பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக அந்நாட்டின் மருந்துக் கம்பெனிகளை மகிழ்விக்கும் விதமாக, தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் ''விலைக் கட்டுப்பாட்டு அதிகாரத் தை'' நீக்கினார். அதாவது, உயிர்காப்பு மருந்துகள் உள்ளிட்ட 108 வகையான மருந்துகள் மீதான விலைக்கட்டுப்பாட்டை மோடி அரசு ஒரேயடியாக ரத்து செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து உயிர்காக்கும் மருந்துகளின் விலை மிகக் கடுமையாக, 14 மடங்கு உயர்ந்துள்ளது.
புற்றுநோய் மருந்தின் விலை 8500 ரூபாயிலிருந்து 1,10,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது உலகிலேயே எந்த நாட்டிலும் நடைபெறாத கொடூரமான அராஜகமாகும் என சுகாதாரத் துறையில் பணியாற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டணம் தெரிவித்துள்ளனர்.
விலை விபரம் :
₹ புற்றுநோய் மருந்தான 'கில்வெக்' மாத்திரை... ரூ. 8500லிருந்து 1 லட்சட்த்து 8000மாக உயர்வு. (உலகில் எந்த நாட்டிலும் இதுபோல் 14 மடங்கு உயர்ந்ததில்லை)
₹ ரத்தக் கொதிப்பிற்கான 'பிளேவிக்ஸ்' மாத்திரை... 147 ரூபாயிலிருந்து 1,615 ரூபாய் வரை உயர்வு.
₹ வெறிநாய்க் கடிக்கான ஊசியின் விலை... 2,670 ரூபாயிலிருந்து 7000 ரூபாய் வரை உயர்வு.
(இதேபோல்தான் 108 வகையான மருந்துகளுக்கும் விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.)
இன்னொரு பக்கம்
______________________
மருந்து விலைகளின் கட்டுப்பாட்டை நீக்கியதைத் தொடர்ந்து...
₹ சன் பார்மா மற்றும் ரான்பாக்ஸி மருந்துக் கம்பெனிகளின் லாப விகிதம் 0.7 விழுக்காடு கூடியுள்ளது. இவைகளின் பங்குகளின் விலையும் 2 விழுக்காடு கூடியுள்ளது.
₹ டோரண்ட் மற்றும் லுர்ப்பின் மருந்துக் கம்பெனிகளின் லாபங்கள், முறையே 1.5 விழுக்காடும், 0.7 விழுக்காடும் அதிரித்துள்ளது.
₹ ஜிஎஸ்கே பார்மா மற்றும் டேவிஸ் லேப் ககம்பெனிகளின் பங்குகளின் விலை 1 விழுக்காடும் கிளென்மார்க் பங்கின் விலையும் கூடியுள்ளது.
# பாரத் மாத்தாக்கி ஜே!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!
நன்றி : தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக