அன்றே காந்தி காங்கிரஸ் கட்சியைக் கலைக்க சொன்னாரு.... நாங்க தான் இப்ப காந்தி கண்டக் கனவை நனவாக்கப் போறோம்.. காங்கிரஸ் கட்சியை நாங்க தானே அழிக்கப்போறோம்...
ஹரியானா மாநிலம் ஹிசார் மக்களவைத் தொகுதிக்கும் மற்றும் பீகார், ஆந்திரபிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த வாரம் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெற முடியவில்லை என்பது காங்கிரஸ் கட்சி பரிதாபகரமான சூழ்நிலையில் இருக்கிறது என்பதைத் தான் காட்டுகிறது. அதிலும் ஹிசார் மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது மட்டுமல்லாது, டெபாசிட் தொகையையும் இழந்துவிட்டு நிற்கிறது என்பது காங்கிரஸ் கட்சி ஒரு அழிவுப்பாதையை நோக்கி போகிறது என்கிற நிலையைத்தான் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்விகளுக்கு அன்னா ஹசாரேவின் காங்கிரஸ் -கெதிரான பிரச்சாரம் தான் காரணமென்று பல வடநாட்டு ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்விகளுக்கு அன்னா ஹசாரே பிரச்சாரமோ அல்லது ஹசாரேவின் விளைவுகளோ - தத்துவங்களோ அல்லது பாரதீய ஜனதா கட்சியின் மீதான ஈர்ப்போ அல்ல... காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத ஆட்சியே காரணம். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மந்திரிகளின் தலைவரும் பிரதமரும் ஆன மன்மோகன் சிங்கும், கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆன சோனியா காந்தியும், ஏழை மக்களின் தோழனாக படம் காட்டிக்கொண்டிருக்கும் ராகுல் காந்தியும் தான் காரணம் என்பதை அவர்களே மறுக்கமுடியாது. நாடு இதுவரை பார்த்திராத மெகா ஊழல், வரலாறு காணாத விலைவாசி உயர்வு இவைகளே காங்கிரஸ் கட்சியின் அல்லது காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளாகும். இவைகளே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கும் காரணங்களாகும். காங்கிரஸ் கட்சியின் இந்த மக்கள் விரோத போக்கு - தேச விரோத போக்கு தொடருமானால் வரு 2014 - ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தொலைந்து போகும். இனி மெல்ல அழிந்து போகும். |
2 கருத்துகள்:
ஏண்ணே.. எங்கள் வருங்கால நிரந்திர பிரதமர்.. ராகுலின் கதி.?..
பலகோடிப்பேர் செத்தாலும் சர்.. இதை மட்டும் ஒத்துக்கொள்ளமாட்டோம்..
:-)
இது தான் இந்தியா உருப்படச் சரியான தருணம். அப்துல் கலாம், சாம் பிட்ரோடா இவர்கள் தேர்ந்தெடுக்கும் மூன்றாவது நபர் சேர்ந்து ஒரு புதிய கட்சி தொடங்கி நல்லவர்களை வேட்பாளர்களாக அமைத்தால் அமோக வெற்றி பெற்று நாட்டை உருப்படியாக்கலாம்.
கருத்துரையிடுக