கார்ட்டூன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கார்ட்டூன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 5 பிப்ரவரி, 2014
மன்மோகன் சிங் - ராகுல் காந்தி - கருணாநிதி - இவர்களின் தேர்தல் பயம்...!
லேபிள்கள்:
கருணாநிதி,
கார்ட்டூன்,
நாடாளுமன்றத்தேர்தல்,
மன்மோகன் சிங்,
ராகுல் காந்தி
வியாழன், 30 ஜனவரி, 2014
காங்கிரஸ் கட்சியினரால் மீண்டும் கொல்லப்பட்ட காந்தி...!
![]() |
| இது தீக்கதிர் நாளிதழுக்காக நான் வரைந்த கார்ட்டூன். நன்றி - தீக்கதிர் / 30.01.2014 |
கொல்லப்பட்டு அறுபது ஆண்டுகள் கழித்து, அதே காந்தி இன்றைய காங்கிரஸ் கட்சியினரால் அணு அணுவாகக் கொல்லப்படுகிறார். இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தினம் தினம் இந்தியாவிற்குள் அன்னிய நிறுவனங்களை அனுமதியளித்து தேச துரோகச்செயல் செய்வதன் மூலம் காந்தியை மீண்டும் கொன்றுவிட்டார்கள். எதிர்காலத்தில் இப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தேச துரோகச்செயலில் ஈடுபடுவார்கள் என்பதற்காக தான் அன்றே காந்தி காங்கிரஸ் கட்சியை கலைத்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியும், அதற்கு துணை போகும் பாரதீய ஜனதா கட்சியும் தங்களது கொள்கைப் பிடிப்பாய் செய்யும் ''தேச துரோகச்செயல்களை'' இனியும் அனுமதிக்கலாகாது. வரும் நாடாளுமன்றத்தேர்தலில் இவர்களை ஓட ஓட விரட்டிடவேண்டும். ஊழல் சக்திகளையும், மதவாத சக்திகளையும் தோல்வியடையச் செய்திட வேண்டும். காந்தி ஆசைப்பட்டது போல் காங்கிரஸ் கட்சியை கலைத்திட வேண்டும். கடலில் அஸ்தியாய் கரைத்திட வேண்டும். அங்கு தானே காந்தியின் அசதியையும் கரைத்தார்கள்.
காந்தியை நினைவுகொள்ளும் இந்நாளில் சபதமேற்போம். காந்தியை கொலை செய்து கொன்ற மதவாத சக்தியான பாரதீய ஜனதா கட்சியினையும், அந்நியர்களுக்கு இந்தியாவில் மீண்டும் இடம் கொடுத்து, அந்நியர்களை விரட்டியடிக்கப் போராடிய காந்தியை மீண்டும் கொன்றுவிட்ட காங்கிரஸ் கட்சியினையும் வரும் தேர்தலில் விரட்டியடிப்போம். தோற்கடிப்போம். சபதமேற்போம்.

காந்தி கொல்லப்பட்ட தினம்,
கார்ட்டூன்,
தியாகிகள் தினம்
ஞாயிறு, 10 ஜூன், 2012
''இந்தி எதிர்ப்புப் போராட்டம்'' - ஓர் அரசியல் வியாபாரம் - தமிழை ஒழித்துக் கட்டி ஆங்கிலத்தை தான் வளர்த்தது...!
''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்'' - இந்த வரிகள் பாரதியின் வரிகள். மற்ற மொழிகளை காட்டிலும் இனிதானது தமிழ் மொழி என்று பாரதி தமிழ் மொழியின் இனிமை குறித்து செய்த பிரகடனம். அவரது தாய் மொழியாம் தமிழ மொழி மீதான பற்றுதல் அல்லது ஈடுபாடு காரணமாகவோ அல்லது இன்றைய திராவிட கட்சிகளைப் போல் பகட்டுகாகவோ ஓட்டு அரசியல்களுக்காகவோ பாரதியால் எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல இது.
பாரதி தமிழ் மட்டும் கற்றவனல்ல. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, பிரஞ்சு போன்ற மொழிகளை கற்றிருந்ததாலும் அறிந்திருந்ததாலும் தான் அவரால் இவ்வாறு எழுதமுடிந்தது.
அதனால் மொழிகள் எதுவும் நமக்கு எதிரிகளல்ல. எல்லா மொழிகளையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மற்ற மொழிகளின் மீதுள்ள ஈர்ப்பில் நமது தாய்மொழியை தூக்கி எரிந்துவிடக்கூடாது.
ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடந்தது...? நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1937 -ஆம் ஆண்டில் ராஜாஜி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி அன்றைய சென்னை மாகாணத்தில் பள்ளிகளில் மீது சட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட கட்டாய இந்தி மொழி திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் அவர்களும், அன்றைய நீதிக்கட்சியினரும் போராடினார்கள். அன்றைய சூழ்நிலையில் அது சரியானதே. ஒரு மொழி தெரியாத மக்களின் மீது அந்த மொழியை திணிப்பது என்பது சரியானதல்ல என்பதைத் தான் அந்த போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அனால் பிற்காலத்தில் 1950 - 1960 - களில் திராவிட முன்னேற்றக்கழகம் தமிழ்நாட்டு மக்களை ஈர்த்து ஆட்சியில் அமர்வதற்கு ''இந்தி எதிர்ப்பை'' ஒரு ஆயுதமாக பயன்படுத்தியது. அதில் வெற்றியும் கண்டது. ''இந்தி எதிர்ப்பு'' என்ற கோஷம் ஒன்றை மட்டுமே வைத்தே ஆட்சிக்கு வந்த கட்சி தி. மு. க., அன்றைய பிரதமர் நேருவுக்கும் திமுக-வின் இந்த வளர்ச்சி தேவைப்பட்டது. இப்படி திமுக வளர்ந்தால் தான், தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியை தடுக்கமுடியும் என்பது தான் நேருவின் கணக்கு. எந்த மாநிலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ந்தாலும், பற்றி எரியக்கூடிய அளவிலான அந்த மாநிலம் சம்பந்தமான ஒரு பிரச்சனையை கொளுத்திப்போட்டு ஊதி பெரிதாக கொழுந்துவிட்டு எரியச் செய்து விட்டு, மக்களை திசைத் திருப்பி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியை ஒழித்துக்கட்டுவது தான் அன்றைக்கும், இன்றைக்கு காங்கிரஸ்காரர்களின் வேலை.
அப்படித் தான் நேருவும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஊதிவிட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியை ஒழித்துக்கட்டி திமுக- வை வளரச்செய்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அந்த வகையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தது என்றே சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக மாணவர்களை வெகுவாக ஈர்த்தது. மாணவர்களெல்லாம் திமுக -வின் பக்கம் சாய்ந்தனர். திமுக -வின் இந்த வளர்ச்சி தான், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சருமான காமராஜர் அவர்களையே ஒரு மாணவன் மூலம் தோற்கடிக்கச் செய்தது.
இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது, தமிழக மக்களின் தாய் மொழியாம் தமிழ் மொழியை அழியாமல் வளர்க்க வேண்டும் என்பது தான். அந்த போராட்டத்தின் உள்நோக்கம் அது தான். ஆனால் நடந்தது என்ன...? இந்தி எதிர்ப்பு கோஷத்தை முன் வைத்து ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா தி.மு.கழகம் போன்றக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும், ஹிந்தி மொழியை பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டது. ஆனால், மாறாக தமிழை வளர்ப்பதற்கு பதிலாக ஆங்கிலத்தை தான் வளர்த்தார்கள் என்பது தான் இந்த இரு திராவிடக் கட்சிகளும் செய்த மகத்தான சாதனையாகும்.

இந்தி எதிர்ப்பு,
கார்ட்டூன்
சனி, 21 ஏப்ரல், 2012
மம்தாவின் பெருமை பேசும் கார்ட்டூன்கள் - கண்காட்சி...!
லேபிள்கள்:
கார்ட்டூன்,
மம்தா பானர்ஜி
வெள்ளி, 13 ஏப்ரல், 2012
மம்தாவின் அராஜகம் ஓயவில்லை....!
மேற்குவங்கத்தில் மம்தாவின் அராஜக போக்கும், ஜனநாயகத்திற்கு எதிரான போக்கும் கட்டுக்கடங்காமல் போய்கொண்டிருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை சட்டம் நடைமுறையில் உள்ளதோ என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. பதினைந்து நாட்களுக்கு முன்பு தான் மேற்குவங்க அரசு நூலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் பத்திரிக்கைகளுக்கும், ஆங்கில பத்திரிக்கைகளுக்கும் தடைவிதித்திருந்தார். அது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என்று பத்திரிகை உலகமும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த எதிர்ப்பு அலை ஓய்வதற்குள், அடுத்து பள்ளிப் பாடப்புத்தகத்தில் உள்ள காரல் மார்க்ஸ் மற்றும் ரஷ்யப் புரட்சி பற்றியப் பாடங்களை நீக்கி மம்தா உத்தரவிட்டது என்பது மேற்குவங்கம் மட்டுமல்லாது நாடு முழுவதுமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மதம் பிடித்த யானை மண்ணை அள்ளி தன் தலையிலேயே போட்டுக்கொள்வது போல் அடுத்து, நேற்று வியாழக்கிழமை இரவு, அம்பிகேஷ் மகாபத்ரா என்ற மேற்குவங்க ஜாதவ்புர் பல்கலைக்கழக வேதியியல் துறைப் பேராசிரியர் மம்தாவின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் மம்தாவை விமர்சனம் செய்து கார்ட்டூன் தயார் செய்து வெளியிட்டார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. அது மட்டுமல்ல இந்திய மக்களுக்கு கருத்து தெரிவிக்கும் உரிமை என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டமே கொடுத்திருக்கிறது. கார்ட்டூன் வெளியிட்டதற்காக அந்த பேராசிரியரை கைது செய்ததன் மூலம் மம்தா இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையே மீறியிருக்கிறார் என்று தான் பொருள்.
தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் மம்தாவின் அராஜகப் போக்கு என்பது நாம் மறந்துவிட்ட சர்வாதிகாரி ஹிட்லரை தான் நமக்கெல்லாம் நினைவுப்படுத்துகிறது....
போகிற போக்கைப் பார்த்தால், அந்த கார்ட்டூனைப் பார்த்து வாய்விட்டு சிரித்ததற்காக பொதுமக்களும் தண்டிக்கப்படுவார்களோ என்கிற அச்சம் எழுகிறது. இன்றைக்கு 14. 04. 2012 தேதியிட்ட இந்து பத்திரிகையில் வந்திருக்கும் கார்ட்டூனைப் பார்க்கும் போது நமக்கெல்லாம் அப்படித் தான் தோன்றுகிறது.
![]() |
| Courtesy : The Hindu / 14.04.2012 |
லேபிள்கள்:
கார்ட்டூன்,
கைது,
பேராசிரியர்,
மம்தா பானர்ஜி,
மேற்கு வங்கம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)