எல். ஐ. சி. முகவர்கள் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எல். ஐ. சி. முகவர்கள் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 அக்டோபர், 2012

இடதுசாரிக் கட்சிகளின் எம். பி.- களை புதுச்சேரி எல். ஐ. சி முகவர்கள் சந்திப்பு...!

          புதுச்சேரியில் நடைபெறும் அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி வந்திருக்கும் இடதுசாரிக் கட்சித் தலைவர்களை அகில இந்திய எல். ஐ. சி. முகவர்கள் சங்கத்தைச் சேர்ந்த புதுச்சேரி தோழர்கள்  ஆர். எம். ராம்ஜி தலைமையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து மனு ஒன்றையும்  அளித்தனர்.
            இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு உயர்வுக்கு எதிராக மனு ஒன்றை தயார் செய்து பாராளுமன்ற இரு அவைகளையும் சார்ந்த உறுப்பினர்களுக்கு அளிக்கவேண்டும் என்று ''லிகாய்'' முகவர்கள் சங்கத்தின் அகில இந்திய தலைமை விடுத்த  அறைகூவலின்படி புதுச்சேரி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான தோழர். சீதாராம் யெச்சூரி அவர்களிடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான தோழர். நிலோத்பல் பாசு அவர்களிடமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தோழர். து. ராஜா அவர்களிடமும், இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு உயர்வுக்கும், பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கும் எதிர்ப்புத் தெரிவித்தும், பாராளுமன்றத்தில் இவைகள் சம்பந்தமான இடதுசாரிக் கட்சிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும்   மனுக்கள்  அளிக்கப்பட்டன.
                இந்த சந்திப்பின் போது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசச் செயலாளர் தோழர். வி. பெருமாள் அவர்களும், லிகாய் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர். குணசேகரன், வேலூர் கோட்டச்சங்கப் பொருளாளர் சற்குணராஜ், புதுச்சேரி கிளை - 1 - இன் தலைவர் தோழர். கலையரசி, செயலாளர் தோழர். ஆனந்த், கிளை - 2 - இன்  தலைவர் தோழர். அன்பரசி, செயலாளர் தோழர். புஷ்பராஜ், பொருளாளர் தோழர். சேதுராமன் உள்ளிட்ட பலத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
                    












இன்னும் புகைப்படங்கள் வரும் ... 

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள போராடும் எல். ஐ. சி முகவர்கள்...!

              எல். ஐ. சி - யின் வளர்ச்சியில் மிகப்பரிய பங்குவகிப்பவர்கள் யார் என்று யாரைக் கேட்டாலும்  நிச்சயமாக மறுக்காமல் - மறைக்காமல்  ''முகவர்கள்'' என்று சொல்லமுடியும். வெறும் 5 கோடி என்ற சின்ன விதையைப் போட்டு பல இலட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனமாக - ஒரு பெரிய ஆலமரமாக பறந்து விரிந்து வளர்ந்திருக்கிறது  என்றால் அந்த விஸ்வரூப வளர்ச்சியில்  முகவர்களின் வியர்வையும் இரத்தமும் இருக்கிறது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவிற்கு அவர்களது உழைப்பில் தான் பல இலட்சம்  கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்களையும், ஆயுள் நிதியினையும் 32 கோடி பாலிசிதாரர்களையும் உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. 
               இந்திய உழைப்பாளி மக்களின் நிதியை கொள்ளையடிப்பதற்காக இந்தியாவிற்குள் நுழைந்த அந்நிய பகாசூர கம்பெனிகள் வளர்ச்சியடைவதற்கு எல். ஐ. சி. - யை  ஒழித்துக்கட்டும் வேலையை இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் மூலம் மத்திய அரசு துணிச்சலாக செய்து வருகிறது. அதற்கு இலட்சம் கால் தூண்களாக எல். ஐ. சி. - யை தாங்கிக்கொண்டிருக்கும் முகவர்களை எல். ஐ. சி. - இலிருந்து வெளியேற்றுவதற்கான வேலைகளை மத்திய அரசு திட்டமிட்டு செய்துவரும் சூழ்நிலையில் தான் முகவர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினர்களையும் எல். ஐ.  சி. - யையும் காப்பாற்றிக் கொள்வதற்கு நேற்று ஆகஸ்ட்  - 8 அன்று நாடு முழுதும் எல். ஐ. சி. அலுவலகம் முன்பு மாபெரும் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். எல். ஐ. சி. முகவர்கள் சங்கம் ( லிகாய் ) ஏற்பாடுகளை செய்திருந்தது
                 கீழே சென்னையிலும் வேலூரிலும் நடைபெற்ற போராட்டக்காட்சிகள்....!