ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

குழந்தைகளின் சவக்குழிகளாய் மாறும் ஆழ் குழாய் கிணறுகள்!

           
நாட்டின் பலப் பகுதிகளில் கேட்பாரற்று திறந்து வைக்கப்பட்ட ஆழ் குழாய் கிணற்றுக் குழிகளில் தொடர்ந்து பல குழந்தைகள் விழுந்து உயிரிழந்து வந்ததைக் கண்ட உச்சநீதிமன்றம் 2009 - ஆம் ஆண்டு  இந்த விவகாரத்தை தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதையடுத்து அந்த ஆண்டிலிருந்து வழிகாட்டு விதிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வரையறுத்தது. இதனை அனைத்து மாநில அரசுகள், அரசு அதிகாரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என எழுத்துப்பூர்வமான சுற்றறிக்கைகளாக அனுப்பப்பட்டன. ஆனால், அவை பின்பற்றப்படுவதில்லை என்பதையே அண்மைக்கால சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு விதிமுறைகள் :

1. ஒரு ஆழ்குழாய் கிணறு தோண்டப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சித்தலைவர் அல்லது மாவட்ட நீதிபதி, கிராம பஞ்சாயத்து அலுவலர் அல்லது பொது சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக தெரியப்படுத்தவேண்டும்.

2.
ஆழ்குழாய் கிணறு தோண்டும் நிறுவனங்கள் தங்களைப் பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக பதிவு செய்து அனுமதிபெற்றிருக்க வேண்டும்.

3. ஆழ்குழாய் கிணறு தோண்டப்படும் இடத்தில் கிணறு தோண்டும் நிறுவனத்தின் விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை நிறுவவேண்டும்.

4. ஆழ்குழாய் கிணற்றைச் சுற்றி பாதுகப்பான கம்பி வேலி அமைக்கப்படவேண்டும் அல்லது நிலமட்டத்தில் இருந்து 0.30 மீட்டர் உயரத்திற்கு கான்க்ரீட் அரண் கட்டப்படவேண்டும்.

5. ஆழ்குழாய் கிணற்று பம்பு பழுதடைந்தால், குழாயின் துளை மூடப்படவேண்டும். மேலும் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை களிமண், மணல், கூழாங்கற்களை கொண்டு முறையாக மூடவேண்டும்.

6. ஆழ்குழாய் கிணற்றை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள் நேரடியாகவோ அல்லது தமது அதிகாரிகள் மூலமாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வாயிலாகவோ ஆழ்குழாய் கிணறுகளை அடிக்கடி கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும்.

           இந்த வழிகாட்டுதல்களை உண்மையான அக்கறையுடன் பின்பற்றினாலே ஆழ்குழாய் கிணற்று விபத்துக்களை தவிர்ப்பது மட்டுமல்ல அநியாயமான குழந்தை இறப்புகளையும் தவிர்க்கலாம்.

சனி, 27 ஏப்ரல், 2013

பிரதமர் ஆசையில் ஒட்டுரிமையே இல்லாத சாமியார்களின் ஆதரவைத் தேடும் நரேந்திர மோடி....!


          பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமை முடிவெடுப்பதற்கு  முன்பே தனக்குத் தானே ராஜாவாக முடி சூடிக்கொண்டு, மதவெறியோடு பதவி பைத்தியமும் பிடித்து அலைகிறார் நரேந்திர மோடி. போகிறப் போக்கைப் பார்த்தால் இன்னும் கொஞ்ச நாளுல சட்டையை பிய்த்துக் கொண்டு அலைவார் போலிருக்கிறது. பிரதமராக வேண்டும் என்ற ஆசையில யாருகிட்ட போய் ஓட்டுக் கேட்கிறதுன்னு கூட தெரியாம அலைகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இவரு சட்டைய பிய்த்துக்கொண்டு அலையறதுக்கு ரொம்ப நாள் ஆகாது.
         நீங்க கவனிச்சிங்களா...? இவரு பிரதமர் ஆகணும்னா யாருகிட்ட போய் ஓட்டுக் கேட்கணும்...? ஓட்டுரிமையுள்ள பொது மக்கள்கிட்ட அல்லவா போய் பேசணும்...? ஆனா இவரு யாருகிட்டத் தெரியுமா பேசுறாரு....? இந்தியாவில் ஓட்டுரிமையே இல்லாத அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் இங்கிருந்தபடியே வீடியோ கான்பெரென்சிங்கில் பேசுறாரு.  இந்தியாவில் ஓட்டுரிமையே இல்லாத அமெரிக்க எம். பி -க்களை இவரே காசுக் கொடுத்து செலவு பண்ணி இந்தியாவிற்கு வரவழைத்து பேசுறாரு.
        நேற்று என்ன செய்திருக்கிறார் என்றால்...? அரித்துவார் போயி அங்கிருக்கிற போலி சாமியார்களையும், பிச்சைக்காரர்களையும் கூட்டி வைத்துக்கொண்டு பேசியிருக்கிறார். இவங்களெல்லாம் யாருன்னா...? care of platform. காசி - அரித்துவார் போன்ற இடங்களில் ஓட்டுரிமை இல்லாமல் பிச்சை எடுத்து திரிந்து கொண்டிருக்கும் போலி சாமியார்கள். இவங்ககிட்ட போயி ஒட்டு கேட்டா இவரு எப்படி பிரதமராவது....? அவங்க என்ன சொல்லிட்டாங்கன்னா...? எங்ககிட்ட  ஓட்டை கேட்கத்தானே வந்தன்னு சொல்லிபுட்டு, அவங்க கையிலிருந்த ''திருவோட்டை'' கொடுத்து ''எங்க பக்கத்திலேயே உட்காரு. நீ நல்லா தான் பேசுற'' என்று சொல்லியிருக்காங்க. பின்ன என்னங்க... அவங்களெல்லாம் முன்ன பின்ன பேப்பரா படிச்சிருக்கப் போறாங்க... அவங்ககிட்டப் போயி, ''கடந்த கடந்த 12 ஆண்டுகளில் குஜராத்துல கலவரங்களே நடக்கவில்லை. அமைதியா இருக்கிறது'' என்று சொன்னா அவங்க என்ன செய்வாங்க. மோடி ரொம்ப நல்லவரு போலிருக்கிறதுன்னு அவங்ககிட்ட இருக்கிற திருவோட்டை எடுத்து அவரு கையில கொடுத்துட்டாங்க. இப்பதாங்க நீங்க பொருத்தமா இருக்கீங்கன்னு சொல்லிட்டாங்க.
        இப்படியாக நரேந்திர மோடி ஓட்டில்லாதவன் கிட்டல்லாம் ''நான் பிரதமராகனும்ன்னு'' சொல்லிக்கிட்டு அலையறாரு. போகிறப்போக்கைப் பார்த்தால் சின்னக்குழந்தைகளை எல்லாம் உட்கார வெச்சிகிட்டு பேசிகிட்டு இருப்பாரு போலிருக்கிறது. நரேந்திர மோடி கூடிய சீக்கிரம் சட்டைய பிச்சிக்கிட்டு அலையப்போறத நாம பாக்கத்தான் போகிறோம்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

மகா யோக்கியர் இராமதாஸ் அவர்களே... முதல்ல மதுவிலக்க உங்க கட்சியில அமல்படுத்துங்க...!

        




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
            நேற்று பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலையில் மதுக்கடைகளும் பார்களும் இராமதாஸ் கட்சியின் தொண்டர்களின் கூட்டம் தான் அலை மோதியது. இங்க எல்லாத்தையும் ஏத்திக்கினு போதையில மகாபலிபுரம் போகிற வழியில மரக்காணத்தில தலித் மக்கள் வாழும் பகுதிகளில் ரவுடித்தனம் செய்திருக்கிறார்கள். பாண்டிச்செரியிலக் கூட கிழக்கு கடற்கரைச்சாலை முழுதும் பாட்டில்களை உடைத்துப்போட்டு கூச்சலும் கும்மாளமுமாகத் தான் வாகனங்களில் திரிந்துகொண்டிருந்தார்கள்.
          அந்த மகா யோக்கியர் இராமதாஸ் முதலில் தன் கட்சி ''குண்டர்களுக்கு'' மதுவிலக்கைப் பற்றி சொல்லித்தரட்டும்.

புதன், 24 ஏப்ரல், 2013

முதல்ல இவரை மக்கள் எம்.பி ஆக்குறாங்களான்னு பார்ப்போம்....!


         சிவகங்கை சீமான் சிதம்பரம் தனக்கு பிரதமர் ஆகும் எண்ணமில்லை. அதற்கு ஆசைப்படவில்லை என்று ஒரு கூட்டத்தில் இவராகவே தன்னிச்சையாக பேசி தன்னுடைய ஆசையையும், விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆசைப்படட்டும் வேண்டாம்ன்னு சொல்லவில்லை. இவரு பிரதமரா ஆவது இருக்கட்டும். முதல்ல இவரு எம்.பி ஆவாரான்னே சந்தேகமா இருக்கு. 2009 - ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலிலேயே சிவகங்கை மக்கள் இவருக்கு தண்ணி காட்டிட்டாங்க. இந்த முறை சிவகங்கை என்றில்லை. ஏன் தமிழ்நாடு  மட்டுமல்ல... இந்தியாவில் எந்த மூலையில் இவர் நின்றாலும் நிச்சயம் தோற்கடிக்கப்படுவார். அதுமட்டுமல்ல மக்கள் இவரை துரத்தி துரத்தி அடிப்பார்கள். மக்களுக்கு இவரு அவ்வளவு ''நல்லது'' செய்திருக்கிறார்.

குடி குடியை கெடுக்கும்... தமிழக அரசை வாழவைக்கும்....!


சீட்டுக்கம்பெனி நடத்தி மக்களை ஏமாற்றிய மம்தா கூட்டாளி...!

 

திங்கள், 22 ஏப்ரல், 2013

வாஷிங்டனில் இன்சூரன்ஸை ஏலம்விட்ட அமினா சிதம்பரம்...!


                இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்பை உயர்த்துவது ஐ.மு. கூட்டணி அரசின் முன்னுரிமை செயல்திட்டம் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். இதனை அவர் எங்கே, எவர் முன்னிலையில் கூறியிருக்கிறார் என்பது கூடுதல் கவனத்திற்கு உரியது. அமெரிக்காவில், வாஷிங்டன் நகரில், பீட்டர்ஸன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இன்டர்நேசனல் எகனாமிக்ஸ் என்ற பொருளாதார ஆய்வு நிறுவனத்தில் சனிக்கிழமையன்று உரையாற்றிய சிதம்பரம் இவ்வாறு உறுதியளித்திருக்கிறார். பொருளாதார ஆய்வறிக்கைகளின் பெயரால் உலகமய-தனியார்மய-தாராளமய கொள்கைகளை மற்ற நாடுகள் ஏற்று நடைமுறைப்படுத்த வைப்பதற்கான ஏற்பாடுகளில் ஒன்றான அந்த நிறுவனத்தின் மூலமாக அமெரிக்காவின் பன்னாட்டுத் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு சிதம்பரம் ஒரு சமிக்ஞை காட்டியிருக்கிறார் என்று சொல்லலாம். எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புடன் இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட முன் வரைவு நிறைவேறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
         காங்கிரஸ் ஆட்சியை எதிர்ப்பது போல் எதிர்த்துக்கொண்டு, அதன் இப்படிப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளுக்குக் கூச்சமின்றி ஆதரவளித்து வரும் பாஜக உள்ளிட்ட கட்சிகளை மனதில் வைத்துக்கொண்டுதான் இப்படிப்பட்ட நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியிருப்பார் என்பது ஒன்றும் ஊகிக்க முடியாததல்ல. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு பிரச்சனையில் இந்த “எதிர்க்கட்சிகள்” மன்மோகன் சிங் அரசுக்கு அளித்த ஒத்துழைப்பை மறந்துவிட முடியுமா? இந்த சட்டமுன்வரைவின் எதிர்ப்பாளர்களை காப்பீட்டு நிறுவனங்கள் அணுகியிருப்பதைப் பாராட்டியிருக்கிறார் அவர். காப்பீட்டு நிறுவனங்களின் இந்த முயற்சி எதிர்க்கட்சிகள் பிரச்சனையைப் புரிந்துகொள்ளவும், சட்டமுன்வரைவு நிறைவேறவும் உதவும் என்று உறுத்தலே இல்லாமல் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். 
       சில்லரை வர்த்தகத்துறை விவகாரத்தில் வால்மார்ட் நிறுவனம் தனது வர்த்தக மேம்பாட்டுத்திட்டத் தின் ஒரு பகுதியாக இந்தியாவில் ரூ.160 கோடி வரை செலவிட்டுள்ளது என்றும், எதிர்ப்புத் தெரிவித்தவர்களை “அனுசரித்துப் போகச் செய்வதற்கான” முதலீட்டுச் செலவுதான் அது என்றும் செய்திகள் வந்துள்ளன. இந்தியாவுக்குள் அரசியல் ரீதியாக அந்நிய காப்பீட்டு நிறுவனங்கள் தலையிடுவதற்கும் அதற்காக “செலவு செய்வதற்கும்” அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை ஐ.மு. கூட்டணி அரசு அளிக்கிறது என்பதற்கு சிதம்பரத்தின் இந்தப் பாராட்டைவிடவும் வேறு சாட்சியம் தேவையில்லை.
            இந்திய காப்பீட்டுத் துறையில் இதுவரை முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது உலகளாவிய வருவாயின் ஒரு பகுதியை இந்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் உள்கட்டுமான வளர்ச்சிக்கும் திருப்பிவிடும் என்று ஆரம்பத்தில் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டன. இன்று வரையில் சுமார் 6,700 கோடி ரூபாய் அளவுக்கு கூட்டுப்பங்கு முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அவ்வாறு தங்களது உலக வருவாயின் ஒரு சிறுபகுதியைக் கூட இந்திய தொழில் - உள்கட்டுமான வளர்ச்சிக்கு ஒதுக்கியதாக ஒரு ஆதாரமும் கிடையாது என்பதை அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆக மக்கள் நலன்களை விடவும் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் மனம் குளிரச் செய்வதிலேயே ஐ.மு.கூட்டணி அரசு அக்கறையோடு இருக்கிறது. அதை முறியடிக்க நடக்கிற போராட்டத்திற்கு பேராதரவு அளிப்பது ஒரு தேசப்பற்றுக் கடமை.

 நன்றி :


ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

Left Parties will strive for non-Congress secular govt at Centre: Prakash Karat

    




CPI (M) general secretary Prakash Karat during a "victory rally", after the Tripura Assembly polls, in Agartala recently



CPI (M) general secretary Prakash Karat during the party's 'Sangharsh Sandesh Rally' at Ramlila Grounds in New Delhi.

     Brushing aside Congress’ overtures, Communist Party of India (Marxist) says it will work for the defeat of UPA as well as NDA in next Lok Sabha elections while looking to stitch a national alternative with regional parties.

        Notwithstanding Narendra Modi’s rising stature in the BJP, the major Left party has made it clear that it cannot support a secular Congress-led government which follows “neo-liberal policies”.
          “The prospects are bright for a non-Congress secular government and we will play our role to bring about such a government, if such a situation arises,” CPI (M) General Secretary Prakash Karat told PTI in an interview.
           65-year old Karat, who steered the Left campaign against UPA-I’s nuclear deal with the United States and withdrawal of support on the issue, claimed as “bleak”, the chances of UPA coming back to office for a third term.
          “Both Congress and BJP may not be in a position to form the government,” he said.
         Mr. Karat was not impressed by Congress leader A K Antony’s recent comments that the Left was “not untouchable”, indicating it could do business with CPI(M) and other Left parties.
"UPA policies unacceptable"
              “As far as we are concerned, the policies being pursued by the UPA government are unacceptable. That is why we have called for the defeat of Congress and UPA,” Mr. Karat said.
        Asked about BJD chief Naveen Patnaik’s comment that a Third Front was a “very healthy option”, he said Patnaik has “expressed the need for an alternative which is necessary.”
      “As far as CPI (M) and the Left are concerned, we are looking for an alternative based on alternative policies.
        Without an alternative policy platform, a Third Front is not feasible,” the CPI (M) leader said. He made it clear that the CPI (M) would fight the elections “together with Left parties. We may have some electoral understanding with some regional parties in states”.
 
On Modi factor..
 
         Asked whether secular forces would strive to ensure a secular government to counter Mr. Modi’s projection by the BJP, he said, “If BJP projects Narendra Modi as their prime ministerial candidate, the message will go to the people that it will pursue a Hindutva agenda along with adherence to a pro-big business agenda. I am sure the people will not accept such a projection.”
          “While we will do everything to counter the communal forces, at the same time we would also like a government which does not follow neo-liberal policies.
         “We cannot support a secular government which follows neo-liberal policies which are anti-people and against the interests of the country,” Mr. Karat said.
             Asked whether the Left would fight corruption or communalism in the next polls, Mr. Karat said, “We will be going into the elections to fight both BJP and Congress as corruption is the outcome of the neo-liberal policies pursued by both of them.”
          Mr. Karat gave indications that the Opposition would be launching a fierce attack on the government on the issue of alleged interference in the preparation of the CBI report to the Supreme Court on the coal mines allocation scam.
          “The government will have to answer why the Law Minister tried to influence the CBI investigation in the coal blocks allocation case,” he said.
           Mr. Karat also said that the Left parties would want the adoption of the Lokpal Bill in the ongoing budget session of Parliament.
          “We will strongly oppose any efforts to open up the insurance sector to more foreign capital,” he said, adding that on the Land Acquisition Bill, “we have some basic objections” and demand that the measure be referred back to the Standing Committee or a Joint Select Committee.

courtesy :

மன்மோகன் சிங் ஆட்சியின் இலட்சணம் பாரீர்....!

 உலக அளவில் வறுமையில் வாடுபவர்களில் 
 மூன்றில் ஒருவர் இந்தியர்....!     
 உலக வங்கி ஆய்வறிக்கையில் தகவல்

        உலக அளவில் வறுமையில் வாடுபவர்களில் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்களாக இருக்கின்றனர் என்று உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: 
            உலக அளவில் மொத்தம் 120 கோடி பேர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கின்றனர். இவர்கள் நாள் ஒன்றுக்கு ரூபாய் 65க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதில் வளரும் நாடுகளில் 1981 - ஆம் ஆண்டிற்கும் 2010 - ஆம் ஆண்டிற்கும் இடையில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை பாதியளவு குறைந்திருக்கிறது. அதாவது வளரும் நாடுகளில் வறுமையின் அளவு தற்போது 21 சதவிகிதமாக இருக்கிறது. இருப்பினும் இந்த வளரும் நாடுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை 59 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்திருக்கிறது.
          ஆப்பிரிக்காவின் தென்பிராந்திய பகுதிகளில் 1981 - ஆம் ஆண்டு வறுமையில் வாடுவோரின் அளவு 51 சதவிகிதமாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 1999 - ஆம் ஆண்டில் 58 சதவிகிதமானது. பின்னர் 1999 முதல் 2010 - ஆம் ஆண்டிற்கிடையில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை 10 சதவிகிதம் குறைந்து. தற்போது 48 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் பல்வேறு நடவடிக்கைளின் காரணமாக 17 சதவிகிதம் அளவிற்கு வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இருப்பினும் கடந்த முப்பதாண்டுகளுக்கு முன்பு வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை 2 கோடியே 50 லட்சமாக இருந்தது. ஆனால் தற்போது அது இருமடங்காக உயர்ந்து 4 கோடியே 14 லட்சமாக இருக்கிறது. இதன் மூலம் உலகில் மிகவும் ஏழ்மையாக வறுமையில் வாடுவோரில் மூன்றில் ஒரு பங்கினர் ஆப்பிரிக்க தேசத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் கடந்த இருபது ஆண்டுகளாக லத்தின் அமெரிக்க நாடுகளில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை 12 சதவிகிதம் என்கிற ஒரு நிலையான அளவில் இருந்து வந்தது. ஆனால் 1999 மற்றும் 2010 -ஆம் ஆண்டிற்கிடையில் இந்த எண்ணிக்கை பாதியாக குறைந்து தற்போது 6 சதவிகிதம் என்ற அளவில் இருக்கிறது. 1981- ஆம் ஆண்டில் இந்தியாவில் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை 12 சதவிகிதமாக இருந்தது.  தற்போது உலக அளவில் வறுமையில் வாடுவோரின் மொத்த எண்ணிக்கை 120 கோடியாக இருக்கிறது. இதில் மூன்றில் ஒருவராக இந்தியர் இருக்கிறார். அதாவது உலக அளவில் வறுமையில் வாடும் 120 கோடி பேரில் 40 கோடி பேர் இந்தியர்களாக இருக்கின்றனர்.
          ஆனால் சீனாவில் 1981 - ஆம் ஆண்டு வறுமையில் வாடுவோரின் அளவு 43 சதவிகிதமாக இருந்தது. இது படிப்படியாக குறைந்து தற்போது 13 சதவிகிமாக குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் 2030 - ஆம் ஆண்டிற்குள் ஏழைகளே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றால் வறுமையில் வாழும் மக்களில் வாழ்க்கைச் சூழலை முன்னேற்ற ஐ.நா வின் உறுப்பு நாடுகள் அதிக அளவில் முயற்சிகளை மேற்கொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும். உலக மக்கள் தொகையில் 5ல் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாழும் இந்த சூழ்நிலையில் கடுமையான முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே வரும் 2030 - ஆம் ஆண்டிற்குள் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்று உலக வங்கியின் பொருளாதார தலைமை நிபுணரான கௌசிக்பாசு தெரிவித்துள்ளார்.


சனி, 20 ஏப்ரல், 2013

புதுச்சேரியில் தீக்கதிர் பொன்விழா....!

தீக்கதிர் பொன்விழா நிகழ்ச்சியில் பேசும் போது,
தீக்கதிர் நாளிதழில் புதுச்சேரி செய்திகளுக்கென்று
இரண்டு பக்கங்கள் ஒதுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
தோழர். ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் அறிவித்தார்.



வெறிபிடித்த மிருகங்களுக்கு மத்தியில் வாழும் பெண் குழந்தைகள் - ஒரு தேசிய அவமானம்...!


     பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையை ஒருவன் நாசப்படுத்துகிறான் என்றால் அவன் நிச்சயமாக மனிதனாக இருக்க முடியாது. வெறிபிடித்த மிருகமாகத்தான் இருப்பான்.  ஆண்கள் எல்லோரும் நல்லவர்களாகத் தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் மாமா என்றும், சித்தப்பா என்றும், அண்ணன் என்றும், ஆசிரியர் என்றும், நண்பன் என்றும், தோழன் என்றும் குழந்தைகள் அழைத்துப் பழகுகிறார்கள். ஆனால் இனி குழந்தைகள் அப்படி பழகுவதற்கு யோசிப்பார்கள். அந்த அளவிற்கு ஒரு சிலர் மனித மிருகங்களாக மாறி வருகின்றனர். இப்படித்தான் டெல்லியில்  இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மனித மிருகத்தால் ஐந்து வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தப்பட்டு இன்று மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறது. இந்த செய்தியை கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.
         இது போன்ற நிகழ்வு என்பது சமீப காலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்த தைரியம் எங்கிருந்து தான் வந்தது...? அரசும், சட்டமும், சமூகமும் ஒன்றும் செய்யாது என்ற தைரியமா....? நீதிமன்றம் காலம் கடத்தி தானே தண்டனை வழங்கப்போகிறது என்ற துணிச்சலா....? மனசாட்சியை கொன்றுவிட்டார்களா...? ''பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு'' என்று பாரதியால் பெருமையுடன் பாடப்பட்ட இந்த நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் ஒரு ''தேசிய அவமானம்'' என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 




இலங்கை : செய்ய வேண்டியது என்ன....?

 கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்,                                         
                              மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.  
        
         இலங்கைத் தமிழ் மக்களின் துயரத்துக்கு முடிவுகட்ட வேண்டும். அங்குள்ள மக்கள் அமைதியாகவும் சம அந்தஸ்துடனும் வாழ வழிவகை செய்யப்பட வேண்டும் என்ற உணர்வோடு தமிழகமே குரல் கொடுத்தது. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாணவர்கள் களத்தில் இறங்கிப் போராடினர். இலங்கை இனப்பிரச்சனை தொடங்கி அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்குமான ஆயுத மோதல் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையில்கூட, இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காணப்படவில்லை. போர் முடிவுக்கு வந்த நிலையில், ராஜபக்சே அரசு தமிழ் மக்களுக்கு அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.   
         13-வது சட்டத்திருத்தம் மற்றும் அதற்கு மேலேயும் சென்று தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார். ஆனால், குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகள் கூட இலங்கைத் தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. அரசியல் தீர்வுகாண ஆக்கப்பூர்வமான முன்முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசுத்தரப்பில் நடத்தப்படும் பேச்சு வார்த்தை காலங்கடத்தும் உத்தியாக அங்குள்ள தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறதே தவிர, அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. இலங்கை விடுதலை பெற்ற பிறகு அந்நாட்டின் பூர்வகுடிகளான தமிழ் மக்கள் பல்வேறு வழிகளில் புறக்கணிக்கப்பட்டனர். ஜனநாயக ரீதியாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தத் துவங்கினர். ஆனால், பண்டாரநாயகா அரசு துவங்கி தொடர்ச்சியாக வந்த அரசுகள் அதற்கு செவிசாய்க்கவில்லை.
         இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்கா ஒரு நேர்காணலில் இலங்கையில் இதுவரை வந்த எந்த ஓர் அரசும் தமிழ் மக்களின் கோரிக்கையை நியாயமான முறையில் அணுகித் தீர்க்கவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில், 1975-இல் பிரிவினை கோரிக்கை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்டது. நடைமுறை சாத்தியமாக இல்லாவிட்டாலும்கூட அரசியல் தீர்வுக்கான நிர்ப்பந்தமாகவே அது பார்க்கப்பட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தொடர்ந்து நியாயமான தீர்வு காணப்படாத நிலையில், ஆயுதந்தாங்கிய பல்வேறு குழுக்கள் உருவாகித் தொடர்ச்சியான மோதல்கள் நடந்து வந்தன. ஒரு நிலையில் இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நீண்ட நெடிய மோதல் நடந்தது. இதை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சமாதான முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கையெழுத்தான ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே உடன்பாட்டில் பல சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அந்த உடன்பாட்டையும் நடைமுறைப்படுத்தவில்லை. 
         இந்தப் பின்னணியில் 2009-ஆம் ஆண்டு இறுதிகட்ட மோதல் நடந்தது. “இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஆயுத மோதல் தீர்வாகாது. இப்போது நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அரசும் ஐ.நா. சபையும் உடனடியாகத் தலையிட வேண்டும். விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடை பெறுவதன் மூலம் ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும். இந்த மோதலில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும்’’ என்று இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், ஐ.நா.சபையும் இந்திய அரசும் தலையிடாத நிலையில், ஒரு மிகப் பெரிய மனிதப் பேரழிவு நிகழ்ந்தது. அது தமிழ் மக்கள் நெஞ்சில் மாறாத வடுவாக உள்ளது. இறுதிகட்ட மோதலின்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபை நியமித்த குழுவின் அறிக்கையே கூறுகிறது. உண்மையில் இந்த எண்ணிக்கை இன் னும் அதிகமாகவே இருக்கும். “போர் நிறுத்தப் பகுதி’ என்று அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்ச மடைந்த மக்களின் மீது கூட கொத்து குண்டுகள் வீசப்பட்டன. காற்றில் உள்ள ஆக்சிஜனை இழுக்கும் வகையிலான வேதியியல் குண்டுகள் கூட பயன்படுத்தப்பட்டு மக்கள் மூச்சுத் திணறி சாகுமாறு செய்யப்பட்டனர். மருத்துவமனைகள், செஞ்சிலுவைச் சங்க மையங்கள் போன்றவை கூட குண்டு வீச்சிலிருந்து தப்பவில்லை. பெண்கள், குழந்தைகள் என குவியல் குவியலாக கொல்லப்பட்டனர் என்பதற்கு வலுவான சாட்சியங்கள் கிடைத்துள்ளன. 12 வயது பாலகன் பாலசந்திரன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது ராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனத்திற்கு சாட்சியமாக உள்ளது. இலங்கை ராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட ஏராளமான இளைஞர்களின் கதி இன்னமும் கூட என்ன வென்று தெரியவில்லை.
இறுதி கட்ட மோதலின்போது கடுமையான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் நடந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று ராஜபக்சே அரசு கூறுவதை ஏற்க முடியாது. போரின்போது முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்கள் இன்னமும் கூட முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை என்றே அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவ முகாம்கள் இன்னமும் நீடிக்கின்றன. தமிழ் மக்கள் பாரம்பரியமாக வசித்த பகுதிகளில் சிங்கள மக்கள் திட்டமிட்டு குடியமர்த்தப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசால் கட்டப்படும் வீடுகள் சிங்களவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த ஆலயங்கள் நிறுவப்படுகின்றன. தமிழ் மக்களின் நிலம் ராணுவத்தினரால் பறிக்கப்படுகிறது என்றும் தகவல்கள் வருகின்றன. சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக, இலங்கை அரசினால் அமைக்கப்பட்ட போர் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நியமித்த குழு என இந்த இரு குழுக்களும் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, உண்மையை எடுத்துரைக்க முயன்ற ஊடகத்தின் மீதும் இலங்கை அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதை இந்த அறிக்கைகள் உறுதி செய்கின்றன. காணாமல் போன இளைஞர்கள் பட்டியலில் தமிழர்கள் மட்டுமல்ல, சில சிங்களப் பத்திரிகையாளர்களும் உண்டு. இலங்கை இனப்பிரச்சனைக்கு யுத்தம் தீர்வாகாது, அந்த மக்களின் நியாயமான உணர்வு புரிந்துகொள்ளப்பட வேண்டும், இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து கூடுதல் சுயாட்சி வழங்க வேண்டும். தமிழும் தமிழரும் அனைத்து நிலைகளிலும் சமமாக நடத்தப்பட வேண்டும். அவர்களது சமூக - பொருளாதார, பண்பாட்டு, வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையின் அண்டைநாடு என்ற முறையிலும், “சார்க்’ கூட்டமைப்பில் இரு நாடுகளும் அங்கம் என்ற முறையிலும், அணிசாரா நாட்டு இயக்க அமைப்பின் உறுப்பினர் என்ற அடிப்படையிலும், இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் தமிழகத்தில் இயல்பாகவே பிரதிபலிக்கும் என்ற முறையிலும் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண இந்திய அரசு அழுத்தம் தரவேண்டும். அதே நேரத்தில் தனி ஈழம் மட்டுமே இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வாக இருக்க முடியும் என்பது சரியல்ல. இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வழிபாடு மற்றும் கல்விக்காக வரும் பொது மக்களான சிங்களர்களைத் தாக்குவது இலங்கைத் தமிழர்களைத்தான் பாதிக்கும். சிங்களர்கள் அனைவருமே இன வெறிபிடித்தவர்கள் அல்ல.
           ராஜபக்சேவின் எதேச்சதிகார ஆட்சிக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட சிங்களர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்த மார்ச் 21-ஆம் தேதியன்று ராஜபக்சே அரசு கட் டணத்தை உயர்த்தியுள்ளது. சமீபத்தில் உயர்கல்வியை தனியார் மயமாக்கிட ராஜபக்சே அரசு முடிவெடுத்த போது அதை எதிர்த்து இலங்கை முழுவதும் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் ஒன்றிணைந்து போராடி அரசின் முடிவை முறியடித்துள்ளார்கள். இவ்வாறு ராஜபக்சே அரசுக்கு எதிராக இன வேறுபாடின்றி நடைபெறும் ஜனநாயக இயக்கம் பலப்படக் கூடிய அடிப்படையில் இங்கு நமது அணுகுமுறை அமைய வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களின் இன்றைய உடனடித் தேவை தொடர்ச்சியாக நடந்த போரினால் சின்னாபின்னமான அவர்களது வாழ்க்கையைச் சீரமைப்பது தான். அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களில் மீள்குடியமர்த்துவது, தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து ராணுவத்தை விலக்குவது, போரினால் பாலைவனமாக மாறிவிட்ட பகுதிகளை புதுப்பிப்பது, நிலம், வேலை வாய்ப்பு, வழிபாட்டு உரிமை போன்றவற்றை நிலைநிறுத்துவது என்பது தான் யதார்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டதாக அமையும். மாறாக தமிழகத்திலிருந்து உணர்ச்சியைக் கிளறிவிடுவது சரியான அணுகு முறை ஆகாது. இது கடந்தகாலத்திலும் கூட எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதே அனுபவம் உணர்த்தும் பாடமாகும்.உணர்ச்சிகரமான பிரச்சனையில் உணர்ச்சிவசப்பட்டு சொல்லும் தீர்வு பல நேரங்களில் நாம் விரும்பாத இடத்திற்குச் செல்ல நேரிடும். 
            தனி ஈழம் என்ற கோரிக்கையை முன்வைத்து அதற்காக நிர்ப்பந்தம் கொடுக்க தமிழகத்தில் வரிகொடா இயக்கம் என்ற பேச்சும், தமிழக அரசு தனியாக வெளியுறவுத்துறை உருவாக்க வேண்டுமென்ற கருத்தும், ஏன் தமிழ்நாடு தனிநாடாக ஆகக் கூடாதா என்ற அளவுக்கு விபரீதமாகச் செல்வதும் கவலையளிப்பதாக உள்ளது. இந்நிலையில் இலங்கைத் தமிழர்கள் இன்று எத்தகைய பிரச்சனைகளைச் சந்திக்கிறார்களோ, அந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்துவதுதான் சரியானதாகும். இறுதிகட்ட போரின்போது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேச்சையான நம்பகத்தன்மை கொண்ட இலங்கைக்கு வெளியில் உள்ள நீதிமான்களையும் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதை இலங்கை அரசு ஏற்க வேண்டும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அமெரிக்காவின் தலையீடு தமிழ் மக்களின் பால் கொண்ட அக்கறை யினால் அல்ல. தனது ஆதிபத்திய சதுரங்க விளையாட்டில் ஒரு பகுதியே ஆகும்.
            மேலும் வளர்முக நாடுகளில் தலையிடுவதற்கான ஒரு வாய்ப்பாகவே அமெரிக்கா இந்தப் பிரச்சனையைக் கருதுகிறது. மனித உரிமை மீறலில் வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. இலங்கைத் தமிழர்களின் நிலைமை, அவர்களின் உடனடியான வாழ்வாதாரம் போன்ற இன்றைய யதார்த்த நிலைமையைக் கணக்கில் கொள்ளாமல் இங்கு கிளப்பப்படும் முழக்கங்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவாது. நீண்ட, நெடிய போரினால் வாழ்க்கை நிலைகுலைந்து கண்ணீரோடு வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் இனியேனும் நிம்மதியாக தங்களது சொந்த வாழ்விடத்தில் சமத்துவத்துடன் வாழ வேண்டும். அதற்கான அரசியல் தீர் விற்கு நாம் போராட வேண்டும்!
நன்றி: தினமணி, (19-4-2013)

வியாழன், 18 ஏப்ரல், 2013

Students pledge fight against Fascism, for democracy...!


           The atmosphere at Nazrul Mancha was revolutionary! Young students in thousands, belonging to SFI, AISF, AISB, PSU filled the air with the promise of a new dawn, when exploitation shall be no more, no one in position to snuff out young lives fighting for the democratic rights for all. They reaffirmed their promise of ‘Freedom, Democracy, Socialism’. The soft but grim voices of students reminded the world of the Marxist promise of a better world, their Red Salutes, their slogans, an ode to the immortality of Sudipta would ring in the ears of the thousands, for years to come, assembled to pay homage to the martyrdom of young Sudipta Gupta on the 2nd of April, by a brutal police of a fascist government.
            History was invoked, Neruda, Spartacus, Ulysses, Comrade KV Sudesh, who was butchered, cut into 21 pieces by the bourgeoisie government of Kerala, Shakti Chattopadhyay, Sunil, et al, giving voice to man’s eternal rebellion against injustice; a symphony of young, trembling voices taking individual anger & rebellion to its crescendo, ’Revolution’.  Auteurs Mrinal Sen & Tarun Mazumdar registered their anger in their blunt expression of solidarity to their cause.
          Speaker after speaker, from all the four left student organisations railed against the insensitivity of the Mamata government, decried its attempt at denying the students their political rights, enshrined in India’s constitution. They took an oath of continuing the fight that Sudipta gave his life for. Ritabrata, National Secretary, SFI was solemn throughout his speech but comprehensively denounced the politics of the campaign against politics. He reminded everybody that modern politics has been born out of the modern desire of people to fight for their rights. The royalty or feudal lords did not need ‘Politics’, it is the exploited multitude who need to fight for their rights. The current government’s action in stopping student union elections is a fundamental step against democracy. When its spokesmen & patronised intellectuals build a case against party politics, it is primarily conspiring to weaken the people’s fight, as the target is always the left. In the absence of the left, the default correlation of political forces swings in favour of the ruling class & specifically, ‘Capital’.
           Today’s memorial service will remain a milestone in the Bengal’s people’s fight for democracy & justice. It will prove to be a turning point in the imminent fight against the Mamata government which is fast shedding its fig leaf of being democratic & exposing its fascist underpinnings. This government, apart from encouraging the lumpen in Bengali society has taken concrete steps to destroy the democratic structures built over the last 34 yearsof left rule. College & University management bodies, which were represented by all its stakeholders, students, employees, professors, etc were replaced by handpicked individuals. Elections to co-operative societies were stopped. Associations of the policemen were banned only to be replaced by her minions. Student union elections were stopped, using the incident of a policeman’s death during a college election process, by her own leaders. It was against this that the SFI staged a civil disobedience movement & Sudipta was killed in police custody. This was when she crossed the Rubicon of Fascism, with her police taking over the role played so far by her ‘Brownshirts’. Undeterred, she has gone on to inciting her partymen to destroy thousands of party offices of the left & the murder of over 90 of left workers & leaders. Her government has also actively derailed the 3-tier Panchayat elections which have taken place like clock work since it was first instituted by the first Left Front government in 1978. In a bid to reverse the gains of the land distribution done by the left, it has led a hundred farmers to their death.
           The people of Bengal are rising in anger against this tyrannical government. Comrade Sudipta Gupta’s death shall not go waste, as the students resoundingly established today.
Long Live Comrade Sudipta!  Long Live the Revolution!

புதன், 17 ஏப்ரல், 2013

19th Congress of the Communist Party of Greece...!

          
The 19th Party congress of Communist Party of Greece (KKE) was held from April 11 to 14th. The session of the 19th Congress of the KKE began with a presentation of the report of the Central Committee by the General Secretary of the Central Committee, Aleka Papariga. 
          The 19th Congress of the Communist Party took place after a 4-month pre-congress process, during which the Theses were discussed in the organizations of the Party and KNE and with thousands of workers. 96.8% of the party members votes in favour of the Theses and draft Programme of the Party, 1.65% against, blank votes 1.55%. 97.3% of the party members votes for the draft Statutes in the PBOs, 1.21% against, blank votes 1.49%. The results of the discussion in KNE are the following. 98.9% votes in favour, 1.1% votes against and blank votes.
            The discussions and the votes for the decisions of the 19th Congress of the KKE were held in an atmosphere of ideological-political unity and after substantial deliberations.  77 delegates spoke at the Congress (the time allocated for each speech was 12 minutes). The Congress unanimously approved the new Party Programme, the new Statutes and the Political Resolution of the Congress.
             In addition, the report and closing speech of the Central Committee of the KKE was adopted unanimously, while the report and closing speech of the Central Auditing Committee (CAC) was approved with one vote against and one blank vote.
            The work of the 19th Congress of the KKE was completed with the election of the new Central Committee, which is comprised of 63 comrades (instead of 77 who had been elected at the 18th Congress) and the new Central AC which is comprised of 7 comrades (instead of 5).
              The CC in its first session elected Dimitris Koutsoumpas as the General Secretary of the CC of the KKE. It should be noted that the outgoing GS of the CC of the KKE, Aleka Papariga, was elected as a member of the CC of the KKE.

Biographical details of the General Secretary of the CC of the KKE, Dimitris Koutsoumpas :-
       He was born in Lamia on the 10th of August 1955. He is married and has a daughter. His family were militants in the EAM national resistance, some of them were executed by the Nazi occupation troops and by the extraordinary military courts in the period of the civil war, others were imprisoned and exiled.  His father, Apostolis Koutsoumpas, a member of the KKE, was arrested in 1945 in Larisa, tried, imprisoned and exiled for 8 years.
              Dimitris Koutsoumpas graduated from High School in June 1973, took the exams and entered the Law Department of the University of Athens. While he studied, he worked in different jobs in order to meet the costs of his studies. On his arrival in Athens, he came into contact with the illegal organization of KNE, he participated in the events in the Polytechnic in November 1973 and became a member of anti-EFEE and KNE in December 1973, working in illegal conditions until the fall of the dictatorship in the summer of 1974. He became a member of the KKE in December 1974. He was sent to work in the party in the summer of 1975 in the organization of Eastern Central Greece and Euboia as a member of the regional bureau of KNE. He was a delegate at the 1st Congress of KNE.
                In the Autumn of 1977 he moved from working in KNE to working exclusively in the party, as a secretary of a sectoral organization and later as the secretary of the Prefectural Organization of Boiotia. In 1979 he became a member of the Regional Bureau of Eastern Central Greece and Euboia, with various responsibilities, for work in the labour and trade union movement, responsible for the political guidance of the Prefectural Organizations of Boiotia, Fthiotida, Fokida, Evrytania. Later on he became secretary of the Regional Committee of Eastern Central Greece and Euboia, apart from a period of 21 months when he carried out his military service in Messolonghi, Komotini, and Limnos.
                 He was elected to the Central Committee of the KKE at the party’s 12th Congress in May 1987. In the split of 1991, as the secretary of Eastern Central Greece and Euboia and member of the CC, together with other comrades he struggled to defend the party, its principles, its worldview, against the splitting opportunist group that went to Synaspismos.
           At the 13th Congress, he was again elected to the CC and its Secretariat responsible for politically guiding party organizations, while after August 1991, immediately after the split, he took on the responsibility for the CC’s Press Office.
                In December 1991 at the 14th Congress, he was elected to the PB of the CC, responsible for the Press Office, Culture, and later “902” (TV and radio), until the floods of 1994, when he took on the responsibility for the organizations of Thessalonica, Central Macedonia, Western Macedonia, and Eastern Macedonia and Thrace.
              At the 15th Congress (May 1996) he was elected to the PB and became the Director of “Rizospastis”, a responsibility he held for 10 years At the 16th Congress (February 2000) and the 17th Congress (February 2005) he was re-elected to the PB and took on the responsibility for the International Relations of the party. At the 18th Congress (February 2009) he took on the responsibility of the Secretariat of the CC on behalf of the PB. At the 19th Congress (April 2013) he was elected General Secretary of the CC of the KKE.

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

இந்திய மண்ணில் மனிதாபிமானம் செத்துப்போனதா...?



அமெரிக்காவில் குண்டுவெடிப்பு - வினை விதைத்தவன் வினை அறுப்பான்....!




அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசே ஏற்றது - பாராட்டுதற்குரியது....!

 

திங்கள், 15 ஏப்ரல், 2013

10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அலட்சியம் காட்டிய தமிழக கல்வித்துறை....!

  
           
         அண்மையில் தான் தமிழகத்தில் 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. இந்த முறை ஏனோ தேர்வின் ஆரம்பத்திலிருந்தே குழப்பமான தேர்வாகத் தான் நடத்துள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதுவும் மாணவ- மாணவியர்களின் பல ஆண்டு கால கனவுகளை தகர்த்தெறிவது போல் இந்த தேர்வு என்பது நடந்து முடிந்திருக்கிறது என்பது வேதனைக்குரியது.
        ஆரம்பத்திலேயே தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் தான் முதல் குழப்பமே ஆரம்பித்தது. கேள்வித் தாளோடு கொடுக்கப்பட வேண்டிய ''வங்கிப் படிவம்'' ஒன்று அனைத்து தேர்வு மையங்களுக்கும் அனுப்பப்படாமல், அதனால் கேள்வித்தாளில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கு எப்படி பதில் எழுதுவது என்று புரியாமல் இருபால் மாணவர்களும் குழம்பிப்போனார்கள். தமிழகக் கல்வித்துறை இந்த இலட்சணத்தில் இயங்குகின்றது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
        இது மட்டுமல்லாமல், கணக்குப் பாடத்தின் கேள்வித்தாளை முன்னறிவிப்பின்றி மாற்றிவிட்டதால் மாணவ- மாணவியர்கள் மிகவும் திணறிப் போயிருக்கிறார்கள்.
         இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுதினால், மாணவர்கள் எழுதிய பதில்கள் அடங்கிய விடைத்தாள்கள் தேர்வு மையத்திலிருந்து விடைத்திருத்தும் மையத்திற்கு இரயிலிலும் பேருந்திலும் கொண்டு செல்லும் போது எடுத்துச் செல்பவர்களின் பொறுப்பின்மையாலும் கவனக்குறைவாலும் பல பேருடைய விடைத்தாள்கள் வழியில் கீழே விழுந்து காணாமல் போயிருக்கிறது. இது கல்வித்துறையின் பொறுப்பில்லாத்தனத்தை தான் காட்டுகிறது.
        மேலும் தேர்வு சமயங்களில் மின்வெட்டு கூடாது என்ற  அரசாணை  இருக்கும் போதே  பல தேர்வு மையங்களில் தேர்வு நேரத்தில் மின்வெட்டு செய்திருக்கிறார்கள். மாணவர்கள் இருட்டில் தான் தேர்வு எழுதி இருக்கிறார்கள். இதைக்கூட கவனிக்காமல் கல்வித்துறை கேவலமாக தூங்கிக்கொண்டிருந்திருக்கிறது.
         ஒரு சில மையங்கள் தேர்வு நேரத்திற்கு முன்பே திறப்பதற்கு பதிலாக தாமதமாக 10.30 மேல் திறந்திருக்கிறார்கள்.
         இவைகள் அத்தனையுமே தமிழக அரசின் அலட்சியத்தைத் தான் காட்டுகின்றன. பல ஆண்டுகாலமாக  மாணவ - மாணவியர்கள்  தங்களுடன் தேக்கி வைத்துள்ள  கனவுகளை சிதறடிக்கச் செய்துள்ளன. அவர்கள் மன  உலைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகி இருக்கிறார்கள். இவைகளை எல்லாம் தமிழக அரசும், கல்வித்துறையும் எப்படி சரி செய்யப்போகின்றன....? என்பது தான் நமது கேள்வி.