வெள்ளி, 13 ஜனவரி, 2012

புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப்பணியில் எல். ஐ. சி ஊழியர்கள்...!

                        இன்றைக்கு ஊழியர் சங்கமென்றால், தங்களது ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றிற்கு மட்டுமே போராடிவருகின்ற சூழ்நிலையில், அதையும் தாண்டி தேச நலன், மக்கள் பணி, தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை போன்ற முற்போக்கான - வித்தியாசமான வேலைகளை செய்தும், பல்வேறு இயக்கங்களை நடத்தியும் வருகின்ற ஒரே சங்கம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்றால் அது மிகையாகாது. 
                   அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக வேலூர் கோட்டத்தில் பணிபுரியும் எல். ஐ. சி ஊழியர்கள் அளித்த நிதியில் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று 12 - 01 - 2012 மதியம் புதுச்சேரியில் புயலால் பாதித்த திருக்காஞ்சி என்கிற ஊரில் காலணிப்பகுதியில் தங்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து வாடும் தலித் மக்களுக்கு போர்வை, லுங்கி, துண்டு, சேலை போன்ற பொருட்களை காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சார்பில் கொடுத்து சமூக பணியாற்றினோம்.






























கருத்துகள் இல்லை: