''கோக்'' விளம்பரத்தில் நடித்த நடிகர் விஜய் மற்றும் ''ஏழாம் அறிவு'' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் முருகதாஸ் இருவரும் ''கத்தி'' திரைப்படத்தின் மூலம் பிராயச்சித்தம் தேடியிருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். இதுவரையில் கடத்தல், தீவிரவாதம், பயங்கரவாதம் என வெறும் மசாலா படங்களிலேயே நடித்து தன்னுடைய இரசிகர்களை திருப்திப்படுத்த திணறிக்கொண்டிருந்த விஜய் இதுவரையில் யாரும் கையில் எடுக்காத - தற்போது நாடு முழுதும் எரிந்துகொண்டிருக்கும் மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து அதற்காக போராடும் இளைஞனாக தன் இரசிகர்கள் முன் நின்றது என்பது உண்மையிலேயே பாராட்டுதற்குரியது.
திரைப்படத்தின் முன் பாதி எப்போதும் போல் வழக்கமான விஜய் பாணியாக நகர்கிறது. ஆனால் பின் பாதியில் தான் ஊடக தர்மமே இல்லாமல் அம்மணமாய் நிற்கும் இந்திய ஊடகங்களின் உண்மை முகத்தை தன் இரசிகர்களுக்கு தோலுரித்துக்காட்டியிருக்கிறார். இந்த தேசத்தின் வயிற்றுக்கு சோறிட்ட இந்திய விவசாயிகளின் இரத்தத்தையும், உயிரையும் குடித்து தேசத்தையே கபளீகரம் செய்யத்துடிக்கும் இராட்சச பகாசூர பன்னாட்டு கம்பெனியின் முதலாளிகளை எதிர்த்து மக்களை திரட்டிப்போராடும் இளைஞனாக விஜய்யை பார்க்கும்போது அவரின் மீது இதுவரை இல்லாத மரியாதை உண்டாகிறது.
ஏனென்றால் அண்மையில் பாராளுமன்றத்தேர்தலின் போது தான் தமிழகத்திற்கு நரேந்திரமோடியை சந்தித்த நடிகர் விஜய் தன்னை ஒரு போராளியாக காட்டிக்கொண்டு நடித்தது என்பது ரசிகர்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணும். ''கத்தி'' திரைப்படம் யாருடைய சிந்தனையில் உதித்தது என்பது தெரியவில்லை. ஆனால் இத்திரைப்படத்தின் ''கரு'' படம் வெற்றியடையடைவதற்கும், விஜய்யின் இரசிகர்களை திருப்திப்படுத்துவதற்கும், வசூலில் சாதனைப்படைப்பதற்கும் பெரிதும் பயன்பட்டிருக்கிறது. இதோடு நிறுத்திக்கொள்ளாமல் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவரும் மக்கள் பிரச்சனைகளை பேசும் திரைப்படங்களில் நடிக்க முன்வரவேண்டும். அதுமட்டுமல்லாது தங்கள் கட்- அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதும், கொடிக்கட்டுவதுமான போக்குத்தனமான செயல்களில் ஈடுபடும் தங்கள் இரசிகர்களை மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர்கள் பின்னால் நிற்கச் செய்யுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் இதுபோன்ற படங்களில் ஒரு போராட்டக்காரனாக நடிப்பதெல்லாம் விளம்பரத்திற்காகவும், வருமானத்திற்காகவும் நீங்கள் போடும் வெளிவேஷமாக போய்விடும். அன்னா அசாரேக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்.

6 கருத்துகள்:
ந மதகோக் நிறுவனத்துடன் இணைந்து எங்கயும் முதலீடு பன்னல ....நடிப்பு அவர் தொழில் ...சமூகம் சீர் கெடும் வகையிலான விளம்பரம் ஒன்னும் அவர் நடிக்கல ...மேலும் இந்த படத்தில் ஒரு புகைத்தல் அல்லது மதுபான காட்சி கூட இல்ல ...இதை விடவும் தகுதி வேணுமா ???
சரி அப்படினா இந்த கதையில் நடிக்க கூடிய சுத்தமான கை உடைய ஒரு தமிழ் நடிகர பதிவின் கடைசியில் குறிப்பிட்டு இருக்கலாமே ?? ஒரு மாஸ் ஹீரோ சமூக சிந்தனை கொண்ட படத்துல நடிச்சு இருப்பதை பாராட்ட மனசு வராட்டி பரவால்ல ....கொஞ்சம் குறை சொல்வதை குறைத்தால் நன்று ...அப்படி பார்த்த ஏசுவா நடிக்க ஆங்கில நடிகன் யாருக்கு தகுதி இருக்கு ?? அவங்க நடிக்கலையா ??
நடித்து காசு வாங்கிக்கொண்டு போவதோடு நிறுத்திக் கொள்ளலாம்.அதை விட்டு என்னவோ நாட்டுக்குக்காக உயிரை கொடுப்பது போல் இயக்குனரும் நடிகரும் கொடுக்கும் பில்டப்பும் அதை நம்பி அலைமோதும் மக்கக் கூட்டமும் .நம் மக்கள் திருந்தவே மாட்டார்களா .இவருக்கு எதற்கு முதல்வர் ஆசை. உண்மையாகவே தமிழ் மக்கள் மேல் அவ்வளவு பாசமா.

அய்யா விஜய் முத்தையா அவர்களே
கோக் நிறுவனத்துடன் இணைந்து முதலீடு செய்யவில்லை அந்த மாண்புமிகு நடிகர் ஆனால் விளம்பரத்தில் நடித்ததற்காக அவர் பெற்ற ஐந்து வருட ஒப்பந்தம் மற்றும்ராயல்டி தொகை ஐந்து கோடியை மக்களுக்கு விட்டு கொடுப்பர???....அவர் மக்கள் பார்வையில் என்றுமே நடிகர் தான்....
போராளி அல்ல....அரிதாரம் பூசிக்கொண்டு மட்டுமே போராட முடிந்தவர் அவர்...அவருக்காக உயிர் கொடுத்த ரசிகர்களுக்கு பணம் கொடுப்பார்..."தலைவன் என்பவன் இழுக்க சொல்பவன் அல்ல.... இழுத்து கொண்டு முன் செல்பவன்..." அது இந்த நடிகர்களால் முடியாது...

கருத்துரையிடுக