வருகிற ஜூன் மாதம் 7 - 8 தேதிகளில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவுக்கு போறாராமா...! அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்திக்கப் போறாராமா...! அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில பேசப்போறாராமா...! அதுல என்னான்னா...? நரேந்திரமோடி பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்துல பேசப்போற ஆறாவது இந்திய பிரதமர்ன்னு புல்லரிச்சிப்போறாங்க பாஜககாரங்க...!
பிரதமர்னா அண்டை நாட்டுக்கு போனா என்ன தப்புன்னு கேட்கலாம்... ஒரு அண்டை நாட்டுக்கு ஒரு தடவை போனா தப்பில்லை... மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்பு வெளிநாட்டிலேயே தான் இருப்பாரு... அப்பப்ப இந்தியாவிற்கு வந்துட்டு ஏதாவது ஒரு நாட்டுக்கு பறந்திடுவாரு.... இப்படியா அவரு மட்டும் வெளிநாட்டு பயணச்செலவே பல கோடிகளை முழுங்கியிருக்காரு...
இவரு பயணம் செஞ்ச நாடுகளிலேயே அதிகமா பயணம் செஞ்ச நாடு என்னன்னு கேட்டா... ஜி.கே படிக்கும் குழந்தைங்கக்கூட சொல்லுவாங்க... அமெரிக்கான்னு... ஆமாங்க ஆச்சரியமா இருக்கா... கடந்த ரெண்டு ஆண்டுகள்ல மோடியின் வருகிற அமெரிக்கப்பயணம் என்பது ஐந்தாவது முறை... ஏறக்குறைய நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை அமெரிக்காவிற்கு போயிட்டு வாறாரு... ஒபாமாவும் மோடியும் இணைபிரியாத நண்பர்களா ஆயிட்டாங்கலாமா... ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம இருக்க முடியலயாமா...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக