தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 24 ஜூலை, 2015
''குடியை'' மையப்படுத்தி அரசியல் மோசடி எழுகிறது...!
லேபிள்கள்:
அரசியல் மோசடி,
டாஸ்மாக்,
தமிழ்நாடு,
மதுவிலக்கு
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015
தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழந்து கிடக்கும் தமிழ்நாடு...!
தமிழக மக்கள் பற்றிய உளவியல் ரீதியான ஆய்வு....!
''மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு'' என்று சுயமரியாதையும்,
பகுத்தறிவும் தந்தை பெரியாரால் கற்றுத்தரப்பட்டு திராவிட இயக்கம் வளர்ந்த
தமிழ்நாடு இது. தமிழ் மொழி ஊக்குவிப்பு, இந்தி எதிர்ப்பு, பிராமணிய
எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு என பல்வேறு நல்ல
அம்சங்ககளை தமிழக மக்களுக்கு ஊட்டி இயக்கம் வளர்த்து, பின்னாளில் அண்ணாவால்
திராவிட இயக்கம் அரசியல் கட்சியாய் மாறி மக்களின் நம்பிக்கையை பெற்று
அவர்களின் ஆதரவோடு தமிழ்நாட்டின் 1967-ஆம் ஆண்டில் அண்ணாவின் தலைமையில்
திராவிட முன்னேற்றக் கழகம் அரியணையில் ஏறியது. அண்ணாவின் மறைவிற்கு பிறகு
கருணாநிதி முதலமைச்சர் ஆனார். அப்போது பிடித்தது தமிழ்நாட்டிற்கு ''சனி'' -
இன்று வரை விடவில்லை. இந்தியாவில் ஊழலை கண்டுபிடித்தவர்கள் காங்கிஸ்
கட்சிக்காரன்கள் தான். ஆனால் மாட்டிக்கொள்ளாமல் விஞ்ஞானப்பூர்வமாக எப்படி
ஊழல் செய்வது என்பதை கண்டுபிடித்தவர்கள் திமுகக்காரர்கள் தான். தமிழ் மொழி,
தமிழக மக்கள் என்ற சிந்தனை மாறி, புதிய புதிய திட்டங்களை அறிவிப்பதும்,
அதில் திட்டம் போட்டு தங்களுக்கான பங்குகளை கணக்குப்போட்டு
கொள்ளையடிப்பதும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதுமாக திமுகவின்
ஆட்சி என்பது திசைமாறியது. சுயமரியாதையும்,
பகுத்தறிவும் தங்களுக்குள் ஊறிப்போன அன்றைய தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியில்
இருப்பவர்கள் கொள்ளையடிப்பதையும், சொத்து சேர்ப்பதையும்
ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த சமயத்தில் தான் சினிமாவில் நல்லவனாகவும்,
வாரிக்கொடுக்கும் வள்ளலாகவும், பெண்களின் பாதுகாவலனாகவும், தொழிலாளர்களின்
தோழனாகவும் நடித்து, முற்போக்குப் பாடல்களுக்கு வாயசைத்து தமிழ்நாட்டு
மக்களை கவர்ந்த எம்.ஜி.ஆர் ஊழலையும், கொள்ளையையும் பிடிக்காத உத்தமராய்
திமுகவை விட்டு வெளியேறினார். 1972-ஆம் ஆண்டில் அண்ணா திமுக என்ற புதிய
கட்சியை தொடங்கினார். ஏற்கனவே ஒரு நேர்மையான கதாநாயகனாக தமிழ்நாட்டின்
மக்களின் மனதில் நிறைந்துவிட்ட எம்.ஜி.ஆரால், தான் ஊழலில்லாத
நல்லாட்சியை மக்களுக்கு தருவேன் என்று ஊர் ஊராய் பிரச்சாரம் செய்து மிக
சுலபமாக தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெறமுடிந்தது. கருணாநிதி செய்த
ஊழலால் வெறுத்துப்போன தமிழ்நாட்டு மக்கள் ஊழலை ஒழிக்கவந்த பரமாத்மாவாக
பார்த்தார்கள். அதன் காரணமாக 1977-ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் அண்ணா
திமுகவை வெற்றிபெற செய்து எம்.ஜி.ஆரை முதலைமைச்சராக அரியணை ஏற்றுகிறார்கள்.
அனால் ஆட்சி மாறியதே ஒழிய, ஆட்சி முறையில் மாற்றமில்லை. எம்ஜிஆர் சொன்னது
போல் ஊழலை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியவில்லை. திமுக ஆட்சிக்காலத்தில்
விதைக்கப்பட்ட ஊழல்களே அண்ணா திமுக ஆட்சிக்காலத்திலும் பின்தொடர்ந்தது.
அதுமட்டுமல்ல, சினிமாவில் நடித்தது போல், ஆட்சிக்கு வந்தவுடன் எம்ஜிஆரால்
நிஜத்தில் தான் ஒரு தொழிலாளர்களின் தோழனாக நடிக்கக்கூட முடியவில்லை.
தங்களின் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்களை, விவசாயிகளை, மீனவர்களை, தன்
கையிலிருந்த காவல் துறையை கொண்டு துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினார்.
சர்வாதிகார முறையில் அடக்குமுறைகளை கையாண்டார்.
இப்படியாக ஊழல்களும் , தொழிலாளர் விரோத செயல்களும் மலிந்துவிட்டாலும், மக்களின் மனதில் வெறுப்பு ஏற்படுவதற்கு பதிலாக ''நல்லவன்'' என்ற ''சினிமா எம்ஜிஆர் பிம்பம்'' தான் தமிழ்நாட்டு மக்களின் கண்ணுக்கு முன்னால் நின்றது. இந்த காலக்கட்டத்தில் தான் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு பாதைகளிலிருந்து, தமிழ்நாட்டு மக்கள் திசை மாறினார்கள். அதன் காரணமாக தான் எம்ஜிஆர் மூன்று சட்டமன்றத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தான் சாகும் வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் முதலைமைச்சராகவே வாழ்ந்தார். அதன் பிறகு தமிழ்நாட்டு மக்கள் ஊழலையும் ஊழல்வாதிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வரத்தொடங்கினார்கள்.
எம்ஜிஆரின் மரணத்திற்கு பிறகு அண்ணா திமுக ''வாரிசுத் தகராறில்'' சிக்கி எம்ஜிஆரின் மனைவியான ஜானகியின் தலைமையில் ஓர் அணியாகவும், எம்ஜிஆரின் கதாநாயகிகளில் ஒருவரான ஜெயலலிதாவின் தலைமையில் மற்றோர் அணியாகவும் உடைந்து போக, பத்து ஆண்டு காலமாக மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியாமல் பதவி சுகத்தை இழந்துவிட்ட திமுக மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது. 1989-ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் சுயமரியாதையிலிருந்து சறுக்க ஆரம்பித்தார்கள். யாரை ஊழல்வாதிகள் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு தூக்கி எறிந்தார்களோ, அவர்கள் தூய்மையானவர்களாக கருதப்பட்டார்கள். அவர்களையே தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் அரியணை ஏற்றினார்கள். பத்து ஆண்டு கால காத்திருப்புக்கு பின் மீண்டும் கருணாநிதியே முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சி 1991-ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் வருகிறது. அந்த நேரத்தில் இரண்டுபட்ட அண்ணா திமுக, எம் ஜி ஆரின் கதாநாயகி ஜெயலலிதாவின் தலைமையில் ஒன்றுபட்டு நின்றது. மக்களின் கவனம் எம்.ஜி.ஆரின் கதாநாயகி ஜெயலலிதாவின் மீது ஈர்த்தது. அதுவரையில் ஜெயலலிதாவை கதாநாயகியாக பார்த்த தமிழ்நாட்டு மக்கள் , 1991-ஆம் ஆண்டு தேர்தலில் எம்.ஜி.ஆரின் வாரிசாக - கட்சித்தலைவராக பார்க்கத் தொடங்கினார்கள்.
கருணாநிதியின் குடும்ப அரசியலில் வெறுப்புற்ற தமிழ்நாட்டு மக்கள் எம்.ஜி.ஆரின் வாரிசான ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திமுகவை தேர்ந்தெடுத்தார்கள். ஜெயலலிதா முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். ஒரு பெண் மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். அதை வரவேற்கவேண்டும். ஒரு நடிகை நாடாள வந்தார். அதிலும் தப்பில்லை. வரவேற்கலாம். அனால் இவரது ஆட்சியிலோ அலங்கோலங்களும், அவஸ்தைகளும், எங்கும் ஆர்ப்பரிப்பும், எதிலும் ஆடம்பரமும், தொழிலாளர் விரோதமும், ஒரு ரூபாய் சம்பளம் பெற்றதும், ஆனால் வியக்கத்தக்க ஆடம்பர வாழ்க்கையும், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பும் தமிழ்நாட்டு மக்களை முகம் சுளிக்கவைத்தன. அதனால் 1991-ஆம் ஆண்டு ஊழல்வாதியாக தூக்கியெறியப்பட்ட கருணாநிதி, ஐந்து ஆண்டுகள் கழித்து, தமிழ்நாட்டு மக்களின் கண்களுக்கு உத்தமராக தெரிந்தார். அதன் காரணமாக 1996-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தமிழ்நாட்டு மக்கள் திமுகவையே வெற்றிபெற செய்தார்கள். கருணாநிதி மீண்டும் முதலமைச்சர் ஆனார். இந்த தேர்தலில் இருந்து தான் தமிழ்நாட்டு மக்கள் ஊழலை - இலஞ்சத்தை மனதார அங்கீகாரம் செய்ய தொடங்கினார்கள். யார் குறைந்த ஊழல் செய்தவர்கள் என்ற ''அளவுகோலை'' வைத்து ஓட்டுப்போட ஆரம்பித்தார்கள். கருணாநிதி தான் முதலமைச்சர் பதவிக்கு வந்தவுடன் ''ஒரு தவறு செய்தால் - அதை தெரிந்து செய்தால் - அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்'' என்று எம்.ஜி.ஆர் பாணியில் முதல் வேலையாக சென்ற ஐந்தாண்டில் ஊழல் புரிந்து சொத்துகளை சேர்த்தார் என்று குற்றம் சாட்டி ஜெயலலிதாவையும், அவரது கூட்டாளி அமைச்சர்களையும் சிறைக்குள் தள்ளினார். அவர்கள் மீது ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகள் போட்டார். தன்னை ஊழல்களுக்கு அப்பாற்பட்ட யோக்கியனாக தமிழ்நாட்டு மக்களுக்கு காட்டிக்கொண்டார். நம்பவைத்தார்.
ஆனால் அந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மக்களின் எண்ண அலைகளை - மனநிலையை புரிந்துகொண்ட கருணாநிதியும் அவரது கூட்டாளி அமைச்சர்களும் முன்பை விட ஊழலில் கைத்தேர்ந்தவர்கள் ஆனார்கள். கட்சியிலும், ஆட்சியிலும் முற்றிலுமாக குடும்ப அதிக்கம் - தலையீடு, அடுத்த பல தலைமுறைகளுக்கு வேண்டிய சொத்து குவிப்பு, அனைத்துத்துறைகளிலும் ஊழல் - இலஞ்சம் - சிபாரிசு என தமிழ்நாடு ஊழலில் புதிய பரிணாம வளர்ச்சியை காணத்தொடங்கியது. முதலமைச்சரும், அவரது அமைச்சர்களும், கட்சித்தலைவர்களும் முடிந்தவரை கொள்ளையடிப்பதும், சொத்து சேர்ப்பதும், இடையூறாக இருப்பவர்களை வெட்டிச்சாய்ப்பதுமாக அந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவித அச்சமில்லாமலும், கூச்சமில்லாமலும் செய்தார்கள். மாநிலத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் சொந்த அறிவைப் பயன்படுத்தாமல், மீண்டும் ''ஊழல் அளவுகோலை'' பயன்படுத்தி ''இவருக்கு அவரே பரவாயில்லை'' என்று அண்ணா திமுகவிற்கு வாக்களித்து ஜெயலலிதாவை மீண்டும் ஆக்கினார்கள். ஜெயலலிதா முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவுடன் உத்தமர் ஆகிவிட்டார். அதனால் சென்ற ஐந்து ஆண்டுகளில் ஊழல் புரிந்த கருணாநிதியின் மீது ஊழல் வழக்கு போட்டு, நடுராத்திரியில் கைது செய்து சிறைக்குள் தள்ளி ''பழிக்குப்பழி'' தீர்த்துக்கொண்டார். ஆனாலும் அந்த ஐந்து ஆண்டுகளில் ஊழல் குறைந்த பாடில்லை. ஊழல் என்பது புதிய புதிய வகைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்தது. முதலமைச்சர் அதிகார திமிரில் தொழிலாளர்களுக்கு எதிரான - அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஆனந்தம் அடைந்தார். பாதிப்படைந்த மக்கள் அவருக்கு எதிராக திரும்பினார்கள். அதனால் 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் ''ஊழல் அளவுகோலை'' பயன்படுத்தி ''இவருக்கு அவரே மேல்'' என்று கூறி அண்ணா திமுகவை தோற்கடித்து திமுகவை தேர்ந்தெடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஊழல் காரணமாக தூக்கியெறியப்பட்ட கருணாநிதியையே மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவைத்து அழகு பார்த்தார்கள்.
இந்த முறை ஜெயலலிதாவின் மீது ''பழிக்குப்பழி - பதில் கைது '' என்ற நடவடிக்கையெல்லாம் கிடையாது. காரணம் இருவரும் ''பழிக்குப்பழி'' நடவடிக்கைகளில் மாறி மாறி ஈடுபடுவதால், இந்த இருவரும் அல்லாமல் மூன்றாவதாக வேறு ஒருவரை தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துவிடப் போகிறார்கள் என்ற பயம் கருணாநிதி - ஜெயலலிதா ஆகிய இருவர் உள்ளத்திலும் எழுந்துவிட, இருவருமாக சேர்ந்து கையெழுத்திடப்படாத ''புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு'' வந்துவிட்டார்கள். இந்த ஐந்தாண்டுகளில் என்னால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவையும் சுருட்டி விடுகிறேன். அடுத்த பல தலைமுறைகளுக்கும் சொத்து சேர்த்துவிடுகிறேன். அடுத்த ஐந்தாண்டிற்கு தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் உங்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். மிச்சமுள்ளதை நீங்கள் சுருட்டிக்கொள்ளுங்கள். சொத்து சேர்த்துக்கொள்ளுங்கள். வேறு யாரையும் அனுமதிக்காமல் இப்படியே ஐந்தாண்டிற்கு ஒரு முறை நாம் இருவரும் மாறிமாறி ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டையே கொள்ளையடித்து சூறையாடிவிடலாம் என்று வெளியில் ''எலியும் பூனையுமாக'' இருந்துகொண்டு அவர்களுக்குள்ளாகவே ''புரிந்துணர்வு ஒப்பந்தம்'' போட்டுகொண்டு ஒற்றுமையுடன் ஏமாற்று அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களும் ஊழலோடு சமரசம் செய்துகொண்டார்கள். ஊழல் செய்வது தவறில்லை என்கிற அளவிற்கு சமரசம் செய்துகொண்டுவிட்டார்கள். ஊழல் செய்யுங்கள் - சொத்து சேர்த்துக்கொள்ளுங்கள் - எங்களுக்கும் கொஞ்சம் கொடுங்கள் என்கிற வகையில் ஊழலுக்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் தரும் வகைவகையான இலவசங்களுக்கும், ஓட்டுக்கு தரும் 1000-2000-த்துக்கும் மயங்கி தன்மானத்தையும், சுயமரியாதையையும் இழந்து கையேந்தி நிற்கிறார்கள். தமிழ்நாடு என்ற குழந்தையை ஐந்தாண்டுகளுக்கு அய்யாவிடமும், பிறகு ஐந்தாண்டுகளுக்கு அம்மாவிடமும் கொடுத்துவிட்டு வேடிக்கைப்பார்க்கிறார்கள். தந்தை பெரியார் தந்துவிட்டுப் போன தன்மானமும், சுயமரியாதையும், பகுத்தறிவும் எங்கே போனது. தமிழ்நாட்டு மக்கள் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு வெட்கமில்லாமலும், கூச்சமில்லாமலும், சுயநினைவே இல்லாமலும் இவர்கள் இருவருக்கும் பின்னால் நிற்கிறார்கள் என்பது தான் வேட்கக்கேடாய் இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வரை இப்படித்தான் நடந்துகொண்டு வருகிறார்கள் என்பதை உளவியல் ரீதியாக கூர்ந்து பார்ப்பவர்களுக்கு புரியும்.

சுயமரியாதை,
தமிழ்நாடு,
தமிழக மக்கள்,
தன்மானம்,
திராவிடக்கட்சிகள்
வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014
தமிழக மக்களே... மீண்டும் மீண்டும் முதலமைச்சர்களை திரையரங்கில் தேடாதீர்கள்...!
அண்மையில் பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழக மாநிலத்தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றதிலிருந்து தமிழக சட்டமன்றத்தின் மீது தனது பார்வையை திருப்பியிருக்கிறார். இதுவரையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட இல்லாத தமிழக சட்டமன்றத்தை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கான திட்டத்தில் இறங்கியிருக்கிறார். அதற்கு வருகிற 2016 - ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற தமிழக சட்டமன்றத்தேர்தலில், நாடாளுமன்றத்தேர்தலை போன்று ஏதாவது ''மோடி வித்தையை'' காட்டி தமிழக மக்களை கவர்ந்திழுக்க பல்வேறு திட்டங்களை தீட்டிவருகிறார். அந்த நேரத்தில் அவர்கள் மூலையில் உதித்த திட்டம் தான், ''ரஜினிகாந்த வலையை'' போட்டு தமிழக மக்களை சிக்கவைத்து ஓட்டுகளை பெருவது என்ற முயற்சியில் முனைப்புடன் ஈடுபட தொடங்கியிருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்தை பாரதீய ஜனதாக்கட்சியில் இழுப்பதற்கு ''தூது விடும் படலத்தில்'' இறங்கியிருக்கிறது பாஜகவின் தமிழக தலைமை. அதுமட்டுமல்ல... இன்னுமொரு படி மேலே போய், ''பிரதமர் வேட்பாளராக'' மோடியை அறிவித்து மோடி வித்தை காட்டியது போல், நடிகர் ரஜினிகாந்தை ''முதலமைச்சர் வேட்பாளராக'' அறிவித்து ''காந்தவலை'' விரித்து தமிழக மக்களை ஈர்ப்பது வரையில் பாரதீய ஜனதாக்கட்சி யோசித்துவருகிறது. பாஜகவின் இந்த பகல் கனவு நனவாகுமா ஆகாதா என்பது நடிகர் ரஜினிகாந்த் சொல்லும் பதிலில் தான் இருக்கிறது என்பது வேறு விஷயம்.
இதிலிருந்து நமக்கு ஒன்று மட்டும் புரிகிறது. தமிழ்நாட்டில் நடிகர் - நடிகைகளை காட்டினால் தான் தங்களுக்கு வெற்றிபெருமளவிற்கு ஓட்டு கிடைக்கும் என்பதை தமிழகத்திலிருக்கும் அரசியல் கட்சிகள் புரிந்துவைத்திருக்கின்றன என்பது நமக்குப் புரிகிறது. அதிலும் மாநில முதலமைச்சராக ஒரு நடிகரை தான் தேர்ந்தெடுப்பார்கள் என்கிற அளவிற்கு தமிழக மக்களை புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது உண்மையிலேயே நாமெல்லாம் வெட்கப்படவேண்டும். ஏனென்றால் 1967-ஆம் ஆண்டிலிருந்து தமிழக மக்கள் தமிழகத்தின் முதலமைச்சரை திரைப்படத்தில் தான் தேடி கண்டுபிடித்து தேர்ந்தெடுத்து உட்காரவைத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இன்றுவரையில் நடிகர்களை நம்பித்தான் தமிழகத்தின் ஆட்சியை ஒப்படைக்கிறார்கள். அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர்., வி.என். ஜானகி, ஜெயலலிதா ஆகிய முதலமைச்சர்கள் திரைப்படத்திலிருந்து வந்தவர்களே. அதுமட்டுமல்ல, தமிழக மக்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரத்குமார், ராதாரவி, விஜயகாந்த் போன்றவர்களை சட்டமன்றத்திற்கும், எஸ்.எஸ்.சந்திரன், ராமராஜன், நெப்போலியன் போன்றவர்களை பாராளுமன்றத்திற்கும் அனுப்பிவைத்து அழகு பார்த்தார்கள். திரைப்படத்தில் முகம் காட்டினால் போதும், மக்களின் மனதில் இடம்பிடித்து விடலாம். பின்பு அதே மக்களின் ஆதரவோடு சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் இடம் பிடித்துவிடலாம் என்றும், அடுத்து முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து விடலாமென்றும் தான் திரைப்பட நடிகர்களும் நடிகைகளும் அரசியலுக்குள் நுழைகிறார்கள். நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் உழைத்தவர்களையும், தியாகம் செய்தவர்களையும் ஓரங்கட்டிவிட்டு, வருமானம் ஒன்றே குறிக்கோளாய் கொண்டு அரிதாரம் பூசி கோடிக் கோடியாய் சம்பாதித்து அரசுக்கு கட்டவேண்டிய வரியை கூட முழுமையாக கட்டாமல் ஏமாற்றும் நடிகர் - நடிகைகளை இந்த நாட்டின் முதலமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து உட்காரவைப்பது என்பது தமிழகத்தின் சாபக்கேடாகப் போய்விட்டது.
தமிழக மக்களே... ஒரே ஒரு வேண்டுகோள் ....! இனிமேலும் தமிழக முதலமைச்சரை திரையரங்குகளிலும், திரைப்படங்களிலும் தேடாதீர்கள். கடந்த 47 ஆண்டுகளாக தமிழகம் சீரழ்ந்தது போதும். இனிமேலாவது மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் உயர்வுக்காகவும், உண்மையான அரசியல் விடுதலை, சமூக விடுதலை மற்றும் பொருளாதார விடுதலைக்காகவும் வீதியில் இறங்கிப் போராடுபவர்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் முதலமைச்சரை பொதுமக்களிடம் தேடுங்கள். வீதியில் மக்கள் கூட்டத்தில் தேடுங்கள். போராட்டக்களத்தில் போராளிகள் மத்தியில் தேடுங்கள். இன்று வீதியில் உங்களுக்காக முழங்கிக்கொண்டிருப்பார்கள். நாளை உங்களுக்காக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் உங்களுக்காக உழைத்திடுவார்கள் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல். சிந்தித்து பாருங்கள்.
லேபிள்கள்:
தமிழ்நாடு,
பாரதீய ஜனதாக்கட்சி,
முதலமைச்சர் வேட்பாளர்,
ரஜினிகாந்த்
திங்கள், 24 அக்டோபர், 2011
கருணாநிதி - ஜெயலலிதாவிற்கு மாற்று அவசியம் - தமிழ்நாடு என்ன இவர்களின் குத்துகை நிலமா...?
1967 - ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தை பிடித்து ஆட்டிப்படைப்பது இந்த திராவிடக்கட்சிகள் தான். அண்ணாவில் தொடங்கி கருணாநிதி, எம்ஜிஆர்., ஜானகி, ஜெயலலிதா வரை முதலமைச்சர்களாக தமிழகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இடையில் இவர்கள் சிறிது நேரம் இளைப்பாறிய போது, நெடுஞ்செழியன், ஓ. பன்னிர்செல்வம் போன்றவர்கள் இவர்கள் சார்பில் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். ஆக திராவிடக்கட்சிகளின் ஆதிக்கம் தொடங்கிய காலத்திலிருந்தே தமிழக மக்கள் தங்களுக்கான முதலமைச்சரை சினிமா கொட்டகையில் தான் தேடுகிறார்கள் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. சிறிது காலம் தான் ஆட்சி செய்தார் என்பதனால் அண்ணாதுரையைத் தவிர மற்ற அனைவரும் லஞ்ச - ஊழலில் கைதேர்ந்தவர்கள் தான். அதிலும், எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு இன்று வரை பார்த்தால், மிகப்பெரிய அளவில் ஊழல் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவரும் மாறி மாறி ஐந்தாண்டுகொரு முறை முதலமைச்சர்களாக வந்து போகிறார்கள். ஒவ்வொரு முறையும் இவர்களின் ஊழல் அட்டகாசங்கள் அதிகரித்துக்கொண்டு தான் போகிறது.
''திருடரா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது...'' கருணாநிதியோ ஜெயலலிதாவோ திருந்தமாட்டார்கள். ஆனால் இவர்களை தேர்ந்தெடுக்கும் தமிழக மக்களாவது திருந்துவார்களா என்றால் அவர்களும் திருந்த முடியாமல் இருக்கிறார்களே என்பது தான் வருத்தமாக இருக்கிறது. ''மாற்று சிந்தனை'' என்பது இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிக மிக அவசியமானது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
திராவிட இயக்கம் என்பது ஆரம்பத்தில் இந்தி எதிர்ப்பு உணர்வை கிளப்பிவிட்டு அரசியல் நடத்தி ஆட்சிக்கு வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இன்றைக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது...? தமிழ்.. தமிழ்.. என்று கூப்பாடு போட்ட இவர்களின் ஆட்சியில் தானே தமிழகம் முழுதும் அந்நிய மொழியான ஆங்கிலம் வளர்ச்சியடைந்திருக்கிறது. தாய்மொழிக் கல்விக்கு பதிலாக ஆங்கிலவழி கல்வி என்பது இவர்கள் ஆட்சியில் தான் செழுமைபெற்றது. இன்றைய இளையத்தலைமுறையினருக்கு தாய் மொழி மறந்து போனதற்கு இந்த திராவிடக்கட்சிகளே காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இவர்கள் ஆட்சியில் தான் ஆங்கிலம் வாழ்கிறது. தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது. தாய் மொழி அழிந்து போனால் அந்த சமூகம் அழிந்து போகும். தமிழகம் அழிந்து போகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
திராவிட இயக்க ஆட்சிக்காலத்தில் தான், தங்களை மாமன்னர்களைப் போல நினைத்துக்கொண்டு, குடும்ப உறுப்பினர்களை எல்லாம் ஆட்சியில் பங்கெடுக்கச் செய்வது. குறுநில மன்னர்களைப் போல் தமிழகத்தைப் பங்கு போட்டுக்கொள்வது. கூட்டுக்கொள்ளை அடிப்பது. ஆனாலும் கூச்சப்படாமல் மக்களோடு நடமாடுவது. இது தான் கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சிகளின் கலாச்சாரமாகவும், பண்பாடாகவும் இருந்துவருகிறது.
தங்களின் ஆட்சிக்கும், கூட்டுக்கொள்ளைக்கும் பங்கம் வராமல் திமுகவும் அதிமுகவும் தங்களுக்குள் ஒரு ரகசிய உடன்பாட்டோடு தான் தமிழகத்தில் அரசியல் நடத்துகிறார்கள். இந்த இருவருக்கும் மாற்று அவசியம் தேவை என்பதை தமிழக மக்கள் உணரவில்லை. இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த மக்களின் கோவணத்தை உருவி அம்மணமாய் நிற்கவைத்தாலும் கைத்தட்டி கும்மாளம் போடும் மக்கள் தான் இவர்கள்.
இந்த மாற்று சிந்தனையை மக்களிடம் உருவாக்கவேண்டும். அதற்கான காலம் கனிந்திருக்கிறது. நேற்று முன்தினம் தான் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, திமுக - அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாகவேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். இவரின் இந்தக் கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். ஜி. ராமகிருஷ்ணன் அவர்களும் வரவேற்றிருக்கிறார்.
அந்த அடிப்படையில், காங்கிரஸ் - பாரதீய ஜனதா கட்சி போன்ற தேசியக்கட்சியும், திமுக - அதிமுக போன்ற மாநிலக்கட்சியும் அல்லாத ஒரு மாற்று அணியை உருவாக்கவேண்டும். அந்த மாற்று அணி என்பது இடதுசாரிகளின் வழிகாட்டுதலோடு நடைபெறவேண்டும். அப்போது தான் சுயநலமில்லாத - போராட்டகுணமிக்க அணியாக அது இருக்கும். அப்போது தான் சட்டமன்றத்திலும், சட்டமன்றத்தின் வெளியிலும் ஒரு ஆக்கபூர்வமான - பலமான எதிர்க்கட்சிகளைக் கொண்ட மாற்று அணியாக மாறும்.
இந்த மாற்று அணிக்கான மாற்று சிந்தனையை வைகோ, விஜயகாந்த், திருமாவளவன், தா. பாண்டியன் போன்றவர்களும் யோசிக்கவேண்டும். அப்போது தான், வெறும் கவர்ச்சி அரசியலிலேயே ஏமாந்து போகும் தமிழகம் இனிமேலாவது ஒரு நல்ல திசை நோக்கிச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
லேபிள்கள்:
தமிழ்நாடு,
மாற்று அணி
ஞாயிறு, 23 அக்டோபர், 2011
உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் எப்படி ஒற்றுமையாய் ஒத்துப்போனார்கள்...?
தமிழக மக்களே... ஒன்றை கவனித்தீர்களா...? தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே இந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளவும் இல்லை... கடித்துக்கொள்ளவும் இல்லை.... ஒருவரையொருவர் சேற்றைவாரி பூசிக் கொள்ளவில்லை. தேர்தல் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே இருவரும் ஒற்றுமையுடன் சமாதானமாகவே சென்றது போலத்தான் இருந்தது.''குரங்குகளும், குல்லா வியாபாரியும்'' கதையில... அந்த குல்லா வியாபாரி தன் தலையில் இருந்த குல்லாவை கழட்டி தூக்கி எரிந்தவுடன் குரங்குகளும் தன் தலையில் இருந்த குல்லாவை கழட்டித் தூக்கி எரிந்து விடும். இந்த கதையை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இந்தக் கதையை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டவர் கருணாநிதி தான். ஜெயலலிதா - விஜயகாந்த் கூட்டணியை உடைக்கவேண்டுமென்ற நோக்கத்துடன், கருணாநிதி வஞ்சகமாகவும், தந்திரமாகவும் ''திமுக தனித்துப் போட்டி'' என்று அறிவித்து விட்டு, தன்னுடன் கூட்டணிக்கட்சிகளாக இருந்த காங்கிரஸ் போன்ற கட்சிகளை கழட்டித் தூக்கி எறிந்துவிட்டார். அதைப்பார்த்த ஜெயலலிதாவோ... அதுவரையில் கூட்டணிப் பற்றி பேசுவதற்கு குழு அமைத்து, கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் தொடங்கிவிட்ட சூழ்நிலையில், கருணாநிதி கூட்டணிக்கட்சிகளை கழட்டி தூக்கி எறிந்தது போல் இவரும் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் சத்தம் போடாமல் கூட்டணிக்கட்சிகளை கழட்டி தூக்கி எறிந்து விட்டு தனித்து நின்றார். இதில் எப்படி இருவருக்கும் இவ்வளவு ஒற்றுமை. குரங்கு குல்லா கதையை கருணாநிதி தான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இந்த குரங்கு குல்லா கதையை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நான் பொறுப்பில்லை. ஆமா... சொல்லிபுட்டேன்...
விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் அளவுக்கு உயர்ந்ததில் இந்த இருவருக்குமே பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இருவரும் ஒன்றில் தெளிவாக இருக்கிறார்கள்... விஜயகாந்த் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் இருவரும் ஒத்துப்போகிறார்கள்... ஐந்து ஆண்டுகளுக்குகொரு முறை தாங்களே மாறிமாறி வரவேண்டும். இவர்களுக்கிடையில் மூன்றாவதாக இன்னொருவர் வந்துவிடக்கூடாது என்பதில் இருவரும் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்.
முடிந்துபோன உள்ளாட்சித் தேர்தலில் கூட, தாங்கள் வெற்றி பெறுவதற்கு, தமிழகம் முழுதும் அதிமுக வேட்பாளர்களும், திமுக வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், நிறைய பரிசுப் பொருட்கள் தருவதுமாகத் தான் இருந்தார்கள். அப்போது கூட ஒருவரையொருவர் குற்றம் சொல்லவில்லை. மாநில தேர்தல் ஆணையமும் இந்த இருவரையும் கண்டுகொள்ளாமல் தான் இருந்தது என்பதும் உண்மை. இந்த விஷயத்திலும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒற்றுமையாய் ஒத்துப்போயிருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்.
இப்படியாக பணத்தையும் பொருட்களையும் கொடுத்து தான் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்திலும் இவர்கள் இருவரும் வந்திருக்கிறார்கள் என்பது இவைகளை வாங்கிக்கொண்டு வாக்களித்த தமிழக மக்களின் மனசாட்சிக்கு நிச்சயம் தெரியும்.
'' அம்மாவிற்கும் அப்பாவிற்கும்
சண்டை... விவாகரத்து...
குழந்தை
அம்மாவிடம் ஐந்து ஆண்டுகள்..
அப்பாவிடம் ஐந்து ஆண்டுகள்..
நீதிமன்றத் தீர்ப்பு...
குழந்தையின் பெயர் தமிழ்நாடு...''
என்று யாரோ எழுதிய புதுக்கவிதை தான் என் ஞாபகத்திற்கு வருகிறது.
லேபிள்கள்:
உள்ளாட்சித் தேர்தல்,
தமிழ்நாடு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)