சுவிஸ் வங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவிஸ் வங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 செப்டம்பர், 2014

மோடி சொன்ன 100 நாளு ஆயிபோச்சே... என்னான்னு கேட்டியா...?























மோடிக்கு தான்னு ஓட்டுப்போட்ட
32 சதவீத மக்கா..!
ஓட்டுப்போட்டு பாத்தீயே...
உட்காரவெச்சி பாத்தீயே...
இரயில் கட்டணம் ஏத்திப்புட்டான்
ஏன்னு கேட்டியா...?
100 நாள்ல வெலைவாசியை
குறைப்போம்னாங்களே...
வெலைவாசியெல்லாம் ஏறிப்போச்சே
என்னான்னு கேட்டியா...?
100 நாள்ல கருப்புப் பணம்
சுவிஸ் பேங்க் பணத்தையெல்லாம்
இந்தியாவிற்கு இழுத்து
வருவோமுன்னு
ஓட்டு கேட்டுப் போனாங்களே...
நீ ஓட்டுப்போட்டுப் பாத்தியே...
உட்காரவெச்சி பாத்தியே...
இன்னும் ஏன் வரலைன்னு கேட்டியா...?
நீங்க ஓட்டுப் போட்ட
பிரதமரு...
நிமிட்டுக்கு நிமிட்டு
டிரெஸ்ஸ மாத்தி மாத்தி
போடுறாரே...
மாயவித்தை காட்டுறாரே...
உன் குழந்தைக்கொரு
சொக்கா கேட்க மறந்துட்டியே...
ஜப்பானுக்கு போனாரு
பிரதமரு...
தாளம் போட்டுக் காட்டுறாரு...
அமெரிக்காவுக்கு போறாரு...
விதவிதமா சட்டைப்போட்டு காட்டுவாரு...
அவருக்கு ஓட்டுப் போட்டுப் பாத்தியே..
அவரை உட்காரவெச்சி பாத்தியே...
இதெல்லாம் எதுக்குன்னு கேட்டியா...?
ஏன்னு கேட்டியா...?
மோடி வந்தவுடனேயே
உனக்கு கசப்பு மருந்து கொடுத்தாரே....
ஏன்னு கேட்டியா...?
என்னான்னு கேட்டியா...?
''அச்சே தின்'' என்று சொல்லி
100 நாளு ஆயாச்சே...
இவ்வளவும் நடக்குதே
நீ வேடிக்கை பாக்குற...
நமக்கென்னன்னு போகுற...
இப்பவாது உன் வாயை திறந்து
பேசுவதை செய்வீயா...?

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

ராஜீவ்காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு..!

                      இந்தியாவில் முக்கிய பொறுப்பிலிருக்கும் அரசியல்வாதிகளும், பெருமுதலாளிகளும் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை சுவிஸ் வங்கயில் கறுப்புப் பணமாக சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
              சுவிஸ் வங்கியில் இப்படி சேர்ந்த இந்திய பணம் மட்டுமே சுமார் 70,00,000 கோடிக்கும் மேல் இருக்குமென்று சொல்லப்படுகிறது. இதை அவர்கள் வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்ததல்ல. அத்தனையும் இந்திய மக்களின் பணம். அவ்வளவு தொகையும் நம் அரசின் கஜானாவிற்கு வந்தால்  போதும், பல ஆண்டுகளுக்கு இந்திய மக்களுக்கு வரியில்லா பட்ஜெட் போடமுடியுமென்று பொருளாதார வல்லுனர்கள் சொல்கிறார்கள். 
               அப்படியாக சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணமாக சேர்த்து வைத்திருப்போர் பட்டியலை வெளியிடுமாறு பாராளுமன்றத்தில்,   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் போராடியும் மத்திய அரசு வெளியிட மறுக்கிறது. அதுமட்டுமல்ல, சமீபத்தில் உச்சநீதிமன்றம் கூட, சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் பட்டியலை வெளியிடுமாறு    மத்திய அரசை அறியுறுத்தியும் பார்த்துவிட்டது. ஆனால் பட்டியலை வெளியிட மத்திய அரசு தயாரில்லை.
             ஆனால் 1991 - ஆம் ஆண்டிலேயே சுவிசர்லாந்து பத்திரிக்கையான Swiss Magazine Schweizer Illustriertein (November 1991)  வெளியிட்டுள்ள செய்தி கீழே உள்ளது பாருங்கள்..
               இந்த பத்திரிகை 1991 - லேயே 13,200 கோடி ரூபாய் அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி கணக்கில் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது.
  
        இவ்வளவு தகவல்கள் வெளியான பிறகும், ஆட்சியாளர்களிடமிருந்தோ அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைமையிடமிருந்தோ அல்லது ராஜிவ்காந்தி குடும்பத்தினரிடமிருந்தோ  எந்தவிதமான மறுப்பும் வரவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அப்படியென்றால் அவர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று மக்கள் எடுத்துக்கொள்ளலாமா..?
               இத்தனை பணத்தையும் இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்குமா...?  மக்கள் போராடாத வரையில் இது கனவிலும் நடக்காது.