ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

அழிவின் பிடியில் 500 கோடி மக்கள் - கொரிய தீபகற்பத்தில் போர் வேண்டாம்...! : பிடல் காஸ்ட்ரோ வேண்டுகோள்

               
கொரிய தீபகற்ப பகுதியில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் கியூபப் புரட்சியின் மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோ கொரிய போரை தவிர்ப்பது நமது கடமை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:
              மனித இனம் மிகப்பெரிய சவாலை சந்திக்கக் காத்திருக்கிறது என நான் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்ததை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் இந்த பூகோளத்தில் அறிவார்ந்த வாழ்க்கையை வாழத்துவங்கிவிட்டது. தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளும், வேறு சிலவும் செயல்வடிவம் பெற்று வருகின்றன. 1,370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவான பெருவெடிப்புக் கோட்பாட்டைப் பின்பற்றி மிகச்சிறப்பு வாய்ந்த அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் ஒலியை செயற்கை வடிவில் உருவாக்கினர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றங்களின் காரணமாக இன்று எண்ணிலடங்கா வாழ்க் கை வடிவங்கள் மாறியுள்ளன.
        இதையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால், புவி ஈர்ப்பு சார்ந்த அறிவியல் நிகழ்வுகளை விளக்க வேண்டும் என்பதற்காக அல்ல; தற்போது பூகோளத்தில் நம்ப முடியாத வகையில், பகுத்தறிவுக்கு விரோதமாக, கொரியத் தீபகற்பகத்தில் அணு ஆயுதப் போர்ச்சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. கொரியத் தீபகற்ப சுற்று வட்டப் பகுதியில் மட்டும் இந்த பூகோளத்தில் மொத்தமுள்ள 700 கோடி மனித இனத்தில் 500 கோடி பேர் வாழ்ந்து வருகின்றனர். இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களில் கொடூரமான முறையில் அணு குண்டுகளை வீசியது. அடுத்த சில வினாடிகளில் பரவிய கதிரியக்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 1950ம் ஆண்டில் கொரியத் தீபகற்பகத்தில் போர் கட்டவிழ்த்துவிடப்பட்டது. பல லட்சக்கணக்கானோர் கொன்று குவிக்கப் பட்டனர். அப்போது வடகொரியா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என அமெரிக்கப் படைகளுக்கான தென் கொரிய கமாண்டர் டக்ளஸ் மெக்கார்த்தர் தெரிவித்தார். ஆனால் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹென்றி எஸ்.ட்ரூமன் அனுமதியளிக்கவில்லை. அப்போது தாய்நாட்டைக் காப்பதில் உறுதியாக இருந்து, சீன மக்கள் குடியரசு தனது ராணுவ வீரர்களை எல்லைப்பகுதியில் அணிவகுத்து நிறுத்தியது. அதில் 10 லட்சம் வீரர்களை இழந்து தாய் நாட்டைக் காத்தது. அப்போது சீனாவுக்கும், வடகொரியாவிற்கும் ஆதரவாக அன்றைய சோவியத் ஒன்றியம் தனது ராணுவத்தையும், ஆயுதங்களையும், விமான படைகளையும், தொழில் நுட்பத்தையும் கொடுத்து உதவியது. அதோடு பொருளாதார உதவியையும் செய்தது. வடகொரியாவின் புரட்சியாளரும், துணிச்சல் மிக்கவரும், வரலாற்றுச் சிறப்பு மிக்க தலைவருமான கிம் இல் சுங்கை நான் மரியாதை நிமித்தமாக அப்போதே சந்தித்திருக்கிறேன். தற்போதுள்ள சூழலில் போர் தவிர்க்கப்படவில்லை என்றால், வடகொரியா - தென் கொரியா என இரு பகுதி மக்களும், அல்லது அனைவரும் எவ்விதப் பயனுமின்றி மிக மோசமான முறையில் மடிவார்கள். வடகொரிய மக்கள் குடியரசுக்கு எப்போதுமே கியூபா நண்பனாக இருந்து வருகிறது.
           இனி மேலும் வடகொரியாவுடன் இணைந்து நிற்கும். தற்போது வடகொரியா பல்வேறு வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல்வேறு இலக்குகளை அடைந்து, செயல்வடிவமாக்கி நிரூபித்துள்ளது. வடகொரியாவின் மிகச்சிறந்த நண்பன் என்ற முறையில் எனக்கு கடமை இருக்கிறது. அணுஆயுத போர் மூண்டால் இந்த பூகோளத்தில் உள்ள 70 சதவிகித மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இது நியாயமற்றது. இந்த மோதல் நிகழ்ந்தால், பாரக் ஒபாமா வின் இரண்டாவது ஆட்சிக்காலமும் அவ ரது பிம்பமும் பெரும் வெள்ளத்தில் பேரழிவு ஏற்பட்டது போல் அடியோடு புதைக்கப்படும். அமெரிக்க வரலாற்றில் மிகவும் கொடூரமான, மோசமானவராக ஒபாமா பதிவு செய்யப்படுவார். போரை தவிர்ப்பது என்பதும் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதும் ஒபாமாவின் கடமை!
(கிராண்மா)
நன்றி : 

கருத்துகள் இல்லை: