“சோவியத் யூனியன் உடைந்ததால் மிகப்பெரும் பாதிப்பு” ஏற்பட்டுவிட்டது
என்று 51 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒன்று பட்ட சோவியத்
யூனியன் கடந்த 1992-ம் ஆண்டு 15 நாடுகளாக பிரிந்தன. இப்போது ஒவ்வொரு
நாடுகளும் சுதந்திர நாடுகளாக செயல்பட்டு வருகின்றன. பிரிவதற்கு முன்பு
சோவியத் யூனியன் உலக நாடுகளுக்கெல்லாம் கலங்கரைவிளக்கமாகவும், அமெரிக்காவுக்கு சவாலாகவும், உலகிலேயே வலுவான வல்லரசாகவும் விளங்கியது.
சோவியத்
யூனியன் பிரிந்த பிறகு அமெரிக்கா உலக நாடுகளை ''ஜனநாயகம்'' என்ற பெயரில்
ஆட்டிப்படைத்து வருகிறது. ''புதிய பொருளாதாரம்'' என்ற பெயரில் மற்ற நாடுகளை
அமெரிக்கா மிரட்டி, சுரண்டி வருகிறது. பணக்கார நாடுகள் மேலும் பணக்கார
நாடுகளாகவும், ஏழை நாடுகள் மேலும் ஏழை நாடுகளாகவும் மாறிவிட்டன. இதில்
ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் பிரிந்து சென்ற நாடுகளும் தப்பவில்லை. இது
பற்றி ''கல்லப்'' என்ற தனியார் அமைப்பு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து சென்ற
11 நாடுகளில் உள்ள மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. இந்த
கருத்துக் கணிப்பு இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 1000 பேரிடம்
நேரிடையாக நடத்தப்பட்டது. இதில் 51 சதவிகித மக்கள் சோவியத் யூனியன்
உடைந்ததால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்று வருத்தத்துடன்
தெரிவித்தனர்.
பிரிந்ததால் வன்முறைகள், இன மோதல்கள் அதிகம் ஏற்பட்டு
மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர் என்றனர். 24 சதவிகித மக்கள் நன்மை
ஏற்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்தனர். 25 சதவிகித மக்கள்
பயத்துடனும், மிரட்சியுடனும் தங்களுக்கு இது பற்றி தெரியவில்லை,
இரண்டுமில்லை என்றும், இதில் சிலர் கருத்து தெரிவிக்கவும் மறுத்துவிட்டனர். பொதுவாக கசகஸ்தான், அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில்
உள்ள மக்கள் நன்மை ஏற்பட்டுள்ளதாகவும், ஆர்மீனியா, கிர்கிஸ்தான், உக்ரைன்,
ரஷ்ய ஆகிய நாட்டு மக்கள் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்
கூறினார்கள். மேலும் இந்த கருத்துக்கணிப்பில் 30 வயதுக்கு உட்பட்ட
இளைஞர்களில் 33 சதவிகிதத்தினர் சோவியத் யூனியனில் பிரிந்து சென்றது
தீமையாகி விட்டது என்றும், 30 சதவிகித இளைஞர்கள் நன்மை தான் ஏற்பட்டுள்ளது
என்றும் வித்தியாசமாக கருத்து கூறினார்கள். கிர்கிஸ்தான் மக்களை தவிர
பிரிந்து சென்ற மற்ற நாட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உயர்கல்வி
கிடைத்து இருப்பதாக தெரிவித்தார்கள். 11 நாடுகளில் உள்ள 30 சதவிகித மக்கள்
சுதந்திரத்துக்கு பிறகு தங்கள் பிள்ளைகள் உயர் கல்வி கற்க வாய்ப்பு
கிடைத்து இருப்பதாகவும், இதனால் நன்மைகள் ஏற்படும் என்று கூறினர். ஆனால் 18
சதவிகித மக்கள் இதில் நன்மை எதுவும் ஏற்படவில்லை என்று மறுப்பு
தெரிவித்தனர்.
ரஷ்யாவில் நடத்திய கருத்துக்கணிப்பில் 55 சதவிகித
மக்கள் சோவியத் யூனியன் உடைந்ததால் தீமை தான் ஏற்பட்டுள்ளது என்றும், 19
சதவிகிதத்தினர் தங்கள் வாழ்க்கை மேம்பட்டு இருக்கிறது என்றும் கூறினர். 26
சதவிகித மக்கள் கருத்து கூற மறுத்து விட்டார்கள். ரஷ்யாவில் இருந்து
பிரிந்து சென்ற உஸ்பெக்கிஸ்தான், லித்துவேனியா, எஸ்தோனியா, லாவித்வியா ஆகிய
நாடுகளில் கருத்துகணிப்பு நடைத்தப்படவில்லை.
நன்றி :
1 கருத்து:
உக்ரைன் நாட்டுல சில வாரங்களுக்கு முன் ரஷ்யயாவுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு லெனின் சிலைய உடைச்ச கதை உங்களுக்கு தெரியாது போலும்...
கருத்துரையிடுக