![]() |
| இப்படி இருந்தவரைத் தான்.... |
![]() |
| இப்படி ஆக்கிப்புட்டாங்க.... |
ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் மாதம் நெருங்கும் போது புதுவையே விழாக்கோலத்துல தான் இருக்கும். எங்க புதுச்சேரியில புதுவை காமராசரு... புதுவை காமராசருன்னு ஒருத்தரு இருக்காருங்க. சின்னகாமராசருன்னுக் கூட தன்னைத் தானே கூப்பிட்டுக்கு திரிவாரு... ஆனா அவரு அப்படி கூப்பிட்டுகிறதுல தப்பு இல்லைங்க.... ஏன்னா.... தமிழ்நாடு காமராசரு மாதியே டிரஸ் போட்டுக்குவாரு... அவர மாதிரியே இவரும் கல்யாணமும் பண்ணிக்கலீங்க.... அந்த பெரிய காமராசரு இந்திரா காந்தியோடு சண்டைப்போட்டுகினு அன்றைய காங்கிரச விட்டு வெளியேறினாரு.... இந்த காமராசரு அவங்க மருமக சோனியா காந்தியோடு சண்டைப்போட்டுகினு இன்றைய காங்கிரஸ் கட்சிய விட்டுட்டு வெளியேறிட்டாரு.... இப்படியே தமிழ்நாட்டு காமராசருக்கும் புதுவை காமராசருக்கும் நெறைய ஒத்துமையா சொல்லலாமுங்க... அம்புட்டு இருக்குமுங்க...
| போதும்டா சாமீ.... |
இந்த புதுவை காமராசருக்கு தான் ஆகஸ்ட் நாலாம் தேதி பொறந்தநாளாம்... ஊரே நாரிப்போச்சீங்க... அப்பப்பா...ஊரு முழுதும் ஏகப்பட்ட டிஜிட்டல் பேனருங்க... புதுவை காமராசரின் ஒரிஜினல் கெட்டப்ப மாத்தி விதவிதமான கெட்டப்புல போட்டு அசத்தியிருப்பாங்க.... பாக்கிறவங்க கண்ணெல்லாம் கூசி ''மெட்ராஸ் ஐ''யே வந்துடும்முன்னா பாத்துக்குங்க.... அதை பாத்தா aஅழுவுற கொழந்தைங்க கூட அழுகையை நிறுத்திடுமுங்க.... அந்த படங்களை எல்லாம் இந்த சின்னகாமராசரு நடுநிசிக்குப் பிறகு ரசியோ ரசியின்னு ரசிப்பாருங்கலாம் பேயி மாதிரி...



