வினோதினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வினோதினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 பிப்ரவரி, 2013

இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு மலிவு அரசியல் தேடும் சினிமா நடிகர் சீமான்...!
















 


           தமிழகத்தின் திடீரென முளைத்த அரசியல்வாதியான நடிகர் சீமான் தமிழ் இன உணர்வுகளை தூண்டிவிட்டு இளைஞர்களை தன்னோடு வைத்துக் கொண்டு அரசியல் பண்ணுபவர். இலங்கைத் தமிழர்களுக்காக அல்லது தூக்கு தண்டனைக் கைதிகளாக சிறையிலிருக்கும் ராஜீவ் கொலையாளிகளுக்காக தங்களையே தீயிட்டு மாய்த்துக் கொண்ட முத்துகுமரன் மற்றும் செங்கொடி போன்றவர்களின் உடலை வைத்து  அரசியல் வளர்ப்பவர்.  இறந்து போனவர்களின் உடலை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மலிவான அரசியல்வாதி தான் இந்த நடிகர் சீமான். எங்கே இழவு விழுந்தாலும் அங்கே ஆஜர் ஆகிவிடுவார்.
          இதே போன்று,  ஆசீட் வீச்சினால் சென்னையில் மூன்று மாத காலமாக சிகிச்சைப் பெற்று நேற்று மரணமடைந்த காரைக்கால் பெண் வினோதினி விஷயத்திலும் ஒரு மலிவான அரசியல் இலாபத்தை பார்த்திருக்கிறார். கடந்த மூன்று மாத காலமாக சென்னையில் தான் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வந்தது. மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்தார்கள். வந்து பார்த்திருப்பாரா...? விசாரித்திருப்பாரா...? அப்போதெல்லாம்  எங்கே போயிருந்தார் இந்த சீமான்...? வெளிநாட்டில் இருந்தாரா...?  இவர் நினைத்திருந்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு வெளிநாட்டிலேயே சிகிச்சை பெறுவதற்கு  உதவி செய்திருக்க முடியுமே. இந்த எழுச்சித் தமிழர் ஏன் செய்யவில்லை...?  இதையெல்லாம் செய்யாதவர் இறந்த பின் ஏன் இப்படி ''அலைந்து'' கொண்டு ஓடினார்...?  நேற்று  சீமானும், அவரது கூட்டாளிகளும் வினோதினியின் உடலை கைப்பற்றிக்கொண்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். மகளை இழந்த துயரத்தில் இருந்த வினோதினியின் பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இருந்த உடலை இவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டனர் என்பதை ஊடங்களை பார்ப்பவர்களுக்கு புரிந்திருக்கும்.
         அதுமட்டுமல்லாது கோயம்பேட்டில் இவர்கள்  ''வழக்கமாக'' கூடும் பகுதியில் வினோதினியின் உடலை  அஞ்சலிக்கு  வைத்திருந்தார்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால், எப்படியெல்லாம் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை இந்த சமூகம் பார்க்கவேண்டுமாம். வினோதினியின் உடல் என்ன காட்சிப் பொருளா...? உண்மையிலேயே ஒரு பெண்ணிற்கு இப்படிப்பட்ட கொடுமை நிகழ்ந்திருக்கிறது என்று கொதித்திருந்தால் மூன்று மாதங்களுக்கு முன் அந்த சம்பவம் நடந்த உடனேயே வீதியில் இறங்கி போராடி இருக்கவேண்டாமா..? அப்படி செய்திருந்தால் இந்த சமூகத்திற்கு மட்டுமல்ல, கண்ணை மூடிக்கொண்டிருந்த இந்த ஆட்சியாளர்களின் கண்ணையும் திறந்திருக்கலாம். டெல்லி பெண்ணின் கொடுமையை உலகமே அறிந்தது போல் செய்திருக்கலாமே. அந்த பெண்ணிற்கு மத்திய அரசாங்கம் வெளிநாட்டில் மருத்துவம் பார்த்தது போல் இந்த பெண்ணிற்கும் செய்ய வாய்ப்பை உண்டாக்கி இருக்கலாமே. ஆனால் அதையெல்லாம் செய்யாமல், வினோதினியின் இறப்பினால் ஏற்பட்ட மக்களின் அனுதாபத்தை தன்  பக்கம் திருப்பி அதை அரசியலாக்க சீமான் துடித்தது என்பது ஒரு மலிவான - தரமற்ற அரசியல் ஆதாயமாகும்.

வினோதினியின் உடல் புதுவை வந்தது - நெஞ்சை பிளந்தது...!

         இன்று மாலை நாங்கள் புதுச்சேரி ராஜீவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனை அருகில் மறைந்த வினோதினியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கனத்த இதயத்துடன் காத்திருந்தோம்.
        இரவு 7.15 மணிக்கு அவரது உடலை சுமந்துகொண்டு இங்கே வந்து சேர்ந்தது. கொடூரனால் சிதைக்கப்பட்ட வினோதினியின் உடலுக்கு அஞ்சலை செலுத்துவதற்கும், பார்ப்பதற்கும் கூட்டம் ஆண்களும், பெண்களும், இளைஞர்களுமாய் கூடிவிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள்  தோழர்கள் வெ. பெருமாள், தா. முருகன், ரங்கசாமியின் அமைச்சர்கள் மூன்று பேர், முன்னாள் முதலமைச்சர் வெ. வைத்திலிங்கம் உட்பட அரசியல் கட்சித்தலைவர்களும், தொழிற்சங்கத் தலைவர்களும், மாதர், வாலிபர் மற்றும் மாணவர்கள் சங்கத்தைச் சார்ந்தவர்களும் ஏராளமான பொதுமக்களும் கூடியிருந்து மறைந்த வினோதினிக்கு அஞ்சலி செலுத்தினர்.
        நானும் பார்த்தேன் கருகிய அந்த மலரை. நேற்று காலை வினோதினி இறந்துவிட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்ட பிறகு, சென்னையில் கடந்த மூன்று மாதமாகவே மருத்துவமனையில் வினோதினிக்கு துணையாக இருந்து வந்த அவரது தாய் மாமா ரமேஷ் அவர்களிடம் பேசியபோது, ''எல்லாம் முடிஞ்சி போச்சி சார்'' என்று அழுது கொண்டே சொன்ன அந்த வார்த்தையும், பக்கத்தில் வினோதினியின் அப்பா - அம்மா இருவரின் அழுகுரலும் இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவே இல்லை. இரண்டு நாட்களாக என் மனம் கனத்து கிடந்த இந்த சூழ்நிலையில், புதுவை வந்த அவரது உடலை பார்க்கும் போது  அதிர்ந்து போனேன். படத்தில் இருக்கும் அந்த முகமா இப்படி சிதைந்து கிடப்பது. நெஞ்சம் எரிமலையாய் வெடித்தது. துக்கம் அடைத்தது. கோபம் கொப்பளித்தது. யார் மீது இந்த சமூகத்தின் மீதா...? அல்லது பெண்களை போற்றாத இளைஞர்கள்   மீதா...? இனியாவது இந்த சமூகம் பாடம் கற்றுக்கொள்ளட்டும். ஆண்  பிள்ளைகளுக்கு பெண்களைப் போற்ற - உயர்வு செய்ய கற்றுத் தரட்டும். பெண்கள் மீதான வன்கொடுமைக்கு வினோதினியே கடைசி பலியாக இருக்கட்டும். 























              

தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சி....!

         தொன்னூறு நாட்கள் நீடித்த ஜீவமரணப் போராட்டம் முடிந்துபோய்விட்டது. ஆணாதிக்க வெறியை அனுமதித்துக்கொண்டே, பாதிக்கப் படும் பெண்களின் அவலக்குரலுக்காக கண்ணீரும் வடித்துக்கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தின் கன்னங்களில் ஓங்கி அறைந்திருக்கிறது, நமது இளம் சகோதரி வினோதினியின் மரணம். இரு மனமும் இணைந்தால்தான் காதல் என்ற மகத்துவத்தை உணராமல், ஒருதலைக் காதல் எனும் வெறிபிடித்து, குரூரமாகச் சிந்தித்து விட்ட கயவன் வீசிய திராவகம், அந்த 23 வயதுப் பொறியியல் பட்டதாரியின் உடலைப் பொசுக்கி, உயிரையும் பறித்துவிட்டது.நாள்தோறும் பெண்களும், இளம் பெண்களும் பெண் குழந்தைகளும் எதிர்கொள்ளும் பாலியல் கொடூரங்கள் தீவிரமாகிக்கொண்டேயிருக்க, தில்லி மாணவியின் பாலியல் வன்கொடுயை ஏற்படுத்திய அதிர்வுகள், ஊடகங்களின் இதர பல பரபரப்புகளால் மெல்ல அடங்கத் துவங்கி யிருந்த நிலையில், வினோதினியின் மரணம், இந்தியாவின் மனசாட்சியை மீண்டும் தட்டி யெழுப்புகிறது.
            திராவகம் வீச்சு கொடூரக் குற்றத்திற்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழு கூறியிருப்பது எவ்வித மாற்றமும் இல்லாமல் அமலாக வேண்டும் என தேசம் எதிர்பார்க்கிறது. ஆனால், கடும் தண்டனை தருவதுபோலக் கண்கட்டி வித்தை செய்கிற மன்மோகன் அரசின் அவசரச் சட்டம், இதுபோன்ற வழக்குகளில் தமது கடமையைப் புறந்தள்ளுகிற காவல் துறையையும், அதிகாரிகளையும் தப்பிக்கவிடுகிறது. தில்லி மாணவி குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தபோது, பொறுப்பைத் தட்டிக்கழித்த காவல்துறையினரைப் போலவே, காரைக்காலிலும் வினோதினி மீதான திராவக வீச்சையும் காவல்துறையினர் அலட்சியம் செய்தார்கள். போராட்டங்கள் தீவிரமடைந்த பின்னரே ஓரளவு செயல்பட்டார்கள். எனினும், இப்போதும்கூட மெத்தனம் தொடர்கிறது. இவர்களை யார் கேட்பது? எந்தச் சட்டம் பொறுப்பு? திராவக வீச்சு தொடராமல் இருக்க, அரசிடமும், காவல்துறையிடமும் திட்டங்கள் என்ன? பொதுவெளியில் கொடிய திராவகம் விற்கப்படுவது குறித்து கட்டுப்பாடு என்ன? வழிதவறி, வெறிகொண்டு, மூர்க்கத்தனமாக மாறும் சூழலில் இருந்து இளைஞர்களை மீட்க என்ன திட்டம்? ஆணும், பெண்ணும் சமம்; காதல் என்று வந்தால் பெண்ணின் சம்மதம் அவசியம் என்ற அடிப்படையான விஷயங்களைக் கூட ஆண்பிள்ளைகளுக்கு எப்போது சொல்லித் தரப்போகிறீர்கள்? என்று ஓராயிரம் கேள்வி களை எழுப்புகிறாள் சகோதரி வினோதினி.
               தமிழ்ச்சமூகத்தின் மனசாட்சியாக கேள்வி எழுப்புகிற வினோதினியின் வழக்கில் உரிய நீதி கிடைக்க வேண்டும்; தன் மகளின் கல்வியை மட்டுமே நம்பியிருந்த வினோதினியின் பெற்றோரில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும்; திராவக வீச்சுக்கு எதிராக உரிய கடுமையான சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்; பெண்கள் மீதான வன்குற்றங்களைத் தடுக்கும் விதமாக நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழுவின் பரிந்துரைகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கைகள் மீண்டும் மீண்டும் எழுகின்றன. புதுவை அரசும் மத்திய அரசும் இவற்றை உடனடியாக நிறை வேற்றவேண்டும்.
நன்றி :  

இளைஞர்களே தையலை உயர்வு செய்யுங்கள்...!

எழுதுகிறேன்....

திங்கள், 17 டிசம்பர், 2012

கொடூரன் ஒருவனால் தன் கண்களையும் கனவுகளையும் தொலைத்துவிட்ட வினோதினிக்கு உதவி செய்யுங்கள்...!

           ஒரே நாளில் கொடூரன் ஒருவனால் தன் கண்களையும் கனவுகளையும் தொலைத்துவிட்ட வினோதினிக்கு 16-12-2012 ஞாயிறு அன்று 23-வது  பிறந்த நாள்.
          படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த பின்னர் வரவிருந்த இந்த பிறந்த நாளை தன் தோழிகளுடன் ஊருக்கு வந்து கொண்டாடுவேன் என்று தன் பெற்றோரிடம் கூறியிருந்த வினோதினிக்கு
அன்று தன்னுடைய பிறந்த நாள் என்பது தெரியாது.  அவரது பெற்றோர்களுக்கும் சொல்லாமல் மறைக்க வேண்டிய பரிதாப நிலை. ''இன்னைக்கு பிறந்த நாள்னு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா....'' என்று சொல்லும்போதே அவரது தந்தைக்கு கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது. இத்தனை ஆண்டுகளாய் பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்கள் கூட வாய்விட்டு சொல்லமுடியாத சூழ்நிலை. 
      முகம் - பார்வை இரண்டையும் இழந்து பகலா...இரவா.. என்ன தேதி.. என்ன நேரம்.. எதுவும் தெரியாமல் கருகிய மலராய் படுக்கையில் கிடக்கிறார் வினோதினி.
         காதலிக்க மறுத்த காரணத்தால் ஒரே நாளில் தன் கனவுகளையெல்லாம் தொலைத்து நிற்கும் இந்த பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள். வசதியில்லாத வினோதினியின் குடும்பத்திற்கு உங்கள் உதவிக்கரங்களை நீட்டுங்கள். 

JAYAPALAN (வினோதினியின் தந்தை) 
603899558
INDIAN BANK
KILPAK BRANCH
IFCS CODE: IDIB000k037
contact : ramesh 9944161416


(அந்த பெண் மீது வீசிய ஆசிட் சிறிது அவன் மீதும் தெரித்ததால் சிறு காயத்துடன் கொடூரன் சுரேஷ்)