இந்த ''பிரதமர் கனவு வேட்பாளர்'' மோடி மேடையேறி பேசுவது இருக்கட்டும். முதல்ல வரலாற்று பாடத்தை சொல்லிக்கொடுங்க. பாடத்தை ஒழுங்கா படிக்கச் சொல்லுங்க. அப்புறமா பிரதமர் ஆவது பற்றி யோசிக்கலாம். ஓர் மாநில முதல்வர் இவ்வளவு மக்கு - மங்குனியாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு கூட்டத்திலும் தன்னை ஒரு ''தேசபக்தராக'' காட்டிக்கொள்ளவேண்டும் என்று சுதந்திரப் போராட்ட காலத்து வரலாற்றை மேற்கோள்காட்டி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள நரேந்திர மோடி இந்திய வரலாற்றை தப்புத்தப்பாக பேசி திரிகிறார். வரலாறு தெரியாமல் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர்... வெட்கமாக இல்லை. வரலாற்றைப் படிக்காமல் வரலாற்றைப் படைக்கப்போகிறேன் என்று அலைகிறார் மோடி.
தன் சொந்த மாநிலத்திலேயே பள்ளி வரலாற்றுப் பாடத்தில், அதே மாநிலத்தை சேர்ந்த காந்தியின் பிறந்த தேதியை கூட தவறாக அச்சிட்டிருக்கிறார். காந்தியின் பிறந்த தேதி கூட தெரியாத மோடி தலைமையிலான ஆட்சியாளர்கள். அதுமட்டுமல்ல, ஒரு முறை மோடி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது, ''மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி'' என்று சொல்வதற்கு பதிலாக ''மோகன்லால் கரம்சந்த் காந்தி'' என்று தவறுதலாக பேசினார். காந்தி பிறந்த மாநிலத்தின் முதலமைச்சருக்கு காந்தியின் முழு பெயர் தெரியவில்லை.
அதேப்போல் அண்மையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது , ''பகத்சிங், ராஜகுரு, சுபதேவ் ஆகியோர் அந்தமான் சிறையில் தங்கள் வாழ்நாளை கழித்தார்கள்'' என்று ஒரு ''புதிய வரலாற்றை'' சொல்லியிருக்கிறார். மோடிக்கு இவர்கள் எங்கே சிறைப்பட்டிருந்தார்கள்...? என்பதும் தெரியவில்லை. இவர்கள் உயிர்த்தியாகம் செய்து இந்த தேசத்தின் விடுதலைக்கு வித்திட்டார்கள் என்பதும் தெரியவில்லை.
மோடியைப் போன்ற ஒரு ''மங்குனி'' முதலமைச்சருக்கு, ''வரலாறு முக்கியம் முதலமைச்சரே'' என்று தலையில் குட்டி சொல்லிக்கொடுங்கள். இல்லையென்றால் வரலாற்றை பிழையாக பேசும் நரேந்திர மோடி ஒரு ''வரலாற்றுப் பிழை'' என்று எதிர்கால வரலாறு பேசும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக