இன்று 11 - 01 - 2012 மதியம் தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா ''முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை'' தொடக்கி வைத்தார். முன்பு இருந்த திமுக ஆட்சியில் செயல்படுத்திய ''கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் '' போலல்லாமல், பல புதிய தாங்கிய பலன்களோடு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதுமட்டுல்ல, இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே நெஞ்சார பாராட்டத்தக்கது.
சென்ற திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற தனியார் இன்சூரன்ஸ் கம்பனியிடம் ஒப்படைத்தார். அரசின் திட்டத்தை அரசுத்துறையை சார்ந்த இன்சூரன்ஸ் கம்பெனிகளிடம் ஒப்படைக்காமல், தனியாரிடம் ஒப்படைப்பது என்பது தவறானது என்று அன்றைய சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தும் கூட அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர். பாலபாரதி இதேக் கருத்தை சட்டமன்றத்தில் வலியுறுத்திப் பேசும்போது, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி பதிலளிக்கும் போது ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனியும் ஐ. ஆர். டி. எ. - வால் அங்கிகாரம் பெற்ற கம்பெனி தானே என்று புத்திசாலித்தனமாக பதிலளித்தார் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுக் கூறத்தக்கது.
அவர் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பனிக்கு கொடுத்ததில் ''தன் சொந்த'' காரணங்கள் இருக்கின்றன. நான் அதற்குள் போக விரும்பவில்லை.
இன்றைய முதல்வர் செல்வி. ஜெயலலிதா சென்ற ஆட்சியாளர்களைப் போலல்லாமல், இந்த புதிய மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தை ஒரு அரசுத்துறை நிறுவனத்திடம் - ஒரு பொதுத்துறை நிறுவனத்திடம் ஒப்படைத்திருப்பது என்பது நெஞ்சாரப் பாராட்டத்தக்கது. அதுமட்டுமல்லாமல், மன்மோகன் சிங் கூட்டாளிகள் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியை முடக்கி, பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்து, தனியார் நிறுவனங்களையே ஊக்குவிக்கும் இன்றைய சூழ்நிலையில், பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியிடம் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் பொறுப்பை ஒப்படைத்திருப்பது என்பது மனதாரப் பாராட்டத்தக்கது. அதற்காக முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

1 கருத்து:
paratuvathu oru purum irukkatum.. pothu thurai moolam inthe payan kidaikka ovoru tamilanum enna padu pada poranoo..
கருத்துரையிடுக