மாணிக் சர்க்கார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாணிக் சர்க்கார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 ஏப்ரல், 2014

தஞ்சையில் தோழர்.மாணிக் சர்க்காரின் எழுச்சியுரை (வீடியோ )

நேற்று 14.04.2014 திங்களன்று மாலை தஞ்சாவூர் மக்களவைத்தொகுதி 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர்.எஸ்.தமிழ்ச்செல்வி
அவர்களை ஆதரித்து இந்தியாவிலேயே எளிமையான, ஏழ்மையான,
நேர்மையான, மிகச் சிறந்த முதல்வராக திரிபுரா மாநிலத்தை ஆட்சி 
செய்யும் தோழர்.மாணிக் சர்க்கார் அவர்கள் தஞ்சையில் ஆற்றிய உரை.


செவ்வாய், 10 செப்டம்பர், 2013

இந்திய மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டும் திரிபுரா மாநிலம்...!

அறிவொளி பட்டியலில் திரிபுரா முதலிடத்தை பிடித்தது...!                              
        
              இந்திய அறிவொளி வளர்ச்சி பட்டியலில் திரிபுரா, கேரளாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனாலும் முழு கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலமாக அது மாறவில்லை. இன்றைய தினத்தில் திரிபுராவில் 94.65 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நூறு விழுக்காடு கல்வியறிவு என்பது எங்கள் இலக்கு. அதை விரைவில் நாங்கள் எட்டுவோம் என்று மிக நம்பிக்கையுடன் கூறுகிறார் திரிபுரா மாநிலத்தை வழிநடத்திச் செல்லும் இடது முன்னணியைச் சார்ந்த முதல்வர் மாணிக் சர்க்கார்.                                     
         உலக கல்வியறிவு தினத்தையொட்டி அகர்தலாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மாநில அறிவொளி இயக்கத்திற்கு அவர் நன்றி கூறியதுடன், மாநிலத்துக்கு பெருமை சேர்த்துத் தந்த இந்த பிரம்மாண்டமான இயக்கத்தில் தங்களது உடல் வருத்தங்களை பொருட்படுத்தாது பாடுபட்ட அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். மாநிலத்தின் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் கிடைத்த மதிப்பீடுகளின் அடிப்படையில் அவர் மாநிலத்தின் அறிவொளி வளர்ச்சி 94.65 விழுக்காட்டை எட்டியது என்ற அறிவிப்பை கூட்டத்தில் வெளியிட்டார்.
            இந்த அருமையான தருணத்தில் மாநிலத்தை முழுகல்வியறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் சில பிரிவு மக்களை, குறிப்பாக மூத்த குடிமக்களை எங்களால் எட்ட முடியவில்லை என்று அறிவொளி இயக்க அதிகாரி வருத்தப்பட்டார். எஞ்சியுள்ள 5.35 விழுக்காடு மக்களுக்கும் கல்வியறிவு அளிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன என்றும் அவர் கூறினார். சுமார் 38 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் முழுவெற்றி அடைவோம் என்றும் அவர் உறுதிபடக்கூறினார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் அதிகபட்ச கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் திரிபுரா நான்காவது இடத்தில் இருந்தது. 2011 புள்ளிவிவரப்படி திரிபுராவில் 87.75 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றிருந்தனர். பாதுகாப்பு படையினர் ஆயுதமேந்திய கலவரக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டு வந்த பின் அறிவொளி இயக்கத்தினரால் தொலைதூர மலைப்பகுதி மக்களை அடைய முடிந்தது. அதன் பலனாக அப்பகுதிகளில் அறிவொளி இயக்க வேலைகள் சிறப்பாக நடந்தன. மிசோரமில் கல்வியறிவு வளர்ச்சி 88.80 விழுக்காடு என்றும் கேரளாவில் இது 93.91 விழுக்காடு என்றும் திரிபுரா அரசு அதிகாரிகள் கூறினர்.
          2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திரிபுரா கல்வியறிவு வளர்ச்சியில் பன்னிரண்டாம் இடத்தில் இருந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது திரிபுரா நான்காவது இடத்துக்கு முன்னேறியது என்றும் அவர் கூட்டத்தில் கூறினார். 2011 கணக்கெடுப்பில் திரிபுரா 87.75 விழுக்காட்டை அடைந்த பின்பு, ஆகஸ்ட் 2012, அரசு எட்டு மாவட்ட ஆட்சியாளர்களைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தியது. 38 லட்சம் மக்கள் வாழும் மாநிலத்தில் ஐம்பது வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களும் அடங்கிய 1.31 லட்சம் மக்கள் மட்டுமே கல்வியறிவு பெறாதவர்கள் என்று தெரியவந்தது என்று மாணிக் சர்க்கார் கூறினார். ஆகஸ்ட் 10 முதல் 25 தேதிவரை கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்ட இந்திய புள்ளிவிவர நிறுவனத்தின் (ஐஎஸ்ஐ) தலைமையில் புதிதாக கல்வியறிவு பெற்றவர்கள் பற்றிய இறுதி மதிப்பீடு நடத்தப்பட்டது. ஐஎஸ்ஐ இடைக்கால அறிக்கையின்படி மாநிலத்தின் கல்வியறிவு 94.65 விழுக்காட்டை எட்டியுள்ளது தெரியவந்துள்ளது. ஐஎஸ்ஐ இறுதி அறிக்கை கிடைக்கும் போது மாநிலம் 96 விழுக்காட்டை எட்டியிருக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். கிராம பஞ்சாயத்து, கிராம சபைகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், உள்ளூர் மன்றங்கள் ஆகியவை முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான மாநில அறிவொளி இயக்கத்தின் மேற்பார்வையில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டதால் திரிபுரா இச்சாதனையை அடைய முடிந்தது. திரிபுராவில் ஆண்களை விட பெண்களின் கல்வியறிவு வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் திலிப் அச்சர்ஜீ கூறினார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பெண்களின் கல்வியறிவு 64.91 விழுக்காடாக இருந்தது.
                  2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது 83.15 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது 18.24 விழுக்காடு உயர்வாகும். ஆண்கள் மத்தியில் இந்த உயர்வு 11.18 விழுக்காடுதான். ஆண்கள் மத்தியில் 2001ல் 81 விழுக்காடாக இருந்த கல்வியறிவு 92.18 விழுக்காடாக உயர்ந்தது என்றும் அவர் கூறினார். இடது முன்னணி அரசின் திட்டங்களும் இதற்கு முன்னோடியாக இருந்தன. மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் படிக்கும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்குஆண்டுதோறும் ரூ.1718ம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1485ம் வழங்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு முறையே ரூ.856ம், ரூ.645ம் வழங்கப்படுகிறது. அதேபோல் கலைப்பிரிவு மாணவர்களுக்கு முறையே ரூ.855ம், ரூ.706ம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற முனைப்புகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

மோடியா... ராகுலா... இருவரும் வேண்டாம் - மாணிக் சர்க்காரே வேண்டும்...!

        
           இணையதளத்தில் இப்படியொரு செய்தி பரவி வருவதும், இளைஞர்கள் மத்தியில் இப்படியொரு பார்வையிருப்பதும் வரவேற்கத்தக்கதே. இன்றைக்கு ஊடகங்கள் எல்லாம் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் ஒரே மாதிரியான சிந்தனையை மக்கள் மூளைகளில் விதைத்து வருகிறார்கள். வருகிற 2014 - ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான உங்கள் தேர்வு என்பது நரேந்திர மோடியா அல்லது ராகுல் காந்தியா - இரண்டு பேரில் ஒருவராகத் தான் இருக்கவேண்டும் என்று இந்திய - அந்நிய பெருமுதலாளிகளும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் சேர்ந்து ஊடகங்களை பயன்படுத்தி மக்கள் அனுமதி பெறாமல் மக்கள் மூளையில் திணித்து மூளைச்சலவை செய்கிறார்கள். மக்கள் சுதந்திரமாக சிந்திக்காமலும், தேர்தல் என்பது ஜனநாயகமில்லாமலும் தான் நடக்கப்போகிறது என்பதன் அறிகுறிதான் இது. 
         இந்த சூழ்நிலையில் தான், பேஸ்புக்கில் ''Youth India Movement'' என்ற இளைஞர்கள் குழு வேறுமாதிரியாக சிந்தித்து செய்திகளை பரப்பி வருகிறார்கள். அதில் அவர்களது சுதந்திரமான சிந்தனை,  நாட்டைப்பற்றிய பார்வை, மக்களாட்சியைப் பற்றிய எதிர்ப்பார்ப்பு, தலைவர்களை எடை போட்டுப்பார்க்கும் திறன், தங்களை யார் ஆட்சி செய்யவேண்டும் என்ற தேர்ந்தெடுக்கும் உரிமை - என்பன போன்ற அனைத்து அம்சங்களும் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் நன்கு ஆராய்ந்து தெளிவாகத்தான் முடிவெடுத்திருக்கிறார்கள் என்பதும் நமக்கு புரிகிறது. இப்படியொரு மூன்றாவது சிந்தனை என்பது, மாற்றுப் பார்வை என்பது மக்களின் மாற்று அரசியலுக்கான வேட்கை என்பதும் புலப்படுகிறது. மாற்று அரசியலுக்கான இந்த மாற்றுக்கரூத்துக்களை மக்களிடையே கொண்டு செல்லவேண்டும். 
         பரவாயில்லையே இணையதள இளைஞர்கள் இப்படியும் சிந்திக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது தேசப்பற்றிய உண்மையான அக்கறையோடும் சிந்தனையோடும் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதில் நிம்மதியாக இருக்கிறது. 
        இணையதளத்தில் கொடுக்கப்பட்ட ஆங்கில செய்தியை அப்படியே கீழே தருகிறேன்....!


No Modi…………No Rahul ……….. Say no to the dirty politics of 
cast, religion, regionalism, muscle, Money & Identity
India needs Manik Sarkar as a Prime Minister...!
India's Poorest but purest and honest Chief Minister of Tripura - Mr Manik Sarkar - Role model for Indian Youth.......!
He has been elected consecutively for fourth terms as Chief Minister of Tripura. 
First some facts about this great person.
 
1. He is the poorest but Purest Chief Minister of India.

2. He has been elected as chief minister consecutively for fourth term.

3. He doesn't own a house.

4. His bank balance is Rs. 6500/-

5. He donates all his salary to CPI (M) party and party gives him sustenance        
    allowance of Rs 5000/- month.

6. His wife never uses official vehicle and can very easily be seen on Rickshaw in  
     Agartala.

7. Even his worst opponents admit that Manik Sarkar is an impeccably honest man,  
    certainly a rare variety among politicians today.

           Now, compare these with other chief ministers or politicians, who have assets worth more and more crores of rupees with them...!

            Apart from honesty, Mr Manik Sarkar has been impetuous for the development of the state which includes better connectivity and development of IT sector in state.

          We think he demands nothing from us but to be aware from central opportunist politics………….He wants to change India as one of the most developed Countries in the world…!
         Say no to the dirty politics of cast, religion, regionalism, muscle, Money & Identity...!
        
India needs Manik Sarkar as a Prime Minister...!