கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 பிப்ரவரி, 2016

மக்களை மறக்கடிக்கும் வேலையில் திமுகவும் அதிமுகவும்....!


      கடந்த இரண்டு நாட்களாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், வலைத்தளங்களிளும்  திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ''முதலமைச்சரை அங்க பார்த்திருப்பீங்க... இங்க பார்த்திருப்பீங்க...'' - ன்னு திமுகவும், பதிலுக்கு ''திமுக தலைவரை அங்க பார்த்திருப்பீங்க... இங்க பார்த்திருப்பீங்க...'' - அதிமுகவும் லாவணி பண்ணிக்கொண்டு திரிவதைப் பார்த்திருப்பீர்கள். 
         இதில என்ன விசேஷம் என்றால்.... இவிங்க ரெண்டு பேருமே ரொம்ப சர்வ ஜாக்கிரதையா அவரவர்கள்  செய்த ஊழல்களை மட்டும் சொல்லி லாவணி பண்ணவில்லை. அதில இரண்டு  பேருமே திரை மறைவில் ஒற்றுமையை கடைபிடித்திருக்கிறார்கள். கருணாநிதியும், ஜெயலலிதாவும் மிகப்பெரிய ஊழல் பேர்வழிகள் என்று உலகத்திற்கே நன்றாக தெரியும். பிறந்த குழந்தையை கேட்டால் கூட சரியா சொல்லும். அப்படிப்பட்ட உண்மையை சொல்லி இருவருமே குற்றம் சாட்டிக்கொள்ளவில்லை என்பது திரைமறைவு உண்மை. 
           நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் - கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் இரகசிய ஒப்பந்தம் இருக்கிறது என்பதும், இரகசிய கூட்டணி இருக்கிறது என்பதும் உண்மை. 
         ஊழலை ஒழிப்போம்... நல்லாட்சித் தருவோம்... என்ற முழக்கமிட்டு உதயமான மக்கள் நலக் கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று முன்னேறிச் சென்றுக்கொண்டிருக்கிற சூழ்நிலையில், வழக்கம் போல் தாங்கள் இருவர் மட்டுமே களத்தில் இருப்பதைப் போன்ற கருத்தாக்கத்தை மக்களின் புத்தியில் திணிப்பதற்காகவும், தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மறந்துவிடுவதற்காகவும் திமுகவும் அதிமுகவும் திட்டமிட்டு யோக்கியர்களைப் போன்று இதுபோன்ற விளம்பரங்களை போட்டிப்போட்டுக்கொண்டு வெளியிடுகின்றன என்பது தான் உண்மை. 
         மக்கள் தான் புரிந்துகொண்ட இவர்களை விரட்டியடிக்கவேண்டும். 

செவ்வாய், 21 ஜூலை, 2015

மதுவிலக்கு - மக்களை ஏமாற்ற கருணாநிதி போடும் புதிய முகமூடி...!


                இந்திய அரசியல்வாதிகளுக்கு திடீரென்று மக்களின் மீது அக்கறை வருகிறதென்றால் - அவர்கள் திடீரென்று கவர்ச்சி அறிவிப்பு பலூன்களை பறக்கவிடுகிறார்கள் என்றால் சட்டமன்றத்தேர்தலோ அல்லது பாராளுமன்றத்தேர்தலோ வருகிறதென்று அர்த்தம். அப்படித்தான்  நேற்று தமிழகத்தில் ஒரு ''கவர்ச்சி அறிவிப்பு'' வெளியாகியிருக்கிறது. ''தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு தீவிரமாக அமல்படுத்தப்படும்'' என்ற மக்களை ''மயக்கும்'' அறிவிப்பு இன்று காலை பத்திரிகைகள் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. இந்த மயக்கும் அறிவிப்பை வெளியிட்டவர் வேறு யாருமல்ல...! திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி தான். தேர்தல் நெருங்குகிறது அல்லவா...? திடீரென்று மக்களை பற்றிய அக்கறை அவருக்கு வந்துவிட்டது. தன்னுடைய   ஆட்சிக்காலங்களில் தமிழக மக்களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்தவர் இப்போது மதுவிலக்கைப் பற்றிப் பேசுகிறார் என்பதை பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. தேர்தலில் வெற்றிபெறுவதற்கு கருணாநிதி எந்த ஒரு அதிசயத்தையும் கூசாமல் செய்துகாட்டுவார். தேர்தலுக்கு தேர்தல் ஏதாவது ஒரு சாட்டையை எடுத்து சுழற்றுவார். இந்தி எதிர்ப்பு என்பார். இலங்கை தமிழர் என்பார். சொத்து சேர்ப்பு - ஊழல் என்பார். தேர்தலுக்கு தேர்தல் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் வேஷம் போடுவார். முகமூடியை மாற்றிக்கொள்வார்.
              அதேப்போல் வருகிற தேர்தலில் மக்களை கவரவேண்டுமே என்ன செய்யலாம் என்று யோசனை செய்தார். இப்போது மக்கள் பிரச்சனையாக இருப்பது ''டாஸ்மாக்'' தான். பார்த்தார்... இது பெண்கள் பிரச்சனை மட்டுமல்ல. நீண்ட நாளைய சமூக பிரச்சனை. பெண்களின் வாக்கு வங்கியை கவருவதற்கு, ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்''   என்ற அறிவிப்பை கொடுத்திருக்கிறார். 
         தமிழக மக்களும்  இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

திங்கள், 20 அக்டோபர், 2014

நம்ப தலீவர் அநியாயத்துக்கு ரொம்ப நல்லவரா இருக்காரே...!

             
        வரவர தமிழ்நாட்டு அரசியல் கொஞ்சம் கூட சுவாரசியமே இல்லாம போயிட்டு  இருக்கு. அடிக்கடி இந்த ரெண்டு திராவிட தலைகளும் மோதிப்பாங்களே. அத நாடே வேடிக்கை பாக்குமே. அது மாதிரியான சுவாரசியங்கள சமீப காலமா நம்மாள பாக்கவே முடியலையே.  நாம்ப தமிழ்நாட்டுல தான் இருக்கோமான்னே சந்தேகமா இல்ல இருக்கு. அந்த ரெண்டு தலைகளும் மாத்தி மாத்தி சேத்தை வாரி அடிச்சிக்கிறத பாக்கவே அலாதியா இருக்குமே. அந்த மாதிரியான சம்பவங்கள இனி பாக்கவே முடியாதோ...?
                 கருணாநிதிக்கு ஒன்றென்றால் ஜெயலலிதா அறிக்கை விடுவதும், ஜெயலலிதாவிற்கு ஒன்றென்றால் கருணாநிதி அறிக்கை விடுவதும் என இருவரும் மாறிமாறி அம்பு விட்டுக்கொள்வார்களே. அந்த அரசியல் சாகச விளையாட்டுகள் இப்போது எங்கே போனது...?
              22 நாட்களுக்கு முன்பு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட போது திமுக தலைவர் கருணாநிதி எந்தவித ரீயாக்ஷனும்  காட்டாமல் அமைதியா இருந்தார். அத பாத்து பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், பொதுமக்களும் ஏமாந்து போயிட்டாங்கன்னா பாத்துக்கோங்களேன். 
                சரி அப்போ தான் அப்படின்னா... ஜெயலலிதாவிற்கு ஜாமீன் அளிக்கப்பட்டபோதும் அதே ரீயாக்ஷன் தான். ரெண்டு நாள் கழித்து ''அம்மையார்  சிறை சென்ற போதும் நான் சந்தோஷப்படவில்லை....  இப்போது ஜாமீனில் வெளியே வந்தபோதும் நான் வருத்தப்படவுமில்லை...'' என்று நம்ப தலீவர் வழக்கத்திற்கு மாறாக வாய்மொழிந்திருக்கிறார். தலீவர் தன்னுடைய இயற்கையான குணாதிசயங்களில் இருந்து மாறுபட்டிருக்கிறாரே என்றும் நம்ப தலீவர் அநியாயத்திற்கு நல்லவரா இருக்காரே என்றும்   தமிழக மக்களுக்கா  ஒரே ஆச்சரியப்பட்டு போயிட்டாங்க. தமிழ்நாட்டுல இன்னும் என்னென்ன அதிசயங்கள் நடக்கப்போவுதோ...?

புதன், 1 அக்டோபர், 2014

கருணாநிதியின் அமைதியும் மவுனமும் நமக்கு நன்றாக புரிகிறது...!

நன்றி : தி இந்து
                 சிந்துபாத் கதை போல் இழுத்துக்கொண்டே இருந்த  - அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் 18 ஆண்டு காலமாக இழுத்தடிக்கப்பட்ட வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு சென்ற சனிக்கிழமை அன்று மிகுந்த பரபரப்புகளுக்கு மத்தியில் முடிவுக்கு வந்தது. தீர்ப்பு ஜெயலலிதா மட்டுமல்ல அதிமுக காரர்களே எதிர்பாராத தீர்ப்பாக இருந்தது. ஜெயலலிதா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு தேதியான செப்டம்பர் 27 அன்று காலையிலிருந்தே தமிழகத்தில் இருக்கும் இரண்டு திராவிடகட்சிகளுக்குள் - குறிப்பாக அந்த இரு கட்சிகளின் தலைமைகளுக்குள் மிகுந்த பயம் கலந்த உணர்வுகளும், பரபரப்புகளுமே பரவியிருந்தன என்பது தான் உண்மை. தீர்ப்பு எப்படியிருக்குமோ... என்ன தண்டனையோ என்ற அச்சம்  அதிமுக தலைமைக்குள்ளும், என்ன தீர்ப்பு வந்தால் எப்படி எதிர்வினையாற்றுவது என்ற பயம் திமுக தலைமைக்குள்ளும் இருந்தன என்பதை  யாராலும் மறுக்கமுடியாது. நீதிமன்ற தீர்ப்பு வெளிவரும் வரை அதிமுக தலைமை பெங்களூரு நீதிமன்றத்திற்கு வெளியிலும், திமுக தலைமை அதன் கட்சித்தலைவர் கருணாநிதியின் வீட்டிலும் மிகுந்த பரப்பரப்புடனும், பதட்டத்துடனும் காத்திருந்தனர் என்பதை தொலைக்காட்சிகளும், செய்தித்தாள்களும் காட்டின. தமிழக மக்கள் எதிர்ப்பார்த்தது என்னன்னா....? எப்படியும் நமக்கெல்லாம் லட்டு கிடைக்கும். ஊரெல்லாம் பட்டாசு சத்தம் கேட்கும். ஆனால் அதை செய்யப்போறது யாரு...? திமுகவா...அல்லது அதிமுகவா...? என்பது தான் கேள்வியுடன் தான் மக்கள் தீர்ப்பு வரும் நேரத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள். தீர்ப்பு வெளியே வந்தவுடன் ஊரெங்கும் காதுகிழிய பட்டாசு சத்தம்  கேட்கும் என்றும், எப்படியும் தங்களுக்கு வாய் இனிக்க லட்டு கிடைக்குமென்றும் தான் எதிர்ப்பார்த்து காத்திருந்தார்கள். ஒன்று இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லி ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டால், அதிமுக காரர்கள் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து, பொது மக்களுக்கு லட்டுகள் கொடுத்தும் மிகப் பிரம்பாண்டமாக கொண்டாடுவார்கள் என்றும், அல்லது தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் திமுக காரர்கள் பட்டாசு வெடித்து லட்டு கொடுத்து கொண்டாடுவார்கள் என்றும் தான் மக்கள் எதிர்ப்பர்த்தார்கள். ஆனால் தீர்ப்பு சொல்வதற்கு முன்பு இந்த இரண்டு திராவிட கட்சிகளிடமுமே ஏகப்பட்ட பட்டாசுகளும், லட்டுகளும் இருந்தன என்பதும், அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதும் உண்மையிலும், உண்மை.
               ஆனால் தீர்ப்பு ஜெயலலிதாவிற்கு எதிராக போகவே அதிமுக காரர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தீர்ப்பு ஜெயலலிதாவிற்கு எதிரானது என்றால், அது திமுக தலைவர் கருணாநிதிக்கு சாதகமானது என்றுதானே பொருள். அப்படி தானே தமிழ்நாட்டில் ஒரு எழுதப்படாத விதியாக இருந்துவருகிறது. ஏற்கனவே தீர்ப்புக்காக காத்திருந்து கருணாநிதியின் வீட்டில் குண்டர்கள் புடைசூழ உட்கார்ந்திருந்த கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மேல்மட்டத் தலைவர்கள் யாருடைய முகத்திலும் தீர்ப்பு வெளியானவுடன் மக்கள் எதிர்ப்பார்த்தது போல் சந்தோஷமோ, ஆரவாரமோ, ஒளியோ  காணப்படவில்லை. மாறாக அதிர்ச்சி தான் தெரிந்தது. முகத்தில் ஈயாடவில்லை. அமைதியாய் அடங்கிப்போயிருந்தார்கள் என்பது உண்மை. மாநிலம் முழுதும் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் என்ற செய்தி வந்தவுடன் திமுக தலைவர் கருணாநிதி உடனடியாக ''தயவுசெய்து யாரும் இனிப்புகள் வழங்குவதோ, பட்டாசுகள் வெடிப்பதோ செய்யாதீர்கள்...'' என்று தன்னுடைய கட்சித்தொண்டர்களுக்கு அன்புடன் கட்டளையிட்டார். அதை கேட்டவுடன் பொதுமக்களுக்கும், கட்சிக்கார்களுக்கும் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை விட பெருத்த அதிர்ச்சியாக இருந்தது. இந்த கட்டளையை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ''ஊழல் ராணி ஜெயலலிதாவின் தண்டனை எதிர்ப்பார்தத்து தான். நீதி வென்றது... தர்மம் வென்றது... உடன்பிறப்புக்களே... இனி தமிழகம் நம் கையில் தான்... தேர்தலுக்கு தயாராய் இரு...'' என்றெல்லாம் கருணாநிதி வீரவசனம் பேசுவார். இந்த தீர்ப்பை கொண்டாடுவதற்கு தங்களை உற்சாகப்படுத்துவார் என்றெல்லாம் எதிர்ப்பார்த்தவர்கள் எமாற்றமடைந்தார்கள்.
             தீர்ப்புக்கு எதிர்வினையாற்றாமல், சந்தோஷத்தில் பொங்கி எழாமல் கருணாநிதி இவ்வளவு பெரிய அமைதியும், அடக்கமும், மவுனமும் காப்பது ஏன் என்று அவரது கட்சிக்காரர்களுக்கும் தெரியும், தமிழக மக்களுக்கும் புரியும். 66கோடிக்கே ஜெயலலிதாவிற்கு இவ்வளவு பெரிய தண்டனையும் அபராதமும் என்றால், 1,76,000கோடிக்கு தன் மனைவிக்கும், ஆசை மகளுக்கும் எவ்வளவு பெரிய தண்டனையும், அபராதமும் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுப்பார்த்திருப்பார். அதனால் வந்தது தான் இந்த அமைதியும், அடக்கமும், மவுனமும் என்பதை யாராலும் புரிந்துகொள்ளமுடியும்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

மோடி விஷயத்தில் மட்டும் ஜெயலலிதாவும், கருணாநிதியும் எப்படி ஒத்துப்போனார்கள்...?

                       இந்திய அரசியலிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் திராவிடக்கட்சிகளான அதிமுகவும், திமுகவும் ஆளும்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் மாறிமாறி இருந்துகொண்டு எப்போது எதிரெதிர் திசையில் தான் நின்று கொண்டிருப்பார்கள். அந்த இருக்கட்சிகளின் தலைவர்களாகிய ஜெயலலிதாவும், கருணாநிதியும் எந்த ஒரு விஷயத்திற்கும் ஒத்துப்போகமாட்டர்கள். இருவருக்கும் அப்படியொரு ஏழாம் பொருத்தம். சட்டமன்றத்தில் கூட இருவரும் ஒருவரையொருவர் நேரிடையாக சந்தித்ததுக் கூட கிடையாது. ஏதோ  வாய்க்கால் தகராறில் இந்த இருவரும் பகையாளியாக மாறிவிட்டார்கள். தமிழகத்தின் தலையெழுத்து இருவரும் மாறிமாறி ஆட்சிக்கு வருவார்கள். ஒருவர் போட்ட திட்டத்தை இன்னொருவர் மாற்றிவிடுவார். இவர் பெயரை அவர் ஆட்சிக்கு வந்ததும் அழிப்பதும், அவர் பெயரை இவர் ஆட்சிக்கு வந்ததும் அழிப்பதும் தமிழகத்தின் சாபக்கேடாகும். 
              ஒரு நிகழ்வுக்கு இருவரும் இருவேறு கருத்துகளை தான் இதுவரையில் சொல்லி வந்திருக்கிறார்கள் என்பது தான் தமிழகம் கண்ட உண்மை. ஜெயா டிவியையும், கலைஞர் டிவியையும் மாற்றி மாற்றிப்பார்த்தாலேயே நமக்கு புரியும். பார்க்கிற நமக்கே  பைத்தியம் புடிச்சிடும். இப்படிப்பட்ட இவர்கள்  தான் அண்மைக் காலமாக  நம்மையெல்லாம் ஆச்சரியப்பட வைக்கிறார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாரதீய ஜனதாக் கட்சி வெற்றிபெற்று நரேந்திரமோடி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் பாஜக விஷயத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒற்றுமையாகிவிட்டார்கள். மோடியின் முதல் மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, அது ஒன்றுக்கும் உதவாத பட்ஜெட்டாக இருந்தாலும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒரேக் குரலில் அந்த பட்ஜெட்டை வரவேற்றுப் பாராட்டினார்கள். இத்தனைக்கும் பாஜக கூட்டணியில் இந்த இருவரும் இல்லை. அதைப்பார்த்த தமிழக மக்களுக்கு  ஆச்சரியமும்,  அதிசயமாகவும் போய்விட்டது.
                அது தான் அப்படின்னா... நேற்று தான் தமிழிசை சவுந்தரராஜன் என்பவர் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.   இது ஒரு ஆளுங்கட்சியில் நடைபெறுகின்ற வழக்கமான நிகழ்வு தான். செய்தி வெளியே வந்தது தான் தாமதம். ஆளுங்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரை பாராட்டுவதில், வாழ்த்துவதில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒன்றாகிவிட்டார்கள். இப்போது மீண்டும் தமிழக மக்களுக்கு ஆச்சரியமும், அதிசயமாகவும் போய்விட்டது. 
               பாஜக விஷயத்தில் மட்டும் இந்த இருவரும் எப்படி ஒத்துப்போகிறார்கள். இவர்கள் மீதும்,  இவர்களின் குடும்பத்தார் மீதும் உள்ள ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க இந்த இருவருக்கும் பாஜகவின் தயவு தேவைப்படுகிறது என்பது தான் இவர்களின் இந்த ஒற்றுமைக்கு காரணம் என்பது நாம் சொல்லாமலேயே தமிழக மக்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்.

வெள்ளி, 25 ஜூலை, 2014

திமுகவுக்கு இதெல்லாம் கைவந்த கலை...!

                      அண்மையில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாம் தலைமை நீதிபதியாக பணியாற்றிய காலத்தில், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் வீற்றிருந்த திமுகவும்,  அக்கட்சி தலைவர் கருணாநிதியும் நீதித்துறையில் தலையீடு செய்து அன்றைய பிரதமரை மிரட்டி தனக்கு வேண்டிய ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிலமர்த்தியதாகவும், பின்னர் அதே நீதிபதிக்கு பணி நீட்டிப்பை பெற்றதாகவும், அப்படிப்பட்ட பலனை அனுபவித்த அந்த நீதிபதி ஓர் ஊழல்வாதி என்றும் ப்ளாகில் வெளிப்படையாக எழுதி உண்மையை போட்டுடைத்தார். அந்த செய்தி எல்லா ஊடகங்களும் பரபரப்புச் செய்தியாக வெளியிட்திருந்தது.
            நீதியரசர் வெளியிட இந்த செய்தி கருணாநிதியின் கோபத்தை கிளறிவிட்டது. நெற்றிக்கண்ணை திறந்தார். திமுகவினர் அக்னிப்பிழம்பாய் கொதித்துப்போனார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து மார்கண்டேய கட்ஜு இப்போது ஏன் சொல்லவேண்டும் என்றெல்லாம் கேள்வி கேட்டு நடந்த உண்மையை மழுப்பப் பார்த்தார்கள். ஆனால் காலம் கடந்து சொல்லப்பட்டாலும் உண்மை உண்மை தானே...? நீதியரசர் கட்ஜு கூறியது உண்மை இல்லையென்றால் திருவாளர் கருணாநிதி அவர்கள் அதை மறுத்திருக்கலாமே...! அப்படி மறுப்பு சொல்லாமல் தன்னைப்பற்றி எழுதிவிட்டார் என்பதற்காக நீதியரசர் மீதே சேற்றை வாரி இறைப்பதன் மூலம் நீதியரசர் வெளியிட்ட சம்பவம் உண்மை என்று உறுதியாகிறது.
            தனக்கு வேண்டியவர்களை - தனக்கு விசுவாசம் காட்டியவர்களை விருது கொடுத்து கவுரவிப்பதும், உயர் பதவிகளை  கொடுத்து உயர்த்துவதும் திமுகவிற்கோ அதன் தலைவர் கருணாநிதிக்கோ ஒன்றும் புதிதல்லவே. இதெல்லாம் இவர்களுக்கு கைவந்த கலை என்பது மக்களுக்கு தெரியாதா என்ன...?
                இது போன்று நீதித்துறையில் நடைபெறும் தலையீடுகளை தடுப்பதற்கும், நீதித்துறையில் பரவியுள்ள ஊழல்களை ஒழித்துக்கட்டவும், நேர்மையான முறையிலான நீதிபதிகள் தேர்வை உறுதிசெய்யவும்,   ஊழல் நீதிபதிகளை நீக்கவும், நேர்மையான நீதிபதிகளின் பணிநீட்டிப்பை வழங்கவும் ''நீதித்துறை ஆணையத்தை'' அமைக்கவேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள், சமூக சிந்தனையாளர்கள், நீதியரசர் மார்கண்டேய கட்ஜு போன்ற ஓய்வுபெற்ற தலைமைநீதிபதிகள் போன்ற நேர்மையான நீதிமன்ற நடவடிக்கைகளை விரும்பும் பெரியோர்களின் நீண்ட நாளைய கோரிக்கையான ''நீதித்துறை ஆணையத்தை'' விரைவில் மத்திய அரசு அமைத்திடல் வேண்டும்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

திருச்சி மாநாடு - திமுகவின் இரட்டை வேடம்....!

                                                                                                                                                         
          அண்மையில் திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற திமுகவின் 10-ஆவது மாநாட்டில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு தேர்தலுக்கு முன்னோட்டம் பார்க்கப்பட்டது. அந்த மாநாட்டில் பல தரப்பட்ட மக்களை திருப்திப்படுத்தும் பொருட்டு - அவர்களின் ஓட்டுக்கு குறிவைத்து வகை வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஒன்று சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி சம்பந்தப்பட்டது. இப்போது தான் சில்லறை வர்த்தகத்தைப்பற்றிய அறிவிப்பு வந்தது போலவும், அதனால் பாதிக்கப்படும் வணிகர்கள் மீது அக்கறை காட்டுவது போலவும்  ஒரு நாடகத்தை அரங்கேற்றியதை பார்த்து தமிழக வணிகர்களே எரிச்சலடைந்தார்கள். அப்படி என்ன சொல்கிறது அந்த தீர்மானம் என்றால், ''சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிக்கக்கூடாது'' என்கிறது. 
             திமுகழகம் சென்ற காலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருந்த போது, சில்லறை வர்த்தகத்தில் அன்னியநேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவெடுக்கும் போது மந்திரிசபைக் கூட்டத்தில் அதை எதிர்த்து கொஞ்சம் கூட வாயை திறக்காமல் தலையாட்டிவிட்டு, பிறகு பாராளுமன்ற இருஅவைகளிலும் அதைப்பற்றிய விவாதம் நடந்தபோது அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவாக வாக்களித்ததை கருணாநிதி வேண்டுமானால் தேர்தலுக்காக மறந்தது போல் நடிக்கலாம். ஆனால் மக்கள் மறக்கவில்லை. பாதிப்புக்குள்ளான வணிகர்கள் மறக்கவில்லை என்பது தான் உண்மை.
             ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலை. இறங்கியதும் ஓட்டுக்காக ஒரு நிலை. திமுகவின் இரட்டை வேடத்தை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். இனியும் ஏமாறமாட்டார்கள்.

புதன், 5 பிப்ரவரி, 2014

மன்மோகன் சிங் - ராகுல் காந்தி - கருணாநிதி - இவர்களின் தேர்தல் பயம்...!

 தீக்கதிர் நாளிதழுக்காக நான் வரைந்த கார்ட்டூன்...! எப்படி இருக்கு...? உங்கள் கருத்தோ அல்லது கவிதையோ எழுதுங்கள்...!

வெள்ளி, 28 ஜூன், 2013

இன்றைக்கும் பொருந்தும் அன்றைய எம்.ஜி.ஆர் பாடல்கள்....!

சிலர்ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்...
ஒரு மானம் இல்லை
அதில் ஈனம் இல்லை
அவர் எப்போதும் ஆள் பிடிப்பார்...
 
- எங்க வீட்டு பிள்ளை

 
 
மக்கள் நலம் மக்கள் நலம்
என்றே சொல்லுவார்
தன் மக்கள் நலம்
ஒன்றை தான்
பார்த்துக்கொள்ளுவார்....

- நேற்று இன்று நாளை


இந்த பாடல்களுக்கும் இங்குள்ள படங்களுக்கும் சம்பந்தமில்லைங்க. 
அப்படி நீங்க சம்பந்தப்படுத்தி பாத்தீங்கன்னா நான் பொறுப்பு இல்லைங்க...

ஞாயிறு, 16 ஜூன், 2013

தந்தையர் தினம் - உலகிலேயே தலைசிறந்த தந்தை கருணாநிதி...!

              
            இந்தப் பதிவு வஞ்சப்புகழ்ச்சியாக எழுதப்பட்டது அல்ல. உண்மையிலேயே முழுமனதுடன் எழுதப்பட்டது. தன்னிடம் இருபத்து மூன்றே எம்.எல்.ஏ - க்களை வைத்துக்கொண்டே  தன் மகள் கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கு சீட்டுக் கொடுத்து தைரியமாக தேர்தல்களத்தில் நிற்க வைத்திருக்கிறார் என்றால் தன் மகளின் மீது அவரிடம் உள்ள பாசத்தின் உயரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இவரைப் போன்ற தந்தையை உலகத்தில் வேறு எங்குமே பார்க்க முடியாது. ''பிச்சை எடுத்தாவது உன்னை நான் படிக்க வைப்பேன்மா'' என்று சொல்லுகிற தந்தைகளை விட ''பிச்சை எடுத்தாவது உன்னை எம்.பி. ஆக்குவேன் மா'' என்று சொல்லுகிற இந்த தந்தை தான் உலகிலேயே மிக சிறந்த தந்தை என்பதை யாராவது மறுக்க முடியுமா...!

செவ்வாய், 4 ஜூன், 2013

தலைவரை குஷிப்படுத்திய திமுக தொண்டர்கள்...!




          தங்கள் தலைவரின் மனநிலையை புரிந்துகொண்டு, அவரின் 90 - ஆவது பிறந்தநாளான நேற்று திமுக தொண்டர்கள் பண மாலையையும் பண சால்வையையும் அணிவித்து அழகு பார்த்து தலைவரை குஷிப்படுத்தினர். இவர்கள் புத்திசாலி தொண்டர்கள். ஆனால் அப்பாவிகள். இவர்கள் இத்தனைக்காலமாக தங்கள் சொத்துக்களை இழந்து, நேரங்களை இழந்து, குடும்ப உறவுகளை இழந்து திராவிட முன்னேற்றக்கழகம் என்ற உருக்குலையாத ஒரு இரும்புக்கோட்டையை உருவாக்கியவர்கள். தங்கள் இழப்புகளையெல்லாம் மறந்து தங்கள் தலைவனை முதல்வராக்கி அழகு பார்த்தவர்கள். தங்கள் தலைவனை அரியாசனத்தில் ஏற்றிவிட்ட  ஒன்றும் அறியாசனங்கள் இவர்கள். தங்கள் தலைவன் என்ன தவறுகள் செய்தாலும் அதில் ஏதாவது நியாயம் கற்பிப்பார்களே தவிர தங்கள் தலைவனை விட்டு விலகிச் செல்லமாட்டார்கள்.     
          இவர்களுக்குத் தெரியும் தங்கள் தலைவனை எப்படி மகிழ்விப்பது என்று. அதனால் தான் அவரது பிறந்தநாளுக்கு பண மாலையையும் பண சால்வையையும் அணிவித்து அவரை குஷிப்படுத்தினார்கள். பதிலுக்கு தங்கள் தலைவர் தங்களுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்போடு இவர்கள் செய்ததல்ல.
         ஆனால், இத்தனைக்காலமாக பல்வேறு இழப்புகளையும், இடையூறுகளையும் தூக்கி எரிந்து விட்டு தன்னையே பின்தொடர்ந்து வரும் இந்த தொண்டர்களுக்கு இதுவரை ஒன்றும் செய்யாத இந்த தலைவர் இனி தான் என்ன செய்யப்போகிறார்...? என்ற கேள்வி எழுகிறது. கடந்த 50 - 60 ஆண்டுகளாக இவருக்கு வாக்களித்த திமுக தொண்டன் இன்னும் அதே குடிசையிலும், ஓட்டு  வீட்டிலும் தான் இருக்கிறான். அவன் வாழ்க்கையில் இதுவரை முன்னேற்றமில்லை. தன் தலைவன் ஆட்சிக்காலத்தில் தன் பெண்டு - பிள்ளைகளுக்குக் கூட வேலை வாங்கிக்கொண்டதில்லை, வேலை ''வாங்கும்'' அளவிற்கு பொருளாதார வசதி இல்லாததால். எனக்கு தெரிந்து பல திமுகத் தொண்டர்கள் வீட்டில் சென்ற கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட இலவச தொலைகாட்சி பெட்டி தான் அவர்கள் வாங்கிய முதல் தொலைக்காட்சிப் பெட்டியாக இருந்தது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அப்படிப்பட்ட தொண்டர்களுக்கு இவர் என்ன செய்யப்போகிறார்....?
         இவர் இந்த 90-ஆவது வயதிலாவது இத்தனைக் காலமாக தன் குடும்பங்களுக்காக சேர்த்து வைத்திருக்கும் கணக்கிலடங்கா சொத்துக்களையும், காத்து வைத்திருக்கும் பல்வேறு கட்சிப்பதவிகளையும் தன்னுடைய விசுவாசமிக்க கட்சித் தொண்டர்களுக்கு அள்ளிக்கொடுக்கட்டும். அது தான் இவரது கட்சிக்கும், இத்தனைக்காலமாக எதையும் எதிர்பாராமல் கட்சியை காத்து நின்ற இவரது கட்சித் தொண்டர்களுக்கும் இவர் செய்யும் நல்ல செயலாக இருக்கும்.
            ''மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்.
             தன் மக்கள் நலம் ஒன்றேத் தான் பார்த்துக் கொள்ளுவார்'' என்ற மறைந்த எம்ஜிஆரின் பாடல் வரிகளை தன்னுடைய 90-ஆவது பிறந்தநாளில் பொய்யாக்கட்டும்.           

சனி, 2 மார்ச், 2013

பெரியாரை காற்றில் பறக்கவிட்ட திராவிட முன்னேற்றக் கழகம்...!



         ''பெரியாரின் கையைப் பிடித்து வளர்ந்தவன் நான்''  என்று தன்னைப் பற்றி அடிக்கடி சொல்லிக்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியும், அவரது குடும்பமும், கட்சியும் இன்றைக்கு, ''மானமும் அறிவும் மனிதற்கு அழகு'' என்று சொன்ன தந்தைப் பெரியாரையும், அவரது பகுத்தறிவுக் கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அறிவையும், மானத்தையும் வேட்டித் துண்டைப் போல் கழட்டி வைத்துவிட்டார்கள். பாவம், பேராசிரியர் அன்பழகன் மட்டும் நடப்பதைப் பார்த்து தலைகுனிந்து உட்கார்ந்திருக்கிறார்.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

குமுதம் ரிப்போர்டரின் வக்கிர புத்தி...!

         இன்றைக்கு உலகமயத்தின் அரக்கக்குழந்தையான ''வணிகப்போட்டி'' என்பது ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை. மக்களிடம் நிலைத்து நிற்பதற்காகவும் , கொள்ளை இலாபம் அடிப்பதற்காகவும் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும்   மனசாட்சியே இல்லாமல் நீதி, நியாயம், நேர்மை, தர்மம் இவைகளை கொன்றுவிட்டு  வெட்கமில்லாமல் வீதியில் அம்மணமாய் உலா  வருகின்றன. இது மாதிரியான பத்திரிகைகள் எல்லாம் நம் வீட்டிற்குள்ளே நுழைவதற்குக் கூட அருகதையற்றவையாகத் தான் இருக்கின்றன.
            அப்படிப்பட்ட பத்திரிகையில் ஒன்று இன்று அதை பார்க்கும் போதே நமக்கெல்லாம் அருவருப்பை வரவழைத்திருக்கிறது. அந்த பத்திரிகை எதுவுமில்லை. குமுதம் குடும்பத்தைச் சேர்ந்த ''குமுதம் ரிப்போர்டர்'' தான் இன்றைக்கு துர்நாற்றம் அடிக்குமளவுக்கு செய்தியை கொடுத்திருக்கிறது. அட்டை படத்தில் ''குஷ்பு இன்னொரு மணியம்மை?'' என்றத் தலைப்பிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களையும், திரைப்பட நடிகை குஷ்புவையும் இணைத்து படம் போடப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்தவுடனேயே நமக்கு கோபம் வரவில்லை. அருவருப்பைத் தான் தூண்டியது. பத்திரிகை சுதந்திரம் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதலாமா...? நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. அவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாத பத்திரிகைகள் கண்டதையெல்லாம் எழுதி கவலைப்படுகின்றன. இதன் மூலம் குமுதம் பத்திரிகையின் வக்கிரபுத்தி வெளிப்பட்டிருக்கிறது.  
           சமிபத்தில் புதுடெல்லியில் இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசும் போது பத்திரிக்கைகளின் இன்றைய செயல்பாடுகளை விமர்சனம் செய்திருந்தார். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் வறுமையின் காரணமாக மூன்றரை இலட்சம் விவசாயிகள் இறந்திருக்கிறார்கள் என்று பி. சாய்நாத் வெளியிட்ட செய்தியை எந்த பத்திரிகைகளும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் திரைப்பட நடிகை கரீனா கபூர் பற்றிய கிசுகிசுவையும், சச்சின் அடித்த நூறாவது சதம் பற்றிய செய்தியையும்  பத்திரிகைகளில் எழுதுகிறார்கள் என்று நீதிபதி வேதனையுடன் தெரிவித்தார். இப்படித் தான் இன்றைய பத்திரிகைகள் இலாபம் ஒன்றே குறிக்கோளாய் அலைகின்றன. அதற்கு குமுதம் ரிப்போர்டரும் விதிவிலக்கு அல்ல. குமுதம் ரிப்போர்டரை பொருத்தவரையில் இலாபம் மட்டுமல்ல, நிச்சயமாக ''யாரையோ'' திருப்திப்படுத்தவும் இந்த செய்தியை பிரசுரித்திருக்கலாம் என்ற சந்தேகமும் நமக்கு வருகிறது. 

                இப்படியெல்லாம் எழுதுவதன் மூலம் மணியம்மையாரை கேவலப்படுத்தியதற்காக  நீங்கள் திருப்திபட்டுக்கொள்ளலாம். அல்லது குஷ்புவையும், ''தோழர்'' கருணாநிதியையும்  (அவர் தானுங்க தன்னை ஒரு கம்யூனிஸ்ட்ன்னு சொன்னாரு) கேவலப்படுத்தியதற்காக நீங்கள் திருப்திப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் இதுபோன்று எழுதுவதால் பெண்கள் அரசியலுக்கு வருவதும், பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதும் தடைப்பட்டுபோகும் என்பதை ஊடகங்கள் மறந்துவிடக்கூடாது. இது போன்ற கட்டுரைகளைப் படிக்கும் போது அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் ஆர்வமுள்ள பெண்களுக்கு, ''இதே கதி தங்களுக்கும் ஏற்பட்டுவிடும்'' என்ற அச்சமும், பயமும் ஏற்பட்டு விலகிச் சென்றுவிடுவார்கள். அப்படி விலகிச் செல்லவேண்டும் என்பது தான் ஆணாதிக்கச் சிந்தனை என்பதையும், ஆதிக்க சாதியினரின் சிந்தனை என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது.   
       தயவுசெய்து இனியாகிலும் பத்திரிகைகள் திருந்தட்டும். ஒரு நடிகை என்றால் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணம் பத்திரிகைகளுக்கு மாறவேண்டும். இது போன்ற புறச்சூழ்நிலைகள் தான் ஒரு சில இளைஞர்களின் கொடூரமான எண்ணங்களுக்கும், வக்கிரமான புத்திகளுக்கும் ஊக்கம் தருகின்றன என்கிற சமூக சிந்தனை பத்திரிகையாளர்கள் புத்தியில் எழவேண்டும். இனியாகிலும் பத்திரிகைகள் நல்ல சிந்தனையை வளர்க்கின்ற செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். நேர்மையுடன் செயல்படவேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

சனி, 9 பிப்ரவரி, 2013

இன்னும் எத்தனைக் காலம் தான் தமிழர்களை ஏமாற்றுவார் கருணாநிதி...?

திமுக தலைவர் கருணாநிதி இன்னும் எத்தனைக் காலங்களுக்கு தான் தமிழர்களை ஏமாளிகளாகவே நினைத்துக்கொண்டிருப்பார் என்று தெரியவில்லை. மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டே, இலங்கை அதிபர் இராஜ பட்செவின் வருகையை எதிர்த்து தனது கூட்டாளிகளுடன் கருணாநிதி கறுப்புடை அணிந்து போராட்டம் நடத்துவதை பார்க்கும் போது தமிழர்களை ஏமாளிகளாக நினைத்துக்கொண்டிருக்கும் கருணாநிதி கோமாளியாய் தெரிகிறார்.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

பொதுவாழ்க்கை பிரகடனம் - கம்யூனிஸ்ட்டுகள் என்றால் இப்படித் தான் இருக்கவேண்டும்...!

                                                                       
                                

தமிழருவி மணியன்,                         
வழக்கறிஞர், எழுத்தாளர், காந்திய சிந்தனையாளர்
      
  
  

             உண்மையான ஒரு கம்யூனிஸ்ட்டாக உலகில் வலம் வருவது ஓர் அரிய தவத்துக்கு ஒப்பானது. அடையாள அட்டைகள் வைத்திருப்பவர் எல்லாம் கம்யூனிஸ்ட் ஆகிவிடுவது இல்லை. மக்கள் நலனுக்காக வாழ்வை முற்றாக அர்ப்பணித்து, எள் மூக்கின் முனை அளவும் சுயநலமின்றி, தனிச் சொத்துடைமை துறந்து, எளிமை சார்ந்த வாழ்க்கையை மேற்கொண்டு, வர்க்க பேதமற்ற சுரண்டலற்ற சமுதாயத்தைச் சமைப்பதற்குப் போர்க்குணத்துடன் புரட்சிக்கான களம் அமைப்பவரே ஓர் உண்மையான கம்யூனிஸ்ட்டாக உருப்பெற முடியும். இன்று, கம்யூனிஸ்ட் கட்சிகளிலேயே கலப்படம் நிகழ்ந்துவிட்டது. நல்லகண்ணு, சங்கரய்யா போன்ற ஒரு சிலர் மட்டுமே தமிழகத்தில் மார்க்சியத்தின் எச்சமாக நம் முன் நடமாடுகின்றனர். இத்தகைய சூழலில்தான் ''நானும் ஒரு கம்யூனிஸ்ட்'' என்கிறார் கலைஞர் கருணாநிதி. “ஐந்து தலைமுறை முதலமைச்சராக இருந்த எனக்கு ஒரேயொரு ‘தெரு வீடு’ தவிர வேறெந்த வீடும் இல்லை. அதையும் மக்களுக்குத் தானமாக எழுதிவைத்து விட்டேன்’ என்று கலைஞர் வழங்கியிருக்கும் வாக்குமூலத்தில் உண்மை சிலுவையில் அறையப்பட்டுவிட்டதை அறியாத தமிழர் யாராவது உண்டா? ஆலமரத்தின் விழுதுகள் போன்று பரவிப் படர்ந்திருக்கும் கலைஞரின் குடும்ப உறவுகளின் சொத்துப் பட்டியலை விரிவாக எழுத முயன்றால், விரல்கள் வலிக்குமே.
           அவ்வளவு சொத்தும் அறம் சார்ந்த வழிகளிலா வந்து சேர்ந்தது? கலைஞரைப் போல 90 வயதைத் தொட்டவர்கள், 70 ஆண்டுகளுக்கு மேல் பொதுவாழ்வை வேள்வியாக நடத்தியவர்கள், ஆயிரம் இன்னல்களைத் தலைமறைவு வாழ்க்கையில் சந்தித்தவர்கள், மாநில முதல்வராக இருந்தவர்கள். செப்புக் காசும் தமக்கென்று சேர்க்காமல் இறுதிவரை வாழ்ந்து செத்தவர்கள், ‘தெரு வீடு’ கூட இல்லாதவர்கள் இருவரைப் பற்றி இன்றைய இளையதலைமுறை அறிவதன் மூலம் ''கலைஞர் ஒரு கம்யூனிஸ்ட்டா?'' என்ற கேள்விக்கு எளிதில் விடை காணக் கூடும். மகாத்மா காந்தி காண விரும்பிய பொது வாழ்க்கைப் பேரேட்டில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய புனிதப் பெயர்கள் இரண்டு. 1. நிருபன் சக்ரபர்த்தி, 2. ஈ.எம்.எஸ். நம்பூதிபாட். இருவருமே காந்தியால் கவரப்பட்டு,தேச விடுதலைப் போரில் தியாகம் புரிந்து, மார்க்ஸியப் பொருளாதாரத்தில் மனம் ஒன்றிக் கலந்து கம்யூனிஸ்ட்டுகளாக மாறியவர்கள்; தாங்கள் பிறந்த மண்ணில் தவ வாழ்க்கை நடத்தி, மார்க்ஸியத்திடம் மக்களைத் திருப்பி, கம்யூனிஸ ஆட்சியை அரங்கேற்றிய பெருமைக்கு உரியவர்கள்; அகத்திலும் புறத்திலும் பொய்யின் நிழல் படாமலும், ஊழலின் மாசு படியாமலும் நம்மால் நம்ப முடியாதபடி வாழ்ந்து மறைந்தவர்கள். நிருபன் சக்ரபர்த்தி, தன் கல்லூரிப் படிப்பைத் துறந்து, காந்தியின் சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டவர், கற்றறிந்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தபோதும், ஏழைகளின் தோழனாய் தன்னைச் செதுக்கிக் கொண்டவர்; சணல் ஆலைத் தொழிலாளியாய், கூலியாளாய், ரிக்ஷா இழுப்பவராய், மலைவாழ் மக்களின் ஆசிரியராய், கல்கத்தாவின் புகழ் பூத்த இதழான ‘அமிர்தபஜார்’ பத்திரிகையாளராய் பல்துறை அனுபவங்களை அடைந்தவர். 1978 முதல் 1988 வரை கம்யூனிஸ்ட் முதல்வராக 10 ஆண்டுகள் திரிபுரா மாநிலத்தில் பணியாற்றிய நிருபன் ஓர் அதிசய மனிதர்.
         முதல்வராகப் பொறுப்பேற்றதும் ஒரு தகரப் பெட்டியுடன் அரசு வீட்டில் அடியெடுத்து வைத்தவர், 10 ஆண்டுகள் முதல்வராக ஆட்சி நடத்தி முடித்தபிறகு, அதே தகரப் பெட்டியுடன் ஒரு ரிக்ஷாவில் அமர்ந்து சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்து சேர்ந்தார் நிருபன். அவருடைய தகரப் பெட்டியில் சில ஆடை களும் சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகங்களும் மட்டும் தான் இருந்தன. ‘தெரு வீடு’ கூட இல்லாத துறவி நிருபன் ஏழ்மையும் எளிமையும் அழகு தரும் அணிகலன்களாய்ப் பூண்டு ஓர் உன்னதமான மார்க்ஸியராய் வாழ்ந்தார். இரண்டாவது முறை தொடர்ந்து நிருபன் திரிபுரா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது வாழ்த்த வந்தவர்களிடம் தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். ‘இன்னமும் 60 சதவிகித மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு மின்சாரம் சென்று சேரவில்லை. ஆயிரக்கணக்கான மக்களுக்கு இன்று வரை ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்கவில்லை. இவற்றுக்காக என் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டியவன். எனக்கு வாழ்த்தும் பாராட்டும் பெறும் தகுதி இல்லை’ என்றவர் நிருபன். ஆனால், நம் கலைஞர் புகழுரைக்கும் விளம்பரத்துக்கும் வரவேற்பு வாழ்த்தொலிக்கும் ஏங்கி நிற்கும் இயல்பு கொண் டவர். ‘என்னிடம் பற்றும் அன்பும் கொண்ட தோழர்கள் எனக்கு விழா எடுக்கிறார்கள். அதுகண்டு வக்கற்றோர் வயிற்றெரிச்சல் படுவதா?’ என்று பொங்கும் கலைஞர் எப்படி ஒரு கம்யூனிஸ்ட்டாக முடியும்? ''எங்களில் எவரும் வெகுஜனப் புகழைத் தூசியளவுகூட மதித்ததில்லை. பல நாடுகளில் இருந்து எண்ணற்ற பாராட்டுகள் எனக்கு வந்ததுண்டு. நான் தனிநபர் வழிபாட்டை வெறுத்த காரணத்தால், அந்தப் பாராட்டுகளில் ஒன்றைக் கூட விளம்பரமாகப் பயன்படுத்துவதற்கு நான் அனுமதித்தது இல்லை'' என்று, மார்க்ஸ் தனது எழுத்தில் பதிவு செய்திருப்பதை நிருபன் அறிந்து வைத்திருந்தார். ஆனால், கலைஞர் அதை அறிந்திருக்க நியாயமில்லை. காரணம், அவர் எந்த வகையிலும் கம்யூனிஸ்ட் இல்லை. இந்தியாவில் முதல் காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்த, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியை நிர்வகித்த அரிய வரலாற்று மனிதர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட். தன்னுடைய சிந்தனையாலும் செயல் திறனாலும் கேரள மக்களின் சமூக வாழ்வியலை மடைமாற்றம் செய்த மகாபுருஷர். இளமையில் காந்தியோடு இணைந்து, காங்கிரஸில் கலந்து, சோஷலிஸ்ட்டாக மலர்ந்து, இறுதிநாள் வரை மார்க்ஸியராக மணம் பரப்பியவர் ஈ.எம்.எஸ். ஒரு கம்யூனிஸ்ட்டாக நீண்ட நாள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி 1947ல் வெளிப்பட்ட நம்பூதிரிபாட் தன் குடும்பத்தின் திரண்ட சொத்துக்களை விற்று அதைக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குக் காணிக்கையாக்கினார். பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட ‘தேசாபிமானி’ வார இதழ், அந்தப் பணத்தில் தான் நாளிதழ் ஆனது. அந்த இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற நம்பூதிரிபாட் தன்னுடைய 89- ஆவது வயதில் மரணத்தைத் தழுவிய நாளில் கூட மதச்சார்பின்மையின் அவசியம் குறித்து அந்த இதழுக்காக உதவியாளர் துணையுடன் கட்டுரை வடித்தார்.
           ஏராளமாக எழுதிக் குவித்த அவர் தன் எழுத்தின் மூலம் கிடைத்த பணத்தையும் இயக்கத்துக்கே அர்ப்பணித்தார். தான் பிறந்த மண்ணை 26 ஆண்டுகள் திரும்பிப் பார்க்க நேரமின்றி ஏழைக்கும் பாழைக்கும் ஓயாமல் உழைத்த அந்த மனிதர், தள்ளாத வயதிலும் தன் ஆடையைத் தன் கையால் துவைத்து அணிந்தவர். தோழர் நல்லகண்ணு இன்றும் தன் துணியைத் தானே துவைப்பவர். அவர்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகள். நம் கலைஞரோ கழகத் தளபதிகளின் கறைபடிந்த அரசியல் பயணத்தில் தலைமை ஏற்று வழி நடத்துபவர். மாணிக்கங்களையும் கூழாங்கற்களையும் ஒரே கூடையில் அடுக்குவது அழகாகுமா? சர்க்காரியா கமிஷனைச் சந்தித்தவர், கழகத்தைக் குடும்பச் சொத்தாகக் கூறு போட்டவர், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்களை அரவணைத்து அவர்களுக்கு விமான நிலையத்தில் வீர வரவேற்பு வழங்கியவர், அடுத்தவர் நிலங்களை ஆக்கிரமித்தவர்களைத் தானே தளபதிகளாகத் தழுவிக்கொண்டவர், ஈழத்தமிழர் அழிந்த போதும் பதவியைப் பாதுகாக்க பாராமுகமாய் இருந்தவர், கழக முன்னணியினர் குபேரர்களாகப் பவனி வருவதைப் பார்த்து மகிழ்பவர், ஊழல் மலிந்த மத்திய அரசை விழுந்துவிடாமல் தாங்கிப் பிடிப்பவர், சில்லரை வணிகத்தில் அந்நிய வர்த்தக முதலைகளுக்கு இந்தியச் சந்தையின் வாசலைத் திறந்து வைக்க ஆதரவுக் கரம் நீட்டியவர், ஏழைப் பங்காளர் காமராஜரை வீழ்த்துவதற்கு ரப்பர் தோட்ட முதலாளி மத்தியாசை நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆதரித்துக் கடுமையாகக் களப்பணி ஆற்றியவர், ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்கிறார். கேழ்வரகில் நெய் என்றால் கேட்பவர்க்கா புத்தியில்லை? நம்பூதிரிபாட் ஒருமுறைசொன்னார்: ‘நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு தனி மனிதன் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ளும் தருணத்தில் தலைவனாக உயர்ந்து விடுகிறான். தன் சுகங்களுக்காகவும் தேவைகளுக்காகவும், கொள்கையில், லட்சியத்தில் சமரசம் கொள்ளும் தருணத்தில் தலைவன் என்ற தகுதியை இழந்துவிடுகிறான். ஓ... அதுதான் எவ்வளவு ஆழ்ந்த அர்த்தமுள்ள பொது வாழ்க்கைப் பிரகடனம்!

நன்றி : ஜூனியர் விகடன் (23.1.13) ஏட்டில் வெளியான கட்டுரையின் பகுதிகள்

புதன், 9 ஜனவரி, 2013

பூத்தது! புதிய பொதுவுடைமைப் பூ...!


 கட்டுரையாளர் : பழ. நெடுமாறன்                              
      
           ''இராமகிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் தொடக்கம் முதல் என்னை வெறுப்பவர் என்று எனக்குத் தெரியும்; இளம் பிராயத்திலிருந்தே நானும் ஒரு கம்யூனிஸ்டு என்றும், அந்தக் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டவன் என்றும் பலமுறை சொல்லியிருக்கிறேன். இராமகிருஷ்ணனுக்கு உண்மையான கம்யூனிஸ்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது'' என தி.மு.க. தலைவர் கருணாநிதி 3-1-2013 அன்று கூறியுள்ளார்.
              எத்தனையோ நாடகங்களில் பலவிதமான வேடங்களில் நடித்த கருணாநிதி, இப்போது "கம்யூனிஸ்டு' வேடம் பூண்டிருப்பதன் பின்னணி என்ன?
          "காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு காலம் கடத்துவதைக் குறித்து, அந்த அரசில் பங்கேற்றிருக்கும் தி.மு.க. தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நிர்பந்தம் செய்யவில்லை. மாறாக மௌனம் காக்கிறது. அனுசரித்துப் போகிறது'' என மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. இராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருந்ததற்குப் பதில் சொல்லும் வகையில் "கம்யூனிஸ்டு வேடத்தை' கருணாநிதி பூண்டிருக்கிறார்.
         இராமகிருஷ்ணன் கேட்ட கேள்விக்குப் பதில் இல்லை. மாறாக, வழக்கம் போல பிரச்னையைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதோடு புதிதாக, "செங்கொடித் தோழர்' வேடம் தரித்திருக்கிறார். கருணாநிதி உண்மையில் யார் என்பதும் அவர் எத்தகையவர் என்பதையும் தமிழக மக்கள் அறிவார்கள்.
            செஞ்சீனத்தின் தலைவரான மாசேதுங் உண்மையான கம்யூனிஸ்டு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பின்வரும் இலக்கணத்தை வகுத்துள்ளார். "கம்யூனிஸ்டு என்பவர் பரந்த உள்ளம் படைத்தவராக இருக்க வேண்டும். நேர்மையும் ஊக்கமும் உடையவராக விளங்க வேண்டும், புரட்சியின் நலன்களைத் தனது சொந்த உயிர்போல் கருத வேண்டும். தனது சொந்த நலன்களைப் புரட்சியின் நலன்களுக்குக் கீழ்ப்படுத்த வேண்டும். எந்தக் காலத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு கம்யூனிஸ்டு தனது சொந்த நலன்களை முன்னிறுத்தக்கூடாது. அவர் அவற்றை தேசத்தின் நலன்களுக்கும் மக்களின் நலன்களுக்கும் கீழ்ப்பட்டதாக்க வேண்டும். எனவே சுயநலம், வேலையில் அசிரத்தை, ஊழல், புகழ்நாட்டம் முதலியவை எல்லாம் மிகவும் இகழத்தக்கவை. ஆனால் சுயநலமின்மை, தனது முழுச் சக்தியையும் கொண்டு வேலை செய்வது, பொதுக்கடமைக்கு முழுமையான விசுவாசம், அமைதியான கடினமான உழைப்பு முதலியவை அவருக்கு உரியவையாகும்'' எனக் கூறியுள்ளார்.
            மாசேதுங் வகுத்த இலக்கணத்தின் எந்த அம்சமாவது இந்த "உண்மையான கம்யூனிஸ்டுக்கு' கடுகளவாவது பொருந்தியிருக்கிறதா? கருணாநிதியின் மனசாட்சிதான் இதற்குப் பதில் கூற வேண்டும்.
         இந்தியாவின் - ஏன் ஆசியாவின், முதல் கம்யூனிஸ்டான சிங்காரவேலர் செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்திருந்தும் எளிய வாழ்வு வாழ்ந்தார். தனது செல்வத்தையும் உழைப்பையும் மக்களுக்காக அர்ப்பணித்தார். இன்று அவரது குடும்பத்தினரின் நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாது.
         அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் கேரள மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தனது சொத்து முழுவதையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி தந்த பணத்தில் வாழ்ந்தார்.
தமிழ்நாட்டில் செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்து லண்டனுக்குச் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் திரும்பிய தமிழகக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கே.டி.கே. தங்கமணி தனது சொத்து முழுவதையும் கட்சிக்கே அளித்தார். கட்சியின் தொண்டராக இறுதிவரை வாழ்ந்து மறைந்தார்.
          தமிழ்நாட்டின் மூத்த கம்யூனிஸ்டுத் தலைவர்களான நல்லகண்ணு, சங்கரய்யா, உமாநாத் ஆகியோர் தியாகத் தழும்புகள் பல ஏற்றவர்கள். சிறைக்கொடுமைகளையும் சித்திரவதைகளையும் இன்முகத்துடன் ஏற்றவர்கள். 90 வயதை இவர்கள் எட்டியும் இன்னமும் லட்சிய உறுதி மாறாதவர்களாக, எளிய வாழ்வுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து ஏழை மக்களுக்காகத் தொடர்ந்து தொண்டாற்றுகிறார்கள்.
           மேலே கண்ட தலைவர்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டக் காலத்திலும் அதற்குப் பின்னரும் மிகக்கொடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள். சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டவர்கள். எதற்காகவும் அஞ்சி - ஒருபோதும் - தங்கள் கொள்கையைக் கைவிடாத தீரர்கள். இவர்கள் ஆற்றிய தியாகத்திற்கு ஈடு இணை கிடையாது. இரு கம்யூனிஸ்டுக் கட்சிகளிலும் உள்ள தலைவர்களும் தோழர்களும் செய்த தியாகத்திற்கும் சந்தித்த அடக்குமுறைகளுக்கும் ஒப்புவமை கூறத்தக்கவர்கள் வேறு எந்தக் கட்சியிலும் இன்று கிடையாது.
          மாசேதுங் வகுத்த கம்யூனிஸ்டு இலக்கணத்திற்கும் இந்தியக் கம்யூனிஸ்டுகள் வாழ்ந்து காட்டும் லட்சிய வாழ்விற்கும் கருணாநிதியின் ஆரவார, ஆடம்பர வாழ்விற்கும் ஏதாவது ஒற்றுமை உண்டா?
             கொடிய அடக்குமுறைகளுக்கு உள்ளாக நேர்ந்தபோதிலும் தங்களின் கொள்கைகளைக் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் கைவிட்டதில்லை. ஆனால், "பிரிவினை கேட்பவர்கள் தேர்தலில் போட்டிபோட முடியாது' என்ற சட்டம் வந்தவுடன் "திராவிட நாடு' கோரிக்கையை அடியோடு கைகழுவியவர் கருணாநிதி. இன்றளவும் அதைப்பற்றி வாய்திறக்காதவர்.
         "பிரிவினை கேட்பவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள்' என சட்டம் வரவில்லை. "தேர்தலில் போட்டிபோட முடியாது' என்றுதான் சட்டம் கொண்டுவரப்பட்டது. பதவி சுகத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடுமே என்ற பதைப்பினால் அதுவரை "முரசொலித்த' கொள்கையை ஆழக் குழிதோண்டிப் புதைத்தவர் கருணாநிதி.
            "அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு' என மேடைதோறும் முழங்கப்பட்ட வீர முழக்கம் காற்றோடு போயிற்று.
               தான்தான் உண்மையான கம்யூனிஸ்டு என கம்யூனிஸ்டுகளோடு போட்டிபோடுவதற்குப் பதில் அம்பானி, டாடா, பிர்லா போன்ற பெரு முதலாளிகளுடன் கருணாநிதி தன்னை ஒப்பிடுவதுதான் பொருத்தமானதாகும். பொதுவாழ்வில் ஈடுபட்டு அதற்குப் "பொன் விழா'' கொண்டாடிய ஒரே குடும்பம், தலைவர் கருணாநிதியின் குடும்பம். இந்தியாவின் "முதல்ரக'' பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகியிருக்கிறது!
           சோஷலிஸ்ட் தலைவர்களில் ஒருவரும் மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்தவருமான ஜார்ஜ் பெர்னாண்டûஸ ஆசிரியர் குழுத் தலைவராகக் கொண்டு வெளிவரும் "தி அதர் சைடு' எனும் பத்திரிகை, 2011-ஆம் ஆண்டு ஜூலை இதழில், கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இந்தியாவையே திகைப்புக்குள்ளாக்கிற்று.
"கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தமிழகத்திலும் தென்னிந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் இதுவாகும். இது முழுமையான பட்டியல் அல்ல; கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை' என்றும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது. இதுவரை இதை கருணாநிதி மறுக்கவில்லை.
         5 முறை முதலமைச்சராகப் பதவி வகித்த கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் கம்யூனிஸ்டாக எப்போதாவது நடந்துகொண்டாரா என்ற கேள்வி எழுகிறது.
            இந்தப் "புதிய கம்யூனிஸ்ட்' ஆட்சியில்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் துவக்கப்பட்டு, ஏழை விவசாயிகளின் நிலங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு பெரு முதலாளிகளுக்கு வழங்கப்பட்டன. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமான முதலீடுகள் அன்னிய நிறுவனங்களால் தமிழ்நாட்டில் செய்யப்பட்டன. இவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்பட்டன.
          தமிழக அரசின் ஏராளமான சலுகைகளைப் பெற்றுத் தொடங்கப்படும் இத்தொழிற்சாலைகளின் மூலம் கிடைக்கும் ஆதாயத்திலும் தமிழகத்திற்குப் பங்கு இருக்க வேண்டும். சீனா போன்ற பொதுஉடைமை நாடுகளில் அதைத்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்தான் "உண்மையான கம்யூனிஸ்டாயிற்றே', அப்படியெல்லாம் செய்வாரா என்ன?
காமராஜர் காலத்தில் ஏழை எளிய மாணவர்களும் கல்வியறிவு பெறும்வகையில் கல்வி இலவசமாக்கப்பட்டது. ஆனால் இவர் ஆட்சியில் கல்வி வணிகமயமானது.
            "இலவச மருத்துவக் காப்பீடு திட்டம்' பெரும் விளம்பரத்துடன் இவரால் தொடங்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டு மட்டும் இத்திட்டத்தின் மூலம் 415.43 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. "யாருக்கு' என்று சொன்னால் - தனியார் மருத்துவமனைகளுக்கு - அள்ளித் தரப்பட்டது. இந்தப் பணத்தை அரசு மருத்துவமனைகளுக்கு அளித்திருந்தால் அவை மேலும் வசதிகளைப்பெற்று மக்களுக்குத் தொண்டாற்றியிருக்கும். ஆனால் இவர்தான் "உண்மையான கம்யூனிஸ்டாயிற்றே!' அரசு மருத்துவமனைகளை நலிவடையவைத்து தனியார் மருத்துவமனைகளை ஊக்குவித்தார்.
         அரசுத் துறையில் இருந்த கனிமங்களை வெட்டியெடுக்கும் உரிமை 1993-ஆம் ஆண்டிலிருந்து தனியாருக்கும் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் விலை உயர்ந்த "கிரானைட்' போன்றவையும் ஆற்று மணலும் தங்கு தடையில்லாமலும் அனுமதி பெறாமலும் தனியாரால் சுரண்டப்படுகின்றன. இதை அரசுத் துறையில் செய்திருந்தால் ஆண்டிற்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் அரசுக்குக் கிடைத்திருக்கும். ஆனால் இவர்தான் "உண்மையான கம்யூனிஸ்டாயிற்றே!' அப்படியெல்லாம் செய்வாரா என்ன?
மின்சாரக் கட்டணத்தில் மீட்டருக்கு அரை பைசா குறைக்க வேண்டும் என்றுதான் விவசாயிகள் போராடினார்கள். ஆனால் 20 விவசாயிகளைச் சுட்டுக்கொன்று பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைச் சிறையில் அடைத்த பெருமை இந்த "உண்மையான கம்யூனிஸ்டுக்கே' உண்டு.
      சிம்சன் நிறுவனத் தொழிலாளர்கள் போராட்டம் போன்ற பல தொழிலாளர் போராட்டங்களை அடக்கி ஒடுக்கிய பெருமையும் இந்த "உண்மையான கம்யூனிஸ்டுக்கே' உண்டு.
          தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாத கொடுமை இந்த "உண்மையான கம்யூனிஸ்டு' ஆட்சியில் அரங்கேறியது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், அனுமதி பெறாமல் அத்துமீறி நுழைந்து வழக்கறிஞர்களை விரட்டிவிரட்டித் தாக்கியது இவருடைய காவல்படை; நீதிபதிகளும் இத் தாக்குதலிலிருந்து தப்பமுடியவில்லை. தலைமை நீதிபதியின் அனுமதியில்லாமல் உள்ளே புகுந்த காவல் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் இறுதிவரை மழுப்பிய பெருமை இந்த "உண்மையான கம்யூனிஸ்டுக்கே' உண்டு.
        "மோதல் சாவுகள்' என்ற பெயரில், யாரை வேண்டுமானாலும் சுட்டுக்கொல்லும் அதிகாரத்தை இவரது ஆட்சிக்காலத்தில் காவல்துறை பெற்றது. கடந்த முறை இவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஓராண்டுக் காலத்தில் 12 பேர் மோதல் சாவுகள் மூலமும் 13 பேர் காவல்நிலையச் சாவுகள் மூலமும் கொல்லப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் "சமூக விரோதிகள்' என குற்றம்சாட்டி இந்தக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க இந்த "உண்மையான கம்யூனிஸ்டு' முயன்றார்.
         இவர் ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கந்துவட்டி, கட்டைப்பஞ்சாயத்து ஆகியவற்றின் மூலம் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் தொடர்ந்து ஆட்டிப்படைக்கப்பட்டார்கள். அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், சமூக விரோதிகள் ஆகிய முத்தரப்பு கூட்டு உருவாகி மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அக்கிரமங்களையும் தங்கு தடையின்றி நடத்தியது.
       "வாரிசு அரசியல்', "குடும்ப அரசியல்' என்பவை கம்யூனிஸ்டுகளின் அகராதியிலேயே கிடையாது. ஆனால் இந்த "உண்மையான கம்யூனிஸ்டு' அவற்றையே அப்படியே பின்பற்றுபவர்.
       "நூறு பூக்கள் பூக்கட்டும், நூறு கருத்துகள் மோதட்டும்'' என்றார் மாசேதுங். நூற்றியோராவது பொதுவுடைமைப் பூவாகப் பூத்திருக்கிறார் கருணாநிதி!

நன்றி : தினமணி - 09.01.2013 

சனி, 5 ஜனவரி, 2013

அண்ணா அறிவாலயம் சங்கர மடமானது - தளபதிக்கு பட்டாபிஷேகம்...!


         திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணாவின் மறைவிற்கு பிறகு கட்சியை தன்  சொந்தக்கட்சியாக மாற்றிக்கொள்ள மக்களிடமும், கட்சித் தொண்டர்களிடமும் செல்வாக்குடன் திகழ்ந்த எம்.ஜி.ஆரை வெளியேற்றி பின் ஆட்சி செய்யும் வாய்ப்பையே  இழந்து விட்ட தற்போதைய (நிரந்தர) தலைவர்  கருணாநிதி, எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின் மீண்டும் ஆட்சி செய்யும் வாய்ப்பை பெற்றவுடன் சோர்ந்திருந்தவர் துளிர்த்து எழுந்தார்.  காய்ந்த மரமாக இருந்த திமுக மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தவுடன், கழகத்தை தன் குடும்பக்கட்சியாக மாற்ற நினைத்து, அதற்கு தடையாய் இருந்த வைகோவை வெளியேற்றினார். கட்சியை தன் குடும்பச்சொத்தாக மாற்றினார். இதனை எதிர்க்க கட்சிக்குள் இப்போது யாரும் இல்லை நிலையை உருவாக்கினார். அனால் திமுக தலைமைக்கான வாரிசு சண்டையை அவரால் அடக்க முடியவில்லை. கருணாநிதியின் அடுத்த வாரிசு அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரியா...? அல்லது தளபதி அண்ணன் ஸ்டாலினா...? தொண்டர்களே குழப்பத்திலிருந்தார்கள். அவ்வப்போது தொண்டர்களிடம் ஒரு பட்டிமன்றமே நடக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
               அந்தப் பட்டிமன்றத்திற்கு கழகத் தலைவரே இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தீர்ப்பு வழங்கினார். மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்த வைபவ விழாவில் பேசும் போது, ''திமுக  சங்கரமடமில்லை'' என்று ஒரு காலத்தில் சொன்ன கருணாநிதி அதை மறந்து ''திமுகவின் தலைமைக்கு தனது அடுத்த வாரிசாக தளபதி ஸ்டாலின் இருப்பார்'' என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு என்பது கட்சிக்குள்ளேயே ஒரு சாராருக்கு மகிழ்ச்சியையும், ஒரு சாராருக்கு அதிர்ச்சியையும் தந்தது. குறிப்பாக அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி அதிர்ந்தே போய்விட்டார். ''மூத்தவன் இருக்க இளையவனுக்கு பட்டாபிஷேகமா....?'' என்று கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். கட்சித் தொண்டர்கள் தாங்கள் யார் பக்கம் சாய்வது என்று தெரியாமல் ஒரு பக்கம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நீண்ட மெகா சீரியலின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல தமிழக மக்கள் கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
              தலைவரின் அறிவிப்பால் அவரது குடும்பம் இரண்டுபட்டுக் கொண்டிருக்கிறது. குடும்பக்கட்சி இரண்டுபடுமா... ? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

‘சஸ்பென்ஸ் இருந்தால்தான் படம் ஓடும்’ - சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு மீதான திமுக நிலை...?

           சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் திமுகவின் நிலை என்ன என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக திமுக கூறியது. 
           நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சியாவது தீர்மானம் கொண்டு வந்தால் அதை திமுக ஆதரிக்கும் என்று அதன் தலைவர் கருணாநிதி அறிவித்தார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து இடதுசாரிக்கட்சிகள் செப்டம்பர் 20 -ம் தேதி பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. இதற்கு திமுக ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் செவ்வாயன்று திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தார். இதுகுறித்து கேட்டதற்கு ப.சிதம்பரம், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினார். சிதம்பரம் தனக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்க வந்ததாக கருணாநிதி கூறினார்.
          சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அப்போது அது குறித்து திமுக முடிவெடுக்கும் என்றும் கருணாநிதி கூறினார். இந்நிலையில் புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் சில்லரை வர்த்தகத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக முடிவெடுக்கும் என்று கூறினார். தமிழகத்திலுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தங்களை பெருமளவு பாதிக்கும் என்று அஞ்சுகின்றனர். இது தொடர்பாக நாங்கள் விவாதித்து வர்த்தகர்களின் நலனைக் கருத்தில்கொண்டு முடிவெடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார். 
           நான் 100 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளேன். சஸ்பென்ஸ் இருந்தால் தான் ஒரு திரைப்படம் வெற்றி பெறும் என்று அவர் கூறினார். சில்லரை வர்த்தகத்தை எதிர்த்து வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானத்தை இடதுசாரிக்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தால் அதை திமுக ஆதரிக்குமா என்று கேட்டதற்கு, கட்சியின் நாடாளுமன்றக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தொடர்பாக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் தமது கட்சி அதை ஆதரிக்கும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அரசின் முடிவை நிராகரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானம் கொண்டுவர இடதுசாரிக்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில் யாராவது தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்போம் என்று கூறிய திமுக தலைவர், தற்போது ஆலோசித்து உரிய முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார்.
 நன்றி :


courtesy : The Hindu

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

கருணாநிதி அன்று எய்த அம்பு இன்று அவர் மீதே பாய்கிறது...!

            ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு பல்வேறு இழுபறிக்குப் பிறகு ஒரு வழியா உயர்நீதிமன்றத்தின் தயவால் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. 
        ஆரம்பத்தில் மாநாட்டு வேலைகள் எந்தவித தடங்களும் இல்லாமல் தொடங்கப்பட்டு, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் விதமாக  அரண்மனை போல் அலங்காரப் பந்தல்கள் கம்பீரமாக உயர்த்தி நிறுத்தப்பட்டு, வழியெங்கும் வரவேற்பு வளைவுகள் என ஒரே தடபுடல் ஏற்பாடுகள் தான்.
         இதற்கிடையில் மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து ''டெசோ'' மாநாட்டில்   ''ஈழம்'' என்ற வார்த்தையை உபயோகிக்கக் கூடாது என்று தடைவிதித்தது. மத்திய அரசின் இந்த செயல் டெசோ வட்டாரத்தில் அதிர்ச்சியையும், தமிழக காவல்துறை வட்டாரத்தில் உற்சாகத்தையும் அளித்தது. இந்த சூழ்நிலையில் தான், நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இரவு  தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் என்று சொல்லி மாநாட்டிற்கு அனுமதி மறுத்தது.  உடனே நேற்று திமுக சென்னை உயர்நீதிமன்றத்தை நோக்கி ஓடியது. இரண்டு நீதிபதிகள் விசாரித்து இன்று ஞாயிறு நண்பகல் வரை ஒத்திப்போட்டார்கள்.
               ஏற்பாடுகளை முன்னின்று செய்யும் திமுக தலைவர் கருணாநிதிக்கு இது ஒரு சவாலாக போய்விட்டதால், மாநாட்டை நிறுத்துவதாக இல்லை என்று அறிவித்து, உற்சாகமிழந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தி, மாநாட்டு முந்தைய ஆய்வரங்கம் சென்னையில் ஒரு ஓட்டலிலும், மாநாடு திமுக தலைமை நிலையத்திலும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்தார்.  அதன்படி ஆய்வரங்கம் தொடங்கப்paபட்டு நடந்துகொண்டிருக்கும் வேளையில் உயர்நீதிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்ற தீர்ப்பு தேனாய் பாய்ந்தது. தீர்ப்பை அடுத்து ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மிக உற்சாகமாய் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
            ஒரு மாநாட்டிற்கு அனுமதி மறுப்பது என்பதும், தடை செய்வது என்பதும் கருத்துரிமைக்கு எதிரானது. கருத்து சொல்லும் உரிமையை பறிப்பதாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் யாரும் இதை ஏற்கமாட்டார்கள். 
            அதே சமயம் திமுக தலைவர் கருணாநிதியும், திமுகவினரும், ''டெசோ'' மாநாடு நடத்துபவர்களும் கடந்த காலங்களை பின்னோக்கிப்பார்க்க வேண்டும்.
            கடந்த 1990 - ஆம் ஆண்டு ஜூன்  பழ.நெடுமாறன் ''தமிழர் தன்னுரிமை மாநாடு என்ற ஈழத்தமிழர் ஆதரவு மாநாடு ஒன்றை நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தார். ஆனால் அந்த மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு அன்றைக்கு ஆட்சியில் இருந்த இதே முன்னாள் முதல்வர் தான்  என்பதை யாரும் மறந்துவிடமுடியாது.  அதுமட்டுமல்ல, அந்த 
மாநாடு தொடர்புடைய சாலை.இளந்திரையன் உள்ளிட்ட பலரையும் தமிழக போலீசார்  கைது செய்தனர். 
            மீண்டும் 1996 - ஆம் ஆண்டும் இதே முன்னாள் முதல்வர் அதிகாரத்திலிருந்த போது பா. ம. க. நடத்திய மாநாட்டில் ஈழம் குறித்து பேசியதற்காக இப்போது கருணாநிதியோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் என்பதையும் யாரும் மறந்திருக்க முடியாது.   
           சென்ற திமுக lஆட்சியில் இன்றைக்கு   தி.மு.க., கூட்டணியில் இருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னையில், 2008 - ஆம் ஆண்டு டிசmம்பர் மாதம்  27 - ஆம்  தேதி, "ஈழ உலக அங்கீகார மாநாடு' நடத்தினார். அப்போது செய்யப்பட்ட விளம்பரங்களில் "ஈழம்'' என்ற வார்த்தையை போஸ்டர் ஒட்டியும், பெயின்ட் அடித்தும் போலீசார் மறைத்தனர். அப்போதும் தமிழக முதல்வராக இருந்தவர் கருணாநிதி தான் என்பதும் யாராலும் மறந்திருக்க முடியாது. 
             இப்படியாக ''ஈழம்'' குறித்து பேசியவர்கள் மற்றும் மாநாடு நடத்தியவர்கள் மீது தன் ஆட்சிக் காலத்தில் தான் எய்த அம்பு தான் இப்போது தன் மீது பாய்கிறது என்பதை கருணாநிதியால் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.