இது தீக்கதிர் நாளிதழுக்காக நான் வரைந்த கார்ட்டூன். நன்றி - தீக்கதிர் / 30.01.2014 |
கொல்லப்பட்டு அறுபது ஆண்டுகள் கழித்து, அதே காந்தி இன்றைய காங்கிரஸ் கட்சியினரால் அணு அணுவாகக் கொல்லப்படுகிறார். இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தினம் தினம் இந்தியாவிற்குள் அன்னிய நிறுவனங்களை அனுமதியளித்து தேச துரோகச்செயல் செய்வதன் மூலம் காந்தியை மீண்டும் கொன்றுவிட்டார்கள். எதிர்காலத்தில் இப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தேச துரோகச்செயலில் ஈடுபடுவார்கள் என்பதற்காக தான் அன்றே காந்தி காங்கிரஸ் கட்சியை கலைத்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியும், அதற்கு துணை போகும் பாரதீய ஜனதா கட்சியும் தங்களது கொள்கைப் பிடிப்பாய் செய்யும் ''தேச துரோகச்செயல்களை'' இனியும் அனுமதிக்கலாகாது. வரும் நாடாளுமன்றத்தேர்தலில் இவர்களை ஓட ஓட விரட்டிடவேண்டும். ஊழல் சக்திகளையும், மதவாத சக்திகளையும் தோல்வியடையச் செய்திட வேண்டும். காந்தி ஆசைப்பட்டது போல் காங்கிரஸ் கட்சியை கலைத்திட வேண்டும். கடலில் அஸ்தியாய் கரைத்திட வேண்டும். அங்கு தானே காந்தியின் அசதியையும் கரைத்தார்கள்.
காந்தியை நினைவுகொள்ளும் இந்நாளில் சபதமேற்போம். காந்தியை கொலை செய்து கொன்ற மதவாத சக்தியான பாரதீய ஜனதா கட்சியினையும், அந்நியர்களுக்கு இந்தியாவில் மீண்டும் இடம் கொடுத்து, அந்நியர்களை விரட்டியடிக்கப் போராடிய காந்தியை மீண்டும் கொன்றுவிட்ட காங்கிரஸ் கட்சியினையும் வரும் தேர்தலில் விரட்டியடிப்போம். தோற்கடிப்போம். சபதமேற்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக