புதன், 22 பிப்ரவரி, 2012

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்துவது அவசியம் - தோழர் பிரகாஷ் காரத்

சிறப்பு மலர் - 2                

              இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 - வது தமிழ் மாநில மாநில மாநாடு நாகப்பட்டினம் வெண்மணி நகரில் எழுச்சியுடன் துவங்கியது. கட்சியின் மூத்தத் தோழரும் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர். ஆர். உமாநாத் அவர்கள் கட்சித் தோழர்களின் விண்ணைப் பிளக்கும் வாழ்த்து முழக்கங்களுக்கிடையில் செங்கொடியை ஏற்றிவைத்தார். கட்சியின் பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ் காரத் மாநாட்டினை துவக்கிவைத்து எழுச்சியுரையாற்றினார்.
           மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்துவது என்பது இன்றைக்கு அவசியமான ஒன்றாகும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பின்பற்றும் புதிய தாராளமயக் கொள்கையினால் நாட்டில் உண்டான துயரங்களையும், மாபெரும் ஊழல்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒரு சக்தி வாய்ந்த இயக்கமாக கட்சியை கட்டவேண்டும் என்று தோழர். பிரகாஷ் காரத் தனது துவக்கவுரையில் கட்சித் தோழர்களை கேட்டுக்கொண்டார். 
                 அவர் மேலும் பேசுகையில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் அடிப்படையில் ஒரே மாதிரியான கட்சிகளே. ஊழலை பொறுத்தவரையில் இரண்டும் ஒத்தக்கட்சிகளே என்று கூறினார். 
             மார்க்சிஸ்ட் கட்சியினால் மட்டுமே ஊழல் அற்ற ஆட்சியை அளிக்க முடியும். மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழலற்ற ஆட்சியை வழங்கியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார். 
               முன்னதாக கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான தோழர். கே. பாலகிருஷ்ணன் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார். மேலும் மாநாட்டில் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கே. வரதராஜன், பிருந்தா காரத், எஸ். ராமச்சந்திரன், பி. வி. ராகவுலு போன்ற தோழர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.     

கருத்துகள் இல்லை: