பாரதீய ஜனதாக் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதீய ஜனதாக் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 செப்டம்பர், 2014

மோடியின் 100 நாள் ஆட்சியும் ஈர்க்கும் ஆடையலங்காரமும்....!

                 ''வளர்ச்சி... வளர்ச்சி'' என்று சொல்லி மக்களை ''வளைச்சி வளைச்சி'' ஓட்டுக்கேட்டு வெறும் 31 சதவீத வாக்குகளே பெற்றாலும், தேர்தலில்   வெற்றிபெற்ற மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிகம் என்ற அடிப்படையில் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப்பொறுப்பை ஏற்று இன்று நூறாவது நாளை தொடுகிறது. அதிக எண்ணிக்கையில் மக்களவை உறுப்பினர்களை கொண்ட பாரதீய ஜனதாக் கட்சிக்கு நூறாவது நாளை தொடுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் இந்த நூறு நாட்களில் மோடி தலைமையிலான ஆட்சி என்ன சாதித்தது....? நான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவன் என்று தன்னை பற்றி விளம்பரப்படுத்திக்கொள்ளும் மோடி கடந்த நூறு நாட்களில் என்ன சாதித்து காட்டினார்....? இந்த கேள்வியெல்லாம் நூறு நாளிலேயே கேட்டா எப்படி...? இன்னும் 5 வருஷம் இருக்கு இல்ல..? அப்படின்னு கேள்வி வரும். ஏன் இந்த ''நூறு நாள்'' அளவுகோளை எடுக்கிறோம் என்றால், தேர்தல் நேரத்தில மோடியும், அவரது கூட்டாளிகளும் தான் நாங்கள் பதவியேற்று 100 நாளில ''வானத்தை வில்லா வளைப்போம்... மணல கயிறா திரிப்போம்... நாங்க வித்தியாசமானவங்க...'' என்றெல்லாம் வாய் ஜாலமும் வார்த்தை ஜாலமும் மாயா ஜாலமும் காட்டித்தான் இப்போ ஆட்சியில உட்கார்ந்துகிட்டு இருக்காங்க.
                   ஆனால் இந்த நூறு நாட்களில் நடந்தது என்ன...? மோடி என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறாருன்னு பார்த்தா தலையே சுத்தும். இவர்கள் பதவியேற்றவுடன் பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்திக்காட்டினார். இரயில் கட்டணத்தையும்  கடுமையாக உயர்த்திக்காட்டினார். பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி முதலீடு... இன்சூரன்ஸ் துறையில்  அந்நிய நேரடி முதலீடு... இரயில்வே துறையில் அந்நிய  நேரடி முதலீடு... என அந்த மூன்று துறைகளையும் பார்சல் செய்து இந்த மாதம் அமெரிக்க சுற்றுப்பயணம் போகும்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பரிசுப்பொருளாய் கொடுக்க  ஏற்பாடுகள் செய்தார். 64 ஆண்டுகாலமாக இயங்கிவந்த திட்டக்கமிஷனுக்கு மூடுவிழா நடத்த கருத்துக்கேட்டார்.  வசதியற்ற மக்களுக்கு வருமானம் இல்லையென்றாலும் பரவாயில்லை. காசு இல்லையென்றாலும் பரவாயில்லை. பசிக்கிற வயித்துக்கு சோறில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அவர்களுக்கு வங்கிக்கணக்கு அவசியம் என்று ''கட்டாய வங்கிக்கணக்கு'' அறிமுகம் செய்துவைத்தார். ஏறுகின்ற விலைவாசியை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பதவியேற்ற 100 நாட்களில் பூட்டான், பிரேசில், நேபாளம், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தார். தேர்தல் வரையில் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தவர், பிரதமராக ஆனப்பிறகு பேசுவதை நிறுத்திக்கொண்டார். ஆனால் வெளிநாட்டில் பேசுவார். இவைகள் தான் மோடியின் 100 நாள் சாதனைகளாக மக்களால் இன்றைக்கு முணுமுணுக்கப்படுகின்றன.
                 ஆனால் மோடியின் அரசியல் காலத்தை மூன்று காலமாக பிரிக்கலாம். ஒன்று...  பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு  முந்தைய காலம்.  இரண்டு... பிரதமர் வேட்பாளர் காலம். மூன்று... பிரதமர் பதவிக்காலம். இதுல 100 நாள் பிரதமர் பதவிக்காலம் தான் மிகவும் குறிப்பிடத்தக்க காலம் கருதவேண்டும். மேலே சொன்ன சாதனைகள் ஒருபுறமிருக்க. இன்னொரு பக்கம்... இந்த பிரதமராக இருக்கும் இந்த 100 நாட்களில் நரேந்திரமோடி சுமார் 200-க்கும் அதிகமான ஆடை அணிந்திருக்கிறாராம். அதுமட்டுமல்ல ஒரு முறை அணிந்த ஆடையை இன்னொரு முறை அணிந்ததில்லையாம். இந்தியாவில் உள்ள முக்கிய உடையலங்கார நிபுணர்கள் சொல்லும் தகவல்கள் தான் இது. இன்றைக்கு ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருக்கும் மோடியின் ஆடை அலங்காரங்களைப் பார்த்து ஜப்பானிய பிரதமரே அசந்துபோய்விட்டாராம். ஜப்பானில் ஒரே நாளில் நடைபெற்ற நான்கு வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான்கு வெவ்வேறு விதமான ஆடைகளில் கலந்துகொண்டாராம். அந்த நிகழ்ச்சிகளில் அவரோடு கலந்துகொண்ட ஜப்பானிய பிரதமரே ''அடேங்கப்பா....!!!!! இவ்வளவு டிரெஸ் வெச்சிகிட்டு நம்மகிட்ட கடன் கேட்கிறாரே'' என்று அசந்துபோய் விட்டாராம்.
           பொதுவாகவே நரேந்திரமோடி பொதுவாகவே ஒரு ''அலங்காரப்பிரியர்'' என்பதை யாராலும் மறுக்கமுடியாது. நடையலங்காரம், உடையலங்காரம், பாவனையலங்காரம், சொல்லங்காரம்... உடலசைவில் அலங்காரம்... என இந்த அலங்காரங்களில் மோடி அதிக நாட்டமும் மோகமும் கொண்டவர். அதற்காகவே பணத்தையும் நேரத்தையும் சிந்தனையையும் செலவிடக்கூடியவர் என்று அவருக்கு அருகிலிருப்பவர்களே சொல்கிறார்கள். அப்படிப்பட்ட மோடியிடம் பதவியேற்ற இந்த 100 நாட்களில் இப்படிப்பட்ட  அலங்காரங்களில் அதிகமான வளர்ச்சியை நம்மால் காணமுடிகிறது. மக்கள் தன்னை ஒரு பிரதமராக பார்ப்பதை விட ஒரு ''ஹீரோவாக'' பார்க்கவேண்டும் என்று அதிக கவனம் செலுத்துகிறார் என்றே சொல்லவேண்டும்.  பிரதமர் என்ற முறையில் அவர்  ஒரு இடத்திற்கு சென்றால், தன்னுடைய நடை, உடை, பாவனைகளாலும், ஏதாவது ''வித்தியாசமான'' செயல்களாலும் அங்கு கூடியிருப்பவர்களை தன்பால் ஈர்க்கும் வேலைகளில் சிந்தித்து செயல்படுகிறார். .
                மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முதன்முறையாக பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழையும் போதே, அவரது சிந்தனையை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. தேசத்தின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களையும், தியாகங்களையும், இழப்புகளையும் சந்தித்து சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்று பாராளுமன்றத்தின் உள்ளே நுழையும் போது ஜவஹர்லால் நேரு கூட செய்யாத செயலை, இந்திய பெருமுதலாளிகளின் செலவில் பிரதமர் பதவியை பெற்ற நரேந்திரமோடி செய்தபோது அதைப்பார்த்த நமக்கெல்லாம் புல்லரித்துப் போனது. அதை அருகிலிருந்து பார்த்த தாத்தா அத்வானியே ''அய்யோ.... போதும் டா சாமி'' என்று அழுதுவிட்டார் என்றால் பாருங்களேன். பாராளுமன்றக் கட்டிடத்தின் உள்ளே நுழையும் போதே அதன் படிகளை குனிந்து வணங்கி முத்தமிட்டு நுழைந்தாரே மோடி அது தான் அவரது 100 நாள் சாதனையின் முதல் படிக்கட்டு. அன்றையிலிருந்து மேலே சொன்ன சாதனைகளை திறம்பட செய்து இன்று ஜப்பான் நாட்டில் அந்த நாட்டு மக்களின் முன்னால் ''டிரம்ஸ் சிவமணி'' போல் மோடி டிரம்ஸ் வாசித்து காட்டினாரே அது தான் அவரது 100 நாள் சாதனைகளின் கடைசிப் படிக்கட்டு. அன்று முதல் இன்று வரை இந்த 100 நாட்களில் தன்னை  ஒரு பிரதமர் என்று காட்டிக்கொள்வதை விட ஒரு ஹீரோவாக காட்டிக்கொள்ள அவர் பலவாறு யோசித்ததும், அதற்காக  நேரத்தையும், பணத்தையும் செலவழித்ததும்,  இந்த 100 நாட்களில் அவர் உபயோகப்படுத்திய விதவிதமான ஆடைகளையும், அதன் எண்ணிக்கையையும்  நிச்சயமாக யாராலும் மறுக்கமுடியாது. ஒரு பிரதமருக்கு இப்படியெல்லாம் ஆடையலங்காரம் செய்துகொள்ள நேரமிருக்கிறதா என்று ஆச்சரியப்படுகிறார்கள் அவருக்கு வாக்களித்த மக்கள். இவர் பிரதமர் வேலையைத்தவிர மற்ற வேலைகளை ''ரூம் போட்டு யோசித்து'' செய்கிறார் என்று அவருக்கு வாக்களிக்காத ''பெரும்பான்மை'' மக்கள் வேதனைப்படுகிறார்கள்.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

80 நாட்களிலேயே மோடி பலூன் புஸ்ஸ்ஸ்.......!

                               ஊதி ஊதி பெரிதாக்கி வானளாவி பறக்கவிடப்பட்ட மோடி கேஸ் பலூன், மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்று எண்பதே நாட்களில் ''புஸ்ஸ்ஸ்'' என்று காற்று இறங்கிவிட்டது. கடந்த வாரம்  பீகார், மத்தியபிரதேசம், பஞ்சாப், கர்நாடகம் ஆகிய 4 மாநில சட்டசபைக்கான 18  தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் வெறும் 7 இடங்களில் மட்டுமே மோடி - அமித்ஷா தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி வெற்றிபெற முடிந்தது என்பதும், மற்ற 11 இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றிருக்கின்றன என்பதும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும்.
             மோடி பதவியேற்று இன்னும் 100 நாட்கள் கூட ஆகவில்லை. மோடியின் ''அகாஜூகா'' வேலையை   மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்பதை தான் இந்த தோல்வி காட்டுகிறது. 

வியாழன், 15 மே, 2014

இந்திய ஊடகங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...!

                   அடடடா...  இந்திய ஊடகங்களை என்னவென்று பாராட்டுவது என்றே தெரியவில்லை. என்னா நேர்மை...! என்னா நியாயம்...! வாங்கின காசுக்கு கடைசி வரையில் ஊதுராங்கப்பா...! மோடியே நேர்ல வந்து வேணா... போதும்.... நிப்பாட்டுங்கன்னு சொன்னாக்கூட  நிப்பாட்டமாட்டாங்க போலிருக்கே...! நாடு முழுதும் தேர்தல் முடிந்து கடந்த மூன்று நாட்களாக ஊடகங்கள் போடுகிற கூப்பாடு இருக்கே... தாங்க முடியல... வெட்கமே இல்லாம  மோடிக்கு ஆதரவாக இவர்கள் போடுகிற கூச்சலும், கூப்பாடும் இருக்கே அடேங்கப்பா நம்மால தாங்க முடியலடா சாமி. 
              தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என மோடியிடம் காசை வாங்கிக்கொண்டு தேர்தல் வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் மக்கள் மத்தியில் மோடி தான் அடுத்த பிரதமர் என்ற கருத்தை திணிக்க ஆரம்பித்துவிட்டன. என்ன ஒரு வெட்கக்கேடு என்றால், இன்னும் தேர்தல் முடிவே வரவில்லை. ஓட்டுகளையே நாளை தான் எண்ணப்போகிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்பது பெட்டியை திறந்தால் தான் தெரியும். ஆனால் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பை வைத்துக்கொண்டே நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவி ஏற்க தயாராகி விட்டார். பாரதீய ஜனதாக் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் கூடி ''மந்திராலோசனை'' செய்கிறார்கள். எப்போது பதவி ஏற்பது...? யார் யாரெல்லாம் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்பார்கள்...? அத்வானிக்கு மந்திரிசபையில் இடம் உண்டா இல்லையா...? நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றப்பின் குஜராத் மாநிலத்தின் முதல்வராக யாரை நியமிப்பது...?  இப்படியெல்லாம் பாஜக தலைவர்கள் மத்தியில் ஆலோசனை நடப்பதாக செய்திகள் வெளியே கசிந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் பங்குச் சந்தையில் பங்குச் சந்தைக் குறியீடுகளை முன்பு இல்லாத அளவிற்கு உயர்த்தி, மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைவதற்கான தங்களது விருப்பத்தையும், ஆர்வத்தையும் இந்திய பெருமுதலாளிகள் ''குறிப்பாக'' காட்டியிருக்கிறார்கள்.
                 இந்த ''கருத்துத்திணிப்பை'' பார்த்து தேர்தல் முடிவுகள்  வருவதற்கு முன்பே ''காங்கிரஸ் கூடாரம்'' காலியாகிக்கொண்டே இருக்கிறது. மன்மோகன் சிங் தனது அரசு வீட்டையும் பிரதமர் சீட்டையும் காலி செய்துவிட்டு  சென்றுவிட்டார். தனக்கு நெருக்கமான அண்டை நாடுகளின் தலைவர்களிடமும், தன்  அலுவலக ஊழியர்களிடமும் ''டாடா'' காண்பித்துவிட்டு பிரிய மனசில்லாமல் பிரியாவிடை பெற்று சென்று விட்டார். இப்படியெல்லாம் ''கருத்துத்திணிப்பு'' செய்கிற பாட்டை பாருங்கள். ஊடகங்கள்  ஒரு புறம் ஒருவரை நன்றாக சந்தோஷப்படுத்துவதும், மறுபுறம் வேறு ஒருவரை  துரத்தி அடிப்பதுமான வேலைகளைத் தான் செய்கின்றன. மக்கள் தான் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஏதோ.... இந்த பாராளுமன்றத்தேர்தலில் நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் வாங்கின காசுக்கு இறுதிவரையில் ரொம்ப நல்லாத்தான் ஊதுகின்றன...!
             இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒரு நல்ல யோசனை.... இனிமேல் நாட்டுல பாராளுமன்றத் தேர்தலையே நடத்தவேண்டாம். காசுக்கு கூவுற ஊடகங்களிடம் ''கருத்துக்கணிப்பை'' வாங்கியே பிரதமர் மற்றும் மந்திரிகளையும், எம்.பி-க்களையும் தேர்ந்தெடுத்துக்கலாம். தேர்தல் ஆணையம் எதுக்கு பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து தேர்தலை நடத்தி கஷ்டப்படனும். கருத்துக்கணிப்புத் தேர்தலே சுலபமானது. அதுமட்டுமல்ல,  பண பலம், பெருமுதலாளிகள் பலம் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தான் செலவு. தேர்தல் ஆணையத்திற்கு ஒரு பைசா செலவும் இல்லை.  வேலையும் இல்லை. எல்லாவற்றையும் ஊடகங்களே பார்த்து புதிய ஆட்சியாளர்களை உட்கார வைத்துவிடுவார்கள். அப்புறம் தேர்தல் ஆணையம் என்று ஒன்று எதற்கு...? அதுவும் வேண்டாம். இதைஎல்லாம்  தேர்தல் ஆணையம் யோசித்துப்பார்க்கட்டும். ஜனநாயகமாவது... மக்களாவது... தேர்தலாவது....?           

திங்கள், 24 மார்ச், 2014

அத்வானி - ஜஸ்வந்த்சிங் -ஹரேன் பாண்டியா - சற்றுப் பின்னோக்கி பாருங்கள்...!


   கட்டுரையாளர் : தோழர். அன்வர் உசேன்         
        
          பாரதீய ஜனதாக் கட்சியினுள் கடும் உள்குத்து நடந்துகொண்டிருக்கிறது. பா.ஜ.க. உருவாக பாடுபட்ட பல மூத்த தலைவர்கள் மோடியால் ஓரம் கட்டப்படுகின்றனர் எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
              அத்வானி மோடியின் கட்டுப்பாடிற்குள் இருக்க விரும்பவில்லை. எனவே குஜராத்திற்கு பதிலாக அவரை ஆதரிக்கும் சவுகான் முதல்வராக உள்ள போபாலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அது அத்வானிக்கு மறுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். மூலமாக மோடி மீண்டும் ஒரு முறை அத்வானியை மண்டியிட வைத்தார்.
             ஜஸ்வந்த்சிங்கின் சொந்த ஊர் இராஜஸ்தானில் பார்மர் தொகுதி. அங்கு அவர் போட்டியிட விரும்பினார்.ஆனால் அவருக்கு அந்த தொகுதி ஒதுக்கப்படவில்லை. எனவே அவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
            மோடிக்காக தனது வாரணாசி தொகுதியை முரளி மனோகர் ஜோஷி தாரைவார்க்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார்.
                யஷ்வந்த்சின்கா, லால்ஜிடாண்டன், கைலாஷ் மிஸ்ரா, உமாபாரதி, சூர்யபிரதாப் சாஹி ஆகியோர் தொகுதி மறுக்கப்பட்டுள்ளனர்.
             தனது கருத்தை தலைமை புறக்கணிக்கிறது என பகிரங்கமாக சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
                 மோடியின் இந்த செயல்பாடுகள் சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் மோடியின் குணத்தை புரிந்தவர்கள் இத்தகைய நிகழ்வுகளினால் அதிர்ச்சி அடையமாட்டார்கள்.

ஹரேன் பாண்டியாவின் படுகொலை - சற்றுப் பின்னோக்கி பாருங்கள் :

              2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பா.ஜ.க.வால் நியமிக்கப்பட்டார். இந்திய அரசியல் சட்டப்படி ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். குஜராத்திலேயே எல்லீஸ்பிரிட்ஜ் தொகுதிதான் பாஜகவுக்கு சாதகமான தொகுதி என மோடி மதிப்பிட்டார். எனவே அந்த தொகுதியின் உறுப்பினர் ஹரேன் பாண்டியாவை அழைத்து தான் போட்டியிட வசதியாக ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தினார். ஹரேன் பாண்டியா கேசுபாய் பட்டேல் மந்திரிசபையில் உள்துறை மற்றும் தகவல் துறை அமைச்சராகவும் இருந்தவர். மோடியின் சமகாலத்து சங் பரிவாரத் தலைவர்.
             அவர் தனது தொகுதியை மோடிக்கு விட்டுத்தர மறுத்துவிட்டார். மோடி கடுமையாக மிரட்டியும் ஹரேன் பாண்டியா அசரவில்லை. எனவே மோடி ராஜ்கோட் தொகுதியில் 24.02.2012 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு 14000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால் பொதுத்தேர்தலில் இத்தொகுதியில் பா.ஜ.க. 28000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.ஹரேன் பாண்டியா தன்னை அவமானப்படுத்திவிட்டதாக மோடி கருதினார். அவரை பழிவாங்கிட காத்திருந்தார். இடைத்தேர்தலில் வென்றதும் ஹரேன் பாண்டியாவை அமைச்சரவையிலிருந்து விலக்கினார். பின்னர் 2002 தேர்தலில் அவருக்கு போட்டியிட அனுமதியை மோடி வழங்கவில்லை.
                    எனவே அத்வானி, அருண் ஜெட்லி, வாஜ்பாய் ஆகியோரிடம் ஹரேன் பாண்டியா புகார் செய்தார். அவர்கள் ஹரேன் பாண்டியாவுக்கு போட்டியிட அனுமதிக்குமாறு மோடியை வற்புறுத்தினார்கள். இதனைத் தவிர்க்க மோடி மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து எவரிடமும் பேசுவதை தவிர்த்தார். எனினும் ஹரேன் பாண்டியா முக்கியமான தலைவர் என்பதால் அவர் போட்டியிட வேண்டும் என மேலிடம் வற்புறுத்தியது. ஹரேன் பாண்டியா போட்டியிட்டால் தான் போட்டியிலிருந்து விலகிவிடுவதாக மோடி கூறினார். வேறு வழியின்றி மேலிடம் ஹரேன் பாண்டியாவை கைகழுவி விட்டது.தேர்தலுக்கு சில மாதங்களுக்கு பிறகு ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இதுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் ஹரேன் பாண்டியாவின் மனைவியும் அவரது தந்தையும் இந்த படுகொலை ஒரு அரசியல் படுகொலை எனவும் அதனை செய்தது யார் என்பது அனைவரும் அறிந்த ரகசியம் எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். என்கவுண்டர்களில் சிக்கி சிறையில் உள்ள மோடிக்கு வலது கரம் போன்று செயல்பட்ட வன்ஜாரா போன்ற அதிகாரிகளிடம் தனது கணவரின் கொலை குறித்தும் விசாரிக்க வேண்டும் என ஹரேன் பாண்டியாவின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
                தன்னை எதிர்க்கும் சங்பரிவாரத்தின் ஊழியர்களையே தன் பாதையிலிருந்து ‘அகற்றுவது’ எப்படி என்பதை கை வந்த கலையாக கொண்டவர் மோடி. அன்று குஜராத்தில் செய்ததை இன்று அகில இந்திய அளவில் செய்கிறார்.இத்தகைய நபர் பிரதமர் ஆனால் ஜனநாயகம் என்ன பாடுபடும் என்பதை வைகோக்களும் விஜய்காந்த்களும் இன்னும் தேர்தலுக்கு பிறகு அவருக்கு ஆதரவு தர காத்திருப்போரும் உணர்ந்து கொள்வது நல்லது.
நன்றி : 
 

ஞாயிறு, 9 மார்ச், 2014

மோடிக்கும் பாஜகவிற்கும் வாக்களிக்காதீர்கள்...! - புகழ் பெற்ற பிரமுகர்கள் அறிக்கை.

                    ''வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியையும்,  அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்'' என வாக்காளர்களைப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
              ''இடதுசாரிகளும் வகுப்புவாதத்துக்கு எதிரான சக்திகளும் ஆம் ஆத்மி  கட்சிக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யக்கூடாது'' எனவும், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பா.ஜ.க. அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தோல்வியுறச் செய்ய வேறு ஆற்றல்மிகு வேட்பாளர் இல்லாத போது மட்டுமே மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர்கள வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
                நரேந்திர மோடியின் அரசியல் பாசிச அரசியல் ஆகும். எவராலும் மறுக்க முடியாத அடிப்படை உரிமைகளும், சட்டத்தின் ஆட்சியும்கூட மோடி ஆட்சிக்கு வந்தால் பாதிப்படையும். பாரதீய ஜனதாக் கட்சிக்கு  எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்காத வரை நரேந்திர மோடியைத் தடுத்து நிறுத்த முடியாது. இதனை அடைய காங்கிரஸ் கட்சி, சுயேச்சைகள் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் தேர்தல் களத்தில் ஓரணியில் திரட்ட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ள பிரமுகர்கள் வருமாறு :
அனில் பாடியா (இதழியலாளர்),

அன்ஜும் ராஜாபாலி (திரைக்கதை ஆசிரியர், ஆசிரியர்),

அருணா புர்டே (பெண்ணிய செயற்பாட்டாளர்),

ஹஸீனா கான் (முஸ்லீம் பெண்களின் உரிமைகள் இயக்கம்),

இர்ஃபான் இன்ஜினியர் (அகில இந்திய மதச்சார்பற்ற ஃபோரம்),

ஜாவித் மலிக் (பல்கலைக் கழக விரிவுரையாளர்),

காமயானி பாலி மஹாபல் (பெண்ணிய, மனிதஉரிமை ஆர்வலர்),

கண்ணன் சிறீநிவாசன் (பத்திரிகையாளர், ஆய்வாளர்),

மங்ளூரா விஜய் (எழுத்தாளர், சமூக ஆர்வலர்),

மனோகர் இளவர்தி (பிரஜா ராஜகிய வேதிகே),

எம்.கே. பிரசாத் (கேரள சாஸ்திர ஸாஹித்திய பரிஷத்)

பிரதீப் எஸ்டிவ்ஸ் (ஆய்வாளர், ஆலோசகர்),

ராம்தாஸ் ராவ் (பி.யூ.சி.எல் - பெங்களூர்),

ராம் புன்யானி (அகில இந்திய மதச்சார்பற்ற ஃபோரம்),

ஆர். கிறிஸ்டோபர் ராஜ்குமார் (நேஷனல் கவுன்சில் ஆஃப் சர்ச்சஸ் இன் இண்டியா),

ரிபக்கா குரியன் (வகுப்புவாத எதிர்ப்பாளர்),

ரோஹினி ஹென்ஸ்மேன் (அறிஞர், எழுத்தாளர்),

ஷேக் உபைத் (மனித உரிமை ஆர்வலர்),

எஸ். ஜனகராஜன் (மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்),

சுபாஷ் கடதே (நியூ சோசியலிஸ்ட் இனிஷியேட்டிவ்),

சுமி கிருஷ்ணா (பெண்ணியவாதி, எழுத்தாளர்),

உத்ய சந்திரா (அரசியல் ஆய்வாளர்),

உமா வி. சந்துரு (பி.யூ.சி.எல் - பெங்களூரு),

ஜஹீர் அஹ்மத் சயீத் (நரம்பியல் மருத்துவர்).

வியாழன், 27 பிப்ரவரி, 2014

பாரதீய ஜனதாக் கட்சிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது...!

          
           பாரதீய ஜனதாக் கட்சிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்பதை அண்மையில் டெல்லியில் இஸ்லாமியர்கள் மத்தியில் அந்தக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் பேசிய பேச்சிலிருந்து நம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. அந்தக்  கூட்டத்தில் தனக்கு முன்னே கூடியிருந்த இஸ்லாமியர்களைப் பார்த்து கைக்கூப்பி மன்னிப்புக் கேட்டிருக்கிறார். நல்லவேளை இதை நம்ப ''கேப்டன்'' பார்க்கவில்லை. பார்த்திருந்தால் '' தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு'' என்று சொல்லியிருப்பார். திடீரென்று  மன்னிப்புக் கேட்க ''ஆணவத்தின் உச்சியில்'' இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு அப்படி என்ன அவசியம் ஏற்பட்டது. அண்மையில் ''மூன்றாவது மாற்று அணி'' கொஞ்சம் கொஞ்சமாக உருவம் பெற்று எழுச்சிக் கொண்டு விஸ்வரூபம் எடுப்பது கண்டு, ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியோ உருவம் தெரியாமல் காணாமல் போய்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பாரதீய ஜனதாக் கட்சியோ கரைந்து போய்  கொண்டு இருக்கிறது. அதன் காரணமாக பாரதீய ஜனதாக் கட்சிக்கு  தேர்தல் பயம் வந்து நடுங்குவது நமக்கு நன்றாக தெரிகிறது. 
             அந்த பயத்தில் தான் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ராஜ்நாத் சிங் இஸ்லாமியர்களின்  கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்புக் கேட்கிறார். ''இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு எப்போதாவது, எங்கேயாவது எங்கள் சார்பில் ஏதாவது தவறுகளோ குறைபாடுகளோ நிகழ்ந்திருந்தால் அதற்காக நாங்கள் தலை வணங்கி மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளோம்'' என்று பாவமன்னிப்பு கேட்டு நெஞ்சுருக பேசியிருக்கிறார். அப்படி பேசியதன் மூலம் இஸ்லாமியர்களுக்கெதிராக ''நரவேட்டை'' நரேந்திர மோடி செய்த கொடுமைகள் அனைத்தும் உண்மை தான்என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
            மேலும் அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர்களைப் பார்த்து கதறியிருக்கிறார். ''பாரதீய ஜனதாக் கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. எங்களுக்கு எதிரான தவறான பிரச்சாரத்தை நம்பவேண்டாம். நாட்டின் நலன் கருதி இந்த முறை எங்களுக்கு வாக்களியுங்கள். ஒருமுறை வாக்களித்துப் பாருங்கள். ஒரு அரசை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதற்காக நீங்கள் வாக்களிக்க கூடாது. சகோதரத்துவம், மனிதநேயம் மிக்க வலுவான நாட்டை உருவாக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்று கதறு கதறு என்று கதறியிருக்கிறார். 
                    இவர்களுக்கு எதிராக யாரும் பிரச்சாரம் பண்ணவேண்டாம். இவர்களது ''பிரதமர் கனவு வேட்பாளர்'' மோடி ஒருவரே போதும், இவரைப் பார்த்தாலே மக்கள் பாஜக-விற்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள். இஸ்லாமியர்களுக்கு அந்த அளவிற்கு ''நல்லது'' செய்திருக்கிறார். நரேந்திர மோடி என்பவர் பாரதீய ஜனதாக் கட்சி தானே தலையை சொறிந்துகொள்ளும் ''கொள்ளிக்கட்டை'' என்பதை மறந்துவிடக்கூடாது. இப்போது கண் கேட்டபோது சூரிய நமஸ்காரம் எதற்கு...?  எப்போதாவது - எங்கேயாவது மோடியால் அல்லது பாரதீய ஜனதாக் கட்சியினால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை விளைந்திருக்கிறதா...? இல்லையே. இஸ்லாமிய இனப்படுகொலையை செய்த இவர்கள் இஸ்லாமியர்களிடமே எப்படி தங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்கிறார்கள். இஸ்லாமியர்கள் ஒரு முறை பாஜக ஆட்சி செய்ய வாய்ப்புக் கொடுத்தால், அது இவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்று அவர்களுக்கு தெரியாதா...? 
               மதத் திமிர், வக்கிரகுணம், ஆணவம்,  அதிகார போதை, பிற்போக்குத்தனம், ஆர்.எஸ்.எஸ்.-ன் குணம்  ஆகியவற்றின் மொத்த உருவமான நரேந்திர மோடி, பன்முக சமூகங்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டில் வாழத் தகுதியற்றவர் என்பதை அவரே நிருபித்து காட்டியிருக்கிறார். அவர் மனித உருவில் உள்ள ஒரு  மிருகம் என்பதை குஜராத்தில் இஸ்லாமியர்கள் நேரில் பார்த்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர் வேற்றுமையில் ஒற்றுமை, மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த இந்த தேசத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இங்குள்ள இஸ்லாமியர்களின் எதிர்காலம், அவர்களது வாழ்க்கைப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், உயிர் மற்றும் உரிமைகள் எல்லாம் என்ன ஆகும்...? அந்த ''குஜராத் மாடலை'' நாடு முழுதும் பார்க்கவேண்டுமா...? இது தான் ராஜ்நாத் சிங்கைப் பார்த்து இந்திய இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்வி...?????????????????????

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

முரண்பாடுகளுடன் டெல்லியில் ''ஆம் ஆத்மி கட்சி'' ஆட்சி...!


                       தலைநகர் டெல்லியில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், கடந்த காலங்களில் தொடர்ந்து ஆட்சியில் இருந்துவந்த காங்கிரஸ் கட்சி டெல்லி மாகலின் மிக கடுமையான கோபத்திற்கு பலியாகி போனது. மீண்டும் உயிர் பெற்று எழுந்திருப்பது என்பது அவர்களால் நினைத்துக்கூட  பார்க்கமுடியாது. காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் உட்பட பல முக்கிய  காங்கிரஸ் கட்சித் தலைவர்களெல்லாம் படுதோல்வி அடைந்து, 70 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் எட்டே தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று மண்ணைக் கவ்வியது.  கடந்த ஐந்து ஆண்டுகால மகா ஊழல்கள், கடுமையான விலைவாசி உயர்வு என மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு சீர்கேடுகள் நிறைந்த   ஆட்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
           இன்னொரு பக்கம், மத்தியில் ஆட்சியை பிடிக்க அலைந்து கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி, டெல்லியில் பிரபலமான நபர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, முதலில் டெல்லியை பிடிக்கும் ஆசையில் அனைத்து 70 தொகுதிகளிலும் களத்தில் இறங்கியது. ஆனால் ஊழலை பொருத்தவரை பாரதீய ஜனதாக் கட்சியும் விதிவிலக்கல்ல. அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களும், ஆட்சி செய்த மாநிலங்களுமே மிகப்பெரிய சாட்சியாக நிற்கிறது என்பதாலும், மதவாதம் மற்றும்  சிறுபான்மையினருக்கு எதிரான போக்குகள் கொண்ட  ஒரு சீர்குலைவு சக்தியாக காட்சிதரும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஆட்சியமைக்க முழு அளவிற்கான மெஜாரிட்டியை மக்கள் தாராமல் 30 தொகுதிகளை மட்டுமே கொடுத்தார்கள். அந்த முப்பது இடங்களில் பெற்ற வெற்றி கூட, காங்கிரஸ் கட்சியின் மீதான கோபத்தினால் மக்கள் அளித்த காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் தான் என்பதும் உண்மை.
          இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஊழல் எதிர்ப்பை மட்டுமே முழக்கமிட்டு தலைநகர் டெல்லியில், வெளிநாட்டுப் பணத்தை செலவு செய்து, கார்ப்போரேட் கம்பெனிகள் மற்றும் இந்திய - அந்நிய பெருமுதலாளிகளின் ஆதரவுடன் இரண்டு முறை உண்ணாவிரதமிருந்த ''ஊழலை ஒழிக்க ஆதாரம்'' எடுத்த அண்ணா ஹசாரே உடன் மேடையில் காட்சியளித்து, ஊடகங்களின் மூலம் மக்களின் மத்தியில் பிரபலமான கெஜ்ரிவால், ஹசாரேவை முந்திக்கொண்டு ''ஊழலை ஒழிக்கப்போகிறேன்'' என்று ''ஆம் ஆத்மி கட்சியை'' துவக்கி மக்களிடம் அறிமுகமே இல்லாத பலரையும் தேர்தல் களத்தில் இறக்கி 70 தொகுதிகளிலும் போட்டியிட்டார். உளவியல் ரீதியாக இந்திய மக்களை மிகவும் பாதித்த விஷயம் காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் செய்த ஊழல் என்பது மட்டுமே மக்களின் மூளைகளில் பிரதானமாக ஆக்கிரமித்த ஒன்றாகிவிட்டது. ஊழலை மட்டுமே வைத்துக்கொண்டு மக்களை மூளைச் சலவை செய்து அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கெஜ்ரிவால் கனவுகண்டு களத்தில் இறங்கினார். ஆனால்  28 இடங்களிலேயே வெற்றி பெற முடிந்தது. இவருக்கு கிடைத்ததும் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளே என்பதும் உண்மை.
          கெஜ்ரிவால் மிகவும் மிகவும் கெட்டிக்காரர். அனுபவமில்லாமலேயே மிகவும் தேர்ந்த அரசியல்வாதியை போல் நடந்துகொண்டிருக்கிறார். அண்ணா ஹசாரே ஏதோ  சிரமப்பட்டு உண்ணாவிரதமெல்லாம் இருந்து மக்கள் மத்தியில் ஒரு ''பரமாத்மா'' போல் காட்சி தந்து பிரபலமாகிக்கொண்டிருந்த கூழ்நிலையில், தான் ஒரு அரசியலில் குதித்து ஒரு கலக்கு கலக்கலாம் என்று ஹசாரே நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவரை முந்திக்கொண்டு ஊழல் எதிர்ப்பு கோஷத்தை யாரும் எதிர்பாராத விதமாக அரசியலில் தொபுக்கடீரென்று குதித்தார் இந்த குருவை மிஞ்சிய சிஷ்யன் கெஜ்ரிவால். ''வடை போச்சே'' என்று ஹசாரே கெஜ்ரிவாலை திட்டித்தீர்த்தார். சாபமிட்டார். தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு நான் ஆதரவு தரமாட்டேன் என்று சபதமிட்டார். சட்டமன்றத்தேர்தலில் கெஜ்ரிவால் 28 இடங்களே கிடைத்ததில் ஹசாரேக்கு மகிழ்ச்சி தான். நான் ஆதரவு கொடுத்திருந்தால் இன்னும் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்திருப்பார் என்று ஹசாரே கர்ஜித்தார். இதிலே என்னன்னா.... விதைத்தவன் ஒருத்தன் அறுவடை செய்தவன் வேறோருத்தனா போய்ட்டான் என்பது தான் உண்மை. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு கெஜ்ரிவால்  சொல்லுவாரு போலிருக்கு. அந்த அளவிற்கு தேர்ந்துவிட்டார்.
         ஆனால் இந்த டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவின் மூலம் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சியும் 36 இடங்களில் வெற்றி பெற்றால் தான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கமுடியும். ஆனால் இந்த தேர்தலில் டெல்லி மக்கள் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மையை தராதது என்பதிலிருந்து நாம் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். ''எங்களுக்கு எந்த ஒரு  கட்சியின் ஆட்சியும் வேண்டாம்'' என்று ''NOTA'' வை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
   # அப்படியிருக்க மக்களின் விருப்பத்திற்கு எதிராக கெஜ்ரிவால் ஆட்சியமைத்திருப்பது என்பதே ஒரு முரண்பாடு தான்.
              # அதுமட்டுமல்லாமல், ஊழல்கள் மலிந்த காங்கிரஸ் கட்சியே வேண்டாம் என்று தான் டெல்லி மக்கள் அக்கட்சியை தூக்கி எறிந்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில் மக்கள்
தூக்கி எறிந்த கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருப்பது என்பது இன்னொரு முரண்பாடு.
          # காங்கிரஸ் கட்சி செய்த ஊழலைப்பார்த்து தான் ஊழலை ஒழிக்கபோறேன்னு கட்சியை ஆரம்பித்து மக்களிடம் ஒட்டு கேட்டு வந்தார். இப்போது அதே காங்கிரஸ் கட்சியோடு கைகொர்த்திருப்பது மற்றுமொரு முரண்பாடு.
          # யாருக்குமே தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில் எண்ணிக்கை மட்டுமே உண்மையான ஜனநாயகமாக கருதமுடியாது. ஜனநாயகத்தில் இதுவே ஒரு முரண்பாடு தான்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

பி.ஜே.பி.-யின் மீது விசுவாசத்தைக்காட்டும் லதா மங்கேஷ்கர்...!

           

             சென்ற வெள்ளிக்கிழமை அன்று புனேவில் இந்தி திரைப்படப் பாடகி லதா மங்கேஷ்கர் தனது தந்தையார் தினநாத் மங்கேஷ்கரின் நினைவாகக் கட்டியுள்ள ''சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை'' ஒன்றின் துவக்க விழாவிற்கு ''பிரதமர் கனவு வேட்பாளர்'' நரேந்திரமோடியையும் அழைத்திருந்தார். தனது ''பிரதமர் கனவு'' பிரச்சாரக்கூட்டத்தை 200 கோடி ரூபாய் அளவிற்கு  செலவு செய்து ஏற்பாடுகளை செய்யும் நரேந்திரமோடி இலவசமாய் கிடைத்த இந்த ''பிரச்சார மேடையையும்'' விட்டுவைக்கவில்லை. பிரபலங்களோடு தன்னை இணைத்துக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அவங்ககிட்ட இருக்கும் ஒரு பத்து ஓட்டையாவது தனக்கு சாதகமாக மாற்ற முடியாதா என்ற  ஏக்கத்தில் மோடி கலந்து கொண்டார். கலந்துகொண்டது மட்டுமல்லாமல், தான் சொன்னபடி லதா மங்கேஷ்கரை சிந்தாமல், சிதறாமல், குறையில்லாமல் பேசவும் வைத்தார்.
            நரேந்திரமோடியை மேடையில் வைத்துக்கொண்டு லதா மங்கேஷ்கர் நரேந்திரமோடி சொல்லிக்கொடுத்தது போல் “நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனது சகோதரரைப் போலத் திகழ்கிறார். இந்தியாவின் பிரதம மந்திரியாக நரேந்திரமோடி தான் வரவேண்டும் என்று எனது இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இதுதான் ஒவ்வொருவரின் விருப்பமும் கூட....!”  என்று மெய்சிலிர்க்க பேசி, 2001 - ஆம் ஆண்டு தனக்கு ''பாரத் ரத்னா'' பட்டம் அளித்து கவுரவப்படுத்திய பாரதீய ஜனதாக் கட்சிக்கு தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார்  என்பதை தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

சனி, 27 ஏப்ரல், 2013

பிரதமர் ஆசையில் ஒட்டுரிமையே இல்லாத சாமியார்களின் ஆதரவைத் தேடும் நரேந்திர மோடி....!


          பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமை முடிவெடுப்பதற்கு  முன்பே தனக்குத் தானே ராஜாவாக முடி சூடிக்கொண்டு, மதவெறியோடு பதவி பைத்தியமும் பிடித்து அலைகிறார் நரேந்திர மோடி. போகிறப் போக்கைப் பார்த்தால் இன்னும் கொஞ்ச நாளுல சட்டையை பிய்த்துக் கொண்டு அலைவார் போலிருக்கிறது. பிரதமராக வேண்டும் என்ற ஆசையில யாருகிட்ட போய் ஓட்டுக் கேட்கிறதுன்னு கூட தெரியாம அலைகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இவரு சட்டைய பிய்த்துக்கொண்டு அலையறதுக்கு ரொம்ப நாள் ஆகாது.
         நீங்க கவனிச்சிங்களா...? இவரு பிரதமர் ஆகணும்னா யாருகிட்ட போய் ஓட்டுக் கேட்கணும்...? ஓட்டுரிமையுள்ள பொது மக்கள்கிட்ட அல்லவா போய் பேசணும்...? ஆனா இவரு யாருகிட்டத் தெரியுமா பேசுறாரு....? இந்தியாவில் ஓட்டுரிமையே இல்லாத அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் இங்கிருந்தபடியே வீடியோ கான்பெரென்சிங்கில் பேசுறாரு.  இந்தியாவில் ஓட்டுரிமையே இல்லாத அமெரிக்க எம். பி -க்களை இவரே காசுக் கொடுத்து செலவு பண்ணி இந்தியாவிற்கு வரவழைத்து பேசுறாரு.
        நேற்று என்ன செய்திருக்கிறார் என்றால்...? அரித்துவார் போயி அங்கிருக்கிற போலி சாமியார்களையும், பிச்சைக்காரர்களையும் கூட்டி வைத்துக்கொண்டு பேசியிருக்கிறார். இவங்களெல்லாம் யாருன்னா...? care of platform. காசி - அரித்துவார் போன்ற இடங்களில் ஓட்டுரிமை இல்லாமல் பிச்சை எடுத்து திரிந்து கொண்டிருக்கும் போலி சாமியார்கள். இவங்ககிட்ட போயி ஒட்டு கேட்டா இவரு எப்படி பிரதமராவது....? அவங்க என்ன சொல்லிட்டாங்கன்னா...? எங்ககிட்ட  ஓட்டை கேட்கத்தானே வந்தன்னு சொல்லிபுட்டு, அவங்க கையிலிருந்த ''திருவோட்டை'' கொடுத்து ''எங்க பக்கத்திலேயே உட்காரு. நீ நல்லா தான் பேசுற'' என்று சொல்லியிருக்காங்க. பின்ன என்னங்க... அவங்களெல்லாம் முன்ன பின்ன பேப்பரா படிச்சிருக்கப் போறாங்க... அவங்ககிட்டப் போயி, ''கடந்த கடந்த 12 ஆண்டுகளில் குஜராத்துல கலவரங்களே நடக்கவில்லை. அமைதியா இருக்கிறது'' என்று சொன்னா அவங்க என்ன செய்வாங்க. மோடி ரொம்ப நல்லவரு போலிருக்கிறதுன்னு அவங்ககிட்ட இருக்கிற திருவோட்டை எடுத்து அவரு கையில கொடுத்துட்டாங்க. இப்பதாங்க நீங்க பொருத்தமா இருக்கீங்கன்னு சொல்லிட்டாங்க.
        இப்படியாக நரேந்திர மோடி ஓட்டில்லாதவன் கிட்டல்லாம் ''நான் பிரதமராகனும்ன்னு'' சொல்லிக்கிட்டு அலையறாரு. போகிறப்போக்கைப் பார்த்தால் சின்னக்குழந்தைகளை எல்லாம் உட்கார வெச்சிகிட்டு பேசிகிட்டு இருப்பாரு போலிருக்கிறது. நரேந்திர மோடி கூடிய சீக்கிரம் சட்டைய பிச்சிக்கிட்டு அலையப்போறத நாம பாக்கத்தான் போகிறோம்.