மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் பேரெழுச்சியுடன் புதனன்று துவங்கியது. உழைக்கும் மக்களின் உரிமைக்குரலாய் திகழும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாட்டின் முதல் நிகழ்வான ஜோதி பெறும் நிகழ்ச்சி அபிராமி திரை யரங்கு அருகில் நடைபெற் றது. இசை நிகழ்வோடு துவங்கிய மாநாடு வங்கி ஊழியர் அமைப்பின் பீட் சேர்ந்திசைக்குழுவின் இசைநிகழ்வுடன் மாநாடு இனிதே துவங்கியது. இராஜராஜேஸ்வரியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தியாகி மணவாளன் எழுதிய “விடு தலைப்போரில் வீழ்ந்த மலரே“ என்ற பாடல் இசைக்கப்பட்ட போது நிலவிய அசாத்தியமௌனம் பெரும் நெகிழ்வை ஏற்படுத்தியது. இராஜராஜேஸ்வரிக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான தோழர். பிருந்தா காரத் பொன்னாடை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தார். கொடி, ஜோதிக்கு வரவேற்பு மதுரை வில்லாபுரம் வீராங்கனை லீலாவதி நினைவுக் கொடியைக் குழுத்தலைவர் தோழர். என்.நன்மாறனிடமிருந்து, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர். என்.வரதராஜன் பெற்றுக்கொண்டார். வர்க்கப் போராட்டத்தின் வாரிசுகள் நாங்கள் என உலகிற்கு எடுத்துக்காட்டிய வெண்மணி தியாகிகளின் நினைவு ஜோதியை குழுத்தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர். வி.தம்புசாமியிடமிருந்து மாநிலக்குழு உறுப்பினர் தோழர். கோ.வீரய்யன் பெற்றுக்கொண்டார். பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கானப் போராட்டத்திற்காக தூக்குமேடை ஏறிய சின்னியம்பாளையம் தியாகிகளின் ஜோதியை குழுத்தலைவர் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர். சி.பத்மநாபனிடமிருந்து, சுதந்திரப் போராட்ட வீரரும், கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத்தலைவருமான தோழர். என். சங்கரய்யா பெற்றுக்கொண் டார். 1948 ஆம் ஆண்டு சேலம் சிறையில் 22 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீரத்தியாகிகளின் ஜோதியை குழுத் தலைவர் மாநிலக்குழு உறுப்பினர் தோழர். ஜி.ஆனந்தனிடமிருந்து முதுபெரும் தலைவர் தோழர். ஏ. அப்துல்வஹாப் பெற்றுக் கொண்டார். மாநாட்டுக் கொடியை எழுச்சிமிகு முழக்கத்திற்கு மத்தியில், கட்சியின் முதுபெரும் தலைவரும், மத்தியக்குழு உறுப்பினருமான தோழர். ஆர்.உமாநாத் ஏற்றிவைத்தார். தியாகிகள் நினைவாக எடுத்துவரப்பட்ட ஜோதிகளை ஏ.வி.முருகய்யன், வி.மாரிமுத்து, நாகைமாலி எம்.எல்.ஏ ஆகியோர் மாநாடு நடைபெறும் தோழர் ஜோதிபாசு அரங்கிற்கு எடுத்து வந்தனர். பொதுமாநாடு தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு கட்சியின் அகில இந்தியத்தலைவர்களும், மாநிலத்தலைவர்களும், மாநாட்டுப்பிரதிநிதிகளும் மலரஞ்சலி செலுத்தினர். அதன்பின் பொது மாநாடு துவங்கியது. இம்மாநாட்டிற்கு பெ.சண்முகம், கே.காமராஜ், மூசா, எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.வேல்முருகன் ஆகியோர் தலைமைக்குழுவாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மக்களுக்கான போராட்டத்தில் தன்னை ஈந்து கட்சியைக் காத்த மாவீரர்களுக்கும், காலமான முதுபெரும் தலைவர்களுக்கும் இரண்டு நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் வி.மாரிமுத்து வரவேற்புரையாற்றினார். கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ்காரத் மாநாட்டினைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவருடைய ஆங்கில உரையை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர். உ.வாசுகி தமிழில் மொழியாக்கம் செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். பிரதிநிதிகள் மாநாடு பொதுமாநாட்டினைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணியளவில் பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கையைச் சமர்ப்பித்தார். இதன் பின் பிரதிநிதிகள் விவாதம் துவங்கியது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன்பிள்ளை, கே.வரதராசன், பிருந்தாகாரத், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஏ.கே.பத்மநாபன், சுதாசுந்தரராமன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாடு தொடர்ந்து பிப்ரவரி 25ம் தேதி வரை நடை பெறுகிறது. |
மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 23 பிப்ரவரி, 2012
சி.பி.எம் மாநில மாநாடு - எழுச்சியுடன் துவங்கியது...சிறப்பு மலர் - 3
லேபிள்கள்:
சிறப்பு மலர்,
மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு
புதன், 22 பிப்ரவரி, 2012
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்துவது அவசியம் - தோழர் பிரகாஷ் காரத்
சிறப்பு மலர் - 2
இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 - வது தமிழ் மாநில மாநில மாநாடு நாகப்பட்டினம் வெண்மணி நகரில் எழுச்சியுடன் துவங்கியது. கட்சியின் மூத்தத் தோழரும் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர். ஆர். உமாநாத் அவர்கள் கட்சித் தோழர்களின் விண்ணைப் பிளக்கும் வாழ்த்து முழக்கங்களுக்கிடையில் செங்கொடியை ஏற்றிவைத்தார். கட்சியின் பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ் காரத் மாநாட்டினை துவக்கிவைத்து எழுச்சியுரையாற்றினார்.
இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 - வது தமிழ் மாநில மாநில மாநாடு நாகப்பட்டினம் வெண்மணி நகரில் எழுச்சியுடன் துவங்கியது. கட்சியின் மூத்தத் தோழரும் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர். ஆர். உமாநாத் அவர்கள் கட்சித் தோழர்களின் விண்ணைப் பிளக்கும் வாழ்த்து முழக்கங்களுக்கிடையில் செங்கொடியை ஏற்றிவைத்தார். கட்சியின் பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ் காரத் மாநாட்டினை துவக்கிவைத்து எழுச்சியுரையாற்றினார்.
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்துவது என்பது இன்றைக்கு அவசியமான ஒன்றாகும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பின்பற்றும் புதிய தாராளமயக் கொள்கையினால் நாட்டில் உண்டான துயரங்களையும், மாபெரும் ஊழல்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒரு சக்தி வாய்ந்த இயக்கமாக கட்சியை கட்டவேண்டும் என்று தோழர். பிரகாஷ் காரத் தனது துவக்கவுரையில் கட்சித் தோழர்களை கேட்டுக்கொண்டார்.
அவர் மேலும் பேசுகையில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் அடிப்படையில் ஒரே மாதிரியான கட்சிகளே. ஊழலை பொறுத்தவரையில் இரண்டும் ஒத்தக்கட்சிகளே என்று கூறினார்.
மார்க்சிஸ்ட் கட்சியினால் மட்டுமே ஊழல் அற்ற ஆட்சியை அளிக்க முடியும். மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழலற்ற ஆட்சியை வழங்கியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.
முன்னதாக கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான தோழர். கே. பாலகிருஷ்ணன் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார். மேலும் மாநாட்டில் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கே. வரதராஜன், பிருந்தா காரத், எஸ். ராமச்சந்திரன், பி. வி. ராகவுலு போன்ற தோழர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.
லேபிள்கள்:
சிறப்பு மலர்,
மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு
செவ்வாய், 21 பிப்ரவரி, 2012
தியாகபூமி நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு - சிறப்பு மலர் -1
| |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 20 - வது மாநாடு நாகப்பட்டினத்தில் வெண்மணி நகர், தோழர் ஜோதிபாசு அரங்கத் தில் (லலிதா மகால்) பிப்ரவரி 22 புதன்கிழமை கோலாகலமாகத் துவங்குகிறது. மகத்தான இந்த மாநாடு பிப்ரவரி 22 முதல் 25 வரை 4 நாட்கள் உற்சாகப் பேரெழுச்சியோடு நடைபெறுகிறது. பிப்ரவரி – 25 பிற்பகல் 2 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்டப் பேரணியும் மாபெரும் பொதுக்கூட்டமும் நடை பெறுகின்றன. கொடியேற்றம் - – சேர்ந்திசை பிப்ரவரி 22 காலை 9 மணிக்கு, நாகை அபிராமி அம்மன் திருவாசல் முன்பு, 20வது மாநாட்டைக் குறிக்கும் வண்ணம் 20 செங்கொடிகளைத் தலைவர்கள் ஏற்றுகிறார்கள். அப்போது சென்னை ‘பீட்’ இசைக்குழுவினரின் சேர்ந்திசைப் பாடல்கள் எழுச்சியுடன் ஒலிக்கும். பொது மாநாடு தொடர்ந்து தோழர் ஜோதி பாசு அரங்கத்தில் (லலிதா மகாலில்) பொது மாநாடு துவங்குகிறது. தோழர் லீலாவதி நினைவுக் கொடியை மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன் பெற்றுக்கொள்கிறார். வெண்மணி தியாகிகள் ஜோதியை முதுபெரும் தலைவர் கோ. வீரய்யன் பெறுகிறார். சேலம் சிறைத் தியாகிகள் ஜோதியை முதுபெரும் தலைவர் ஏ.அப்துல் வஹாப் பெறுகிறார். மத்தியக்குழு உறுப்பினர் ஆர். உமாநாத் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து தலைமைக்குழு தேர்வு நடை பெறுகிறது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ, அஞ்சலி தீர்மானம் முன்மொழிகிறார். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவரும், மாநிலக்குழு உறுப் பினருமான வி.மாரிமுத்து வரவேற்புரை ஆற்றுகிறார். கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றுகிறார். சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வாழ்த்துரை வழங்குகிறார். மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் நூல் வெளியிடுகிறார். தொடர்ந்து மூத்த தோழர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதிநிதிகள் மாநாடு அன்று மதியம், 12 மணிக்கு மாநாட்டுக்குழுக்கள் தேர்வு நடைபெறுகிறது. மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை சமர்ப்பிக்கிறார். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 22 மாலை 5 மணி முதல் பிப் ரவரி 25 பிற்பகல் 2 மணி வரை பிரதிநிதிகள் விவாதம் – நடை பெறுகிறது. இதைத் தொடர்ந்து, மாநிலச் செயலாளர் தொகுப்புரை வழங்குகிறார். பின்னர் புதிய மாநிலக்குழுத் தேர்வும், – அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகள் தேர்வும் நடை பெறுகின்றன. பிரதிநிதிகள் மாநாட்டின் நிறைவாக அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, கே.வரதராசன், பிருந்தா காரத், பி.வி.ராகவலு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் நிறைவுரை ஆற்றுகிறார். வரவேற்புக்குழுச் செயலாளரும் நாகை மாவட்டச் செயலாளருமான ஏ.வி.முருகையன் நன்றியுரை ஆற்றுகிறார். பிரம்மாண்டப் பேரணி மாநாட்டில் நிறைவாக 5000 செந்தொண்டர்கள், அகில இந்திய - மாநிலத் தலைவர்கள், மாநாட்டுப் பிரதிநிதிகள், இயக்கத் தோழர்கள் என 2 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்டப் பேரணி பிப்ரவரி 25 பிற்பகல் 3 மணிக்கு புத்தூர் அண்ணா சிலையில் இருந்து மேளதாள வாத்தியங்களுடன் புறப்படுகிறது. மாபெரும் பொதுக்கூட்டம் அன்று மாலை 5 மணிக்கு பி.சீனிவாசராவ் திடலில் (வலி வலம் தேசிகர் பாலிடெக்னிக் திடல்) மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. முன்னதாக, கலைக்குழுக்களின் கலைநிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. பொதுக்கூட்டத்திற்கு நாகை மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் தலைமை ஏற்கிறார். மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து வரவேற்புரை ஆற்றுகிறார். பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சிறப்புரை ஆற்றுகிறார். மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் என். சங்கரய்யா, மத்தியக்குழு உறுப்பினர் ஆர். உமாநாத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என்.வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி, முதுபெரும் தலைவர் கோ.வீரய்யன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன் எம். எல்.ஏ., கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆகியோர் எழுச்சியுரை ஆற்றுகிறார்கள். மாநாட்டு வரவேற்புக்குழுப் பொருளாளர் நாகைமாலி எம்.எல்.ஏ. நன்றியுரை ஆற்று கிறார். தொடர்ந்து பொதுக் கூட்டத்தின் நிறைவாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. | |
லேபிள்கள்:
சிறப்பு மலர்,
மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
.jpg)



