உலகநாடுகளை சுரண்டி தான் மட்டுமே வளம்பெற்று, உலகமயம் - தாராளமயம் என்ற பெயர்களால் பல துருவ உலகத்தை, ஒரு துருவ உலகமாக மாற்றத் துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் காரணமாக உணவு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறிவருகிறது. எதிர்காலத்தில் மிகப்பெரிய உணவு நெருக்கடி என்பதை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். அதே சமயத்தில், கீழ்கண்ட காரணங்களும் உணவு பற்றாக்குறைக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
(1) மக்கள் தொகைப் பெருக்கம் - 1960இல் 3 பில்லியன்
2011இல் 7 பில்லியன்.
2011இல் 7 பில்லியன்.
(2) மனிதர்கள் வாழும் சராசரி வயது - 1960இல் 53 வயது
2010இல் 69 வயது.
2010இல் 69 வயது.
(3) தொழிற்சாலைகள், வீட்டுமனைகள் வளர்ச்சியால்
சுருங்கி வரும் விளைநிலங்கள்.
சுருங்கி வரும் விளைநிலங்கள்.
(4) உலகில் காடுகள் அழிப்பு மிகப் பெரிய அளவில்
நடைபெறுவதால் மழையளவு குறைந்து விளைச்சல் பாதிப்பு.
நடைபெறுவதால் மழையளவு குறைந்து விளைச்சல் பாதிப்பு.
(5) கச்சா எண்ணெய் விலையேற்றம்உணவு
பொருட்களின் விலையை வெகுவாக பாதிக்கிறது.
இந்த விலையேற்றம் செயற்கையாக நிர்ணயக்கப்படுகிறது.
பொருட்களின் விலையை வெகுவாக பாதிக்கிறது.
இந்த விலையேற்றம் செயற்கையாக நிர்ணயக்கப்படுகிறது.
(6) சொகுசு வாழ்க்கையின் காரணமாக மோட்டார்
வாகன பயன்பாடு அதிகரித்து காற்று மாசுபாடு,
தொழில் வளர்ச்சியால் நிலம், நீர் மாசுபாடு
இதனால் சுற்றுச்சுழல் மாசடைந்து பருவநிலை மாற்றம்
வாகன பயன்பாடு அதிகரித்து காற்று மாசுபாடு,
தொழில் வளர்ச்சியால் நிலம், நீர் மாசுபாடு
இதனால் சுற்றுச்சுழல் மாசடைந்து பருவநிலை மாற்றம்
ஏற்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை
(7) உணவு உற்பத்தி, பகிர்வு, நுகர்வு இவைகள் அனைத்தும்
ஏகாதிபத்தியத்தின் கையில் உள்ளதால் தேவையான அளவு
உணவு உற்பத்தி இருந்தும் பட்டினியாக மக்கள்.
உச்ச நீதிமன்றம் வீணாகும் தானியங்களை
ஏழைகளுக்கு கொடுக்கச் சொல்லியும் நமது
உச்ச நீதிமன்றம் வீணாகும் தானியங்களை
ஏழைகளுக்கு கொடுக்கச் சொல்லியும் நமது
பிரதமர் மன்மோகன் சிங் தரமறுத்து அழிச்சாட்டியம்
செய்ததை நாம் நன்கு அறிவோம்.
செய்ததை நாம் நன்கு அறிவோம்.
(8) ஆப்பிரிக்க நாடுகளில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள்
ஏகாதிபத்திய நாடுகளுக்கு குத்தகை / விற்பனை செய்யப்பட்டு
பயோ-டீசல் உற்பத்தி செய்யப்படுவதும்,
தென்அமெரிக்காவில் உணவு பண்டங்களிலிருந்து எத்தினால்
உற்பத்தி செய்யப்படுவதும்...
தென்அமெரிக்காவில் உணவு பண்டங்களிலிருந்து எத்தினால்
உற்பத்தி செய்யப்படுவதும்...
(9) முக்கியமான விதைகள், உரம், பூச்சிகொல்லி மருந்துகள்
போன்றவைகள் கொள்ளையடிக்கும் பன்னாட்டு கம்பெனிகள்
(10 ) உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களின்
கேள்விகுறியாகும் நம்பகத் தன்மை.
(11) வளர்ந்த நாடுகள் விவசாயிகளுக்கு 70% மேல் மானியம் தந்து
அவர்களைக் காப்பாற்றி கொண்டு வருகையில், வளரும் நாடுகளை
மானியம் தர கூடாது என வற்புறுத்தி தங்கள் நாட்டு உணவு
பொருட்களை குறைந்த விலையில் வளரும் நாடுகளில் விற்று
உள்ளூர் விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றுவது.
உதாரணமாக ஹெய்தி (HAITI ) நாட்டின் நெல் விவசாயம் அமெரிக்க
அரிசி இறக்குமதியில் சிக்கி நெல் விவசாயம் பாழடிக்கப்பட்டது.
இன்று அரிசிக்காக அமெரிக்காவை நோக்கி இருக்கும் நிலைமை.
(12) விவசாயம் என்ற வாழ்வாதாரத்தை வணிகமாக்கி ஊகவணிகம்,
பங்குசந்தைளில் செயற்கையாக விலையேற்றி கொள்ளையடிக்கும்
ஸ்திரமற்ற பன்னாட்டு வங்கிகள் மற்றும் ஹெட்ச் பண்டுகள்.
(13 ) எல்லாவற்றுக்கும் மேலாக உலகமயம், தாராளமயம் விவசாயத்தைவெகுவாக பாதித்துள்ளது.
இவற்றையெல்லாம் பற்றி நன்கு அறிந்திருந்தும், நம் ஆட்சியாளர்கள் நம்மை ஏமாற்றாமல் நம் வருங்கால குழந்தைகளை பட்டினியின்றி
காப்பது அவர்களின் கடமையாகும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
.
உணவு பொருட்களை வீணாக்கும் உலகின் முதல் 17 நாடுகள் பற்றி தகவல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் காலனி ஆதிக்க நாடுகள் அதிகமாக இருந்தாலும் ஆசியா கண்டத்தில் ஜப்பான் மட்டுமே இருந்தது சற்று வியப்பை அளித்தது. என்றாலும் அது 17 வது நாடாக தான் இருக்கிறது என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. ஒருபுறம் வீணாகும் உணவு பொருட்கள் மறுபுறம் பஞ்சத்தால் பல லட்சம் மக்கள் இறக்கும் அவலம். நீலிக்கண்ணீர் வடிக்கும் மேற்கத்திய நாடுகள், தான் செய்யும் இந்த தவறை திருத்திக் கொள்ளுமா? இல்லை தொடருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதனை அந்தந்த நாட்டின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டு பார்க்கையில் மனம் கனப்பது உண்மை தான்.
பல மைல்கள் நடந்து சென்று குடிநீர் எடுத்துவரும் ஆப்பிரிக்க பெண்மணிகள், அவர்கள் குடிநீருக்காக மட்டுமே பூமிக்கும் நிலாவிற்கும் இடையே ஆன தூரத்தை போல் பதினாறு மடங்கு நடக்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. ஐ. நா சபை சொல்கிறது.
இப்படி வீணாக்கும் ஒவ்வொரு உணவு பொருட்களில் “மறைந்திருக்கும் நீர்” (Virtual Water) பற்றியும் கணக்கிட்டால் இன்னும் நம் நெஞ்சம் பதறும். இயற்கை நமக்கு தேவையான அனைத்தையும் தருகிறது ஆனால் ஒன்று நாம் அவைகளை கண்டுகொள்வதில்லை அல்லது அவைகளை தன் இலாபத்திற்கு ஏகாதிபத்தியம் சுரண்டிவிடுகிறது. இது நம் வருங்கால குழந்தைகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு அமைதியின்மையையும் ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை.
