வெள்ளி, 28 செப்டம்பர், 2012

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு : திரைப்பட கலைஞர் கமல்ஹாசன் எதிர்ப்பு!


வாலில் தீ....   

   ஆற்றுப் படுகையில் யாரோ முன் தோண்டி வைத்திருந்த ஊற்றுப் பள்ளத்தை ஒரு கடுங்கோடை மாலையில் தாகத்துடன் பார்த்தபடி நிற்கின்றேன், குப்புறப்படுத்துத் தோண்டி வைத்த குழியில் ஆசையாய் மேலும் ஐந்து கையளவு மண்ணைக் கோதி எடுக்கிறேன். மூன்றாம் கோதலில் என் புறங்கையில் சற்றே ஈரம், ஆறு, ஏழு, எட்டு, நீர் எட்டிப் பார்க்கிறது. நாவறண்ட என் முகத்தை பிம்பமாய்ப் பிடித்துக் காட்டி விட்டு தாகம் தணிக்கிறது. மூக்கில் ஒட்டிய ஈர மணலையும் முன் சட்டையில் ஒட்டிய காய்ந்த மணலையும் தட்டி விட்டு எழுகிறேன் கனவு கலைகிறது - அத்தனையும் கனவுதான். 
             பரமக்குடிக்கார ஆள் என் நினைவில் தற்போது இது நடக்க வாய்ப்பில்லை. பரமக்குடி கடக்கும் ஆற்றுப் படுகைக்கே மூடு விழா நடத்தத் துவங்கி பல மாமாங்கங்கள்  ஆகிவிட்டன. கரையோர வீடுகள் கள்ளழகர் போல் தம் களம் விட்டிரங்கி ஆற்றுப்படுகையில் புது மனைகள் புகுந்து தம் கழிவுகளை ஆற்றுப்படுகையில் கலக்க விட்டு ஓரிரு மாமாங்கங்கள் ஆகிவிட்டன. பன்றிகள் போல் மனிதர்கள் நாமும் சர்வாஹாரிகள் (omnivore) தான் எனினும் கழிவு பொருட்களையும் களை பொருட்களையும் நாம் நித உணவுகளாக்கிக் கொண்டு, திட உணவுகளை மெதுவாய் அப்புறப்படுத்தி வருகிறோம்.
                மேற்சொன்னவற்றிற்கும் வால் மார்ட் (Wall Mart) இந்தியாவிற்குள் நுழைவதற்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேட்டால் விவரம் சொல்ல நிறைய இந்தியர்கள் ஆதாரங்களோடு கடும் வாதம் புரியக் காத்திருக்கிறார்கள். தமிழகத்தின் நுழைவாயிலை தற்காலிகமாகத் தமிழக முதல்வர் தாழிட்டு வைத்திருக்கிறர். அதற்கு என் போன்ற ஆட்களின் தற்காலிகமான நன்றி தமிழக முதல்வருக்கு உரித்தாகும். இந்த வைராக்கியத்தை அவர் கடைப் பிடித்தால் எங்கள் நன்றி என்றென்றும் உண்டு. எதிர் காலச் சந்ததிகளின் விவரமறிந்த நன்றியும் கூட. 
            என்ன செய்து விடப் போகிறது இந்த வால் மார்ட் (Wall Mart)... இப்படிப் பதறுகிறீர்கள்...? என்று கேட்டால்; வால் மார்ட் (Wall Mart) என்ற அமெரிக்க பல் பொருளங்காடி கிராமவாசிகளையும் வாடிக்கையாளர்களாக்கிக் கொண்டு, அவர்களே அறியாமல் அவர்கள் பிடரியில் கையை வைத்துத் தள்ளிக் கொண்டு போய் தம் கல்லாவில் காசு போட வைக்கும். ஊற்று நீரை பாட்டிலில் நிரப்பி விற்கும். பதனி பருக ஆசை என்று என் போன்ற பழைய ஆட்களுக்கும் பாட்டிலில் அடைத்து விற்றாலும் விற்கும் வால் மார்ட் (Wall Mart) சொல்லமுடியாது. மீனுக்கு வாலும் பாம்புக்குத் தலையும் காட்டி மயக்கும் விளாங்குத்தனம் உள்ள அமெரிக்க வியாபாரக் குழுமங்கள் கிராம உத்யோக பவனின் காதியுக்திகளையும் அனுமதியின்றி அபகரித்துத் தனதாக்கிக் கொள்ளும். பனம்பழமும் கிழங்கும் என்னவென்றே தெரியாத இந்தியப் பிள்ளைகள் பிட்சாவே தன் பாரம்பரிய உணவு என மயங்கும். மயங்கட்டுமே, இதில் என்ன கெட்டுப் போகிறது? எனச் சிலர் கேட்கலாம்.
                யோசித்துப் பார்த்தால் ஒன்றும் கெட்டுப் போகாதுதான் .கம்யூனிசமோ ஜனநாயகமோ செத்தாலும் பனைமரம் உயிரோடு நிற்கும். ரோம் ராஜ்யம் துளிர்த்தெழும். பல்லாயிரம் வருடங்களுக்கும் முன்னால் மஹாவீரரின் முந்தைய  தீர்த்தங்கரர்களுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுட்கு முன்னால் இந்நாட்டை வளமாக்கிய மண்ணும் மரமும் சரியாது சாயாது. ஆளெல்லாம் மடிந்து சில நூறு வருடங்களில் மீண்டும் உயிர்த்தெழுந்து தோப்புகள் சூழும். ஆற்றுப்படுகையில் இன்றைய வீடுகள் நிர்மூலமாகி மண்ணோடு கலந்து புதிய கரடு முரடான ஆற்றுப்படுகையாகும். இதெல்லாம் முன் வீடுகளும் மனிதர்களும் இருந்த இடம் என்று நினைவு கூற ஒரு மனம்கூட மிஞ்சாது.
நாம் அழிவோம்... உலகழியாது. நாம் உலகத்தின் அச்சாணியல்ல.
சுழலும் அச்சக்கரத்தின் சரித்திரப் புத்தகத்தின் நடுவில் ஒரு சிறிய வாக்கியத்தின் கடைசியில் வரும் முற்றுப் புள்ளி.

நன்றி : ஆனந்த விகடன்

திங்கள், 24 செப்டம்பர், 2012

பிறர் உழைப்பில் வாழும் இவர்களுக்கு இவ்வளவு வருமானமா...? அம்மாடியோ...!

        ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சோமசுந்தரம் என்ற இளைஞன் ஒருவன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்து வந்தான். .மிகுந்த கஷ்டப்பட்ட குடும்பம். கல்லூரியில் கூட படிக்க வைக்க முடியாத அளவுக்கு வறுமையான சூழ்நிலையில் தான் அந்த இளைஞன் கல்லூரிப் படிப்பை தொடர்ந்தான்.அந்த இளைஞன் சோமசுந்தரத்தின் தாய்மாமன் தந்தை பெரியாருக்கு நெருக்கமானவர். அதுமட்டுமல்லாது,  அவர் தந்தை பெரியாரின் கைத்தடியை பிடித்து வளர்ந்தவர். தந்தை பெரியாரையும் அண்ணாவையும் இவர் பார்க்காமல் இருந்திருந்தால் கம்யூனிஸ்ட்டாக மாறியிருப்பேன் என்று சொல்பவர். ( நல்ல வேளை  கம்யூனிஸ்ட் கட்சி பிழைத்தது ). இப்படிப்பட்ட தாய்மாமனை பெற்றிருந்த இந்த சோமசுந்தரத்திற்கான கல்வி செலவை தந்தை பெரியாரே   ஏற்றுக்கொண்டார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும்  தன்   தாய்மாமனோடு சேர்ந்து சமுக சீர்திருத்தத்துடன் கூடிய திராவிட   அரசியல்  வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார். மாமனின் சொந்த பத்திரிகையான முரசொலியில் சேர்ந்து  பணியாற்றினார். பிற்காலத்தில் அந்த சோமசுந்தரம் தான் ''முரசொலி மாறன்'' -  ஆக உருவெடுத்தார்.
                அந்த முரசொலி மாறன் எம்ஜியாரை  வைத்து ''எங்கள் தங்கம்'' என்ற திரைப்படத்தை தாயாரித்த போது , கையில் துளி காசு கூட இல்லாமல் கடன் வாங்கி தான் படத்தை முடித்தார்.
            இந்தக் கதையெல்லாம் தமிழக மக்களுக்கே மறந்து போயிருக்கும். ஏன் கருனாநிதிக்கேக் கூட மறந்து போயிருக்கும்.
             இப்படிப்பட்ட பரம ஏழையான முரசொலி மாறனுக்கு இரண்டு ''கோடீஸ்வர''  மகன்கள். ஒருத்தர் கலாநிதி மாறன். இன்னொருத்தர் தயாநிதி மாறன். இந்த  ''கோடீஸ்வர கேடி பிரதர்ஸ்''  இன்றைக்கு இந்தியாவில் பார்க்காத தொழிலே கிடையாது. அரசியலில் ஆரம்பித்து. தொலைகாட்சி, பத்திரிகை, விமானம், திரைப்படம், மத்திய அமைச்சர் என  பல துறைகளில் கொடிகட்டி பறக்கிறார்கள். இவர்கள் செய்யும் கேடித்தனத்திற்கு இவர்களின் தாத்தா கருணாநிதி தான் பாதுகாப்பு.
          அந்த இருவரில் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறனும் தான் மேலே சொன்ன அனைத்து தொழிலின் நிர்வாகத்தையும்  கவனிப்பவர்கள்.  அமெரிக்க ஜனாதிபதியையே சந்திக்கும் அளவுக்கு அதிகாரமும், வசதியும் படைத்தவர்கள். பாரக் ஒபாமா இந்தியா வந்தபோது அவரை நேரடியாக சந்தித்து, தங்களுடைய  சொந்த விமான நிறுவனத்திற்கு விமானங்கள் வாங்குவதற்கு ஒபாமாவோடு ஒப்பந்தம் போட்டவர்கள்.
             அண்மையில் ''பார்ச்சூன் இதழ்''  இந்தியாவில்  அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ - க்கள் என்கிற  தலைமை  நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டது. அந்த இதழ் வெளியிட்ட தகவல் நமக்கெல்லாம் மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியது. படிப்பதற்கே கஷ்டப்பட்டவரின் மகனான கலாநிதி மாறன் சேர்த்த ''கோடிகளின்''  வளர்ச்சி என்பது அசூர வளர்ச்சியாக விண்ணை நோக்கி செல்கிறது.
        ''பார்ச்சூன் இதழ்'' சொல்லுகிற தகவல்,  ஒட்டுமொத்த இந்திய தலைமை நிர்வாகிகளின்
( சி.இ.ஓ - க்களின்  ) பட்டியலில் அதிக சம்பளம் வாங்குவோரில் நம்ப கலாநிதி மாறன் 2 - ஆவது இடத்திலும், அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் 3 - ஆவது இடத்திலும் இருப்பது என்பது தான்  நமக்கெல்லாம் ஆச்சரியத்தை வரவழைத்தது. கலாநிதி மாறனின் ஆண்டு வருமானம் ரூபாய்  64.4 கோடியும்,  அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் ஆண்டு வருமானம்  ரூபாய் 64.4 கோடியுமாகும்.
              அது  மட்டுமல்ல, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகள் பட்டியலில் ''சன் குழுமம்''  தலைவர் கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறன் முதலிடத்தில் இருக்கிறார் என்பது இன்னொரு ஆச்சரியம்.
             இவர்களின் தாத்தாவிற்கும், அப்பாவிற்கும், இவர்களுக்கும் ஓட்டுப்  போட்ட, உழைத்து ஓடாய் தேய்ந்து  போன  உழைப்பாளி மக்கள் இன்னும் ஓலைக் குடிசைக்குள் தான் வாழ்கிறார்கள். ஆனால் உழைக்காமலேயே இவர்கள் மட்டும் எப்படி கோபுரத்தில்....?

ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா வெற்றிபெற இந்திய தேசத்தை விலை பேசும் மன்மோகன் சிங்....!


 இந்திய மஹா ஜெனங்களே...!

மேலே உள்ள படத்தைப் பாத்தீங்களா..? மாமனும் மச்சானும் கொஞ்சி குலாவுறாங்க... இவ்வளவு கொஞ்சலும் கெஞ்சலும் எதற்கு....?
கொஞ்ச நேரம் டி. வி. பொட்டி, மெகா சீரியல், விளம்பரம், இலவசங்கள் போன்ற மாயையிலிருந்தும், மயக்கத்திலிருந்தும் கொஞ்சம்  விடுபட்டு வெளியில வாங்களேன். ஓ... வந்துட்டீங்களா...! இப்போ கொஞ்ச நேரம் கண்ணை மூடிகிட்டு... உங்க கண்ணை மூடிகிட்டு உங்களோட நினைவுகளை சற்றே பின்னோக்கி செலுத்துங்கள். ரொம்ப தூரம் போகவேண்டாம். மே 2004 முதல் நவம்பர் 2008 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்திப் பாருங்கள். 
         கடந்த 2004 முதல் 2008 வரையில் இடதுசாரிகளின் தயவோடு ஆட்சியிலிருந்த முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் நம் நாட்டில்,  பெட்ரோல் விலை என்பது  ரூபாய் 35 - லிருந்து ரூபாய் 40 - க்குள் தான் இருந்தது. சமையல் எரிவாயுவின் விலை என்பது  ரூபாய் 280 தான் இருந்தது. மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் கூட்டாளிகள் பெட்ரோல் - டீசல் - மண்ணெண்ணெய் - சமையல் கேஸ் விலைகளை உயர்த்துவதற்கு முற்பட்ட போதெல்லாம், இடதுசாரிகளின் நிர்பந்தம் காரணமாக  அவர்களால் உயர்த்த முடியாமல் போனது. எண்ணெய் வகைகள், பருப்பு வகைகள், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களை ஆன்  - லைன் வர்த்தகத்தில் சேர்த்திட மன்மோகன் சிங் துடித்த போதும் இடதுசாரி கட்சிகள் நிர்பந்தம் காரணமாக அவ்வாறு அவரால் செய்ய முடியவில்லை. பொதுத்துறை பங்குகளை விற்க முயன்ற போதும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி மூதலீட்டை நுழைக்க முயன்ற போதும், இன்சூரன்ஸ் மற்றும் வங்கி போன்ற நிதித்துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்த முயன்ற போதும், அமெரிக்காவின் கட்டளைப்படி தேச நலனுக்கு எதிராக - மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட துணிந்த போதும் அவைகளுக்கு எதிராக பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்தின் வெளியிலும் இடதுசாரி கட்சிகள்  போராட்டங்கள் நடத்தியும், மீறி செய்தால் ஆதரவை திரும்பப்பெறுவோம் என்று மிரட்டியும் ஒரு குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வதற்கு இடதுசாரி கட்சிகள் அந்த ஆட்சிக்கு வழிகாட்டினர் என்பதால் நாட்டில் மேலே சொன்ன இடைப்பட்ட காலங்களில் விலைவாசி உயர்வே இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்தினர். 
             ஆனால், தான் நினைத்த படி எதையுமே சாதிக்கமுடியவில்லை  என்பது  அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எரிச்சலையும் கோபத்தையும் ஊட்டியது. 2004 - ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், ஆட்சி செய்வதற்கு காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு போதிய எண்ணிக்கை இல்லாததால், 62 எம்பி - க்களை கொண்ட இடதுசாரி கட்சிகளின் தயவில் ஆட்சி செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் தான், அந்த ஆட்சியை  மக்களுக்கு எந்தவிதமான இடையூறும்  செய்யாமல் சரியான  பாதையில் செலுத்த முடிந்தது. ஆனால் தான் நினைத்தபடி எதையும் சாதிக்க முடியாமல் அமெரிக்கா  ஏமாந்துபோனது. 
              2009 - ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு தான் ஆட்சி நடத்த முடியும் என்ற  சூழ்நிலை அமைந்துவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சியைவிட அமெரிக்கா தான் துடித்தது. அதனால் 2009 - நாடாளுமன்றத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் தலையீடு என்பது இருந்தது. மீண்டும் மன்மோகன் சிங்கே பிரதமராக வேண்டும் என்பதற்காகவும், 2004 - ஆம் ஆண்டு தேர்தலை விட காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவும், 2004 - ஆம் ஆண்டு தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 62 இடங்களில் வெற்றிபெற்று, அமெரிக்காவின் ஆசைகளை நடத்தவிடாமல் மன்மோகன் ஆட்சிக்கு வழிகாட்டிய இடதுசாரிக் கட்சிகளின் எண்ணிக்கையை குறைக்க  வேண்டும் என்பதற்காகவும், அவர்களது தயவில் மீண்டும் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அமெரிக்கா காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வேலைகளை செய்தது.
           அமெரிக்க உளவுத்துறை - சி.ஐ.ஏ - வும், இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் மற்றும் துணை தூதர்களும், தூதரக அதிகாரிகளும்  காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் களத்தில் இறங்கினர். தேர்தல் அறிவிப்பு வெளியான நாட்களிலிருந்து சி. ஐ. ஏ - வின் தலைவர் வெளிப்படையாகவே புதுடெல்லியில் தங்கியிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களையும், ஆலோசனைகளையும் வழங்கிவந்தார். அவ்வப்போது அவரை இந்திய நாட்டின் அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சந்தித்து ஆலோசனைகளை பெற்று வந்தார். அமெரிக்க தூதர்கள் எல்லோரும் கூட்டணிக்கட்சித் தலைவர்களோடும், மற்ற சிறு கட்சிகளின் தலைவர்களோடும் பேச்சுக்களை நடத்தி காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை சிதராமல் பார்த்துக்கொண்டனர். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெறுவதற்கு ரூபாய் ஒரு இலட்சம் கோடிக்கு மேல் அமெரிக்கப் பணம் இந்தியாவில் இறக்கிவிடப்பட்டு செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சி நடந்த மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் மட்டுமே இடதுசாரிகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்பதற்காகவே மிக அதிகமாக செலவு செய்யப்பட்டது மட்டுமல்ல, சி. ஐ. ஏ - வும், தூதர்களும் பல்வேறு தில்லுமுல்லுகளை செய்து தீவிரமாக தேர்தல் வேலைகளையும் செய்தார்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. 
                 அமெரிக்காவின் இத்தனை சித்து  விளையாட்டுகளின் மூலமாகத்தான் காங்கிரஸ் கட்சித் தலைமயிலான கூட்டணிக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரமுடிந்தது. இடதுசாரிக் கட்சிகளின் தயவு இல்லாமல் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக உட்கார முடிந்தது. இடதுசாரிகட்சிகளின் எண்ணிக்கை குறைக்க முடிந்தது. இந்த சித்து விளையாட்டுகளில் இன்றைய அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
           இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தல்களில் ஜார்ஜ் புஷ் இரண்டாவது முறையாக வெற்றிபெறுவதற்கு ''ஒசாமா பின்லேடன்'' உதவினார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ''இரட்டை கோபுர தகர்ப்பு நாடகம்'' நடத்தி அந்த பழியை ''ஒசாமா பின்லேடன்'' மீது சுமத்தி, ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் ஒசாமா பின்லேடன் தொலைக்காட்சியில் தோன்றி மீண்டும் அமெரிக்காவை தாக்குவேன் என்று சொல்லுவது போல மற்றொரு நாடகத்தை நடத்தி தான் ஜார்ஜ் புஷ் இரண்டாவது முறையாக வெற்றிபெற முடிந்தது.
           ஆனால் இப்போது இந்த ஜனாதிபதி தேர்தலில் நிலைமை வேறு விதமாக இருக்கிறது. சென்ற  ஜனாதிபதி தேர்தலின் போது  வீழ்ந்துவிட்ட அமெரிக்காவின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவேன் என்று சொல்லி வெற்றிபெற்ற ஒபாமாவால் அவ்வாறு செய்யமுடியாமல் திணறினார் என்பது மட்டுமல்ல, நாட்டை முன்பைவிட மோசமான பொருளாதார நிலைமைக்கு இட்டுச்சென்றுள்ளார் என்பது தான் உண்மை. இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை  என்பது மட்டுமல்ல பல இலட்சம் இளைஞர்களின் வேலையிழப்பு  என்பதும் ஒபாமாவிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அங்கும் விலைவாசி உயர்வு, வருமானத்திற்கு அதிகமான செலவு போன்ற பொருளாதார நெருக்கடிகள் மக்களின் கழுத்தை நெருக்கியது. அதனால் விழிப்படைந்த இளைஞர் கூட்டம்   கடந்த பத்து மாத காலமாக தொடர்ந்து நடத்தி  வரும் '' வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்'' போராட்டம் என்பது ஒபாவிற்கு பின்னாடி பச்சை மிளகாய் வைத்தது போல் இருக்கிறது.
            இதையெல்லாம் தாண்டி ஒபாமாவுக்கு  வெற்றி என்பது எட்டாக்கனியாக போய்விடுமோ என்ற அச்சம் தொற்றிக்கொண்டது. அவரது வெற்றிக்கு மன்மோகன் சிங்கின் ஒத்துழைப்பு மிக அவசியமாக தேவைப்படுகிறது. அதற்கு அமெரிக்க பொருளாதாரத்தை கொஞ்சமாவது தூக்கி நிறுத்துவது போல காட்டிக்கொள்ளவேண்டும். ''ஆதலினால் இந்திய பொருளாதாரத்தை நாசம் செய்வீர்'' என்று ஒபாமா மன்மோகன் சிங்கிற்கு கட்டளையிட, ஏற்கனவே தன் கட்சியின் வெற்றிக்கு ''ஒத்துழைப்பு'' கொடுத்த ஒபாமாவிற்கு அவர் எதிர்ப்பார்ப்பது போல் இந்தியாவை விலைபேசி விற்றுவிட்டால், அதையே ஒரு சாதனையாக மக்களிடம் சொல்லி ஓட்டுக்களை பெற்று வெற்றிபெற்று விடலாம் என்ற கணக்கில் தான் மன்மோகன் சிங்கும் தன்  நண்பரின் வெற்றிக்காக, சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதித்தல், இன்சூரன்ஸ், வங்கி, விமானம் போன்றத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்துதல், உழைப்பாளி மக்களின் பென்ஷன் நிதியை பங்கு சந்தைக்கு திறந்து விடுதல், பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்றல் போன்ற ''பொருளாதார சீர்த்திருத்தங்களை'' செய்ய மன்மோகன் சிங் துணிந்திருக்கிறார் என்பது தான் உண்மை. இது ஒபாமாவிற்கு மன்மோகன் சிங் செய்யும் நன்றிக்கடன் ஆகும்.

            இந்திய மஹா ஜெனங்களே... ரௌத்திரம் பழகுங்கள்... கோபப்படுங்கள்... அநியாயங்களைக் கண்டு கோபப்படுங்கள்... நாமிருக்கும் நாடு நமதென்பதை அறியுங்கள்...  

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

பாவிகளா...! என்னை மட்டும் ஏண்டா இவ்வளவு இம்சை பண்றீங்க...!         ஒரு திரைப்படத்தில் முன்னாள் நகைச்சுவை நடிகர் வடிவேலு வில்லன்கள் கொடுத்த அடியை தாங்க முடியாமல், ''எல்லாருமா சேர்ந்து ஒருத்தரை மாத்தி ஒருத்தரா அடிச்சாங்கம்மா... அதுல ஒருத்தன் சொன்னா.... இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்... இவன் ரொம்ப நல்லவன்னா மா'' என்று சொல்லி ஓவென்று அழுவார். என்னதான் அவர் அழுதாலும் பாக்கிற நமக்கெல்லாம் சிரிப்பா இருக்கும்.
             அந்த மாதிரி ஆகிப்போச்சி... சமீப  காலமாக இந்த பிள்ளையார் சதுர்த்தி. அண்மை  ஆண்டுகளாக மும்பையில் மட்டுமே இருந்துவந்த கலாச்சாரம் என்பது தென்னிந்தியாவையும் தொற்றிக்கொண்டது. காலங்காலமாக சிறிய களிமண் பிள்ளையாரை வாங்கி வீட்டுக்குள்ளேயே கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி, அண்மைக்காலமாக வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட ''மெகா பிள்ளையார்'' வீட்டிற்கு வெளியே எல்லாத் தெருக்களிலும், முச்சந்திக்கு முச்சந்தி  நிறுத்தப்பட்டு கொண்டாடப்படும் விழாவாக மாறிவிட்டது. காரணம் பிள்ளையார் ''மதவாத அரசியலுக்கு'' அவசியமாக தேவைப்படுகிறார். பிள்ளையாருக்கு மதம் பிடிக்கிறதோ இல்லையோ, ஆட்சிக்கு வரத்துடிக்கும் மதவாதிகளுக்கு மதம் பிடித்திருக்கிறது. யானைக்கு மதம் பிடித்தால் மட்டுமல்ல, மனிதனுக்கு மதம் பிடித்தாலும் ஆபத்து தான். மனிதனுக்கு மதம் பிடிக்க - மதவெறிப் பிடிக்க இன்றைக்கு பிள்ளையார் தேவைப்படுகிறார். அதனால தான் பிள்ளையாரை மட்டும் இவ்வளவு இம்சை பண்றாங்க.
           பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் பிள்ளையார் ''பால் குடிக்கிறார்'' என்ற புரளியை நாடு முழுதும் கிளப்பிவிட்டாங்க. தன் குழந்தைகளுக்கு பால் ஊட்டினார்களோ இல்லையோ எல்லார் வீட்டிலேயும் பிள்ளையாருக்கு பால் ஊட்டினார்கள். பக்தி, வழிபாடு, ஆன்மிகம், மதம் போன்ற மயக்கும் மதுபானங்களை  மக்களின் மூளையில் செலுத்தி, அதை தங்களுக்கு சாதகமான ஓட்டாக மாற்றிவிடலாம் என்பது  மதவாதிகளின் - மதவெறி  கூட்டத்தினரின் கணிப்பாக இருந்து வருகிறது.
           இப்படித்தான் ஒரு நாளு .... கடலுல கப்பல் போய்கிட்டே இருந்துச்சாம்... திடீர்னு   கப்பல் கடல் பாறையில மோதி கவிழ்ந்து போச்சாம்... அப்படி கவிழ்ந்து போன கப்பலிலிருந்து அதுல பயணம் செய்ஞ்ச மக்களெல்லாம்  கடலுக்குள்ள விழுந்துட்டாங்க...நீந்த தெரிஞ்சவங்கல்லாம் நீந்தி கரை சேர்ந்துட்டாங்க... நீச்சல் தெரியாத  சில பேரு மட்டும் கடலுக்குள்ளேயே தத்தளிக்கிறாங்க... எல்லோரும் அவங்க அவங்க சாமியெல்லாம் கும்பிடுறாங்க... '' முருகா காப்பாத்து... பெருமாளே காப்பாத்து... ஜீசஸ் காப்பாத்து... அல்லா காப்பாத்து....'' இப்படியாக ஆளுக்கொரு சாமிய கூப்புடுறாங்க... ஒருத்தர் மட்டும் '' விநாயகா காப்பாத்துன்னு''  கத்துறாரு... அவரது அபயக்குரல கேட்டதும் விநாயகர் அங்க வந்துட்டாரூ...
வந்தவரு சும்மா இல்ல... கடலுல தத்தளிக்கிற தன்  பக்தருக்கு எதிரிலேயே டான்ஸ் ஆடுறாரு... அந்த பக்தருக்கு கோபம் வந்துட்டுது... ''என்ன விநாயகா நான் பாட்டுக்கு உயிருக்கு போராடிகிட்டு கடலுல தத்தளிச்சிகிட்டு இருக்கேன்... என்ன காப்பாத்தாம நீ பாட்டுக்கு டான்ஸ் ஆடிகிட்டு இருக்கியே...'' என்று கோபமா பேசுறாரு...
         இதை கேட்ட பிள்ளையாரு... ''டேய்  மவனே... அனுபவிடா... இப்படித்தானே போன விநாயகர் சதுர்த்தி அன்னிக்கி என்னை டான்ஸ் ஆடி - டான்ஸ் ஆடி கொண்டுவந்து கடலுல போட்டே... இப்ப நீ அனுபவி....'' அப்படின்னு பிள்ளையாரு டான்ஸ் ஆடிகிட்டே கிளம்பிட்டாரு... எப்படி இருக்கு கதை...
            பிள்ளையாரு இப்படியெல்லாம் பேசமாட்டாருன்னு தானே அவரை இவ்வளவு இம்சை பண்ணுறாங்க... பேச ஆரம்பிச்சாருனா  இப்படித்தான் நடக்கும்... ஜாக்கிரதை....!

சனி, 22 செப்டம்பர், 2012

''மன்மோகன் சிங்கே திரும்பிப்போ'' - ஆகாவென்று எழுந்தது பார் மக்கள் எழுச்சி...!


1942 - ஆம் ஆண்டை நினைவுப்படுத்திய சம்பவம்...!

        இந்திய தேசத்தின் விடுதலைக்காக காந்தி கடைசியாக நடத்திய போராட்டம் - ''வெள்ளையனே வெளியேறு'' போராட்டம் தான். இந்த போராட்டம் 1942 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் தலைநகர் புதுடெல்லியில் இன்று சம்பவம் நடந்திருக்கிறது. புதுடில்லி விஞ்ஞான் பவனில் சர்வதேச அகடாமிக் மாநாடு இன்று காலை நடந்தது. அந்த மாநாட்டில் பேசுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் வந்தபோது, சந்தோஷ்சுமன்  என்ற இளைஞர் பல நாட்டு பிரதிநிதிகள் கூடியிருக்கும் பார்வையாளர்கள்  மத்தியிலிருந்து மேசை மீது ஏறி நின்று ''பிரதமரே திரும்பிப்போ'' என்று ஆவேசமாக முழக்கமிட்டிருக்கிறார். 
         இந்தியா அடிமை விலங்கொடித்து சுதந்திரம் பெற - விடுதலைத்தீ பரவ, ஆங்கோர் பொந்திடை வைத்து அடைகாக்கப்பட்ட  பாரதியின் ''அக்கினி குஞ்சு'',  இன்று விடுதலை இந்தியாவை மீண்டும் அடிமை விலங்கை பூட்டி ஏகாதிபத்தியத்திடம்  ஒப்படைக்கத் துடிக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மீண்டும் எழுச்சிக்கொண்டு எழ ஆரம்பித்துவிட்டது. ஆகாவென்று எழுகிறது மக்கள் எழுச்சி. பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் ஆங்காங்கே வீறுகொண்டு எழ ஆரம்பித்துவிட்டது. ''வீழ்வோமென்று நினைத்தாயோ'' என்று இளைஞர்கள் விழித்தெழுகிறார்கள்.
            டீசல் விலையில் ஐந்து ரூபாய் உயர்வை சகித்துக்கொள்ள முடியவில்லை... சமையல் கேஸ் சிலிண்டர் வெட்டு பொறுத்துக்கொள்ள முடியவில்லை... சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு ஏற்றுக்கொள்ள முடியவில்லை... மக்கள் ரௌத்திரம் பழக ஆரம்பித்துவிட்டார்கள். உச்சி மீது  போலிஸ் தடியடி விழுந்தாலும் அச்சமில்லை அச்சமில்லை என்று வீர முழக்கமிட்டு மக்கள் கிளம்பிவிட்டார்கள்.
            நேற்று முன் தினம் 20 - ஆம் தேதி நடைபெற்ற நாடுதழுவிய கடையடைப்போடு கூடிய போராட்டத்தில் மக்கள் அந்த எழுச்சியை தான்  இந்த நாடு பார்த்தது. இதை எதிர்ப்பார்க்காத மத்திய ஆட்சியாளர்கள் மக்களின் எழுச்சியைப்  பார்த்து அதிர்ந்து போனார்கள். 
            பாராளுமன்றத்தில் விவாதிக்காமலேயே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு 51 சதவீதமாக அனுமதிப்பது என்று அரசு செய்தியாக வெளியிட்டது மட்டுமல்லாமல், மக்களின் எதிர்ப்பையும் மீறி அவசர அவசரமாக அரசிதழிலும் ( Government Gazette ) அறிவிப்பாக வெளியிட்டு தனது எஜமான விசுவாசத்தை வேகப்படுத்திக் காட்டியிருக்கிறார். ''உதவாக்கரை'' என்று சேற்றை அள்ளி  வீசிய அமெரிக்க ''டைம்'' பத்திரிக்கை, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்கிறார் என்று இனி  மன்மோகன் சிங்கை புகழ்ந்து தள்ளிவிடும். 
                 இந்திய பிரதமர் பொறுப்பில் இருந்துகொண்டு, இந்திய நாட்டின் ஊதியத்தையும் பெற்றுக்கொண்டு, இந்தியாவிலேயே வாழ்ந்தும் கொண்டு ஒரு பிரதமர் கொஞ்சம் கூட கூசாமலும்,   மிகுந்த தைரியத்துடனும், அதீத துணிச்சலுடனும் தேசத்திற்கு எதிராகவே செயல்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தனது எஜமான விசுவாசம் காட்டுகிறார் என்றால், அதைப் பார்த்து இந்திய மக்கள் எப்படி சும்மா இருப்பார்கள். பொங்கி எழுந்து விட்டார்கள்.  ஆங்காங்கே மக்களிடையே புகைச்சலும், கொந்தளிப்பும் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று தான் மக்கள் எழுச்சி கொண்டு எழுந்து விட்டார்கள். 
             இது போதாது. தனித்தனியே பிரிந்து போயிருக்கும் மக்களின் எழுச்சி என்பது ஒன்றுபடவேண்டும். ஓரணியாய் திரட்டப்பட வேண்டும். என்றுமே மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து போராடி வரும் இடதுசாரிகள் பின்னால் நிற்போம். அவர்களின் போராட்டத்தை பலப்படுத்துவோம். ஒன்றுபட்டப் போராட்டம் தான் வெற்றியடைய முடியும்.

ஒன்றுபடுவோம்... போராடுவோம்... ஆட்சியாளர்களை துரத்தியடிப்போம்...

உத்தமரைப் போலவே நடிக்கும் பிரதமரே...! மக்கள் எழுவார்கள் ஜாக்கிரதை...!

பக்கத்தில் காந்தியை வைத்துக்கொண்டே 
பொய்யை மட்டுமே பேசும் 
இந்திய பிரதமர்...!

         நேற்று முன் தினம் தான் இந்திய மக்கள் மிகுந்த எழுச்சியோடு  ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை வெற்றிகரமாக முடித்த அடுத்த நாளே - நேற்று 21 - ஆம் தேதி இரவு பிரதமர் மன்மோகன் சிங் அவசர அவசரமாக முன்னெப்போதும் இல்லாத பழக்கமாக - வழக்கத்திற்கு மாறாக தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடம் உரையாற்றியது என்பது மன்மோகன் சிங்கிற்கு உதறல் ஏற்பட்டிருக்கிறது என்பதை தான் காட்டுகிறது. 
          நாடுதழுவிய போராட்டம் என்பது வழக்கமாக இடதுசாரிகள்  பலமாக உள்ள மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுரா  போன்ற மாநிலங்களில் மட்டுமே வெற்றிகரமாக நடைபெறும் என்கிற நிலை மாறி, நேற்று முன்தினம் இடதுசாரி கட்சிகள் மற்றும் சில எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்த நாடுதழுவிய கடையடைப்புப் போராட்டத்தில் நாடு முழுதுமுள்ள வணிகர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிபெறச் செய்தது என்பது மக்களின் எழுச்சியை காட்டியது மட்டுமல்ல, மன்மோகன் சிங்கிற்கு பீதியையும் உண்டாக்கியிருக்கிறது. 20 - ஆம் தேதி இரவு மன்மோகன் தூங்கியே இருக்கமாட்டார் என்பது போல தான் தோன்றுகிறது. அதனால் தான் அவசர அவசரமாக அடுத்த நாளே மக்களை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. 
            தொலைக்காட்சியில் மன்மோகன் சிங்கின் பேச்சைப் பாத்தீங்கன்னா... ''இந்த  பூனையும் பாலை குடிக்குமா..?'' என்று தான் நமக்கு தோன்றும். சத்தியமே தவறாத உத்தமரைப் போலவே பேசினாரு. காந்திக்கு அடுத்தது நம்ப நாட்டில உத்தமரு யாருன்னு கேட்டா... சந்தேகமே வேண்டாம்... அது மன்மோகன் சிங்கு தானுங்க... அப்படி பேசினாருங்க.
           20 - ஆம் தேதி போராட்டம் வெற்றியடைந்ததால் மக்களெல்லாம் இடதுசாரிகள் பின்னால் சென்றுவிட்டது போல் ''அவங்களை நம்பாதீங்க... அவங்களை நம்பாதீங்க.... உங்களை திசைத் திருப்பப் பார்க்கிறாங்க...உங்களை குழப்பப் பார்க்கிறாங்க... பொய் பிரச்சாரம் செய்யுறாங்க... அதனால அவங்கள நம்பிடாதீங்க... என்  கைகளை பலப்படுத்துங்க...'' தொலைக்காட்சி பேச்சு முழுக்க மன்மோகன் சிங்கின் அலறல் சத்தம் தான் அதிகம் கேட்டது. என்னமா நடிக்கிராருங்க அந்த ஆளு... சிவாஜி கணேசன் எல்லாம் பிச்சை  எடுக்கணும். அப்படியொரு நடிப்பு. சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடித்தாருங்க...
             ஆனால் அவர் பேச்சில உண்மையே இல்லைங்க. பொய் பொய்யா பேசினாரு... அதுவும் பக்கத்திலேயே காந்தி பொம்மையை வைத்துக்கொண்டு அவர் பேசிய பேச்சை காந்தி கேட்டிருந்தார்னா.... கையில் இருக்கிற தடியை எடுத்து மன்மோகன் சிங் தலையில ஓங்கி ஒன்னு கொடுத்திருப்பாரு..
             ''சாதாரண மக்களுக்கு மானியம் கொடுத்து கொடுத்து பொருளாதாரம்      சீர்குலைந்து போயிடுத்தாமாம். அதனால தான் பொதுமக்களுக்கு இதுவரை கொடுத்துவந்த  மானியத்தை வெட்டுறாங்களாமாம். அதனால ஏற்படுகிற கஷ்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமாமாம்'' என்று சொல்லிக்கொண்டே தொலைக்காட்சியில தனது  பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்களின் காதுல ஒரு கூடை பூவை மன்மோகன் சுத்தினாரு பாருங்க... மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு பிரதமர் மக்கள் மீது அக்கறையில்லாமல் இப்படித்தான் நடந்துகொள்வார் என்பதற்கு மன்மோகன் சிங்கே ஓர் உதாரணம். 
              ''மக்களுக்கு மானியம் வழங்குவதற்கு அரசிடம் பணம் காய்க்கும் மரமில்லை'' என்று மன்மோகன் சிங் ஆணவமாக பேசியிருக்கிறார். ''சரி.. எங்களுக்கு கொடுப்பதற்கு பணம் காய்க்கும் மரம் உன்ன்களிடம் இல்லை தான்... ஆனால் பெருமுதலாளிகளுக்கு நீங்கள் பல இலட்சம் கோடி அளவிற்கு மானியங்களும், வரிச் சலுகைகளும் தொடர்ந்து கொடுக்கிறீர்களே... அது மட்டும் எந்த மரத்தில் காய்க்கிறது....'' என்று நான் கேட்கவில்லை. விழித்துக்கொண்ட மக்கள் கேட்கிறார்கள். 
               மக்களுக்கு கொடுப்பதற்கு அரசாங்கத்திடமே  பணம் காய்க்கும் மரம் இல்லை என்றால், அரசு உயர்த்திய விலையை கொடுத்து வாங்குவதற்கு மக்களிடம் மட்டும் பணம் காய்க்கும் மரம் இருக்குமா... என்கிற குறைந்த பட்ச அறிவு கூட மன்மோகன் சிங்கிற்கு இல்லையா...? என்று மக்கள் கேட்கிறார்கள்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

மன்மோகன் அரசே...! முடிவுகளை வாபஸ் பெறுக - இல்லையேல் வெளியேறுக...!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 
பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரிக்கை...!
    நாசகர அறிவிப்புகள் மூலமாக நாட்டு மக்கள் மீது கொடிய யுத்தத்தைத் தொடுத்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக  சென்ற செப்டம்பர் 20 - ஆம் தேதி  வியாழனன்று நாடு முழுவதும் முழு அடைப்பு - பொது வேலைநிறுத்தம் உள்ளிட்ட கொந்தளிப்புமிக்கப் போராட்டம் நடைபெற்றது.
            இந்தப் பின்னணியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
            சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட தேசவிரோத முடிவுகளை திரும்பப்பெறவில்லை என்றால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இனியும் ஆட்சி அதிகாரத்தில் நீடிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை.
          மன்மோகன் சிங் அரசு மக்கள் விரோத அறிவிப்புகளை திரும்பப்பெறவில்லை என்றால், இனியும் ஆட்சி அதிகாரத்தில் நீடிப்பதற்கு உரிமை இல்லை.  அனைத்து பிரச்சனைகளிலுமே ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் அரசுக்கு எவ்வித ஆதரவும் இல்லாத நிலையில், தனது சொந்த கூட்டணிக்கட்சிகளிடமிருந்தே ஆதரவு இல்லாத நிலையில் அரசு நீடிப்பது சரியல்ல.
               அரசு தனது முடிவுகளை கைவிட வலியுறுத்தி இடதுசாரிக்கட்சிகளும், சமாஜ்வாதி, தெலுங்குதேசம், பிஜூ ஜனதா தளம் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுமாக மொத்தம் 8 கட்சிகள் கூட்டாக சென்ற செப்டம்பர் 20 - ஆம் தேதி  வியாழனன்று நாடு தழுவிய முழு அடைப்பு மற்றும் பொதுவேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்து வெற்றிகரமாக நடந்தேறின. இந்தப்போராட்டத்திற்கு நாடு முழுவதுமுள்ள வணிகர் அமைப்புகள்
மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து அமைப்புகள் பேராதரவு தெரிவித்து கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிபெற செய்தன என்று கூறினார்.
                இந்தப்பிரச்சனையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்றும், அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இதற்காக சிறப்பு நாடாளுமன்றத் தொடர் நடத்தப்பட வேண்டுமென்றும் பாஜக கோரியிருப்பதையும்  சுட்டிக்காட்டினார்.
              ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து விலகுவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்ததைத் தொடர்ந்து அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றபோதிலும், வெள்ளிக்கிழமை திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பதவி விலகிய பின்னர் புதிய நிலைமைகள் உருவாகலாம் என்றும், எனவே, இப்போதே முடிவுகளுக்கு வரவேண்டாம் என்றும் பிரகாஷ் காரத் குறிப்பிட்டார். அத்தகைய நிலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முடிவினை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
              இரண்டாவது முறையாக ஆட் சிப்பொறுப்பிற்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கடந்தாண்டு நவம்பர் மாதம் முதலே சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது எனக்குறிப்பிட்ட பிரகாஷ் காரத், கடுமையான எதிர்ப்பு தொடர்வதன் காரணமாகவே அந்த நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருந்தது என்றும், அதனால்தான் ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு முனைந்தது என்றும் குறிப்பிட்டார்.
             “ஆனால், நாடு முழுவதும் நிலவுகிற எதிர்ப்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிராக மேலும் பல கட்சிகள் அணிவகுத்துள்ளன. இதன் பொருள் என்ன வென்றால், இன்றைய நிலவரப்படி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எண்ணிக்கைக் கொண்ட கட்சிகள், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு எதிராக நிற்கின்றன என்பதே. எனவே தனது முடிவை மேலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல இந்த அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமுமில்லை; எந்த உரிமையும் இல்லை” என்றும் பிரகாஷ் காரத் விவரித்தார்.
            2009 - ஆம் ஆண்டில் வர்த்தகத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படக்கூடாது என ஏகமனதாக பரிந்துரை செய்தது என்பதை சுட்டிக்காட்டிய அவர், அச்சமயத்தில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் கூட இந்தப் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும் என்றும் நினைவுகூர்ந்தார்.
            தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், இதுதொடர்பாக ஒரு வார்த்தைகூட நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவில்லை; அதுமட்டுமல்ல, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து கவனிக்க வேண்டும் என, பிரதமருக்கு காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியாகாந்தியே கூட கடிதம் எழுதினார் என்பதையும் இப்போது எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் பிரகாஷ் காரத் சுட்டிக்காட்டினார்.
                     “இவையனைத்தும் நடந்துள்ள போதிலும், தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார் பிரதமர்... தனது குணநலன்களுக்கு உண்மையாக அவர் நடந்துகொள்கிறார்; அமெரிக்க நாட்டிற்கு தான் அளித்த உறுதி மொழிக்கு உண்மையாக அவர் நடந்துகொள்கிறார்; சொந்த நாட்டு மக்களது நலன்களைவிட அமெரிக்காவின் நலனே அவருக்கு முக்கியமாக இருக்கிறது” என்று சாடிய பிரகாஷ் காரத், 
         “அமெரிக்காவின் ராட்சத சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டை இந்தியாவிற்குள் கொண்டுவருவதற்கு 2005 -ஆம் ஆண்டிலிருந்தே இந்தப்பிரதமர் முயற்சித்து வருகிறார்; அந்த நாள் முதலே நாங்கள் அதனை உறுதியாக எதிர்த்து வருகிறோம்” என்றும் குறிப்பிட்டார்.
              அரசு அறிவித்துள்ள ஒரு முடிவுக்குக்கூட இந்திய நாட்டின் அரசியல் அரங்கில் ஆதரவு இல்லை என்பதையும் காரத் சுட்டிக்காட்டினார்.
              ''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை இத்தகைய நாசகர நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தை மேலும் மேலும் தீவிரப்படுத்துவோம். 2005 - ஆம் ஆண்டிலிருந்து 2009 - ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது அரசை நாங்கள் வெளியிலிருந்து ஆதரித்தோம். அப்போது இந்த முடிவை மேற்கொள்வதற்கு இந்த அரசு துணியவில்லை. இன்றைக்கும் கூட, நான் சவால் விடுத்துச் சொல்கிறேன், மேற்குவங்கத்திலும் கேரளத்திலும் எங்களைக் கடுமையாக எதிர்க்கிற கட்சிகளாம் மம்தா பானர்ஜியும், காங்கிரசும் அந்தக் குறிப்பிட்ட மாநிலங்களில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவான நிலைபாட்டை ஒருபோதும் எடுக்க முடியாது. இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பலம். இதுதான் இடதுசாரிக்கட்சிகளின் பலம். இது தான் இந்தப்பிரச்சனையில் இடது சாரிக்கட்சிகள் மக்களின் கருத்தை ஒன்றுதிரட்டியிருப்பதன் பலம்” என்று பிரகாஷ் காரத் பெருமிதத்துடன் கூறினார்.

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

புரட்சி - பொதுவுடைமை பாடிய நம் பாரதி இன்னும் சாகவில்லை...!

மரணத்தை வென்ற மகாகவி 
          இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய ஆளுமை பாரதி. அவர் நம் தேசத்தின்குரல்; அந்நியர்க்கு அடிமைப்பட்டும், உள் நாட்டில் ஒடுக்கப்பட்டும் தவித்த மக்களின் குரலாக ஒலித்தவர். தமிழுக்கு பொதுவுடைமை, புரட்சி போன்ற சொற்செல்வங்களைச் சேர்த்தவர். ரஷ்யாவின் 1917 அக்டோபர் புரட்சியைப் பாடிய முதல் இந்தியக் கவிஞரும் அவரே. அதனால் மொழிகளின் எல்லைகளைக் கடந்து அவர் நினைவு கூரப்படுகிறார்.

பூணூலும் பெண்களும்

         சுபகிருது ஆண்டில் (1903) தமக்குத் தேசபக்தி ஏற்பட்டதாகப் பாரதி கூறுவார். அதற்கு முன்பே ஆங்கில ஆட்சி மீது அவருக்கு வெறுப்பிருந்தது; தமிழ் புறக்கணிக்கப்படுவதும், ஆங்கிலம் போற்றப்படுவதும் கண்டு மனம் வருந்தினார்.

           15 வயது முடிந்த பின்பு தந்தையை இழந்த பாரதி, 1898 இல் அத்தையாரின் ஆதரவைத் தேடி காசிக்குச் சென்றார்; அலகாபாத் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றார். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மூன்றிலும் அவருக்குப் புலமை மிகுந்தது.

                காசியில் பாரதி, அந்தணருக்கேற்ற ஆச்சாரமின்றி, நியமநிஷ்டை இல்லாது, கோட்டும் சட்டையும், தலையில் முண்டாசும், காலில் பூட்சும் அணிந்து, மீசையும் கிராப்பும் வைத்திருந்ததாகச் செல்லம்மா பாரதி கூறுகிறார். 1906 சக்ரவர்த்தினி இதழில், ராஜாராம் மோகன் ராயை ‘மகான்’ எனப் புகழும் பாரதி, `சாதி சமயக் கட்டுகளையெல்லாம் அவர் அறுத்து வெளியேறிய போதிலும், மரணகாலத்தில் அவர் மார்பின் மீது பிராமணர்கள் போடுகிற முப்புரி நூல் தவழ்ந்து கொண்டிருந்ததாம்’ என வருத்தத்தோடு எழுதினார். எனவே பாரதி காசியிலேயே பூணூலைக் களைந்திருப்பார் என ஊகிக்கலாம். அவர் ‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’ என்றும், ‘குல தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்’ என்றும் பாடியதில் வியப்பில்லை.

          பெண்கல்வி, சமத்துவம் - இந்த இரு விஷயங்களில் பாரதி அதிகக் கவனம் செலுத்தியதாக நாராயண அய்யங்கார் கூறுகிறார். சரஸ்வதி பூஜையன்று அத்தை வீட்டில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, பெண்கல்வி குறித்துப் பாரதி பேச, சீத்தாராம் சாஸ்திரி அதைக் கண்டித்து வெளியேறினாராம். அதுவே,

''பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப் பில்லை காண்''

என்று பாரதியைக் கும்மியடிக்க வைத்தது.

         வைசிராய் கர்சான் பிரபு 1905 இல் வங்காளத்தை, இந்து வங்காளம், முஸ்லிம் வங்காளம் எனத் துண்டிக்கும் திட்டத்தை அறிவித்தான். வங்காளத் தேசியத் தலைவர்கள் ஆவேசங்கொண்டனர். 1905 ஆகஸ்ட் ஏழில் சுதேசி இயக்கம் உருவெடுத்தது. இவ்வியக்கம் பாரதியைக் கவர்ந்தது. 14-04-1905 இல் நடந்த சென்னை கடற்கரைக் கூட்டத்தில் அவர் ‘வங்கமே வாழிய’ வாழ்த்துக்கவிதை பாடினார். வங்கப் பிரிவினை அமலுக்கு வரவிருந்த அக்டோபர் 16 - இல் வங்காளத்தில் பெரும் ஆர்ப்பாட்டங்கள். பங்கிம் சந்திரரின் ‘ஸுஜலாம் ஸுபலாம்’ பாடல் தேசிய கீதமாயிற்று. பாரதி அதை ‘வந்தே மாதரம்’ எனத் தமிழ்க் கீதமாக்கினார்.

கொல்லும் தைரியம் வேண்டும்

        1905 டிசம்பரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பாரதி சென்றார். திரும்பும் வழியில் கல்கத்தாவிலுள்ள ‘டம்டம்’ இடத்தில் நிவேதிதா தேவியைச் (அயர்லாந்துக்காரர்) சந்தித்தார். இவரைத்தான் பின்பு ‘குருமணி’ என்றும், ‘அடியேன் நெஞ்சின் இருளுக்கு ஞாயிறு’ என்றும் பாரதி போற்றினார்.

           தேவியாருக்கும் வங்காளத்தில் இயங்கிய ‘அனுசீலன் சமிதி’ அமைப்புக்கும் தொடர்பு. சமிதி ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதப் போருக்கு இளைஞர்களைத் தயாரித்து வந்தது. இந்தப் பின்புலத்தில் தேவியார் என்ன கூறியிருப்பார்? “பாரதத்தாய் விலங்குகளோடு கண்முன் நிற்பதாய்க் காணுமளவிற்கு உணர்ச்சி வேண்டும். அப்படிக் கண்டால்தான் விலங்கை எப்படியாவது நீக்க வேண்டுமென்ற உணர்வு வரும்... பேசிக்கொண்டே வந்த தேவியார் திடீரென ஆவேசமுற்று தமது மேலங்கியை மார்பெதிரே பிய்த்துத் திறந்து, `உங்களுக்குத் தைரியம் வேண்டும். எங்களை இங்கே குத்திக்கொல்ல உங்களுக்குத் தைரியம் வேண்டும்’ என்றாராம். இதுவே பாரதியின் அரசியல் வாழ்வைத் திசைமாற்றிப்போட்டது.

வருந்திய பாரதி

         திலகர், அரவிந்தர், விபின் சந்திரபாலர் ஆகியோரின் தீவிரத் தேசியவாத அரசியலில் பாரதியும் குதித்தார். அவர்கள் இந்தியாவை, இந்துக்களின் தெய்வப்படிமங்களான காளி, துர்க்கை, பவானி, பைரவி வடிவங்களாகச் சித்தரித்தனர். பாரதியும் பாரதத்தைக் காளியாக உருவகித்தே பாடினார். இந்தச் சித்தரிப்பையும், வந்தே மாதரம் முழக்கத்தையும் முகமதியர் ஏற்கவில்லை. ஒரே நேரத்தில் இந்து தேசியமும் இஸ்லாமியத் தேசியமும் பொங்கி எழுந்தன.

           இதன் ஆபத்தை உணர்ந்தார் பாரதி. 1906 ஜூலை 23, ‘இந்தியா’ இதழில் ‘இசுலாமியர்களின் பூர்வீகக் குற்றங்களை எடுத்துரைத்தல் தப்பிதம்’ என்றும், ‘அக்பர் போன்ற மகமதிய மகான்களின் உற்சவத்தைக் கொண்டாட வேண்டுமென்றும்’ கேட்டுக்கொண்டார். ‘சத்ரபதி சிவாஜி’ பாடலின் முன்னுரை ஒன்றில் “இந்தச் செய்யுளில் மகமதியச் சகோதரர்களுக்கு விரோதமாகச் சில வசனங்கள் உபயோகிக்க நேர்ந்தது பற்றி விசனமடைகிறோம்” என்று வருத்தமும் தெரிவித்தார்.

           தீவிரத் தேசியவாதம் வீறுகொண்டெழ அகக்காரணிகள் பலவுண்டு; அதே நேரம் புறக்காரணிகளும் இருந்தன. 1. ரஷ்ய - ஜப்பான் யுத்தம் (1904-05) 2. முதல் ரஷ்யப் புரட்சி (1905-07). ரஷ்யா மிகப் பெரிய நாடு, ஜப்பான் மிகச் சிறிய நாடு, இரண்டுக்கும் இடையே யுத்தம். ரஷ்யா தோல்வியடைந்தது. ஜப்பானின் வெற்றி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏகாதிபத்தியங்களை முறியடித்து விடுதலை பெற முடியும் என்ற நம்பிக்கையை ஆசிய நாடுகள் பெற்றன.

               1905 ஜனவரி 22, செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் ஒரு லட்சம்பேர் திரண்டு, அடிப்படை உரிமைகளை வழங்கக் கோரி ஜார் மன்னனுக்கு மனு கொடுக்கச் சென்றார்கள். அவர்களை இராணுவம் சுட்டுத் தள்ளியது. பலர் உயிரிழந்தனர். இந்தப் படுகொலையே ‘ரத்த ஞாயிறு’. அதைக் கண்டித்துத் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தம். ஜார் மன்னன் பணிந்தான். இந்த ரஷ்யப் புரட்சியைப் பற்றி பாரதி, இந்தியா இதழில் ஐந்து கட்டுரைகள் எழுதினார். 1-9-1906 இதழில் “நமது ரஷ்யத் தோழர்கள் செய்து வரும் உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் புரிவானாக” என்று வாழ்த்தினார்.

           1906 நவம்பர் 10 இதழில் “சோசலிஸ்ட் கட்சியாரின் (இங்கிலாந்து) கொள்கைகளில் சிலவற்றைக் கீழே தருகிறோம். 1. ராஜா இருக்கக் கூடாது, 2. உலகத்தில் தேசத்துக்குத் தேசம் யுத்தங்கள் நடப்பதையெல்லாம் நிறுத்தி விடவேண்டும். 3. தேசநிலம், தேச ஜனங்களுக்கெல்லாம் பொதுவாய் இருக்க வேண்டும்” எனப் பதிவுசெய்திருந்தார். இத்தகைய கொள்கையுடையோர் ஆட்சியதிகாரத்துக்கு எளிதில் வந்துவிடமுடியாது என்ற கருத்தும் அவரிடம் இருந்தது.

          1907 இல் விபின் சந்திரபாலர் சென்னை வந்தார். நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா போன்ற நண்பர்களுடன் பாரதி அவரைச் சந்தித்தார். சென்னையில் ஆயுதப் போருக்கான ரகசியச் சங்கங்களை அமைக்க அவர்கள் திட்டமிட்டனர். இக்கட்டத்தில் இந்திய விடுதலைக்கு, ஆயுதப்போராட்டமும் அதற்கான ரகசிய நடவடிக்கைகளும் அவசியம் என்று பாரதி கருதியதாகத் துணியலாம்.

           சூரத் காங்கிரஸ் மகாசபையில் திலகரின் தீவிரத்தேசியவாதக் கட்சிக்குச் சென்னை மாகாணச் செயலராக வ.உ.சிதம்பரனார் தேர்வானார். 1908 மார்ச்சில் வ.உ.சி, பாரதி, சுரேந்திரநாத் ஆர்யா மேலும் நால்வர் சேர்ந்து ‘சென்னை ஜனசங்கம்’ அமைப்பை உருவாக்கி, சுயராஜ்ய தினம் கொண்டாடத் திட்டமிட்டனர். பாரதியும் சுரேந்திரநாத் ஆர்யாவும் அரும்பாடுபட்டு மாணவர்களையும் மற்றவர்களையும் திரட்டினர். கழுத்தில் மாலையுடன் மேளதாளங்கள் முழங்க, பெரும்படை ஒன்றை நடத்திச் செல்லும் தளபதிபோல் ஊர்வலத்தைப் பாரதி நடத்திச் சென்றுள்ளார்.

         தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் சுயராஜ்யதினம் கொண்டாடியதற்காக வ.உ.சி. யும் சுப்பிரமணிய சிவாவும் 12.03.1908 இல் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் ராஜ துரோக வழக்கு. மறுநாளே மக்கள் போராட்டம் வெடித்தது. போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் சாவு;  நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது.

        1908 ஏப்ரல் 30இல் நடந்த நிகழ்வு ஒன்று ஆங்கில அடக்குமுறையை மேலும் கட்ட விழ்த்துவிட்டது. முஷாபூர் (பீகார்) நீதிபதி கிங்ஸ்போர்டைக் கொல்ல பிரபுல்லா சக்கி, குதிராம் போஸ் இருவரும் வெடிகுண்டு வீசினர். குறி தவறிற்று. கென்னடி என்ற அம்மையாரும், அவரது மகளும் இறந்தனர். பிரபுல்லா சக்கி போலீசாரிடம் பிடிபடுமுன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். குதிராம் போசைக் கைது செய்து தூக்கிலிட்டனர்.

           அரவிந்தர், தம்பி பரீந்தர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து திலகரும் கைதானார்.  நாடெங்கும் தேசிய தீவிரவாதப் பிரிவினர் பலர் சிறை வைக்கப்பட்டனர்.

ஆயுள் தண்டனையும் ஆஷ் கொலையும்

      7-7-1908 - இல் வ.உ.சிக்கு 40 ஆண்டுகளும், சிவாவுக்குப் பத்து ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் - ல் பாரதியின் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடந்தது. அதன் உரிமையாளர் எம். சீனிவாசன் கைதானார். பாரதி தலைமறைவாகிப் புதுச்சேரியில் அடைக்கலமானார். 10-10-1908 இல் புதுவையிலிருந்து ‘இந்தியா’ வெளிவந்தது. அதன் முகப்பில் ‘ஸவதந்திரம், ஸமத்துவம், ஸஹோதரத்துவம்’ என்றும் பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கங்கள். 1909 ஏப்ரல் இதழில் பாரதி ‘பயங்கரவாதம்’ பேதைமையானது; அது பலனளிக்காது’ என்ற டால்ஸ்டாய் கருத்தை வலியுறுத்திச் சென்றார்.

                1911 ஜூன் 17 அன்று மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன், ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று, தம் உயிரையும் மாய்த்துக்கொண்டார். படுகொலை, கைது, சோதனை என ஆங்கில அடக்குமுறைகள். தேசபக்தர்கள் சிதைந்து சிதறுண்டு போயினர்.

          1908 முதல் 1911 வரை நடந்த நிகழ்வுகள், பயங்கரவாதம் வெற்றி தராது என்பதையே உணர்த்தின. பாரதியும் தீவிரத் தேசியவாதத்தின் மீது நம்பிக்கை இழந்தார் எனலாம். அரசியலில் இறங்குமுகத்தில் இருந்த அவர், இலக்கியத்தில் ஏறுமுகம் கண்டார். ‘பகவத்கீதை தமிழாக்கம், ‘கண்ணன் பாட்டு’, ‘குயில் பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’ என அவர் கவியாற்றல் ஊற்றெடுத்துப் பெருகிற்று. எனினும் விடுதலை உணர்வோ, சீர்திருத்தச் சிந்தனைகளோ அவரை விட்டு நீங்கவில்லை. பாஞ்சாலி சபதத்தில் வரும் (1912),

கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்

இந்த நம்பிக்கையூட்டும் அர்ஜுணனின் வாய்மொழியைப் பாரதியின் அகவெளிப் பாடாகக் கொள்ளலாம். ரஷ்யாவில் 1917 அக்டோர் புரட்சி வென்றபோது ,

''ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்
..... வையகத்தீர் புதுமை காணீர்''

எனக் குதூகலித்துப் பாடினார். ரஷ்ய வெற்றியை வாழ்த்திப் பாடிய முதல் இந்தியக் கவிஞர் பாரதிதான். நீராய் இருந்த அவருக்குள் நெருப்பும் கிடந்தது.

வாழ்க நீ எம்மான்!

1918 நவம்பர் 20 இல் கடலூர் அருகே பிரிட்டிஷ் அரசு பாரதியைக் கைது செய்தது. 25 நாள்களுக்குப் பின்பு அவர் விடுதலையானார். 1919 இல் சென்னை வந்த பாரதி, மூதறிஞர் ராஜாஜி வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார். ரவுலட் சட்ட எதிர்ப்பு இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட காந்தி சென்னை வந்திருந்தார். “மிஸ்டர் காந்தி தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்” எனப் பாரதி கை உயர்த்திச் சென்றாராம். காந்தியின் அறவழி அவரைக் கவர்ந்திருக்க வேண்டும். பின்னாளில்

‘'வாழ்க நீ எம்மான்....
பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனிலும் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த் தொண்டர் தங்கள்
அறவழி என்றுநீ அறிந்தாய்''

என மனம் நெகிழ்ந்து பாடினார் பாரதி. இதைத் திலகரின் வழியிலிருந்து காந்திய வழிக்கு அவர் இதயம் இடம் பெயர்ந்து கொண்டிருந்த கட்டம் எனலாம்.

1921 ஜூலையில் பார்த்தசாரதி கோயில் யானைக்கு மதம்பிடித்தது. துதிக்கையால் பாரதியைத் தூக்கி வீசி எறிந்தது. ரத்தப் பெருக்கோடு அவர் நினைவிழந்து கிடந்தார். குவளைக் கண்ணன் அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார். பாரதி ஓரளவு நலம் பெற்றார்.

1921 செப்டம்பர் முதல் நாளில் பாரதிக்கு வயிற்றுப்போக்கு. அது ரத்தக்கடுப்பாக மாறி அவரை வேதனைப்படுத்தியது. 11 ஆம் நாள் இரவு ஒரு மணிக்குமேல் தமிழ்நாடு தன் புரட்சிக்கவிஞனை இழந்தது.

‘பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்’ எனச் சூளுரைத்தவர் பாரதி. அப்படியிருக்க, சுதந்திர தேவியைத் தொழுதிட மறவாத, சாதிப் படைக்கு மருந்தான அந்தப் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் சாகமுடியுமா? நாட்டுக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடும் கடைசி மனிதன் இருக்கும்வரை பாரதியும் வாழ்ந்து கொண்டிருப்பார். மக்களுக்கான வாழ்வுரிமைப் போராட்டங்களோடு ஒன்றித்து இயங்கும் படைப்பாளி இறவாத இலக்கியங்கள் படைக்க முடியும் என்பதற்கான தலையாய சான்று பாரதியே.

எழுதியவர் : இலா.வின்சென்ட், த.மு.எ.க.ச.,
நன்றி :

சனி, 8 செப்டம்பர், 2012

நிஜ சூப்பர் ஸ்டார் ''கேரள'' நடிகர் மம்மூட்டியின் உயர்ந்த உள்ளம்..!

               அண்மையில் சிவகாசிக்கு அருகில் பட்டாசு தொழிற்சாலை தீவிபத்தில் இறந்தவர்கள் போக, தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருபவர்கள் சுமார் 40 பேர். அவர்களின் தீக்காயங்களில் இருந்து விரைந்து குணமடைவதற்கு ''அக்னிஜித்'' என்ற ஆயுர்வேத மருந்து கேட்டு, கேரளா மாநில  கொச்சியில் உள்ள ''பதஞ்சலி ஹெர்பல்ஸ்'' என்ற ஆயுர்வேத மருந்து தொழிற்சாலைக்கு தமிழக அரசு  35 லட்சம் ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்திருந்தது.
               இந்த ஆயுர்வேத மருந்து தொழிற்சாலை என்பது கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு சொந்தமானது.  தமிழக அரசின் இந்த ஆர்டரை பற்றி அறிந்த  மம்முட்டி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு  தேவையான அனைத்து தீக்காய மருந்துகளையும் இலவசமாக  அனுப்பிவைக்கும்படியும்,  இன்னும் மருந்துகள் தேவைப்பட்டால், அவை அனைத்தையும் இலவசமாக அனுப்பிவைக்கும்படியும் அவரது தொழிற்சாலைக்கு  உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மம்மூட்டியின் இந்த உயர்ந்த உள்ளம் நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது. 
           இத்தனைக்கும் அரசு தான் தானாகவே இந்த ஆர்டரைக் கொடுத்திருக்கிறது. மம்முட்டி நினைத்திருந்தால்  அமைதியாக ஆர்டரை வாங்கி, சத்தம் போடாமல் மருந்தை அனுப்பி, ரகசியமாக இலாபத்தைப் பார்த்திருக்கலாம். ஆனால் வர்த்தகத்துக்கும் இலாபத்துக்கும் அப்பால் அவரது மனிதநேயம் அவரது உள்ளத்தில் பூத்தது கண்டு அவரைப் பாராட்டாமல் செல்ல முடியவில்லை.   ஏனென்றால் ஏராளமான சூப்பர் ஸ்டார்களும், ஹீரோக்களும் மொய்த்துக்கொண்டிருக்கும்   தமிழகத்தில் உள்ள சூப்பர் ஸ்டார்களுக்கும் - ஹீரோக்களுக்கும் கூட அந்த விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கோ அல்லது தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அவதியுறும் நோயாளிகளுக்கோ வராத சூழ்நிலையில் 
எங்கோ இருக்கும் மம்மூட்டி மருத்துவ உதவி செய்து உயர்ந்து நிற்கிறார்.
             இத்தனைக்கும்  பாலாபிஷேகம் செய்தவர்களும், போஸ்டர் ஒட்டியவர்களும், டிக்கெட் விற்றவர்களும், பட்டாசு வெடித்து கொண்டாடியவர்களும், சூடம் ஏற்றி பூசித்தவர்களும் தான் அந்த தீவிபத்தில் மடிந்தவர்களும், தீக்காயங்களால் துடிப்பவர்களும் என்பதை கோடிக்கணக்கான பணத்தில் புரளும் நம்  உள்ளூர் ஹீரோக்களுக்கு தோன்றாத சூழ்நிலையில் மம்மூட்டியின் மனிதநேயம் அவரை மேலும் உயர்த்திக் காட்டுகிறது.  
     உள்ளூர் தமிழன் படும் கஷ்டத்தைப் பார்க்காமல், வெளியூர் தமிழனுக்காக குரல்கொடுக்கும் தமிழ் திரையுலக  ''புரட்சித்தமிழர்கள்'' எல்லாம் இந்த சிவகாசி சம்பவத்தைப் பார்த்து, அவர்களுக்கு உதவ ஓடோடி  வராத   இந்த சூழ்நிலையில், தமிழனுக்கு உதவி செய்ய கரம் நீட்டிய ஒரு ''மலையாளி நடிகரின்'' தொண்டுள்ளம் இங்கு உயர்ந்து  நிற்கிறது.
             மம்மூட்டியின் உயர்ந்த  உள்ளத்தை தமிழக மக்கள் நெஞ்சார - வாயார பாராட்டவேண்டும்.

பாராளுமன்றத்தை முடக்கினால் வெட்டுங்கள் - பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை....!

      பதினேழு  நாட்கள் நடைபெறவேண்டிய பாராளுமன்ற இரு அவைகளும் 24 மணிநேரங்களே தனது அலுவல்களை கவனித்து, பல்வேறு அமளிகளுக்கு நடுவே, அவசரகதியில் விவாதங்கள் எதுவும் நடைபெறாமலும் மக்களின் பிரச்சனைகள் பற்றி எதுவும் விவாதிக்காமலும்  நேற்றோடு முடிவுக்கு வந்தது என்பது வாக்களித்த இந்திய மக்கள் தலைகுனிய வேண்டிய நிகழ்வாகும். 
         2009 - லிருந்து பல்வேறு ஊழல்களை நிகழ்த்தி சாதனை படைத்து வரும் காங்கிரஸ்  கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தற்போதைய புதிய ஊழலான  நிலக்கரி சுரங்க ஊழலை  காரணம்  காட்டி, காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் மறைமுகக் கூட்டாக  இந்த மழைக்கால கூட்டத்தொடர் இயங்காமல் முடக்கி வைத்ததில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. பாராளுமன்ற முடக்கம் என்பது நமக்கு புதிதில்லை தான். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக பாராளுமன்ற முடக்கம் என்பது ஒரு நடைமுறை வழக்கமாகிப் போய்விட்டது. மக்களால் தங்கள் கட்சி ஆட்சிப் பொறுப்பிலிருந்து தூக்கியெறிந்த பின்னர் 2004 - ஆம் ஆண்டிலிருந்து பாரதீய ஜனதா கட்சி ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படாமல், நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை நடக்கவிடாமல் முடக்குவதையே தொழிலாக கொண்டு வருகிறது. இடதுசாரிகள் உள்ளிட்ட  எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளிலிருந்தும் அது சம்பந்தமான விவாதங்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ள காங்கிரஸ் கட்சிக்கும் இந்த சூழல்கள்  தான் தேவைப்படுகின்றன. 
             அதுவும் இந்த முறை இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே, ஒரு கூட்டத்தொடர் முழுமையாக  எந்தவித ஆக்கப்பணிகள் நடைபெறாமலும், விவாதங்கள் இல்லாமலும், கூச்சல் - குழப்பங்களோடு அனைத்து நாட்களும் முடக்கப்பட்டது என்பது இதுவே முதல் முறையாகும். இந்த செயல் என்பது இந்த நாட்டிற்கே அவமானம் என்பதும்,  வாக்களித்த மக்களுக்கு இவர்கள் காட்டும் அவமரியாதை என்பதும் யாராலும் மறுக்கமுடியாது. 
             இது போன்ற நடவடிக்கைகள், எதிர்காலத்தில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவார்கள் என்பதையும்,  எதிர்காலத்தில் பாராளுமன்ற நடவடிக்கை என்பது  ஒரு கேலிக்கூத்தாக மாறிவிடும் என்பதையும் இந்த இரு கட்சிகளும் முதலில் உணரவேண்டும். 
                இது போன்ற ஜனநாயக விரோத செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க அரசு உருப்படியாக ஏதாவது யோசித்தாகவேண்டும். இதற்காக அரசு, குறிப்பாக மக்களவைத்தலைவரும், மாநிலங்களவைத்தலைவரும் அனைத்துக்கட்சித்தலைவர்களுடன் கூடி கலந்தாலோசித்து, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் அல்லது கடுமையாக்க வேண்டும். அப்போது தான் இது போன்ற கூத்தெல்லாம் தடுத்து நிறுத்த முடியும். 
            பாராளுமன்றமோ அல்லது சட்டமன்றமோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நான்கு  விதமான உறுப்பினர்கள்  இருக்கின்றார்கள். அவர்கள்.... 
         (1) அவை நடவடிக்கைகளில் தவறாமல் கூட்டத்தொடர் முழுதும் அவைக்கு வந்திருந்து விவாதங்களில் பங்குகொள்ளும் உறுப்பினர்கள். நம் நாட்டில் இவர்கள் மிகச் சிலராகத் தான் இருப்பார்கள்.  பெரும்பாலும் இவர்கள் இடதுசாரிக்கட்சியை உறுப்பினர்களாக தான்  இருப்பார்கள். இவர்கள் தான் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளிலிருந்து, இறுதி நாள் வரையில் கண்டிப்பாக அவைக்கு வந்திருந்து அனைத்து விவாதங்களிலும் பங்குகொள்பவர்கள். அதனால் தான் எந்தவிதமான மக்கள் விரோத - தேச விரோத மசோதாக்கள் அமைச்சர்களால் கொண்டுவரப்பட்டால் உடனே எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் - வலுவான விவாதங்களில் பங்கு கொள்பவர்கள் இடதுசாரிகளாக தான் இருப்பார்கள்.
        (2) இந்த வகை உறுப்பினர்கள் கடமைக்கென்று அவைக்கு வருவார்கள். ஆனால்  அவை நடவடிக்கைகளில் எதிலும் நாட்டம் இல்லாமல் அவையிலேயே தூங்குபவர்கள்.
           (3) தங்களை எதற்காக மக்கள் தேர்ந்தேடுத்தார்கள்  என்ற சிந்தனையே இல்லாமல், அவைக்கே வராமலும், ஜனநாயகக் கடமைகளை ஆற்றாமலும் வெளியே  ''வேறு'' வேலைகளை பார்த்துக்கொண்டிருப்பவர்கள். தங்களுடைய பதவியை பாதுகாத்துக்கொள்ள தேவையான குறைந்த பட்ச ''கட்டாய வருகையின் தேவைக்காக'' எப்போதாவது மன்றத்திற்கு வந்து அவைக்கு வெளியே உள்ள வருகைப்பதிவேட்டில் கையோப்பம் இட்டு செல்பவர்கள். இவர்கள் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் இடுவார்களே தவிர அவையை எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். இவர்கள் மழைக்குக் கூட அவையின் பக்கம் ஒதுங்கமாட்டார்கள். ஆனால் உறுப்பினருக்கான ஊதியத்தையும், படிகளையும், சலுகைகளையும்  கூசாமல் அனுபவிக்கிறவர்கள். ஜனநாயகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள். இவர்கள் தேசத்தின் மீதும், மக்களின் மீதும் அக்கறையில்லாதவர்கள் - பொறுப்பில்லாதவர்கள்.
           (4) இந்த வகையை சேர்ந்தவர்கள் ஜனநாயகத்தில் மிகவும் ஆபத்தானவர்கள். பசுத்தோல் போர்த்திய புலிகள். இவர்கள் நாடாளுமன்றத்திற்கு தவறாமல் வருபவர்கள். ஆனால் வருகைப்பதிவேட்டில் கையொப்பம்  போட்டுவிட்டு அவைக்கும் வந்து விடுவார்கள். ஆனால் ஏதாவதொரு காரணத்தை எடுத்துக்கொண்டு அவையில் கூச்சல் - குழப்பத்தை ஏற்படுத்தி அவை நடவடிக்கைகளை முடக்கிவிடுவார்கள். இவர்கள்  செய்வது நாட்டிற்காக - மக்களுக்காக - நல்லதுக்காக செய்வது போலத்தான் தெரியும். ஆனால் அத்தனையும் திரைமறைவில் ஆட்சியாளர்களோடு உடன்பட்டு செய்யும் அயோக்கியத்தனம். ஜனநாயகத்தில் இது ஆபத்தான செயல். இதை தான் நாம் நேற்றுவரை நம் பாராளுமன்றத்தில் நாம் பார்த்தோம். 
               உண்மையிலேயே பாரதீய ஜனதா கட்சியினர் தேசத்தின் மீது அக்கறையுள்ளவர்களாக இருந்தால், ஊழலை எதிர்ப்பவர்களாக இருந்தால் அதை பற்றி விவாதிக்க பாராளுமன்றத்தை முடக்காமல் நடத்தவிட்டிருக்க வேண்டும். நாட்டில் இத்தனைப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. அதில் பிரதமர் சம்பந்தப்பட்டிருக்கிறார்  என்றால்  அதைப்பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் செய்யாமல் வேறு எங்கே பேசுவது...? அப்படி பாராளுமன்றத்தில் விவாதம் செய்யாமல் எப்படி உண்மைகள் வெளியே வரும்...? இந்த குறைந்தபட்ச அறிவுக்கூட பாரதீய ஜனதா கட்சியினற்கு இல்லாமல் போய்விட்டதா...? 
இவைகள்  எல்லாம் பாரதீய ஜனதா கட்சியினற்கு தெரியாமல் இல்லை. அனால் ஏன் பாராளுமன்றத்தை வெறித்தனமாக முடக்கவேண்டும். காரணம்....
       ஒன்று... நிலக்கரி ஊழல் பற்றி பாராளுமன்றத்தில் விவாதித்தால், காங்கிரஸ் கட்சியின் அவலச்சணங்கள்  மட்டுமல்ல, ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் - தூய்மையானவர்கள் என்று தங்களை வேஷம் போட்டுக் காட்டிக்கொள்ளும் பாரதீய ஜனதா கட்சியின் அவலச்சனங்களும் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் தான் பாரதீய ஜனதா கட்சியினர் இத்தனை வெறியோடு முடக்கினார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இந்த இரு கட்சியினரின்  அலமாரிகளில் இருந்தும் எலும்புக்கூடுகள் வெளியே வந்துவிடும் என்கிற அச்சம் பாரதீய ஜனதா கட்சியினரை பேயாய் பிடித்து ஆட்டியதால் தான் பாராளுமன்றத்தை பேயாய் பிடித்து முடக்கினார்கள் என்பதை நாடு நன்கு அறியும். 
             கடைசி இரண்டு வகை உறுப்பினர்களால் அரசுக்குத் தான் அனாவசிய செலவு. தேவையில்லாமல் மக்களின் வரிப்பணம் உருப்படியில்லாத இந்த ''இரு வகை'' உறுப்பினர்களுக்கு சேருகிறது. அதனால் அரசு இது போன்ற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற  உறுப்பினர்களை ''திரும்ப அழைக்கும் உரிமையை'' மக்களுக்கு தரவேண்டும். அல்லது இவர்கள் அவைக்கு வராமல் வெளியே இருக்கும் நாட்களிலும், அவைக்கு வந்து வருகைப்பதிவேட்டில் கையொப்பம் போட்டுவிட்டு வெளியேறும் நாட்களிலும், அவைக்கு வந்து கொயோப்பமும் இட்டு  அவையை நடத்தவிடாமல் ரகளையில் ஈடுபட்டு அவையை ஒத்திவைக்கும் நாட்களிலும் அல்லது  அவையை முடக்கும் நாட்களிலும் இந்த ''மாண்புமிகு'' உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தையும், கூட்டத்தொடர் படியையும், மற்ற சலுகைகளையும் கண்டிப்பாக  வெட்டவேண்டும். அவைக்கு வாராமலேயே - அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமலேயே  -  அவை நடவடிக்கைகளை முடக்கிவிட்டு ஊதியம் பெறுவதும், மற்ற சலுகைகளை அனுபவிப்பதும் எப்படி நியாயமாகும்...? எப்படி முறையாகும்...? அப்படி அனுபவிப்பதை இவர்களின் மனசாட்சி எப்படி இடமளிக்கிறது...?
            அனைத்து அரசுத்துறைகளிலும், அரசுத்துறை நிறுவனங்களிலும்  வேலை செய்யும் ஊழியர்களோ அல்லது தொழிலாளர்களோ வேலைநிறுத்தம் செய்தால், வேலைநிறுத்தம் செய்யும் அத்தனை நாட்களையும் ''வேலை செய்யா'' நாட்களாக அறிவித்து ''NO WORK - NO PAY'' என்ற விதிகளின் அடிப்படையில்  படிகள் உட்பட ஊதியத்தையும், அன்றைய மற்ற சலுகைகளையும் வெட்டுவது என்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. இதை அனைத்து இடதுசாரி தொழிற்சங்கங்களும் நியாயத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டுள்ளது.
             இதே விதிமுறைகளை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ''நடத்தை விதிமுறைகளில்'' புகுத்தினால்  தான்  நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்பது எதிர்காலத்தில் கூச்சல் - குழப்பமின்றி, முடக்குவாதமின்றி அமைதியாக நடைபெறும். தேசத்திற்கான - மக்களுக்கான ஆக்கப்பணிகளை அக்கறையோடும், கவனத்தோடும்   நாடாளுமன்றத்தில் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் செம்மையாக கடமையாற்றுவார்கள்.

வியாழன், 6 செப்டம்பர், 2012

காங்கிரஸ் - பாரதீய ஜனதா கட்சி அலமாரிகளில் எலும்புக்கூடுகள்....!

இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டின் மதுரை பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரியின் எழுச்சி உரை :
           ''இந்தியாவிற்கு விதவிதமான கட்சிகளால் அமைக்கப்படுகிற விதவிதமான அரசாங்கங்கள் தேவையில்லை; வேறுபட்ட கொள்கைகளே உடனடித்தேவை” என்று முழக்கமிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., நாட்டின் வளமிக்க இளைய தலைமுறையின் ஒட்டுமொத்த திறனையும் முழுமையாகப் பயன்படுத்தி இந்தியாவை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வதற்கான மாற்றுக்கொள்கைகள் இடதுசாரிக்கட்சிகள் வசமே உள்ளன என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்திய மாணவர் சங்கத்தின் 14 வது அகில இந்திய மாநாட்டு பேரணி-பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சங்கத்தின் முன்னாள் தலைவருமான சீத்தாராம் யெச்சூரி, உலகிலேயே மிக அதிகமான இளைய தலைமுறையை பெற்றிருக்கும் ஒரே நாடு இந்தியாவே என்றும், மொத்த மக்கள் தொகையில் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 54 சதவீதம் என்றும் குறிப்பிட்டார். இத்தனை மிகப்பெரிய இளைய சக்தியின் திறமைகள், ஆளும்வர்க்கத்தால் வீணடிக்கப்பட்டு வருகின்றன என்று குற்றம் சாட்டிய அவர், ஆளும் வர்க்க கட்சிகளால் நாட்டின் நலன்கள் சூறையாடப்படுவது, இந்த இளைய சக்தியின் மீதான கடுமையான தாக்குதலும் ஆகும் என்றும் கூறினார்.
        ஊழல்களும், மிகப்பெரிய அளவில் நடக்கும் கொள்ளைகளும் வெறுமனே ஒரு தவறான செயல் என்ற அளவில் மட்டும் பார்க்கப்படுவதைத் தாண்டி, நாட்டின் இயற்கை வளத்தையும், மனித வளத்தையும் ஒட்டுமொத்தமாக சூறையாட புறப்பட்டிருக்கிற மிகப்பெரும் தீமைகள் என்று உணர்ந்து, அவற்றை எதிர்த்து நிற்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்தை காங்கிரசும், பாரதீய ஜனதா கட்சியும் முடக்கி வருகின்றன. இந்த கூட்டத்தொடர் முழுவதையும் அவை முடக்கப்போகின்றதே என்பதே உண்மை. நிலக்கரி ஊழலில் தங்களது ரகசியங்கள் வெளிவந்து விடக்கூடாது என்பதில் இரண்டு கட்சிகளுமே ஒற்றுமையாக இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதித்தால், இவர்களது அலமாரிகளிலிருந்து ஏராளமான எலும்புக்கூடுகள் புறப்பட்டு வரும் என்பதால் தான், விவாதத்தைத் தவிர்ப்பதற்காக நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள். ஒவ்வொரு கூட்டத் தொடரையும் இதே போல் முடக்குவதே இவர்களது திட்டமாக இருக்கிறது. மேட்ச் பிக்சிங் என்று கூறப்படும் சூதாட்டத்திற்கு, நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரசும் சேர்ந்து நடத்தும் நாடகமே மிகச்சிறந்த சான்று என மிகக்கடுமையான முறையில் யெச்சூரி சாடினார். கல்வி உரிமைச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மூன்றாண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், இன்று வரையில் இச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை. இச்சட்டத்தின்படி நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் கட்டப்படவேண்டும். ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உட்பட அனைத்து வசதிகளையும் செய்து தரப்படவேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு ஒரு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும். ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் கோடி செலவாகும். ஆனால், இதற்கு பணமில்லை என்று கைவிரிக்கிறது மன்மோகன் அரசு; மறுபுறத்தில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்த நாட்டு மக்களின் சொத்து ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு சூறையாடப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் அரசு பதவியேற்கும் போது, அடுத்த நூறு நாட்களில் உணவுப் பாதுகாப்புச்சட்டத்தை கொண்டு வருவோம் என்று உறுதியளித்தது. ஆனால், மூன்றாண்டுகள் ஓடிவிட்டன. இதுவரை அச்சட்டம் நிறைவேற்றப்படவில்லை. நாடு முழுவதும் அனைத்துக் குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ அரிசி, கிலோ 2 ரூபாய் விலையில் அளிக்கப்பட வேண்டும் என்று இடதுசாரிக்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதை அமல்படுத்துவதற்கு மொத்தம் ரூ. 1 லட்சம் கோடி இந்த அரசுக்கு செலவாகும். ஆனால், பணமில்லையென்று கைவிரிக்கிறது. மறுபுறத்தில் நிலக்கரி ஊழலில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி அளவிற்கு நாட்டின் வளம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டார். இந்தியாவில் தொடர்ச்சியாக அரசு அமலாக்கி வரும் புதிய பொருளாதார கொள்கைகள், மேலும் மேலும் மெகா ஊழல்களுக்கு புதிய பாதைகளைத் திறந்து விட்டுள்ளது மட்டுமல்ல, பெரும்பணக்காரர்களின் லாபத்திற்காக ஏழைகளின் வயிற்றில் ஓங்கி அடிக்கிறது.
     கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பெரும் பணக்காரர்களுக்கு ரூ.5.28 லட்சம் கோடி வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டது. அதே பட்ஜெட்டில் ரூ.5.21 லட்சம் கோடி அரசுக்கு பற்றாக் குறை என்று காட்டப்பட்டது. ஏழைகளுக்கு மானியத்தை வெட்டிவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அந்தப் பணத்தை வாரி வழங்குகிற நாசகார கொள்கை, அரசின் கொள்கையாக அமலாக்கப்பட்டு வருகிறது என்றும் சீத்தாராம் யெச்சூரி சாடினார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா கைது செய்யப்பட்டார்; ஐபிஎல் ஊழலில் அமைச்சர் சரத்பவார் சிக்கினார். இன்றைக்கு நிலக்கரி ஊழலில் நாட்டின் பிரதமரே நேரடியாக பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அலிபாபாவும், 40 திருடர்களைப் போல மன்மோகன் அமைச்சரவை நாட்டையே கொள்ளை யடித்துக் கொண்டிருக்கிறது என்றும் யெச்சூரி குற்றம்சாட்டினார்.  
          இவர்களுக்கு மாற்றாக ஆட்சியைப் பிடிக்க பாரதீய ஜனதா கட்சி  தீவிரமாக முயற்சிக்கிறது. ஆனால், அக்கட்சிக்கு அந்த களம் இல்லை என்பதே உண்மை. ஆனாலும் கூட, நரேந்திரமோடியும், நிதின்கட்காரியும் பிரதமர் பதவிக்கு இப்போதே தயாராகிவிட்டார்கள் என் றும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

பக்கத்து நாட்டோடு பகைமை உணர்வை வளர்ப்பது விபரீதமானது....!

        இன்றைக்கு தமிழ்நாட்டில் திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி   உட்பட மற்ற சிறு சிறு கட்சிகளெல்லாம் ஓட்டுக்காகவும், காசுக்காகவும், இளைஞர்களின் கூட்டத்திற்காகவும் காலாவதியான பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு இன உணர்வுகளை தூண்டிவிட்டு இனவெறியாக  மாற்றி அதில் குளிர்காய்வதும் - அரசியல் பண்ணுவதுமாக இருக்கின்ற இந்த சூழ்நிலையில், அண்டை நாட்டிலிருந்து வருகின்ற யாவருக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டிய ஆட்சியாளர்களே அந்த சிறு கட்சிகளைப் போல் நிதானமிழந்து சிறுமையாய்  நடந்துகொள்வது என்பது பெருமையாகாது. 
           ''வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு'' என்றெல்லாம்  பெரூமைப் பேசிக்கொள்ளும்  நாமே, தமிழ்நாட்டிற்கு வருகை தந்த இலங்கை கால்பந்து வீரர்களை - அதுவும் பள்ளிச் சிறார்களை வரவேற்று பாதுகாப்புத் தந்து உபசரிக்கவேண்டிய தமிழக அரசே அவர்களை ஏதோ தீண்டத்தகாதவர்களைப் போலவும், தீவிரவாதிகளைப் போலவும்  நாட்டைவிட்டு விரட்டியனுப்பியது என்பது அறிவுடைமையாகாது. 
           அது மட்டுமல்ல இனவுணர்வைத் தூண்டி அரசியல் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த செயல் ஊக்கமளிப்பது போலவாகும் என்பதை தமிழக அரசு எப்படி உணராமல் போனது. அரசே இவ்வாறு செயல்பட்டதால் தான், இன்று தஞ்சை அருகில்  உள்ள பூண்டி மாதா  தேவாலயத்திற்கு இலங்கையிலிருந்து யாத்திரையாக வந்த அந்த நாட்டைச் சேர்ந்த 184 யாத்திரிகர்கள் திருச்சி விமான நிலையத்திலிருந்து பஸ்களில் வந்துகொண்டிருந்த போது அவர்கள் மீது ஈழத்தமிழர்  ஆதரவு  அமைப்புகளை  சேர்ந்தவர்கள் வெறியோடு தாக்கியிருக்கிறார்கள் என்பதும், அவர்கள்  உயிருக்கு பயந்து பாதுகாப்பாக தனி விமானத்தில் தங்கள் நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள் என்பதும் வருத்தமளிக்கக் கூடியதாகவும்  கண்டிக்கவேண்டியதாகவும்  பார்க்கவேண்டும். இது தான் மனிதனுக்கு மனிதன் காட்டுகிற மரியாதையா...?              இவ்வாறு வெறித்தனத்தொடு   தாக்குவதற்கான துணிச்சலும் தைரியமும் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது. நிச்சயமாக தமிழக அரசே அவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதில் இருந்து தான் வந்தது என்பதை  யாராலும் மறுக்கமுடியாது.
              இது மாநில அரசும் ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புகளும் அண்டை நாட்டினர் மீது பகைமை பாராட்டுவது சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளுக்கும் வளர்ந்திருக்கும் ராஜிய உறவுகள் பாதிக்கப்படுவது மட்டுமல்ல எதிர்காலத்தில் அந்த நாட்டிலிருந்து மக்கள் யாரும் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு வருவது என்பது குறைந்து போகும். இரு நாடுகளுக்கிடையே ஆன வர்த்தகம், ஏற்றுமதி - இறக்குமதி, சுற்றுலா, போக்குவரத்து போன்றவைகள் எதிர்காலத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.
               இலங்கையில் அரசியல் ரீதியாகவும், பேச்சுவார்த்தை மூலமாகவும் தான் மாற்றங்களை கொண்டுவர முடியுமே ஒழிய வன்முறைகளால்  மாற்றங்களை உருவாக்க முடியாது என்பதை அனைவரும் அறிவுபூர்வமாக சிந்திக்கவேண்டும்.
             அதுமட்டுமல்ல, இதே  நிலைமை நீடித்தால், தமிழகத்திலிருந்து இலங்கை செல்வோரின் நிலைமை என்னவாகும் என்பதை அரசும், மக்களும் யோசிக்க வேண்டும். இந்த தொடர் சம்பவங்களை தொடர்ந்து இலங்கை அரசும் தமிழகத்திற்கு செல்ல வேண்டாம் என்று தன்  நாட்டு மக்களை  அறிவுறுத்தி இருக்கிறது என்பது துரதிஷ்டவசமானது

''இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
  நன்னயம் செய்து விடல்"  என்ற பாடல் தமிழகத்தில் தான் எழுதப்பட்டது என்பதை இந்த தமிழ் இன உணர்வாளர்கள் முதலில் உணர்ந்துகொள்ளவேண்டும்.   

Com. P Sundaraya Birth Centenary celebrated in Tripura

        
      The Birth Centenary function of Com. P Sundarayya, was held in Agartala. The 20th Congress of the CPI-M, held in Kozhikode in Kerala, had decided to hold a year-long observance of the birth centenary of the party's first general secretary P. Sundarayya from May 2012. Com. P Sundarayya was the general secretary of the CPI-M from its inception in 1964 and played a major role in establishing the party as a leading force in the Left movement in the country.
            The function was organised by CPIM Tripura State Committee. Three day seminar from 31st August to 2nd September was held in Agartala Town Hall. Book release, cultural fuction and poster exhibition on the life and deeds of Sundarayya was also organised as part of the function. Com. Prakash Karat, General Secretary CPIM Inaugurated the function. He said that the UPA government has been giving opportunities to multi-national and private companies to loot India's natural resources, including coal while inaugurating the function. 
         Demanding probe into the coal block allocations, Prakash Karat said: "The UPA (United Progressive Alliance) government is providing scope to multi-national and private companies to ransack country's resources." He said that coal industry and coal mines had been nationalised in 1973. "India has the fourth largest coal reserves in the world. Without proper auction and bidding, coal reserves cannot be allocated. Both previous BJP (Bharatiya Janata Party) and Congress-led governments have been trying to distribute the precious natural resources illegally."
        Criticising the UPA government's foreign policy, Karat said that the US has been dictating who should be India's friend and with whom India should maintain diplomacy."Prime Minister Manmohan Singh went to Tehran to attend the Non-Aligned Movement summit, but India, on US pressure, reduced 40 percent oil import from Iran. India-Iran ties were excellent in the past, but have fallen now," he said.
           "Communist movement must be in the Indian context. We must organise rural proletariat. That was the vital agenda of the builder of the communist movement in India (Sundarayya)," he said.
      On the First Day of the seminar CPIM Politburo Member and Chief Minister Manik Sarkar said," In order to protect people from hurdles, we need to strengthen our party”, he urged the workers. “There were attempts to weaken the party in the state. There were similar attempts in West Bengal and Kerala”. “Anti-Left forces like wild animals had plunged upon the then Left Front government in West Bengal. A larger such assault is being formulated against Tripura’s Left Front government”, Sarkar added. The Chief Minister alleged that some anti-progressive forces kept alive terrorists to use them against the Left Front government in the coming days. He had a word of appeal to the supporters. “The communists have to maintain discipline”. A plea for self-rectification, a call to consolidate the party’s vote bank, a cry to give a fight to reckon with the CPM leader has sounded off the poll bugle. Coming down upon the Congress controlled UPA II government, he asserted that with the weakened strength of the Left Front, the union government is now adopting anti-people policies and surrendering to imperialist forces. Sarkar claimed that Left parties are emerging as alternative during this crisis period. He further said that the state would continue to be a bastion of the red flag, the banner of the CPM -led Left Front. 
             On the Second day of the function, CPIM P B Members Sitharam Yechury and Com. B V Raghavulu spoke on the contributions made by Com. Sundarayya to the communist movement in India. 
courtesy : Thunderbolt

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

West Bengal Observed Historic Anti-Imperialist Day : Lakhs Protest Against US Imperialism....!

       Kolkata witnessed another historic rally of hundred thousands people that roared against imperialist aggression over third world nations. Peoples mostly from the districts of South Bengal participated with full of enthusiasm to mark their protest against US aggression and to commemorate the Anti Imperialist Day of 1st September. Left Front like every previous year organized the anti-imperialist rally this year too. All state leaderships of Left Front led the rally from the front. The rally, as was scheduled, started sharp 1pm from Rani Rashmoni Road. The face of the rally took more than 2-30 hours to reach Deshbandhu Park when the tail was waiting at Rani Rashmoni Road. The rally was fully decorated with flags, festoons, and most importantly the mobile tableaus that remained most attractive part of the rally this year too. It was exactly 4-30 when the last tableau along with people reached Deshbandhu Park. Like the city of Kolkata, another urban hub of West Bengal Siliguri too witnessed an equally big anti imperialist rally where people from different corners of North Bengal made that a grand success. 
The prime slogans pronounced by the historic rally were:

(i) US Militarization over developing countries like Afghanistan, Iraq, Iran, and countries of Latin America; (ii) Financial Imperialism through FDI in retail sector, privatization of Insurance sector, Pension funds etc. over countries like India that causes intrusion in the internal economy of these developing countries; (iii) Deaths of millions of people and huge loss of property in sponsored terrorist activities by ally powers like Israel etc. (iv) So the final slogan was to safeguard political, financial and social sovereignty across nations.
          While addressing the crowd at the end of the rally the CPI(M) Polit Bureau member Buddhadeb Bhattacharjee drew a whole backdrop of Imperialism primarily led by USA to correlate the magnitude of the contemporary imperialist aggression in the world. Having mentioned the Atom Bomb attack over Hiroshima and Nagasaki as a birth of today’s US led imperialism, Bhattacharjee explained that the nuclear attack against Japan was to throttle the battle for freedom in different countries after the Second World War, primarily either against the colonial rulings or the nationalist struggles. The subsequent attack against Vietnam and Korea were among the deadliest invasions of US and allied forces. US imperialism killed progressive African icons like Patrice Lumumba and many others. In Latin America US time and again attacked countries like Chile, Venezuela, Cuba, Nicaragua, Costa Rica, Panama etc.

       They devastated Afghanistan; brutally killing Saddam Hussein they demolished Iraq but could not find the mass destructive weapons; they sponsored internal terrorism in Libya, Syria etc in the name of founding democracy in these countries. Basically they want global OIL control, so they terrorize oil rich countries, said Buddhadeb Bhattacharjee.

        Now the danger of imperialism comes in a different direction when US and allied countries target China and trying to set base in India. We won’t tolerate US base in India to blockade India and would launch bigger protest.

      Like Militant terrorism the USA is now promoting financial imperialism in countries like India and other third world nations. US imperialism is now intruding in every internal economic sector of the third world or developing nations. Bank, Insurance, Pension Funds, Food Security are nowadays facing US policy controlling and the Central Government of India is trying to promote such intrusion. Who will control agriculture? If shopping malls are going to sell food and agricultural products our farmers will lose control over its own market forever. They are already facing such intimidation, averred Bhattacharjee.

        India is trying to set up a strategic partnership or alliance with USA. What strategic alliance is this? We will protest against any of such alliance. US Secretary of State Hillary Clinton had made her visit in this state. It was unprecedented for any Indian state that nobody since independence had faced such a situation. Why did she visit Writers’ Buildings? This is a very alarming situation. We need to be more cautious, said Bhattacharjee.

      Left Front Chairman Biman Basu while congratulating the people for making the rally a great success said that US led force are using our markets to meet their internal crisis. They are trying to control our economy. So we must keep our struggle on against such imperialist aggression. If any of US official comes to commemorate the 150th birth anniversary of great Indian Philosopher Swami Vivekananda on 12th January next year, the state will definitely revolt.