1921 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 - ஆம் நாள் சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் 12 பேர்கள் மட்டுமே கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு உலகிலேயே 8 கோடிக்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு வயது தொண்ணூறு...
கடந்த அறுபது ஆண்டு கால ஆட்சியில் சீனாவில் மக்கள் எல்லாரும் எல்லாமும் பெற்று - தங்களுக்கு இல்லாமை இல்லாத நிலைக்கு காரணமாக இருந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் 90 - ஆவது ஆண்டு விழாவை சீன மக்கள் இன்று ஜூலை 1 - ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்த 90 - ஆவது கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் புதிய நாணயங்களை சீன அரசு வெளியிடுகிறது. நாடு முழுவதும் கடந்த மூன்று நாட்களாக கம்யூனிஸ்ட் கட்சியை பற்றிய வரலாற்றுத் திரைப்படங்கள் திரையிடப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே செவ்விசைப் பாடல்கள் ஒலிக்கின்றன. பல இடங்களில் சீனப் புரட்சி சம்பந்தமான அற்புதமான ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு வகையான ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி சீன மக்கள் கொண்டாட்டத்தில் திளைத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த கொண்டாட்டத்தின் செய்தியாக, சீன நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் ''சீன நாட்டின் தன்மைக்கேற்ப சோசலிசத்தை முன்னெடுத்துச் செல்வோம்'' என்று அறிவித்திருக்கிறார்கள். இந்த மக்களின் கொண்டாட்டத்தில் சீன மக்களின் கதாநாயகனாக வலம் வருபவர் சீனத்தலைவர் மா சே துங் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 90 - ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாமும் புரட்சிகர வாழ்த்துகளையும் செவ்வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்வோம். வாழ்க புரட்சி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக