ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

குணம் மாறா பார்ப்பணியமும் மதம் மாறிய யுவனும்...!

         

         அண்மையில் இசையமைப்பாளர் இளையராஜாவின்  மகனும், திரைப்பட இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் என்ற செய்தியை கேட்டு இந்து மதபற்றாளர்கள் மற்றும் இந்துமத அமைப்புகள் அவரின் மீது சேற்றை வாரி  வீசினார்கள். பல்வேறு வசை சொற்களால்  செய்தார்கள். மதம் வேண்டுமா.... வேண்டாமா...? என்ற விவாதத்துக்குள் போகவிரும்பவில்லை. ஆனால் ஒருவர் ஒரு  மதத்தை விரும்பி மாறுவது என்பதும், ஒரு குறிப்பிட்ட கடவுளை  வணங்குவது என்பதும் ஒரு தனிப்பட்ட மனிதனின் நம்பிக்கை சார்ந்த விஷயம் மட்டுமல்ல தனிமனித சுதந்திரம் சம்பந்தப்பட்ட  விஷயமாகும். அதைப்பற்றி வேறொருவர் விமர்சிப்பது என்பது அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவது போன்றதாகும்.  அதை அனுமதிப்பது என்பது ஜனநாயகமாகாது.
                 அதே அடிப்படையில் தான் யுவன் சங்கர் ராஜாவையும்  பார்க்கவேண்டும். அதைவிட்டு அவரை  கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்யும் போது தான் யுவன் சங்கர் ராஜாவின் அப்பாவிற்கு நிகழ்ந்த பழைய நிகழ்ச்சியொன்றையும் நினைவுப்படுத்த வேண்டிவருகிறது.
               கடந்த 2009-ஆம் ஆண்டு காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரருடைய 75-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சங்கரமடம் சார்பில் விருதுவழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. விருது வழங்கப்பட்ட நால்வரில் இளையராஜாவும் ஒருவர். அவரும் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இளையராஜாவும் விழாவிற்கு சென்றார். விருதை பெறுவதற்காக இளையராஜாவும் அழைக்கப்பட்டார். இளையராஜாவும் விருதைப்பெறுவதற்கு மேடையேறி ஜெயேந்திரர் அருகில் சென்றார். ஆனால் விருதை ஜெயேந்திரர்  கையால்  வழங்கவில்லை. ஏனென்றால் பார்ப்பணர் அல்லாதாரை சங்கராச்சாரி தொடமாட்டார். தொட்டால் தீட்டு. பார்ப்பணியம் சொல்கிறது. அதனால் இளையராஜாவை ''தொடவிரும்பாத'' சங்கராச்சாரி ஜெயேந்திரர் ''ஆசி'' மட்டும் வழங்கிவிட்டு தன் உதவியாளர் கையால் தான் இளையராஜாவிற்கு விருதினை கொடுக்கச்செய்தார். இந்த நிகழ்ச்சியை  பார்த்தவர்கள், பத்திரிக்கைகளில் படித்தவர்கள் யாரும் மறந்திருக்கமுடியாது. 
               இந்து மதத்தின் தலைவன் என்று தன்னைப் பெற்றி சொல்லிக்கொள்ளும் தானே  அதே மதத்தை சார்ந்த ஒருவரை தொடவிரும்பவில்லை என்கிற போது, பார்ப்பணியம் அப்படி தொட  அனுமதிக்கவில்லை என்கிற போது அவரோ அவரது மகனோ தன்னை மதிக்கும் - தன்னை தொட விரும்பும் வேறு மதத்திற்கு மாறும் போது மட்டும் ஏன்  .கவலைப்படவேண்டும்..? ஏன் .கோபப்படவேண்டும்..? ஏன் எரிச்சலுடன் விமர்சனம் செய்யவேண்டும்....? 
                 பார்ப்பனியம் மாறாவிட்டால்  மதமாற்றத்தில்  மாற்றம் கொண்டுவரமுடியாது. மதமாற்றம் நிகழ்ந்துகொண்டுதான்  இருக்கும் மதத்தை விட்டு மனிதன் வெளியே வரும் வரையில்.

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உண்மை நிலையை கட்டுரை சொல்கிறது..
சிதம்பரம் தீட்சிதர் விவகாரம் மற்றும் தீண்டாமை உட்பட இங்கே உள்ள சாதாரணமான மக்களை பார்பனியம் இழிவு படுத்தி வருகிறது. இது குறித்து சமுகத்தில் உயர் நிலையில் உள்ளோர் எடுத்து பேசி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் யுவன் ஒரு அற்புதம் ஏற்படுத்தி உள்ளார்.
அவர் தந்தையிடம் இருக்கும் சுய மரியாதை அற்ற குணத்தை மறுத்து இதை செய்துள்ளார்.
தன்னை, தன் இனத்தை இழிவு செய்பவனிடம் அவன் என்ன பட்டம் கொடுத்தாலும் வாங்கலாமா ?
தன் இனத்தை இழிவு செய்தவனுக்கு உதவியதாக தானே வரலாறு பதிவு செய்யும். ஆக இசை ஞானி தீண்டாமை குறித்து வெளிபடையாக பேசி அது ஒழிய பாடு பட வேண்டும். இனிமேல் சம்பாதிப்பதற்கு பெயரோ ,பணமோ தேவையா...ஆக , தன் இனம் விழிப்புணர்வு பெற உதவி செய்தல் முக்கியம்.

பெயரில்லா சொன்னது…

குணம் மாறா பார்ப்பணியமும் மதம் மாறிய யுவனும்

வேகநரி சொன்னது…

//பெயரில்லா சொன்னது…
அந்த வகையில் யுவன் ஒரு அற்புதம் ஏற்படுத்தி உள்ளார்.அவர் தந்தையிடம் இருக்கும் சுய மரியாதை அற்ற குணத்தை மறுத்து இதை செய்துள்ளார்.//
யுவன் ராஜா ஒரு அற்புதமே ஏற்படுத்தி உள்ளார்.குரான் படித்து நல்ல நல்ல கனவு எல்லாம் வருகிறது என்று மதம் மாறியுள்ளார். தந்தை தனது மதத்தில் இருப்பது சுய மரியாதை அற்ற குணம் என்றால் மகன் அரபு மதத்திற்கு மாறியது அதைவிட சுய மரியாதை அற்ற குணம்.

நந்தவனத்தான் சொன்னது…

//ஏனென்றால் பார்ப்பணர் அல்லாதாரை சங்கராச்சாரி தொடமாட்டார். தொட்டால் தீட்டு. பார்ப்பணியம் சொல்கிறது. அதனால் இளையராஜாவை ''தொடவிரும்பாத'' சங்கராச்சாரி ஜெயேந்திரர் ''ஆசி'' மட்டும் வழங்கிவிட்டு தன் உதவியாளர் கையால் தான் இளையராஜாவிற்கு விருதினை கொடுக்கச்செய்தார்.//

நீங்கள் எழுதுயது உண்மை எனில் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய செயல். ஆனால் பிரச்சனை என்னவெனில் நீங்கள் எழுதியது உண்மையல்ல.

முதலில் மிகவும் ஈகோ கொண்டவரான இளையராஜா தன்னை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அது போக அந்த விழாவில் பார்ப்பனரானவர்களுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது, யாரையும் ஜெயேந்திரர் தொடவில்லை. வேத விற்பனரான பார்ப்பனர் ஒருவரும் அதில் அடக்கம்.

அதற்கு காரணம் இந்து துறவிகள் பொதுவாக யாரையும் தொடமாட்டார்கள். ஜெயேந்திரர் உண்மை துறவியா என்பது கேள்விக்குறிய விடயம்தான். ஆனால் அவரும் துறவி வேடத்தில் இருப்பதினால் பார்ப்பனர் உட்பட யாரையும் தொடக்கூடாது. இது தெரிந்ததால்தான் இளையராஜா அதை பொறுத்துக் கொண்டுள்ளார்கள். சாதி ஒழிய வேண்டும்தான். ஆனால் உண்மையும் முக்கியமானது!

பெயரில்லா சொன்னது…

மக்கள் சிந்த்க்க வேண்டிய பதிவு சகோ. நன்றி.

Mohamed

unmai சொன்னது…

எல்லோரும் நினைக்கிற படி சங்கர மடத்திக்கும் இந்து மதத்திற்கும் எள்ளலவும் சம்பந்தமில்லை.சங்கர மடம் பிராமண மேலாதிக்கத்தை நிலைப்படுத்த உண்டாக்கபட்ட சாதி மடம் தானே தவிர அவர்களுக்கும் இந்து மதத்திற்கும்., கடவுளுக்கும் சம்பந்தமே இல்லை.

எந்த சங்கராச்சாரியாரும் இந்து ஆலயங்களில் உள்ளே கொடி மரம் தாண்டி உள்ளே செல்ல மாட்டார்கள். அப்படி செல்வது அவர்களுக்கு தீட்டு .

கடவுள் சன்னததியையே தீட்டாக நினைக்கும் சங்கரா மடம் மனிதர்களை தீட்டாக நினைப்பது ஒன்றும் ஆச்சரியமே இல்லை.