செவ்வாய், 31 டிசம்பர், 2013

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நம்மோடு வாழ்வார்...!

               அழிந்து வரும் நம் பாரம்பரிய இயற்கை வேளாண்மையை போற்றும் விஞ்ஞானியாய், உயிர்ப்பாய் துடிக்கும் நம் பூமியை - சுற்றுச்சூழலை பாதுகாக்கும் போராளியாய் தமிழக மக்களிடம் விழிப்பையும், எழுச்சியையும் உண்டாக்கிய இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் இன்று நம்மோடு இல்லை. அவரது மறைவு இயற்கை வேளாண்மைக்கும், பூமிக்கும், இயற்கையையும், பூமியையும் விரும்பும் மனிதர்க்கும் பேரிழப்பாகும். 
              ''உணவை பரிமாறும் நம் நாட்டு விதைகள் எதிர்காலத்தில் ''பேராயுதமாக'' உருமாறும்'' என்பது அவர் நமக்குத் தந்த எச்சரிக்கை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. முயற்சியைப் பற்றி அவர் தந்த மிக எளிமையான விளக்கம் இன்றும் நினைவில் நிற்கிறது. என்றும் மனதை கவர்ந்தது. ''முயற்சியை  விதை. விடாமல் முயற்சியை விதை. விளைந்தால் மரம். இல்லையென்றால் மண்ணுக்கு உரம்'' - அற்புதமான வார்த்தைகள். 
            இயற்கைப்போராளி நம்மாழ்வார் விட்டுச் சென்ற இயற்கையை காக்கும் போராட்டத்தை, பூமியின் உயிர்ப்பைக் காக்கும் போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வோம். இயற்கையோடும் மண்ணோடும் கலந்துவிட்ட  அவரது மூச்சுக்காற்று நிச்சயம் நமக்கெல்லாம்  வழிகாட்டும். வாழ்க நம்மாழ்வார்...!

2 கருத்துகள்:

ரெங்கன் சொன்னது…

இயற்கை விவசாயத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்த ஒரு இயற்கை விரும்பி மண்ணின் மைந்தர் மண்ணில் சாய்ந்தது. இந்நாளில் ஒரு விவசாயியாது இயற்கை விவசாயம் செய்ய உறுதிமொழி எடுப்பின் அதுவே நாம் அவருக்கு செய்யும் மிகப் பெரிய அஞ்சலி. நம்மாழ்வாரின் ஆத்மா சாந்தி அடைய செய்வது நம் கையில் தான் உள்ளது.