சோவியத் யூனியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோவியத் யூனியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 மார்ச், 2014

பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா...!


சோவியத் ஆட்சி முறை -     
ஆட்சி அதிகாரத்தில் அனைவருக்கம் வாய்ப்பு...!             

         கம்யூனிச ஆட்சி என்பதே மக்கள் மீதான சர்வாதிகாரம் என்றும். கம்யூனிச ஆட்சியில் மக்களுக்கு எந்த உரிமைகளும் இருக்காது என்றும் இன்னும் இது போன்ற விதவிதமான கதைகளையெல்லாம் முதலாளித்துவவாதிகள் பரப்பிவைத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் எத்தகைய பச்சை பொய்கள்  என்பதை  கீழே  காணலாம்.

             1917ல் புரட்சி நடந்த சில நாட்களுக்கு பிறகு இரசிய மக்களை நோக்கி தோழர் லெனின் கூறினார்.

              “உழைக்கும் மக்களே இப்பொழுது நீங்கள் தான் ஆட்சி பீடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து அரசியல் விவகாரங்களையும் நீங்கள் உங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ளாவிடில் உங்களுக்கு யாரும் துணை புரியப்போவதில்லை.
                இப்பொழுது முதல் உங்களுடைய சோவியத்துகள் தான் அரசு அதிகார உறுப்புகள், முழு அதிகாரம் படைத்த சட்ட மன்றங்கள். உங்களுடைய சோவியத்துகளின் மூலம் ஒன்று திரளுங்கள், அவற்றை பலப்படுத்துங்கள், நீங்களே நேரில் பணிகளில் இறங்குங்கள்”
(லெனின் நூல் திரட்டு, ஆங்கிலம், தொகுதி26 ப்பக்கம் 297)

                   சோவியத் ஒன்றியத்தில் யார் வேண்டுமானாலும் உள்ளாட்சி துறை மற்றும் சுப்ரீம் சோவியத் தேர்தலில் போட்டியிடலாம்.

-தகுதியானவர்களை மக்களே தேர்ந்தெடுப்பார்கள்.

-தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு சென்றனர்.

-இவர்கள் ஒரு தொழிற்சாலையின் தொழிலாளியாகவோ அல்லது மாட்டுப்பண்ணையில் பால் கறப்பவர்களாகவோ கூட இருந்தார்கள்.

-மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் ( இந்திய ''ஓட்டுப்பொறுக்கிகளை'' போல ) ஏதேனும் சிறு தவறு செய்தால் கூட உடனடியாக அவர்களை திருப்பியழைக்கும் உரிமை இருந்தது.

-உடனடியாக வேறு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் உரிமையும் அந்த மக்களுக்கு இருந்தது.

-இது வெறுமனே ஏட்டில் எழுதி வைத்துக்கொள்வதற்காக அல்ல. அவ்வாறு தவறிழைத்தவர்கள் திருப்பியழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

-சோவியத் வரலாற்றில் அவ்வாறு சில ஆயிரம் உள்நாட்டு பிரதிநிதிகளையும், சில நூறு சுப்ரீம் சோவியத் பிரதிநிதிகளையும் மக்கள் திருப்பியழைத்திருக்கின்றனர்.

            எல்.சூசயெவா என்பவர் கூட்டுப்பண்ணையில் பால்காரப் பெண்ணாக வேலை செய்பவர். மக்கள் அவரை சுப்ரீம் சோவியத்துக்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து அனுப்பினர். அங்கே அவர் உரையாற்றுகையில் ஒரு சுவையான அனுபவத்தை கூறினார்.

              “இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சோவியத் இளந்தலைமுறையினர் தூதுக்குழுவில் ஓர் உறுப்பினராக அமெரிக்காவிற்கு சென்றிருந்தேன். அங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
            அமெரிக்கர்கள் எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதை எங்களுக்கு காட்ட வேண்டுமென்று அமெரிக்க செனட்டர்களை நாங்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஜன்நாயகத்தைப் பற்றி இந்த செனட்டர்கள் நிறையவே பேசினார்கள். அமெரிக்க ஜனநாயகத்தின் சிறப்புகளை சொல்லி தமது சமூக அமைப்பை வானளாவ புகழ்ந்து கொண்டார்கள்.
            ஆனால் இங்கேதான் அவர்கள் தோல்வியடைய நேர்ந்தது. நான் யார் என்று என்னிடம் கேட்டார்கள். இரசிய சமஷ்டிக் குடியரசின் சுப்ரீம் சோவியத்தில் ஓர் உறுப்பினர், பசு பராமரிக்கும் பால்காரியாக கூட்டுப்பண்ணையில் பணி புரிகிறேன் என்று சொன்னேன். அமெரிக்க செனட்டர்கள் வியப்புற்றுவிட்டனர், அவர்களுடைய செனட்டில் பால்காரிகள் யாரும் இல்லை. அவர்களுடைய ஜனநாயகம் அதற்கு இடம் தரவில்லை.
              நான் சொல்வது உண்மைதானா என்று சோதித்து பார்ப்பது என்று அவர்கள் முடிவு செய்து கொண்டார்கள், சைராக்கியூசில் திரு லீ என்னுடைய கைகளை காட்டுமாறு கேட்டார். என் கைகளை திறந்து அவரிடம் காட்டி இதோ பாருங்கள் உழைக்கும் பெண்ணின் கைகள் என்றேன்.
          ஆனால் அவர்கள் திருப்தியடையவில்லை. திரு லெஷர் என்ற அமெரிக்க விவசாயியின் பால் பண்ணைக்கு நாங்கள் சென்றிருந்த போது, பால் கறந்து காட்டும்படி சொன்னார்கள். நான் கறந்து காட்டினேன். சோவியத் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பால் கறக்கவும் தெரிகிறது என்று புரிந்து கொண்டார்கள்.''
(சோவியத் நாட்டில் மனித உரிமைகளும் சுதந்திரங்களும். ரா.கிருஷ்ணையா,பக்கம் 33)

                அதே போல சோவியத் நாட்டில் ஜனநாயகம் எவ்வளவு பரந்து விரிந்ததாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள இன்னொரு விசயத்தையும் கூறலாம். சோவியத்தின் புதிய அரசியலமைப்புச்சட்டம் எழுதப்பட்டு அதன் நகல் விவாதத்திற்காக மக்களிடையே சுற்றுக்கு விடப்பட்டது. கிட்ட்த்தட்ட நான்கு மாதங்களாக இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன.
                  பதினான்கு கோடிக்கு மேற்பட்ட சோவியத் மக்கள் இந்த விவாத்த்தில் பங்கெடுத்துக்கொண்டனர். மாஸ்கோவில் மட்டும் ஐம்பத்தைந்து லட்சம் பேர் விவாதித்தார்கள். அரசியல் சட்ட ஆணைக்குழுவுக்கு நான்கு லட்சம் ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
           விவாதம் நடைபெற்ற் மாதங்களில் இது குறித்து பிராவ்தா செய்திஏடுக்கு 30,510 கடிதங்கள் வந்தன. இவ்வாறு ஒரு நாட்டின் சட்டம் குறித்து நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு, நான்கு மாதம் விவாதம் நடத்தி அதன் பிறகு அதை அமுல்படுத்திய சோவியத் யூனியன் ஜனநாயக நாடா ?
                   அல்லது இந்த நாட்டு மக்களுக்கே தெரியாமல் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புமிக்க கனிம வளங்களை உள்ளடக்கிய மாபெரும் மலைகளை யாருடைய அனுமதியும் பெறாமல் பன்னாட்டு கம்பெனிகளுக்கு எழுதிக்கொடுப்பது ஜனநாயகமா ? 

நன்றி : vinavu

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சோவியத் யூனியன் உடைந்ததால் மாபெரும் பாதிப்பு - மக்கள் வருத்தம்...!

       
            “சோவியத் யூனியன் உடைந்ததால் மிகப்பெரும் பாதிப்பு” ஏற்பட்டுவிட்டது என்று 51 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒன்று பட்ட சோவியத் யூனியன் கடந்த 1992-ம் ஆண்டு 15 நாடுகளாக பிரிந்தன. இப்போது ஒவ்வொரு நாடுகளும் சுதந்திர நாடுகளாக செயல்பட்டு வருகின்றன. பிரிவதற்கு முன்பு சோவியத் யூனியன் உலக நாடுகளுக்கெல்லாம் கலங்கரைவிளக்கமாகவும்,  அமெரிக்காவுக்கு சவாலாகவும், உலகிலேயே வலுவான வல்லரசாகவும்  விளங்கியது.
           சோவியத் யூனியன் பிரிந்த பிறகு அமெரிக்கா உலக நாடுகளை ''ஜனநாயகம்'' என்ற பெயரில் ஆட்டிப்படைத்து வருகிறது. ''புதிய பொருளாதாரம்'' என்ற பெயரில் மற்ற நாடுகளை அமெரிக்கா மிரட்டி, சுரண்டி வருகிறது. பணக்கார நாடுகள் மேலும் பணக்கார நாடுகளாகவும், ஏழை நாடுகள் மேலும் ஏழை நாடுகளாகவும் மாறிவிட்டன. இதில் ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் பிரிந்து சென்ற நாடுகளும் தப்பவில்லை. இது பற்றி ''கல்லப்'' என்ற தனியார் அமைப்பு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து சென்ற 11 நாடுகளில் உள்ள மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பு இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 1000 பேரிடம் நேரிடையாக நடத்தப்பட்டது. இதில் 51 சதவிகித மக்கள் சோவியத் யூனியன் உடைந்ததால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.
         பிரிந்ததால் வன்முறைகள், இன மோதல்கள் அதிகம் ஏற்பட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர் என்றனர். 24 சதவிகித மக்கள் நன்மை ஏற்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்தனர். 25 சதவிகித மக்கள் பயத்துடனும், மிரட்சியுடனும் தங்களுக்கு இது பற்றி தெரியவில்லை, இரண்டுமில்லை என்றும், இதில் சிலர் கருத்து தெரிவிக்கவும் மறுத்துவிட்டனர். பொதுவாக கசகஸ்தான், அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் நன்மை ஏற்பட்டுள்ளதாகவும், ஆர்மீனியா, கிர்கிஸ்தான், உக்ரைன், ரஷ்ய ஆகிய நாட்டு மக்கள் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்கள். மேலும் இந்த கருத்துக்கணிப்பில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 33 சதவிகிதத்தினர் சோவியத் யூனியனில் பிரிந்து சென்றது தீமையாகி விட்டது என்றும், 30 சதவிகித இளைஞர்கள் நன்மை தான் ஏற்பட்டுள்ளது என்றும்  வித்தியாசமாக கருத்து கூறினார்கள். கிர்கிஸ்தான் மக்களை தவிர பிரிந்து சென்ற மற்ற நாட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உயர்கல்வி கிடைத்து இருப்பதாக தெரிவித்தார்கள். 11 நாடுகளில் உள்ள 30 சதவிகித மக்கள் சுதந்திரத்துக்கு பிறகு தங்கள் பிள்ளைகள் உயர் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்து இருப்பதாகவும், இதனால் நன்மைகள் ஏற்படும் என்று கூறினர். ஆனால் 18 சதவிகித மக்கள் இதில் நன்மை எதுவும் ஏற்படவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர்.
        ரஷ்யாவில் நடத்திய கருத்துக்கணிப்பில் 55 சதவிகித மக்கள் சோவியத் யூனியன் உடைந்ததால் தீமை தான் ஏற்பட்டுள்ளது என்றும், 19 சதவிகிதத்தினர் தங்கள் வாழ்க்கை மேம்பட்டு இருக்கிறது என்றும் கூறினர். 26 சதவிகித மக்கள் கருத்து கூற மறுத்து விட்டார்கள். ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற உஸ்பெக்கிஸ்தான், லித்துவேனியா, எஸ்தோனியா, லாவித்வியா ஆகிய நாடுகளில் கருத்துகணிப்பு நடைத்தப்படவில்லை. 
 நன்றி :

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

''நீல் ஆம்ஸ்ட்ராங்'' - நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் - சோவியத் யூனியனுக்கு போட்டியாக ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்...!

        நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் நீல் ஆம்ஸ்ட்ராங் நேற்று காலமானார். இந்தியாவில் உள்ள இளைஞர்களெல்லாம் பேஸ் புக்கிலும், டிவீட்டரிலும் ஒப்பாரி வைத்திருக்கிறார்கள். இன்று பேஸ் புக்கையும் டிவீட்டரையும் திறந்தால் நம் நாட்டு இளைஞர்களின் ஒப்பாரியை தான் பார்க்க முடிந்தது. இவர்களின் அமெரிக்க அக்கறை இருக்கிறதே... அது அளவு கடந்து போகின்றது. இவர்கள் என்ன செய்வார்கள் பாவம். படிக்கும் போதும், வேலைக்குப் போகும் போதும் ''நிலாவில் முதன்முதலில் காலடி வைத்தவர் யார்..? என்ற கேள்விக்கு பதில் சொல்லியே பழக்கப்பட்டவர்கள் தானே.. சரி அது போகட்டும். நீல்  ஆம்ஸ்ட்ராங் நிலாவில் காலடி வைத்த கதையை இங்கே சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது. 
         உலகிலேயே முதன் முதல் சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சோவியத் யூனியன் தான். 1930 - ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் இந்த ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். அதேப்போல், நிலாவிற்கு விண்களம் அனுப்பியவர்களும் இவர்களே. இருபதுக்கும் மேற்பட்ட  ஆளில்லா விண்களங்களை நிலாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். இப்படியாக நிலாவை நோக்கிய இந்த விண்களப் பயணமும், நிலாவைப் பற்றிய ஆராய்ச்சியும் வெற்றிகரமானதாக அமைந்தவுடன், 1957 - ஆம் ஆண்டு விண்களத்தில்  ''லைகா'' என்ற நாயை  வைத்து நிலாவிற்கு அனுப்பி வைத்தனர். ''லைகா'' நாயும் உயிர் சேதாரமின்றி நிலவிற்கு சென்று திரும்பியது. அந்த பயணம் வெற்றிகரமாக முடிந்ததை  பார்த்து உலகமே வியந்தது. 
           இத்தனைப் பயணங்களும்  வெற்றிகரமாய் அமைந்திடவே, சோவியத் யூனியன் அடுத்து சோவியத் யூனியனைச் சேர்ந்த மூன்று பேர்களை  நிலவிற்கு அனுப்பி சோதனை செய்ய முயற்சித்தது. அந்த மூன்று பேர்களையும் ஏற்றிக்கொண்டு நிலாவை நோக்கி புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே வெடித்து சிதறியது. அதனால் உலகமே அதிர்ச்சியடைந்தது. மூன்று உயிர்களை அனாவசியமாக பலியிட்டுவிட்டோமே என்று சோவியத் யூனியனும் உறைந்து போனது மட்டுமல்லாமல், இது மனித உரிமைக்கு எதிரானது என்று கூறி மன்னிப்பும் கேட்டனர். அது மட்டுமல்லாமல், நிலாவிற்கு ஆட்களை அனுப்பி செய்யும் சோதனையை இத்துடன் கைவிடுவதாகவும் அறிவித்துவிட்டனர். 
             அந்த காலங்களில், எதிலும் சோவியத் யூனியனுடன் போட்டிப்போடும் அமெரிக்கா நிலாவைப் பற்றிய சோதனையிலும்  போட்டிப்போட்டது. நிலாவிற்கு ஆட்களை அனுப்பும் சோதனையை கைவிடுவதாக சோவியத் யூனியன் அறிவித்தவுடன், ''அவர்களால் செய்யமுடியாததை வெற்றிகரமாக எங்களால் செய்து காட்டமுடியும்'' என்று அமெரிக்கா சவால் விட்டது. 
         அதன் பிறகு தான், அமெரிக்கா உலகத்திலேயே தான் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்த நாடு என்று காட்டுவதற்காக, கடந்த   1969 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் ''அப்போலோ - 11'' என்ற விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும் நிலாவிற்கு அனுப்பிவைத்தது. ஜூலை 20 - ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள் ஆம்ஸ்ராங் தான் முதன் முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில் வந்தது. பிறகு ''நிலாவில் முதன்முதல் காலடி வைத்தவர் யார்...?'' என்ற கேள்வியே இல்லாத  பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகிவிட்டது. 
               அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம் தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா  தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல் ஆராய்ச்சியில் எங்களை வெல்ல யாருமில்லை என்று கொக்கரித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ''நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த'' திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.

          அவர்கள் சொன்னது என்னவென்றால், நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலக மக்களை எப்படியெல்லாம் அமெரிக்கா  மடையர்களாக ஆக்கியிருக்கிறது என்று என்னும் போது  நமக்கெல்லாம் உண்மையிலேயே கோபம் வருகிறது. 
இவர் தான் இயக்குனர் 
              ''ஹாலிவுட்டில் நிலாவைப்போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்'' என்ற உண்மையையும் அந்த படத்தை இயக்கிய அன்றைய ''science  fiction'' பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் - இன் மனைவியும் வெளியிட்டிருக்கிறார்.
            அப்படி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் உங்களுக்கு உண்மை  விளங்கும்.
          1) முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளி  பட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே ஒழிய, தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.
          2 ) நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி அமெரிக்கக் கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்தக் கொடி  அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி  பறப்பதற்கு சாத்தியமே இல்லை. 
         3 ) அதேப்போல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே. அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடித் தடம் இருக்கும். அவர்கள் நடக்கும் போது  புழுதி பறக்கும்.  இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும். 
            4 ) சுற்றிலும் focus  லைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும். 
           5 ) நீள் ஆம்ஸ்ட்ராங்கின் முகத்தை அருகில் காட்டுவார்கள் அதில் அவருக்கு எதிரில் இருக்கும் விண்வெளிவீரர்கள் இரண்டுபேரின் உருவங்கள் தெரியும். நிலாவிற்கு சென்றதே இரண்டு பேர் எனும் போது மூன்றுவதாக இன்னொருவர் யார்...? 
           இப்படியாக அந்த படபிடிப்பில் கோட்டைவிட்டிருப்பதால் அமெரிக்கா நிலாவிற்கு செல்லவில்லை என்றும்,  நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமே அது என்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
             இவ்வளவு அறிவியல் வளர்ச்சியும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் உள்ள இந்த காலத்திலேயே அமெரிக்கா, இந்தியா, சீனா   உள்ளிட்ட பல நாடுகள் இன்றைக்கு  நிலாவைப் பற்றிய எந்தவிதமான முழுமையான முடிவுக்கும் வரமுடியாமலும், நிலாவிற்கு ஆட்களை அனுப்ப யோசித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அன்றைக்கு - அதுவும் 60 - களில்  இன்றைக்கு இருப்பது போன்ற அறிவியல் வளர்ச்சியோ, தொழிநுட்ப வளர்ச்சியோ இல்லாத நாட்களில் எப்படி நிலாவிற்கு ஆட்களை அனுப்பினார்கள்..? என்று அடிக்கடி எனக்குள்ளே கேட்டுக்கொள்வேன்.
            எது எப்படியோ நிலாவின் ( திரைப்படத்தின் ) நாயகன் மரணம் அடைந்திருக்கிறார். அவருக்கு நமது அஞ்சலி.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

ராஜீவ் காந்தி கொலையில் மறைந்திருக்கும் மர்மங்கள் நீண்டுகொண்டே போகிறது...!

         கடந்த இரண்டு நாட்களாக ஒரு செய்தி ஊடகங்களில் பெரிது படுத்தப்படாமல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின்  ஏற்பாட்டில் தான் ராஜீவ்காந்தி கொலை நடந்தது என்று இலங்கை நாட்டின் வீட்டு அமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச் பேசியிருப்பதை எந்தப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பது என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அல்லது இதெல்லாம் தெரிந்த விஷயம் தானே என்று அலட்சியமாக விட்டுவிட்டனவா என்று தெரியவில்லை. 
               ராஜீவ் காந்தியின் மரணத்தில் இன்னும் பல மர்மங்கள் நீடித்துக்கொண்டே தான் போகிறது. கொலையில் தொடர்புடைய பலபேர் இன்னும் வெளியே நடமாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 
                நேற்று முன் தினம்,  இந்திரா காந்தி குடும்பத்தினர் இருக்கும்போது தெற்காசியாவில் அமெரிக்கா பொருளாதாரா ரீதியாக செயற்பட முடியாது என்ற எண்ணத்தில், அமெரிக்க உளவு துறையான சி. ஐ. ஏ - வின்   திட்டத்தின்படியும், ஏற்பாட்டின்படியும்  ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார் என்ற தகவலை இலங்கை அமைச்சர் தெரிவித்திருப்பது என்பது அதிர்ச்சி தரும் செய்தியாக இல்லை என்றாலும்  ராஜீவ் கொலை சம்பந்தமான விசாரணை முடிவில் இந்த செய்தி ஏன் சொல்லப்படவில்லை என்பது தான் அதிர்ச்சியாக இருக்கிறது.    
                    ராஜீவ் கொலை சம்பந்தமான வழக்குகள் - விசாரனைகளின் முடிவுகள் முழுமையானது அல்ல என்பதும், பல பேர்களை காப்பாற்றவும், திருப்திப்படுத்தவுமே வழக்குகளும், விசாரணைகளும், அதன் முடிவுகளும் என்பது இந்த நாடு அறிந்ததே. 
                அமெரிக்க சி. ஐ. ஏ  தான் ராஜீவ் கொலையில் மூளையாக இயங்கியிருக்கிறது என்பதும், மற்றவர்கள் கருவிகளாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதும் அனைவரும் அறிந்ததே. 
              ராஜீவ் காந்தியின் மீது   அமெரிக்கா எரிச்சல் அடைந்ததற்கான காரணங்களில் ஒன்று தான் இலங்கை அமைச்சர் சொன்ன தகவல். இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன. 
         கடந்த 1990  -  91 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வளைகுடா போரில் எண்ணெய் நாடான குவைத்துக்காக அமெரிக்கா இராக்குடன் போர் செய்த போது, அமெரிக்காவின் போர் விமானத்திற்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போது இந்தியாவில் மிக குறுகிய காலமே பிரதமராக இருந்த எஸ். சந்திரசேகர் தான் அந்த எரிபொருளை நிரப்புவதற்கு அனுமதி அளித்தார். இந்த ஈனச்செயலை இடதுசாரி கட்சிகள் மிகக் கடுமையாக கண்டித்தன. அதேப்போல் எரிபொருள் நிரப்பிய இச்செயலை ராஜீவ் காந்தியும் எதிர்த்தார். இதனால் ராஜீவ் காந்தியின் மீது அமெரிக்கா எரிச்சலும் கோபமும் அடைந்தது.
                 அது மட்டுமல்ல, 80 - களில் இந்தியாவினுள்  அமெரிக்காவின் ராட்சசக் குழந்தைகளான புதிய பொருளாதாரக் கொள்கை, தாராளமயம், உலகமயம், தனியார்மயம் நுழைந்த காலக்கட்டம் என்பது, இந்திர காந்தியின் மறைவுக்குப்பின் ராஜீவ் காந்தி பிரதமராக ஆட்சி செய்த காலக்கட்டமாகும். அவைகளில், தனக்கு சாதகமான புதிய  பொருளாதாரக் கொள்கை, இறக்குமதி போன்றவற்றில் தாராளமயம் போன்றவற்றை ராஜீவ் காந்தி ஏற்றுக்கொண்டாலும், இன்சூரன்ஸ் - வங்கித்துறைகளில்  திணிக்கப்பட்ட தனியார்மயத்தில் மட்டும்  அவர் ஆர்வம் காட்டவில்லை. இன்சூரன்ஸ் துறை அவரது தாத்தாவால் தேசவுடமை செய்யப்பட்டது. வங்கித்துறை அவரது அம்மாவால் தேசவுடைமை செய்யப்பட்டது போன்றவைகள் தான் அதற்கு  காரணமாக சொல்லப்பட்டது. இதுவும் அமெரிக்காவிற்கு ராஜீவ் காந்தியின் மீது எரிச்சலை ஊட்டியது.
              அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை என்றால், அமெரிக்கக் கட்டளைக்கு பணிந்து நடக்கவில்லை என்றால் அவர்களை தீர்த்துக்கட்டும் வேலையில் தான் அமெரிக்கா ஈடுபடும் என்பது தான் கடந்த கால வரலாறு. 
           விடுதலைப்புலிகளை பயன்படுத்தி ராவீவை கொன்றது போல், தாலிபான்களை பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் இடதுசாரி அதிபர்  டாக்டர். முகமது நஜிபுல்லாவை கொன்றதும்,
                கடலுக்கடியிலும், பூமிக்கடியிலும், ஆகாயத்திலும் அணுகுண்டு சோதனைகளை இனி அமெரிக்கா நடத்தக்கூடாதென்று, அதன் ஜனாதிபதி ஜான் கென்னடி தடை செய்த போது, அவரை ஒரு தேசத்துரோகி என்று குற்றம் சாட்டி தன் சொந்த ஜனாதிபதியையே சுட்டுக் கொன்றதும், 
             தனக்கு அடங்கி நடக்காத இராக் நாட்டின் அதிபர் சதாம் ஹுசைனை தூக்கிலிட்டுக்  கொன்றதும், 
             மாற்றத்தை விரும்பி போராடிய லிபிய மக்களின் எழுச்சியை தனக்கு சாதகமாக மாற்றுவதற்கும், மக்கள் விரும்பிய மாற்றம் திசைத்திருப்புவதற்கும் அந்த நாட்டின் அதிபர் கடாபியை சித்திரவதை செய்து கொன்றதும், 
                இஸ்ரேலுடனான தனது உறவை பலப்படுத்திக்கொள்ள,     மறைந்த பாலஸ்தீனத்தலைவர் யாசர் அராபத்தை கொள்வதற்கு பல முறை முயற்சி செய்ததும்,
            தனக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் கியூபா நாட்டின் புரட்சித்தலைவர் பிடல் காஸ்ட்ரோவை இதுவரை 600 - க்கும் மேற்பட்ட தடவைகள் கொலை செய்து கொள்வதற்கு முயற்சி செய்ததும்,
             இரத்தவெறி பிடித்த அமெரிக்கா தான் என்பதை யாராலும் மறுக்கவோ அல்லது மறக்கவோ முடியாது. இது தான் அமெரிக்காவின் இயற்கையான குணம். இது தான் அமெரிக்காவின் 500 ஆண்டுகால இரத்தக்கறை படிந்த வரலாறாகும். மேலே சொன்ன அத்தனை சம்பவங்களும், உலக நாடுகளுக்கெல்லாம் பாதுகாவலனாக விளங்கிய - உலக அமைதிக்கு வழிகாட்டியாக விளங்கிய சோவியத் யூனியன் உடைந்து போன பின் நடந்த சம்பவங்களாகும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சோவியத் இல்லாததன் பலனை இன்று உலகம் அனுபவிக்கிறது.