதா கட்சி இந்த மசோதாவை எதிர்த்ததற்கு ஒரே காரணம் அதனுடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு எந்தவொரு பங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது தான். அது தான் பி.ஜே.பியின் உண்மையான கவலை. ஆனால், அதை மறைப்பதற்காக கூட்டாட்சி நெறிமுறைகளைக் காப்பாற்றும் காவலன் என்ற முகமூடியினை அது அணிந்து கொண்டது.

ஒற்றை அரசே இறுதி இலக்கு!             

         உண்மையில் கூட்டாட்சிக் கட்டமைப்பினைத் தகர்க்க வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ் / பி.ஜே.பியின் நோக்கம். எம்.எஸ். கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ் / பி.ஜே.பி கட்சியின் குருவாகக் கருதப்படுபவர். ‘இந்து ராஷ்ட்ரா’வினை உருவாக்குவதற்கான சித்தாந்தக் கட்டமைப்பினையும், ஸ்தாபனக் கட்டமைப்பினையும் உருவாக்கிக் கொடுத்தவர் இவர். 1939-ம் ஆண்டு இவர் எழுதிய ‘நாமும், நமது தேசமும் - ஒரு வரையறை’ என்ற நூலில் ”இந்து ராஷ்ட்ரா” கட்டுவது குறித்தும், சங் பரிவாரின் ஸ்தாபன அமைப்பு இந்து ராஷ்ட்ரா என்ற நோக்கத்தை எட்டும் வகையில் எவ்வாறு தகவமைக்கப்பட வேண்டும் என்றும் விவரித்துள்ளார்.
        அதில் அவர் இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் பேசும் கூட்டாட்சி நெறிமுறையினை குழி தோண்டிப் புதைத்துவிட வேண்டும் என்றும், அனைத்து “சுயேச்சையான” அல்லது “அரைகுறை சுயேச்சையான” மாநில அரசுகளை ஒழித்து விட்டு, நாடு முழுவ தற்குமான ஒற்றை அரசை உருவாக்கிட வேண்டும் என்றும் கூறுகிறார். அந்த ஒற்றை அரசின் பெயர் பாரதம் என்றும், ”ஒரே நாடு, ஒரே அரசு, ஒரே சட்டம், ஒரே தலைவர்” என்றுஅதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் நமது அரசியலமைப்புச் சட்டத்தினை மறுவரையறை செய்து, ஒற்றை அரசாங்கத்தின் கீழ் இந்த நாடு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். (1966ம் ஆண்டு எழுதிய ‘சிந்தனைக் கொத்து’ மூன்றாம் பதிப்பு, பக்கம் 227).

சந்தர்ப்பவாத சாகசங்கள்!               

         ஒரு பக்கம் பாரதீய ஜனதா கட்சி ஜார்க் கண்ட், சத்தீஸ்கர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் உருவானதற்கான பெருமை தன்னைச் சாரும் என்று கூறிக் கொள்கிறது. மறுபுறம், தெலுங்கானா விவகாரத்தில் இரட்டைநிலைப்பாட்டை எடுத்து வருகிறது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி, மொழிவாரி மாநிலங்களைபிரிக்கக்கூடாது என்று மிகத் தெளிவான நிலைபாட்டினைக் கொண்டுள்ளது. ஆர்.எஸ்எஸ்சும்பாரதீய ஜனதா கட்சி யும் தொடர்ந்து ”ஒரு நாடு,ஒரே மக்கள், ஒரே தேசம்” என்று ஒரு பக்கம்பேசிக் கொண்டே, மறுபுறத்தில், மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் சந்தர்ப்ப வாதத்தை அளவு மீறி கடைப்பிடித்து வருகின்றன.

குஜராத் ‘வளர்ச்சி’யின் லட்சணம்!                 

              அதே போலத்தான் “குஜராத் மாதிரி”யை முன்னிறுத்துவதும், வளர்ச்சி பற்றி பேசும் பிரச்சாரமும் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி கடைப்பிடிக்கும் தந்திரமேயாகும். மாநில அரசுகளின் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியிலும், அந்நிய நேரடி மூலதன வரவிலும், தொழிலில் பின்தங்கிய மாநிலங்களான ஒடிசாவிற்கும், சத்தீஸ்கருக்கும் கீழே தான் குஜராத் மாநிலம் உள்ளது என்று திட்டக்கமிஷன் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது. தனிநபர் வருமானம் என்ற அடிப்படையில் பார்த்தாலும், குஜராத் இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஆறாவது இடத்திலும், வறுமைக் குறியீட்டின் அடிப்படையில் ஐந்தாவது இடத்திலும், ஆயுட்காலத்தின் அடிப்படையில் எட்டாவது இடத்திலும் உள்ளது.
            மனிதவளக் குறியீட்டின் அடிப்படையில், இந்தியாவின் அனைத்து முக்கிய மாநிலங்களில், குஜராத் மாநிலம் பத்தாவது இடத்தில் உள்ளது. ஆரோக்கியத்திற்கான குறியீட்டின்படியும், கல்விக்கான குறியீட்டின் அடிப்படையில் பார்த்தாலும் குஜராத் ஆறாவது இடத்தில் தான் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளும், 55 சதவீத பெண்களும் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தான் ‘குஜராத் மாடல் வளர்ச்சி’. உண்மை இப்படி இருந்தும் கூட, “குஜராத்தின் வளர்ச்சி கதை” இந்திய கார்ப்பரேட் உலகினால் மிகவும் பாராட்டப்படுகிறது.

இந்து தீவிரவாதம்!                

           இந்துத்துவா தீவிரவாதக் குழுவின் முக்கியமான நபர்களில் ஒருவரான அசீமானந்தா பற்றிய ஒரு முகப்புக் கட்டுரையை ‘கேரவன்’ பத்திரிகை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. தற்போது சிறையில் உள்ள அவர் 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சம்ஜட்டா இரயில் குண்டு வெடிப்புச் சம்பவம், 2007ம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற மெக்கா மசூதி குண்டு வெடிப்புச் சம்பவம், அக்டோபர் 2007ல் நடைபெற்ற அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புச் சம்பவம் போன்றவற்றில் முக்கிய குற்றவாளி யாவார்.
மேலும் செப்டம்பர் 2006ல் மலேகா னிலும், 2008ல் மஹாராஷ்ட்ராவிலும் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டி ருப்பினும், இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்படவில்லை. இத்தகைய குற்றவாளி யைப் பற்றி பேசும்போது, ”அவருடைய இந்த தீவிரவாதத் தாக்குதல்கள் ஆர்எஸ்எஸ்சின் உயர்மட்டக் குழுவின் ஒப்புதலுடன் நடைபெற் றவை என்றும், தற்போது ஆர்எஸ்எஸ்சின் தலைவராக உள்ள மோகன் பகவத் அப்போது ஆர்எஸ்எஸ்சின் பொதுச் செயலாளராக இருந்தார்” என்றும் சுட்டிக் காட்டுகிறது.மேலும், “இதை கண்டிப்பாக நிறைவேற் றியே ஆக வேண்டும்.
ஆனால் இதையும் சங் பரிவாரையும் தொடர்புபடுத்திப் பார்க் கக்கூடாது” என்று மோகன் பகவத், அசீமானந்தாவிடம் கூறியுள்ளார். ‘கேரவன்’ ஏடு இன்னும் விரிவாகப் பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. அசீமானந்தாவிற்கு பக்க துணையாக உடந் தையாக இருந்தவர் ஆர்எஸ்எஸ்சின் சுனில் ஜோஷி. இவர் தான் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு சதிகளில் யார் யார் எங்கே கூடுவது, எங்கே குண்டு வைப்பது என்பது உட்பட அனைத்திற்கும் இணைப்புக் கயிறாக விளங்கியவர். இவர் டிசம்பர் 2007ல் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

குற்றமற்றவரா மோடி...?          

                   2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் நடைபெற்ற வகுப்புவாத படுகொலையின் போது, குஜராத் மாநில அரசின் முதலமைச்சராக இருந்த மோடிக்கும் இந்த மனிதப் படுகொலைகளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று சட்ட ரீதியாக ”குற்றமற்றவர்” என்று சான்றிதழ் பெறுவதற்காக இன்றைக்கு ஆர்எஸ்எஸ்சும், பாரதீய ஜனதா கட்சியும் கடுமையாக முயன்று வருகின்றன. பிப்ரவரி 2012ல் சிறப்பு புலன் விசாரணைக் குழு சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கையை தங்களுக்கு சாதகமான ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
                  ஆனால், அந்த அறிக்கை இவர்களுக்குச் சாதகமாக அப்படி எதையும் கூறி விடவில்லை. இந்த சிறப்பு புலன் விசாரணை குழு ஜாப்ரி வழக்கில், ஜூன் 2006ல் குல்பார்க் தாக்குதலில் ஏராளமான தடயங்கள் இருப்பதாகவும், அகம தாபாத் கலவரத்தின் போதும் இந்த தடயங்கள் எல்லாம் உண்மையானவை, சரியானவை என்றும் அபிப்பிராயம் கொண்டிருந்தது. ஆனால் இந்தத் தடயத்தை மட்டும் வைத்துக் கொண்டு சட்டப்படி குற்றம் சாட்டுவதற்கு வழியில்லை என்று மட்டும் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது இயலாமையினைத் தெரிவித்திருக்கிறது.
                 மேலும், உச்சநீதி மன்றத்திற்கு அமிக்கஸ் கியூரி (அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்புக்களுக்கு அப்பாற்பட்டு நீதி மன்றத்திற்கு உதவி செய்யும் நடுநிலையாளர்) அளித்த அறிக்கை நரேந்திர மோடிக்கு எதிராக உள்ளது. இந்திய குற்றப் பிரிவு 153ஏ, 153பி, மற்றும் 166 ஆகியவற்றின் அடிப்படையில் அவரை நீதிவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனஅந்த அறிக்கை கூறுகிறது. 2002ம் ஆண்டின்இறுதித் தீர்ப்பைப் பொறுத்தவரை 2002ம் ஆண்டு திட்டமிட்டு நடத்தப்பட்ட வகுப்புவாத மனிதப் படுகொலையைப் பொறுத்த வரையில் , உயர் நீதி மன்றங்களில் மறு பரிசீலனைக்கான மனுக்கள் பல இன்றைக்கும் நிலுவையில் உள்ளன. எனவே, ‘குற்றமற்றவர்’ என்ற சான்றிதழ் பெறுவதற்கான எந்த வாய்ப்பும் மோடிக்கு இல்லை.
மறந்து விட வேண்டுமாம்!
                  இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் 2002ஐப் பற்றி மறந்து விடும்படி மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் ஒரு வளமான எதிர்காலத்தை காண்பதற்காக 2002ம் ஆண்டை மறந்து விட வேண்டுமாம். ஆனால், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களில் இதே அளவுகோல் பொருந்தாதாம். மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசான நமது நாட்டில் ஆறாத சீழ் வடியும் புண் போல, 1984ம் ஆண்டு முதல் நமது மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருகிறது. நமது அண்மைக்கால நினைவில் இருக்கும் 2002ம் ஆண்டு மிகவும் மோசமா னது.
எப்போது நீதி வழங்கப்படுகிறதோ அப்போது தான் நமது குடியாட்சி சுத்தப் படுத்தப்பட்டு பலப்படுத்தப்படும். இந்த இரண்டு வழக்குகள் மட்டுமல்லாது வேறு பல வழக்குகளிலும் நீதி தொடர்ந்து தாமதப் படுத்தப்பட்டு வருகிறது. எனவே அது மறுக் கப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டில் நமது நாட்டிற்கு தேவைப்படுவது ஒரு மாற்று அரசியல் ஏற்பாடு. நீதி வழங்கப்படுவதற்கும், நமது குடியரசை பலப்படுத்துவதற்கும் அத்தகைய மாற்று அரசியல் ஏற்பாடு மிக மிக அவசியம்.
நன்றி : `ஹிந்துஸ்தான் டைம்ஸ், 10.02.2014
தமிழில் : ஆர். எஸ். செண்பகம்,திருநெல்வேலி     

இத்தனைக் காலம் ''குட்டித்தலைவர்'' ராகுல் எங்கே போயிருந்தார்...?

       
         “நாம் சாதாரண மனிதர்களின் முன்னேற்றம் குறித்து, குறிப்பாக விவசாயிகளின் முன்னேற்றம் குறித்து யோசிக்கிறோம். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நாம் உறுதி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு விவசாயத்தில் ஈடுபடும் வாய்ப்பினை காங்கிரஸ் வழங்குகிறது. ஆனால், பாஜக விவசாயத்தில் ஈடுபட அவர்களை கட்டாயப்படுத்துகிறது” என்று விவசாயிகளின் மீது தங்களுக்கு அக்கறை இருப்பது போல் காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல்காந்தி அண்மையில் உருக்கமாக பேசியிருக்கிறார். விவசாயிகளுக்காக இவ்வளவு தூரம் உருகிப் பேசும் ''குட்டித்தலைவர்'' நடந்து முடிந்த 15-ஆவது நாடாளுமன்றத்தில் ஒரு கூட்டத் தொடரில் கூட -  ஒருமுறைகூட விவசாயிகள் குறித்து இவ்வளவு உருக்கமாக வாய் திறந்து பேசியது இல்லையே.  எந்த பிரச்சனைகளைப் பற்றியும் இவர் பேசியது இல்லை. முதலில் இவர் பாராளுமன்றக் கூட்டங்களுக்கு வந்தா தானே...? இவர் தான் 15-ஆவது பாராளுமன்றத்தில் எல்லோரையும் விட மிகக்குறைவான கூட்டங்களில் கலந்துகொண்ட ''பெருமைமிகு'' எம்.பி. ஆவார். அந்த அளவிற்கு மக்களின் மீதும் விவசாயிகளின் மீதும் அவ்வளவு அக்கறை. இப்படிப்பட்டவர் தான் இன்றைக்கு விவசாயிகளைப் பற்றி இவ்வளவு உருக்கமாக பேசுகிறார். இன்றைக்கு இவரு மட்டுமல்ல, இன்னொரு பக்கம் பாஜகவின் ''பிரதமர் கனவு வேட்பாளர்'' ஊர் ஊராகத் திரியும் நரேந்திர மோடியும் கூட விவசாயிகள் குறித்து இன்றைக்கு கண்ணீர் வடிக்கின்றார். 
           ஆனால் உண்மையில் அந்த இரு கட்சிகளுமே அமெரிக்கா சார்ந்த கொள்கையைக் கொண்டு இந்தியாவின் கோடானுகோடி விவசாயிகளையும்,  விவசாயத்தையும் வஞ்சித்தவர்களே என்பதை நாடு அறியும். பிரதமர் மன்மோகன் சிங் ஒருமுறை விவசாயிகள் விவசாயத்தைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்கள் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் துணிச்சலாக கூறினார். இதன் பொருள் என்ன...?  இனிமேல் இந்தியாவில் சிறுகுறு விவசாயிகளுக்கு இடம் இல்லை. விவசாயத்தையும் சேர்த்து பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெருமுதலாளிகளும் பார்த்துக் கொள்வார்கள். விவசாயிகள் இனிமேல் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் கூலிகளாக பிழைத்துக் கொள்ளட்டும் என்பது தான் பிரதமர் பேசியதன் பொருள் என்பதைக் கூட விவசாயிகள்  இதுவரை புரிந்துகொள்ளவில்லை. புரிந்திருந்தால் அப்போதே ராகுல் காந்தியை நாக்கை பிடுங்குகிற மாதிரி கேள்வி கேட்டிருப்பார்களே...? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் இந்தியாவில் அதிர்ச்சி தரும் அளவிற்கு விவசாயிகளின்  தற்கொலை எண்ணிக்கை அதிகரித்தது என்பதை ராகுல் வேண்டுமானால் வசதியாக மறந்திருக்கலாம். ஆனால் விவசாயிகள் அதை மறந்திருக்கமாட்டார்கள். 
            இன்றைக்கு விவசாயிகள் மத்தியில் சென்று பேசும் ராகுல்காந்தி, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கான சூழலை மாற்ற ஒருபோதும் முயற்சித்ததில்லை. அந்த விவசாயிகள் விதியினால் சாகவில்லை ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைமையிலான அரசும் செய்த சதியினால் தான் செத்து மடிந்தார்கள்.  பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை இவர்கள் அனுமதித்ததால் தான் அதைப் பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகள் வாழ வழியின்றி உயிர் விட்டனர். மேலும் உரத்திற்கான  மானியம் இவர்கள் ஆட்சிக்காலத்தில் தான் தொடர்ந்து வெட்டப்பட்டது. விளைபொருள்களுக்கும்  கட்டுபடியான விலை கொடுக்கப்படவில்லை. ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் மோசடி வர்த்தகத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு அனுமதித்ததாலும் நஷ்டப்பட்டது விவசாயிகள் தான். காங்கிரஸ் கட்சியின் இப்படிப்பட்ட விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை மக்களும், விவசாயிகளும் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள்.
        இன்றைக்கு விவசாயிகளுக்கு முற்றிலும் விரோதமான கட்சியாகவே காங்கிரஸ் கட்சி உள்ளது என்பதை ராகுல் காந்தி உணரவேண்டும்.  ஆனால் இந்த ''குட்டித்தலைவர்'' ராகுல்காந்தி ஏதோ இப்போதுதான் விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு இறங்கி வந்தவர் போலவும், நாட்டில் இதுவரை நடந்தது எதுவுமே தனக்கு  தெரியாதது போலவும் இன்றைக்கு பேசுகிறார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச நிவாரணம் அளிக்க வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கொடுத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மன்மோகன் சிங் அரசு கடைசிவரை மறுத்தே வந்துள்ளது என்பதை மறைத்து - மறந்து , விவசாயிகளுக்கான விளைபொருளை கொண்டு செல்வதற்கான பிரத்யேக வழியை உருவாக்க உறுதி பூண்டுள்ளதாகவும் ராகுல் காந்தி விவசாயிகளிடம் அளந்துள்ளார். ஆனால் விவசாயிகளின் இறுதியாத்திரைக்கு வழி அமைத்த அரசு தான் இவருடைய அரசு என்பதை நாடு மறந்துவிடவில்லை.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

தமிழ்ப் புத்தகம் - மக்களின் கைகளில் மார்க்ஸ்...!


  புதிய புத்தகம் அறிமுகம் : என்.குணசேகரன்                  
 
               மார்க்சின் ''மூலதனம்'' மூன்று தொகுதிகளைக் கொண்டது. மூன்று தொகுதிகளையும் படித்து உள்வாங்குவது அதிக முயற்சிகள் தேவைப்படுகிற ஒரு பணி. அவ்வாறு வாசிக்க விரும்புபவர்களுக்கு உதவிடும் வகையில் ஜெர்மானிய சமூக ஜனநாயக இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜூலியன் போர்ச்சார்ட் மக்களின் மார்க்ஸ் என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியான 1919 முதல் உலகம் முழுவதும் ஏராளமான மார்க்சிய இயக்க ஊழியர்களுக்கு மூலதனத்தின் சாராம்சத்தை உட்கிரகிக்க பேருதவியாக விளங்கி வருகிறது. இந்த நூலை தமிழில் தோழர். கி.இலக்குவன் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். அதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. மூலதனம் மூன்று தொகுதிகளையும் சேர்த்து கிட்டத்தட்ட 2200 பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய நூல். இந்த மூன்று தொகுதிகளிலும் இருக்கிற சில அடிப்படை கோட்பாடுகளையும் கருத்துக்களையும், 400 பக்க அளவில் இந்த நூல் எளிய தமிழில் விளக்குகிறது. இந்த நூலை வாசிக்கிற போது மூன்று தொகுதிகளையும் மார்க்சின் விரிந்து பரந்துள்ள சிந்தனை ஓட்டத்தையும் புரிந்து கொள்ள உதவிகரமாக உள்ளது.
                 மூன்று தொகுதிகளிலிருந்து கருத்துக்களை தொகுக்கிற போது ஒழுங்கற்றுப்போகும் அபாயம் உள்ளது. ஆனால்,ஜூலியன் போர்ச்சார்ட் தர்க்கவியல் ரீதியாக ஒரு ஒருங்கிணைப்புடன் மார்க்சின் சிந்தனைக்கு எவ்வித பாதிப்பும் நேராமல் மிகத் திறமையாக தொகுத்து விளக்கியுள்ளார். ஜூலியன் போர்ச்சார்ட்டர் 30 ஆண்டு காலமாக மார்க்சின் மூலதனத்தை வாசித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வந்தவர். அந்த கடும் உழைப்பு இந்த நூலின் தெளிவான விளக்கங்களில் இழையோடுகிறது. தீவிர களச் செயல்பாட்டாளராக விளங்கிய ஜூலியன் போர்ச்சார்ட்டர் முதல் உலக யுத்தம் நடந்தபோது மார்க்சிய இயக்கத்திற்கு ஜெர்மனியில் ஒரு தேக்கம் நிலவிய சூழலில் கிடைத்த ஓய்வினைப் பயன்படுத்தி இந்த நூலை எழுதி முடித்தார்.
             நூலின் உள்ளடக்கத்தின் முதல் அத்தியாயமே மூலதனத்தின் மூன்றாவது தொகுதியிலிருந்து துவங்குகிறது. முதல் அத்தியாயத்தில் பண்டங்கள்விலைகள்இலாபங்கள் என்கிற தலைப்பில் சில அடிப்படைகள் விவரிக்கப்படுகிறது. குறிப்பாக முதலாளியின் உற்பத்தி செலவு கொண்டுள்ள மூன்று பிரிவுகளான, 1. உற்பத்தி சாதனங்கள், 2. நில வாடகை, 3.கூலி ஆகியனவற்றை விளக்கி இதற்குள்ள தொடர்புகள்முரண்பாடுகள் விவரிக்கப்படுகின்றன.
                அதன் பிறகுசரக்கு சுற்றுமூலதன சுற்று அவற்றையொட்டி உருவாகிற இலாபம் போன்ற விசயங்கள் எல்லாம் விளக்கப்படுகிறது. சரக்கின் உள்ளே புதைந்துள்ள பயன் மதிப்புபரிவர்த்தனை மதிப்பு ஆகியவற்றிற்குரிய தொடர்புகள் விளக்கப்படுகிறது. பிறகுபொருட்களின் மதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்கிற அடிப்படைக் கேள்வி எளிமையாக விளக்கப்படுகிறது. இயற்கையின் மீது மனித உழைப்பு செலுத்தப்படுவதுதான் உற்பத்தி நிகழ்வு. அனைத்து உற்பத்திப் பொருட்களிலும் மனித உழைப்பு உறைந்து கிடக்கிறது. பொருட்களின் மதிப்பை நிர்ணயிப்பது,அதில் சமூக ரீதியில் அவசியான உழைப்பு நேரம் என்பதை ஏற்கனவே மார்க்ஸ் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.
முதலாளித்துவ சமூக அமைப்பில் உழைப்பு சக்தியும் ஒரு சரக்காகவே சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. முதலாளி கூலி என்கிற விலையைக் கொடுத்து உழைப்பு சக்தியை வாங்குகிறார். இது உற்பத்தி நிகழ்வு நடப்பதற்கு முன்பே இந்த பேரம் முடிவடைந்து உழைப்பாளி தனது உழைப்பை செலுத்த முனைகின்றார்.
                 உழைப்பு சக்தியை வாங்குதல்-விற்றல் என்ற அத்தியாயத்தில் உற்பத்தி நிகழ்வின் போது புதிய மதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை ஜூலியன் போர்ச்சார்ட் விளக்குகிறார். இந்த அத்தியாயம் முதலாளிக்கு கிடைக்கிற இலாபம் சந்தையின் ஏற்ற இறக்கங்களால் உருவாகிறது என்கிற கட்டுக்கதையை உடைத்தெறிகிறது. உற்பத்தி நிகழ்வின் போது தொழிலாளி செலுத்துகிற உழைப்பு சக்திதான் ஏற்கனவே இருக்கிற மூலப்பொருட்கள்இடுபொருட்கள் உள்ளிட்டவற்றில் செயலாற்றி புதிய மதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு உற்பத்தி நிகழ்வின்போது ஏற்படும் உபரி மதிப்புதான் முதலாளிக்கு இலாபமாக கிடைக்கிறது.
             முதலாளித்துவ உற்பத்தியில் இரு துருவங்களாக இயங்குவது முதலாளி வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும். மூலதனம்,கச்சாப் பொருட்கள்இடுபொருட்கள்உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்கக் கூடிய பணம்உற்பத்தி சாதனங்கள் ஆகிய அனைத்தையும் உடைமையாகக் கொண்டது முதலாளி வர்க்கம். ஆனால்தொழிலாளி வர்க்கத்திற்கு இதுபோன்ற எந்த உடைமையும் இல்லை. அவர் தன்னிடம் உள்ள திறமையால் இயக்குகிற உற்பத்திக் கருவிகளும் அவருக்கு உடைமை இல்லை. அவருக்கு இருக்கிற ஒரே உடைமை அவரிடம் இருக்கிற உழைப்புச் சக்தி. இதைப் பற்றி மார்க்ஸ் குறிப்பிடுகிற போது அவர் சுதந்திரமானவர் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். யாரிடம் வேண்டுமானாலும் தன்னுடைய உழைப்பு சக்தியை விற்பதற்கு அவர் தயார் நிலையில் இருக்கக் கூடியவர். இந்த உழைப்பு சக்தியை சந்தையில் விலை கொடுத்து பொருள் வாங்குவது போலகூடியவரை குறைந்த விலையில் வாங்கிட முதலாளி முயற்சிக்கிறார்.
              உற்பத்திக் கருவிகள்மூலப்பொருட்கள்இடுபொருட்கள் உள்ளிட்ட முதலாளியின் மூலதனத்தை மார்க்ஸ் மாறா மூலதனம் எனப் பெயரிடுகிறார். ஏனென்றால் இதில் எதுவும் புதிய மதிப்பை உருவாக்குவதில்லை. உற்பத்திப் பொருள் உருவாவது உழைப்பாளி தனது உழைப்பு சக்தியை செலுத்தி மதிப்பை ஏற்படுத்துகிற போதுதான் உற்பத்திப் பொருள் சந்தை விற்பனைக்கு செல்வதற்கு ஏற்றவாறு தயாராகிறது. அதாவது பரிவர்த்தனை மதிப்பு கொண்ட உற்பத்திப் பொருள் உழைப்பாளியின் உழைப்பு சக்தியால் படைக்கப்படுகிறது. இந்தப் பொருள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு முதலாளி ஏற்கனவே வைத்திருக்கிற மாறா மூலதனத்தில் கூடுதல் மதிப்பு ஏற்றப்படுகிறது. உதாரணமாக முதலாளியின் மாறா மூலதன மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் என்றால் சந்தையில் பொருள் விற்பனைக்குப் பிறகு பத்து கோடி லாபம் சேர்க்கப்பட்டு ஆயிரத்து பத்து கோடி முதலாளிக்கு கிடைக்கிறது. தனது ஏனைய செலவுகள் போக அந்த லாபத்தில் கணிசமான பகுதியை ஏற்கனவே உள்ள மூலதன மதிப்போடு முதலாளி சேர்த்து விடுகிறார். இவ்வாறு உற்பத்தி நிகழ்வின் போது உழைப்பாளியின் உழைப்பு சக்தி ஏற்படுத்துகிற புதிய மதிப்பு உபரி மதிப்பு எனவும் அந்த உபரி மதிப்பு இலாபமாக முதலாளிக்கு சென்று சேர்கிறது என்பதையும் மார்க்ஸ் விளக்குகிறார். இந்த லாபம் மேலும் மேலும் மூலதனம் பெருகவும்மூலதனக் குவியலுக்கும் வித்திடுகிறது. மார்க்சின் இந்த கண்டுபிடிப்புக்களை ஜூலியன் போர்ச்சார்ட் கோர்வையாக எடுத்துரைத்து விளக்குகிறார்.
                 இதில் உழைப்பு சக்திக்கு செலவிடப்படுகிற கூலி ஏற்கனவே பேரம் பேசி முடிக்கப்பட்டது. அதாவதுஉற்பத்தி நிகழ்வு துவங்குவதற்கு முன்னதாகவே கூலி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால்உற்பத்தி நிகழ்வின் போது உழைப்பு சக்தி ஏற்படுத்துகிற உபரி மதிப்பு பற்றி அப்போது பேரத்தில் பேசப்படுவதில்லை.
               இதனை விளக்குகிற போது மார்க்ஸ் உழைப்பாளியின் உழைப்பு சக்தி செலவிடப்படுகிற உழைப்பு நேரத்தை இரு வகையாகப் பிரிக்கின்றார். ஒன்று அவசியான உழைப்பு நேரம்மற்றொன்று உபரியான உழைப்பு நேரம். இந்த இரண்டும் சேர்ந்தாக உழைப்பாளியின் உழைப்பு சக்தி செலுத்தப்படுகிறது. முதலாளி அளிக்கும் கூலித் தொகை அவசியான உழைப்பு நேரத்திற்கு மட்டுமே. உபரியான உழைப்பு நேரம் முதலாளிக்கு இலவசமாக கிடைக்கிறது. அறிவியல்பூர்வமாக முதலாளித்துவ அமைப்பினுடைய இந்த விதிகளை மூலதனத்தில் மார்க்ஸ் விளக்குகிறார். அந்த விளக்கத்தின் சாராம்சத்தை ஜூலியன் போர்ச்சார்ட் அன்றைய பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகளாக்கி விளக்குகிறார்.
                உபரி மதிப்பு என்பது மூலதனக்குவியலுக்கான உயிர்நாடி. எனவேஇலாப வேட்டை நடத்த எப்போதுமே முதலாளி துடித்துக் கொண்டிருப்பார். முதலாளித்துவம் பட்டறைத் தொழில் துவக்க காலத்திலிருந்து தொழில்துறை உருவாகியுள்ள இக்காலம் வரை இந்த இலாப வேட்டைக்கான மூலதனத்தைக் குவிக்கும் வெறியுடன் செயல்பட்டு வருகிறது. மூலதனக் குவியலுக்கு உபரி மதிப்பை அதிகரிக்க வேண்டும். இது நேரடி உபரி மதிப்பை அதிகரிப்பது,சார்பு உபரி மதிப்பை அதிகரிப்பது என்ற வழிகளில் நடைபெறுகிறது. இதை போர்ச்சார்ட் விளக்குகிறார்.
                      வேலை நாள் 10 மணி நேரத்துக்கு நீடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் உழைப்புச் சக்தியின் மதிப்பை இட்டு நிரப்புவதற்கு 6 மணி நேரம் செலவிடப்படுகிறது என்றால்எஞ்சியுள்ள 4 மணி நேரத்தில் ஒரு திட்டமான அளவில் உபரி மதிப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. வேலை நாளின் கால அளவை 11 மணி நேரத்துக்கு நீட்டிக்க முடியுமானால்அல்லது உழைப்பின் உற்பத்திப் பொருளை 10 மணி நேரத்துக்குள் அதிகரிக்க முடியுமானால்அல்லது இந்த இரண்டு செயல்பாட்டு முறைகளையும் இணைத்துக் கொள்ள முடியுமானால் உபரி மதிப்பு அதே விகிதாசாரப்படி அதிகரிக்கும். இதன் மூலம் உபரி மதிப்பு அறுதி அதிகரிப்பைப் பெற முடியும்.
                             பட்டறைத் தொழில் துவக்க காலத்தில் இலாபத்தை அதிகரிக்க முதலாளித்துவத்தின் முயற்சிகள் நூலில் பத்தாவது அத்தியாயத்திலிருந்து விளக்கப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்தினர் முன்பு தொழில்துறை முன்னேற்றம் ஏற்படுத்தும் தாக்கம் என்கிற தலைப்பில் ஒரு விரிவான விளக்கங்கள் முன்வைக்கப்படுகிறது. அதில் உபரி மதிப்பை அதிகரிக்க தொழிலாளியின் உழைப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கு ஏற்படுகிறது. ஆரம்பத்தில் கூலியை மேலும் மேலும் குறைக்க முயற்சி செய்கிறார்கள். கூலியை குறைப்பது இலாபத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறை. இதற்கு ஆண் தொழிலாளிகளை குறைத்து பெண்கள்குழந்தைகளின் உழைப்பைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். பிடெரிக் ஏங்கெல்ஸ் இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் நிலை என்கிற நூலில் பெண்களையும் குழந்தைகளையும் முதலாளித்துவம் சுரண்டுகிற குரூரங்களை விளக்கியிருக்கிறார். பல சட்டங்கள் மக்களின் நிர்பந்தத்தால் கொண்டுவரப்பட்டாலும் அந்தச் சுரண்டல் நீடித்தது.
               வேலை நாளின் நீட்டிப்பு என்கிற அத்தியாயத்தில் வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் தங்களது இலாபத்தை அதிகரிக்க முதலாளிகள் செய்த கொடூரங்களை அவர் விளக்குகிறார். எடுத்துக்காட்டாகதீக்குச்சியில் பாஸ்பரசை பொருத்துகின்ற வேலையில் அதிகளவில் குழந்தைத் தொழிலாளர்கள்அரைப் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் விதவைகள் ஆகியோரை ஈடுபடுத்தினர். இரவு நேரப் பணிமுறையற்ற உணவு நேரங்கள்பாஸ்பரசின் நெடியினால் சூழப்பட்டுள்ள அறைகளில் சாப்பாட்டை உட்கொள்வது போன்ற படுபயங்கரமான சூழலில் அவர்கள் சுரண்டப்பட்டனர்.
             நீராவி வண்டி இயங்கத் துவங்கிய காலத்தில் அது முதலாளிகளுக்கு பொருட்களை கொண்டு செல்ல பெரும் உதவியாக இருந்தது. உற்பத்திப் பொருட்களை அதிகப்படுத்த வேண்டுமானால் அதிக நேரம் நீராவி எந்திரம் இயங்க வேண்டும். 1866 இல் ஒரு பெரும் விபத்து நேரிட்டு ஒரு கார்டுஒரு எஞ்சின் ஓட்டுநர்ஒரு சிக்னல் ஊழியர் ஆகிய மூன்று ரயில்வே ஊழியர்கள் விசாரிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட்டனர். அதில் வந்த முக்கியமான ஒரு உண்மை வெளிவந்தது. தண்டிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் இடைவெளியின்றி 40 அல்லது 50 மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டுள்ளனர். இதனால் மூளை சிந்திப்பதை நிறுத்திக் கொள்வதும்கண்கள் பார்ப்பதை நிறுத்திக் கொள்வதும் நிகழ்ந்து அவர்கள் செயலிழந்த நிலையில் விபத்துக்கள் அதிகரித்தது. இவ்வாறு ஏராளமான வழிமுறைகளில் தொழிலாளிகளின் உழைப்பு சூறையாடப்பட்டது. ஆடை தயாரிப்பு போன்ற தொழில்களில் இடைவேளை இன்றி 26 மணி நேரம், 30 மணி நேரம் பெண்கள் வேலை வாங்கப்பட்ட தகவல்கள் எல்லாம் அடுக்கடுக்காக சொல்லப்படுகின்றன.
                  எனவேமூலதனக் குவியலுக்கு வேலை நாள் நீட்டிப்பு ஒரு முக்கியமான வழிமுறையாக பின்பற்றப்பட்டுள்ளது. இதற்கு ஒரு கட்டத்தில் கடுமையான எதிர்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. தொழிலாளி வர்க்கப் போராட்டங்களும் நடந்தன. அதனால்முதலாளித்துவம் இந்த வழிமுறையை குறைத்துக் கொண்டு வேறு ஒரு வழியை கையாளத் துவங்கியது. இது உழைப்பை மும்முரமாக்குதல் என்கிற அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது. வேலை நேரத்தை நீட்டிக்காமல் சில சமயம் குறைத்தும் வேலை வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதேநேரத்தில் இயந்திரங்களை மேம்படுத்துவதுஇயந்திரங்களின் வேகத்தை அதிகமாக்குவது போன்ற பல நடவடிக்கைகள் மூலமாக உழைப்பு நேரத்தை குறைத்து உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தார்கள். இப்படிப்பட்ட முயற்சிகள் இங்கிலாந்தில் எந்த அளவிற்கு முதலாளிக்கு உற்பத்தியை பெருக்கி இலாபத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது என்பதை பல விளக்கங்களோடு ஜூலியன் விளக்குகிறார்.
              ஆனால்இயந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் ஏற்படுத்திய வேறு சில விளைவுகளும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அதீத வேகம் காரணமாக தொழிலாளிகள் விபத்துக்கு உள்ளாவது அதிகரித்திருக்கிறது. உதாரணமாக துணி ஆலைகளில் சக்கரங்களும்உருளைகளும்ஊடுநூல் ஓட்டங்களும் விரைவாக செலுத்தப்படுகிற போது உழைப்பாளியின் விரல்கள் முன்னிலும் துரிதமாக திறமையுடனும் இயங்க வேண்டும். தயக்கமோகவனக்குறைவோ இருந்தால் விரல்கள் பலியாகிற சம்பவங்கள் ஏராளமாக நிகழ்ந்தன. வேலையை விரைவாக செய்து முடிக்க வேண்டுமென்ற கட்டாயத்தினால்தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையிலான விபத்துகளுக்கு ஆளாகிற நிலை ஏற்பட்டது.
               எனவேமுதலாளித்துவ இலாப வேட்டை உழைப்பு நேர குறைப்பு இருந்த போதும்அதற்கு மாறாக வேலை நேரத்தை குறைத்து உழைப்பின் உற்பத்தித் தரத்தை மேம்படுத்துகிற போதும் அதிக ஆபத்துக்கும் அவதிக்கும் ஆளானது உழைப்பாளி மக்களே. இந்த முதலாளித்துவ கொடூரச் சுரண்டல் இன்று வரை நீடிப்பதைக் காண்கின்றோம்.
         முதலாளித்து வளர்ச்சியின் வரலாறே பெருவாரியான உழைப்பாளி மக்கள் சுரண்டலிலும்கோடிக்கணக்கான உழைப்பாளிகளின் மரணத்திலும் தான் எழுதப்பட்டுள்ளது. இந்த விவரங்களை மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தங்களது நூலிலும் தொகுத்துள்ளனர்: அந்த அடிப்படையில் போர்ச்சார்ட்டும் தனது நூலில் விளக்கியுள்ளார். இதனைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும் பெரும்பகுதி மக்களின் மரண ஓலத்திலும்கொலைக்ளத்தலும் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ முறை இன்னமும் நீடிக்க வேண்டுமா என்கிற ஆவேசத்தை நிச்சயமாக ஏற்படுத்திடும்.
           வேலைநேரம் அதிகப்படுத்துவது அதன் பிறகு இயந்திர மேம்பாடு என்ற இந்த தொடர்ச்சியின் அடுத்தகட்டமாக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி தோன்றுகிறது. இது முதலாளித்துவ உற்பத்தி முறையை புரட்சிகரமான முறையில் மாற்றி பெரும் முன்னேற்றங்களை சாதிக்கிறது. அதேநேரத்தில் இதுவும் இரண்டு விளைவுகளை ஏக காலத்தில் ஏற்படுத்துகிறது.
                   இப்போது முதலாளிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான தொழிலாளிகள் தேவையில்லை. மாறும் மூலதனம் என்று மார்க்சினால் அழைக்கப்பட்ட உழைப்பு சக்திக்கு செலவிடப்படுகிறது தொகையை இப்போது முதலாளி மிச்சப்படுத்துகிறார். தொழிலாளிகளின் தொழில்நுட்ப ரீதியான திறன் மேம்பட்ட நிலையில் அவரால் அதிக அளவில் உற்பத்தி பொருட்கள் மீதான மதிப்பினை உயர்த்த முடிகிறது. உபரி மதிப்பின் அளவு கூடுகிறது. இன்றைய நிலையில் பிரமாண்டமான சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ள உலக கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதன வளர்ச்சிக்கு அறிவியல்-தகவல் தொழில்நுட்ப யுகத்தில் உபரி மதிப்பு அதிகரித்ததன் விளைவே ஆகும். இந்த நிகழ்வுப் போக்கு இயக்கவியல் ரீதியாக மார்க்சின் மூலதனத்திலும் மக்களின் மார்க்ஸ் நூலிலும் விளக்கப்படுகிறது. இத்துடன் ஒட்டிய நிகழ்வாக பெருமளவு உழைப்பாளிகள் வேலையிலிருந்து விரட்டப்படுகிற நிலை உருவாகிறது. தயார் நிலையில் உள்ள வேலையில்லா ராணுவப் பட்டாளம் என்கிற சொற்றொடரை மார்க்ஸ் பயன்படுத்துகிறார். இந்தப் பட்டாளம் சமூகத்தில் இருப்பது ஏற்கனவே வேலையிலிருக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பின்மையை அதிகரித்து அவர்களுக்கு ஊதியத்தைக் குறைக்கவும் அதிகமாக உழைப்பைச் சுரண்டியும் முதலாளிகளுக்கு வாய்ப்பினை உருவாக்குகிறது. ஆகஇந்த நவீன யுகத்திலும் முதலாளித்துவத்தில் ஏராளமான மாற்றங்கள் உருவான பிறகும் பெருவாரியான உழைப்பாளி மக்கள் நிம்மதியற்ற வாழ்கையை தொடர வேண்டிய நிலையுள்ளது. இன்றைய அறிவியல்-தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சரியாக பயன்படுத்தப்பட்டால் மனித குலம் அனைத்திற்கும் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திட உதவிடும். ஆனால் இது தனியொரு கூட்டத்திற்குமுதலாளிகளின் இலாப வேட்டைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
                     முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையும் ராஜபாட்டையில் நடைபோடுவதில்லை. தொடர்ச்சியான நெருக்கடிகளை முதலாளித்துவம் சந்திக்கிறது. ஜூலியன் போர்ச்சார்ட் தற்கால வணிக நடவடிக்கைவணிக மூலதன வளர்ச்சி,வங்கிகளின் செயல்பாடு ஆகியவற்றை விரிவாக விளக்கிய பிறகு முதலாளித்து பாதை எதிர்நோக்கும் நெருக்கடிகளை தனியொரு அத்தியாயத்தில் விளக்குகிறார். உண்மையில் நுகர்வுத் தேவைகளுக்கும் பரிவர்த்தனைத் தேவைகளுக்கான முரண்பாட்டில் நெருக்கடி உருவாகிறது. ஒருபுறம் மனிதத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கேற்ற உற்பத்தி திட்டமிடப்படாமல் மக்கள் வறுமையாலும் வாழ்வாதாரங்கள் இழந்தும் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதேநேரத்தில் அதீத உற்பத்தி நிகழ்ந்து பொருட்கள் தேக்கமடையும் சூழல் ஏற்பட்டு உற்பத்தித் தேக்கம் மற்றும் வேலையின்மையை அதிகரிக்கிற நிலைமை ஏற்படுகிறது. உற்பத்தியில் ஏற்படும் இந்த அராஜகத்தோடு வேறு சில நிகழ்வுகளும் சேர்ந்துவிடுகிறது. முதலாளிகள் தங்களுடைய உபரி மதிப்பை அதிகரிப்பதற்காக எடுக்கிற முயற்சிகள் எவ்வாறு வீழ்ச்சியடையும் இலாப விகிதம் என்கிற சிக்கலை ஏற்படுத்துகிறது என்கிற விளக்கத்தை போர்ச்சார்ட் கடைசிப் பக்கங்களில் விளக்கியுள்ளார். இன்று 2008-க்கு பிறகு ஏற்பட்டுள்ள நெருக்கடியும் அன்று மார்க்ஸ் விளக்கிய நெருக்கடி பற்றிய கோட்பாடுகள் சரியானது என்பதை நிரூபித்துள்ளன.
             இதைப்போன்று முதலாளித்துவம் தொடர் நெருக்கடிகளால் ஆளாவதும் அதன் எதிர் விளைவுகளாக உழைப்பாளி மக்களின் வாழ்க்கை மீது தொடர் தாக்குதல் நீடிப்பதும் நிகழ்ந்து  கொண்டிருக்கிறது. மனித சமூகம் தற்போது சிக்கியிருக்கிற இந்த முதலாளித்துவ வலைப்பின்னல் மனித சமூகத்தின் எதிர்கால இருப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. முதலாளித்துவ இலாப வேட்டை சுற்றுச் சூழலையையும் பாதித்து வருகிறது. இந்நிலையில் முதலாளித்துவ வரலாற்று வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணத்தில் மனித சமூகம் வந்திருக்கிறது. ஏற்கனவேமார்க்ஸ் கூறிய அடிப்படையில் இந்த முற்றுப்புள்ளி வைக்கிற படலத்தின் கதாநாயனாக தொழிலாளி வர்க்கம் விளங்குகிறது. தொழிலாளி வர்க்கமே முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டுகிற வர்க்கம்.
                  ஆனால்கோடானுகோடி உழைப்பாளி வர்க்கத்திற்கு முதலாளித்துவ சுரண்டல் முறை குறித்து விழிப்புணர்வு தேவைப்படுகிறது. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளன. இந்த விழிப்புணர்வு உருவாக்கும் பணிக்கு சிறந்த கருவியாக ஜூலியன் போர்ச்சார்ட்டின் ''மக்களின் மார்க்ஸ்'' விளங்குகிறது.
 
மூலதனத்தின் மூன்று தொகுதிகள் : சுருக்கமான மக்கள் மதிப்பு:        
            வெளியீடு: பாரதி புத்தகாலயம்                  ஜூலியன் போர்ச்சார்ட்        
            பக்கங்கள்: 400                                              தமிழில்: கி.இலக்குவன்          
            விலை: ரூ.250/-            

சனி, 22 பிப்ரவரி, 2014

தினமலர் ஏன் நாறுகிறது...?

           
           ''சோவியத் யூனியன்'' என்று பெரிய தலைப்பிட்டு நியாயமான விலையிலான உணவகம், மருந்தகம், திரையரங்கம் போன்றவற்றை உருவாக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளை தினமலர் (பிப்ரவரி 20) விமர்சித்துள்ளது. கருத்துப்படம் ஒன்றையும் போட்டு, ஒரு தொழிலாளி (அதுவும் சிகப்பு சட்டையோடு...!!) வயிறு முட்ட சாப்பிடுகிறாராம். மினி பஸ்சில் ஏறுகிறார்... குவார்ட்டர் ஊற்றுகிறார்... தியேட்டரில் சினிமா... அதுவும் பலான படமாம்.. பின்னர் தலை கிறுகிறுத்து, வாரச்சந்தையில் வாந்தி எடுக்கிறார்... மருந்தகத்தில் மருந்து வாங்குகிறார்... என்பதாக அந்த கருத்துப்படம் உள்ளது. அதாவது, தொழிலாளி வேலையே செய்யாமல் தினமும் இப்படி தான் உலாவும்படியான நிலைமை உருவாகிவிட்டது என்று தினமலர் ஆவேசப்படுகிறது.
                    தமிழ்நாட்டில் வலை போட்டுத் தேடினாலும் அப்படி ஒரு தொழிலாளி இருக்க முடியாது என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் சொல்வது போன்ற அன்றாட நடவடிக்கைகள் யாருக்காவது இருக்க முடியுமா என்றால் நாட்டிலுள்ள பெருநிறுவனங்களின் முதலாளிகள் பெரும்பாலானோரின் அன்றாட வாழ்க்கையே இப்படித்தான் இருக்கும். இருக்கிறது. அதை யாராலும் மறுக்கமுடியாது. தன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத - அரசாங்கத்திற்கு வரி கட்டாமல் ஏய்க்கின்ற - வங்கியில் வாங்கிய கோடிக்கணக்கான கடனை திருப்பிக் கட்டாமல் வராக்கடனில் சேர்த்த இந்திய பெருமுதலாளி விஜய் மல்லையா அண்மையில் மிக தைரியமாக 14 கோடி ரூபாய்க்கு ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரரை ஏலத்துக்கு எடுக்க முடிகிறது. இதில் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு வேறு. இதற்கு தினமலர் ஏன் சிறப்பு தலைப்பிடவில்லை..?? இதை ஏன் தினமலர் விமர்சனம் செய்யவில்லை....?
               திரையரங்கம் என்றால் அதில் திரையிடப்படுவது ''பலானப்படமாகத்'' தான் இருக்கவேண்டுமா...? ஏன் பலான படம் தான் தினமலர் நினைவுக்கு வருகிறது...? சாதாரணக் கட்டணம் என்றால் அப்படிப்பட்ட படம்தான் போட வேண்டும் என்று தினமலர் சொல்ல வருகிறதா அல்லது சகவாச தோஷமா...? ஏனென்றால் பாஜகவினருக்கு மிகவும் பிடித்தமான படங்கள் ''பலானப்படங்கள்'' தான் என்பதை நாடே அறியும். கர்நாடகம்  மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்திலேயே பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அவை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே  அமர்ந்து பார்த்த பலான படத்தை நாடே பார்த்ததே.       
             அதுமட்டுமல்லாமல் சோவியத் யூனியனில் அனைத்தும் மலிவு விலையில் வழங்கப்பட்டதால், உற்பத்திப்பணி அங்கு நடைபெறவில்லை என்பது போன்று தினமலர் அரற்றுகிறது. உற்பத்தியில் பெரும் சாதனையைப் படைத்தது சோவியத் யூனியன் என்பதை முதலாளித்துவ ஆதரவாளர்கள் கூட ஒப்புக் கொள்வார்கள். அதன் சாதனைகள் என்ன என்பதைப் பட்டியலிட்டால், நீண்டுகொண்டே போகும். ஆனால், சோவியத் யூனியனின் பொருளாதார நிலைமை கெட்டுப் போய்விட்டதாகச் சொல்லப்படும் அதன் இறுதிக்காலத்தில் இருந்த பலத்தைக் கூட இன்னும் முதலாளித்துவ ரஷ்யாவால் அடையமுடியவில்லை. சோவியத் யூனியன் காணாத வறுமை, பட்டினி, சுகாதாரமின்மை, கல்வியின்மை போன்றவை தற்போதைய ரஷ்யாவில் பெருகிக் கிடக்கின்றன.
          இது ஒருபுறம், இருக்கட்டும். சென்னையில் உள்ள பல பன்னாட்டு கணினி நிறுவனங்களில் காலையில் விரைவில் வருபவர்களுக்கு மலிவு விலையில் சிற்றுண்டி, இரவு வரை இருந்து வேலை செய்பவர்களுக்கு மலிவு விலை உணவு என்றெல்லாம் தந்து, 13, 14 மணிநேரம் வேலை வாங்கிக் கொண்டிருக்கும் நிலைமை உள்ளதே... இதைக் கண்டித்து தினமலர் ஏன் தலைப்புச் செய்தி எழுதவில்லை...?? சாதாரண மக்களுக்கு பலன் தரப்போகும் வாரச்சந்தையைப் பார்த்து வாந்தி எடுக்கும் கருத்துப்படம் போடும் தினமலர், கல்வி மற்றும் மருத்துவத்தில் மிகப்பெரிய வியாபாரச் சந்தையாக தமிழகம் உருவெடுத்துள்ளதை ஏன் கண்டுகொள்ள மாட்டேனென்கிறது...?
             இது எத்தகைய உற்பத்தியை உருவாக்கியுள்ளது என்று பட்டியல் போட்டிருக்கலாமே..? ராகுல்காந்தியா அல்லது மோடியா என்ற விளம்பரப்படம் போணியாகாமல் போய்விடுமோ என்ற கவலை நாடு முழுவதுமுள்ள பெரும் பணக்காரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால் தினமலரிடமிருந்தும் முனகல் ஒலி கேட்கிறது. சிறப்புநிருபர் செய்தி, வாசகர் கடிதம் என்று அதிமுக-பாஜக கூட்டணி அமைய வேண்டுமென்று தினமலர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றதும் சேர்ந்து கொண்டதால் முனகல் ஒலி கூடுதலாகக் கேட்கிறது. அதனால் தான் தினமலர் நாறுகிறதோ....?
நன்றி :

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

ஏழுபேரையும் விடுவிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை...! - நீதியரசர் சந்துரு

              
             குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 432 மற்றும் 433 ஆகியவை கைதி ஒருவருக்குத் தண்டனைக் குறைப்பு செய்து முன்னரே விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. பிரிவு 435 இன் படி ஒருசில குற்றங்களில் தண்டனை பெற்றோருக்கு தண்டனைக் குறைப்பு செய்யும்போது மத்திய அரசோடு கலந்துபேசி செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
              அதன் உட்பிரிவு 2 “(2) No order of suspension, remission or commutation of sentences passed by the State Government in relation to a person, who has been convicted of offences, some of which relate to matters to which the executive power of the Union extends, and who has been sentenced to separate terms of imprisonment which are to run concurrently, shall have effect unless an order for the suspension, remission or commutation, as the case may be, of such sentences has also been made by the Central Government in relation to the offences committed by such person with regard to matters to which the executive power of the Union extends.” எனச் சொல்கிறது.
          ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபேரை விடுவிக்கப்போவதாக அறிவித்திருக்கும் தமிழக முதல்வர், ”மத்திய அரசு மூன்று நாட்களில் பதில் சொல்லவேண்டும் இல்லையென்றால் நாங்களே விடுதலை செய்வோம்” என அறிவித்திருக்கிறார். ஒருவேளை மத்திய அரசு விடுவிக்கக் கூடாது என ஆலோசனை தந்தால் என்ன ஆகும் என்ற கேள்வியை நீதியரசர் சந்துரு அவர்களிடம் கேட்ட கேள்விக்கு,
                "மத்திய அரசைக் கலந்தாலோசிக்கவேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டும் என்பது பொருள் அல்ல. மத்திய அரசு பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதைத்தான் தமிழக முதலமைச்சர் கூறியிருக்கிறார். அவர்கள் குற்றம் செய்தார்களா இல்லையா என சிலர் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பிரச்சனை இப்போது எழவே இல்லை. அது வீணான வாதம்” என்று அவர் கூறினார்.
                //unless an order for the suspension, remission or commutation, as the case may be, of such sentences has also been made by the Central Government in relation to the offences committed by such person with regard to matters to which the executive power of the Union extends // மத்திய அரசும் தண்டனைக் குறைப்பு செய்து தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கலாம் என முடிவு செய்யாதவரை மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு மதிப்பு கிடையாது என இந்தப் பிரிவு தெளிவாகச் சொல்கிறது என்பது உண்மைதான் என்றாலும் இந்த ஏழு பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மாநில அரசாங்கத்தின் அதிகார வரம்புக்குள் இருக்கும் இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில்தானே தவிர மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தின்கீழ் வருகிற குற்றங்களுக்காக அல்ல. இதைத் தமிழக அரசு அறியாமல் இருக்க முடியாது.
            இந்தப் பிரச்சனையில் மத்திய அரசைக் கலந்தாலோசிக்கத் தேவையே இல்லை என்பதுதான் உண்மை. அப்படியிருந்தும் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் பதில் சொல்லவேண்டும் எனத் தமிழக அரசு கெடு விதித்திருப்பது ஏன் எனப் புரியவில்லை. ஒருவேளை மத்திய அரசு நிராகரித்தால் அதை காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தேர்தலில் பயன்படுத்தலாம், முடிவு எதையும் சொல்லாவிட்டாலும்கூட காங்கிரசைக் குற்றம்சாட்ட முடியும். இதுதான் அதற்குக் காரணமா என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் நாம் புரிந்து கொள்ளலாம்.
           மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தணடனையாகக் குறைக்கப்பட்ட தென்தமிழன் என்பவர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி மத்திய சிறையில் இருக்கிறார். அவரை விடுதலை செய்யவேண்டும் என 2009 ஆம் ஆண்டில் சிறப்பான தீர்ப்பு ஒன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் வழங்கியிருந்தார். அந்தத் தீர்ப்பு இந்தப் பிரச்சனைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.
              ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தாலே போதும் நீதி வென்றுவிட்டது என்ற விதத்தில்தான் பெரும்பாலோர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது சரியல்ல. இந்த வழக்கில் ஏற்பட்டிருக்கும் கருத்தொற்றுமையைப் பயன்படுத்தி தமிழக சிறைகளில் அடைபட்டுக்கிடக்கும் சிறைவாசிகளின் உரிமைகள் குறித்து கவனத்தை ஈர்க்க நாம் முயற்சிக்கவேண்டும். அதுதான் மனித உரிமைகள் மீது அக்கறைகொண்டவர்கள் செய்யவேண்டிய பணி ஆகும். 
இவ்வாறு நீதியரசர் சந்துரு கூறியுள்ளார்.
ஆதாரம் :Naam TamilarGermany