இந்தியாவில் முக்கிய பொறுப்பிலிருக்கும் அரசியல்வாதிகளும், பெருமுதலாளிகளும் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை சுவிஸ் வங்கயில் கறுப்புப் பணமாக சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
சுவிஸ் வங்கியில் இப்படி சேர்ந்த இந்திய பணம் மட்டுமே சுமார் 70,00,000 கோடிக்கும் மேல் இருக்குமென்று சொல்லப்படுகிறது. இதை அவர்கள் வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்ததல்ல. அத்தனையும் இந்திய மக்களின் பணம். அவ்வளவு தொகையும் நம் அரசின் கஜானாவிற்கு வந்தால் போதும், பல ஆண்டுகளுக்கு இந்திய மக்களுக்கு வரியில்லா பட்ஜெட் போடமுடியுமென்று பொருளாதார வல்லுனர்கள் சொல்கிறார்கள்.
அப்படியாக சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணமாக சேர்த்து வைத்திருப்போர் பட்டியலை வெளியிடுமாறு பாராளுமன்றத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் போராடியும் மத்திய அரசு வெளியிட மறுக்கிறது. அதுமட்டுமல்ல, சமீபத்தில் உச்சநீதிமன்றம் கூட, சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் பட்டியலை வெளியிடுமாறு மத்திய அரசை அறியுறுத்தியும் பார்த்துவிட்டது. ஆனால் பட்டியலை வெளியிட மத்திய அரசு தயாரில்லை.
ஆனால் 1991 - ஆம் ஆண்டிலேயே சுவிசர்லாந்து பத்திரிக்கையான Swiss Magazine Schweizer Illustriertein (November 1991) வெளியிட்டுள்ள செய்தி கீழே உள்ளது பாருங்கள்..
இந்த பத்திரிகை 1991 - லேயே 13,200 கோடி ரூபாய் அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி கணக்கில் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது.
இவ்வளவு தகவல்கள் வெளியான பிறகும், ஆட்சியாளர்களிடமிருந்தோ அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைமையிடமிருந்தோ அல்லது ராஜிவ்காந்தி குடும்பத்தினரிடமிருந்தோ எந்தவிதமான மறுப்பும் வரவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அப்படியென்றால் அவர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று மக்கள் எடுத்துக்கொள்ளலாமா..?
இத்தனை பணத்தையும் இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்குமா...? மக்கள் போராடாத வரையில் இது கனவிலும் நடக்காது.
1 கருத்து:
//மக்கள் போராடாத வரையில் இது கனவிலும் நடக்காது.//
????????
ஆசையிருக்கு தாசில் பண்ண ....
:(
கருத்துரையிடுக