எல். ஐ. சி - யின் வளர்ச்சியில் மிகப்பரிய பங்குவகிப்பவர்கள் யார் என்று யாரைக் கேட்டாலும் நிச்சயமாக மறுக்காமல் - மறைக்காமல் ''முகவர்கள்'' என்று சொல்லமுடியும். வெறும் 5 கோடி என்ற சின்ன விதையைப் போட்டு பல இலட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனமாக - ஒரு பெரிய ஆலமரமாக பறந்து விரிந்து வளர்ந்திருக்கிறது என்றால் அந்த விஸ்வரூப வளர்ச்சியில் முகவர்களின் வியர்வையும் இரத்தமும் இருக்கிறது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவிற்கு அவர்களது உழைப்பில் தான் பல இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்களையும், ஆயுள் நிதியினையும் 32 கோடி பாலிசிதாரர்களையும் உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்திய உழைப்பாளி மக்களின் நிதியை கொள்ளையடிப்பதற்காக இந்தியாவிற்குள் நுழைந்த அந்நிய பகாசூர கம்பெனிகள் வளர்ச்சியடைவதற்கு எல். ஐ. சி. - யை ஒழித்துக்கட்டும் வேலையை இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் மூலம் மத்திய அரசு துணிச்சலாக செய்து வருகிறது. அதற்கு இலட்சம் கால் தூண்களாக எல். ஐ. சி. - யை தாங்கிக்கொண்டிருக்கும் முகவர்களை எல். ஐ. சி. - இலிருந்து வெளியேற்றுவதற்கான வேலைகளை மத்திய அரசு திட்டமிட்டு செய்துவரும் சூழ்நிலையில் தான் முகவர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினர்களையும் எல். ஐ. சி. - யையும் காப்பாற்றிக் கொள்வதற்கு நேற்று ஆகஸ்ட் - 8 அன்று நாடு முழுதும் எல். ஐ. சி. அலுவலகம் முன்பு மாபெரும் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். எல். ஐ. சி. முகவர்கள் சங்கம் ( லிகாய் ) ஏற்பாடுகளை செய்திருந்தது
கீழே சென்னையிலும் வேலூரிலும் நடைபெற்ற போராட்டக்காட்சிகள்....!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக