வெண்மணியில் உரிமைக்குரல் எழுப்பி உயிர்த்தியாகம் செய்த 44 தியாகிகளுக்கு தமிழக உழைப்பாளி மக்களின் பங்களிப்போடு எழுப்பப்பட்ட ''வெண்மணி தியாகிகள் நினைவாலயம்'' இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ் காரத் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. கட்சியின் முதுபெரும் தோழர் - மரியாதைக்குரிய தோழர். என்.சங்கரய்யா நினைவாலயத்தின் முகப்பில் செங்கொடியை ஏற்றி வைத்தார். கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளர் தோழர். ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தோழர்.டி.கே.ரங்கராஜன் உட்பட பல தலைவர்களும், தமிழகம் முழுவதிலுமிருந்து இலட்சக்கணக்கான தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக