செவ்வாய், 7 ஜனவரி, 2014

பாலிசிதாரர்களின் உற்ற நண்பன் எல்.ஐ.சி.....!

              
 
           இந்திய அரசால் உருவாக்கப்பட்ட இன்சூரன்ஸ் ஒழுங்காற்றுதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் ( Insurance Regulatory and  Development Authority ) வெளியிட்டுள்ள 02.01.2014 தேதியிட்ட செய்திக்குறிப்பில் ''பாலிசிதாரர்களின் உற்ற நண்பன் பொதுத்துறை நிறுவனமாகிய எல்.ஐ.சி-யே'' என்று பல்வேறு புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது.
         இன்சூரன்ஸ் துறையின் சிறப்பான செயல்பாட்டுக்கு முக்கிய அளவுகோல் உரிமத்தொகையை பட்டுவாடா செய்வதே ஆகும். சென்ற நிதியாண்டில் எல்.ஐ.சி 97.73 சதவீதம் (முந்தைய ஆண்டு 97.42 சதவீதம்) பட்டுவாடா செய்துள்ள நிலையில் தனியார் நிறுவனங்கள் 88.65 சதவீதமே (அதற்கு முந்தைய ஆண்டு 89.34சதவீதம்) பாலிசி காலாவதி ஆவதில் 5.6 சதவீத பாலிசிகள் எல்.ஐ.சி -யிலும் மற்ற தனியார் நிறுவனங்களில் இது 17 சதவீதம் முதல் 42 சதவீதம் வரையிலும் உள்ளது. சாதாரண அடித்தட்டு மக்களுக்கான இன்சூரன்ஸை வழங்கிடுவது எல்.ஐ.சியே.
            ஆம், எல்.ஐ.சியில் சராசரி பாலிசி பிரீமியம் ரூ.11143, ஆனால் தனியார் நிறுவனங்களில் இது ரூ.24,457 எல்.ஐ.சி முகவர்கள் ஆண்டுக்கு சராசரியாக 29 பாலிசிகளை விற்பனை செய்துள்ள நிலையில் தனியார் நிறுவன முகவர்கள் சராசரியாக 3 பாலிசிகளையே விற்பனை செய்துள்ளனர். ஐஆர்டிஏ அமைப்பு பல்வேறு காரணங்களுக்காக 12 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது ரூ.5 லட்சம் முதல் ரூ.2.5 கோடி வரை அபராதம் விதித்துள்ளது. ஆனால் பொதுத்துறை எல்.ஐ.சி நிறுவனத்திற்கோ எந்த விதமான அபராதமும் இல்லை.
           எல்.ஐ.சி நிறுவனம் மத்திய அரசுக்கு லாபப்பங்கீடாக ரூ.1436 கோடியை செலுத்தியுள்ளது. (ரூ.5கோடி முதலீட்டுக்கு இந்த ஆண்டு மட்டுமே) 2013-14 நிதியாண்டின் முதல் காலாண்டில் தனியார் நிறுவனங்கள் வணிகத்தில் 6.87 சதவீதம் சரிவை சந்தித்துள்ள நிலையில் எல்.ஐ.சி நிறுவனமோ 2.92 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. வணிக சந்தையில் அதன் பங்கு 74.39 சதவீத மாக உயர்ந்துள்ளது.
நன்றி :

கருத்துகள் இல்லை: