ரங்கசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரங்கசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 செப்டம்பர், 2015

மீண்டும் ஜெயலலிதாவிடம் சரணடைந்தார் ரங்கசாமி...!


கேளிக்கூத்தாகும் புதுச்சேரி அரசியல்...!

             புதுச்சேரியில் 2011- சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் ஒன்றாக தேர்தலை சந்தித்து, தேர்தல் வெற்றிக்கு பின்னர் கூட்டாளியாக இருந்த அதிமுகவை கழட்டிவிட்டு, ஒரே ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவோடு நேற்று வரையில் ''அலங்கோல'' ஆட்சி செய்து வந்த முதலமைச்சர் ரங்கசாமிக்கு 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே மாநிலங்களவைத்தேர்தல் என்பது ஒரு சோதனைக்காலமாக ஆகிவிட்டது.   புதுச்சேரியில் உள்ள ஒரே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு  முன்பே பாரதீய ஜனதாக்கட்சியின் அகில இந்திய தலைவர்  அமித்ஷா புதுச்சேரிக்கு வந்து ரங்கசாமியை சந்தித்து இராஜ்யசபா சீட்டை தங்கள் கட்சிக்கு விட்டுக்கொடுக்கும்படியும்,  அதற்கான தொகையும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னிடம் இருப்பதால், அமித்ஷாவிற்கு வளைந்து கொடுக்காத ரங்கசாமி  தானே தன்னுடைய வேட்பாளரை நிறுத்துவதற்கு முடிவு செய்து, வேட்பாளரையும் தேடி கண்டுபிடித்து, தன் கட்சியின் சக நிர்வாகிகளுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் சொல்லாமலும், செய்தியாளர்களுக்கும் தெரியாமலும்   தேர்தல் வேட்புமனு கொடுக்கும் கடைசிநாள் வரை  மனசுக்குள்ளே வைத்திருக்க, அதற்குள் முதலமைச்சர் மீது நீண்ட காலமாக நம்பிக்கை இழந்து, வேண்டாவெறுப்பாக அவரோடு ஒட்டிக்கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர்களை மோப்பம் பிடித்த  திமுகவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் - அவர் புதுச்சேரியில் மருத்துவக்கல்லூரி ஒன்றும், நட்சத்திர ஓட்டல் ஒன்றும் நடத்திவரும் தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் தான் மாநிலங்களவை உறுப்பினராக ஆசைப்பட, தான் வெற்றி பெறுவதற்கு தேவையான எண்ணிக்கையிலான  அந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு   கோடிகளையும், ஓட்டல் சொர்க்கத்தையும்  காட்டி திருப்திப்படுத்த, தான் மனசுக்குள் வைத்திருக்கும்  தனது  காரைக்கால் தொழிலதிபர் நண்பனை மாநிலங்களவை உறுப்பினர் ஆக முடியாமல், வாய்ப்பை தன்னுடைய பறிக்கப்படும் சூழ்நிலையை புரிந்துகொண்ட ரங்கசாமி, தனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் அதிருப்தியாளர்களுக்கோ, அவர்களை வளைத்து போட்டுக்கொண்ட தமிழக தொழிலதிபருக்கோ வெற்றிபெறும் வாய்ப்பு கிடைத்துவிடாமலிருக்க கடைசியில் யாரும் எதிர்பாராதவிதமாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தன்னுடைய பழைய தேர்தல் கூட்டாளியான தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சரணடைந்துவிட்டார்.   
            இராஜ்யசபை தேர்தல் சீட்டை அதிமுகவிற்கு விட்டுக்கொடுத்த ரங்கசாமி, தான் மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கி அழகு பார்க்க நினைத்த தனது நண்பனை அதிமுகவில் சேரவைத்து, அதிமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்யவும் வைத்தார். நேற்றுவரையில் எலியும் பூனையுமாக இருந்தவர்கள், பதவிக்காகவும், பணத்துக்காகவும் அவசரகால கூட்டணி அமைத்ததன் மூலம் புதுச்சேரி மக்களையும், அரசியலுக்கே சம்பந்தமில்லாத - ஊர், பேர் தெரியாத ஒரு தொழிலதிபரை தன்னுடைய கட்சியின் வேட்பாளராக ரங்கசாமி அறிவித்ததன் மூலம் ரங்கசாமி கட்சித் தொண்டர்களையும், ரங்கசாமி  தன் கட்சிக்கு அனுப்பிவைத்த அவரது நண்பரையே வேட்பாளராக ஜெயலலிதா ஏற்றுகொண்டதன் மூலம் அதிமுக தொண்டர்களையும் வடிகட்டின முட்டாள்களாக ஆக்கியிருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். 

சனி, 4 மே, 2013

புதுச்சேரியில் ரங்கசாமி ஆதரவோடு வன்னியர் சங்கம் ''பந்த்''....!



               நேற்று 03.05.2013 அன்று புதுச்சேரியில் ''பந்த்'' நடத்தினாங்க...பந்த்ன்னா பந்த்.. அப்படியொரு பந்த்ங்க... இதுவரைக்கும் அப்படி நடந்ததேயில்லை... கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளும்  எல்லாம் மூடப்பட்டிருந்தன.... பெட்ரோல் பங்க்கள் கூட மூடப்பட்டிருந்தன... அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை... பேருந்து நிலையமே வெறிச்சோடி கிடந்தது. ஆட்டோகளும் டெம்போகளும் சுத்தமா ஓடவில்லை. ஊரே நிசப்தமாக காணப்பட்டது.  போலீச்காரங்கக் கூட கண்ணுல படவேயில்லை... அந்த அளவுக்கு ''நேர்மையான'' ''ஒழுக்கமான'' பந்த்ன்னா பாத்துக்கோங்களேன்... 100 சதவீதம் வெற்றின்னு சொல்லலாம்...
           இந்த பந்த் எதற்காகன்னு தெரியுமா..? நம்ம விடுதலைப் போராட்ட வீரரு... பாட்டாளி ஏழை மக்களுக்காகவே வாழ்க்கைய அர்ப்பணிச்சவரு... தவறான முறையில சொத்து சேர்க்காதவரு... நேர்மையான முறையில மருத்துவ பட்டம் பெற்றவரு... இப்படியே... அண்ணன் நல்லவரு... பெண்டு எடுக்கிறதுல வல்லவருன்னு... நெறைய அடுக்கிக்கிட்டே போகலாம்.... அவர்தானுங்க.. உலக மகா யோக்கியரு.... இராமதாசு... இவரு சென்ற சித்திரா பவுர்ணமியன்று மகாபலிபுரம் கடற்கரையில உப்பு காய்ச்ச போனாருங்க... போன இடத்துல தலித் மக்களை காய்ச்சி காய்ச்சின்னு காய்ச்சிட்டாருங்க... இதுல வேற தைரியமிருந்தா தமிழக அரசு கைது பண்ணிப் பாக்கட்டுமே...என்று சவால்  வேற விட்டிருக்காருங்க... அவ்வளவு தான் அம்மா அய்யாவை புடிச்சி உள்ள வெச்சிட்டாங்க... இப்ப ஜெயில்ல இருக்கிற டாக்டர் அய்யாவுக்கே இன்னொரு டாக்டரு மருத்துவம் பார்க்கிற மாதிரி ஆகிப்போச்சிங்க....
         இது நடந்ததோ தமிழ்நாட்டுல... ஆனா அவரது ''தொண்டர் அடிபொடிகள்'' நேற்று புதுச்சேரியில மட்டும் ''பந்த்'' நடத்தினாங்க.... இந்த பந்த்க்கு தான் இவ்வளவு புதுச்சேரியில என்ன வரவேற்பு... எதுவுமே செயல்படாம புதுச்சேரியே ஸ்தம்பித்து போயிட்டது... ஆனால் இதெல்லாம் ஏதோ பொது மக்களே தானாக கொடுத்த ஆதரவு இல்லை... இராமதாசின் ''தொண்டர் அடிபோடிகளின்'' அடாவடித்தனத்திற்கும், ரவுடித்தனத்திற்கும் பயந்து தான் இப்படி செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்...
           இதுல இன்னொரு உண்மையும் இருக்கிறது.... இந்த அளவுக்கு ஒரு பந்த் வெற்றிபெற்றிருக்கிறது என்றால், அதற்கு ஆட்சியாளர்களின் ஆதரவில்லாமல் வெற்றி பெறாது என்பதையும் மக்கள் தெரிந்து தான் வைத்திருக்கிறார்கள்.  இந்த முழு வெற்றிக்கும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காட்டிய ''ஜாதிய பாசம்'' தான் காரணம் என்பதையும் மக்கள் புரிந்து தான் வைத்திருக்கிறார்கள்...

சனி, 9 பிப்ரவரி, 2013

''சாமிகள்'' மோதல் - தள்ளாடும் புதுச்சேரி...!


                இதை ரங்கசாமியும் நாராயணசாமியும் அவசியம் படிக்கவேண்டும்...!         
            
            புதுச்சேரியில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் என். ரங்கசாமி எப்போதுமே வெறுங்கையில் முழம் போடுபவர். இவர் மாநில மக்களை கவர்ந்திழுப்பதற்காக நிதியே இல்லாமல் பல திட்டங்களை அறிவிப்பார். அத்திட்டங்களுக்கென்று தனி நிதி ஒதுக்கீடு என்பதெல்லாம் இருக்காது. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார். அதற்காக மத்திய அரசிடமும் யாசிக்கமாட்டார். புதுச்சேரி என்பது இந்தியாவின் ஒரு அங்கம். மத்திய அரசின் தயவில்லாமல் மாநில நிர்வாகம் இயங்காது என்பதையும் யோசிக்கமாட்டார். இப்படி தான் கடந்த காலங்களில் சுனாமி நிதி, தலித் மக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட சிறப்புக் கூறு நிதி, பாதாள சாக்கடைப் போடுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி என பல்வேறு நிதிகளில் கையை வைத்து விடுவார். மக்களும் திருப்தியடைந்துவிடுவார்கள். இது என்ன அக்ஷய பாத்திரமா அள்ள அள்ள  வளர்வதற்கு...? இப்போது கஜானவில் பணம் இல்லை. ஒரு பக்கம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே அரசிடம் பணமில்லை. காவல் துறையினற்கு பதிமூன்று மாதங்களுக்கு  கொடுக்கவேண்டிய சம்பளத்தில் ஒரு மாத சம்பளத்தை வெட்டியிருக்கிறார். பாவம் போராடி பெற்றுத்தருவதற்கு தொழிற்சங்கம் இல்லாத சீருடைப் பணியாளர்கள் என்ன செய்வார்கள்...? வெறுமனே முணுமுணுத்துக்கொண்டிருக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு சம்பளமோ, அவர்கள் சேமித்து வைத்திருக்கக் கூடிய பி. எப். என்று சொல்லக்கூடிய வருங்கால வைப்பு நிதியிலிருந்து  எடுத்து அவர்களுக்கே சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. நாய் வாலையே வெட்டி நாய்க்கு சூப் வெச்சிக் கொடுக்கிற கதையா போச்சு.  இதனால் என்ன ஆச்சுன்னா...? அரசு ஊழியர்கள் தங்களது குடும்பத்தேவைக்காக தாங்கள் சேர்த்து வைத்த பி. எப் பணத்தை  திரும்ப பெறுவதற்கோ அல்லது அதில் கடன் பெறுவதற்கோ அதிகாரிகளிடம் விண்ணப்பம் அளித்தால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கே திரும்ப கொடுக்கப்படுகிறது என்று இன்னொரு பக்கம் அரசு ஊழியர்கள் முணுமுணுக்கிறார்கள்.
            இங்கே தான் கொடுமை தலைவிரித்தாடுதுன்னு கோயிலுக்குப் போனா அங்க ஒரு கொடுமை ஆடுச்சாம்... அது போல, கூட்டுறவு மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு பல மாதங்களாகவே ஊதியம் வழங்கப்படாமல், அவர்கள் அரசுக்கு இலவசமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். புதிதாக யு. டி. சி., எல். டி. சி., ஆசிரியர்கள் போன்ற பணிகளுக்கு படித்த இளைஞர்கள் போட்டித்தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்னமும் பணி ஆணை கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறார்கள். வசதியற்ற மக்களுக்கு வீடு கட்ட மானியம் மற்றும் தொழில்முறைக் கல்விப்பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கொடுக்கப்படும் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.  இப்படியாக புதுச்சேரி மாநிலத்தின் நிதி நிலைமை என்பது மிகவும் மோசமடைந்து, அரசே தள்ளாடிக்கொண்டிருப்பதற்கு மிக முக்கிய காரணம், கடந்த 12 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை சார்ந்த என். ரங்கசாமியும், வி. வைத்தியலிங்கமும் மாறி மாறி ஆட்சி செய்ததில் நிர்வாக கோளாறும், நிர்வாக சீர்கேடும் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதுமட்டுமல்லாமல்  காங்கிரஸ் கட்சியின் நிர்வாக திறமையின்மையும், ஊழல் முறைகேடுகளும் தான் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.
               பதவி மற்றும் அதிகாரத்தில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சி, கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே இரண்டாக உடைந்தது. ரங்கசாமி தலைமையில் என். ஆர். காங்கிரஸ் கட்சி என்று துவக்கி தேர்தலில் போட்டியிட்ட போது ரங்கசாமி இலவசங்களை அள்ளி வீசுவார் என்ற எதிர்பார்ப்பில் மக்களும் ரங்கசாமிக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச் செய்து ஆட்சியில் அமரச் செய்தாலும், இங்கு நடப்பது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியே என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ரங்கசாமிக்கென்று தனி வழியோ அல்லது தனிக் கொள்கையோ கிடையாது. ரங்கசாமிக்கும் நாராயணசாமிக்கும் தான் பிரச்சனையே தவிர ரங்கசாமிக்கும் சோனியாவுக்கும் அல்ல. காங்கிரஸ் கட்சித் தலைமையலான மத்திய அரசை அப்படியே பின்பற்றக்கூடியவர் தான் இந்த ரங்கசாமி. மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை ஒருபோதும் ரங்கசாமி எதிர்த்ததே கிடையாது. எனவே ரங்கசாமி செய்யும் ஆட்சி என்பது காங்கிரஸ் கட்சி ஆட்சி தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
              ரங்கசாமிக்கும் நாராயணசாமிக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார போட்டியில் இருவரும் திரைமறைவில் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதும், வளர்ச்சியை முடக்குவதுமான வேலைகளில் ஈடுபடுவதும் மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய நெருக்கடிக்கு மிக முக்கிய காரணம் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். மத்திய அரசில் இடம்பெற்றிருக்கும் நாராயணசாமி மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வேண்டிய நிதியை பெற்றுத்தந்திருக்க முடியும். புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு கொடுக்கவேண்டிய வட்டித் தொகையை நாராயணசாமி நினைத்திருந்தால் தள்ளுபடி செய்திருக்கலாம். ஆனால் ரங்கசாமியின் மீதான பகையுணர்வின் காரணமாக நாராயணசாமி இவைகளையெல்லாம் வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார் என்பது தான் உண்மை.
           இதுமட்டுமல்ல... கடந்த வைத்திலிங்கம் ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் தன் சொந்த வீட்டிற்கே அரசிடம் வாடகை பெற்றதும், அரசு பணத்தில் தேநீர் மற்றும் உணவுக்கு செய்த செலவு, விமான பயணச்செலவு என மக்கள் பணம் வீணடிக்கப்பட்டதும்,  வைத்திலிங்கமானாலும், ரங்கசாமியானாலும் வேண்டியவர்களுக்கு கூட்டுறவு அமைப்புகளிலும், தன்னாட்சி அமைப்புகளிலும் முறைகேடான வகையில் அதிகமான எண்ணிக்கையில் ஆட்களை பணியில் அமர்த்தப்பட்டதும் இவர்களின் நிர்வாக சீர்கேடுகளுக்கு உதாரணமாக சொல்லலாம். அதுமட்டுமல்ல... தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமி தன்னையே சுற்றிவரும் தன் கூட்டாளிகளை திருப்தி செய்வதற்காக செயல்படாமல் இருந்த 23 வாரியங்களை தூசு தட்டி அதற்கு தன் கூட்டாளிகளை வாரியத்தலைவர்களாக நியமித்தது என்பது இப்படிப்பட்ட நெருக்கடி நேரத்தில் செய்யப்பட்ட முட்டாள் தனம் என்பதையும் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். இவர்களுக்கே மாதந்தோறும் கோடிக்கணக்கில் நிதித் தேவைப்படுகிறது. இவர்களின் மாத சம்பளம் ஒருவருக்கே ரூ. 60,000/- இவர்கள் அனைவருக்கும் அரசு செலவில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள கார் வாங்கித்தரப்பட்டுள்ளது. ஒரு வாரியத் தலைவர் தனக்கு 20 இலட்சம் மதிப்புள்ள கார் தான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கியிருக்கிறார். இந்த கார்களுக்கு ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு மாதசம்பளம், காருக்கு பெட்ரோல் செலவு, வாரியத் தலைவரின் அலுவலக செலவு மற்றும் ''இதர'' செலவுகள என ஒரு மாதத்திற்கே கோடிக்கணக்கில் செலவாகின்றது. இப்படிப்பட்ட நெருக்கடி நேரத்தில் இதுபோன்ற வீண் செலவுகளை தவிர்த்திருக்கவேண்டும்.
              சரி... இப்படியெல்லாம் புலம்புவதால் நமக்கு தீர்வுகிடைத்து விடாது.
நாம் செய்யவேண்டியது என்ன..? சிந்திக்க வேண்டும். அரசும் மக்களும் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

1. புதுச்சேரி சட்டமன்றம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மத்திய அரசு புதுச்சேரிக்கு கட்டாயமாக ''மாநில அந்தஸ்து'' வழங்க வேண்டும்.

2. அப்படி மாநில அந்தஸ்து கிடைக்கப்பெற்றால், மத்திய நிதிக் கமிஷனின் கடைக்கண் பார்வை புதுவை மாநிலத்தின் மீது விழும். அப்போது தான் புதுச்சேரி மாநிலம் மூலமாக மத்திய அரசிற்கு கிடைக்கும் வருமான வரி போன்ற வருமானத்திலிருந்து மாநிலத்திற்கு கொடுக்கப்படவேண்டிய பங்கு என்பது கிடைக்கும். தற்போது புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் நிதிக்கமிஷன் கொடுக்கவேண்டிய நிதி புதுவைக்கு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.

3. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் மத்திய நிதிக் கமிஷனின் நிதி புதுச்சேரிக்கு கிடைக்கும். அப்படி நிதி கிடைக்கும் பட்சத்தில் மாநிலத்தில் அந்த நிதியை நிர்வகிக்க கண்டிப்பாக மாநில அளவிலான நிதிக் கமிஷன் ஆரம்பிக்கவேண்டிவரும். அப்படி மாநில அளவிலான நிதிக் கமிஷன் ஆரம்பிக்கும் பட்சத்தில் மாநிலத்தின் நிதி நிலைமை சீர்படும் என்பது மட்டுமல்ல. அதன் மூலம் தேவையில்லாத வாரியத் தலைவர்கள் நியமனங்கள், தேவையற்ற பணி நியமனங்கள், அதன் மூலம் ஏற்படும் அனாவசிய செலவீனங்கள், ஊழல் முறைகேடுகள்,
வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாகப் பயன்படுத்துதல் போன்றவை  தவிர்க்கப்படும். தான்தோன்றித்தனமான செலவீனங்கள் ஒழிக்கப்பட்டு நிதி நிலைமை சீர்ப்படும் என்பதை மக்கள் உணரவேண்டும்.

4. ரங்கசாமியும், நாராயணசாமியும் அதிகாரப்போட்டியை கைவிட்டு -  மோதல் போக்கை கைவிட்டு மாநில வளர்ச்சியில் அக்கறை காட்டவேண்டும்.

5. மாநில அந்தஸ்தும், நிதிக் கமிஷனும் தான் ஒளிமயமான புதுவைக்கு இன்றைய தேவையாகும்.
 

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

புதுவை காமராசருக்கு பொறந்தநாளு பாருங்கோ...!

இப்படி இருந்தவரைத் தான்....
இப்படி ஆக்கிப்புட்டாங்க....
            ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் மாதம் நெருங்கும் போது புதுவையே  விழாக்கோலத்துல  தான் இருக்கும். எங்க புதுச்சேரியில புதுவை காமராசரு... புதுவை காமராசருன்னு ஒருத்தரு இருக்காருங்க. சின்னகாமராசருன்னுக் கூட தன்னைத் தானே கூப்பிட்டுக்கு திரிவாரு... ஆனா அவரு அப்படி கூப்பிட்டுகிறதுல  தப்பு இல்லைங்க.... ஏன்னா.... தமிழ்நாடு காமராசரு மாதியே டிரஸ் போட்டுக்குவாரு...  அவர மாதிரியே இவரும் கல்யாணமும் பண்ணிக்கலீங்க....  அந்த பெரிய காமராசரு இந்திரா காந்தியோடு சண்டைப்போட்டுகினு அன்றைய காங்கிரச விட்டு வெளியேறினாரு.... இந்த காமராசரு அவங்க மருமக சோனியா காந்தியோடு சண்டைப்போட்டுகினு இன்றைய காங்கிரஸ் கட்சிய விட்டுட்டு வெளியேறிட்டாரு.... இப்படியே தமிழ்நாட்டு காமராசருக்கும் புதுவை காமராசருக்கும் நெறைய ஒத்துமையா சொல்லலாமுங்க... அம்புட்டு இருக்குமுங்க...  
போதும்டா சாமீ....
          இந்த புதுவை காமராசருக்கு தான் ஆகஸ்ட் நாலாம் தேதி பொறந்தநாளாம்...  ஊரே நாரிப்போச்சீங்க... அப்பப்பா...ஊரு முழுதும் ஏகப்பட்ட டிஜிட்டல் பேனருங்க... புதுவை காமராசரின்  ஒரிஜினல்  கெட்டப்ப மாத்தி   விதவிதமான கெட்டப்புல  போட்டு அசத்தியிருப்பாங்க.... பாக்கிறவங்க கண்ணெல்லாம் கூசி ''மெட்ராஸ் ஐ''யே  வந்துடும்முன்னா பாத்துக்குங்க.... அதை பாத்தா aஅழுவுற கொழந்தைங்க கூட அழுகையை நிறுத்திடுமுங்க.... அந்த படங்களை எல்லாம் இந்த சின்னகாமராசரு நடுநிசிக்குப்  பிறகு ரசியோ ரசியின்னு  ரசிப்பாருங்கலாம் பேயி மாதிரி... 
இது ரொம்ப ஓவர்...!
           ஆனா அவர் மீதுள்ள கோபத்தை தான் மக்கள் இப்படி எல்லாம் போட்டு அவர அசிங்கப்படுத்தராங்க என்பதை பாவம் புதுவை காமராசரூ  புரிஞ்சிக்கவே இல்லைங்க. இருந்தாலும் நாங்கல்லாம் ரொம்ப பொறுமைசாலி தாங்க... இது மாதிரி எவ்வளவு டிஜிட்டல் பேனர் அடிச்சாலும் தாங்குரோமில்ல...? 
என்ன கொடுமைடா சாமீ.....
                                           

செவ்வாய், 11 அக்டோபர், 2011

புதுச்சேரி மந்திரியை காணவில்லை...!

''அய்யா... எங்க ஊரு மந்திரிய காணளிங்கய்யா...''
''யோவ்... இது போஸ்ட் ஆபிஸ்யா.. போலீஸ் ஸ்டேஷன்ல போய் 
   சொல்லுயா...''
'' ஓ... சாரி...சாரி... சந்தோசத்துல எங்க சொல்லுறதுன்னே     
    மறந்துபோச்சிங்கைய்யா...''
             இப்படித் தான் பாண்டிச்சேரியில் இருக்கும்  காங்கிரஸ் கட்சிக்காரங்களும் அதிமுக கட்சிக்காரங்களும் கடந்த பத்து நாட்களாக ரொம்ப சந்தோசத்துல இருக்காங்க...
             ஏன்னா... புதுவை காமராசர் ரங்கசாமி எதுல மாட்டுவார்னு எதிர்பாத்துகிட்டே இருந்தாங்களா... எலிப்பொறியில தானே போய் மாட்டிகிட்ட
பெருச்சாலி மாதிரி எங்க அண்ண கல்யாணசுந்தரம் வகையா மாட்டிக்கிட்டாருங்க.. 
            அவரு ஒன்னும் இந்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன் வெல்த் விளையாட்டு ஊழல்... இப்படி எதிலும் மாட்டலீங்க .. பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதறது தப்புங்களா...பத்தாம் வகுப்பு தனித் தேர்வு பத்து நாளுக்கு முன்னாடி நடந்துச்சிங்க.. அதுல அறிவியல்.. சமூக அறிவியல் .. இந்த ரெண்டேரெண்டு பாடத்தை தாங்க அவர் எழுத இருந்தாரு... இன்னா ஒன்னு.. அத இவரு எழுதலைங்க.. வேற ஒரு பையன் இவருக்காக எழுதனாங்க...அதுவும் எதுக்குன்னா.. இவரு கல்வி அமைச்சருங்களா... ரொம்போ பிசீங்களா... அதனால இவரு போய் தேர்வு எழுதமுடியளைங்க... ஒரு கல்வி அமைச்சரு இதைக்கூட செய்யக்கூடாதுங்களா... இதப்போய் தப்புன்னு சொல்றாங்க படுபாவிப் பசங்க...
             எங்க அண்ணன் எப்பவோ பத்து வருஷத்துக்கு முன்னாடி பத்தாம் வகுப்பு எழுதுனாருங்க.. ஆனா அதுல ரெண்டு பாடத்துல பெயில் ஆயிட்டாருங்க... அதுக்காக அவர முட்டாள்ன்னு  நெனச்சிடாதீங்க.. ரொம்ப பெரிய புத்திசாலி தானுங்க... ரொம்ப நல்லா படிச்சவருங்க...
              ஆனா அவரு அம்புட்டு படிப்பு படிக்கலனாலும் தன்னுடைய திறமையினாலும், புத்திசாலித்தனத்தினாலும் தாங்க அவரு ஒரு தொழிலதிபரா உயர்ந்தாரு.... அப்படி என்ன தொழில செயதாருன்னு நீங்க கேட்கறது என் காதுல விழுதுங்க... சொல்லுறேன் எழுதிகோங்க..
            முதல்ல அவரு செய்தது ''ரௌடி தொழில்'' தானுங்க.. அதுக்கு இவர மாதிரியே இருக்கிற புத்திசாலிப் பசங்கள செத்து வெச்சிக்கிடாருங்க... அமோகமா தொழில் நடந்ததும்...அடுத்து ''கட்டப்பஞ்சாயத்து'' தொழில்ல ஈடுபட ஆரம்பித்தாருங்க... அதிலேயும் நல்ல வருமானங்க.. 
               இப்படி நல்ல வளர்ச்சி ஆனதும், மது பாட்டில் கடத்தல், வீடு - நிலம் அபகரிப்பு... இப்படியெல்லாம் செய்து படிப்படியா உயந்துகிட்டே போனாருங்க... அப்புறம்.... தன் கூட இருக்கிற ரௌடிங்க  கூட்டத்துக்கு ''மனித உரிமைகள்  கழகம்'' - ன்னு பேரை வெச்சி ''அதிகாரப்பூர்வமா'' ரௌடி தொழில நடத்தினாருங்க...  . பாரதீய ஜனதா கட்சியில சேர்ந்து தேர்தல வேற நின்னாருங்க எங்க அண்ணன். ஆனா ஜெயிக்கலிங்க..
               அதுக்கப்புறமா.. போலீஸ்காரங்க கூட நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அதனால போலீஸ்காரங்கள கையில போட்டுக்கிட்டு பொண்ணுங்கள வெச்சி ''பாலியியல் தொழில்'' செய்தார்ன்னா  பாத்துக்கோங்களேன். அவ்வளவு நல்லவருங்க எங்க அண்ணன்... இப்படி தான், அவரு ஒரு பெரிய ''தொழிலதிபராக''  வளர்ந்து  பல்வேறு ''சமூக நலப்பணி''களையும்    செய்துக்கிட்டு வர்ராருங்க.... ''மக்கள் சேவகர்'' ன்னு  பட்டத்தைக்கூட அவரா தான் வெச்சிக்கிடாருங்க.....
               இடையல சட்டமன்றத் தேர்தல் வந்ததா.. ஏற்கனவே காலாப்பட்டு தொகுதியில அண்ணனோட ''தொழில்'' ரொம்ப விஸ்தாரமா.. லாபகரமா நடக்குதுங்களா.... நல்ல பிரபலமான பிரமுகரா ஆயிட்டாருங்க... ரங்கசாமி வேற புது கட்சி ஆரம்பிச்சாரா.. அண்ணனும் அப்படியே அதுல போய் ஒட்டிகிட்டாருங்க..  அதுக்கு தகுந்த மாதிரி வீணாப்போன காங்கிரஸ் கட்சி சார்புல ஷாஜகான்னு ஒரு மூதேவிய நிக்க வெச்சாங்கங்க... அவரு பேருல மக்களுக்கு பெரிய அதிருப்திங்க... ஏன்னா.. எலக்சனுக்கு எலக்சன் தானுங்க அவரு தொகுதி பக்கமே வருவாரு... அதனால தான்  காலாபேட்டு ஜெனங்களும் அந்த மூதேவிக்கு இந்த மூதேவி பரவா இல்லைன்னு.. இந்த மூதேவிய ஓட்டு   போட்டு   தேர்ந்தேடுத்தாங்கங்க..
              எப்பவுமே பாண்டிச்சேரி மக்கள் நல்லவங்களுக்கு ஓட்டு போடமாட்டங்கங்க.. மொள்ளமாரி, முடிச்சவிக்கி, சாராய வியாபாரி, ஆள் கடத்தறவன், வழிப்பறி செய்யறவன், கட்டப்பஞ்சாயத்து செய்யறவன்.... இப்படிப்பட்டவங்கள தான் இந்த மக்கள் தேர்ந்தேடுப்பாங்கங்க...
                 அப்படி ஜெயிச்சவரு தான் எங்க அண்ணன் கல்யாணசுந்தரம்... ரங்கசாமிக்கும் தனியா கட்சி நடத்துவதற்கு,  ஆட்சி நடத்துவதற்கும் இப்படிப்பட்ட ஆளு தான் தேவை.. ஒரு மந்திரி பதவியைக் கொடுத்து பக்கத்துலேயே வெச்சிகிட்டாருங்க...
                   ஒரு அமைச்சரு.. அதுவும் ஒரு கல்வி அமைச்சரு... பத்தாவது கூட தாண்டலன்னா கேவலம்ன்னு நெனச்சி தான் எங்க அண்ணன் ரொம்ப திட்டம் போட்டு இந்த திருவிளையாடல நடத்தினாருங்க... அண்ணன் வரலாற்றிலேயே ''தனக்காக'' தானே திட்டம் போட்டு செய்த ஆள்மாறாட்ட திருவிளையாடளுங்க இது... கடைசியில வகையா மாட்டிகிட்டாருங்க... விழுப்புரம் மாவட்ட கல்வி அதிகாரி ஆள்மாறாட்டம் நடந்திருப்பதை உறுதி செய்து காவல் துறையில் புகார் செய்த பிறகு, அண்ணன் பேர்ல எட்டு வழக்குகள் பதிவாகியிருக்குதுங்க.. தமிழ்நாடு போலீஸ் புதுவையில  எங்க அண்ணன் பாத்துபோகலாம்னு வந்து தேடுறாங்கன்னு  தெரிஞ்ச  பிறகு  தான்  எங்க அண்ணன காணலைங்க..
                   ரங்கசாமி வீட்டுலேயும், சட்டமன்றத்திலேயும் எங்க அண்ணன் ஒளிஞ்சிகிட்டிருந்தாருன்னு சொல்லுராங்கங்க... இதெல்லாம் நான் தான்  சொன்னேன்னு எங்க அண்ணன்கிட்ட சொல்லிடாதீங்க அய்யா...