செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

‘Yes, insurance needs better cover but not with foreign capital’

M. S. R. A. Srihari,   
Former joint secretary, 
Insurance Corporation Employees Union (AIIEA), 
Warangal division. E-mail: msra.srihari@licindia.com    

           The article by V.K. Shunglu in The Hindu, “The risk business needs better cover” (Op-Ed, February 14, 2013) is one-sided and conspicuously understates certain key aspects of insurance reforms undertaken in the country a decade ago. It misses the basic promise on which an insurance business is run — that of “trust” and the long-term “promises to be upheld.”
This industry should not be seen merely in economic terms. The settlement of the death claim of Hemant Karkare, chief of the Mumbai Anti-Terrorist Squad, who was killed in Mumbai’s 26/11, presents a clear-cut example of Trust.
          Mumbai’s Dadar branch of the Life Insurance Corporation (LIC) had settled the death claim amount of Rs.25 lakh within five days whereas a private company (name withheld), where Karkare had coverage for a similar amount, had rejected the claim — and, after a lapse of six months — by stating that the deceased had willfully risked his life, even after knowing that his life was in danger. That’s why I said the insurance business should not be seen in purely economic terms.
           The tag of public sector should not be the reason for spewing venom. There are certain “Crown jewels such as LIC”; it settles 98.6 per cent of claims, the only insurance company in the world to do so. It is true, as Mr. Shunglu says, that the insurance business has become a key player in underpinning the long-term foundations of India’s capital markets and financial system. But for satiating the needs of India’s capital markets, these private insurance companies have done little good for gullible policyholders and their hard-earned monies.
          This is an industry in which even with a small amount of investment i.e. Rs.100 crore, thousands and lakhs of crores of public money can be garnered. It is firmly believed that the Foreign direct investment (FDI) hike will allow foreign capital with small investments to gain greater access and control over large domestic savings. The annual report (2011-2012) of the Insurance Regulatory and Development Authority (IRDA) points out that FDI brought in by private life insurance companies up to March 31, 2012, was a meagre Rs.6,324.27 crore, which was to meet share capital requirements prescribed by the regulator. Not a single pie was invested in the infrastructure sector. It is LIC which is a saviour, and the government of the day is utilising it as a captive investor, just as it has done in the case of petroleum major ONGC.
               In our country, insurance companies are mopping up people’s savings. During 2011-12, domestic savings were 32 per cent of GDP. Financial experts say that domestic savings, and not FDI, are crucial for any country’s economic development. In India, LIC has provided Rs.7,04,151 crore to the 11th Five-Year Plan (2007-2012) while the four general insurance companies and GIC of India have contributed about Rs. one lakh crore. Where will the government get these huge investments from if it tries to weaken the public sector insurance companies?
           The World Economic Forum Financial Development Report 2012 tells the success story of LIC. It shows that given the low level of income and low disposable income of most Indians, insurance penetration in India is much greater than in countries with a per capita income that is 10 times higher. It is remarkable that with a per capita GDP of $1,388.80, India has achieved a life insurance penetration of 3.61 per cent as against 3.56 per cent of the United States with a per capita GDP of $4,8386.77. It is also a matter of pride that the report places India at the top of global rankings in terms of Life Insurance Density (measured as a ratio of direct premium to per capita GDP of 2011).
             The LIC, the four general insurance companies in the public sector and GIC of India are doing an excellent job despite competition from private insurance companies. In 2011-12, LIC earned a premium of Rs.81,514.49 crore registering a market share of 71.36 per cent in premium income. It sold 3.57 crore new policies, to take an 80.9 per cent market share in the number of policies. Similarly, the four insurance companies have earned a premium income of Rs.30,532 crore and registered 58 per cent of market share.
            The financial crisis in the U.S. and Europe has seriously eroded confidence in the banking and insurance sectors. At the same time, our domestic private insurance partners hardly need capital to be infused by their foreign counterparts, as put forth by the votaries of FDI increase.
            Partners of private insurance companies in India like the Tatas and Reliance are on an acquisition spree, spending billions of dollars, both on the domestic and foreign fronts during the last five years. The others, like the State Bank of India and other public sector banks have capital reserves of their own. Some foreign partners have exited not due to a delay in the increase of FDI cap but because they are in search of greener pastures.
           The author has also put forth another interesting argument — that shareholders and company boards be left free to determine whether additional investment should be through FDI or FII or by other means.
           The world saw the bubble burst in 2008 due to such flawed and mistaken judgements by company boards and shareholders, when they invested the earnings/savings of innocent policyholders into Collateralised debt obligations, or CDOs. India was saved from such a situation because of the domination of the public sector in the banking and insurance sectors. Even the Prime Minister and the Finance Minister have shared this view.
         Looking back, it is time to learn lessons from the global collapses of banks, insurance companies and other financial institutions like Lehman Brothers, etc. Foreign investment in insurance sector does not bring any good with it, especially in fragile sectors like insurance. This sector is the pillar of any upcoming and growing economy. 

courtesy : The Hindu / 26.02.2013

திங்கள், 25 பிப்ரவரி, 2013

Sangharsh Sandesh Jatha Flagged Off....!

          Com. Prakash Karat, General Secretary of the Communist Party of India (Marxist) flagged off the Sangharsh Sandesh jatha in Kanyakumari on 24 February 2013. Com. Prakash Karat handed over the jatha flag to Com. S. Ramachandran Pillai, Polit Bureau member and the leader of the South Jatha. This is the first of the four jathas that the CPI(M) is conducting.
            
In an impressive fla
gging off ceremony organised in Kanyakumari, Com. Prakash Karat explained the reasons for organising the jathas covering the entire length and breadth of the country. He explained that the ruinous policies of the Congress led UPA government are leading to all round depravement of the common people. Karat stated that through this Jatha CPI (M) will mobilise people to fight for the right for food, employment, education, health, rights of the oppressed sections such as dalits, adivasis and minorities etc. He also said that through these Jathas the party is also calling up the people to join the fight against corruption.
           He stated that along with this jatha that will travel through the all the states in Southern India, there are three more jathas – the eastern jatha starts from Kolkata, the western jatha from Mumbai and the northern jatha from Amritsar. “All these jathas will culminate in Delhi, where a mass rally will be held on 19th March”. He called upon the people to join the struggle for their rights and strengthen the fight for alternative policies. 
          Com. Karat concluded his speech stating “It is only the Left and democratic forces that can give a real alternative to the disastrous policies pursued by the successive governments at the Centre”.
                 Com. S. Ramachandran Pillai the leader of the jatha thanked the people of Kanyakumari for the reception they had accorded to the jatha. He said that the policies pursued by the Congress led UPA government are benefitting the corporates and the rich people in our country. He criticised the government for their failure to address the issues of the common people. He said that there is a need to start massive struggles against these policies which are exploiting agriculture workers, peasants, minorities and women. “To protect  their rights we need alternate policies, and for this people have to come together and join forces with CPI (M) in this struggle''
              Com. Noor Mohammed, Secretariat member of the Tamilnadu state committee gave the welcome address while Com. K. Varadarajan, Polit Bureau member presided over the meeting. Others who participated were Com. V. Srinivasa Rao, Member of the Secretariat of the Central Committee and Com. Sudha Sundararaman, Member, Central Committee.

 

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

இரத்தத்தின் இரத்தமே.... இதெல்லாம் ரொம்ப ஓவரு தெரியுமா....?


        முன்னாள் முதலமைச்சர் எம்ஜியார் உயிருடன் இருந்த காலங்களில் பொதுக்கூட்டங்களில் பேசும் போது,  தன்னுடைய கட்சித்தொண்டர்களை ''என் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புக்களே'' என்று அழைத்து தன் பேச்சை தொடங்குவது வழக்கம். தொண்டர்களை அவ்வாறு அழைப்பதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது, அவர் முன்பு ஒருமுறை நடிகவேள் எம். ஆர். இராதா அவர்களால் சுடப்பட்டு கழுத்துப்பகுதியில் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் மீதிருந்த அன்பின் காரணமாக அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக  அவருக்கே தெரியாமல் அவரது இரசிகர்கள் பலபேர் அவருக்கு இரத்ததானம் செய்திருக்கிறார்கள். அதனால் தான் எனக்கு இரத்தம் கொடுத்து உயிர் கொடுத்த என் தொண்டர்களை
நான் அவ்வாறு அழைக்கின்றேன் என்று பதிலளித்தார். 
           ஆனால் இன்றோ ஒரு திரைப்பட நடிகர் கராத்தே ஹுசைனி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய 6.5 லிட்டர் இரத்தத்தையும், மற்றவர்களிடமிருந்து பெற்ற 4.5 லிட்டர் இரத்தத்தையும் உறையவைத்து தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உருவச்சிலையை செய்திருப்பது என்பது பாராட்டத்தக்க செயல் அல்ல. போற்றுதலுக்குரிய செயல் அல்ல என்பதை அவரைப் போன்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இது போன்ற செயல் என்பது தவறான முன்னுதாரணமாகி விடும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். முதலமைச்சரை கவருவதற்காக ஏதாவது வித்தியாசமாக செய்வது என்பது ஒரு வழக்கமாகவே போய்விட்டது. உடம்பில்  பச்சைக்குத்திக்கொள்வது, நாக்கை வெட்டிக்கொள்வது, காலில் விழுவது, அடிமைப் போன்று கை கட்டி வாய் பொத்தி குனிந்து நிற்பது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்கள் எல்லாம் முதலமைச்சரை வேண்டுமானால் சந்தோஷப்படுத்தலாம். ஆனால் இப்படிப்பட்ட செயல் என்பது  அவருக்கோ அவரது ஆட்சிக்கோ எந்தவிதமான பெருமையையும் தராது என்பதையும் அவர்கள் உணரவேண்டும்.
            இரத்தம் என்பது உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்றுவதற்காக கருணை மனம் கொண்டு தானம் செய்யப்படுவது. இன்றைக்கு அவசரமாக தேவைப்படும் நேரத்தில் இரத்தம் கிடைக்கபெறாமல் நிறையப்பேர் இறந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இரத்தத்தை - அதுவும் 11 லிட்டர் இரத்தத்தை இந்த நடிகர்  சர்வசாதாரணமாக உறையவைத்து சிலை செய்திருப்பது என்பது முட்டாள்தனமானது - காட்டுமிராண்டித்தனமானது என்று தான் சொல்லவேண்டும். இதையெல்லாம் அனுமதித்தால், பிறகு உடம்பில் உள்ள சதையை எடுத்து முதலமைச்சர் வீட்டு நாய்க்கு போடுவார்கள். உடம்பிலிருக்கும் எலும்பையும் நரம்பையும் எடுத்து முதலமைச்சருக்கு நாற்காலி செய்வார்கள். எனவே முதலமைச்சர் ஜெயலலிதாவே இதுபோன்ற செயலை அனுமதிக்காமல் கண்டிக்கவேண்டும்.

மாற்றுப்பாதைக்கான போர் முழக்கப் பயணம்....!
பிரகாஷ் காரத்         
பொதுச்செயலாளர்,             
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி         
            மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிப்ரவரி 24 முதல் மாற்றுக் கொள்கைகளை முன் வைத்து அகில இந்தியப் பிரச்சாரப் பயணம் நாட்டின் பல முனைகளிலிருந்தும் தொடங்கவிருக்கிறது. அன்றையதினம் கன்னியாகுமரியிலிருந்து தில்லி நோக்கி முதல் பயணக்குழு புறப்படுகிறது. மற்ற மூன்று பயணக் குழுக்கள் கொல்கத்தா, அமிர்தசரஸ் மற்றும் மும்பை நகரங்களிலிருந்து வரும் நாட்களில் புறப்பட இருக்கின்றன. குவாஹாத்தி, பரலேகமுண்டி, சிம்லா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களிலிருந்தும் பயணக் குழுக்கள் புறப்பட்டு, இப்பயணக் குழுக்களுடன் இணைந்து கொள்கின்றன. இவையன்றி பல மாநிலங்களில் துணைப் பயணக்குழுக்களும் தொடங்கப்பட்டு, பிரதானப் பயணக்குழுக்கள் தங்கள் மாநிலங்களுக்கு வரும்போது, அவற்றுடன் இணைந்து கொள்கின்றன. நான்கு பிரதானக் குழுக்களும் சங்கமிக்கும் நாளான மார்ச் 19 அன்று தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணி நடைபெற விருக்கிறது.

ஏன் இந்தப் பயணக் குழுக்கள்?

          எதற்காக இந்தப் பயணக்குழுக்கள்? நாடு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது ஆழமாகியுள்ளது; விரிவடைந்துள்ளது. உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களின் வரிசையில் உள்ளவர்கள் இந்தியாவிலும் சிலர் உள்ளனர். சிலரைப் பெற்றிருக்கிற அதே சமயத்தில், மிகப் பெரிய அளவில் ஏழைகளும் இந்தியாவில் உள்ளனர். உலகில் ஊட்டச் சத்தின்றி வாடும் குழந்தைகளை மிகப்பெரும் எண்ணிக்கையில் பெற்றுள்ள நாடாக மிகவும் வெட்கக் கேடான முறையில் இந்தியா மாறியுள்ளது. ஆட்சியாளர்கள் தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றத் துவங்கிய பின்னர், கடந்த இருபதாண்டுகளில், மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிவேகமாக வளர்ந்திருக்கிறது. சமீப காலங்களில் வேலை வாய்ப்பு இல்லாத வளர்ச்சி  மட்டுமே காணப்படுகிறது. இவை அனைத்துமே திவாலாகிப் போன முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ கொள்கையின், அதிலும் குறிப்பாக கடந்த இருபதாண்டு காலமாகக் கடைப்பிடித்து வந்த நவீன தாராளமயக் கொள்கையின், விளைவேயாகும். நாட்டில் பெரும் வர்த்தக நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள், பன்னாட்டு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஊகவர்த்தகர்கள் மற்றும் மஃபியா கும்பல்கள் அபரிமிதமானமுறையில் தங்களை வளப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் நாட்டில் மிகவும் வலுவாக இருக்கக்கூடிய இத்தகு சக்திகள், நாட்டின் செல்வாதாரங்களை முழுமையாகச் சூறையாடுவதற்கு உதவக்கூடிய விதத்திலேயே ஆட்சியாளர்களின் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
               இவர்கள் அடிக்கும் கொள்ளை லாபத்தின் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதுநாள் வரை இருந்த வரிவிதிப்புகளும்கூட இவர்கள் கட்டுவதைத் தவிர்க்கக் கூடிய விதத்திலேயே புதிதாக உருவாக்கப்படும் சட்டங்கள் இவர்களுக்கு உதவிவருகின்றன. அதேசமயத்தில் அரசாங்கம் விலைவாசியை உயர்த்தக்கூடிய விதத்திலும், பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடிய விதத்திலும் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. பெட்ரோல், டீசல், இரசாயன உரங்கள் மற்றும் உணவுப் பொருள்களுக்கு அளித்து வந்த மானியங்களை வெட்டிச் சுருக்கியதன் மூலம் கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசிகளின் காரணமாக மக்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் - பாஜக ஆகிய இரு கட்சிகளுமே நவீன தாராளமயக் கொள் கைகளுக்கு வக்காலத்து வாங்கி, அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் ஏகாதிபத்தியத்தின் நலன்களைத் தூக்கிப் பிடிப்பவைகளேயாகும். அது, மத்தியில் ஆட்சி செய்யும் ஐ.மு.கூட்டணி அரசாங்கமானாலும் சரி அல்லது பாஜக தலைமையில் உள்ள மாநில அரசாங்கங்களானாலும் சரி. தனியார்மயம், பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு நாட்டின் செல்வாதாரங்களை ஒப்படைத்தல், அந்நிய நிதி மூலதனத்தின் நலன்களுக்கு விசுவாசமாக இருத்தல் என எந்த விஷயத்திலும் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே வித்தியாசம் எதுவும் கிடையாது. அரசின் மிக உயர்ந்த இடங்களிலும், பொது நிறுவனங்களிலும் காணப்படும் லஞ்ச ஊழல்கள், நவீன தாராளமயக் கொள்கைகளின் பிரிக்க முடியாத அங்கங்களேயாகும். இவைகள் பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் - அதிகாரவர்க்கத்தின் இடையேயுள்ள நெருக்கமான பிணைப்பின் வெளிப்பாடேயாகும். இத்தகைய லஞ்ச ஊழல் மூலதனக் குவியலின் ஒரு கருவியாகும். நவீன தாராளமயக் கொள்கைகளை மாற்றாமல் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது முடியாது. காங்கிரஸ், பாஜக மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளால் ஊழலைக் கட்டுப் படுத்துவது என்பது இயலாது.
           ஏனெனில் அவையும் ஊழல் என்கிற நெருக்கமான பிணைப்புடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப்பிணைந்தவைகளேயாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளால் மட்டுமே இத்தகைய ஊழல் என்னும் தொற்றுநோயினால் பாதிக்கப்படாமல் அவற்றை எதிர்த்துத் துணிந்து நிற்க முடியும். இவ்வாறு மக்களைச் சூறையாடக்கூடிய முதலாளித்துவப் பாதையானது சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் சமூகப் பதற்ற நிலைமைகளுக்கும் இட்டுச் சென்றுள்ளது. அதன் மூலமாக நாட்டில் வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சிக்கும், அவற்றின் சீர்குலைவு நடவடிக்கைகளுக்கும் நிலைமைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. பிராந்திய வெறி மற்றும் இன அடையாள அரசியல் ஆகியவற்றின் அடிப்படையிலான பிரிவினைவாத சக்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. வலதுசாரி சக்திகள் தங்களுடைய பிற்போக்குத்தனமான அரசியலுக்காக இத்தகைய சக்திகள் அனைத்தையும் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றன. இப்பிரச்சாரப் பயணமானது மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டத்தின் அவசியத்தை முன்னெடுத்துச் செல்லும். நாட்டிலுள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் - விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின், அணிதிரட்டப்பட்ட மற்றும் முறைசாராத் தொழிலாளர்களின், பெண்களின், தலித்துகளின், பழங்குடியினர்களின், சிறுபான்மையினர்களின்- பிரச்சனைகளையும் கவலைகளையும் எடுத்துச் சொல்லும். பிரச்சாரப் பயணமானது, வகுப்புவாத அரசியலுக்கு எதிராக உழைக்கும் மக்களின் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கும்.

பயணக்குழுவின் குறிக்கோள்கள்

                 பயணக்குழுவானது ஆறு முக்கிய அம்சங்களின் மீது மக்கள் கவனத்தை ஈர்க்கும்: 
           (1) நிலம் மற்றும் வீட்டுமனைகளுக்கான உரிமை : உபரியாக உள்ள நிலங்களை நிலமற்றவர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் நிலச்சீர்திருத்தக்கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். நிலமற்ற குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் வீட்டுமனைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
     (2) விலைவாசியைக் கட்டுப்படுத்துக - உணவு உரிமையை வழங்கிடுக : அதிகபட்சமாக ஒரு கிலோ 2 ரூபாய் விலையில் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியங்களை அனைத்துக் குடும்பத்தினருக்கும் வழங்கக்கூடிய விதத்தில் பொது விநியோக உரிமையை அமல்படுத்துக; மோசடியான வறுமைக் கணக்கீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டுக்கு மேல் / வறுமைக்கோட்டுக்குக் கீழ் என்பதை ரத்து செய்யவேண்டும்; உணவு தானியங்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்கள் மீதான முன்பேர வர்த்தகத்தை நிறுத்திடுக. 
         (3) கல்வி உரிமை மற்றும் சுகாதார உரிமை : கல்விநிலையங்களையும் சுகாதார சேவைகள் அளிக்கும் நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதை நிறுத்திடுக; கல்விக்கும், சுகாதாரத்திற்கும் ஒதுக்கீடுகளை அதிகப்படுத்திடுக; கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதை உத்தரவாதப்படுத்திடுக; சுகாதாரத்துறையில் பொதுச் சேவைகளை வலுப்படுத்திடுக; தனியார் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள் முறையாகச் செயல்படுவதை உத்தரவாதப்படுத்திடுக. 
        (4) வேலை உரிமை : வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதை உத்தரவாதப்படுத்தும் வகையில் பொது முதலீட்டை அதிகரித்திடுக; அரசு நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுப்பதற்காகத் தற்போதுள்ள தடையை விலக்கிக்கொள்க; ஒரு காலவரையை நிர்ணயித்து அதற்குள் அனைத்துக் காலியிடங்களையும் நிரப்பிடுக; குறிப்பாக தலித் / பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் காலியிடங் களை நிரப்பிடுக; மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலை செய்யும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்திடுக; அவர்களுக்கு விலைவாசிக் குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கிடுக; நகர்ப்புறங்களில் உள்ளோருக்கும் வேலை நாட்களை உத்தரவாதப்படுத்தக் கூடிய விதத்தில் அதனை விரிவுபடுத்திடுக.
         (5) சமூக நீதியை உத்தரவாதப்படுத்துக : பெண்களுக்கு எதிரான வன்முறைக்குக் கடிவாளமிடுக; நாடாளுமன்றம் / சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை அளித்திடுக; தீண்டாமைக் கொடுமை மற்றும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக; பழங்குடியினரின் நிலம் மற்றும் வன உரிமைகளைப் பாதுகாத்திடுக; முஸ்லிம் சிறுபான்மையினருக்கு, கல்வி மற்றும் வேலைகளில் சமவாய்ப்புகளை வழங்கிடுக.
         (6) லஞ்ச ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக : புலனாய்வு மேற்கொள்வதற்கு சுயேச்சையான அதிகாரங்களுடன் கூடிய லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுக; வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுக; இழப்புக்குப் பொறுப்பான கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இழப்புகளை மீட்டிடுக; லஞ்ச ஊழல் பேர்வழிகளை சிறைக்கு அனுப்புக; 
           மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு கட்சி என்ற முறையில், நாடு தழுவிய அளவில் இத்தகைய பயணத்தை நடத்துவது இதுவே முதல்முறை. 2012 ஏப்ரலில் நடைபெற்ற கட்சியின் 20 - ஆவது அகில இந்திய மாநாட்டில் தீர்மானித்தபடி கட்சியின் சுயேச்சையான பங்கினையும் நடவடிக்கைகளையும் வலுப்படுத்திட வேண்டும் என்பதன் ஒரு பகுதியாக, இத்தகைய பிரம்மாண்டமான முயற்சியில் கட்சி இறங்கி இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் உழைக்கும் வர்க்கத்தின் மாபெரும் நடவடிக்கையாக மத்தியத் தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க பிப்ரவரி 20 - 21 தேதிகளில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இருநாட்கள் வேலைநிறுத்தத்தினை அடுத்து அகில இந்தியப் பிரச்சாரப் பயணம் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அனை வருக்குமான பொது விநியோக முறையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இடதுசாரிக்கட்சிகளால் நாடு தழுவிய அளவில் மிகவும் விரிவானமுறையில் நடத்தப்பட்ட மக்கள் கையெழுத்து இயக்கத்தை அடுத்து இந்த பேரியக்கம் வருகிறது. இப் பிரச்சாரத்தின் போது ஐந்து கோடிக்கும் மேலான மக்களிடம் வாங்கிய கையெழுத்துக்கள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட இருக் கின்றன.

உண்மையான மாற்று

          மாற்றுக் கொள்கைக்கான பயணம் என்பது வரவிருக்கும் காலங்களில் நாம் நடத்தவிருக்கும் பிரம்மாண்டமான இயக்கங்களுக்கும், அனைத்து இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டுவதற்கும் முன்னோடியாகும். தற்போதைய முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு ஓர் உண்மையான மாற்றை இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளால்தான் தந்திட முடியும் என்கிற செய்தியை இப்பயணம் மக்களுக்குத் தெரிவித்திடும். அகில இந்திய பிரச்சாரப் பயணம், விவசாயிகளும் பழங்குடியினரும் தங்களிடமிருந்து வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்திய நிலங்களை மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் பகுதிகள் வழியாகச் செல்லும், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலை வேண்டி போராடிக் கொண்டிருக்கும் பகுதிகளைக் கடந்து செல்லும், நியாயமான ஊதியத்திற்காக அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களும், ஒப்பந்த முறைக்கு எதிராக முறைசாராத் தொழிலாளர்களும் போராடிக் கொண்டிருக்கிற பகுதிகள் வழியாக இந்தப்பயணம் செல்லும். கல்வி வணிகமயமாவதற்கு எதிராகவும் சிறந்த கல்வி வசதிகளுக்காக வும் மாணவர்களின் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற பகுதிகளையும் தொட்டுச்செல்லும். பாலியல் தாக்குதல்களுக்கு எதிராகவும் சமஉரிமைகள் கோரியும் பெண்கள் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வழியாக, சமூக நீதி கோரி தலித்துகளின் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிற வழியாக, வேலையின்மைக்கு எதிராக வாலிபர்களின் இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழியாக இந்தப் பயணம் கம்பீரமாக செல்லும். போராட்டக்களத்தில் உள்ள அனைவருக்கும், மாற்றுக் கொள்கைக்கான இந்தப் பயணம் ஓர் உந்துசக்தியாகத் திகழும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டில் போராடிக் கொண்டிருக்கும் இம்மக்களின் பக்கம் நிற்கிறது என்கிற செய்தியை இப்பயணம் அவர்களுக்கு அளிக்கும்; அத்துடன் மாற்றுக் கொள்கைக்காகப் போராட முன்வருக என்றும் அவர்களை அறைகூவி அழைத்திடும்.
தமிழில்: ச.வீரமணி

வியாழன், 21 பிப்ரவரி, 2013

உலக தாய் மொழி தினம் - தாய் மொழி போற்றுவோம்...!

பங்களாதேஷ் நாட்டின் டாக்கா நகரில், 1952ம் ஆண்டு தாய் மொழி உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்க ளுக்கு அஞ்சலி செலுத்த நிறுவப்பட்டுள்ள நினைவுச் சின்னமான ‘ஷாஹீத் மினார்’.
              புவியில் மானுடம் நிகழ்த்திய மகத்தான கண்டுபிடிப்புதான் மொழி. எங்கெல்லாம் மனிதர்கள் பரந்து குடியேறி வாழத் தொடங்கினார்களோ அங்கெல்லாம் அந்தந்தச் சூழலுக்கேற்ப தங்களது மொழியை உருவாக்கிக் கொண்டார்கள். மொழி ஒரு உணர்வு வெளிப்பாடாக மட்டுமல்லாமல், சமுதாய வளர்ச்சிக்கான தகவல் தொடர்புக்கருவியாகவும் உருவெடுத்தது. மக்களின் இன, பண்பாட்டு அடையாளமாகவும் பரிணமித்தது. ஆகவேதான் உலகின் ஒவ்வொரு இனத்திற்கும் சமூகத்திற்கும் தனது தாய் மொழி அடையாளம் முக்கியமானதாகியது. அது தாக்குதலுக்கும் அடக்குமுறைக்கும் அழிப்புக்கும் உள்ளாகிற போது போராட்டங்கள் வெடிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி - 21 அன்று உலக தாய்மொழி தினமாகக் கடைப்பிடிப்பது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுக்குழு 2009 மே 16 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நாளுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. 1947 - ல் பாகிஸ்தான் நாடு உருவான பிறகு, அதன் ஆட்சி மொழி உருது என அறிவிக்கப்பட்டது.
        இதை இன்றைய வங்கதேசமாக இருக்கக்கூடிய அன்றைய கிழக்கு பாகிஸ்தான் மக்கள் ஏற்கவில்லை. அவர்கள், “எங்கள் தாய்மொழி வங்காள மொழி தான். அதையே இப்பகுதியின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மத வேறுபாடின்றிப் போராடினார்கள். கடந்த, 1952 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  21 - ஆம் தேதி பாகிஸ்தான் அரசு, மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக விதித்த  ஊரடங்கு உத்தரவையும் மீறி, டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, யுனெஸ்கோ அமைப்பு, 1999 - ஆம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.
             இந்தப் போராட்டம்தான் பின்னர் பேரியக்கமாக வளர்ந்து, உலக வரைபடத்தில் பங்களாதேஷ் நாடு அடையாளம் பெற்றது. பங்களாதேஷ் நாட்டின் தேசியகீதம் கூட இந்திய கவிஞன் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வங்கமொழி பாடல் தான் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.  பிப்ரவரி 21 தாய்மொழி உரிமையைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் நாளாகியது. இந்த ஆண்டு, “தாய்மொழிக் கல்விக்காக புத்தகங்கள்” என்ற மைய முழக்கத்துடன் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையில் தாய்மொழிகளிலேயே பெற முடியும் என்ற நிலை வர வேண்டும், அதற்கான புத்தகங்களும் தாய்மொழிகளிலேயே கிடைக்க வேண்டும் என்பதே இந்த முழக்கத்தின் உட்பொருள். இந்தியாவிற்கும் - குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கும் இந்த முழக்கம் இன்றைய காலப் பொருத்தம் தான்.
        "தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது'' என்பது பொன்மொழி. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.

இது இரண்டாம் சுதந்திர போராட்டம் - மீண்டுமொரு மக்கள் எழுச்சி....!
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

உழைப்பாளி மக்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தம் வெல்லட்டும்....!

         ''ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட வர்க்கம் தொடுக்கும் போர்கள், எஜமானர்களுக்கு எதிராக அடிமைகள் நடத்தும் போர்கள், நில உடமையாளர்களுக்கு எதிராக பண்ணையாட்கள் நடத்தும் போர்கள், அதிகார வர்க்கத்திற்கு எதிராக ஊழியர்கள் நடத்தும் போர்கள் என அனைத்து உள்நாட்டுப் போர்களுமே அவசியமானது. முறையானது. முற்போக்கானது என்றே கருதுகிறோம். வர்க்கங்களை ஒழிக்காத வரை - சோசலிசத்தை உருவாக்காத வரை இந்த உள்நாட்டுப் போர்களையும் ஒழிக்க முடியாது'' என்பது பல ஆண்டுகளுக்கு முன்  மாமேதை லெனின் சிவப்பு மையினால் எழுதிய ''வேலைநிறுத்தம்'' என்பதற்கான அருமையான விளக்கம். இதில் சொல்லப்பட்டவைகள் தான் இந்தியாவில் இன்று நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளாக நாம் பார்க்கிறோம். 

என்ன ஆச்சரியம்... ஜெயலலிதா கற்றுக்கொண்ட அரசியல் நாகரீகம்...!


           தமிழகத்தில் இன்று ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடந்தது.  தமிழக மக்கள் தங்களையே கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள். உண்மை தானா ... சாத்தியம் தானா...?  என்று ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அதுவும் நேரிலேயே பார்த்தவர்களுக்கு மயக்கமே வந்துவிட்டது. அப்படியொரு கண்கொள்ளக் காட்சியது.
         தமிழ்நாடு கேட்காமலேயே கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால் அது ஆச்சரியம் இல்லை.... அழகிரியே ஸ்டாலினுக்கு திமுக கட்சித் தலைவராக முடி சூட்டிவிட்டால் அதுவும் ஆச்சரியம் இல்லை.... மன்மோகன் சிங்கிற்கு திடீரென்று தேசபக்தி வந்து மக்கள் மீது அக்கறையுடன் ஆட்சி செய்தாலும் கூட ஆச்சரியம் இல்லை.... தன்னை தூக்கி எரிந்து பேசியவர்களை அல்லது தன்னால்   தூக்கி எறியப்பட்டவர்களை தமிழக முதலமைச்சர் திரும்பிக் கூட பார்க்கமாட்டார். இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.  ஆனால் இன்று மாலை சென்னையில் நடைபெற்ற சந்திப்பு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியது. நடுரோட்டில்  ஜெயலலிதா - வைகோ இடையே நடைபெற்ற சந்திப்பு தான் அது.
          தமிழகத்தில் முழுமையாக மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை  வலியுறுத்தி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சென்னை அருகில் கோவளத்தில் இருந்து நடைபயணம் துவக்கினார். இன்று மதியம் 3 மணியளவில் சிறுதாவூர் அருகே பையனூர் கிராமத்தில் வைகோ தொண்டர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காரில்  முதல்வர் ஜெயலலிதா  வந்து கொண்டிருந்தார். சாலையில்  வைகோ செல்வதை பார்த்த ஜெயலலிதா  காரை நிறுத்த சொல்லி காரில் இருந்து இறங்கி நேரே வைகோ அருகில் சென்று நலம் விசாரித்துப் பேசினார்.
.           தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுமா என்று தெரியாது. ஆனால் ஜெயலலிதாவின் மனதில் ஏற்பட்ட  மாற்றம் பாராட்டுக்குரியது. இன்று புதிதாக அரசியல் நாகரீகத்தை கற்றுக்கொண்ட ஜெயலலிதாவை வாயார பாராட்டவேண்டும்.

     

நீதிபதி மார்கண்டேய கட்ஜு பதவி விலக பா.ஜ.க. - வினர் ஏன் துடிக்கிறார்கள்....?              இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து தான் பிரஸ் கவுன்சில் என்றால் என்ன என்றே புரிந்தது. இவருக்கு முன்பு இப்பொறுப்பில் இருந்தவர்கள் இந்த பதவியை ஒரு அலங்கார பதவியாக அனுபவித்திருந்திருக்கிறார்கள். பத்திரிக்கை சுதந்திரம் - கருத்து சுதந்திரம் என்றெல்லாம் நம் நாட்டில் இருந்தாலும், பத்திரிக்கைகளையும், பத்திரிக்கையாளர்களையும் நெறிப்படுத்தும் வகையில் ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகத்தான் இந்த பிரஸ் கவுன்சில் என்பது 1966 - ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டிருக்கிறது. அன்றையிலிருந்து இன்றுவரை அந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றவர்கள் அவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தியது கிடையாது அல்லது பயன்படுத்த வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
          ஆனால் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பொறுப்பேற்ற நாளிலிருந்து ஒரு பொறுப்பான தலைவராக செயல்படுகிறார் என்பது நமக்கு கிடைத்த ஆறுதல். ''நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே'' என்று நேர்மையுடனும் உண்மையுடனும் செயல்படுகிறார் என்றால் அது மிகையாகாது. பத்திரிகை சுதந்திரத்தின்  - கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை பிடிக்கும் ஆட்சியாளராக இருந்தாலும் அல்லது அரசியல்வாதியாக இருந்தாலும், அல்லது பத்திரிகை சுதந்திரத்தை - கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் பத்திரிக்கையாக இருந்தாலும் அல்லது பத்திரக்கையாளராக இருந்தாலும் தயக்கமின்றி இடித்துரைத்து நேர்ப்படப் பேசுபவர் தான் நீதிபதி மார்கண்டேய கட்ஜு என்பதை நாடே அறியும்.
           குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை  வருகிற 2014 - ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு பாரதீய ஜனதா கட்சினர் மத்தியில் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நேற்று முன் தினம், நீதிபதி கட்ஜு அவர்கள் அவரது வலைப்பூவில் குஜராத் சம்பவங்கள் பற்றியும், மோடியைப் பற்றியும் எழுதிய கட்டுரையொன்றில், ''1933 - இல் ஜெர்மானியர்கள் செய்த தவறை 2014 - இல் நீங்கள் செய்துவிடாதீர்கள்'' என்று இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 1933 என்பது ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக பொறுப்பேற்ற ஆண்டு என்று சொன்னதன் மூலம், மோடி ஹிட்லருக்கு இணையானவர் என்று நீதிபதி கட்ஜு  சித்தரித்திருந்தார். ஒரு வாசகம் என்றாலும், திருவாசகம் மலர்ந்தார் இந்த மாணிக்கவாசகம் நீதிபதி கட்ஜு என்று நாடே பாராட்டுகிறது. ஆனால் பாரதீய ஜனதா கட்சியில் மட்டும் ஒரே கொந்தளிப்பு.
        மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டு எழுதியதற்காக நீதிபதி கட்ஜு பதவிவிலக வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று பா ஜ க - வின் தலைவர்களில் ஒருவரும், மாநிலங்கவையின் எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி கொக்கரித்தார். ஆனால் பாஜக - வின் இந்த கோரிக்கையை நாட்டு மக்கள் சட்டை செய்யவில்லை.

திங்கள், 18 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் : கமல்ஹாசன் எங்கள ஏமாத்திட்டாருங்க சார்...!

           நேற்று ஞாயிற்றுக்கிழமை மதிய வேளை கட்சி கிளைக்கூட்டம் முடித்துவிட்டு, வெளியே வீதியோரமாய் தோழர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று யாரோ இரண்டு ''குடிமகன்கள்'' எங்களை நெருங்கி வந்தனர். அவர்கள் குடித்திருந்தாலும் நிதானமாகத்தான் இருந்தார்கள். வந்தவர்கள் எங்களிடம், '' சார்... கமல்ஹாசன் எங்கள ஏமாத்திட்டாருங்க சார்...அதைப் பத்தியும் நீங்க பேசுங்க சார்..."  என்று கொஞ்சம் கோபமும்,
ஏமாற்றமும் கலந்து கூறினார்கள். ''என்னாப்பா...  என்ன ஆச்சு...?"  என்று கேட்டோம். ''சார்... விசுவரூபம் ஒரு தமிழ்ப் படம்ன்னு கமல்ஹாசன் சொன்னார் சார்... ஆனா அது இங்கிலீஷ் படம் சார்... எங்களுக்கு ஒண்ணுமே புரியல சார்... பாதியிலேயே எழுந்து வந்துட்டோம் சார்... கமல்ஹாசன் எங்கள ஏமாத்திட்டாரு சார்... இதப் பத்தியும் நீங்க பேசுங்க சார்..." என்று அந்த இருவரில் ஒருத்தர் கோபமாகவே சொன்னார். இதைக் கேட்டதும் எங்களுக்கு சிரிக்கிறதா, அழுகிறதா என்றே தெரியவில்லை. ''இதுக்கெல்லாம் வந்துடுங்க...பெட்ரோல் விலை ஏறிப்போச்சி... போராட வாங்கன்னு கூப்பிட்டா வராதீங்க... '' என்று எங்களோடு இருந்த ஒரு தோழர் அவர்களிடம் கடுமையாக கடிந்து கொண்டார். ஆனால் அவர்களைப் பார்த்து எனக்கு கோபமே வரவில்லை. ஏனென்றால், அவர்களைப் பொருத்தவரை இதுவும் ஒரு பிரச்சனை தான். தமிழ் என்று வெளியே போஸ்டரில் போட்டிருப்பதை நம்பி உள்ளேப் போய் பார்த்தால், தமிழைத் தவிர வேறு மொழியில் இருந்தால் ஏமாற்றமாக தானே இருக்கும். டிக்கெட் காசை திரும்பக்கேட்டால் கூடத் தவறில்லை தான்.
       கலை - இலக்கியம் என்பது சாதாரண பாமரனையும் சென்றடைய வேண்டும். கலை - இலக்கியம் என்பது மக்களுக்காகவே. அந்த கலையும் இலக்கியமும் மக்களின் புரிதலுக்கு அந்நியப்பட்டுப்போனால் மக்கள் அவைகளை விட்டு விலகிச் சென்றுவிடுவார்கள் என்பதற்கு மேலே சொன்ன அந்த இருவரே சாட்சி என்பதை புரிந்து கொள்ளவேண்டும். கலைஞர்கள்  தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிற ஒரு களமாக திரைப்படம் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட திறமைசாலிகளும், அறிவுஜீவிகளும் திரைப்படம் எடுப்பதற்கு முன்பு, திரைக்கு முன்னால்  உட்கார்ந்து கொண்டு  திரைப்படம் பார்க்கும் பாமரனை நினைத்துப் பார்த்து திரைப்படம் எடுக்கவேண்டும். இல்லையென்றால், அப்படிப்பட்ட கலைஞர்கள்  மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போவார்கள். சாதாரண பாமரனை நினைத்துப் திரைப்படம் எடுத்ததால் தான் எம்ஜியார்  இன்று வரை மக்களின் மனதில் நிற்கின்றார்.
        நடிகர் கமல்ஹாசன் பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு மகா கலைஞன் தான். அதில் மாற்றுக் கருத்து என்பதே இல்லை. அந்த திறமைகள் எல்லாம் பாமர மக்கள் புரிந்துகொள்ளும் படி இருத்தல் அவசியம். திரைப்படம் என்பது மக்கள் மொழியிலேயே இருந்தால் தான் அது வெற்றிபெறும்.

உறுத்தலும், மறுத்தலும்....

              நான் விஸ்வரூபம் படம் பார்த்தபோது எனக்கு விளங்கின இரண்டு விஷயங்கள். ஒன்று கடவுள் மறுத்தல் சம்பந்தமான வசனம். இன்னொன்று அமெரிக்க விசுவாச வசன உறுத்தல். வழக்கமாக கமல்ஹாசன் படத்தில் இடம்பெறும் கடவுள் மறுப்பு சம்பந்தமான வசனம் இதிலேயும் வருகிறது. அமெரிக்க போலீஸ் கமலையும், அவரது மனைவியையும் கைது செய்து விசாரணை நடத்துவார்கள். கமலின் மனைவி விசாரணையை பொறுத்துக்கொள்ள முடியாமல் சம்ஸ்கிருத மந்திரம் சொல்லுவார். என்னை திட்டுகிறாயா என்று அந்த பெண் போலீஸ் கேட்க, இல்லை கடவுளை கும்பிடுகிறேன்னு கதாநாயகி சொல்லுவார். அவர் எங்க கடவுளுக்கு நான்கு கைகள் இருக்கும் என்று சொல்லும் போது, அந்த பெண் போலீஸ் ''நாலு கை இருந்த எப்படி சிலுவையில் அறைவார்கள்'' என்று கேட்பார். அதற்கு அவர் ''இல்ல நாங்க கடல்ல போட்டுடுவோம்'' என்று சொல்லுவார். இந்த காட்சியின் போது மக்கள் ஒரு சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.காரணம் அது ஆங்கில வசனம் என்பதால்.
             ஒரு காட்சியில் ''அமெரிக்ககாரன் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லமாட்டான்'' என்று வரும். கமலுக்கு ஏன் இந்த அமெரிக்க விசுவாசம்...? இந்த வசனம் அவரை அறியாமல் வந்திருக்கமுடியாது. எதற்காக இப்படி வசனத்தை திணிக்கவேண்டும் என்பது தான் திரைப்படத்தை பார்க்கும் போது ஒரு உறுத்தலான விஷயமாக பட்டது.
        மேலே சொன்ன  இரண்டும் விஸ்வரூபம் படத்தைப் பார்த்து என்னால் புரிந்துகொள்ள முடிந்த இரண்டு காட்சிகளும் வசனங்களும் மனதில் நின்றவைகள்.  

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

மோடியின் குஜராத் பற்றி நீதிபதி மார்கண்டேய கட்ஜு....!

All the Perfumes of Arabia
By Justice Markandey Katju
             Narendra Modi is being projected by a large section of Indians as the modern Moses, the messiah who will lead the beleaguered and despondent Indian people into a land of milk and honey, the man who is best suited to be the next Indian Prime Minister. And it is not just the BJP and RSS who are saying this in the Kumbh Mela.  A large section of the Indian so called 'educated' class, including a section of our 'educated' youth, who have been carried away by Modi’s propaganda are saying this.
             I was flying from Delhi to Bhopal recently. Sitting beside me was a Gujarati businessman. I asked him his opinion of Modi. He was all praise for him. I interjected and asked him about the killings of over 2000 Muslims in 2002 in Gujarat. He replied that Muslims were always creating problems in Gujarat, but after 2002 they have been put in their place and there is peace since 2002 in Gujarat. I told him it was the peace of the graveyard, and peace can never last long unless it was coupled with justice. At this remark he took offence and changed his seat on the plane.
               The truth today is that Muslims in Gujarat are terrorized and afraid that if they speak out against the horrors of 2002 they may be attacked and victimized. In the whole of India Muslims (who are over 200 million of the people of India) are solidly against Modi (though there are a handful of Muslims who for some reason disagree).
                   It is claimed by Modi supporters that what happened in Gujarat was only a 'spontaneous' reaction (pratikriya) of Hindus to the killings of 59 Hindus in a train in Godhra. I do not buy this story. Firstly, there is still a mystery as to what exactly happened in Godhra, and who was responsible for the killings. Secondly, the particular persons who were responsible for the Godhra killings should certainly be identified and given harsh punishment, but how does this justify the attack on the entire Muslim community in Gujarat. Muslims are only 9% of the total population of Gujarat, the rest being mostly Hindus. In 2002 Muslims were massacred, their homes burnt, and other horrible crimes committed on them.
                To call the killings of Muslims in 2002 as a spontaneous reaction reminds one of Kristallnacht (see online) in Germany in November 1938, when the entire Jewish community in Germany was attacked, many killed, their synagogues burnt, shops vandalized, etc after a German diplomat in Paris was shot by a Jewish youth whose family had been persecuted by the Nazis. It was claimed by the Nazi Government that this was only a 'spontaneous' reaction, but in fact it was planned and executed by the Nazi authorities using fanatic mobs.
            I have said in my article 'What is India?' (see on my blog justicekatju.blogspot.in as well as on the video on the website kgfindia.com) that India is broadly a country of immigrants (like North America) and consequently it is a land of tremendous diversity. Hence the only policy which can hold it together and take it on the path of progress is secularism and equal respect and treatment to all communities and sects. This was the policy of the great Emperor Akbar, which was followed by our Founding Fathers (Pandit Nehru and his colleagues) who gave us a secular Constitution. Unless we follow this policy our country cannot survive for one day, because it has so much diversity, so many religions, castes, languages, ethnic groups, etc.
              India therefore does not belong to Hindus alone, it belongs equally to Muslims, Sikhs, Christians, Parsis, Jains etc. Also, it is not that only Hindus can live in India as first rate citizens while others have to live as second or third rate citizens. All are first rate citizens here. The killings of thousands of Muslims and other atrocities on them in Gujarat in 2002 can never be forgotten or forgiven. All the perfumes in Arabia cannot wash away the stain on Modi in this connection.
                It is said by his supporters that Modi had no hand in the killings of Muslims in 2002, and it is also said that he has not been found guilty by any Court of Law. I do not want to comment on our judiciary, but I certainly do not buy the story that Modi had no hand in the events of 2002. He was the Chief Minister of Gujarat at that time, and the horrible events happened on a large scale in Gujarat Can it be believed that he had no hand in the events of 2002? At least I find it impossible to believe it.
             Let me give just one example. Ehsan Jafri was a respected, elderly former Member of the Indian Parliament living in the Chamanpura locality of Ahmedabad in Gujarat. His house was in the Gulbarga Housing Society, where mostly Muslims lived. According to the recorded version of his elderly wife Zakia, on 28.2.2002 a mob of fanatics blew up the security wall of the housing society using gas cylinders, they dragged Ehsan Jafri out of his house, stripped him, chopped off his limbs with swords, etc and burnt him alive. Many other Muslim were also killed and their houses burnt. Chamanpura is barely a kilometer from the police station, and less than 2 kilometres from the Ahmedabad Police Commissioner's office. Is it conceivable that the Chief Minister did not know what was going on? Zakia Jafri since then has been running from pillar to post to get justice for her husband who was so brutally murdered. Her criminal case against Modi was thrown out by the district Court (since the Special Investigation Team appointed by the Supreme Court found no evidence against Modi and filed a final report), and it is only now (after a gap of over 10 years since the incident) that the Supreme Court set aside the order of the trial Court and directed that her protest petition be considered.
I am not going into this matter any further since it is still sub judice.
           Modi has claimed that he has developed Gujarat. It is therefore necessary to consider what is the meaning of 'development'. To my mind development can have only one meaning, and that is raising the standard of living of the masses. Giving concessions to big industrial houses, and offering them cheap land and cheap electricity can hardly be called development if it does not raise the standard of living of the masses.
                 Today, 48% Guajarati children are malnourished, which is a higher rate of malnourishment than the national average. In Gujarat there is high infant mortality rate, high women's maternity death rate, and  57% poverty rate in tribal areas,  and among Scheduled Castes/Backward Castes. As stated by Ramchandra Guha in his article in 'The Hindu' today, (8.2.2013) in Gujarat environmental degradation is rising, educational standards are falling, and malnutrition among children abnormally high. More than a third of adult men in Gujarat have a body mass index of less than 18.5 – the 7th worst in the country. A UNDP report in 2010 has placed Gujarat after 8 other Indian States in multiple dimensions of development e.g. helath, education, income levels, etc. (see Hindustan Times, 16.12.2012 P.13) 
               Mr. Guha further states in his article: “As a sociologist who treats the aggregate data of economists with scepticism, I myself do not believe that Gujarat is the best developed State in the country. Shortly after Modi was sworn in for his third term, I travelled through Saurashtra, whose polluted and arid lands spoke of a hard grind for survival. In the towns, water, sewage, road and transport facilities were in a pathetic state; in the countryside, the scarcity of natural resources was apparent, as pastoralists walked miles and miles in search of stubble for their goats. In terms of social and economic development, Gujarat is better than average, but not among the best. Kerala, Himachal Pradesh and Tamilnadu are the three states which provide a dignified life to a decent percentage of their population”.
               Business leaders no doubt claim that Modi has created a business friendly environment in Gujarat, but are businessmen the only people in India?
                    To those who talk of development of Gujarat under Modi I ask this question: Should the malnourished children of Gujarat eat the roads, electricity and factories which Modi has created?
                   I appeal to Indian people to consider all this if they are really concerned about the nation’s future, otherwise they may make the same mistake which Germans made in 1933.
(An edited version of this article  published in The Hindu on February 15,2013)

அரசால் செய்யப்படும் உயிர் கொலையே தூக்கு தண்டனை..!

                   
                    இந்திய பாராளுமன்றத் தாக்குதலுக்கு  காரணமாகக் கருதப்பட்ட  அப்சல் குருவை சென்ற வாரம் சர்ச்சைக்குரிய முறையில் தேர்தலை கணக்கில் வைத்துக்கொண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அவசர அவசரமாக தூக்கிலிட்டுக் கொன்றது என்பது இன்றைக்கு ஒரு அவசியமான விவாதத்தை நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறது. அறிவியலும் நாகரீகமும் வளர்ந்த இந்த காலக்கட்டத்தில்,  மனிதாபிமானத்தையும், மனிதநேயத்தையும் விரும்பி வளர்க்கிற இந்த காலக்கட்டத்தில், காந்தியின் தேசம் என்று பெருமையாக பேசப்படும் நம் நாட்டில் இனியும், காலகாலமாக  நடைமுறையில் இருக்கின்ற உயிரைக்கொல்லும் தண்டனையான ''மரண தண்டனை'' என்கிற ''தூக்கு தண்டனை'' தேவைதானா...? என்கிற கேள்வி இன்று மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது.  
           தூக்கு தண்டனை என்பது தேவைதானா...? என்ற விவாதம் தேவைப்படுகிறது என்று அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட அறிவித்துள்ளது. ஒரு உயிரை இரக்கமின்றிக் கொன்றவனை தூக்கிலிட்டுக் கொல்வது தான் நியாயம் என்றும், நீதியென்றும் சாதாரணமாக மக்களின் மனதில் ஊறிப்போன ஒரு வழக்கு. ஆனால் ஒரு கொலைக்கு இன்னொரு கொலை என்பது நியாயமில்லை என்பதை மக்களுக்கு உணர்த்தவேண்டும். அதை ஆட்சியாளர்களும் உணரவேண்டும்.  
              கடந்த பல ஆண்டு காலமாகவே மரணதண்டனைக்கு எதிரான பிரச்சாரங்களை செய்து வரும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர். வி. ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், '' மரணதண்டனை என்பது அரசின் கோழைத்தனத்தை குறிப்பதாகும். அது  எந்த பலனையும்  கொடுக்காது. மரணதண்டனை விதிப்பது என்பது முட்டாள்தனமானது. நீதித்துறையில் உள்ள தூக்குதண்டனை என்கிற இந்தக் கறையை நீக்கவேண்டும்'' என்று மரணதண்டனையைப் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.  
          தண்டனை என்பது குற்றவாளிகளை திருத்துவதற்கு தானே அன்றி சாகடிப்பதற்கு அல்ல. கொன்றுவிடுவதால் அவன் திருந்துவதற்கு வாய்ப்பில்லையே. இதுவரை கொலைக் குற்றவாளிகளுக்கு நீதி மன்றத்தினால் தூக்கு தண்டனை கொடுத்ததில் நாட்டில் கொலைக்குற்றங்கள்   குறைந்துவிட்டதா...?  அப்படியொன்றும் இல்லையே..! மாறாக, ஆண்டாண்டு அதிகரித்துக்கொண்டு  தானே இருக்கிறது. அது மட்டுமல்ல, ஒரு கொலைக்கு இன்னொரு கொலை எப்படி  தீர்வாகும்...?  என்பதையும் யோசிக்கவேண்டும்.
.          கொலை  செய்வதவனை  தூக்கிலிடுவது  என்பதும் ஒரு  கொலைக்கு சமமானது தானே..? ஒரு கொலைக்கு இன்னொரு கொலை என்பது எப்படி நியாயமாகும்...?தூக்கு  தண்டனையை அரசே நிறைவேற்றுவதால் அதை நியாயம் என்று ஒப்புக்கொள்ளமுடியுமா..? தூக்கு தண்டனை என்பது அரசே செய்கிற கொலை என்பதை யாராலும் மறுக்க முடியுமா...? ஆம்.. இது அரசே  செய்கிற  கொலை ஆகும்.  இது மனிதத்தன்மையற்றது. காட்டுமிராண்டித்தனமானது. உயிர் வாழும் உரிமை என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும்.  அரசும், சமூகமும் இதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.  மதிப்பு மிக்க மனித உயிர்களை மதித்திடல் வேண்டும்.
              நீதியரசர். வி. ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், ''பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அப்பாவி இளைஞர்களை தூக்கிலிடுவதை நான் பார்த்திருக்கிறேன்'' என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார். அன்றும் இன்றும் தூக்குதண்டனை என்பது ஆட்சியாளர்களின் கொடிய முகமாகவே இருக்கிறது நாம் உணரவேண்டும் 
                முன்பு ஒருமுறை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான கமிஷன் மரணதண்டனையை தடை செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்திய போது, அந்த ஓட்டெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாதது வெட்கக்கேடானது. உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தூக்குதண்டனையை - மரணதண்டனையை ரத்து செய்திருக்கின்றன. ஆனால்  இந்தியா உட்பட வெறும் 58 நாடுகளில் மட்டுமே மரணதண்டனை என்பது நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Expand your roles to fight inequality - Amartya Sen urges trade unions...!

          Nobel laureate economist Amartya Sen delivered inaugural address at 90th anniversary of Reserve Bank Employees' Union in Kolkata on Saturday the 16th February 2013.
        Nobel laureate Amartya Sen on Saturday exhorted trade unions to expand their role to address injustice in general, covering aspects like inequalities in income, healthcare, education and nutrition.
        Speaking at the 90th anniversary celebration of the Reserve Bank Employees' Association, he said unions could take their role further as their identity cut across religious sects, and urged them to address issues such as malnourishment, income disparity and public healthcare.
           Turning to the issue of disparate incomes, he said that on per capita income the Indian rural labour had fallen enormously behind. Unions were defined narrowly in the past after revolutions in countries like China, Prof. Sen said. “Injustices remained even after the revolution… If workers seize power… injustices do not go away… they come in many forms.”
He said that in India the issue was particularly important as inequality here had accompanied debilitating deprivation, “which has brought in its wake issues of healthcare and undernourishment... At the root of it is the inability of the private income-wage earner to keep pace with the economy.”
             Prof. Sen felt that a two-pronged attack was necessary in this regard — one at the political level and the other at the level of the unions, who have very good ground to press for more public spending on things like public healthcare and education.
          “The political role for removing injustice by unions has to be through movement, which presses for things like public health, nutrition, in addition to [addressing] the issue of secularity... Wages should also rise not just for civil servants, but for the working class as whole.”
             Calling for a criticality of approach towards unions, the Nobel laureate said there was also a feeling that they were not concerned with the accountability of the worker. This was not what was needed to remove injustices for which the co operation of the unions was needed, he said. “View social justice of the country as a whole and see what unions can do as a cooperative partner without forgetting issues like workers interests.”

Delhi gang rape                        

           Prof. Sen mentioned last year’s Delhi gang rape incident, saying such incidents should have been a bigger issue much earlier. “One Billion Rising is a very welcome development… Everyone must welcome the anti-rape movement. But there is also need for taking up the issue of poor Dalit women who are often violated.” 

courtesy : The Hindu / 17.02.2013

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

குமுதம் ரிப்போர்டரின் வக்கிர புத்தி...!

         இன்றைக்கு உலகமயத்தின் அரக்கக்குழந்தையான ''வணிகப்போட்டி'' என்பது ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை. மக்களிடம் நிலைத்து நிற்பதற்காகவும் , கொள்ளை இலாபம் அடிப்பதற்காகவும் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும்   மனசாட்சியே இல்லாமல் நீதி, நியாயம், நேர்மை, தர்மம் இவைகளை கொன்றுவிட்டு  வெட்கமில்லாமல் வீதியில் அம்மணமாய் உலா  வருகின்றன. இது மாதிரியான பத்திரிகைகள் எல்லாம் நம் வீட்டிற்குள்ளே நுழைவதற்குக் கூட அருகதையற்றவையாகத் தான் இருக்கின்றன.
            அப்படிப்பட்ட பத்திரிகையில் ஒன்று இன்று அதை பார்க்கும் போதே நமக்கெல்லாம் அருவருப்பை வரவழைத்திருக்கிறது. அந்த பத்திரிகை எதுவுமில்லை. குமுதம் குடும்பத்தைச் சேர்ந்த ''குமுதம் ரிப்போர்டர்'' தான் இன்றைக்கு துர்நாற்றம் அடிக்குமளவுக்கு செய்தியை கொடுத்திருக்கிறது. அட்டை படத்தில் ''குஷ்பு இன்னொரு மணியம்மை?'' என்றத் தலைப்பிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களையும், திரைப்பட நடிகை குஷ்புவையும் இணைத்து படம் போடப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்தவுடனேயே நமக்கு கோபம் வரவில்லை. அருவருப்பைத் தான் தூண்டியது. பத்திரிகை சுதந்திரம் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதலாமா...? நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. அவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாத பத்திரிகைகள் கண்டதையெல்லாம் எழுதி கவலைப்படுகின்றன. இதன் மூலம் குமுதம் பத்திரிகையின் வக்கிரபுத்தி வெளிப்பட்டிருக்கிறது.  
           சமிபத்தில் புதுடெல்லியில் இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசும் போது பத்திரிக்கைகளின் இன்றைய செயல்பாடுகளை விமர்சனம் செய்திருந்தார். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் வறுமையின் காரணமாக மூன்றரை இலட்சம் விவசாயிகள் இறந்திருக்கிறார்கள் என்று பி. சாய்நாத் வெளியிட்ட செய்தியை எந்த பத்திரிகைகளும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் திரைப்பட நடிகை கரீனா கபூர் பற்றிய கிசுகிசுவையும், சச்சின் அடித்த நூறாவது சதம் பற்றிய செய்தியையும்  பத்திரிகைகளில் எழுதுகிறார்கள் என்று நீதிபதி வேதனையுடன் தெரிவித்தார். இப்படித் தான் இன்றைய பத்திரிகைகள் இலாபம் ஒன்றே குறிக்கோளாய் அலைகின்றன. அதற்கு குமுதம் ரிப்போர்டரும் விதிவிலக்கு அல்ல. குமுதம் ரிப்போர்டரை பொருத்தவரையில் இலாபம் மட்டுமல்ல, நிச்சயமாக ''யாரையோ'' திருப்திப்படுத்தவும் இந்த செய்தியை பிரசுரித்திருக்கலாம் என்ற சந்தேகமும் நமக்கு வருகிறது. 

                இப்படியெல்லாம் எழுதுவதன் மூலம் மணியம்மையாரை கேவலப்படுத்தியதற்காக  நீங்கள் திருப்திபட்டுக்கொள்ளலாம். அல்லது குஷ்புவையும், ''தோழர்'' கருணாநிதியையும்  (அவர் தானுங்க தன்னை ஒரு கம்யூனிஸ்ட்ன்னு சொன்னாரு) கேவலப்படுத்தியதற்காக நீங்கள் திருப்திப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் இதுபோன்று எழுதுவதால் பெண்கள் அரசியலுக்கு வருவதும், பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதும் தடைப்பட்டுபோகும் என்பதை ஊடகங்கள் மறந்துவிடக்கூடாது. இது போன்ற கட்டுரைகளைப் படிக்கும் போது அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் ஆர்வமுள்ள பெண்களுக்கு, ''இதே கதி தங்களுக்கும் ஏற்பட்டுவிடும்'' என்ற அச்சமும், பயமும் ஏற்பட்டு விலகிச் சென்றுவிடுவார்கள். அப்படி விலகிச் செல்லவேண்டும் என்பது தான் ஆணாதிக்கச் சிந்தனை என்பதையும், ஆதிக்க சாதியினரின் சிந்தனை என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது.   
       தயவுசெய்து இனியாகிலும் பத்திரிகைகள் திருந்தட்டும். ஒரு நடிகை என்றால் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணம் பத்திரிகைகளுக்கு மாறவேண்டும். இது போன்ற புறச்சூழ்நிலைகள் தான் ஒரு சில இளைஞர்களின் கொடூரமான எண்ணங்களுக்கும், வக்கிரமான புத்திகளுக்கும் ஊக்கம் தருகின்றன என்கிற சமூக சிந்தனை பத்திரிகையாளர்கள் புத்தியில் எழவேண்டும். இனியாகிலும் பத்திரிகைகள் நல்ல சிந்தனையை வளர்க்கின்ற செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். நேர்மையுடன் செயல்படவேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

ஹெலிகாப்டரில் பறக்கும் இந்தியாவின் மானம் - வெட்கப்படாத காங்கிரஸ் கட்சி...!

எழுதுகிறேன்...

வியாழன், 14 பிப்ரவரி, 2013

CPI(M) getting ready to make Sangharh Sandesh Jatha a grand success...!

           Since its formation, this is the first time the communist party is taking out a nationwide jatha touring from all the states of India. The time and theme of the jatha adds importance.  The last Central Committee meeting of CPIM held in January 28 finalized the programme of the all India jathas. These jathas which will traverse the length and breadth of the country will propagate the Party’s stand on various major issues affecting the people and the alternative policies of the Left. The issues of food security and price rise; land and house sites; employment; education and health; and the fight against corruption will be focused in these jathas.
        The four jathas will be from Kanyakumari to Delhi led by Ramachandran Pillai; Kolkata to Delhi led by Prakash Karat; Mumbai to Delhi led by Sitaram Yechury; and Amritsar to Delhi led by Brinda Karat. Jathas to link up with the main jathas will be conducted from Srinagar, Guwahati, Parlakhemundi (Orissa), Ahmedabad and other centres.
           The jathas which will begin from February 25 and the first week of March will culminate in a mass rally in Delhi on March 19, 2013. Cadres and people from Delhi, Bihar, Madhyapradesh, Rajasthan, Haryana and Punjab will participate in the Delhi mass rally with a participation of More than 1 lakh. 
           Preperations are going on in hectic pace to make the jatha a grand success. State committees are also planning state wide jathas to create awareness among the people on the issues raised by the all india Jatha. Various sub jathas are also planned in each states. 

Kanyakumari - Delhi Jatha

       The Southern Jatha from Kanyakumari to New Delhi will be led by PB Member Com. S Ramachandran Pillai. PB Member M A Baby, Central Secretariat member V Sreenivasa Rao, CC member Sudha Sundarraman will also be part of the jatha. The jatha will cover 7 states. Starting from Kanyakumari in Tamil Nadu the jatha will cover Kerala, Karnataka, Andhra Pradesh, Maharashtra, Madhya Pradesh and Uttarpradesh. Jatha will be inaugurated on the 24th of February 2013 by CPIM General Secretary Com. Prakash Karat. The jatha will join with the Western Jatha led by Com. Sitaram Yechury at Bhopal on March 12.