படத்தில் உள்ள அந்த இரண்டு பேர்களையும் இந்த நாடு மறந்திருக்க முடியாது. இது திரைப்படத்தில் வரும் காட்சியல்ல. 2002 - ஆம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி நடத்திய ''நரவேட்டை'' ரத்தக்காட்சிகள் தான் அவைகள். இஸ்லாமியர்களுடன் ஒற்றுமையாய் சகோதரர்களாய் வாழ்ந்து வந்த தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் நெஞ்சில் மோடி ''மதம்'' என்ற நஞ்சை வார்த்து, கையில் ஆயுதத்தை கொடுத்து, கொலை பயிற்சியும் தந்து இஸ்லாமியர்களுக்கு எதிராகவே திருப்பிவிட்டபோது, இஸ்லாமியர்களுக்கு எதிராக இரத்தவெறி பிடித்து வெறித்தனமாக வாளேந்தி நிற்கும் பஜ்ரங் தள் என்ற பாரதீய ஜனதாக் கட்சியின் இன்னொரு மதவாத அமைப்பைச் சார்ந்த அசோக் மொச்சி என்ற அந்த இளைஞனின் முகத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த இளைஞன் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் என்பது யாருக்கும் தெரியாது.
இரத்தவெறியுடன் தன்னையும் தன் குடும்பத்தினரையும் கொல்லப் பாய்ந்துவரும் பஜ்ரங் தள்ளை சேர்ந்த இரத்தவெறிக்கூட்டத்தை பார்த்து பயத்துடன் கதறி கைக்கூப்பி உயிர்பிச்சைக் கேட்கும் குத்புதீன் அன்சாரியின் கொலைநடுங்கும் முகத்தையும் யாரும் மறந்திருக்கமுடியாது.
இப்படியான இஸ்லாமியர்களுக்கெதிராக 2002-ஆம் ஆண்டு மோடி நடத்திய இரத்தவேட்டைக்குப் பிறகு, மதக்கலவரத்தில் பங்கெடுத்து இன்று செருப்புத் தைக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அசோக் மொச்சி என்ற அந்த இளைஞனும், மதவெறிக் கூட்டத்திடம் அஞ்சி கைக்கூப்பி உயிர்பிச்சை கேட்ட குத்புதீன் அன்சாரி என்ற அந்த இஸ்லாமிய இளைஞனும் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து இன்று சந்தித்தது என்பது உலகில் ஓர் அதிசயத்தக்க நிகழ்வாகும். மேடையில் சந்தித்துக்கொண்ட இருவரும் மலர் கொடுத்து கைக்கொடுத்து நட்பு பாராட்டியது என்பது வரவேற்கத்தக்க நிகழ்ச்சியாகும்.
நெகிழ்ச்சியான இந்த சந்திப்பு நிகழ்ச்சி என்பது கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்றது. பொதுமக்கள் முன்னிலையில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நெஞ்சார பாராட்ட வேண்டும். மதவாதம் பிரித்துவைத்த ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை, மத நல்லிணக்கத்தை மனிதநேயம் சேர்த்துவைத்திருக்கிறது. மனிதநேயம் போற்றும், மானுடத்தை வாழவைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்போம்.
2 கருத்துகள்:
//மானுடத்தை வாழவைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்போம்.//
He he. OK.
Aha, arumai this is what human needs.Mr.Ramji we hear bad news about our tamil refugees in Tamilnadu badly treated by the special unit police. Please write an article about the tamil refugees and why they treated like that please.
கருத்துரையிடுக