சனி, 8 மார்ச், 2014

வீரம் விளைந்த மண்ணில் புதிய புத்தகம் விலையாகிறது....!



 























  
மார்ச் - 9, 2014 ஞாயிறு அன்று
''வெண்மணி தியாகிகள் நினைவாலய'' 
திறப்புவிழாவில் பாரதி புத்தகாலயத்தின் புதிய நூல்கள் வெளியீடு....!

வெண்மணித் தீ
ஆசிரியர் : கோ. வீரையன்
பக்கம் : 32
விலை : 15 ரூ
             தமிழக விவசாயிகள் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முதுபெரும் தோழர்.கோ.வீரையன் அவர்கள் வெண்மணித் தீ எழுந்த வரலாற்றை விளக்கும் நூல். தமிழ்நாடு மினூழியர் மத்திய அமைப்பும் பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிடும் நூல்.

வெண்மணி வர்க்கப் போராளி மீயன்னா
ஆசிரியர் : ஜீ. வெங்கடேசன்
பக்கம் : 32          
விலை : 20 ரூ

           கீழத்தஞ்சை மாவட்டத்தின் பொதுவுடமை இயக்கம் தந்த போராளிகளில் முக்கியமான ஒரு ஆளுமை மீயன்னா என அன்புடன் அழக்கப்படும் தோழர்.வே.மீனாட்சிசுந்தரம். கட்சியின் நாகை தாலுகா செயலாளராகப் பணியாற்றிய மீயன்னா குறித்து தஞ்சை மாவட்ட சமூகவியல் ஆய்வாளர் தோழர்.ஜீ.வெங்கடேசன் அவர்கள் தமிழகம் அதிகம் அறியாத விவரங்களுடன் எழுதிய சிறு நூல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக் குழு பாரதி புத்தகாலயம் இணைந்து வெளியிடும் நூல்.

சதியில் எழுந்த சாதி
ஆசிரியர் : பி.சம்பத்
பக்கம் : 64
விலை : 30 ரூ
               தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய  குழு உறுப்பினருமான தோழர்.பி.சம்பத் அவர்கள் சாதி குறித்தும், வர்க்க - வர்ணப் போராட்டங்களை இணைத்து நடத்த வேண்டிய அவசியம் நடத்த வேண்டிய விதம் ஆகியவை குறித்து விளக்கும் நூல்.

கீழத்தஞ்சை : விவசாயிகள் இயக்கமும் தலித் மக்கள் உரிமைகளும்
ஆசிரியர் : ஜி.ராமகிருஷ்ணன்
பக்கம் : 48
விலை : 25 ரூ
          மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், கட்சியின் மாநிலச் செயற்குழுவின் சார்பாக கீழத்தஞ்சைப் பகுதிப் பொறுப்பாளாரக 10 ஆண்டுகள் பணிபுரிந்தவருமான தோழர்.ஜி.ராமகிருஷ்ணன், கீழத் தஞ்சைப் பகுதியின் விவசாய இயக்கத்தின் வரலாறு, கட்சியும் விவசாய சங்கஉம் வர்க்கப் போராட்டத்தையும் சமூக நீதிக்கான போராட்டத்தையும் இணைந்து நடத்திய விதம் ஆகியவற்றை விளக்கும் நூல்.

கருத்துகள் இல்லை: