நீயா நானா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீயா நானா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

''நீயா... நானா...'' - நேர்மையான மருத்துவர்கள் கோபப்படமாட்டார்கள்...!

 கட்டுரையாளர் : அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்
                                  முகநூல் :   Rk Acu
        
             கடந்த 17-08-2014 அன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நீயா நானா நிகழ்ச்சி மருத்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நிகழ்ச்சியின் விவாத பொருள் - மருத்துவர்கள் கமிசன் தொகையை எதிர்பார்த்து தேவையில்லாத டெஸ்டுகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர் என்பது.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் கோபிநாத் தவறான அறிவியல்பூர்வமற்ற கருத்துக்களை கூறி மக்களை திசைதிருப்புகிறார் என்று மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட IMA மற்றும் இதர அமைப்புகளை சேர்ந்த மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
           பொது மக்களின் மீது கொண்ட அளவு கடந்த அக்கறை கோபமாக உருமாறி அவர்களை போராட்ட களத்தில் இறக்கி விட்டிருக்கிறது. முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்புவது, தனியாக வெப்சைட் ஆரம்பித்து கருத்துக்களை பதிவு செய்வது, முகநூலில் கருத்துரைகளை பரப்புவது என்பதோடு நில்லாமல் தெருவில் இறங்கி போராடவும் ஆரம்பித்துள்ளது வீறு கொண்ட மருத்துவர் கூட்டம்.
              இருந்தாலும் MBBS படித்து முடித்தவுடன் மருத்துவர்கள் தமிழை மறந்து விட்டதால் சொல்லி வைத்தது போல் அவர்களின் பதிவுகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளது. மக்களுக்கு புரியாது என்று தெரிந்திருந்தாலும் புரியாத மொழியில் prescription எழுதுவது முதல், நோயை மக்களுக்கு புரியாத மொழியிலேயே பேசி பழக்கப்பட்டதால் அவர்கள் இப்படி செய்து இருக்கலாம். இருந்தாலும் எந்த மக்களுக்காக போராடுகின்றனரோ அவர்களிடம் தெளிவான நிலைப்பாட்டை எடுத்து கூற கீழ்கண்ட கேள்விகளுக்கு தமிழிலேயே பதில் அளிப்பார்கள் என்று நம்புகிறோம்.

              1. மக்களை தவறான முறையில் அறிவியல்பூர்வமற்ற செய்திகளை கூறி திசை திருப்புகிறார் என்று கோபிநாத் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளீர்கள்.அவர் வாங்கிய காசுக்கு பேசுகிறார் என்றும் கூறுகிறீர்கள். உண்மை தான். ஆனால் காம்ப்ளான் விளம்பரம் முதல் கக்கூஸ் கழுவும் திரவம் வரை அனைத்து விளம்பரத்திற்கும் யாராவது ஒருத்தர் டாக்டர் கோட் மாட்டி கொண்டு வந்து விளம்பரம் கொடுக்கிறார். அவர்கள் அனைவரும் மருத்துவர்கள் தானா? அந்த மருத்துவர்கள் கூறுபவை அனைத்தும் உண்மையா? அவர்கள் எல்லாம் காசுக்காக மக்களை தவறாக வழிநடத்தவில்லையா? அவர்களுக்கு எதிராக இதுவரை ஒரு துண்டறிக்கை கூட வந்ததில்லையே, ஏன்?

              2. மக்கள் சுய மருத்துவம் மேற்கொள்ள கூடாது என்று மிகுந்த அக்கறையுடன் கூறுகிறீர்கள். சின்ன தலைவலி, காய்ச்சல் என்றாலும் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வாருங்கள், அது hematoma,carcinoma,malaria என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறீர்கள். ஆனால் தினசரி தலைவலிக்கு crocin, காய்ச்சலுக்கு vicks action 500, மூட்டுவலிக்கு volini spray, உடல் சோர்வு, உடல் வலிக்கு neurobion என்று பல பன்னாட்டு மருந்து கம்பெனிகள், மக்களை சுயமருத்துவம் மேற்கொள்ள சொல்லி தூண்டுகிறதே! அவர்களை எதிர்த்து நீங்கள் வீறு கொண்டு எழாதது ஏன்?

                3. இந்திய மருந்து சந்தையில், மருந்துகள் நுழைய பல கட்ட ஆய்வுமுடிவுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் cipla போன்ற சில மருந்து கம்பெனிகள் மருத்துவர்களுடன் கூட்டு சேர்ந்து முறைகேடான செயல்களில் ஈடுபட்டு தவறான ஆய்வறிக்கையை தயாரித்து சந்தையில் நுழைந்துள்ளன. இது தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு,ஊடகங்களிலும் அந்த செய்தி வந்திருந்த்து. இது மக்களை ஏமாற்றும் செயல் மட்டும் அல்ல, அந்த மருந்துகளை பரிந்துரை செய்யும் மருத்துவர்களையும் ஏமாற்றும் செயல்.
 http://www.frontline.in/static/html/fl2913/stories/20120713291300800.htm
இப்போது கோபிநாத் என்ற தனி மனிதனுக்கு எதிராக குரல் கொடுக்கும் எந்த மருத்துவரும் அப்போது பன்னாட்டு நிறுவன்ங்களுக்கு எதிராக போராடவில்லையே ஏன்?


              4. நீயா நானா நிகழ்ச்சியின் விவாத பொருளான, பரிசோதனை நிலையங்களிடமிருந்து கமிசன் பெறுவது என்பது மருத்துவர்களின் தொழில் தர்மம்-professional ethics தொடர்பானது. இந்த professional ethics ஐ கண்காணிக்க கூடிய இந்தியாவின் உயர் அதிகார அமைப்பான Medical council of India வின் உறுப்பினராக உள்ளவர், கேதன் தேசாய். இவர் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் செய்ததால் கைது செய்யப்பட்டவர். இவரிடமிருந்து கிலோ கணக்கில் தங்கமும், லாரி லாரியாக பணமும் கைப்பற்றப்பட்டது. ஆனால் இவரை MCI உறுப்பினராக குஜராத் மாநில மருத்துவ கவுன்சில் எதிர்ப்புகள் இல்லாமல் தேர்வு செய்துள்ளது. கேதன் தேசாயை தங்களது professional ethics ஐ கண்காணிக்கும் அமைப்பின் உறுப்பினராக அனுமதித்துள்ள மருத்துவர்கள், professional ethics குறித்து கேள்வி எழுப்பிய கோபிநாத் “எங்களின் கால் தூசுக்கு ஈடில்லை” என்று முகநூலில் பதிவிட என்ன தகுதி உள்ளது?

http://timesofindia.indiatimes.com/india/Ketan-Desai-is-back-in-Medical-Council-of-India/articleshow/24841425.cms


                 5. நீயா நானா நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய மருத்துவர் அமைப்புகளில், IMA என்று அழைக்கப்படும் INDAIN MEDICAL ASSOCIATION னும் ஒன்று. இவர்கள், தங்களின் மேல்மட்ட அமைப்பான WORLD MEDICAL ASSOCIATION க்கு இந்திய பிரதிநிதியாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கேதன் தேசாயை அனுப்பி வைத்துள்ளனர். மக்கள் நலனில் அக்கறை கொண்டு தான் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் என்று இவர்கள் கூறுவது ஊரை ஏமாற்றும் வேலை இல்லையா..?


இவை மட்டும் அல்ல :


NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.

VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.

LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?

COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் தான்  அதன் விற்பனையை இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியன் எல்லாம் இளிச்சவாயனா?

           வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.

             ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.


PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?

E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.

Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!
மாகி யில், (maggie ) flavor (E-635 ) என்ற code இருக்கும்.

கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
(பி.கு இந்த குறியீடை குறித்து கொள்ளுங்கள்)



             மேல்க்கண்ட பெரும்பாலான விளம்பரத்திற்கும் யாராவது ஒருத்தர் டாக்டர் கோட் மாட்டி கொண்டு வந்து விளம்பரம் கொடுக்கிறார். அவர்கள் அனைவரும் மருத்துவர்கள் தானா? அந்த மருத்துவர்கள் கூறுபவை அனைத்தும் உண்மையா? அவர்கள் எல்லாம் காசுக்காக மக்களை தவறாக வழிநடத்தவில்லையா? அவர்களுக்கு எதிராக இதுவரை ஒரு துண்டறிக்கை கூட வந்ததில்லையே, ஏன்?

          டாக்டர் கோட் மாட்டி கொண்டு வந்து நடத்தும் இந்த வியாபாரங்கள், விளம்பரங்கள் ஆரோக்யதை கெடுக்காது என்று கூறப்போகிறீர்களா...? மக்கள் நலனை விடவா இவர்கள் கொடுக்கும் காசு உங்களுக்கு அவ்வளவு முக்கியமாக தெரிகிறது...!

சர்க்கரை நோய்க்கு சாப்பிடும் மருந்துகள் சிறுநீரகத்திலும், கல்லீரலிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று அரசே தடை செய்த போது, அந்த மருந்துகளுக்கு தடை நீக்கம் செய்ய போராடிய நீங்களா இதனை கண்டுகொள்ள போகிறீர்கள்...

               மக்களே உங்கள் நலன் உங்கள் கையில்... நீங்கள் தெளிவாக இருந்தால் இந்த எந்த வியாபாரிகளாலும் உங்களை ஏமாற்ற முடியாது... இனி உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்...!

மருந்துகளே இல்லாத உடல்நலத்தைப் பெறுவோம்!
மருத்துவமே தேவையற்ற மனிதர்களாய் உயர்வோம்!!

திங்கள், 11 பிப்ரவரி, 2013

விஜய் டி வி - யின் '‘நீயா நானா’' நிகழ்ச்சி தந்த அதிர்ச்சி..!

கட்டுரையாளர் : ஆளூர் ஷாநவாஸ்                  
                                சமூக வலைதள எழுத்தாளர் 
       விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் ஒரு பக்கம் எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் களப்பணியாளர்களும், மறுபக்கம் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தொடர்பற்றவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். எழுத்தாளர் என்ற முறையில் நானும் பங்கேற்றேன்.
                இன்றைய நிலையில் தமிழகத்தின் தலையாய பிரச்சனைகள் எவை? என்ற கேள்வியை, இளைஞர்களை நோக்கி முன்வைத்தார் கோபிநாத். ஏராளமான இளைஞர்களின் கருத்துக்கள் மேலோட்டமாகவே இருந்தன. லஞ்சம், ஊழல், மின்சாரம் என்பதைத் தாண்டி அவர்களுக்கு இந்த சமூகத்தில் நடக்கும் எந்த அவலங்களைப் பற்றியும் தெரியவில்லை. பல இளம்பெண்கள் டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்முறையைப் பற்றி அதிகம் பேசினர். அவர்களுக்கும் கிராமப்புறங்களில் நாள்தோறும் நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றியோ, வாச்சாத்தி பற்றியோ, கயர்லாஞ்சி பற்றியோ எதுவும் தெரியவில்லை.
             இஸ்லாமியர்கள் குறித்த உங்கள் பார்வை என்ன? என்று அடுத்த கேள்வியை கேட்டார் கோபி. அதற்கு பதில் சொன்ன ஒரு மாணவர் ‘எனக்கு நிறைய முஸ்லிம் பிரண்ட்ஸ் இருக்காங்க; ஆனால், எங்க அம்மா முஸ்லிம் பசங்க கூட பாத்து பழகுப்பா! என எச்சரிக்கிறார்’ என்றார். இன்னொரு இளைஞர் ‘முஸ்லிம்கள் என்றாலே டெரரிஸ்ட் தான்’ என்ற தோற்றமே எங்களுக்கு விதைக்கப்பட்டிருக்கிறது என்றார்.
                     குஜராத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அனைத்து இளைஞர்களுமே ‘நல்ல நிர்வாகம்; சிறந்த முதல்வர்’ என்று பாராட்டுக்களையே தெரிவித்தனர். ஒருவருக்குகூட குஜராத்தின் மறுபக்கம் தெரியவில்லை.
                கூடங்குளம் குறித்த கேள்விக்கு ‘மின்சாரம் அவசியம்; அதனால் அணு உலை நிச்சயம் வேண்டும்’ என்றே இளைஞர்கள் கூறினர். உதயகுமார் அம்மக்களை தவறாக வழி நடத்துகிறார் என்று சொன்னார் ஒரு மாணவி. இடஒதுக்கீடு பற்றி கேட்கப்பட்ட போது மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. பெரும்பாலான இளைஞர்கள் ‘இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்’ என்று ஒரே குரலில் முழங்கினர். ஒரு தலித் இளைஞரே ‘இடஒதுக்கீடு எனக்கு தேவையில்லை; அதனால் பிற சமூகங்களைச் சார்ந்த என் நண்பர்கள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று ஒரே போடாகப் போட்டார்.
       எதிர்பக்கம் இருந்த சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒரு கணம் ஆடிப்போய் விட்டோம். என்ன நடக்குது இங்கே? எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? என்ற கேள்விகள் எங்கள் மனங்களில் ஓங்கி நின்றன. முடிந்தவரை அனைத்துக்கும் விளக்கம் கொடுத்து அவர்களுக்கு புரிய வைத்தோம்.
          
நான் பேசும்போது ஒன்றைச் சொன்னேன். ‘இங்கே எதிர்புறம் இருக்கும் இளைஞர்களின் வயதொத்த நான், கடந்த 15 ஆண்டுகளாக சமூக வெளியில் எழுதி, பேசி, இயங்கிக் கொண்டிருக்கிறேன். சமூக செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவருமே அவ்வாறு இயங்கி வருகின்றனர். ஆனால், எங்கள் கருத்துக்கள் இந்த இளைய சமூகத்திடம் சென்று சேர்வதில்லை. இவர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டும்; எதைக் கொடுக்கக் கூடாது என்பதில் ஊடகங்கள் முன்முடிவோடு செயல்படுகின்றன. ஊடகங்கள் சொல்வதையே இவர்களும் உலகம் என்று நம்புகின்றனர். அதுதான் பிரச்சனை’ என்றேன்.
            பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம், சிறுபான்மை அரசியல், இந்துத்துவ எதிர்ப்பு என்று என்னென்னவோ நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவை எதிலுமே தொடர்பற்ற ஒரு தலைமுறை நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை கவனிக்காமலேயே இருக்கிறோம்.
             ‘நாம் சுமக்க வேண்டிய சுமைகளும், கடக்க வேண்டிய தூரங்களும் மிக மிக அதிகம்’ என்ற சிந்தனையே, ‘நீயா நானா’ அரங்கை விட்டு வெளியேறும்போது எனக்கு ஏற்பட்டது.