| உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு |
| தமிழகத்தில் சமச்சீர் கல்விக்காகப் போராடி வருகிறவர்களுக்கு ஒரு முக்கிய வெற்றியாக, அதனை நடப்புக் கல்வியாண்டிலேயே செயல்படுத்தியாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை செவ்வாயன்று (ஆக.9) தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், பொதுப்பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவது உட்பட, சமச்சீர் கல்வி ஏற்பாடுகளை அடுத்த 10 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தவும் ஆணையிட்டது. நீதிபதிகள் ஜே.எம். பான்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுஹான் ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு க்குழு, தமிழகத்தில் முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி தரமற்றது, கடுமையான குறைபாடுகள் உள்ளது என்பதால் தான் அதை நிறுத்திவைப்பதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட் டது என்ற வாதத்தைத் தள்ளுபடி செய்தது. தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பி.பி. ராவ், என்.சி.இ.ஆர்.டி. வகுத்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப சமச்சீர்கல்வித் திட்டம் உருவாக்கப்படவில்லை என்று கூறினார். தமிழ்நாடு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, பெற்றோர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், என்.ஜி.ஆர். பிரசாத், விடுதலை ஆகியோர் சென்ற கல்வி ஆண்டிலேயே முதல் வகுப்புக்கும், ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி பாடங்கள் அறிமுகமாகிவிட்ட நிலையில், இந்த ஆண்டு அடுத்த வகுப்புகளுக்கு வந்துள்ள மாணவர்கள் பழைய பாடத்திட்ட அடிப்படையிலான புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பது அறிவியல்பூர்வமற்றது என்றும், கல்வி உரிமைச் சட்டத்திற்கு மாறானது என்றும் வாதிட்டனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 19 அன்று அளித்த தீர்ப்பில் அரசின் வாதத்தைத் தள்ளுபடி செய்து நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஆணையிட்டிருந்தது. அத்துடன் ஜூலை 22ம் தேதிக்குள் பொதுப் பாடப்புத்தகங்களை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டு மென்றும் பணித்திருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. முதலில் ஆகஸ்ட் 5ம் தேதிவரையிலும் பின்னர் 10ம் தேதி வரையிலும் பொதுப்பாடநூல் விநி யோகத்திற்கான கெடுவை உச்சநீதி மன்றம் நீட்டித்தது. செவ்வாயன்று (ஆக. 9) அளித்த தீர்ப்பில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 25 கூறுகளை ஆராய்ந்ததன் அடிப்படையில் இந்தத் தீர்ப்பை அளிப்பதாக உச்சநீதி மன்ற நீதிபதிகள் அறிவித்தனர். தமிழகப் பள்ளிகளில் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் மாணவர்கள் பயில்கிறார்கள். இவர்களில் 90 விழுக்காட்டினர் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 45,000 அரசுப் பள்ளிகளில் பயில்பவர்கள். 11 ஆயிரம் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும், 21 ஓரியண்டல் பள்ளிகளும், 50 ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளும் தனித்தனி வாரியங்களின் கீழ், தனித்தனி பாடத் திட்டங்களோடும், தேர்வுமுறைகளோடும் இயங்குகின்றன. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வாறு நான்குவிதமான பள்ளிக்கல்வி வாரியங்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம், நடைமுறையில் நான்கு வாரியங்களின் கீழும் உள்ள பள்ளிகளில் ஒரே சீரான பாட நூல்கள், தேர்வுமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு வழி திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள பொதுப்பாடப்புத்தகங்கள் வீணாகிவிடுமோ என்ற கவலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, தனது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தது. பாடநூல்களில் குறைகள் இருக்குமானால் அவற்றை மட்டும் நீக்கிவிட்டு மாணவர்களுக்கு பொதுப்பாடநூல்களில் உள்ள இதர பாடங்களை நடத்தலாம் என்று கல்வியாளர்களும், பல்வேறு அமைப்புகளும் எடுத்துக்கூறின. எனினும் அரசு அதனை ஏற்க வில்லை. இந்தப் பின்னணியில் உச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்பின்படி அரசு செயல்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா திங்களன்று (ஆக. 8) சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பல்வேறு பகுதியினரும் வரவேற்றுள் ளனர். அரசு சட்டமன்றத்தில் அறி வித்தபடி, தமிழகத்தில் சமச்சீர்கல் வியை நடப்புக் கல்வியாண்டிலேயே செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். முழுமையான சமச்சீர்கல் விக்கான இதர நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சமச்சீர்கல்வியை வலியுறுத்தி வந்துள்ளவர்கள் கோரியுள்ளனர். நன்றி : தீக்கதிர் |
சமச்சீர் கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமச்சீர் கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 10 ஆகஸ்ட், 2011
சமச்சீர் கல்விக்கு கிடைத்த வெற்றி
லேபிள்கள்:
சமச்சீர் கல்வி
வெள்ளி, 29 ஜூலை, 2011
கருணாநிதியின் மற்றுமொரு நாடகம் - வெட்கமாக இல்லை..?
தமிழக மாணவ - மாணவியர்களின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டு, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று சமச்சீர் பாடப்புத்தக விநியோகத்தை உடனே துவக்கிட வேண்டும் என்றும் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூலை 26 அன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துமாறு இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்திருந்தது. அந்த அறைகூவலை ஏற்று தமிழகம் முழுவதும் சென்ற ஜூலை 26 அன்று சென்னை துவங்கி கன்னியாகுமரி வரை பள்ளி - கல்லூரி மாணவர்கள் பெருமளவில் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.
இதைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாத திமுக தலைவர் கருணாநிதி இப்பிரச்சனையை அரசியலாக்கி தேர்தல் வியாபாரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில், சமச்சீர் கல்வியை பாதுகாக்க வரும் ஜூலை 29 - ஆம் தேதி திமுக மாணவரணி என்ற பெயரில், மாநிலம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும், பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக தான் இந்தப் போராட்டம் எனவும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆதரவு தரவேண்டும் எனவும் திமுக தலைவர் கருணாநிதி வழக்கமான உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி திமுக-வினர் இன்று வகுப்புப் புறக்கணிப்புக்கு அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் மாணவ - மாணவியர்களிடையே ஆதரவு கிடைக்கவில்லை. சென்னை, வேலூர், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மட்டும் ஒருசில மாணவர்களே பள்ளிகளை புறக்கணித்தனர். அதுவும் திமுக கட்சிக்காரர்களும் - குண்டர்களும் தங்களுக்கு வேண்டியப் பிள்ளைகளை தங்களுடன் சேர்த்துக்கொண்டு அரசுப் பள்ளிகளின் வாசல்களில் கோஷங்களை எழுப்பி இருக்கின்றனர்.
மாணவர்கள் மீது அக்கறையோடு போராட்டம் நடத்திய திமுக மாணவரணி என்று ஒன்று இதுவரை இருந்ததா..? அப்படி இருந்திருந்தால், இன்றுவரை எங்கே போனது..? அதுமட்டுமல்லாமல், திமுக மாணவரணி சமச்சீர் கல்விக்காக இதுவரை போராட்டம் நடத்தாதது ஏன்?
‘பல்வேறு அமைப்புகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவே இந்தப் போராட்டம்’ என்றால், அறிவிப்பு வெளியானவுடன், கலைஞர் தொலைக்காட்சியில், அது வரை காட்டப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு, ஏதோ மாணவர் திரள் தன்னெழுச்சியாய் போராட்டம் நடத்தியது போல் காட்டப்பட்டதே... அதற்கு என்ன பொருள்..?
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சமச்சீர் கல்வி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று திமுக கூறுகின்றது. இப்பிரச்சனையின் தொடக்கத்திலிருந்தே இந்திய மாணவர் சங்கத்திற்கு இக்கூற்றில் உடன்பாடில்லை. தனியார்மயத்திற்கு ஆதரவான நிலைபாடே இதற்குக் காரணம் என்பது தான் வெளிப்படையான உண்மை. பல தனியார் பள்ளி நிர்வாகங்களின் நிர்ப்பந்தமே இதற்கு காரணம் என்றும் இந்திய மாணவர் சங்கம் கருதுகிறது.
சமச்சீர்கல்வி அமலானால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதை தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதனால் பாகுபாடுகள் தொடர வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம்.
ஆட்சியிலே இருந்தபோது, தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களுக்கு ஆதரவான இதே நிலைப்பாட்டைத்தான் திமுகவும் எடுத்தது என்பதை தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது. இன்றைய சமச்சீர்கல்வி பிரச்சனைக ளுக்கு அடித்தளம் இட்டது திமுக ஆட்சி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமச்சீர்கல்வி அமலானால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதை தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதனால் பாகுபாடுகள் தொடர வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம்.
ஆட்சியிலே இருந்தபோது, தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களுக்கு ஆதரவான இதே நிலைப்பாட்டைத்தான் திமுகவும் எடுத்தது என்பதை தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது. இன்றைய சமச்சீர்கல்வி பிரச்சனைக ளுக்கு அடித்தளம் இட்டது திமுக ஆட்சி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது சமச்சீர் கல்விக்காக நாடகமாடும் திமுக தலைவர் கருணாநிதி தான் ஆட்சி செய்த காலத்தில், கடந்த 2009 - ஆம் ஆண்டு ஜூன் 5 - ஆம் தேதி இதே சமச்சீர் கல்விக்காக அமைதியான பேரணி நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் மீது தடியடி நடத்தி, கடுந்தாக்குதலுக்கு உள்ளாக்கி, பொய் வழக்கை போட்டதை இன்று வசதியாக மறந்திருப்பார். அதுமட்டுமல்லாமல், சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதி, ‘சமச்சீர் கல்விக்காக அவசரப்படக்கூடாது. அதனால், சிலர் பாதிக்கப்படுவார்கள். யாரும் பாதிக்காமல் அதை நிறைவேற்ற காலதாமதம் ஆகும்’ என்று நா கூசாமல் கூறினார் என்பதை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
இப்படியாக, தான் ஆட்சியிலிருந்த போது, கல்வி வியாபாரத்திற்கு சாமரம் வீசிவிட்டு, இப்போது, சமச்சீர் கல்வி கேட்டு போராட வாருங்கள் என அழைக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் நாடகத்தை தமிழக மாணவர்கள் நன்கு அறிவார்கள். 1967-இல் திமுக ஆட்சியமைக்க மாணவர்கள் போராட்டம் உதவியதைப்போல் இப்போதும் உதவும் என்று
கனவு காண்கிறார் போலும். மீண்டும் மீண்டும் தமிழக மாணவர்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.
லேபிள்கள்:
சமச்சீர் கல்வி,
திமுக
திங்கள், 18 ஜூலை, 2011
அடம் பிடிப்பது ஆட்சிக்கு அழகில்லை.. குழந்தைகளின் எதிர்காலத்தை சிதைத்துவிடாதீர்கள்..
தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டிலேயே சமச்சீர் கல்வித்திட்டமே தொடர வேண்டுமென்றும், 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் - பழைய பாடத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும், ஜூலை 22-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்க வேண்டுமென்றும், சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது வரவேற்கத்தக்கது. மேலும், குறைகளைக் களைய குழு அமைக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இப்படியாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள மேற்கண்ட தீர்ப்பினை தமிழக மக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சுவிட்டு வரவேற்கின்றனர்.
அதேசமயம் தீர்ப்பு குறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில் உச்சநீதின்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று அறிவித்திருப்பது என்பது துரதஷ்டவசமானது. கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் முடியப் போகிற நிலையில் மேலும் காலம் தாழ்த்துவது என்பது, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலையும், நடைமுறைச் சிரமத்தையும் ஏற்படுத்தும். குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். எனவே, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதைக் கைவிட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று சமச்சீர் கல்வித்திட்டத்தின் முக்கிய அம்சமான பொதுப்பாடத் திட்டத்தை இந்தக் கல்வியாண்டிலேயே உடனடியாக காலம் தாழ்த்தாமல் அமல்படுத்திட வேண்டுமென்பது தான் தமிழக மக்களின் - குறிப்பாக பெற்றோர்களின், ஆசிரியர்களின், மாணவர்களின் எதிர்பார்ப்புகளாகும்.
''உண்மையான'' கல்வியாளர்கள், சமூக அக்கறையுள்ள சான்றோர்கள் ஆலோசனைபடியும், வழிகாட்டுதல்படியும் நடத்தலே சிறந்த ஆட்சிக்கு சான்றாகும். அது தான் தமக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு செல்வி ஜெயலலிதா செய்யும் நன்றிக்கடனுமாகும். அதை விடுத்து, ''போலி'' கல்வியாளர்கள், கல்வி வியாபாரிகள் விருப்பப்படி தான்தோன்றித்தனமாக கல்வி முறையை சீர்குலைக்கச் செய்தால் இன்றைய இளையத்தலைமுறையினரின் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்.
லேபிள்கள்:
சமச்சீர் கல்வி
வியாழன், 14 ஜூலை, 2011
பள்ளி நாட்கள் வீணாகிறது..! குழந்தைகளை படிக்கவிடுங்கள்..!
| சமச்சீர் கல்வியின் முக்கியத்துவம் |
| -ஜே.கிருஷ்ணமூர்த்தி |
சமச்சீர் கல்வி என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறேன். நான்கு விதமான பாடத்திட்டங்களை ஒரே முறையில் மாற்றியதும் வரலாற்று சாதனைதான். இந்த சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளைக் களைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற் றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அது சமச்சீர் கல்வி அமலாக்கத்தை நிறுத்தி விட்டுச் செய்ய வேண்டும் என்ற அவசியத் துடன் தொடர்புடையது அல்ல. திட்டத்தை அமலாக்கிக்கொண்டே குறைகளைக் களை யலாம். அதுதான் மாணவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறை உள்ள செயலாக இருக்கும். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தமிழக பாடத்திட்டம், மெட்ரிக்குலேசன் பாடத்திட்டம், ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம் என்ற நான்கு முறைகள் மாற்றப்பட்டுள்ளது அனைத்து மாணவர்களுக்கும் நல்லது. இந்த நான்கு பிரிவுகளின் தேவை என்ன? தனியார் கல்வி நிறுவனங்கள் செழித்து வளரவும், பாடநூல் அச்சிடும் பல்வேறு வணிக புத்தக நிறுவனங்கள் கொள் ளை லாபம் அடிக்கவும்தான் பயன்பட்டது. மக்களிடம் உருவாக்கப்பட்ட ஆங்கில மோகத் திற்கு தீனிபோட இந்த மெட்ரிக் பள்ளிகள் உதவின. இதற்கு தரம் என்ற பெயரில் விளம்பரம் வேறு செய்யப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு தனியார் மற்றும் அரசுக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு சர்வே எடுப்பதற்காக ஒரு தேர்வு நடத்தப்பட்டது. அதாவது அவர்கள் நடத்தும் பாடத்திலிருந்து கேள்விகள் தயாரிக்கப்பட்டு இந்தத்தேர்வு நடந்தது. இந்தத் தேர்வு முடிவில் 60-70 சதவிகிதம் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மிகவும் மோசமாகத் தேர்வை எழுதியிருந்தனர். ஆனால் அதே அளவு அரசுக்கல்லூரி ஆசிரியர்கள் சிறப்பான முறையில் தேர்வை எழுதியிருந்தனர். இதிலிருந்து நீங்கள் எந்த முடிவுக்கு வருவீ ர்கள்? இந்த நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் 90 சதவீதம் பேர் அரசுப் பள்ளிகளிலும் தாய்மொழியிலும் படித்தவர்கள் தான். ஆக, தரம் என்பது எவ்வளவு அதிகமான அழுத்தமான பாடங்களை நடத்துவது என்பதில் இல்லை. எவ்வளவு தெளிவாக மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் என்பது தான். தரம் என்ற சொல்லைப் பயன்படுத்தி தங்கள் லாபவேட்டையைத் தொடரவே தனியார் கல்வி நிலையங்கள் திட்டமிடுகின்றன. நாம் அரசுப்பள்ளிகளின் பிரச்சனைகளைத் திறந்த மனதுடன் விவாதிக்கின்றோம். எனவேதான் தனியார் பள்ளிகள் திறமை என்ற வாதத்தால் இதனை திசைதிருப்பி மக்களை அழைக்கிறது. தனியார் பள்ளி களில் இருப்பதும் ஒருபக்க இயக்கம்தான். அது மதிப்பெண் சார்ந்த ஒரு பக்க இயக்கமாகும். அதாவது அங்கு தரமான கல்வி என் பது தேர்ச்சி சார்ந்த இயக்கமாக கட்டண மாக்கப்படுகிறது. அவர்களுக்கு அதுதான் முக்கியம். அங்கு இன்றைய நாட்டின் தேவை சார்ந்த சந்ததியை உருவாக்குவதில் அக்கறை இல்லை. சந்தைக்குத் தேவையான சந்ததியை உருவாக்குவது, அவர்களின் நோக்கமாக உள்ளது. அதுவும் 1990க்குப் பின் பன்னாட்டுச் சந்தையின் தேவையைக் கொண்டே சந்ததியை உருவாக்குகிறார்கள். ஆக, கடுமையான உழைக்கும் ஆசிரியர்கள், மாணவர்களின் முகம் கொண்டு அவர்களைப் புரிந்துகொள்பவர்களாக இருப்பதுடன், வகுப்பறைகள் ஜனநாயகத் தன்மையுடன் இருபக்க இயக்கம் உள்ளதாகவும் இருக்கும் இரு விஷயங்களும் முக்கியமானவை. 80 சதவிகித மக்கள் வறுமையில் உழல்கின்றனர். தொலைந்துபோன தங்கள் வாழ்க்கையை உழைப்பால் அவர்கள் தேடித்திரிகின்றனர். இப்படியான ஒரு சூழலில் மக்கள் குறித்தும், சமயச்சார்பு, இறையாண்மை போன்ற நடவடிக்கைகளில் மாணவ சமூகம் இயல்பாக கவனம் செலுத்தும் சந்ததியாக வெளிவராதது ஏன்? வகுப்பறைதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது எனில் அந்த இடத்தில் மேற்கண்ட விவாதங்கள் நடக்கிறதா? வகுப்பறை ஜனநாயகம் என்பது ஆசிரியரும் மாணவரும் சமமாக இணைந்து கற்றலில் பங்கேற்பது. ஆனால் நடப்பது என்ன? அதிகாரம் - அடங்குதல் என்ற ஒருபக்க இயக்கம்தானே. இது சமூகத்தில் ஒரு அங்கமாக வரும் மாணவனை அதிகாரம் செலுத்தும் அல்லது அடங்கிப்போகும் ஒருவனைத்தானே உரு வாக்கும். ஆக, சமூகத்திற்கான மாணவர்களை சந்தைக்கான மாணவர்களாக மாற்றுவது சரியான வளர்ச்சியா? அதுவும் குறிப்பாக மதிப்பெண்களே அவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றால், அவர்களின் சமூக அக்கறை எப்படி இருக்கும். சிறந்த எதிர்கால சமுதாயத்திற்கான பாடத்திட்டம் என்பதிலிருந்து அன்றைய ஆட்சியாளர்களின் தேவையை உள்ளடக்கிய பாடத்திட்டங்களாக மாற்றப்படுவது வேதனைக்குரியது. கல்வியாளர்களும் இந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள். இருப்பினும் பாடத்திட்டம் அதிகபட்சம் நமது நாட்டின் அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட பிரதானஅம்சங்களை இன்னும் இழந்து விடவில்லை. பாடத்திட்டம் எப்படி இருப்பினும் அதை அடிப்படையாக வைத்து வகுப்பறையை எப்படி நடத்துகிறோம் என்பது முக்கியம். ஆசிரியர்கள் நினைத்தால் இந்தப்பாடத்திட்டத்தை வைத்தும் மாற்றத்தை உருவாக்க முடியும். நமது நாட்டின் இருபெரும் தலைவர்களான ஜோதிபாசுவும் இந்திராகாந்தியும் வெளிநாட்டில் ஒரே பல்கலைக்கழகத்தில் தான் படித்தார்கள். அங்கு வரும் இந்திய மாணவர்களுக்கு ஆங்கில டியூசன் நடத்தினார்கள். அவர்களின் சிந்தனைப் போக்கு இரு துருவங்களாகப் பிரிந்து நின்றது. இதில் அவர்களின் வகுப்பறைக்குப் பங்கு இல்லை எனச் சொல்ல முடியுமா? நாற்பது ஆண்டுகளுக்கு முன் அதாவது 1970களில் சோவியத் யூனியனில் ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது. அதாவது அப்போதெல்லாம் அங்கு ஐந்து வயது நிறைவடைந்தால்தான் பள்ளியில் சேர்க்க முடியும். ஆனால் அதே சமயம் அமெரிக்கா போன்ற நாடுகளில் மூன்று வயது நிறைவடைந்தால் மழலையர் பள்ளிகளில் சேர்க்கலாம். இரண்டு வருடம் முன்பே குழந்தைகள் கல்வி நிலையத்திற்கு வரும் முறையை நாமும் ஏன் செய்யக்கூடாது என்று எண்ணிய சோவியத் அரசு, அதற்காக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் அடங்கிய குழுக்களை உருவாக்கியது. ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் மாதிரிப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவ்வப்போது பெற்றோர்களுடன் கலந்துரையாடல், குழந்தைகளின் விருப்பங்களைக் கேட்டறிதல் என நடந்தது. இறுதியாக பெற்றோர்களின் உதவியுடன் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது. 1.வகுப்பறை செயல்பாடுகள் குறைந்த அளவு இருக்க வேண்டும். 2. விளையாட்டுக்கான நேரம் கூடுதலாக்கப்பட வேண்டும். 3.ஓய்வுக்கான சூழல் இருக்க வேண்டும். 4. எழுத்துப்பயிற்சி மிகக்குறைந்த அளவே வேண்டும் என ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் சுற்றுக்கு விடப்பட்டது. பெற்றோர்களிடம் விவாதம் நடத்தப்பட்டது. இரண்டு வருடம் முன்பே கல்விக்கூட ஒழுங்கு முறைக்கு குழந்தைகள் பழகுவது மகிழ்ச்சி என்றாலும் “எங்கள் குழந்தையின் விளையாட்டுப்பருவம் இரண்டு வருடம் திருடப்பட்டு விடுமோ என அஞ்சுகிறோம்” என பெரும்பாலான பெற்றோர்கள் கருத்துச் சொன்னார்கள். இந்த எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்படாத வண்ணம் அமலாக்க வேண்டும் என்றனர். அதற்கு பின்னரே சோவியத் அரசு இந்த முறையை ஏற்றுக்கொண்டது. எனவே பெற்றோர்-மாணவர் பங்கேற்புடன் கல்வித்திட்டம் அமலாவதுதான் ஒரு சிறந்த சமூக அமைப்பின் அடிநாதமாய் இருக்க முடியும். ஏழைகள் மேலும் ஏழைகளாக, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறவே இன்றைய கல்வி இதுவரை பயன்பட்டுள்ளது. ஏழைகள் தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டாமா? இது நிகழ வேண்டுமெனில் கல்வியை அரசியல்மயப்படுத்தாமல் சமூக மாற்றத்திற்கு சாத்தியம் இல்லை. இது நிகழும் போதுதான் சமூகம் அரசியல்மயப்படுத்தப் படும். அரசியல் என்பதைக் குறுகிய கண்ணோட்டத்துடன் இங்கு பொருத்திப்பார்க்க வேண்டாம் என குறிப்பிட விரும்புகிறேன். ஏழைகள் அதாவது உழைப்பாளி மக்கள் வாழ்க்கையில் மாற்றம் வரவேண்டுமானால் அதற்கு தேவையான கல்விச்சூழலும், கல்வி முறையும், நாளைய சமூகத்தை உருவாக்கும் ஜனநாயகப்படுத்தப்பட்ட வகுப்பறைகளும் தேவை. இதுவே சிறந்த அரசியலாக இருக்க முடியும். நன்றி: புத்தகம் பேசுது நேர்காணல் (ஜூலை 2011) |
லேபிள்கள்:
சமச்சீர் கல்வி
புதன், 6 ஜூலை, 2011
எதிர்பார்த்தபடியே சமச்சீர் கல்விக்கு சமாதி கட்டியாச்சி..!
சமச்சீர் கல்வி பாடத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு, 597 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நேற்று செவ்வாயன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, தமிழக அரசின் தலைமைச்செயலா ளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. இக்குழுவில் கல்வியாளர்கள் என்ற பெயரில், சமச்சீர் கல்வியை எதிர்க்கும் தனியார் மெட்ரிக்பள்ளி நிர்வாகிகளும் இடம்பெற்றனர்.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேற் கண்ட குழுவின்அறிக்கை யில், நடப்புக்கல்வியாண் டில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த முடியாத அளவுக்கு குறைகள் உள்ளன; தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கவுன்சில் (என்சிஇஆர்டி) 2005ம் ஆண்டு வடிவமைத்த
தேசியப் பாடத்திட்ட தரத்திற்கு ஏற்றவாறு சமச்சீர் பாடத் திட்டம் இல்லை என்றும் கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அவசர கோலத்தில் வகுக்கப்பட்டுள்ளன என்றும், மெட்ரிக்குலேசன் தரத்திற்கு சில பாடங்கள் அமைந்திருப்பதால் மாணவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததில் தவறுகள் நிறைந்துள்ளன என்றும், மொழிப் பாடத்தில் இலக்கணப்பிழைகளும் கருத்துப்பிழைகளும் உள்ளன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த சமச்சீர் பாடத்திட்டத்தைக்கொண்டு நடப்பு கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த இயலாது. இந்தப் பாடத்திட்டம் முழுமை யாக திருத்தியமைக்கப்பட வேண்டும் என்றும்
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை விஷயங்களும் முன்னமே எதிர்பார்த்த ஒன்று தான். எதிர்பார்த்தபடியே சமச்சீர் கல்விக்கு சமாதி கட்டியாச்சி..!
லேபிள்கள்:
சமச்சீர் கல்வி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






