வரவர தமிழ்நாட்டு அரசியல் கொஞ்சம் கூட சுவாரசியமே இல்லாம போயிட்டு இருக்கு. அடிக்கடி இந்த ரெண்டு திராவிட தலைகளும் மோதிப்பாங்களே. அத நாடே வேடிக்கை பாக்குமே. அது மாதிரியான சுவாரசியங்கள சமீப காலமா நம்மாள பாக்கவே முடியலையே. நாம்ப தமிழ்நாட்டுல தான் இருக்கோமான்னே சந்தேகமா இல்ல இருக்கு. அந்த ரெண்டு தலைகளும் மாத்தி மாத்தி சேத்தை வாரி அடிச்சிக்கிறத பாக்கவே அலாதியா இருக்குமே. அந்த மாதிரியான சம்பவங்கள இனி பாக்கவே முடியாதோ...?
கருணாநிதிக்கு ஒன்றென்றால் ஜெயலலிதா அறிக்கை விடுவதும், ஜெயலலிதாவிற்கு ஒன்றென்றால் கருணாநிதி அறிக்கை விடுவதும் என இருவரும் மாறிமாறி அம்பு விட்டுக்கொள்வார்களே. அந்த அரசியல் சாகச விளையாட்டுகள் இப்போது எங்கே போனது...?
22 நாட்களுக்கு முன்பு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட போது திமுக தலைவர் கருணாநிதி எந்தவித ரீயாக்ஷனும் காட்டாமல் அமைதியா இருந்தார். அத பாத்து பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், பொதுமக்களும் ஏமாந்து போயிட்டாங்கன்னா பாத்துக்கோங்களேன்.
சரி அப்போ தான் அப்படின்னா... ஜெயலலிதாவிற்கு ஜாமீன் அளிக்கப்பட்டபோதும் அதே ரீயாக்ஷன் தான். ரெண்டு நாள் கழித்து ''அம்மையார் சிறை சென்ற போதும் நான் சந்தோஷப்படவில்லை.... இப்போது ஜாமீனில் வெளியே வந்தபோதும் நான் வருத்தப்படவுமில்லை...'' என்று நம்ப தலீவர் வழக்கத்திற்கு மாறாக வாய்மொழிந்திருக்கிறார். தலீவர் தன்னுடைய இயற்கையான குணாதிசயங்களில் இருந்து மாறுபட்டிருக்கிறாரே என்றும் நம்ப தலீவர் அநியாயத்திற்கு நல்லவரா இருக்காரே என்றும் தமிழக மக்களுக்கா ஒரே ஆச்சரியப்பட்டு போயிட்டாங்க. தமிழ்நாட்டுல இன்னும் என்னென்ன அதிசயங்கள் நடக்கப்போவுதோ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக